Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவல்துறை மா அதிபர் மீது பழியை போட்டுவிட்டு மகிந்த ராஜபக்ச தப்பிக்க முயற்சி.

Featured Replies

காவல்துறை மா அதிபர் மீது பழியை போட்டுவிட்டு மகிந்த ராஜபக்ச தப்பிக்க முயற்சி.

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேராதான் காரணம் என்று பழிபோட்டுவிட்டு அனைத்துலக நாடுகளின் கண்டனங்களிலிருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தப்பிக்க முனைகிறார்.

மகிந்தவை நல்லவராக்க சிங்கள மற்றும் கொழும்பு ஆங்கில ஊடகங்களும் முனைந்துள்ளன.

கொழும்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை மா அதிபரிடம் மகிந்த விளக்கம் கேட்டுள்ளதாகவும் "உடனடி" அறிக்கை ஒன்றை தம்மிடம் தாக்கல் செய்யுமாறு மகிந்த உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

-Puthinam-

நல்ல வேடிக்கை இப்படியான ஒரு முடிவை ஜனாதிபதியின் ஆலோசனை இல்லாமல் எடுக்கபட்டிருப்பது என்பது.அப்படி இது உண்மையாயின் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியானது

தமிழர்கள் மீதான வன்முறை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களாகியும் ஏன் போலிஸ் மா அதிபரின்மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை ?

இப்போது அறிக்கை கேட்டுள்ளார். இந்த அறிக்கை மகிந்தாவிடம் போய்ச்சேருமா என்பது சந்தேகமே.

அந்த அறிக்கையில் என்ன இருக்கப் போகிறது?

"நீங்களும், உங்கள் தம்பி கோத்தைபாயவும் கூறியதைதானே செய்தேன்" அடுத்து நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறீர்களோ செய்கிறேன்" என்று தான் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jun 9 6:30:45 EEST 2007

தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்குப் பொறுப்பான பொலிஸ்மா அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை னாதிபதி உத்தரவிட்டதாகத் தகவல்

தமிழர்களைக் கொழும்பிலிருந்து பல வந்தமாக வெளியேற்றியமைக்குப் பொறுப் பான பொலிஸ் மா அதிபருக்கு எதிராக ஒழுக் காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தர விட்டார்.

தமிழர்களைக் கொழும்பிலிருந்து வெளி யேற்றும் செயற்பாட்டில் தமக்கு அளிக்கப் பட்ட அதிகாரங்களுக்கு மேலதிகமாக நட வடிக்கைகளை மேற்கொண்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பூரண விசாரணைகளை நடத்துமாறும் ஜனாதி பதி பணிப்புரை விடுத்திருக்கிறார்.

எந்த அரசாங்க உத்தியோகத்தர் தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் அவர் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக் கப்படும் என்று ஜனாதிபதி அலுவலகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

கொழும்பில் லொட்ஜ்களில் தங்கிருந்த தமிழர்களை பலவந்தமாக வெளியேற்று வதை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் தடை விதித்தமை மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச மட்டத்தில் வெளியான கண் டனங்களின் பின்னரே ஜனாதிபதி அலுவல கத்தில் இருந்து மேற்படி அறிக்கை வெளி யிடப்பட்டது.

இதேவேளை

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தாம் ஏற்படுத்திய பாதிப்புக்குப் பரிகாரம் செய்யும் வகையில் கொழும்பிலிருந்து வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்ற தமிழர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வரும் ஏற்பாடுகளை செய்துள்ள தாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் பொருட்டு நேற்றுப் பிற்பகல் ஐந்து பஸ்களை ஒழுங்கு செய்திருப்பதாக வும் அதே வட்டாரங்கள் தெரிவித்தன.

வவுனியாவில் முகாமில் தங்கவைக் கப்பட்ட 272 பேரில் 186 பேரை கொழும் புக்கு அழைத்து வருவதற்கான ஒழுங்குகள் பூர்த்தி அடைந்துவிட்டதாக நேற்று மாலை அங்கிருந்து அறிவிக்கப்பட்டது.

இதேவேளை தமிழர்கள் எவரும் பலவந்தமாகக் கூட்டிச் செல்லப்பட வில்லை என்றும் அவர்கள் தமது சொந்த விருப்பத்திலேயே பஸ்களில் ஏறிச்சென் றார்கள் என்றும் பாதுகாப்புத் துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வல மறுத்திருக்கிறார். (அ)

நோர்வே, ஐரோப்பிய ஒன்றியமும் கண்டிக்கின்றன

கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை அனைத் துலக மனித உரிமைச் சட்டங்களை மீறும் ஒரு செயலாகும்.

இவ்வாறு இலங்கை அரசைக் கண்டித்திருக்கின்றது நோர்வே அரசு.

கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கைப் பொலிஸ் துறையினரின் இந்த நடவடிக்கையானது அகில உலக மனித உரிமைச் சட்டங்களை மீறுகின்ற ஒரு செயலாக அமைந்திருக்கின்றது. இத்தகைய ஒடுக்கல் செயற்பாடுகளானது தமிழர்களை மட்டுமல்ல எந்தவொரு இனத்தின்மீதும் மேற்கொள்ளப்படுதல் மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரானது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழர்கள் வெளியேற்றப்பட்டமையை கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. (சி)

உதயன்

சிலவேளை மஹிந்தவிற்கு முப்படைகளும் தனது பொறுப்பின் கீழ்த்தான் வருகின்றதென்பதை மறந்து விட்டாரோ என்னவோ?? :lol::D:D

Edited by Vasampu

  • தொடங்கியவர்

தமிழர்களின் வெளியேற்றத்தில் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை: மகிந்த ராஜபக்ச.

கொழும்பிலிருக்கும் தமிழர்களை வெளியேற்றுமாறு யாரிடமும் தெரிவிக்கவில்லை என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேராவால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தான் எந்தவகையிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

-Pathivu-

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்பது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல.. சில நாட்களுக்கு முன்னரே தேவையான அளவு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுத்தான் இந்நிகழ்வு நடைபெற்றது. பொலிஸ்மா அதிபர் சட்ட ஒழுங்குகளை அமுல்படுத்தவும் கொழும்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.. மகிந்த "ஒண்ணும் தெரியாத பாப்பா" மாதிரி பொலிஸ்மா அதிபரை மெல்லச் சாட்டிவிட்டு தப்பித்துவிடுவார்.. பொலிஸ்மா அதிபரும் சடைஞ்சு ஒரு அறிக்கைவிட்டுத் தப்பிவிடுவார்.. இதெல்லாம் பெரிய விடயமே!

தமிழர்களின் வெளியேற்றத்தில் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை - மகிந்த ராஜபக்ச

சர்வதேச சமூகத்தின் கடும் எதிர்ப்புக்களை அடுத்து கொழும்பிலிருக்கும் தமிழர்களை வெளியேற்றுமாறு யாரிடமும் தெரிவிக்கவில்லை என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேராவால் எடுக்கப்பட்ட தன்னிச்சையாய முடிவு என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தான் எந்தவகையிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை லொஜ்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட நடவடிக்கை தொடர்பில் உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மகிந்த ராஜபக்ஷ காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேராவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பதிவு

இந்த மகிந்த மந்தி யாருக்கு பூச்சாண்டி காட்டுது

aiyo ennaku ondrum theriyathu naan appozhuthu kappam edithukkondiruthan.

Edited by Mahinda

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவின் அரசியலமைப்பு பற்றியும் அதன் உள்ளடக்க விதிகள் பற்றியும் அதீத கவனமெடுத்த இலங்கையின் அதியுயர் கொள்கை வகுப்பினர் உலக அரங்கில் அம்பலமாகி அம்மணமாகியுள்ளனர். இதில் ராஜபக்ச குடும்பம் பிம்பமாகி நிற்கிறது.

-முன்பொரு தடவை சுனாமிக் கட்டமைப்பைச் செல்லாது எனத் தீர்ப்பிட்டு நோர்வே அரசையே திணறடித்த தலைமை நீதிபதி மகிழ்வுற்றுப் பாராட்டைப் பெற்றிருந்தார்.

-வடகிழக்கை பிரித்து தீர்ப்பு வழங்கி சிறிலங்கா பெளத்த சிங்கள பேரினவாதக் கொள்கை வகுப்பாளர்களின் மதிப்பையும் பெற்றிருந்து.

-ஆனால் இப்போது, சிறிலங்காவின் உச்ச நீதி மன்றத்தின் பரிதாபகரமான நிலையை நினைக்கவே வேடிக்கையாக இருக்கிறது

இது தான் சொல்வார்கள் 'யாப்பெடுத்தவன் யாப்பாலே சாவான்' என்பதாக.....

மகிந்த ராஜபக்ச அவர்களே! ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெறும் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லொட்ஜ்களில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது உங்களுக்கு தெரியாது என்னும் பாசாங்கு நாடகத்தை உலகம் நம்பாது. மகிந்தரே இன்று உங்கள் அறிக்கை பேசிய பொய்களின் கூட்டுத்தொகை இதோ கீழே உள்ளது.

பொய் 1

கடந்த 31/05/2007 வியாழன் அன்றே புறக்கோட்டையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் லொட்ஜ்களில் தங்கி இருக்கும் தமிழர்களை உடனே வெளியேரவேண்டும் என்று சிங்கள பொலிஸ் படை அச்சுறுத்தி இருந்ததே அது தெரியாதா மகிந்தரே?

பொய் 2

அப்போது மனோ கணேசன்.எம்பி புறக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்று கேட்டதற்கு, இது அரசின் உத்தரவு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கையை விரித்தாரே அது தெரியாதா மகிந்தரே?

பொய் 3

சரி அது கூட பரவாயில்லை, அடுத்த நாள் 01/06/2007 காலையில் இந்த செய்தி தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் முதல்பக்கத்தில் வந்ததே. அது தெரியாதா மகிந்தரே? இலங்கைத்தீவின் எல்லா வானொலி, தொலைக்காட்சி சேவைகளும் இதை செய்தியாய் முழங்கியதே. அது தெரியாதா மகிந்தரே?

பொய் 4

அதன் பின்பு 01/06/2007 வெள்ளி அன்றே சிறீலங்கா காவல்துறை தலைவர் விக்டர் பெரேரா பத்திரிகையாளர் மகாநாட்டில் சீக்கிரமே கொழும்பு லொட்ஜ்களில் வாழும் தமிழர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதை செய்தியாக சொல்லி இருந்தாரே. அதுவும் அடுத்த நாள் பத்திரிகைகளில் வந்ததே. அது தெரியாதா மகிந்தரே?

பொய் 5

சரி இதுவெல்லாம் கூட போகட்டும், காலையில் கொழும்பில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் தமிழீழத்தின் வவுனியாவுக்கு போய் சேர்வதற்குள் பகற்பொழுது கடந்து போய் இருக்குமே. உண்மையில் மகிந்த ராஜபக்சவிற்கு தெரியாமல் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தால், அந்த அப்பாவி தமிழர்களின் பேரூந்து வவுனியா போய் சேரும் முன்பே கொழும்புக்கு திருப்பி அழைத்திருக்கலாமே ஏன் செய்யவில்லை மகிந்தரே?

பொய் 6

தமிழர்கள் கொழும்பில் இருந்து நாடுகடத்தப்பட்ட அன்று காலை 10 மணிக்கு சிறீலங்கா பாராளுமன்றமே ஒத்தி வைக்கப்படும் அளவுக்கு பிரச்சினை கொழுந்து விட்டு எரிகிறது. மகிந்தவின் அரசைவை பொய்யன் கேவல ரம்புக்வெல்ல தமிழர்களின் விருப்பின் பேரிலேயே தமிழீழ பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டதாக நாடாளுமன்றத்திலேயே நாக்கூசாமல் பொய் சொல்கிறான். அதே வேளை ரொய்ட்டர்ஸ், பி.பி.சி போன்ற சர்வதேச ஊடகங்கள் தமிழர்கள் காலைக்கடன்களை கூட கழிக்க அனுமதிக்கப்படாமல் உடுத்திய உடையுடன் நாடுகடத்தப்பட்டதாக சிறிலங்கா அரசை கண்டித்து செய்திகள் வெளியிடுகின்றன. இதுவெல்லாம் கூட தெரியாமல் என்ன செய்து கொண்டிருந்தீர் மகிந்தரே? சமையலறையில் எலி பிடித்து கொண்டிருந்தீரா?

ஒரு நாள் முழுவதும் அமைதியாக இருந்துவிட்டு, உயர்நீதிமன்றம் தமிழர்கள் நாடுகடத்தலுக்கு தடைவிதித்த பின்பு தேள் கொட்டிய திருடன் போல செய்வதறியாது பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டு இருக்கிறார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

மகிந்த ராஜபக்ச அவர்களே! இப்படி கேடுகெட்ட பொய்களை நம்புவதற்கு சர்வதேச நாடுகளில் அரசு நடத்துபவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. ஏதோ போதைவஸ்து சாப்பிட்டுவிட்டு பித்தம் தலைக்கேறியவன் போல் உளறுவது நீங்கள் இருக்கும் நாற்காலிக்கும் அழகல்ல.

மகிந்தரே இந்த பொய்யும் புரட்டும் உருட்டும் போதும் உங்கள் பாசிச ஆட்சியின் அழிவுக்கு.

Edited by vettri-vel

வெற்றிவேல் சார் இது உங்களுக்கு தெரியுது..

எனக்குத்தெரியுது..

இந்திய ஜப்பான்..அரசுகளுக்கு

இந்து நாளேட்டுக்கு

உலகநாடுகளுக்கு தெரியவில்லையே..

தமிழன் வாய் மூடப்பட்டு இருக்கிறத..ஷதொலைக்காட்சி சேவை தடை செய்யப்படுகிறத..

எம் பிக்கள் பேச்சுக்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை..

மொத்ததில் தமழினுக்கு உலகநாட்டின் அரசியல்லவாதிகள் கூட தீவிரவாதிகள்தான்

வெற்றிவேல் சார் இது உங்களுக்கு தெரியுது..

எனக்குத்தெரியுது..

இந்திய ஜப்பான்..அரசுகளுக்கு

இந்து நாளேட்டுக்கு

உலகநாடுகளுக்கு தெரியவில்லையே..

தமிழன் வாய் மூடப்பட்டு இருக்கிறத..ஷதொலைக்காட்சி சேவை தடை செய்யப்படுகிறத..

எம் பிக்கள் பேச்சுக்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை..

மொத்ததில் தமழினுக்கு உலகநாட்டின் அரசியல்லவாதிகள் கூட தீவிரவாதிகள்தான்

இந்து நாளேடு செய்வது பத்திரிகை விபச்சாரம். பத்திரிகை தர்மம் தெரிந்தவர்கள் அவர்கள் போல் பொய்களை செய்தியாக விற்க முடியாது. மனித தர்மம் தெரிந்தவர்கள் அது போன்ற பத்திரிகை விபச்சாரத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியாது

நன்றி வெற்றிவேல்!

இவை புரிந்தும் புரியாதது போல் நடக்கும் சர்வதேசம் இனியும் நீதியான நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஆக்கபூர்வமாக உதவப்போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசமும்,பாஸிச இலங்கை அரசும் "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்".தமிழ் மக்கள் இவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.