Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் முழுவதும் கொரோனா

Featured Replies

பிரான்ஸில் புதிய கட்டுப்பாடு – கொரோனா ஏற்பட்டால் அல்லது தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தால் கட்டாய தனிமைப்படுத்தல்

  • பாரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம்

covid-19 தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலோ அல்லது தொற்று நோய் ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தாலோ தனிமைப்படுத்தல் அவசியம் என்று அக்டோபர் மாதம் 29ஆம் திகதி பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

quarantine-landscape.jpgஇந்த கருத்தை பலர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

ஆனால், Europe 1 வானொலியில் வழியான தகவல்களின்படி அரசாங்கம் இப்பொழுது இந்த நடவடிக்கையில் தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நடைபெற இருக்கும் மந்திரிசபைக் கூட்டத்தில் இந்த விடயம் பேசப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகளில் இப்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் ஆறு லட்சம் யூரோ வரை அபராதம் விதிக்கப்பட்டு சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, இத்தாலி நாடுகளில் 5000யூரோ அபராதம் விதிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் பத்தாயிரம் பவுண்டாக இந்தத் தொகை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

agir ensemble என்ற அமைப்பின் தலைவர் Olivier becht தனிமைப்படுத்தல் நடவடிக்கையை கடைப்பிடிக்காதவர்களுக்கு பத்தாயிரம் யூரோ வரை தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டிருந்தார்.

ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

ஆனால் இந்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தண்டப்பணம் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி அறிவிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.

 

https://thinakkural.lk/article/88296

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் குறையாத கொரோனா பாதிப்பு: அதிகபட்சமாக ஒரே நாளில் 439 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் குறையாத கொரோனா பாதிப்பு: அதிகபட்சமாக ஒரே நாளில் 439 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 12.91 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.
 
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 18,58,568 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 439 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 032 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 13,88,168 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,38,368 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2,300 பேர் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/12164324/Russia-reports-record-high-of-439-coronavirus-deaths.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கொரோனா பாதிப்பு அதிகம்; வீட்டிலேயே இருங்கள்: சிகாகோ நகர மேயர் உத்தரவு

கொரோனா பாதிப்பு அதிகம்; வீட்டிலேயே இருங்கள்:  சிகாகோ நகர மேயர் உத்தரவு
 

உலக அளவில் கொரோனா பாதிப்புகளை அதிகம் சந்தித்த நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்கா இடம் பெற்று உள்ளது.  அந்நாட்டில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை மிக அதிகம்.  அமெரிக்காவின் 3வது பெரிய நகரம் என அறியப்படும் சிகாகோவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.


இதனை தொடர்ந்து சிகாகோ மேயர் லோரி லைட்பூட் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகாகோ நகரவாசிகள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

பணி மற்றும் பள்ளி கூடமென அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வீடுகளை விட்டு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார்.  இந்த உத்தரவு வருகிற திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/13043300/Corona-vulnerability-is-high-Stay-at-home-Order-of.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சை விடாத கொரோனா - 19 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

பிரான்சை விடாத கொரோனா - 19 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

பாரிஸ்:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.


 
கடந்த சில நாட்களாக பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி தற்போது 4-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 லட்சத்தை நெருங்குகிறது.

அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/13032557/2061253/Tamil-News-Coronavirus-positive-case-near-19-lakhs.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

அதிரும் அமெரிக்கா- ஒரே நாளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

 

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அந்த நாடு தத்தளித்து வருகிறது.

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 


 
இந்நிலையில், ஒரே நாளில் அங்கு 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 1.08 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரே நாளில் 1090 பேருக்கு மேல் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 67 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/13054902/2061263/Tamil-News-above-150000-new-Coronavirus-positive-cases.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு நாடுகளில் தீவிரமாகும் கொரோனா

 
6ef6f694a1e10fdb3512a4ee7a2ec4814aa48848
 17 Views

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா 10 நாடுகளில் தீவிரமாக இருந்தது. தற்போது கடந்த வாரத்தில் 7 நாடுகளில் மீண்டும் தீவிரமாக அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த வாரம் தினசரி ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதேபோல பிரேசில், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், ரஷ்யா, ஜேர்மனி ஆகிய ஏழு நாடுகளில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் விபரப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மூன்று நாடுகளான இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் மட்டும் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருகின்றது.

அமெரிக்காவில் தினசரி 1 இலட்சம் முதல் 1.45 இலட்சம் வரையாக உள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் பின்னர் அங்கு கொரோனா பரவல் அதிகரித்திருப்பதையும் காண முடிகின்றது.

கடந்த புதன்கிழமையன்று அமெரிக்காவில் மட்டும் கொரோனா தாக்கத்திற்குள்ளாகி 1,479 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 1,134 ஆக உள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்தாலும், அது அனைத்து மாநிலங்களிலும் ஒன்று போல் காணப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 44,879 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 547பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பிற்குள்ளானோர் 87.28 இலட்சமாக உள்ளது.

இதேபோல பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கும் பிரேசிலில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பிற்குள்ளானோர் 57,47,660 ஆகவும், பலி எண்ணிக்கை 1,63,368 ஆகவும் உள்ளது.

இதேபோல இத்தாலி, போலந்து, ஸ்பெயின், ரஷ்யா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் நாள்தோறும் கொரோனா தொற்றிற்கு உள்ளாவோர் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.

https://www.ilakku.org/ஏழு-நாடுகளில்-தீவிரமாகும/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிரான்சில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும்; பிரதமர் அறிவிப்பு

பிரான்சில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும்; பிரதமர் அறிவிப்பு
 

பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், தேச பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிபருடன் (இமானுவேல் மேக்ரான்) சேர்ந்து முடிவெடுத்து உள்ளோம்.

இதன்படி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று  அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்புக்கு பலியானோர் நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்து உள்ளது.  இதனால், கொரோனா பாதிப்பின் 2வது அலை கடுமையாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

பிரான்சில் வெள்ளி கிழமை வரை 19.15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.  42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.  இதனை முன்னிட்டு அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர் 30ந்தேதி பொது முடக்கம் அறிவித்தது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/14054439/The-curfew-will-last-across-the-country-until-next.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உலகம் முழுவதும் ஒரே நாளில் 6.57 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் ஒரே நாளில் 6.57 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜெனீவா,

உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தலாக விளங்கி கொண்டிருக்கும் கொரோனா பாதிப்புகளின் 2வது அலை குளிர்காலத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.  எனினும், சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 6 லட்சத்து 57 ஆயிரத்து 312 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது கொரோனா பாதிப்பு அறிய தொடங்கிய பின்னர் ஒரு நாளில் ஏற்படும் மிக அதிக எண்ணிக்கையாகும் என தெரிவித்து உள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது, 5 கோடியே 31 லட்சத்து 64 ஆயிரத்து 803 ஆக உள்ளது.  இவற்றில் ஐரோப்பிய நாடுகளில் 2.85 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் அமெரிக்காவில் 2.69 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 9,797 ஆக உள்ளது.  இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 576 ஆக உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/15053210/Corona-affects-657-lakh-people-worldwide-in-a-single.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

 

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பதிவு: நவம்பர் 15,  2020 13:34 PM
வாஷிங்டன்,

கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்காவில் இதுவரையில் ஒரு கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். அதிலும் குறிப்பாக நவம்பர் 3 அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 10 நாட்களாக தினசரி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டிச் செல்கிறது. கடந்த 13-ம் தேதி மட்டும் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு புதியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தேர்தலில் பைடன் வெற்றிப்பெற்றிருக்கும் நிலையில் புதிய ஊரடங்கை அமல்படுத்த விரும்பாத டிரம்ப், ஏப்ரல் 2021-க்குள் அனைவருக்கும் மருந்து கிடைத்துவிடும் என கூறியிருக்கிறார்.
 
இதற்கிடையே வரும் நாட்களில் பாதிப்பு அதிகமாகலாம் என மாகாண அரசுக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கட்டாயப்படுத்தி வருகின்றன. மேலும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
 

https://www.dailythanthi.com/News/World/2020/11/15133403/Corona-affects-1-lakh-60-thousand-people-in-a-single.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது

பிரான்சை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது

 

பாரிஸ்:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.


 
கடந்த சில நாட்களாக பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 4-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மேலும் 14,524 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

அந்நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 625 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 46,273 ஆக ஆனது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/18045149/2082296/Tamil-News-Coronavirus-positive-cases-crosses-20-lakhs.vpf

ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா - 15 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா - 15 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

பியூனோஸ் ஐர்ஸ்:
 
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
 
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 6-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ஸ்பெயினில் மேலும் 13,359 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.35 லட்சத்தைக் கடந்துள்ளது.
 
ஒரே நாளில் 435 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 688 ஆக உள்ளது.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spacer.png

குறிப்பாக ஐரோப்பா, சுவிற்சர்லாந்து மற்றும் ஜெனீவா நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில்  உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்திலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த வாரத்தில் மட்டும் 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து  இதுவரை உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுமார் 65 ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன்  தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கிர்கோவ் தெரிவித்தார்.

எனினும் இது ஒரு கொத்தணியா என்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எந்த தகவலும் வெளியிடவில்லை. 

அத்துடன் உலக சுகாதார அமைப்பு (WHO) அவசரகால நிபுணர் டாக்டர் மைக் ரியான், சுவிட்சர்லாந்தில் அதன் தலைமையகத்தைச் சுற்றியுள்ள பகுதி தற்போது விரைவான கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

https://www.virakesari.lk/article/94596

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ரஷ்யாவில் ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மாஸ்கோ,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் இன்றைய நிலவரப்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. 

ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,15,608 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை பதிவானதிலேயே அதிகபட்ச பாதிப்பாக இது அமைந்துள்ளது.


அதேசமயம் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,850ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25,573 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் 6,438 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தொற்று பரவல் மிக தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/19165806/Russia-has-confirmed-23610-coronavirus-infections.vpf

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.84 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.84 கோடியாக உயர்வு

 

ஜெனீவா,
 
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 
 
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,84,68,280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,04,51,799 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 85 ஆயிரத்து 714 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
 
வைரஸ் பரவியவர்களில் 1,66,30,767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,369 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
 
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
 
அமெரிக்கா       -  பாதிப்பு - 1,24.39,966, உயிரிழப்பு - 2,61,757, குணமடைந்தோர் - 74,00,815
இந்தியா       -    பாதிப்பு -   90,95,908, உயிரிழப்பு - 1,33,263, குணமடைந்தோர் - 85,20,039
பிரேசில்       -    பாதிப்பு -   60,52,786, உயிரிழப்பு - 1,69,016, குணமடைந்தோர் - 54,29,158
பிரான்ஸ்     -     பாதிப்பு -   21,27,051, உயிரிழப்பு -   48,518, குணமடைந்தோர்  - 1,49,521
ரஷியா        -    பாதிப்பு -   20,64,748, உயிரிழப்பு -   35,778, குணமடைந்தோர்  -15,77,435
 
தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-
 
ஸ்பெயின் -15,89,219
இங்கிலாந்து - 14,93,383
இத்தாலி - 13,80,531
அர்ஜென்டினா - 13,66,182
கொலம்பியா - 12,40,493
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நிலை; தொடரும் உள்ளிருப்புச் செயற்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் வரும் கொரோனா

 

பிரான்ஸ் நாட்டில் உள்ளிருப்பு நடவடிக்கை கொரோனாவைக் கட்டுப்படுத்தி வருகிறது.

பிரான்ஸில் கொரோனா இரண்டாவது அலை இப்பொழுது சிறிது சிறிதாக குறைவடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

france.00.jpgவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைகிறது.

5-வது நாளாக நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று சனிக்கிழமை 24 மணி நேரத்தில் 276 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

48518 பேர் கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்து நேற்று வரை பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்கள்.

4039இடங்கள் கொரோனா தொற்று இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1539 இடங்கள் முதியோர் இல்லங்கள்.

100 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ளன.

பிரான்ஸ் சுகாதாரத் திணைக்களம் தனது கடமைகளைச் செய்து வருகின்றது.

4494 பேர் இப்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 24 மணித்தியாலங்களில் 220 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

31365 பேர் இப்பொழுது கொரோனா காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

17881 பேர் நேற்று 24 மணி நேரத்தில் பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/91605

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது - பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரிக்கை

ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின்  திட்டம் அபாயங்கள் நிறைந்தது - பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரிக்கை

ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின்  திட்டம் அபாயங்கள் நிறைந்தது என்றும், இதனால் தேசிய சுகாதாரத்தில்  ஏற்படக்கூடிய பாதிப்பு ஆழ்ந்த கவலைக்குரியது என்றும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

மார்ச் இறுதி வரை நீடிக்கும் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை அறிவித்ததை அடுத்து, ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலக்கட்டத்திற்குள் இங்கிலாந்து காலடி எடுத்து வைக்கிறது என்று போரிஸ் ஜான்சன் எச்சரித்தார்.

மேலும், டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கும் திருத்தப்பட்ட பிராந்திய மூன்று அடுக்கு கட்டுப்பாட்டு முறை குறித்த விவரங்களை பிரதமர் வெளியிட்டார்.இந்த நிலையில் அபாயங்கள் நிறைந்த ஒரு திட்டத்தை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார் என பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கவுன்சில் தலைவர் டாக்டர் சாந்த் நாக்பால் கூறினார்.

மேலும் கொரோனாவுக்கு எதிராக தற்போது வரை நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை தவிர்க்கும் வகையில் மற்றும் பொதுமக்கள் செய்த கடினமான தியாகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பிரதமரின் புதிய திட்டம் உள்ளது என விமர்சித்துள்ளார்

புதிய நடவடிக்கைகள் அக்டோபரை விட கடுமையானவை என்று பிரதமர் கூறுகிறார், உண்மையில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தொற்று விகிதங்கள் மற்றும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது  மற்றும் இறப்புகள் அதிகமாக இருக்கும்.

வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்வுகளில் 4,000 பேர் மற்றும் உட்புறங்களில் 1,000 பேர் வரை கலந்துக்கொள்ளலாம் என பிரதமர் அறிவித்துள்ளது மிகவும் கவலைக்குரியது. இரண்டாவது முழு ஊரங்கிற்கு வழிவகுத்த மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் திட்டம் எதனால் தோல்வியடைந்தது என்பது தற்போது நமக்கு தெரியும், அரசாங்கம் மீண்டும் அதே தவறுகளை செய்து கொரோனா பரவுவதை அதிகரிக்க வழிவகுக்கக்கூடாது என டாக்டர் சாந்த் நாக்பால் கூறினார்.

https://www.dailythanthi.com/News/World/2020/11/24153954/British-Medical-Association-warns-Boris-Johnsons-lockdown.vpf

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா புதிய சாதனை :ஒரே நாளிலில் 2.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்கா புதிய சாதனை :ஒரே நாளிலில் 2.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

 

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.23 லட்சத்தை தாண்டி உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,523,348 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 66,194,303 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 45,782,216 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,071 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வியாழக்கிழமை  அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு  100,667  ஆக  பதிவாகி இருந்தது. நேற்று 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

கலிபோர்னியாவில் 22,000 புதிய பாதிப்புகள்  பதிவாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள்  230,000 ஆக பதிவாகி  முதலிடத்தில் உள்ளன.கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 35 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை, அமெரிக்காவில்  கொரோனா பாதிப்புக்கு   2,600 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு கடந்த  நான்கு நாள் அபாயகரமான எண்ணிக்கையை தாண்டி உள்ளது.  நாட்டின் இறப்புக்கான ஏழு நாள் சராசரி, 1,966, இந்த வாரம் படிப்படியாக உயர்ந்துள்ளது. இது ஏப்ரல் 17 ஆம் தேதி 2,250 என்ற சாதனையை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் நாற்பத்தொரு மாநிலங்கள் 10 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புக்களை சந்தித்துள்ளன. அவற்றில், ஒரேகான், அயோவா, வாஷிங்டன் மற்றும் டென்னசி ஆகிய மாநிலங்களில்  தினசரி இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளன.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் கூறும் போது 

 பிப்ரவரி மாதத்திற்குள் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால்  இறப்பு எண்ணிக்கை 450,000 ஐ எட்டும்.  இந்த குளிர்காலம் "இந்த நாட்டின் பொது சுகாதார வரலாற்றில் மிகவும் கடினமான நேரம்" என்று அவர் எச்சரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 230,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.  ஒரே நாளில் கொரோனா பாதிப்புகளில்  ஒரு புதிய சாதனையாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.உலகில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் உள்ள நாடுகளில் அமெரிக்க முதல் இடத்தில் உள்ளது  (1.41 கோடி), தொடர்ந்து இந்தியா உள்ளது (95.71 லட்சம்) 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/05105731/US-Sees-New-Record-In-SingleDay-Spike-In-Covid-Cases.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா - 3 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா - 3 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.


 
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.60 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக ஆயிரம் முதல் 2 ஆயிரம் உள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 63 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/11065413/2147917/Tamil-News-Coronavirus-death-case-near-3-lakhs-in.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கொரோனா!

Emmanuel-Macron-2017-960x640.jpg?189db0&189db0

 

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு (42-வயது) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

 

https://newuthayan.com/பிரான்ஸ்-ஜனாதிபதிக்கு-கொ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி
 

உலகம் முழுவதும் கொரோனாவால் 7.46 கோடிக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும், ரஷ்யா நான்காவது இடத்திலும், பிரான்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்


இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் 7 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு பணிகளை கவனிப்பார் என்று அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. பிரான்சில் இதுவரை 24 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இந்த வாரம் தொடங்கி இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/World/2020/12/17155409/Emmanuel-Macron-French-President-tests-positive-for.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புடன் இருந்தும் தொற்றிவிட்டது – மக்களை எச்சரிக்கின்றார் மக்ரோன்

 

01-9-3.jpg

  • பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன்

“தற்பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கை யாக இருந்தும் கூட வைரஸ் எனக்குத் தொற்றியிருப்பது நிச்சயமாக அது அனைவருக்கும் தொற்றும் என்பதையே காட்டுகிறது. மிகக் கவனமாக இருங்கள்.”

இவ்வாறு தனது ருவீற்றர் வீடியோ பதிவில் தோன்றி நாட்டு மக்களை எச்சரித்திருக்கிறார் அதிபர் மக்ரோன்.

வைரஸ் தொற்றுக்கு இலக்காகி ஒரு நாள் கடந்த நிலையில் மக்ரோன் லா லன்ரேன் (La Lanterne) வாசஸ்தலத்தில் தனிமையில் இருந்து வருகிறார். இன்று மாலை வெளியாகிய அவரது வீடியோ பதிவில்” “நான் நலமுடன் உள்ளேன்” என்ற செய்தியை அவர் நாட்டுக்குத் தெரிவித்திருக்கிறார்.

தனது தொற்றுக்கு “கவனமின்மை”, “துரதிர்ஷ்டம்” இரண்டையும் காரணமாகக் காட்டியிருக்கும் அவர், “விரைவில் திரும்பி வருவேன். இது ஒரு மோசமான கட்டத்துக்குச் செல்லும் என்று நம்புவதற்கு காரணங்கள் இல்லை” எனவும் நம்பிக்கைவெளியிட்டிருக்கிறார்.

நாட்டின் சுகாதார விடயங்களையும் ‘பிரெக்ஸிட்’ போன்ற வெளிவிவகாரங் களையும் தான் தொடர்ந்து கவனித்துக் கையாண்டு வருகிறார் என்பதையும் மக்ரோன் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க நோய்ப் பாதிப்பு எதுவும் அற்ற இளவயது, புகை மற்றும் தீவிர மதுப் பழக்கம் இன்மை, இவற்றை மக்ரோன் வைரஸின் பிடியில் இருந்து பாதிப்பின்றி இலகுவில் மீண்டு வருவதற்குச் சாதகமான நிலைமைகளாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இராணுவ மருத்துவ சேவையைச் சேர்ந்த கேணல் தர நிபுணரான ஜீன்கிறிஸ்தோப் பெரோஷோன் (Jean-Christophe Perrochon) என்பவரே பிரெஞ்சு அதிபருக்கான அவசர மருத்துவ சேவைக்குப் பொறுப்பாக இருந்து வருகிறார். அவரது தலைமையிலான மருத்துவர் குழுவே மக்ரோனுக்குத் தற்சமயம் சிகிச்சை அளித்து வருகிறது.

https://thinakkural.lk/article/99341

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது!

 
2e2d695245bb3848b6ab388b5e4a92d30720bd33
 10 Views

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,76,86,841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,45,61,756 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 08 ஆயிரத்து 235 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,14,16,850 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,220 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:- இங்கிலாந்து – 20,73,511 துருக்கி – 20,43,704 இத்தாலி – 19,64,054 ஸ்பெயின் -18,30,110 ஆர்ஜென்டினா – 15,47,138 ஜேர்மனி – 15,34,116 கொலம்பியா – 15,18,067 மெக்சிக்கோ – 13,20,545 போலந்து – 12,07,333 ஈரான்- 11,64,535 பெரு – 9,97,517 உக்ரைன் – 9,70,993 தென்னாபிரிக்கா – 9,30,71

 

https://www.ilakku.org/?p=37747

  • கருத்துக்கள உறவுகள்

அண்டார்டிகாவிலும் பரவிய கொரோனா | Dinakaran

அண்டார்டிகாவிலும் பரவிய கொரோனா – 36 பேருக்கு தொற்று

குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும் 1,000 ஆராய்ச்சியாளர்களும் ஏனைய பணியாளர்களும் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்குள்ள 36 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அண்டார்டிகா பகுதியில் இருந்து திரும்பியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிலியில் உள்ள புன்டா அரினாஸ் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அண்டார்டிகாவில் உள்ள அனைத்து முக்கிய ஆராய்ச்சி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளதன் விளைவாக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தடைபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அண்டார்டிகாவிலும்-பரவிய/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.