Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதா? போர்க்கொடி தூக்கும் ‘சிங்ஹலே’ அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதா? போர்க்கொடி தூக்கும் ‘சிங்ஹலே’ அமைப்பு

Sinhale-500x450-1.jpg

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறியமுடிகிறது. கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று ‘சிங்ஹலே’ அமைப்பின் பொதுச்செயலாளர் மடில்லே பன்னலோக தேரர் தெரிவித்தார்.

“சிங்ஹலே” அமைப்பால் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட அரசாங்கம் மிகவும் முக்கியமானதொரு விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொண்டிருக்கிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிரான பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து நாமும் குரலெழுப்பி வந்தோம். இதற்கு எதிராகப் பல அமைப்புக்கள் அங்கு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டன.

eastern-terminal.jpg

எனினும் தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணம் முழுவதற்கும் தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அங்கு போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இவ்வாறானதொரு தருணத்தில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

நாட்டின் சுயாதீனத்துவத்தையும் இறையாண்மையையும் பிறிதொரு நாட்டுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயலாகவே நாம் இதனைக் கருதுகின்றோம். எனவே அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கமும் மேற்கொள்கின்றது. இந்த அரசாங்கத்தை நாட்டு மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கும்வரையில் எதற்காகவும் அஞ்சத் தேவையில்லை என்று அவர்கள் கருதுகின்றார்கள். மக்கள் தம்மீது கொண்டிருக்கும் இந்த அபார நம்பிக்கை தொடர்பில் ஆட்சியாளர்கள் நன்கு அறிந்துகொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையைத் தவறான முறையில் பயன்படுத்தியே ஆட்சியாளர்கள் இத்தகைய காரியங்களைச் செய்கின்றார்கள்.

அதேபோன்று ஸ்பார்க் எயார் என்ற நிறுவனத்துக்கு மத்தள விமானநிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கையளிக்கப்படவிருக்கிறது என்பது தொடர்பாகவும் நாம் அறிவோம். இவ்வாறு தேசிய பாதுகாப்பு அடிப்படையிலும் உபாய மார்க்க ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் மற்றும் விமானநிலையம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/86530

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களோட சேருவதற்கு எப்பிடிப் பதியிறதாம். போம் form எப்பிடி அடுக்கிறதாம். 😂😂

இந்த செய்தி பற்றி இரு விடயங்கள். ஒப்பிசெர்வர் ரெசீர்ச் பௌண்டஷன் (Observer Research Foundation) எழுதியுள்ள கட்டுரையில் கொழும்பு துறைமுகத்தின் 70% வருமானம் இந்திய வர்த்தகத்தினால் என்று எழுதப்படுள்ளது. அதோடு துறைமுக ஒப்பந்தம் அதானி, குஜராத்தில் மோடியின் உற்ற நண்பரும் கோடீஸ்வரனுடன் செய்கிறார்கள். ஆக இந்தியாவை எப்படி கட்டிப்போடலாம் என்பதில் இலங்கை தேர்ச்சிபெற்றுள்ளது எனலாம். 

இரண்டாவது பலமுறை இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகதில் இந்தியா முதலீடு செய்ய கேட்டும் அவர்கள் செய்யவில்லை எனவும் மாறாக சீன அதை செய்துள்ளது எனவும் கட்டுரை இலங்கை தரப்பை மேட்கோள்காட்டி எழுதியுளார்கள். மூலம் கீளே. 

ஆக இந்திய தனது நலன் விடயத்தில் தொடர்ந்து ஒரு அணில் ஏறவிட்ட நாய் என்று இந்த ஆய்வுகளில்  இருந்து தெரிகிறது. 

Important extracts:

1) If the question is about Sri Lanka offering Hambantota port contract to China, they are not tired of pointing out how it was offered only to India — and more than once. According to them, successive governments in Colombo at least from those days have been consciously keeping India’s security concerns in mind and have been working accordingly.

In this context, they argue that once India had showed disinterest in investing on Hambantota, New Delhi cannot dictate whom we approach for funds and on what terms, especially when we guarantee that we would protect India’s security interests, which also ‘coalesces with ours.’ According to them, “Anyway, then or now, only China has disposable funds for investments, and not one nation or international organisation that has reservations about Hambantota or other nice-funded projects in our country has ever offered that kind of funding.”

2) Colombo-based Sunday Times reported (1 November 2020) that the public sector Sri Lanka Port Authority has since handed over the management of Colombo Port’s Eastern Container Terminal (ECT) to India’s Adani Group. The tri-nation project, which included Japan, was left hanging after the Rajapaksas returned to power, but Colombage in his first interview as the Foreign Secretary said that they understood New Delhi’s reasoning as India accounted for 70 per cent of the port’s business.

Source: https://www.orfonline.org/expert-speak/srilanka-should-india-take-india-first-security-policy-face-value/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, puthalvan said:

இந்த செய்தி பற்றி இரு விடயங்கள். ஒப்பிசெர்வர் ரெசீர்ச் பௌண்டஷன் (Observer Research Foundation) எழுதியுள்ள கட்டுரையில் கொழும்பு துறைமுகத்தின் 70% வருமானம் இந்திய வர்த்தகத்தினால் என்று எழுதப்படுள்ளது. அதோடு துறைமுக ஒப்பந்தம் அதானி, குஜராத்தில் மோடியின் உற்ற நண்பரும் கோடீஸ்வரனுடன் செய்கிறார்கள். ஆக இந்தியாவை எப்படி கட்டிப்போடலாம் என்பதில் இலங்கை தேர்ச்சிபெற்றுள்ளது எனலாம். 

இரண்டாவது பலமுறை இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகதில் இந்தியா முதலீடு செய்ய கேட்டும் அவர்கள் செய்யவில்லை எனவும் மாறாக சீன அதை செய்துள்ளது எனவும் கட்டுரை இலங்கை தரப்பை மேட்கோள்காட்டி எழுதியுளார்கள். மூலம் கீளே. 

ஆக இந்திய தனது நலன் விடயத்தில் தொடர்ந்து ஒரு அணில் ஏறவிட்ட நாய் என்று இந்த ஆய்வுகளில்  இருந்து தெரிகிறது. 

Important extracts:

1) If the question is about Sri Lanka offering Hambantota port contract to China, they are not tired of pointing out how it was offered only to India — and more than once. According to them, successive governments in Colombo at least from those days have been consciously keeping India’s security concerns in mind and have been working accordingly.

In this context, they argue that once India had showed disinterest in investing on Hambantota, New Delhi cannot dictate whom we approach for funds and on what terms, especially when we guarantee that we would protect India’s security interests, which also ‘coalesces with ours.’ According to them, “Anyway, then or now, only China has disposable funds for investments, and not one nation or international organisation that has reservations about Hambantota or other nice-funded projects in our country has ever offered that kind of funding.”

2) Colombo-based Sunday Times reported (1 November 2020) that the public sector Sri Lanka Port Authority has since handed over the management of Colombo Port’s Eastern Container Terminal (ECT) to India’s Adani Group. The tri-nation project, which included Japan, was left hanging after the Rajapaksas returned to power, but Colombage in his first interview as the Foreign Secretary said that they understood New Delhi’s reasoning as India accounted for 70 per cent of the port’s business.

Source: https://www.orfonline.org/expert-speak/srilanka-should-india-take-india-first-security-policy-face-value/

இந்தியாவை எப்படி நீங்கள் நாய் எனத் திட்டலாம்.... கள விதிகள் அதற்கு அனுமதிக்குமா...... 😜

ராஜபக்சேயை இந்த சிகளே உரிமைக்காரர்களால் ஒன்றுமே பண்ண முடியாது. இங்குள்ள தொழில் சங்கங்கள் எல்லாம் சீனாவின் கைகளில் இருக்கின்றன. இவர்களும் உண்ணாவிரதமிருந்து போராட்டம் நடத்தி பார்த்தபோது அவர்களுக்கும் உறுதிமொழி வழங்கப்பட்ட்து. இருந்தாலும் ராஜபக்சேக்கள் மிகவும் வலிமையாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் நினைத்ததைதான் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். சில வேளைகளில் சீனாவினால் இதை தடுத்து நிறுத்த சந்தர்ப்பம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம்இந்தியாவின் கைகளுக்கு செல்கின்றது- அகிலன்

 
port-deal-696x391.jpg
 112 Views

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து, தலைநகர் கொழும்பை உள்ளடக்கிய மேல் மாணத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பின்னணியில், முக்கியமான இராஜதந்திர நகர்வு ஒன்றை கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வந்த கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடன்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் தொடர்ச்சியாகவே இதற்கான முடிவை கொழும்பு எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. இலங்கையில் அதிகளவில் காணப்படும் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில், கடும் தொனியில் மைக் பொம்பியோ தெரிவித்த கருத்துக்கள், இந்தியாவின் உணர்வுகளைப் பெருமளவுக்குப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்ததாக கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாகவே புதுடில்லியைச் சாந்தப்படுத்தும் ஒரு செயற்பாடாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் முடிவை கொழும்பு எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. சீனாவின் ஆதிக்கத்தை சமப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த நகர்வை கொழும்பு மேற்கொண்டிருந்தாலும், புதுடில்லியும், அமெரிக்காவும் இதனால் சாந்தமடையுமா என்ற முக்கியமான கேள்வி உள்ளது.

கைச்சாத்தான உடன்படிக்கை

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கைச்சாத்திட்டிருந்தபோதும், அந்தத் திட்டம் இதுவரை செயற்படுத்தப்படாத நிலைதான் இருந்தது. கொழும்பில் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களும், அரசியல் குழப்பங்களும்தான் இதற்குக் காரணம்.

2015ஆம் ஆண்டு 500மில்லியன் டொலர்களில் இத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கதில் உருவான குழப்பங்களினால் அது கைவிடப்பட்டிருந்தது. அதனைச் செயற்படுத்தப்போவதில்லை என அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். ஆனால், அதனைச் செயற்படுத்த வேண்டும் என்பதில் ரணில் விக்கிரமசிங்க அக்கறையாக இருந்தார்.

 

2019ஆம் ஆண்டு மே மாதம் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஆனால் அதே ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான சூழலில், அந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை. அது பெருமளவுக்குக் கைவிடப்பட்டுவிட்ட ஒரு நிலைதான் காணப்பட்டது. துறைமுக தொழிற்சங்கங்கள், கொடுத்த அழுத்தம், சிங்களத் தேசியவாத அமைப்புக்கள் கொடுத்த நெருக்குதல் என்பன இதற்குக் காரணம்.

இந்தியா, அமெரிக்கா கொடுத்த அழுத்தம்..

இதனைச் செயற்படுத்த வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குக் கடும் அழுத்தம் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கடந்த வாரம் இந்தியாவில் உயர்மட்டச் சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தபோதும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனைய விவகாரம் கலந்துரையாடப்பட்டிருந்ததாக டில்லி உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. அந்தப் பேச்சுகளை முடித்துக்கொண்டே கொழும்புக்கு வந்திருந்தார் பொம்பியோ.

கிழக்கு முனையத்தை எப்படியாவது எடுத்தவிட வேண்டும் என்பதில் இந்தியா அவசரமாக இருந்தமைக்கு காரணம் உள்ளது. சீனாவின் மண்டலமும் பாதையும் என்ற செயற்திட்டத்தின் வரைபடத்தில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக பெருமளவு காணியை எடுத்துள்ள சீனா, கிழக்கு முனையத்தையும் எடுத்துக்கொண்டால், கேந்திர ரீதியாக தமக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் என்பதை இந்தியா தெரிந்திருந்தது.

கிழக்குக் கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி வேலைகளை 2019ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் செய்து முடிக்க வேண்டுமென இந்தியா அழுத்தும் கொடுத்தமைக்கு அதுதான் காரணம். “சீனா இலங்கையை சூறையாடுகின்றது. கடன்பொறிக்குள் சிக்க வைத்துள்ளது” போன்ற பொம்பியோவின் கருத்துக்களும் இந்த விடயத்தில் எதனையாவது செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை கோட்டாபய அரசாங்கத்துக்குக் கொடுத்திருந்தது.

இந்தியத் தூதுவர் சொன்னது என்ன?

India-SL-Japan.jpg

இந்தப் பின்னணியில்தான் கடந்த வாரம் இடம்பெற்ற இணையவழி கருத்தரங்கு ஒன்றிலும், இந்த விடயம் குறித்துப் பேசப்பட்டுள்ளது. ஏசியன் இந்திய நிலையம், உலக விவகாரங்களுக்கான இந்தியக் கவுன்சில், பாத் ஃபைண்டர் உட்பட பல ஆய்வு நிறுவனங்கள் கூட்டாகச் சென்ற வியாழக்கிழமை இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. இதில், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தித் திட்டத்தின் அவசியம் தொடர்பாக இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே விரிவாக எடுத்து விளக்கியிருந்தார்.

இதனைக் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த அமைப்புக்களில் ஒன்று ‘பாத் ஃபைண்டர்’ என்ற அமைப்பு என்பது கவனிக்கத்தக்கது. புதுடில்லிக்கான இலங்கைத் தூதுவராகப் பிரேரிக்கப்பட்டிருக்கும் மிலிந்த மொரகொடதான் இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர். அவரது கருத்துக்களுக்கு அமைவாகவே இந்த அமைப்பும் செயற்பட்டு வருகின்றது. அமைச்சரவை அந்தஸ்த்தைக் கொண்ட தூதுவாக அவரது பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி அவரை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரென பச்சைக் கொடி காட்டியிருக்கின்றது. இலங்கையில், உயர் பதவிகளுக்கானவர்களை நியமிப்பதற்கான குழுவின் முடிவுக்காக அவர் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ‘மெய்நிகர்’ கருதரங்கு கூட, கொழும்பின் இராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்கான முயற்சிதான்.

நிர்வாகம் முழுமையாகவும் 49 வீத பங்கும் இந்தியாவுக்கு

eastern-terminal.jpg

இந்தப் பின்னணியில்தான் இந்த கொள்கலன் துறையை அபிவிருந்தி செய்வதற்கான பொறுப்பை “அத்வானி போட் என்ட் ஸ்பெசல் எக்கொனமிக் சோன்” (அத்வானி துறைமுக மற்றும் சிறப்பு பொருளாதார வலயம்) என்ற இந்திய நிறுவனத்திற்கு கிழக்கு முனையத்தில் 49% பங்குகளை விற்பனை செய்வதற்கு இலங்கை இணங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனைவிட அதன் முழு நிர்வாகத்தையும் குறித்த நிறுவனத்திற்கு வழங்க இலங்கை அரசு இணங்கியுள்ளதாக சர்வதேச பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையின் 100 வீதமும் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுத்தப்படும் என தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்த கோட்டாபய அரசாங்கம், தற்போது கொரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி கிழக்கு முனையத்தின் முழு நிர்வாகத்தையும், 49 வீத பங்கையும் இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

இந்தியாவைச் சமாதானப்படுத்துவதற்காக கொழும்பு எடுத்திருக்கும் இந்த நகர்வு நிச்சயமாக, எதிர்க்கட்சிகள், சிங்களத் தேசியவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும். ஆனால், தற்போது காணப்படும் கொரோனா பரவலும், நடைமுறையிலிருக்கும் தனிமைப்படுத்தல் சட்டமும், மக்கள் கூடுவதற்கோ ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கோ இடமளிக்காது. அதேவேளையில், 20ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்குக் கிடைத்திருக்கும் அதிகாரங்களும் இதனை முன்னெடுப்பதற்கான பலத்தை கோட்டாபயவுக்குக் கொடுக்கும்.

கிழக்கு முனையம் கிடைத்திருப்பதால் திருப்தியடையும் புதுடில்லி, அடுத்ததாக என்னத்தைக் கோட்டை விடப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

https://www.ilakku.org/கொழும்புத்-துறைமுக-கிழக்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.