Jump to content

கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த வதந்திகள்: 'உடலுக்குள் சிப்', 'மாற்றப்படும் டி.என்.ஏ' - உண்மை என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
  • ஃப்ளோரா கார்மிச்சேல்
  • பிபிசி ரியாலிட்டி செக்

கொரோனா வைரஸிலிருந்து 90 சதவீதம் வரை பாதுகாப்பு அளிக்கும் ஒரு தடுப்பூசி குறித்த செய்தி வெளியானவுடன் தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவ தொடங்கி விட்டன.

தடுப்பூசி என்ற பெயரில் உடலில் மைரோசிப்ஸ்களை பொருத்தி நமது உடலின் "ஜெனிடிக்கல் கோட்" மறு கட்டமைப்பு செய்யப்படும் என்பது, அதில் முதன்மையானது.

தடுப்பூசி தொடர்பான செய்திகள் வந்தவுடன், ட்விட்டரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் என்ற பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது.

கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து பில் கேட்ஸ் தொடர்பான பல பொய் செய்திகள் இணையத்தில் பரவின.

தடுப்பூசி மற்றும் பொது சுகாதாரத்திற்கு அதிக கொடையளிக்கும் காரணத்தினாலேயே அதிக சந்தேகத்துடன் அவர் இலக்கு வைக்கப்படுகிறார்.

கொரோனா பரவத் தொடங்கியது முதல் உலா வரும் ஒரு வதந்தி, "நமது நடவடிக்கைகளைக் கண்காணிக்க, நம் உடலில் ஒரு மைக்ரோசிப் பொருத்தப்படும், இந்த செயல்திட்டத்திற்குப் பின்னால் கேட்ஸ் இருக்கிறார் என்பதுதான்."

ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

'உடலுக்குள் சிப்','மாற்றி அமைக்கப்படும் டி.என்.ஏ': தடுப்பூசி தொடர்பான வதந்திகள் -உண்மை என்ன?

இது தொடர்பாக கேட்ஸ் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு பிபிசி விளக்கம் கேட்டது. ஆனால், அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டனர்.

இது தொடர்பான எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தாலும், 1640 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 28 சதவீத அமெரிக்கர்கள் இதனை நம்புவதாகக் கூறுகிறது யோகோவ் கருத்துக் கணிப்பு.

மாற்றி அமைக்கப்படும் டி.என்.ஏ

டிரம்புக்கு சாதகமாக எழுதும் நியூஸ் மேக்ஸ் தளத்தின் வெள்ளை மாளிகை செய்தியாளர் எமரால்ட் ராபின்சன் பகிர்ந்த ஒரு ட்வீட்டில், "இந்த தடுப்பூசிகள் உங்கள் டி.என்.ஏவை சேதமாக்கும்," என குறிப்பிட்டு இருந்தார்.

'உடலுக்குள் சிப்','மாற்றி அமைக்கப்படும் டி.என்.ஏ': தடுப்பூசி தொடர்பான வதந்திகள் -உண்மை என்ன?

அவரை ட்விட்டரில் 264,000 பேர் பின் தொடர்கிறார்கள்.

மற்ற வதந்திகளில் ஒன்று, இந்த தடுப்பூசி உங்கள் டி.என்.ஏவை மாற்றி அமைக்கும் என்பது. இது ஃபேஸ்புக்கில் பரவலாகப் பகிரப்பட்டது.

இது தொடர்பாக மூன்று ஆய்வாளர்களிடம் விளக்கம் கேட்டது பிபிசி. அவர்கள் இந்த தகவலை மறுத்தனர்.

"டி.என்.ஏ-வை கொரோனா தடுப்பூசி மாற்றி அமைக்காது," என்கின்றனர் அவர்கள்.

மரபணு தொடர்பான அடிப்படை புரிதலற்ற மக்களாலேயே இவ்வாறான வதந்திகள் பகிரப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

வைரஸின் மரபணு தகவல்களின் பகுதிகளை அல்லது ஆர்.என்.எக்களை இந்த தடுப்பூசிகள் கொண்டிருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆர்.என்.ஏ-வை ஒரு மனிதனிடம் செலுத்தும் போது அது மனிதனின் செல்லில் உள்ள டி.என்.ஏவை பாதிக்காது என்று கூறுகிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெஃப்ரி அல்மோண்ட்.

பிஃபிசர் மருந்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ, "இந்த தடுப்பூசிகள் உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்குமே தவிர, உடலின் டி.என்.ஏவை மாற்றி அமைக்காது," என்கிறார்.

இவ்வாறான செய்திகள் பரவுவது இது முதல்முறை அல்ல. மே மாதமே பிபிசி இது தொடர்பான ஒரு புலனாய்வை மேற்கொண்டிருக்கிறது.

பக்கவிளைவுகள்

எமரால்ட் ராபின்சன் பகிர்ந்து வைரலாக மீள் பகிரப்பட்ட மற்றொரு ட்விட்டில், "இந்த தடுப்பு மருந்துகளில் 75 சதவீதம் பக்கவிளைவுகள் கொண்டவை," என குறிப்பிட்டு இருந்தார்.

'உடலுக்குள் சிப்','மாற்றி அமைக்கப்படும் டி.என்.ஏ': தடுப்பூசி தொடர்பான வதந்திகள் -உண்மை என்ன?

பட மூலாதாரம்,TWITTER

பிஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.

தீவிரமான எந்த பக்கவிளைவுகளும் இல்லை என அவை கூறுகின்றன.

பல தடுப்பூசிகளில் பக்கவிளைவுகள் இருக்கும். ஆனால், தடுப்பூசிக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் நம்புவதுபோல அவை அச்சம் தருபவை அல்ல.

மற்ற தடுப்பூசிகளைப் போல, உடல்வலி, தலைவலி, மற்றும் காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான பக்கவிளைவுகள் இருக்கும் என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் வருகை பேராசிரியர் மருத்துவர் பென்னி.

மேலும் அவர், வழக்கமாகக் காய்ச்சலுக்காகப் போடப்படும் இந்த தடுப்பூசிகளிலேயே இப்படியான பக்கவிளைவுகள் இருக்கும் என்கிறார் அவர். சாதாரண மருத்துகளை எடுத்து கொள்வதன் மூலமே இந்த பக்கவிளைவுகளைச் சரி செய்துவிடமுடியும் என்கிறார் அவர்.

75 சதவீதம் பக்கவிளைவுகள் கொண்டவை என எப்படி ராபின்சன் கூறுகிறார் என தெரியவில்லை.அதற்கான தரவுகளை எப்படி பெற்றார் என்றும் தெரியவில்லை.

இந்த தடுப்பூசிகளில் என்னென்ன பக்கவிளைவுகள் இருக்கும் என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பெரிதாக எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்கிறது பிஃபிசெர்.

இது தொடர்பாக விளக்கம் பெற எமரால்ட் ராபின்சனை தொடர்பு கொண்டது பிபிசி. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துவிட்டார்.

https://www.bbc.com/tamil/science-54950723

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.