Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழீழ" அரசாங்கத்தை அங்கீகரிக்கக் கோரி ஐ.நா. நோக்கிய பாரிய எழுச்சிப் பேரணி.

Featured Replies

"தமிழீழ" அரசாங்கத்தை அங்கீகரிக்கக் கோரி ஐ.நா. நோக்கிய பாரிய எழுச்சிப் பேரணி.

"இலங்கைத் தீவில் தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசனை அனைத்துலகமே அங்கீகரி" என்ற முழக்கத்தை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய உலகத் தமிழர்களின் "வெல்க தமிழ்" எழுச்சிப் பேரணி சற்று முன்னர் தொடங்கியது.

ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலக முன்றலுக்கு முன்பாக 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொடரூந்து நிலையம் அருகே ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2 மணியளவில் (தாயக நேரம் மாலை 5.45) இந்தப் பேரணி தொடங்கியது.

பேரணியின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்க உரையை தமிழீழத்திலிருந்து வருகை தந்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நிகழ்த்தினார்.

- சிறிலங்கா ஆட்சியாளர்களால் நடத்தப்படும் தமிழின அழிப்பை நிறுத்துக

- போர்க் குற்றம் புரியும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றக் கூண்டில் நிறுத்துக

- தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையே வெளியேறு

- தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக

- தமிழர் விடுதலைக்கான குரலை அங்கீகரி

- தமிழீழத் தமிழகளின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி

ஆகிய முழக்கங்கள் இந்தப் பேரணியில் எழுப்பப்பட்டன.

தமிழீழத் தமிழர் அவலங்களை வெளிப்படுத்தும் வகையிலான ஊர்திகளும் பேரணியில் இடம்பெற்றிருந்தன.

பேரணியில் இடம்பெற்றிருந்தோர் தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி- தமிழீழத் தேசியத் தலைவரின் உருவம் பொறித்த பதாகைகளைத் தாங்கியவாறு நகர்ந்து வருகின்றனர்.

மேலும் தமிழீழ இராணுவமான "விடுதலைப் புலிகளின்" படையணிகளின் இலச்சினைகளும் இப்பேரணியில் பதாகைகளாக ஏந்திச் செல்லப்பட்டன.

பிரான்ஸ், யேர்மனி, பிரித்தானியா, இத்தாலி, டென்மார்க், சுவீடன், நோர்வே, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.

பேரணியின் முடிவில் ஐ.நா. முன்றலில் நடைபெறும் நிகழ்வில் சிறப்புரைகள் நிகழ்த்தப்படும். பேரணியின் நிறைவாக வெல்க தமிழ் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.

-Puthinam-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

(2 ஆம் இணைப்பு) செயலற்ற சிறிலங்கா விசாரணை ஆணையம்: அனைத்துலக வல்லுநர்கள் குழு பகிரங்க குற்றச்சாட்டு

[திங்கட்கிழமை, 11 யூன் 2007, 15:16 ஈழம்] [செ.விசுவநாதன்]

சிறிலங்காவின் பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம்- செயலற்றது என்று அனைத்துலக வல்லுநர்கள் குழு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

மூதூரில் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை உள்ளிட்ட 16 முக்கிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கத்தினால் அரச தலைவர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகளைக் கண்காணிக்க 11 பேர் கொண்ட அனைத்துலக வல்லுநர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

அக்குழு தனது முதலாவது இடைக்கால அறிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கடந்த 1ஆம் நாளன்று கையளித்தது.

மகிந்தவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக அனைத்துலக வல்லுநர்கள் குழுவின் தலைவர் நீதிபதி பி.என்.பகவதி வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்கா அரச தலைவரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் விசாரணை ஆணையம் குறித்த எமது கருத்துகளும் கவலைகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

எமது வல்லுநர் குழு அமைக்கப்பட்ட பெப்ரவரி (2007) முதல் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விசாரணை ஆணையம் தொடர்பிலான பல கவலைகளை அடையாளப்படுத்தி தெரிவித்துள்ளோம்.

விசாரணை ஆணையத்தின் சுயாதீனம், காலவரையறை, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக அனைத்துலக விதிகளை சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விசாரணை ஆணையம் பின்பற்றப்படாமல் இருப்பது குறித்து மீண்டும் கவலை கொள்கிறோம்.

விசாரணை ஆணையத்தின் சட்ட ஆலோசகரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பங்கு குறித்து அதிருப்தி தெரிவிக்கிறோம். சட்ட மா அதிபர் திணைக்களம் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் முதன்மை சட்ட ஆலோசகரின் அலுவலகம். ஆனால் வெளிப்படையாக சுயாதீனமாக இயங்காமலும் அனைத்துலக விதிகளைப் பின்பற்றாமலும் விசாரணை ஆணையம் இயங்குவதால் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை கேள்விக்குள்ளாகிறது.

சிறிலங்கா அரச தலைவர் செயலகத்தினால் பராமரிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் நிதி மேலாண்மை குறித்தும் நாம் கவலை கொள்கிறோம். நிதி ரீதியாக விசாரணை ஆணையம் சுயாதீனமாக இயங்க முடியவில்லை. குறிப்பாக சாட்சிகளின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை உள்ளிட்டவைகளுக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

அதேபோல் கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதமே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட போதும்

- 2007ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடக்க நிலை விசாரணைகளைக் கூட விசாரணை ஆணையம் மேற்கொள்ளவில்லை

- ஆணையத்தின் உள்ளக நடைமுறைகள் வெளிப்படையாக இல்லை.

- தெளிவான செயற்பாட்டுத் திட்டம் இல்லை. போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.

- சாட்சிகளின் பாதுகாப்புக்கான பிரிவு இயங்கவில்லை

- குறிப்பிட்ட வழக்குகளில் ஏற்கெனவே அரசாங்க அமைப்புகளினால் பெறப்பட்ட ஆதாரங்களை விசாரணை ஆணையம் சேகரிக்கவில்லை. அவற்றை எங்களுக்கு வழங்கவும் இல்லை

- இத்தகைய தேவையற்ற கால தாமதங்களினால் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைந்துள்ளது

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

(3 ஆம் இணைப்பு) ஜெனீவா திணற "தமிழீழ"த்தை அங்கீகரிக்கக் கோரி பாரிய எழுச்சிப் பேரணி

[திங்கட்கிழமை, 11 யூன் 2007, 17:48 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

"இலங்கைத் தீவில் தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி" என்ற முழக்கத்தை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய உலகத் தமிழர்களின் "வெல்க தமிழ்" எழுச்சிப் பேரணியின் முன்பகுதியினர் தற்போது ஐ.நா. முன்றலை அடைந்துள்ளனர்

ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலுக்கு முன்பாக 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொடரூந்து நிலையம் அருகே ஐரோப்பிய நேரம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்தப் பேரணி தொடங்கியது.

பேரணியின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்க உரையை தமிழீழத்திலிருந்து வருகை தந்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நிகழ்த்தினார்.

- சிறிலங்கா ஆட்சியாளர்களால் நடத்தப்படும் தமிழின அழிப்பை நிறுத்துக

- போர்க்குற்றம் புரியும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றக்கூண்டில் நிறுத்துக

- தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையே வெளியேறு

- தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக

- தமிழர் விடுதலைக்கான குரலை அங்கீகரி

- தமிழீழத் தமிழகளின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி

- எங்கள் தலைவர் பிரபாகரன்! எங்கள் தலைவர் பிரபாகரன்!

- எங்கள் தேசம் தமிழீழம்! எங்கள் தேசம் தமிழீழம்

என முழக்கங்கள் பல்வேறு மொழிகளிலும் எழுப்பப்பட்டன.

தமிழீழத் தமிழர்கள் முகம் கொடுத்து வரும் ஒவ்வொரு அவலத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான ஊர்திகளும் பேரணியில் இடம்பெற்றிருந்தன.

பேரணியில் இடம்பெற்றிருந்தோர்

தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி-

தமிழீழத் தேசியத் தலைவரின் உருவம்

தமிழீழ இராணுவமான "விடுதலைப் புலிகளின்" படையணிகளின் இலச்சினைகள்

ஆகியவற்றை பதாகைகளாக ஏந்திச் சென்றனர்.

பேரணிகளில் பங்கேற்றோர் மஞ்சள்- சிவப்பு உடைகள் அணிந்திருந்தனர். பல்வேறு தமிழர் நிறுவனங்கள்- அமைப்புகள் தங்களது நிறுவனம் மற்றும் அமைப்பின் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

கைக்குழந்தைகளை தொட்டிலில் ஏந்தியவாறு பெண்கள் பேரணியில் பங்கேற்றனர்.

விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்தோர் அந்த கழகங்களுக்குரிய சீருடைகளை அணிந்திருந்தனர்.

சிவப்பு, மஞ்சள் வர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்ட நிலையில் ஜெனீவாவின் வீதிகள் திணறியது.

பல அடுக்கு மாடிக் கட்டடங்களின் நடுப்பகுதி ஊடே பேரணி நகர்ந்த போது ஊர்திகளில் இடம்பெற்றிருந்த பாரிய அவலங்கள் சுவிஸ் நாட்டவரின் கவனத்தை பாரிய அளவில் ஈர்த்தது.

பிரான்ஸ், யேர்மனி, பிரித்தானியா, இத்தாலி, டென்மார்க், சுவீடன், நோர்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.

தனி வானூர்திகளை அமர்த்தியும் பெருந்தொகையான பேரூந்துகளிலும் தொடரூந்துகளிலும் தாங்கள் ஜெனீவாவுக்கு வந்ததாக பேரணியில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

பேரணியின் முடிவில் ஐ.நா. முன்றலில் நடைபெறும் நிகழ்வில் சிறப்புரைகள் நிகழ்த்தப்படும். பேரணியின் நிறைவாக வெல்க தமிழ் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் (தமிழ்நாடு) பழ. நெடுமாறன் கருத்து தெரிவிக்கையில், வெள்ளம் போல் தமிழர் கூட்டம் திரண்டிருக்கிறது. தமிழீழப் பிரச்சனையை சிங்கள இராணுவ அட்டூழியங்களை மனித உரிமை மீறல்களை உலக சமுதாயத்துக்கு எடுத்துக்காட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்றார்.

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

(4 ஆம் இணைப்பு) ஜெனீவா திணற "தமிழீழ"த்தை அங்கீகரிக்கக் கோரி பாரிய எழுச்சிப் பேரணி

[திங்கட்கிழமை, 11 யூன் 2007, 17:48 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

"இலங்கைத் தீவில் தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி" என்ற முழக்கத்தை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய உலகத் தமிழர்களின் "வெல்க தமிழ்" எழுச்சிப் பேரணியின் முன்பகுதியினர் தற்போது ஐ.நா. முன்றலை அடைந்துள்ளனர்.

ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலுக்கு முன்பாக 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொடரூந்து நிலையம் அருகே ஐரோப்பிய நேரம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்தப் பேரணி தொடங்கியது.

பேரணியின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்க உரையை தமிழீழத்திலிருந்து வருகை தந்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நிகழ்த்தினார்.

- சிறிலங்கா ஆட்சியாளர்களால் நடத்தப்படும் தமிழின அழிப்பை நிறுத்துக

- போர்க்குற்றம் புரியும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றக் கூண்டில் நிறுத்துக

கைக் குழந்தைகளை தொட்டிலில் ஏந்தியவாறு பெண்கள் பேரணியில் பங்கேற்றனர்.

விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்தோர் அந்த கழகங்களுக்குரிய சீருடைகளை அணிந்திருந்தனர்.

சிவப்பு, மஞ்சள் வர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்ட நிலையில் ஜெனீவாவின் வீதிகள் திணறியது.

பல அடுக்கு மாடிக் கட்டடங்களின் நடுப்பகுதி ஊடே பேரணி நகர்ந்த போது ஊர்திகளில் இடம்பெற்றிருந்த பாரிய அவலங்கள் சுவிஸ் நாட்டவரின் கவனத்தை பாரிய அளவில் ஈர்த்தது.

பிரான்ஸ், யேர்மனி, பிரித்தானியா, இத்தாலி, டென்மார்க், சுவீடன், நோர்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.

தனி வானூர்திகளை அமர்த்தியும் பெருந்தொகையான பேரூந்துகளிலும் தொடரூந்துகளிலும் தாங்கள் ஜெனிவாவுக்கு வந்ததாக பேரணியில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

தாயகத்தில் புலிகளின் குரலிலும் புலம்பெயர் வானொலிகளான ஐபிசி தமிழ் வானொலி, கனடிய தமிழ் வானொலி, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஜேர்மனியிலிருந்து ஒலிபரப்பாகும் ஐரோப்பிய தமிழ் வானொலியும், தொலைக்காட்சி ஒளிபரப்பினை தாயகத்திலிருந்து ஒளிபரப்பாகும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சி, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் ஒலிபரப்பாகும் "தரிசனம்" தொலைக்காட்சியிலும் நேரடி ஒலி, ஒளிபரப்பப்படுகின்றன.

ஐ.நா. முன்றலை பேரணியின் முன்பகுதியினர் சென்றடைந்த பின்னர் அரங்க நிகழ்வுகள் தொடங்கின. பேரணியில் பங்கேற்றோர் தொடர்ந்து அரங்கை வந்தடைகின்றனர்.

இந்தப் பேரணியில் பங்கேற்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் (தமிழ்நாடு) பழ. நெடுமாறன் கருத்து தெரிவிக்கையில், வெள்ளம் போல் தமிழர் கூட்டம் திரண்டிருக்கிறது. தமிழீழப் பிரச்சனையை சிங்கள இராணுவ அட்டூழியங்களை மனித உரிமை மீறல்களை உலக சமுதாயத்துக்கு எடுத்துக்காட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்றார்.

ஐ.நா. முன்றலின் முன்பாக உள்ள திடலின் மையத்தில் தமிழீழத் தேசியக்கொடி வாழ்த்துடன் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தமிழீழத்தின் விடியலைச் சொல்லும் வகையில் தமிழீழத் தேசியக் கொடி ஐ.நா. முன்றலின் முன்பாக பட்டொளி வீசிப் பறந்தது.

அரங்க நிகழ்வுகளை சுவிசின் அல்பேர்ட் தொகுத்து வழங்கினார்.

அதே நேரத்தில் சிவப்பு, மஞ்சள் நிறத்திலான பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ஐ.நா. மன்ற முன்றல் வான் முழுமையும் அந்த பலூன்கள் பறந்தன.

பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் அமைப்பின் பொறுப்பாளர் கிருபாகரன் ஈகச் சுடரேற்றினார்.

தாயகத்துக்காக உயிர்களை அர்ப்பணித்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

சிறப்புரைகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன.

puthinam

  • தொடங்கியவர்

மக்கள் வெள்ளத்தில் வெல்க தமிழ்.

புலம்பெயரந்து வாழும் தமிழ் மக்கள் பெரும்திரளாக ஒன்று சேர்ந்து ஜெனிவா நகரில் தமிழரது தனியரசு நியாயத்தை நிலைநாட்டும் வகையில் வெல்கதமிழ் எனும் எழுச்சிப்பேரணியை சிற்ப்புற நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மழை இடையிடையே தூறிக்கொண்டிருக்கும் போது கூட மக்கள் தமது தாயக உணர்வோடு பல்ஆயிரக்கணக்கில் திரண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

அங்கு மக்கள்

‘எமது தேசம் எமக்கு வேண்டும்’

‘எமது தலைவர் பிரபாகரன்’

‘தமிழர் விடுதலைக்கான குரலை அங்கீகரி’

‘எங்கள் தேசம் தமிழீழம்’

'தமிழீழமே எமது நாடு'

எனகோசம் எழுப்பியவாறு செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதேவேளை பெரும் திரளான ஊர்திகளில் எமது தமிழ் மக்களின் அவல நாளாந்த வாழ்வை சித்தரிக்கும் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன.

பேரணியில் ஈடுபட்டோர் தமிழீழ தேசியக்கொடி, தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களது திருவுருவம், விடுதலைப்புலிகளின் படையணிகளின் இலட்சணைகள் ஆகியவற்றை தாங்கியவண்ணம் செல்வதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Pathivu-

  • தொடங்கியவர்

ஜெனீவா திணற தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரி பாரிய எழுச்சிப் பேரணி.

"இலங்கைத் தீவில் தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி" என்ற முழக்கத்தை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய உலகத் தமிழர்களின் "வெல்க தமிழ்" எழுச்சிப் பேரணியின் முன்பகுதியினர் தற்போது ஐ.நா. முன்றலை அடைந்துள்ளனர்.

ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலுக்கு முன்பாக 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொடரூந்து நிலையம் அருகே ஐரோப்பிய நேரம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்தப் பேரணி தொடங்கியது.

பேரணியின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்க உரையை தமிழீழத்திலிருந்து வருகை தந்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நிகழ்த்தினார்.

- சிறிலங்கா ஆட்சியாளர்களால் நடத்தப்படும் தமிழின அழிப்பை நிறுத்துக

- போர்க்குற்றம் புரியும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றக்கூண்டில் நிறுத்துக

- தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையே வெளியேறு

- தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக

- தமிழர் விடுதலைக்கான குரலை அங்கீகரி

- தமிழீழத் தமிழகளின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி

- எங்கள் தலைவர் பிரபாகரன்! எங்கள் தலைவர் பிரபாகரன்!

- எங்கள் தேசம் தமிழீழம்! எங்கள் தேசம் தமிழீழம்

என முழக்கங்கள் பல்வேறு மொழிகளிலும் எழுப்பப்பட்டன.

தமிழீழத் தமிழர்கள் முகம் கொடுத்து வரும் ஒவ்வொரு அவலத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான ஊர்திகளும் பேரணியில் இடம்பெற்றிருந்தன.

பேரணியில் இடம்பெற்றிருந்தோர்

தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி-

தமிழீழத் தேசியத் தலைவரின் உருவம்

தமிழீழ இராணுவமான "விடுதலைப் புலிகளின்" படையணிகளின் இலச்சினைகள்

ஆகியவற்றை பதாகைகளாக ஏந்திச் சென்றனர்.

பேரணிகளில் பங்கேற்றோர் மஞ்சள்- சிவப்பு உடைகள் அணிந்திருந்தனர். பல்வேறு தமிழர் நிறுவனங்கள்- அமைப்புகள் தங்களது நிறுவனம் மற்றும் அமைப்பின் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

கைக்குழந்தைகளை தொட்டிலில் ஏந்தியவாறு பெண்கள் பேரணியில் பங்கேற்றனர்.

விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்தோர் அந்த கழகங்களுக்குரிய சீருடைகளை அணிந்திருந்தனர்.

சிவப்பு, மஞ்சள் வர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்ட நிலையில் ஜெனீவாவின் வீதிகள் திணறியது.

பல அடுக்கு மாடிக் கட்டடங்களின் நடுப்பகுதி ஊடே பேரணி நகர்ந்த போது ஊர்திகளில் இடம்பெற்றிருந்த பாரிய அவலங்கள் சுவிஸ் நாட்டவரின் கவனத்தை பாரிய அளவில் ஈர்த்தது.

பிரான்ஸ், யேர்மனி, பிரித்தானியா, இத்தாலி, டென்மார்க், சுவீடன், நோர்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.

தனி வானூர்திகளை அமர்த்தியும் பெருந்தொகையான பேரூந்துகளிலும் தொடரூந்துகளிலும் தாங்கள் ஜெனீவாவுக்கு வந்ததாக பேரணியில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

பேரணியின் முடிவில் ஐ.நா. முன்றலில் நடைபெறும் நிகழ்வில் சிறப்புரைகள் நிகழ்த்தப்படும். பேரணியின் நிறைவாக வெல்க தமிழ் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.

-Tamilwin-

தமிழீழமே வாழ்துக்கள்!!

நெடுமாறன் ஐயா அவர்களின் காத்திரமான பேச்சு ஒரு மணிமகுடம்.

  • கருத்துக்கள உறவுகள்

(5 ஆம் இணைப்பு)"தமிழீழத்தை" அங்கீகரிக்கக் கோரி பாரிய எழுச்சியுடன் நடந்த "வெல்க தமிழ்" பேரணி

[திங்கட்கிழமை, 11 யூன் 2007, 17:48 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

"இலங்கைத் தீவில் தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி" என்ற முழக்கத்தை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய உலகத் தமிழர்களின் "வெல்க தமிழ்" எழுச்சிப் பேரணியால் சுவிசின் ஜெனீவா நகரமே திணறியது.

(5 ஆம் இணைப்பு: பிரமுகர்கர்களின் உரை, ரிவிஜ தொலைக்காட்சி, நிகழ்வின் இறுதி விபரம்)

ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலுக்கு முன்பாக 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொடரூந்து நிலையம் அருகே ஐரோப்பிய நேரம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்தப் பேரணி தொடங்கியது.

பேரணியின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

- சிறிலங்கா ஆட்சியாளர்களால் நடத்தப்படும் தமிழின அழிப்பை நிறுத்துக

- போர்க்குற்றம் புரியும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றக் கூண்டில் நிறுத்துக

- தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்கா ஆக்கிரமிப்புப்படையே வெளியேறு

- தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக

- தமிழர் விடுதலைக்கான குரலை அங்கீகரி

- தமிழீழத் தமிழகளின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி

- எங்கள் தலைவர் பிரபாகரன்! எங்கள் தலைவர் பிரபாகரன்!

- எங்கள் தேசம் தமிழீழம்! எங்கள் தேசம் தமிழீழம்

என முழக்கங்கள் பல்வேறு மொழிகளிலும் எழுப்பப்பட்டன.

தமிழீழத் தமிழர்கள் முகம் கொடுத்து வரும் ஒவ்வொரு அவலத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான ஊர்திகளும் பேரணியில் இடம்பெற்றிருந்தன.

பேரணியில் இடம்பெற்றிருந்தோர்

தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி-

தமிழீழத் தேசியத் தலைவரின் உருவம்

தமிழீழ இராணுவமான "விடுதலைப் புலிகளின்" படையணிகளின் இலச்சினைகள்

ஆகியவற்றை பதாகைகளாக ஏந்திச் சென்றனர்.

பேரணிகளில் பங்கேற்றோர் மஞ்சள்- சிவப்பு உடைகள் அணிந்திருந்தனர். பல்வேறு தமிழர் நிறுவனங்கள்- அமைப்புகள் தங்களது நிறுவனம் மற்றும் அமைப்பின் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

கைக்குழந்தைகளை தொட்டிலில் ஏந்தியவாறு பெண்கள் பேரணியில் பங்கேற்றனர்.

விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்தோர் அந்த கழகங்களுக்குரிய சீருடைகளை அணிந்திருந்தனர்.

சிவப்பு, மஞ்சள் வர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்ட நிலையில் ஜெனீவாவின் வீதிகள் திணறியது.

பல அடுக்கு மாடிக் கட்டடங்களின் நடுப்பகுதி ஊடே பேரணி நகர்ந்த போது ஊர்திகளில் இடம்பெற்றிருந்த பாரிய அவலங்கள் சுவிஸ் நாட்டவரின் கவனத்தை பாரிய அளவில் ஈர்த்தது.

பிரான்ஸ், யேர்மனி, பிரித்தானியா, இத்தாலி, டென்மார்க், சுவீடன், நோர்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.

தனி வானூர்திகளை அமர்த்தியும் பெருந்தொகையான பேரூந்துகளிலும் தொடரூந்துகளிலும் தாங்கள் ஜெனிவாவுக்கு வந்ததாக பேரணியில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

தாயகத்தில் புலிகளின் குரலிலும் புலம்பெயர் வானொலிகளான ஐபிசி தமிழ் வானொலி, கனடிய தமிழ் வானொலி, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஜேர்மனியிலிருந்து ஒலிபரப்பாகும் ஐரோப்பிய தமிழ் வானொலியும், தொலைக்காட்சி ஒளிபரப்பினை தாயகத்திலிருந்து ஒளிபரப்பாகும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சி, கனடாவிலிருந்து ரிவிஐ, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் ஒலிபரப்பாகும் "தரிசனம்" தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒலி, ஒளிபரப்பப்பட்டன.

ஐ.நா. முன்றலை பேரணியின் முன்பகுதியினர் சென்றடைந்த பின்னர் அரங்க நிகழ்வுகள் தொடங்கின. பேரணியில் பங்கேற்றோர் தொடர்ந்து அரங்கை வந்தடைந்த வண்ணம் இருந்தனர்.

இந்தப் பேரணியில் பங்கேற்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் (தமிழ்நாடு) பழ. நெடுமாறன் கருத்து தெரிவிக்கையில், வெள்ளம் போல் தமிழர் கூட்டம் திரண்டிருக்கிறது. தமிழீழப் பிரச்சனையை சிங்கள இராணுவ அட்டூழியங்களை மனித உரிமை மீறல்களை உலக சமுதாயத்துக்கு எடுத்துக்காட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்றார்.

ஐ.நா. முன்றலின் முன்பாக உள்ள திடலின் மையத்தில் தமிழீழத் தேசியக்கொடி வாழ்த்துடன் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தமிழீழத்தின் விடியலைச் சொல்லும் வகையில் தமிழீழத் தேசியக் கொடி ஐ.நா. முன்றலின் முன்பாக பட்டொளி வீசிப் பறந்தது.

அரங்க நிகழ்வுகளை சுவிசின் அல்பேர்ட் தொகுத்து வழங்கினார்.

அதே நேரத்தில் சிவப்பு, மஞ்சள் வர்ணத்திலான பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ஐ.நா. மன்ற முன்றல் வான் முழுமையும் அந்த பலூன்கள் பறந்தன.

பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் அமைப்பின் பொறுப்பாளர் கிருபாகரன் ஈகச் சுடரேற்றினார்.

தாயகத்துக்காக உயிர்களை அர்ப்பணித்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் அமைப்பின் பொறுப்பாளர் வி.கிருபாகரன் பேசுகையில், அடக்கப்பட்ட மக்கள் சீருடைகளுடன் போராடினால் அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் வலியுறுத்துகின்றது என்றார்.

முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் நெருங்கிய உறவினரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளரான மருத்துவ கலாநிதி பிறையன் செனிவிரட்ன தனது உரையில்,

இலங்கையில் யுத்தம் நடைபெறவில்லை. இனப்படுகொலைதான் நடைபெறுகிறது.

பொருளாதாரம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுகிறது. இனப்பிரச்சனையின் மற்றொரு பக்கத்தையும் அனைத்துலக ஊடகங்கள் முன்னிலைப்படுத்த வேண்டும்.

ஒரு தரப்பை தடை செய்துவிட்டு பேச்சு வார்த்தையை எப்படி நடத்துவது? தடைகள் மூலம் கொழும்பு பேரினவாதத்துக்கு ஆதரவளிக்கின்றன.

ராஜபக்ச சகோதரர்கள் விடுதலைப் புலிகளத் தோற்கடித்தாலும் உலகத் தமிழர்களின் உறுதியான அரசியல் போராட்டத்தை தோற்கடிக்க முடியாது. சிறிலங்காவை சிங்கள பௌத்த அரசாங்கமாக சிங்களவர்கள் கருதினால் தமிழ் மக்களும் தமிழீழத்தை தங்களது தேசமாகக் கருதும் உரிமை உண்டு என்றார்.

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த ஊடகத்துறையைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் பேசுகையில்,

அடிபடுபவன் தீவிரவாதி அல்ல. அடிக்கிறவன்தான் தீவிரவாதி. கொழுப்பேறி சுதந்திரம் கேட்கவில்லை கொடுமைகளால் கேட்கிறார்கள். நாடுகள் இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றன. மக்கள் மடிவதைத் தடுக்க ஒரு நாடு இரண்டாக பிளவுபடுவது தவறா? உலகக் கிண்ணக் கோப்பையில் கூட ஒரு சிங்களவன் தான் ஆட வேண்டும்- சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் ஆடக்கூடாது என்று கருதுகிற சிங்களத்திடத்தில் நீதி கிடைக்காது என்றார்.

தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பேசுகையில்,

இந்த வெல்க தமிழ் நிகழ்வு ஒரு வரலாற்று திருப்பம். 1983 இல் பல விடுதலை இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தினாலும் போராட்டங்கள்- குழப்பங்கள்- சிக்கல்கள் மோதல்கள் இருந்தபோதும் அனைத்தையும் மறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் ஒரே தலைவர்- ஒரே கொடி என மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து நிற்கிறோம்.

அனைத்துலக கண்டனங்களால் மகிந்த ராஜபக்ச பைத்தியம் பிடித்தது போல் ஆகியிருக்கிறார். இலங்கைக்குள் தீர்வு இல்லை என்று நிலைமை உருவாக்கப்பட்ட பின்னர் எமது தேசத்தை வென்றெடுப்பதைத தவிர வேறு தீர்வு இலை. எங்களை நாங்களே ஆள்வதன் மூலம் நிம்மதியான சமாதானம் இலங்கைத் தீவில் ஏற்படும். இலங்கைத் தீவில் இரு நாடுகள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். புலம்பெயர் தமிழர் ஆதரவு மற்றும் உறுதுணையுடன் நாம் எமது தேசத்தை அமைப்போம். இறுதிக் கட்டத்திலாவது பிரிந்து நிற்பவர்களே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். இதுவே கடைசிச் சந்தர்ப்பம் என்றார்.

வணக்கம் என்று தமிழில் தொடங்கி தனது உணர்வுரையை ஆற்றினார் அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கரென் பார்க்கர்.

அதன் பின்னர் தமிழ்நாட்டிலிருந்து வந்து பங்கேற்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார்.

மேலும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் நிகழ்வில் உரையாற்றினர்.

அதன் பின்னர் "வெல்க தமிழ்" எழுச்சிப் பிரகடனம் பாரிய உணர்வெழுச்சியுடன் வாசிக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்றபோதும் பாரிய அளவில் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டதற்காக ஜெனீவா காவல்துறையினர் பாராட்டுத் தெரிவித்தனர்.

நிகழ்வுகளை ஒருங்கிணைப்புச் செய்த சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" பாடலுடன் தமிழீழத் தேசியக் கொடி இறக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

கலந்து கொண்டனை அனைவருக்கும் வாழ்த்துக்கள் நிச்சயம் உங்களின் பணி பாராட்டத்தக்கது. அவ்வாறே கனடாவிலும் நடக்கவிருக்கின்ற எழுத தமிழிலும் அனைவரும் கலந்து தமிழரின் பெருமையை உலகறியச் செய்திட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

10000க்கு மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்த இன்னிகழ்ச்சியினை நான் அவுஸ்திரெலியாவில் இருந்து தரிசனம் தொலைக்காட்சியினூடாக பார்த்து ரசித்தேன். மழை பெய்யும் போது எமது உறவுகள் இன்னிகழ்வில் கலந்து உரிமைக்காகக் குரல் கொடுத்தார்கள். இன்னிகழ்ச்சியைச் சிறப்பாக நடாத்திய சுவிஸ் அமைப்பினருக்கும், மற்றைய ஜரோப்பிய அமைப்பினருக்கும், அவுஸ்திரெலியா, நியூசிலாந்து மக்களை நேரடியாக தொலைக்காட்சியினூடாக பார்க்க வழிசெய்த தரிசனம் தொலைக்காட்சிக்கும் நன்றிகள்

20070611013.jpg

20070611006.jpg

20070611007.jpg

20070611009.jpg

20070611010.jpg

20070611011.jpg

20070611012.jpg

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களிற்கு நன்றி ஈழவன்85

ஐ.நா.வை நோக்கிய 'வெல்க தமிழ் - 2007" எழுச்சிப் பேரணி நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் ஆற்றிய உரைகள

தமிழீழ தேசிய ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்

அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கரென் பார்க்கர்

சிங்கள இனத்தைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி பிறையன் செனிவிரட்ன

பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் வி.கிருபாகரன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளரும், தமிழீழ உணர்வாளருமான அப்துல் ஜபார்

நன்றி: லண்டன் ஐபிசி தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20070611013.jpg

20070611006.jpg

20070611007.jpg

20070611009.jpg

20070611010.jpg

20070611011.jpg

20070611012.jpg

இதை காணக்கண் கோடி வேண்டும்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் தோற்காத புலி என்று சங்கே முழங்கு

செந்தமிழீழம் சிறப்புற எழுந்து சங்கே முழங்கு.

"பிராபாகரன் போன்ற வீரன் 2000 ஆம் ஆண்டுகால தமிழ்நாட்டில் பிறந்ததே இல்லை என்று எங்களுடைய தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் வாய்விட்டுச் சொன்னார்"

************************************** ஜெனீவா வெல்க தமிழ் பேரணியில் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப் பெரும் தமிழ் கடலில், நானும் ஒரு துளியாக கலந்ததில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நெடுமாறன் ஐயாவுடன் கைகுலுக்கி பெருமிதம் அடைந்தேன். மிக விரைவில் சுதந்திரத் தமிழீழத்தின் எம் ஒப்பற்றாத் தமிழ் தலைவன் கை குலுக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று மிக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். மேலே அனைவராலும் குறிப்பிட்டவை உண்மையே! ஏனினும் ஜேர்மனியின் சில பகுதிகளில் இருந்து அநேகர் கலந்து கொள்ளவில்லை என்பதே என் எண்ணம்! சில முக்கிய ஜேர்மன் புள்ளிகள் (தம்மைப் புலிகள் என பெருமை கொள்ளும்) "சாமத்திய சடங்கு, பிறந்தநாள் கொண்டாட்டம் என்று களைப்"பாம் என்று இம்முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என அறிந்தது மிகவும் மனம் வருந்தக்கூடியதாக இருக்கிறது!

உண்மைதான் இங்கு நான்கு வாரங்களுக்கு முன்பே எந்த எந்த நகரங்களில் இருந்து போக்குவரத்து(பஸ்) நடைமுறை தொடர்பான விபரங்கள் அந்த அந்த நகர தமிழ்மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தும் பலர் வேலை என்று பொய் காரணம் கூறி போகவில்லை. இங்கு வேலையில் விடுமுறை எடுப்பதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே வேலைத்தலத்தில் தெரிவித்து இருந்தால் நிச்சையமாக விடுமுறை கொடுத்துருப்பார்கள். இதுவே தங்களின் பிள்ளைகளின் பிறந்தநாள் அல்லது சுற்றுலா செல்வதாயின் சுகயீனவிடுமுறை(கிறங்) எடுத்து இருப்பார்கள்.

ஏன் இங்கு (பலபெயர்களில்)கருத்தாடும் ஒருவர் ஊர்வலத்துக்கு செல்லவில்லை. ஆனால் கணனிக்குமுன் ஒட்டிக்கொண்டிருந்ததை நேற்றைய கருத்துக்களை பார்க்கும் போது தெரிகிறது.

Edited by சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பல லட்சம் தமிழர்கள் போகக் கூடிய நிலையில் இருந்தும் 10,000 பேராவது தாயகப்பற்றை கொஞ்சம் என்றாலும் வெளிப்படுத்தி நிகழ்வில் கலந்து கொண்டத்தை பாராட்ட வேண்டும். அவர்களின் பணி தொடர வேண்டும். போக வாய்ப்பிருந்தும் போகாமல் தவிர்த்துக் கொண்ட மிகுதி பல்லாயிரம் தமிழர்களும் எதிர்வரும் நிகழ்வுகளுக்குப் போக இவர்கள் உந்துசக்தியாக அமைவார்கள் என்று நம்புவோமாக.

தமிழரின் பலம் தமிழரின் ஒற்றுமையிலும் புலிகளின் கையிலும் உள்ளது..!

110607swissrally04aa4.jpg

நிகழ்வில் கலந்து கொண்ட சிறீலங்காவின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த டாக்டர் பிறைன் செனிவரட்ன(வலம்) - Dr Brian Seneviratne from Australia, a Sinhala expatriate physician supportive of Tamils right to self-determination - tamilnet.com

110607swissrally02pt6.jpg

தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழர் தேசிய இயக்கத்தலைவர் மேன்மைக்குரிய ஐயா திரு நெடுமாறன் அவர்கள்..!- tamilnet.com

11_06_07_swissrally_05_61703_435.jpg

வான் புலிகளின் இலட்சனை தாங்கிய சுலோகங்கள்..! சிறகு முளைத்த புலி..!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22444

Edited by nedukkalapoovan

தமிழீழ தேசியக்கொடி ஜநா முன்றலில் பட்டொளி வீசி பறக்கும் காட்சி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவைத் தொடர்ந்து கனடாவிலும் "வெல்க தமிழ்" எழுச்சிப் பேரணி

கனடா ரொரன்ரோவில் கனடியத் தமிழ் மக்களது உணர்வுகளின் வெளிப்பாடாக "வெல்க தமிழ் - 2007" நிகழ்வானது மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்காபரோவின் அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் ஆலய மணியோசையுடன் நிகழ்வு தொடங்கியது.

திருமதி செல்வநாயகம் கனகாம்பிகை (மாவீரர் மேஜர் நித்திலாவின் தாயார்) ஈகைச்சுடர் ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து கனடியத் தேசியப் பண், தமிழீழத் தேசியப் பண் ஆகியவை இசைக்கப்பட்டன.

ஏறுது பார் கொடி ஏறுது பார் பாடலுடன் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

கனடியத் தமிழ் வானொலியின் ஒலிபரப்பாளர் பொன்னையா விவேகானந்தன் இந்நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

"தாய் மண்ணே உனக்கு எங்கள் வணக்கம்" எனும் பாடலுக்கு வரவேற்பு நடனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து

"வெல்க தமிழ்"

"எங்கள் தலைவர் பிரபாகரன்"

"எங்கள் நாடு தமிழீழம்"

உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ரொரன்ரோ மத்திய கலை பண்காட்டுக் கழகம் வழங்கிய "செங்கோல்" எனும் நாடகம் நடைபெற்றது. இந்நாடகமானது இலங்கையில் இருந்து தனித் தமிழீழம் அமைவதனைச் சித்தரிப்பதாக அமைந்தது.

ரொரன்ரோ பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மாணவிகளான சுஜானி, சுதாமதி ஆகியோரும் மிகவும் எழுச்சிபூர்வமாக உரையாற்றினர்.

இதன் இடையிடையே கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதாவது லிபரல் கட்சி, கொன்சவேற்றிக் கட்சி (தற்பொழுது ஆளும் கட்சி) மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிகளைச் சேர்ந்தோர் உரைகளை நிகழ்த்தினர்.

கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்து தொடர்பாக தமது கண்டனங்களைத் தெரிவித்துடன் மகிந்த அரசாங்கத்தின் பேரினவாதச் செய்களைக் கண்டித்தும் அவர்கள் உரையாற்றினர். ஒட்டோவாவிலிருந்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொலைபேசி ஊடாக உரை நிகழ்த்தினர்.

இளையோரினால் வான் புலிகளின் பாடலுக்கான நடனம் நடத்தப்பட்டது. அப்போது அங்கே குழுமியிருந்த பல மக்களும் ஒன்று சேர்ந்து பாடி ஆடினர்.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

தமிழீழத் தேசியக் கொடி

தமிழீழத் தேசியத் தலைவரின் உருவம்

ஆகியவற்றை பதாகைகளாகத் தாங்கியவாறு உணர்ச்சிப் பெருக்கோடு முழக்கமிட்டனர்.

ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு அம்சக் கோரிக்கைகள் கனடாவிலும் தெளிவாக முன்வைக்கப்பட்டன.

கனடிய கலை பண்பாட்டுக் கழகம் வழங்கிய, மிகச் சுருக்கமான நாடகக் கலை நிகழ்வு, பார்வையாளர்களை தற்போதைய தமிழினத்தின் களநிலையை மனக்கண்முன் கொண்டுவந்தது.

அன்று பண்டா தொடக்கம் இன்றைய ராஜபக்ச வரை பௌத்த சிங்கள இனவெறி பிடித்து அலையும் சிங்கள ஆட்சியாளர்களின் மனநிலையை, மிக லாவகமாக வெளிக்கொணரும் கலைக் காவியமாக நாடக நிகழ்வு அமைந்தது.

இந்நிகழ்வில் கனடிய ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் செய்தி சேகரிக்க வருகை தந்திருந்தனர்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.