Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்பதற்கு விறுவிறுப்பாக இல்லை.

  • Replies 118
  • Views 13.4k
  • Created
  • Last Reply

படம் சொதப்பல்.. காதல் கோட்டை படம் எடுத்த அகத்தியனா

இந்த படத்தையும் எடுத்தார் என்று சந்தேகமாக இருக்கிறது.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ப்ரணதியின் காதல்

கம்பீரம் படத்தின் நாயகி ரொம்ப வேகமாக இருக்கிறார். நடிப்பதில் அல்ல, காதலில்

மலையாள குயிலான ப்ரணதி, கம்பீரம் படத்தில் சரத்குமாருடன் அறிமுகமானார். கம்பீரம் படத்திற்குப் பிறகு பெரிய ரவுண்டு வரப் போகிறார் என்று ஆரூடம் கூறினார்கள் கோலிவுட் ஜோசியர்கள். ஆனால் யார் கண் பட்டதோ, ப்ரணதி எடுபடாமல் போனார்.

இடையில் தாய் மொழியான மலையாளத்தில் 4 ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நடித்தார். அதிலும் கோபிகாவை முன்னிருத்தி ப்ரணதியை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். ப்ரணதிதான் படத்தின் ஹீரோயின். இருந்தாலும், இரண்டாவது ஹீரோயினாக கோபிகாவே பேசப்பட்டார்.

இடையில் சில கோஆர்டினேட்டர் சேட்டன்கள் மற்றும் டிவி விளம்பர டைரக்டர்களாக இருக்கும் மலையாளிகள் உதவியுடன் சேலை விளம்பரம், நகை விளம்பரம் என காலத்தை தள்ளி வந்தார்.

அவருடைய உடல் வாகுதான் பிரச்சினைக்குக் காரணம் என யாரோ ஒரு புண்ணியவான் ப்ரணதியின் காதில் போட, உடனே உடலைக் குறைத்தார். அவரே ஆச்சரியப்படும்படியாக உடனடியாக ஒரு பட வாய்ப்பு வந்தது. அதுவும் தமிழில்.

படத்தின் பெயர் குருதேவா. இதில் ஜெய் ஆகாஷûடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் படு ஆட்டம் போட்டிருக்கிறாராம் ப்ரணதி. தனது எதிர்காலமே இந்தப் படத்தில்தான் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டு நடித்து வருகிறார்.

சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம். படத்தில் நடிக்கத் தொடங்கிய முதல் நாலே ஆகாஷிடம் ப்ரணதிக்கு 'நட்பு' ஏற்பட்டு விட்டதாம். நாளுக்கு நாள் இந்த நட்பு தண்ணீர் ஊற்றிய சிமெண்ட் மாதிரி இறுகி இப்போது காதலாக மாறியுள்ளதாக பேசுகிறார்கள்.

ஷýட்டிங்கில் மட்டுமல்லாமல் வெளியிலும் இருவரும் காதல் மொழி பேசித் திரிகிறார்கள். இருவரையும் அடிக்கடி சேர்ந்தார்போல சென்னையின் பல இடங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்களில்.

இந்த நட்பு படத்துக்கும் பலம் சேர்க்கும் என்று நினைத்தோ என்னவோ இயக்குனர் ஜாபர் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறார். சூட்டிங் ஸ்பாட்டில் இந்த ஜோடியின் காதல் லீலைகளை கண்டும் காணாமல் இருந்து கொள்கிறார் இயக்குனர்.

ஆனால், ஹீரோவுடனான நட்பை காரணமாக வைத்துக் கொண்டு சூட்டிங் ஸ்பாட்டில் ஏக அலும்பு செய்து வருகிறாராம் ப்ரணதி. குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கு ஏக டார்ச்சர். அவருக்கு ஹீரோவும் சப்போர்ட் என்பதால் தயாரிப்பாளர்கள் வேறு வழியில்லாமல் அமைதி காத்து வருகிறார்கள்.

இந்த ஜெய் ஆகாஷ் பெரும் பண பார்ட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்குவாலாவான இவர், லண்டனில் செட்டல் ஆனவர். தெலுங்குப் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். இவர் நடித்து ஒரு படமும் இதுவரை ஓடவில்லை.

ஆனாலும் இவரது கை நிறைய ஏகப்பட்ட வாய்ப்புக்கள். ஹீரோவாகப் போட்டால் பணமும் கொடுக்கிறாரே. நம்மவர்கள் விடுவார்கள்.

வெள்ளி, வெள்ளிகிழமை பூ, பழம், ஊதுவத்தி வாங்கி ஏதாவது ஒரு படத்துக்கு ஜெய் ஆகாஷை வைத்து பூஜை போடுவது இப்போது கோடம்பாக்கத்தில் வழக்கமாகவே போய்விட்டது.

வசதி பார்ட்டியான ப்ரணதியையும் வளைத்துவிட்டார் என்கிறது கோடம்பாக்கம். கூடவே ஜெய் ஆகாஷ் ஏற்கனவே திருமணமானவர் என்றும் புகைய விடுகிறார்கள்.

மேலும் இந்தக் காதலுக்கு ஆகாஷின் வீட்டில் கடும் எதிர்ப்பாம். ஆனால், ஆகாஷை விட்டுவிடாதே என்று ப்ரணதிக்கு அவரது தாய்க்குலம் முழு சப்போர்ட்டாம்.

இன்னொரு விஷேசம் தெரியுமோ?.. பேசிக்கலி கேரளத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ப்ரணதி மிஸ் மெட்ராஸ் போட்டில் பங்கேற்று வென்றவராம். டிசைனர் உடைகளில் ஆர்வம் கொண்ட அவர், தான் அணியும் உடைகளை சொந்தமாக டிசைன் செய்து கொள்கிறாராம்.

இந்த உடைகளின் செலவை பல மடங்காக தயாரிப்பாளர்களிடம் பில் போட்டு வசூலித்துவிடுகிறார்.

Thats Tamil

  • தொடங்கியவர்

ஆகாஷ் இலங்கை தமிழர் என்று நினைத்தேன். இதில் தெலுங்கு வாலா லண்டனில் செட்டிலான பெரும் பணக்காரர் என்று ஏழுதியிருக்கின்றார்கள் :?

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஓய் ஓய்!

நானும் உந்த டோக் ஆகாசும் பிரண்ட்ஸ் ஆ! லண்டன் கற்போட்தான் புகலிடம்! அடி கொக்குவில் என நினைக்கிறேன். நானும் டோக்கும் சுத்தாத சுத்தோ!!!!!! ஊஊஊஊ... தொடர் காடல் டோல்விகள்???? சேஷ்சுக்கு இண்டியா போனாப்பிறகுதான் உந்தக் கோதாரிகள்! ஆனால் டோக் கெமிக்கல் இஞ்சினியர்! ம்ம்ம் கொஞ்சம் என்னைமாதிரி சபலப் புத்தி??? அதுதான் அங்கேயே காலூண்றீயாச்சு!

வாட்டா>>>>>>>>>

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  • தொடங்கியவர்

ப்ரணதியின் படங்கள்

pra-ja250.jpg

pranathi-600.jpg

அசத்திடடீங்க.......... :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இரண்டு பேருமே சரியில்லை

என்ன உங்க யாழ்பாணத்து சீரொவை பிடிக்கலையா........... :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்து சீரோவை ஏன் மழலை அக்காவுக்கு பிடிக்கல..?? :mrgreen:

ஆகாஷ் இலங்கை தமிழர் என்று நினைத்தேன். இதில் தெலுங்கு வாலா லண்டனில் செட்டிலான பெரும் பணக்காரர் என்று ஏழுதியிருக்கின்றார்கள் :?

ஆகாஷ் என்பவர் யாழ்ப்பாணத்தில் தாவடி(தெற்கு கொக்குவில்) என்ற

என்ற இடத்தை சேர்ந்தவர். கறுணா எழுதியது சரியே..

இதையே தவறாக எழுதியவர்கள் மற்றதை மட்டும்

எப்படி சரியாக எழுத போகிறார்கள்? :?:

  • தொடங்கியவர்

அதுதானே வசி. தெரிந்த விடயம் என்பதால் தகவல் பொய் என்று தெரிகின்றது. மற்றய விடயங்களில் எவ்வளவு தூரம் பொய் இருக்கும் நமக்கு அது குறித்து தெரியாததால் நம்பி விடுகின்றோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன உங்க யாழ்பாணத்து சீரொவை பிடிக்கலையா...........

அவர் சீரோ என்டதால தான் பிடிக்கல.....என்ன நீங்கள் நான் சிரிக்கிறமாதிரி சிரிக்கிறிங்க.... :lol::D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்து சீரோவை ஏன் மழலை அக்காவுக்கு பிடிக்கல..??

அவர் யாழ்ப்பாணம் எண்டு கூட இப்ப சந்தேகம்...சினிமாக்குப் போனதும் அவருக்கு தான் எங்க பிறந்த எண்டு கூட மறந்து போச்சு போல..... :mrgreen:

  • 1 month later...
  • தொடங்கியவர்

தமிழ் சினிமாவில எங்கட தாவடிக்காரர்

ராமகிருஷ்ணா எண்ட வெற்றிப்படம் குடுத்ததால தமிழ் சினிமாவில விக்ரம் மாதிரியே ஒரு ஆசாமி மேல எல்லாரிண்ட பார்வையும் விழுந்திருக்கு.அவர் யாரெண்டு தெரியாதே ஜெய் ஆகாஷ்தான் எண்டு சொல்லுவியள்.ஆனா அவரிண்ட பூர்வீகத் பற்றி தெரிஞ்சா புல்லரிச்சுப்போவியள்.

ஜெய் ஆகாஷ் யாழ்ப்பாணம் தாவடி எண்ட இடத்தை சேர்ந்தவர்.அந்தக்காலத்தில 83 பிரச்சினயோட லண்டனுக்குப்போய் அங்க படிச்சு(உதிரித்தகவல்:இவரோடதா

  • 2 months later...

பட அதிபரை தாக்க முயன்ற ஜெய் ஆகாஷ்

Akash-300.jpg

தெலுங்குப் பட அதிபரை தாக்க முயன்றதாக நடிகர் ஜெய் ஆகாஷ் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் அகத்தியனின் ராமகிருஷ்ணா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெய் ஆகாஷ். இதன் பிறகு இவர் குருதேவா, அமுதே, செவ்வேல் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவர் நடித்த குருதேவா படம், குரு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்தப் படம் சமீபத்தில் ஆந்திராவில் வெளியானது. ஆனால் இந்தப் படம் சரியாக ஓடவில்லை.

குரு படத்திற்கு சரியாக விளம்பரம் செய்யாதது தான் ஓடாததற்கு காரணம் என்று கூறி பட அதிபர் அங்கம ராவ் மீது ஜெய் ஆகாஷ் அதிருப்தி அடைந்துள்ளார். இதையடுத்து அங்கம ராவை சந்தித்த நடிகர் ஜெய் ஆகாஷ், படம் ஓடாததற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் பட அதிபர் அங்கம ராவ் போலீஸில் ஜெய் ஆகாஷ் மீது புகார் செய்தார். அதில் தன்னை ஜெய் ஆகாஷ் தாக்க முயன்றதாக கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் ஜெய் ஆகாஷை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தெலுங்குப் படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின் மற்ற பட அதிபர்கள் தலையிட்டு இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைத்தனர். இதையடுத்து அங்கம ராவ் தனது புகாரை வாபஸ் பெற்றார்.

that'stamil.com

  • தொடங்கியவர்

படம் ஓடுதோ இல்லையோ இவரின் படங்கள் நிறைய வருகின்றன. டிவிக்களில் அடிக்கடி பேட்டிகளும் வருகின்றன. ஒரு சில படங்கள் பார்த்தேன். படங்கள் மிக ஒப்பீட்டளவில் பாத்தால் மிக மோசம் என்று சொல்ல முடியாது. முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த மிக கஷ்டப்படுகிறார் போல தெரிகின்றது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே தொடர்பு உள்ளதாக கதை உலாவருகின்றது............

இதனால் இவரது மனைவி வரும் செப்டம்பர் மாதம் முதல் சென்னையில் செட்டலாகின்றா............................

  • 7 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.