Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2021]

Featured Replies

வணக்கம்,

2021 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள்  போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.

நன்றி.

  • Replies 53
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எங்கள் மண் பகுதியில் அநாமேதய இணையத் தளம் ஒன்றிலிருந்து இணைக்கப்பட்ட பதிவு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள் எனும் திரியில் இருந்து களவிதிகளை மீறும் பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி! எனும் திரியில் ஆரோக்கியமற்ற தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் பல நீக்கப்பட்டு திரியும் பூட்டப்பட்டுள்ளது.

களவிதிகளை மதிக்காது கருத்துக்கள் வைப்பவர்கள்மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

'நழுவ விட்ட வாய்ப்புக்களும் இழந்து போன ஜனநாயகமும்.     முறிந்த பனை. பகுதி 1    - அத்தியாயம் 1' எனும் திரி நீக்கப்படுகின்றது.

முறிந்த பனையின் அரசியல் என்பது புலிகளை, அவர்களின் போராட்டத்தினை கண் மூடித்தனமாக எதிர்ப்பவர்களின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும், தமிழர்களின் போராட்ட அரசியலை மலினப்படுத்தும் ஒன்றாகவும் உள் நாட்டிலும், சர்வதேச மட்டத்திலு கட்டமைக்கப்பட்டு விட்ட ஒன்றென்பதாலும் அது யாழ் இணையத்தின் பிரதான போக்கிற்கு எதிரானதாக உள்ளதாலும் நீக்கப்படுகின்றது.

இவ்வாறான சர்ச்சைக்குரிய தொடர்களை, பதிவுகளை வெளியிடுகின்றவர்கள், அவற்றை யாழில் இணைக்க முன் யாழ் நிர்வாகத்தை தொடர்பு கொள்வது அவசியம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம்.

நன்றி

யாழ் நிர்வாகம்

  • தொடங்கியவர்

அநாமேதய இணையத்தளம் ஒன்றில் இருந்து இணைக்கப்பட்ட செய்தி ஒன்றும், மூலம் குறிப்பிடப்படாமல் இணைக்கப்பட்ட செய்தி ஒன்றும், நிகழ்வும் அகழ்வும் பிரிவில் இணைக்கப்பட்ட தகவல் ஒன்றும் நீக்கப்பட்டுள்ளன.

 

தமிழக செய்திகள் பிரிவில் இணைக்கப்பட்ட மூலமோ அல்லது ஆதாரமோ இன்றி ஊகத்தின் அடிப்படையில் திரிக்கப்பட்ட திரி அகற்றப்படுகின்றது.

 

  • 4 weeks later...

தமிழக தேர்தல் தொடர்பான செய்திகளை இங்கு பதிவிடுகின்றவர்களின் கவனத்துக்கு:

தமிழக தேர்தல் தொடபான செய்திகளினை பதிவிடும் போது, தமிழகத்து பிரதான ஊடகங்களில் இருந்து செய்திகளை பதிவிடவும். பிரதான ஊடகங்களில் வரும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களது பேட்டிகள், தமிழக கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகள், கருத்துக்கணிப்புகள், அரசியல் கட்டுரைகள் என்பனவற்றை ஒரு தரமான பத்திரிகை ஆசிரியருக்கு உரிய கண்ணோட்டத்துடன் நோக்கி பதிவிடவும்.

எக்காரணம் கொண்டும் அரசியல் கட்சிகளின் பிரச்சார உரைகள், பேச்சுகள்,வேட்பாளர்களின் உரைகள், இவை தொடர்பான காணொளிகள், அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தளங்களில் இருந்தும், பினாமி தளங்களில் இருந்தும் வெளியாகும் காணொளிகள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். அத்துடன் ஏக வசனத்தில் அமையும் மீம்ஸ்கள், யாழ் களத்தில் சக உறவுகளுக்கிடையிலான கருத்துப்பரிமாற்றங்களின் போது தவிர்க்க வேண்டிய சொற்கள், வர்ணணைகள், கேலிகள் அடங்கிய மீம்ஸ்கள் போன்றனவற்றை முற்றாகத் தவிர்க்கவும்.

நன்றி

  • 3 weeks later...

"கொறோனோ கோவிந்தா ஏமாற்று கணக்கியல்" எனும் சதிக்கோட்பாடுகளை வலியுறுத்தும் உண்மைக்கு புறம்பான கட்டுரை நீக்கப்படுகின்றது.

பெருந்தொற்று காலம் ஒன்றில், இலட்சக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறான உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கொண்ட , சதிக்கோட்பாடுகளை கொண்ட கட்டுரைகளை தவிர்க்கவும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சில கட்சிசார் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

தமிழக தேர்தல் சம்பந்தமாக செய்திகளையும், காணொளிகளையும், பிற பதிவுகளையும் இணைப்பவர்கள் களவிதிகளைக் கடைபிடித்தல் வேண்டும்.


11. அரசியல் கட்சிசார் பதிவுகள்
அரசியல் கட்சிசார் பதிவுகள் தொடர்பான விதிகள்:

  • யாழ் கருத்துக்களம் உலகத் தமிழர்களை, அவர்கள் நம்பும்/ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தளம் என்பதால், அரசியல் கட்சிகளின் நேரடிப் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் போன்றவை எழுத்தில், படங்களில், காணொளிகளில், சமூகவலை இணைப்புக்களில் பதிதல் முற்றாகத் தவிர்க்கப்படல்வேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளங்களில் இருந்தோ, சமூகவலை தளங்களில் இருந்தோ கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் ஆதரவாக ஒரு பக்கச் சார்பானதாகக் காணப்படும் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தூண்டும் அரசியல் கட்சிகளைப் பற்றிய காத்திரமான விமர்சனங்கள், அவதானிப்புக்கள், கருத்துக்கள் பதியப்படலாம்.

 

  • தொடங்கியவர்

என்னவெல்லாம் செய்வீர்கள் உங்கள் மனைவிக்கு எனும் திரி யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் இருந்து சமூகச் சாளரம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

 

  • தொடங்கியவர்

சீமான்  - ஒரு பார்வை எனும் திரி தமிழும் நயமும் பகுதியில் இருந்து செய்தி திரட்டி பகுதிக்கு நகர்த்தப்பட்டு திரியும் மூடப்பட்டுள்ளது.

 

 

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்) பகுதியில் இருந்து இரண்டு பதிவுகள் நீக்கப்ப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

சீமான் என்ற ஒரு தனி நபர் தமிழினத்திற்கே ஆபத்து! - சுப. உதயகுமார் எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

தமிழக கட்சிகளின் குழாயடி சண்டைகளுக்கு யாழ் கருத்துக்களத்தை பாவித்தல் தவிர்க்கப்படவேண்டும். மேலும், பதிவுக்கான மூலமும் கொடுக்கப்படவில்லை.

தொடர்புடைய களவிதிகள்:

அரசியல் கட்சிசார் பதிவுகள்
அரசியல் கட்சிசார் பதிவுகள் தொடர்பான விதிகள்:

  • யாழ் கருத்துக்களம் உலகத் தமிழர்களை, அவர்கள் நம்பும்/ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தளம் என்பதால், அரசியல் கட்சிகளின் நேரடிப் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் போன்றவை எழுத்தில், படங்களில், காணொளிகளில், சமூகவலை இணைப்புக்களில் பதிதல் முற்றாகத் தவிர்க்கப்படல்வேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளங்களில் இருந்தோ, சமூகவலை தளங்களில் இருந்தோ கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் ஆதரவாக ஒரு பக்கச் சார்பானதாகக் காணப்படும் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தூண்டும் அரசியல் கட்சிகளைப் பற்றிய காத்திரமான விமர்சனங்கள், அவதானிப்புக்கள், கருத்துக்கள் பதியப்படலாம்.


மூலம்

  • யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகள், பதிவுகள், ஆக்கங்கள் வேறு இடத்திலிருந்து பெறப்பட்டதாயின், பதிவுகளின் அடியில் நேரடி மூலம் கண்டிப்பாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
    • அது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும்.
    • அது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்.
  • நேரடி மூல இணைப்பு  பதிவுகளை உறுதிப்படுத்த கட்டாயம் கொடுக்கப்படல் வேண்டும்.

 

"பிரபாகரன் பட்டினி கிடந்தா அப்படி கொழுகொழுவென அம்சமாக இருந்தார்... கொழுத்துப்போய் பசாரிக்காரி மாதிரி இருக்கியே&: அனந்தியின் பெயரில் பிரபாகரனை கொச்சைப்படுத்தும் சீமான் கட்சியினர்! -" எனும் திரி யாழ் கள விதிகளுக்கு முரணாக அமைந்தமையால் நீக்கப்படுகின்றது.

விஞ்ஞான பூர்வமான / மருத்துவ ரீதியிலான எந்த ஆதாரமும் இன்றி சமூகவலைத்தளம் ஒன்றில் இருந்து நலமோடு நாம் வாழ பகுதியில் பகிரப்பட்ட ஒரு திரி நீக்கப்பட்டது.

'ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • 2 weeks later...

'ஏழாம் திகதி... முதல்வராகப் பதவியேற்கிறார் ஸ்டாலின்!' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

தமிழ் ஈழக் காற்றே - புலம்பெயர் தமிழர்களின் வலியை பதிவு செய்த வைரமுத்து.!  எனும் திரியில்  இருந்து அநாவசியமான கருத்துக்களும் அதற்கான பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது எனும் திரியில் சக கள உறுப்பினர்கள் மீதான பண்பற்ற சொல்லாடல்கள், ஊகங்கள், தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

களவிதிகளை மீறாமல் ஆரோக்கியமான கருத்தாடலைத் தொடருங்கள்.

  • தொடங்கியவர்

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து எனும் திரியில் இருந்து காணொளி ஒன்றும் அரட்டைக் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. 

திரிகளில் அநாவசியமான அரட்டைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

எப்படி டார்லிங்' (Kohomada Sudu) text - பலர் வைத்தியசாலையில் எனும் திரி ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து செய்தி திரட்டி பகுதிக்கு நகர்த்தபட்டுள்ளது.

ஊர்ப்புதினம் பகுதியானது முக்கியமான தாயகச் செய்திகளை நம்பகத்தன்மையான இணையத்தளங்களில் இருந்து இணைப்பதற்கான பகுதி என்பதனை தலைப்புக்களை தொடங்குபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

யாழ் களம் சுய ஆக்கங்களை ஊக்குவிக்கின்றது. எனினும், மஞ்சள் பத்திரிகை பதிவுகள் போன்றவற்றைத் தவிர்த்து கருத்துக்களத்தின் தரத்தினை பேணும், கருத்தாடலை ஊக்குவிக்கும்  ஆக்கங்களையே விரும்புகின்றது.

'கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை' எனும் திரியில் எழுதப்பட்ட மலினமான கருத்துகள் நீக்கப்பட்டு அவ்வாறான மலினமான கருத்துக்களை ஊக்குவிக்கும் வண்ணம் இடப்பட்ட பச்சை புள்ளிகளும் அகற்றப்பட்டன.

 

  • 2 weeks later...

'"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!' என்ற திரியிலிருந்து இறுதியாகப் பதியப்பட்ட தலைப்பிற்குத் தொடர்பில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுத் திரி பூட்டப்படுகிறது.

  • தொடங்கியவர்

மெய்யெனப் படுவது பகுதியில் இணைக்கப்பட்ட மூலமில்லாத  தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது. எதுவித விஞ்ஞான அடிப்படையுமற்ற தகவல்களை கருத்துக்களத்தில் இணைப்பதை கள உறுபினர்கள் தவிர்க்கவேண்டும்.

 

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.