Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2021]

Featured Replies

  • தொடங்கியவர்

"பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!" எனும் திரியில் இருந்து அநாவசிய அரட்டைத்தனமான கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன.

  • Replies 53
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து எனும் திரியில் இருந்து தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் தலைப்புக்கு உட்பட்டு கருத்தாடலைப் புரியவேண்டும்.

 

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன? எனும் திரியில் இருந்து சீண்டல் கருத்துக்கள், தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

களவிதி:

  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  •  துரோகி, பச்சோந்தி, பன்னாடை, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான, அருவருப்பான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.

சமூக வலைத்தளத்தில் இருந்து அநாகரீகமான தலைப்புடன் இணைக்கப்பட்ட, காழ்ப்புணர்வுடன் எழுதப்பட்ட திரி நீக்கப்பட்டது.

பதிவுகளை இணைப்பவர்கள் கண்ட குப்பைகளை இங்கு இணைக்காமல் பொறுப்புணர்வுடன் இணைக்குமாறு வேண்டுகின்றோம்.

அரசியல் பிரவேசம்::ரஜினி மீண்டும் ஆலோசனை.! திரியில் இனத்தை குறிப்பிட்டு அநாகரீகமாக எழுதப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் எனும் திரியில் இருந்து அநாவசியமான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் திரியின் தலைப்புடன் ஒட்டி கருத்தாடல் புரியவேண்டும். சக கள உறவுகளின் அடையாளங்கள், தொழில் பற்றிய ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் முழுமையாக நீக்கப்படும்.

  • தொடங்கியவர்

ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட லண்டனில் வாழும் யாழ் தமிழர் கப்பம் கேட்டாரா? எனும் திரி நீக்கப்பட்டுள்ளது. 

யாழ் களம் கள உறுப்பினர்கள் சுயமாக ஆக்கங்களை, செய்திகள் பற்றிய அலசல்களை எழுத எப்போதும் ஊக்குவிக்கின்றது. எனினும் இவை கருத்துக்களத்தில் பொருத்தமான பிரிவுகளில் பதியப்படவேண்டும்.

ஊர்ப் புதினம் பகுதி தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகளுக்கான பகுதி. புதிய தலைப்புக்களைத் திறப்பதற்கான இயல்நிலை (default) பகுதி அல்ல. 

இப்பகுதியிலும், பிற செய்திக்கான பகுதிகளிலும் முகநூல் சுவரில் எழுதுவது போன்று   கருத்துக்களை புதிய திரிகளைத் திறந்து பதிவது கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும். மேலும், புதிய செய்திகளுக்கான திரிகள் நம்பத்தன்மையான ஊடகங்களில் உள்ள செய்தியை மாத்திரமே முதல் பதிவாகக்கொண்டிருக்கவேண்டும். அதனையொட்டிய கருத்துக்கள் இருந்தால், அவற்றினை செய்தியை முழுமையாக இணைத்த பின்னர் கருத்தாகவே பதியலாம். 

இந்நடைமுறை தமிழகச் செய்திகள், உலக நடப்பு போன்ற செய்திப் பிரிவுகளிலும் கடைப்பிடிக்கவேண்டும்.

செய்தி பற்றிய கருத்துக்கான அல்லது அலசலுக்கான மூலச் செய்தி பிறமொழியில் (எ.கா. ஆங்கிலம்) இருந்தால், மூலச் செய்தி முழுமையாக யாழ் திரைகடலோடி பகுதியில் இணைக்கப்பட்டு, அது பற்றிய கருத்தினையும் தமிழில் அப்பகுதியிலேயே வைத்து கருத்தாடலைத் தொடரலாம்.

செய்திகள் பற்றிய பத்திக் குறிப்புக்கள் போன்ற நீண்ட கருத்துக்கள், ஆய்வுகள், அலசல்கள் நிகழ்வும் அகழ்வும் பகுதியில் மாத்திரமே பதியப்படவேண்டும்.

இவையெல்லாம் களவிதிகளிலும், ஒவ்வொரு கருத்துக்கள பிரிவுகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், முகநூலையும், யூடியூப் காணொளிகளையும் இணைப்பது பற்றி விதிகள் தெளிவாக உள்ளன. காணொளிகளின் உள்ளடக்கங்களைக் குறிப்பிடாமலும், வெளியிணைப்புக்களை மாத்திரம் காட்டும் பதிவுகளும், செம்பாலை (செய்திக்களம்) பகுதியில் உள்ள பிரிவுகளில் இணைக்கப்பட்டால் அவை நீக்கப்படும். இவை கள உறுப்பினர்களின் சுயமான காணொளிகளாக இருக்கும்பட்சத்தில் மாத்திரமே அனுமதிக்கப்படும்.

எனவே, புதிய திரிகளை திறக்க்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும்.

 

அல்பமான பெண்கள் யார் தெரியுமா? எனும் திரி யாழ் இணையத்தின் தரத்துக்கு ஒவ்வாத காரணத்தினால் நீக்கப்பட்டது. 

  • 2 weeks later...

'சிறையில் இருந்து வந்த... சாட்டை துரைமுருகனின், காணொளி' என்ற தலைப்பிலிருந்து அனாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • 2 weeks later...

'பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.' என்ற திரி பூட்டப்படுகிறது.

எந்தவொரு விளக்கமுல் இல்லாமல் காணொளிகள் இணைக்கப்பட்ட இரு திரிகள் நீக்கப்பட்டன. 

காணொளிகள் பற்றிய விதிகள்:
 

6. காணொளிகள்
அதிக பார்வையாளர்களைச் சென்றடையும் வண்ணம் காணொளிப் பதிவுகளின் பெருக்கம் அதிகரித்து வருவதனை யாழ் களம் வரவேற்று உள்வாங்குகின்றது.  யாழ் கருத்துக்களத்தில் ஆரம்பிக்கப்படும் திரிகளில், பதியப்படும் கருத்துக்களில், ஆக்கங்களில் இணைக்கப்படும் காணொளிகள் தொடர்பான விதிகள்:

  • காணொளிகளை இணைக்கும் கள உறுப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்.
  • காணொளிகளை முழுமையாகப் பார்த்து அவை யாழ் களவிதிகளை மீறவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இணைத்தல் வேண்டும்.
  • காணொளிகளை முழுமையாகப் பார்த்து மட்டுறுத்துவது நிர்வாகத்தினருக்கு நடைமுறைச் சாத்தியமில்லை என்பதனால்  இணைக்கும் கள உறுப்பினரே அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
  • இணைக்கப்படும் காணொளிகள் கருத்தாடலைத் தூண்டுவதாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும், பயனுள்ள தகவல்களை பார்வையாளருக்குத் தருவதாகவும் இருத்தல்வேண்டும்.
  • காணொளிகளை இணைக்கும்போது அவற்றின் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை சுருக்கமாகக் கட்டாயம் குறிப்பிடுதல் வேண்டும். கள உறுப்பினர்களின் சொந்தமான காணொளிகளுக்கு இந்த விதி தளர்த்தப்படுகின்றது. அத்துடன் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியில் இணைக்கப்படும் காணொளிகளுக்கும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது. ஆயினும் திரியொன்றில் (குறிப்பாகப் பொழுதுபோக்குத் திரிகளில்)  சிறுகால இடைவெளியில்  அளவுக்கதிகமாக காணொளிகளைத் தொடர்ச்சியாகப் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.

மேலும் அறிய

 

  • 2 weeks later...

உள்ளடக்கம் பற்றிய எந்தவிதமான விளக்கமும் இல்லாமல் காணொளிகள் இணைக்கப்பட்டு இருந்த ஒரு திரி நீக்கப்பட்டது.

  • 2 weeks later...

இறந்த ஒருவரை மலினப்படுத்தி ஆதாரம் இன்றி, செவிவழித் தகவலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட "டாக்டர்...தண்ணியப் போட்டால்... தண்ணீரில மிதக்க வேண்டுமா?..." திரி நீக்கப்படுகின்றது. 

செய்திகளை இணைப்பவர்கள் யாழ் இணையம் கொசிப் தளமும் அல்ல, நாலம்தர டப்லொயிட் தளமும் அல்ல என்பதை நினைவில் கொள்க. ஒருவரை பற்றிய,அவரது இயல்பைப் பற்றி எழுதும் போது பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் எழுதுதல் அவசியம் என்பதையும் கருத்தில் கொள்க.

நாற்சந்தியில் திறக்கப்பட்ட 'திரி ஒன்றினை மூடுதல்' என்ற திரி மூடப்படுகிறது. இது தொடர்பான விளக்கம் இதில் குறிப்பிட்ட திரியில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலதிக விபரம் தேவையானால் நிர்வாகத்திடம் தனிமடலில் கேட்டிருக்க வேண்டும். 

  • தொடங்கியவர்

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு! எனும் திரியிலிருந்து சக உறுப்பினர்களை சீண்டும் வகையில் பதியப்பட்ட கருத்துக்களும், பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

தலைப்புக்கு சம்பந்தமில்லாத அநாவசிய உரையாடல்களை கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.

  • தொடங்கியவர்

வணக்கம்,

யாழ் கருத்துக்களமானது ஆரோக்கியமான கருத்தாடலையே விரும்புகின்றது. எனினும் அண்மைக்காலமாக கருத்துக்களத்தில் திரிகளில் பல அநாவசியமான கருத்தாடல்கள் உருவாகி அவை தனிமனித தாக்குதல்களாகவும், நையாண்டிகளாகவும் மாறி வருவதை அவதானித்துள்ளோம்.

பலதடவைகள் அறிவுறுத்தியும், நிர்வாகத்தின் அறிவித்தல்களை சட்டைசெய்யாதோர் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முக்கியமாக கல்வி, தொழில், உடற்தோற்றம், சமூகநிலை போன்றவற்றை சுட்டி இழிவுபடுத்துவதும், நையாண்டிகள் செய்வதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

இதனைக் கவனத்தில்கொண்டு, அநாவசிய உரையாடல்களைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான கருத்தாடல்களில் ஈடுபடுமாறு கள உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

 தொடர்புடைய விதிகளில் சில: 

 

 

  • சக கருத்தாளரின் தனியுரிமைகளை மீறும் தனிப்பட்ட விடயங்களை எழுதுவதையும், அவரது குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் பண்பற்ற சொல்லாடல்களால் விமர்சிப்பதும், அவர்களது பெயர்களை நையாண்டி செய்வதற்கு பயன்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உடற்தோற்றம், கல்வி, சமூகநிலை, பால்நிலை, இன்ன பிற நிலைகளைச் சுட்டி  பண்பற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பதும், நையாண்டி செய்வதும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும். கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

நன்றி

போதியளவு கருத்தாடியமையாலும் கருத்தாளார்கள் மீதான சேறடிப்புகளாக திரி மாற்றமடைந்து செல்வதனாலும் 'கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்' எனும் திரி பூட்டப்படுகின்றது.

  • தொடங்கியவர்

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி எனும் திரியில் கருத்து ஒன்றில் இணைக்கப்பட்ட மலினமான மீமி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. அதையொட்டிய கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

நிர்வாக உறுப்பினர்கள் சகல கருத்துக்களையும் கவனிப்பதில்லை. எனவே, களவிதிகளுக்கு முரணானதாகக் காணப்படுபவற்றை முறைப்பாட்டு (report) முறைமூலம் நிர்வாகத்திற்கு உடனடியாக தெரியப்படுத்தினால், தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும்.

  • தொடங்கியவர்

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன் எனும் திரியில் சக கள உறுப்பினரை பண்பற்ற முறையில் சுட்டும் சொல்லாடல் உள்ள கருத்தும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்பான களவிதிகள்:

  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் பண்பற்ற சொல்லாடல்களால் விமர்சிப்பதும், அவர்களது பெயர்களை நையாண்டி செய்வதற்கு பயன்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.

 

 

 

செய்தி திரட்டியில் பதியப்பட்ட கொசிப் செய்தி ஒன்று நீக்கப்பட்டது.

  • 3 weeks later...

செய்திகளுக்கு பின்னூட்டமாக கருத்துகளுக்கு பதிலாக மீம்ஸ்களை இணைப்பதை முற்றாகத் தவிர்க்கவும். அத்துடன் ஒருமையில் அழைக்கும், கள விதிகளுக்கு முரணாண சொற்றாடல்கள் இருக்கும் மீம்ஸ்களை யாழில் எந்தப்பகுதியிலும் இணைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். மீறி இணைக்கப்படும் மீம்ஸ்கள் நீக்கப்படுவதுடன், அவ்வாறு நீக்கப்படுவதை கண்ட பின்னும் மீண்டும் மீண்டும் இணைப்பவர்களது கருத்துகள் மட்டுறுத்துனரின் பார்வைக்குட்படுத்தப்பட்ட பின்பே அனுமதிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

'தமிழ் இனமா? மொழியா?' என்ற தலைப்பில் சக கருத்தாளைரைத் தாக்கி எழுதப்பட்ட கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம் எனும் திரியில் சக கள உறுப்பினர்களை சீண்டும் ஆரோக்கியமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கருத்தாடற்பண்பைக் கடைப்பிடிக்காத கள உறுப்பினர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

அநாமதேய இணையத்தளத்தில் இருந்து ஊர் புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று மட்டுறுத்துநர் பார்வைக்கு நகர்த்தப்படுகின்றது. 

  • 4 weeks later...

தமிழக கட்சிகளுக்கு இடையிலான குடுமிபிடி சண்டைகள் தொடர்பான செய்தி ஒன்று நீக்கப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையிலான இத்தகைய சண்டைகள் தொடர்பான செய்திகளை/ தரக்குறைவான மீம்ஸ்களை இணைப்பதை தவிர்க்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.