Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும்  - பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும்  - பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர்

  • January 10, 20216:38 am

 

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும். அந்த நினைவுத் தூபி இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதினால் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதற்கு யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் எடுத்த முடிவு, காலத்திற்கு தேவையான முடிவாகும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பாராட்டு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இருட்டோடு இருட்டாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில், நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் வருட காலப்பகுதியில் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகத்தின் குழுவினால் ஏதோ ஒரு நினைவுத்தூபியொன்று அதற்குள் கட்டியெழுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு அந்த நினைவுத்தூபியை அடிக்கடி மேம்படுத்தப்பட்டதான விடயத்தையும் அறியக்கூடியதாகவுள்ளது. இருப்பினும் உண்மையில் தெரிவிப்பதாயின், அது வடக்கு தெற்குக் கிடையிலான ஐக்கியத்திற்கு தடையாக அமையக் கூடும்.

 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா இன்று இலங்கையிலுள்ள அருமையான திறமைமிக்க தலை சிறந்த உபவேந்தர். அத்தோடு மிகவும் திறமையான நிர்வாகி. சமீபகாலப்பகுதியில் நான் கண்ட திறமைமிக்க உபவேந்தர். அவர் தீர்மானமொன்றுக்கு வந்துள்ளார். அந்த நினைவுத் தூபி இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதினால் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதற்கான முடிவாகும் அது.

தற்பொழுது பல்கலைக்கழக கட்டமைப்பில் கற்கும் மாணவர்கள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் 9, 10 மற்றும் 11 வயதைக் கொண்டிருந்த எமது மாணவர்கள் ஆவர். தமிழ் , சிங்களம் அல்லது முஸ்லிம் எந்தவொரு இனத்திற்கு அல்லது மதத்திற்கு உட்பட்டவராக இருந்த போதிலும் இலங்கையர்களாகிய எமது பிள்ளைகள் இவர்கள்.

இதன் காரணமாக இன்று கூறுவதற்கு மகிழ்ச்சியடைகின்றோம் என்பது என்னவெனில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் சுமார் 1500 பேர் கல்வி கற்கின்றனர். அத்துடன் தெற்கிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆகக் குறைந்த ரீதியில் 600 இற்கும் 700 இற்கும் இடைப்பட்ட தமிழ் மாணவர்கள் விசேடமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து வரும் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில் எமக்குள்ள முக்கியத்துவமான விடயம் தான் எமது மாணவர்கள் மத்தியில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதாகும்.

இதன் காரணமாக எமக்கு முன்பிருந்த அந்த அனுபவங்களை எதிர்காலத்திலும் காண்பதற்கு ஏற்படாது என்பற்கு எமக்கு உள்ள ஒரே ஒரு காரணி தான் இந்த மாணவர்கள் மத்தியிலுள்ள ஐக்கியம் , சமாதானம் ஆகும். இவர்கள் இருப்பது பொதுவான சாதாரண விடுதிகளில் ஆகும். இவர்கள் கலந்துகொள்வது பொதுவான விரிவுரைகளிலாகும். இவர்களது விளையாட்டு நடவடிக்கைகள் போன்ற அனைத்தும் இடம்பெறுவது பொதுவானதாகவே இடம்பெறுகிறது.

இதுவரையில் எந்தவொரு பிரச்சினையும் இந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெறாதிருப்பதற்கு மாணவர்களே பொறுப்பாக இருப்பது தொடர்பில் நாம் நாடு, இனம் என்ற ரீதியில் உண்மையிலேயே அதிஷ்டமான விடயமாகும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் அவர்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு இந்த நினைவுத் தூபியை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இரவில் இருந்து அகற்றப்படுகிறது. நான் நினைக்கும் வகையில் இது மிகவும் காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும். எமக்கு தேவைப்படுவது என்னவெனில் யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச்சின்னங்களேயாகும். இதற்காக தேவையான நடவடிக்கைகளை நாம் எமது மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 

https://www.meenagam.com/எமக்கு-தேவைப்படுவது-யுத்/

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா இன்று இலங்கையிலுள்ள அருமையான திறமைமிக்க தலை சிறந்த உபவேந்தர். அத்தோடு மிகவும் திறமையான நிர்வாகி. சமீபகாலப்பகுதியில் நான் கண்ட திறமைமிக்க உபவேந்தர். அவர் தீர்மானமொன்றுக்கு வந்துள்ளார்.

spacer.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

தலைவரே! எங்கு சற்குணத்தார் இருக்கிறரோ அங்கே திருநீற்று பூச்சு அவசியம். 😁

யாழ். பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் : மாணவர்கள் நால்வருக்கு வழங்கப்பட்ட  தண்டனை! - CapitalNews.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா இன்று இலங்கையிலுள்ள அருமையான திறமைமிக்க தலை சிறந்த உபவேந்தர். அத்தோடு மிகவும் திறமையான நிர்வாகி. சமீபகாலப்பகுதியில் நான் கண்ட திறமைமிக்க உபவேந்தர்.

தனக்கு வேண்டிய, தான் காலால் இட்டதை தலைமேற் கொண்டு செய்யும் அடிமைகளை சிங்களம் இப்படி புகழ்வது இது ஒன்றும் புதியதல்லவே. டக்கிலஸையும் மஹிந்த இப்படித்தான் புகழ்ந்தார், புகழ்கிறார்.

1 hour ago, கிருபன் said:

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும்.

  இவர்கள் யுத்த வெற்றிவிழா கொண்டாடலாம், நினைவுத்தூபி அமைக்கலாம், எம்மை வெற்றிகொண்டதை சொல்லிச்சொல்லி பயமுறுத்தலாம், நகையாடலாம். அப்போ நம் மாணவர் மனம் புண்படாது, சமாதானம் மலரும். விளக்கத்தை பாருங்கள். யுத்தம் செய்வோம், அழிப்போம் நீங்கள் எல்லாவற்றையும் மறந்து எம்மைத் துதிக்க வேண்டும். தங்களுக்கு தாங்களே குழி பறிக்கிறார்கள்.

அன்று கல்விமான்கள் அகற்றப்பட்டதற்கான காரணத்தை  இங்கு நிதர்சனமாக காண்கிறோம். சிங்களத்தின் ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கும் வித்தை. 

  • கருத்துக்கள உறவுகள்

யு ஜி சி சிங்கள பெளத்த பேரினவாத அரசியல் நிரலை செயல்படுத்தும் ஒரு பேரினவாத அமைப்பாகச் செயற்படுவது கண்டிக்கத்தக்கது.

வடக்குக் கிழக்கில் யுத்த நினைவுச் சின்னங்கள் இராணுவத்தால் கடற்படையால் அமைக்கப்பட்டுள்ளன. தென்பகுதியில் பல்கலைக்கழகங்களில் ஜே வி பியின் நினைவுச் சின்னங்கள் உள்ளன. இராணுவ வெற்றி நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி ஏன் யு ஜி சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவை மட்டும் என்ன சமாதானப் புறாவை ஞாபகப்படுத்தி நிற்கின்றனவோ.

உலகெங்கும் மரணித்தவர்களுக்கு குறிப்பாக யுத்தத்தில் மரணித்தவர்களுக்கு நினைவிடங்கள் இருக்கும் போது.. யு ஜி சியின் காட்டுமிராண்டித்தனமான இனப்பாகுபாட்டு அடிப்படையிலான இந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி உடைப்பு எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது.

யு ஜி சி அரச ஏவல் அமைப்பு அல்லது சிங்கள இராணுவத் தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்பாக இருப்பது சொறீலங்காவின் உயர்கல்வி இராணுவ மயமாவதையும் முழுச் சிங்கள மயமாவதையுமே எடுத்துச் சொல்கிறது. இது பன்னின இனச் சமூக நாடு ஒன்றுக்கு உகந்த ஒரு கட்டமைப்பு அல்ல. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.