Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்ணையாளர்களை விடுவிக்ககோரியும் தாக்கப்பட்டதை கண்டித்தும் கரடினாறு பொலிஸ் முன்பாக ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண்ணையாளர்களை விடுவிக்ககோரியும் தாக்கப்பட்டதை கண்டித்தும் கரடினாறு பொலிஸ் முன்பாக ஆர்ப்பாட்டம்

  • Admin
  • January 9, 202110:10 pm

 

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் பண்ணையாளர் ஆறு பேர் தாக்கப்பட்டு விகாரையொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவத்தினை கண்டித்தும் கடத்தப்பட்ட பண்ணையாளரை விடுவிக்க நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியும் இன்று மாலை கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனை இப்பகுதியில் நேற்று ஆறு பண்ணையாளர்களை அடித்து கட்டிவைத்து அவர்களை தடுத்துவைத்துள்ளது தொடர்பில் இன்று பண்ணையாளர்களின் உறவினர்கள் கரடியனாறு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் பண்ணையாளர்களின் உறவினர்கள்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் தேசிய அமைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் உட்பட கட்சி உறுப்பினர்கள் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர்கள்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் இணைந்து கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

 

தமிழர்களின் பொருளாதாரத்தினை நசுக்காதே,கிழக்கு மீட்கும் பொய்வேசங்கள் எங்கே,விடுதலைசெய்,விடுதலைசெய் பண்ணையாளர்களை விடுதலைசெய்,ஒடுக்காதே ஒடுக்காதே தமிழினத்தை ஒடுக்காதே, நிறுத்துநிறுத்து அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்து,பண்ணையாளர்கள் எம் இனத்தின் முதுகெழும்புகள்,எமது நிலம் எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வயிற்றில் அடிக்காதே வயிற்றில் அடிக்காதே பண்ணையாளர்களின் வயிற்றில் அடிக்காதே,மேய்ச்சல் தரை மீது அத்துமீறாதே போன்ற கோசங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

நேற்று இரவு அடைத்துவைத்திருந்த மாடுகளை மேய்க்க கொண்டுசென்றவர்களை அங்கு அத்துமீறிய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் துரத்தியுள்ளனர்.அதில் ஒருவர் அவர்களிடம் அகப்படவே அவரின் கைகால்களை கட்டி அடித்துள்ளனர்.அதனை தொடர்ந்து பண்ணையாளர்கள் சிலர் அங்கு சென்று அவரை மீட்பதற்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் அவர்களையும் பிடித்துள்ளனர்.அவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.அதன் பின்னர் அவர்களின் தொலைபேசிகள் இயங்கவில்லை.இன்றுவரையில் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.இன்று பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு எடுத்தபோது அவர்களை விகாரையொன்றில் வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த கரடியனாறு பொலிஸ்தான் நீண்டகாலமாக மயிலத்தமடு பிரச்சினையை விசாரணைசெய்கின்றது.பெருமளவான முறைப்பாடுகள் இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன.எந்தவித பிரயோசனமும் இல்லை.

கிழக்கினை மீட்கின்றோம்,மட்டக்களப்பினை மீட்கின்றோம் என்று சொல்பவர்கள் பண்ணையாளர்களின் பிரச்சினையையும் ஓரு பிரச்சினையாக கணக்கில் எடுங்கள்.நீங்கள் பீட்சா சாப்பிடவேண்டும் என்பதற்காக நாங்கள் தண்ணிசோறு சாப்பிடுகின்ற எமது பொருளாதாரத்தினை காப்பாற்றுங்கள்.

மக்களை ஏமாற்றாமல் பிடிபட்டுள்ளவர்களை மீட்பதற்கும் மயிலத்தமடு பிரச்pசினைக்கு நிரந்தர தீர்வினைப்பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கவும் என இங்கு கலந்துகொண்ட பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

ADC649DA-5F96-4B1E-A107-53F3F39BD613-30082455B26-4668-4D57-992C-75EE52ECE903-3001BD869C8-8FE8-4105-82BA-BDAD5C6822FC-30066DC9F77-72A8-488D-8A05-107C776D2CBC-300


https://www.meenagam.com/பண்ணையாளர்களை-விடுவிக்க/

 

 

மிக மோசமான நடவடிக்கை இது. தம் பாரம்பரிய மேச்சல் நிலத்தினை படிப்படியாக கிழக்கு மக்கள் இழந்து கொண்டு வருகின்றமைக்கு எதிராக தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் காத்திரமாக போராட வேண்டிய நேரம் இது,. ஆனால் கிழக்கின் மீட்பர்கள் காதில் இவை ஒரு போதும் ஏறாது,

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

மிக மோசமான நடவடிக்கை இது. தம் பாரம்பரிய மேச்சல் நிலத்தினை படிப்படியாக கிழக்கு மக்கள் இழந்து கொண்டு வருகின்றமைக்கு எதிராக தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் காத்திரமாக போராட வேண்டிய நேரம் இது,. ஆனால் கிழக்கின் மீட்பர்கள் காதில் இவை ஒரு போதும் ஏறாது,

சிங்கள் மக்கள் தங்கள் இனம்பரம்பலை விருத்தி செய்யவும் தமிழர்கள் நிலங்களை அபகரித்து கொள்ளவும் தமிழ்ர் பகுதிகளில் வந்து தங்கள் தொழில்களை மேற்கொள்ளவும் துணிந்து விட்டார்கள் சில இடங்களை அவர்கள் கைப்பற்ற நினைக்கிறார்கள் , அம்பாறையில் இன விகிதாசாரம் முஸ்லீம்கள் அதிகரிக்க அவர்களோ மட்டக்களப்பின் பின் புறத்தில் உள்ள பகுதிகளை அம்பாறை மாவட்டத்தில் சேர்த்து இணைத்துள்ளார்கள் தற்போது இந்த மேச்சல் தரை பிரச்சினை அம்பாறையிலும் இருக்கிறது அதை வன இலாகாவினர் எடுத்துள்ளார்கள் மட்டக்களப்பில் தற்போது சிங்கள மக்கள் சேனை பயிர்செய்கைக்கென அபகரித்துள்ளார்கள் அங்கே மாடு மேய்க்க சென்றவர்களை  தடுத்து வைத்துள்ளார்கள் மேச்சல் தரை பிரச்சினையை கையாள நடவடிக்கை எடுக்கப்படுகிறது ஆனால் அது சிலரால் அரசியல் ஆக்கப்படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை இனத்தை சேர்ந்தோரால் பிடித்து சென்று தாக்கப்பட்ட பண்ணையாளர்கள் அறுவருக்கு பிணை!

235Views

received_412534583327199.jpeg?fit=758%2C

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரைகளை அபகரித்துள்ள பெரும் பான்மை இனத்தை சேர்ந்தோரால் நேற்று முன்தினம் தாக்கப்பட்டதுடன் காணாமல் போன தமிழ் பண்ணையாளர்கள் ஆறு பேர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேச்சல் தரைகளை அபகரித்து பயிர்ச் செய்கை செய்யும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிலர் ‘சி.பாஸ்கரன், மு.சேந்தன், சு.கோணேசன், ப.மேகுலன், கி.ருச்சுதன், ச.டயன்சன் ஆகிய ஆறுபேரை தாக்கிதுடன் பலவந்தமாக பிடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் பண்ணையாளர்கள் ஆறுபேர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதை கண்டித்தும் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று சிந்தாண்டி சந்தியில் பண்ணையாளர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், தமிழ்தேசிய அரசியல் பிரமுகர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

image_8a9b062977-300x169.jpg
image_0f15d9be42-300x169.jpg
1610243782-karadiyanaru-2-300x200.jpeg
 
 

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆறு பண்ணையாளர்களும் மகா ஓயா பொலிஸாரினால் தெஹியத்தகண்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேநேரம் தாக்குதலுக்குள்ளாகியிருந்த பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சென்று சந்தித்த முன்னாள் எம்பி ஞா.ஸ்ரீநேசன், சட்ட விரோதமாக பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோரே இவர்களை பிடித்து கடுமையாக தாக்கிய பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் என தெரிவித்தார்.

received_420394465827857-300x225.jpeg
received_1167830186964822-300x225.jpeg
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குத்தான் சொன்னோம், பேசாமல் அவன் சொற்படி கேட்டு அபிவிருத்தியினை மட்டுமே பெற்றுக்கொள்ளுங்கள் என்று. நிலம், உரிமை , தேசியம், தேசிக்காய், புடலங்காய், பூசணிக்காய் என்று வெளிக்கிட்டால் உங்களை அடித்துத் துரத்துவதைத்தவிர வேறு வழியில்லை. காயத்தோட விட்டது அவனது பெருந்தன்மை, இல்லாவிட்டால் தேசிக்காய் வியாபாரம் செய்யும் உங்களை வெலிக்கந்தையிலோ, தீவுச்சேனையிலோ வைத்து செய்திருப்போம். தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் பிரேமினிக்கும் மற்றைய 6 பேருக்கும் நடந்தது மறந்துபோய்விட்டது தேசிக்காய்களுக்கு!!!

Edited by ரஞ்சித்
பிரேமினிக்கும்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.