Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாம் ஜாமங்களின் கதை - நாவல்

Featured Replies

இது முற்றிலும் பெண்களால் நிரப்பப்பட்ட நாவல். பெண்ணின் அகவுலகை ஆணின் பார்வையிலிருந்து பார்த்துப் பழகிய நமக்கு இதுவொரு புது அனுபவமாக இருக்கும். நாவலின் மையக்கருத்தை பின்னட்டையிலிருக்கும் குறிப்பிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை, வெளிவந்தவையும் ஓர் ஆணின் பார்வையிலிருந்தே அமைந்து வந்துள்ளது. முன்னுரையில் குறிப்பிட்டது போன்று "முதல் ஜாமத்தைக் காட்டிலும், விபரீதமானது - கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்". அது எல்லைகளற்றது, கட்டுப்படுத்த முடியாதது, தணல் போன்றது, ஆழ்ந்த நினைவுகளைக் கிளறிக் கொணர்வது.

நாவலில் வரும் பகுதிகளைக் குறிப்பிடாமல், என்னுள் உணர்ந்தவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ராபியா என்ற சிறுமியிலிருந்து தொடங்கும் நாவல், அவளிடமிருந்தே முற்றுப் பெறுகிறது. இக்கதையில் கதாநாயகன்/நாயகி என்று  யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, கதையில் பயணிக்கும் கதைமாந்தர்கள் அனைவரும் ஒரு பகுதியில் கதாநாயகராவதும் பின்பு கதையில் சக பயணிகளாகத் தொடர்வதுமாக அமைந்துள்ளது. 

பெண் உலகம் - சூழ்ச்சி, அடிமைத்தனம், ஏமாற்றம், சுரண்டல் மற்றும் வலிகளால் சூழப்பட்டுள்ளது. நமது குடும்ப அமைப்பில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் (ஒதுக்கப்பட்டிருக்கும்) இடத்தைப் பற்றியும், குடும்பம் மட்டுமின்றி வெளிச்சமூகத்திலிருந்து அவர்களுக்கு இழைக்கப்படும் கட்டுப்பாடுகள், சுதந்திரமின்மை,  தொடர்ந்து விதிக்கப்படும் பாரபட்சங்கள் மற்றும் சமத்துவமின்மையைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. திருமண உறவின் மூலம் ஏற்படுத்தப்படும் இறுக்கம், உடலியல் சார்ந்த துன்பங்கள், மறுக்கப்படும் காமம், அவளைச் சுற்றி நிகழும் சுரண்டல்கள் என பல்வேறு விடயங்களை பகிங்கரமாகச் சொல்கிறது.

பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர், இன்றும் அது தொடர்ந்துகொண்டே வருகிறது. பெண்ணுலகம் முற்றிலும் வேறுபட்டது, பெண்கள் தனியாகக் கூடுமிடத்தில் பேசக்கூடிய விடயங்கள் நம் கற்பனைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. அந்தரங்க விடயங்களை குழுமமாகப் பேசுவது விசித்திரமானதாகத் தோன்றினாலும், அது விரக்தியின் வெளிப்பாடாகவுள்ளது.

நாவலாசிரியர்: சல்மா
பதிப்பகம்: காலச்சுவடு

பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் ஆண்களால் இழைக்கப்படுவதைக் காட்டிலும் மிகுதியானது. ஆண்கள் இழைக்கும் தவறுகளைப் பெண்கள் ஏற்றுக் கொள்வதும், அதைத் தொடர்ந்து ஆதரிப்பதுமானக் குடும்பப் பின்னல் அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பூப்பெய்தியவுடன் அவர்களின் கல்வியும் மறுக்கப்பட்டு, சிறுவயதிலேயே திருமணத்திற்கு தள்ளப்படும் நிர்பந்தமே பரவலாக உள்ளது.

தனது மகளின் திருமண விவகாரத்திலும் கணவனின் தலையீடே அதிகமுள்ளது, அது தவறெனத் தெரிந்தும் தடுக்க இயலாத நிலையே உள்ளது. இஸ்லாமிய ஆண் ஒருவன் வேற்று மத பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருப்பது அவர்களுக்குத் தவறாகப் படவில்லை, அதே சமயம் வேற்று மதத்தினரைக் காதலித்து மணப்பது மிகப்பெரிய குற்றமாகக் கருத்தப்படுகிறது.  கணவனை இழந்த பெண்ணிருவர் வேறொரு ஆணுடன் தொடர்ப்பிலிருப்பதும், இறுதியில் துர்மரணமடைவதுமாக உள்ளது. மரபு மீறல்கள் ஆங்காங்கே வந்து செல்வது தவறாகத் தோன்றவில்லை, (பெண்களுக்கான) மரபு என்பது ஆண்களால் வகுக்கப்பட்ட ஒன்றுதான். வைப்பாட்டி வைப்பதும், கருக்கலைப்பு செய்வதும் மரபு மீறல்கள் தான்!

நாவல் முழுவதும் பெண்ணுலகின் துன்பங்கள், வலிகள் பற்றி விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.  இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது இஸ்லாமிய சமூகப் பெண்களுக்கு மட்டுமின்றி பெரும்பான்மையான பெண்களுக்கும் பொதுவானதாக உள்ளது. நாவலாசிரியர்கள் தொடத் தயங்கும் சிக்கலான கருக்களத்தை நேர்த்தியாகக் கொண்டு சென்றது மிகவும் பாராட்டுக்குரியது. இஸ்லாமிய சமூகத்தில் நேரிடையான அல்லது மறைமுக எதிர்ப்பைப் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. வலைதள உலாவலில் பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே காணமுடிகிறது. இதில் இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று இது ஒரு பக்கச்சார்பு கொண்ட கோணல் கதை என்றும் விமர்சித்துள்ளனர். 

ஆனால் எனது பார்வையில், இந்நாவல் இஸ்லாமிய சமூகத்தைப் பற்றியது மட்டுமல்ல இன்னபிற சமூகத்திலும் இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நாவல் பெண்களுக்கெதிரான சுரண்டல், ஆணின் வன்மம் முதலியவற்றை மதம், சமூகத்தின் போக்கு மற்றும் குடும்ப அமைப்பின் மூலம் அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலை பற்றி விரிவாகக் கூறுகிறது. இந்நாவலை மற்ற நாவல்களைப் போல் அணுகாமல், பெண்ணியக் கூறுகள், உடலியல் சார்ந்த நோக்கில் வாசிக்கப் பட வேண்டும் என்பதுவே எனது பரிந்துரையாகும்.

வாசித்துப் பாருங்கள், பெண்களின் அகவுலகை அறியும் போது அவர்களைச் சுற்றி நாம் ஏற்படுத்தியிருக்கும் அடிமைத்தனத்தை உணரமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அருள்மொழிவர்மன் said:

நாவலாசிரியர்கள் தொடத் தயங்கும் சிக்கலான கருக்களத்தை நேர்த்தியாகக் கொண்டு சென்றது மிகவும் பாராட்டுக்குரியது. இஸ்லாமிய சமூகத்தில் நேரிடையான அல்லது மறைமுக எதிர்ப்பைப் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. வலைதள உலாவலில் பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே காணமுடிகிறது. இதில் இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று இது ஒரு பக்கச்சார்பு கொண்ட கோணல் கதை என்றும் விமர்சித்துள்ளனர். 

பகிர்விற்கு... நன்றி, அருள் மொழிவர்மன்.

ஆனால்....  முஸ்லீம் சமூகத்து பெண்களைப் பற்றி,
நாம் கருத்து எழுதப் போனால்.... 

முஸ்லீம் சகோதரர்கள்... 
"நீ, சுன்னத்து செய்தனீயாமுஸ்லீம்  பெண்களைப்  பற்றி எழுத உனக்கு என்ன அருகதை இருக்கு⁉️ என்று... சண்டைக்கு வந்து விடுவார்கள்  ஐயா. :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
1 hour ago, தமிழ் சிறி said:

பகிர்விற்கு... நன்றி, அருள் மொழிவர்மன்.

ஆனால்....  முஸ்லீம் சமூகத்து பெண்களைப் பற்றி,
நாம் கருத்து எழுதப் போனால்.... 

முஸ்லீம் சகோதரர்கள்... 
"நீ, சுன்னத்து செய்தனீயாமுஸ்லீம்  பெண்களைப்  பற்றி எழுத உனக்கு என்ன அருகதை இருக்கு⁉️ என்று... சண்டைக்கு வந்து விடுவார்கள்  ஐயா. :)

@ தமிழ் சிறி, உண்மைதான் நெருப்பை மூட்டி விட்டதால் தீ பற்றத்தான் செய்யும். அவர்களைப் பற்றி எழுத நமக்கு அருகதை இல்லைதான், ஆனாலென்ன சொல்ல வந்ததைச் சொல்லிச் செல்வதுதான் முறை.  சலமா அவர்கள் நாவலில் அப்படியொன்றும் தவறாகக் குறிப்பிடவில்லை, பெண்கள் மீதான சுரண்டல் இசுலாமிய சமூகத்தில் மட்டும் அன்றி அனைத்து சமூகத்திலும் பரவலாக உள்ளது. வீட்டிலும் நாட்டிலும் நடப்பதை அல்லது நடந்தவற்றையே கூறியுள்ளார். தேள் கொட்டியவனுக்கு வலிக்கத் தான் செய்யும். 

இத்தகைய சுரண்டல் மதம், பண்டிகைகள், சடங்குகள் மூலமாக எளிதாக நிறைவேற்றப்பட்டு வருவது கவலைக்குறியது. குடும்ப அமைப்பில் பெண்களைச் சுற்றியுள்ள வலை ஆண்களால் நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ளது. இது இன்று நேற்று மட்டுமல்ல நூறாண்டு காலமாக தொடர்ந்து அமைக்கப் பெற்று வந்துள்ளது. ஆண் பெண் இருவருக்கும் பொதுவான நியதியென்று எதுவுமில்லை, அனைத்திலும் பாரபட்சம்!  

கணவன் மனைவிக்கு இடையான உடலுறவுக்குப் பின், உடுத்திய ஆடையிலிருந்து பயன்படுத்திய பாய் வரைக்கும் அவள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்பது அச்சமூகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு, இது பெண்களுக்கான வேலை - அப்படித்தான் நமது திருமணம், குடும்ப அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

நண்பர்கள் சண்டைக்கு வரும் பட்சத்தில் வாய்-போர் செய்துதான் பார்ப்போமே !!   :wink:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அருள்மொழிவர்மன் said:

இது முற்றிலும் பெண்களால் நிரப்பப்பட்ட நாவல். பெண்ணின் அகவுலகை ஆணின் பார்வையிலிருந்து பார்த்துப் பழகிய நமக்கு இதுவொரு புது அனுபவமாக இருக்கும். நாவலின் மையக்கருத்தை பின்னட்டையிலிருக்கும் குறிப்பிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை, வெளிவந்தவையும் ஓர் ஆணின் பார்வையிலிருந்தே அமைந்து வந்துள்ளது. முன்னுரையில் குறிப்பிட்டது போன்று "முதல் ஜாமத்தைக் காட்டிலும், விபரீதமானது - கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்". அது எல்லைகளற்றது, கட்டுப்படுத்த முடியாதது, தணல் போன்றது, ஆழ்ந்த நினைவுகளைக் கிளறிக் கொணர்வது.

நாவலில் வரும் பகுதிகளைக் குறிப்பிடாமல், என்னுள் உணர்ந்தவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ராபியா என்ற சிறுமியிலிருந்து தொடங்கும் நாவல், அவளிடமிருந்தே முற்றுப் பெறுகிறது. இக்கதையில் கதாநாயகன்/நாயகி என்று  யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, கதையில் பயணிக்கும் கதைமாந்தர்கள் அனைவரும் ஒரு பகுதியில் கதாநாயகராவதும் பின்பு கதையில் சக பயணிகளாகத் தொடர்வதுமாக அமைந்துள்ளது. 

பெண் உலகம் - சூழ்ச்சி, அடிமைத்தனம், ஏமாற்றம், சுரண்டல் மற்றும் வலிகளால் சூழப்பட்டுள்ளது. நமது குடும்ப அமைப்பில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் (ஒதுக்கப்பட்டிருக்கும்) இடத்தைப் பற்றியும், குடும்பம் மட்டுமின்றி வெளிச்சமூகத்திலிருந்து அவர்களுக்கு இழைக்கப்படும் கட்டுப்பாடுகள், சுதந்திரமின்மை,  தொடர்ந்து விதிக்கப்படும் பாரபட்சங்கள் மற்றும் சமத்துவமின்மையைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. திருமண உறவின் மூலம் ஏற்படுத்தப்படும் இறுக்கம், உடலியல் சார்ந்த துன்பங்கள், மறுக்கப்படும் காமம், அவளைச் சுற்றி நிகழும் சுரண்டல்கள் என பல்வேறு விடயங்களை பகிங்கரமாகச் சொல்கிறது.

பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர், இன்றும் அது தொடர்ந்துகொண்டே வருகிறது. பெண்ணுலகம் முற்றிலும் வேறுபட்டது, பெண்கள் தனியாகக் கூடுமிடத்தில் பேசக்கூடிய விடயங்கள் நம் கற்பனைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. அந்தரங்க விடயங்களை குழுமமாகப் பேசுவது விசித்திரமானதாகத் தோன்றினாலும், அது விரக்தியின் வெளிப்பாடாகவுள்ளது.

நாவலாசிரியர்: சல்மா
பதிப்பகம்: காலச்சுவடு

பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் ஆண்களால் இழைக்கப்படுவதைக் காட்டிலும் மிகுதியானது. ஆண்கள் இழைக்கும் தவறுகளைப் பெண்கள் ஏற்றுக் கொள்வதும், அதைத் தொடர்ந்து ஆதரிப்பதுமானக் குடும்பப் பின்னல் அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பூப்பெய்தியவுடன் அவர்களின் கல்வியும் மறுக்கப்பட்டு, சிறுவயதிலேயே திருமணத்திற்கு தள்ளப்படும் நிர்பந்தமே பரவலாக உள்ளது.

தனது மகளின் திருமண விவகாரத்திலும் கணவனின் தலையீடே அதிகமுள்ளது, அது தவறெனத் தெரிந்தும் தடுக்க இயலாத நிலையே உள்ளது. இஸ்லாமிய ஆண் ஒருவன் வேற்று மத பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருப்பது அவர்களுக்குத் தவறாகப் படவில்லை, அதே சமயம் வேற்று மதத்தினரைக் காதலித்து மணப்பது மிகப்பெரிய குற்றமாகக் கருத்தப்படுகிறது.  கணவனை இழந்த பெண்ணிருவர் வேறொரு ஆணுடன் தொடர்ப்பிலிருப்பதும், இறுதியில் துர்மரணமடைவதுமாக உள்ளது. மரபு மீறல்கள் ஆங்காங்கே வந்து செல்வது தவறாகத் தோன்றவில்லை, (பெண்களுக்கான) மரபு என்பது ஆண்களால் வகுக்கப்பட்ட ஒன்றுதான். வைப்பாட்டி வைப்பதும், கருக்கலைப்பு செய்வதும் மரபு மீறல்கள் தான்!

நாவல் முழுவதும் பெண்ணுலகின் துன்பங்கள், வலிகள் பற்றி விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.  இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது இஸ்லாமிய சமூகப் பெண்களுக்கு மட்டுமின்றி பெரும்பான்மையான பெண்களுக்கும் பொதுவானதாக உள்ளது. நாவலாசிரியர்கள் தொடத் தயங்கும் சிக்கலான கருக்களத்தை நேர்த்தியாகக் கொண்டு சென்றது மிகவும் பாராட்டுக்குரியது. இஸ்லாமிய சமூகத்தில் நேரிடையான அல்லது மறைமுக எதிர்ப்பைப் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. வலைதள உலாவலில் பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே காணமுடிகிறது. இதில் இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று இது ஒரு பக்கச்சார்பு கொண்ட கோணல் கதை என்றும் விமர்சித்துள்ளனர். 

ஆனால் எனது பார்வையில், இந்நாவல் இஸ்லாமிய சமூகத்தைப் பற்றியது மட்டுமல்ல இன்னபிற சமூகத்திலும் இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நாவல் பெண்களுக்கெதிரான சுரண்டல், ஆணின் வன்மம் முதலியவற்றை மதம், சமூகத்தின் போக்கு மற்றும் குடும்ப அமைப்பின் மூலம் அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலை பற்றி விரிவாகக் கூறுகிறது. இந்நாவலை மற்ற நாவல்களைப் போல் அணுகாமல், பெண்ணியக் கூறுகள், உடலியல் சார்ந்த நோக்கில் வாசிக்கப் பட வேண்டும் என்பதுவே எனது பரிந்துரையாகும்.

வாசித்துப் பாருங்கள், பெண்களின் அகவுலகை அறியும் போது அவர்களைச் சுற்றி நாம் ஏற்படுத்தியிருக்கும் அடிமைத்தனத்தை உணரமுடியும்.

பகிர்விற்கு நன்றி தோழர்..👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அருள்மொழிவர்மன் said:

நண்பர்கள் சண்டைக்கு வரும் பட்சத்தில் வாய்-போர் செய்துதான் பார்ப்போமே !!   :wink:

அப்படி என்றால்.... நான் “ரெடி” அருள்மொழிவர்மன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் இந்நூலை வாசித்தேன். ஒரு சமூகத்தின் கதை. கடும் விமர்சனங்களையும் கடந்த நூல். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அப்படி என்றால்.... நான் “ரெடி” அருள்மொழிவர்மன். 🤣

சண்டியனைப் பாருங்கோவன் 😝 TÜV முடியிற காலத்தில் வீராப்பு நல்லமில்லை கண்டியளோ 🤭

56 minutes ago, shanthy said:

சில வருடங்களுக்கு முன் இந்நூலை வாசித்தேன். ஒரு சமூகத்தின் கதை. கடும் விமர்சனங்களையும் கடந்த நூல். 

நானும் இந்த நாவலை சில வருடங்களுக்கு முன்னர் வாசித்தேன். பெரியளவில் என்னை அது கவரவில்லை. 

ஒருவேளை இந்திய தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை நன்கு புரிந்தவர்களால் தான் அதன் வீச்சை புரிந்து கொள்ள முடியுமோ தெரியவில்லை. 
எனக்கு நல்ல இலங்கை முஸ்லிம் நண்பர்களும், நண்பிகளும் உள்ளனர். அனேகமானோர் வடக்கு / மன்னார் முஸ்லிம்கள். அவர்களின் வீட்டுக்குச் சென்று எந்த நேரத்திலும் உணவு உண்ணக் கூடியளவுக்கு நெருக்கமானவர்கள் அவர்கள். அவர்களின் வாழ்வியலுடன் பார்க்கும் போது சல்மா எழுதிய தமிழக முஸ்லிம் மக்களின் வாழ்வு வேறு விதமாக இருந்தது. நாவலில் பெண் விடுதலை தொடர்பான பிரச்சாரத்தின் வீச்சு தான் அதிகமாக இருந்தது.

சல்மாவின் எழுத்துகள் அதிகமாக வரவேற்கப்படுவதற்கு அவர் பலம் பொருந்திய திமுக வின் பெண்கள் அணியின் உப செயலாளராகவும், கனிமொழியின் தோழியாகவும் இருப்பதும் காரணமோ என்றும் சிலவேளைகளில் எண்ணுவதும் உண்டு. அம்பை போன்றவர்களுக்கு இந்தளவுக்கு வெளிச்சம் கிடைப்பதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ல்மாவின் எழுத்துகள் அதிகமாக வரவேற்கப்படுவதற்கு அவர் பலம் பொருந்திய திமுக வின் பெண்கள் அணியின் உப செயலாளராகவும், கனிமொழியின் தோழியாகவும் இருப்பதும் காரணமோ என்றும் சிலவேளைகளில் எண்ணுவதும் உண்டு. அம்பை போன்றவர்களுக்கு இந்தளவுக்கு வெளிச்சம் கிடைப்பதும் இல்லை.

இப்படியொரு எண்ணம் எனக்குள் இருக்கிறது. ஆனால் நீங்கள் வெளிப்படையாக சொல்லிவிட்டீர்கள்.

Edited by shanthy
quote பண்ணுவதில் இருந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.