Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காப்புரிமை அத்துமீறல்கள் - Copyright infringement

22 members have voted

  1. 1. நீங்கள் யாழ்இணையத்தில் மற்றையவர்களின் காப்புரிமை பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவு தர ஆயத்தமாக இருக்கின்றீர்களா?

    • ஆம்!
      18
    • இல்லை!
      4

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்!

கருத்துக்கள உறவுகளிடம் ஒரு அன்பான வேண்டுகோள்! ....

* நீங்கள் உருவாக்கிய ஒரு ஆக்கம் இன்னொருவர் மூலம் இணையத்தில் காப்புரிமை அத்துமீறல் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? உதாரணமாக, நீங்கள் ஒரு அழகிய கவிதையை அல்லது மிகச்சிறந்த ஒரு நகைச்சுவை ஒன்றை நீண்ட நேரம் செலவளித்து சுயமாக உருவாக்கி யாழ் இணையத்தில் இணைக்கின்றீர்கள் என வைப்போம். இதை இன்னொருவர் உங்கள் பெயரைக் குறிப்பிடாது வெறுமனே உங்கள் ஆக்கத்தை மட்டும் பிரதி எடுத்து மிகவும் பிரபலமான ஒரு இணையத்தில் இணைத்தால் அதைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி கோபம் வரும்?

உங்கள் கவனத்திற்கு கீழ்வரும் விடயங்களை கொண்டுவருகின்றேன்...

* யாழ் இணையத்தில் நடைபெறும் காப்புரிமை அத்துமீறல்கள்....

1. இன்னொருவர் உருவாக்கிய ஆக்கத்தை அது பெறப்பட்ட மூலத்தை (Source: Link) குறிப்பிடாது படைப்புக்களத்தில் அல்லது வேறு பகுதிகளில் இணைத்தல்

2. இன்னொருவரின் ஆக்கத்தை paraphrase (சொற்களை மாற்றி சிறு மாற்றங்கள் செய்து) செய்து அதன் மூலத்தை குறிப்பிடாது உங்கள் ஆக்கமாக இணைத்தல்

* காப்புரிமை அத்துமீறல்களினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்...

1. கெட்ட பெயர் ஏற்படுதல்

2. சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படுதல் (இப்பொழுது ஏற்படாவிட்டாலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடும்)

3. காப்புரிமையாளனிற்கு மன உலைச்சல் ஏற்படுதல், காப்புரிமையாளனின் வருமானம் பாதிக்கப்படுதல்

* நீங்கள் யாழ் இணையத்தில் காப்புரிமை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதை குறிப்பிட்ட ஆக்கத்திற்குரிய காப்புரிமையாளன் கீழ்வரும் முறைகள் மூலம் கண்டுபிடிக்க முடியும்

1. Automatically Detecting Software ஐ பயன்படுத்துதல்

2. Search Engine ஐ பயன்படுத்துதல் உ+ம்: கூகிள், யாகூ...

3. யாழ் இணையத்தில் நேரடியாக வந்து பார்வையிடுதல்

4. வாசகன் ஒருவன் மூலம் அல்லது இன்னொரு நபர் மூலம் அறிந்துகொள்ளுதல்

* எங்களதும் மற்றையவர்களினதும் காப்புரிமைகளை யாழ் இணையத்தில் பாதுகாப்பதற்காக நாம் கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்...

1. உங்கள் சொந்த ஆக்கம் அல்லாத ஆக்கங்களை இணைக்கும்போது அவை பெறப்பட்ட மூலங்களை குறிப்பிடுங்கள்

2. நீங்கள் paraphrase செய்து ஏதாவது ஆக்கத்தை உருவாக்கி இருந்தால் அதன் மூலத்தை குறிப்பிடுங்கள்

3. மற்றைய கள உறவுகள் யாராவது யாழ் இணையத்தில் காப்புரிமை அத்துமீறலில் ஈடுபட்டிருந்தால் உடனடியாக அதை குறிப்பிட்ட கள உறவிற்கு தெரிவித்து ஆக்கத்தின் மூலம் - Source: Link ஐ இணைக்குமாறு கூறுங்கள்

4. யாராவது கள உறவுகள் paraphrase முறைமூலம் காப்புரிமை அத்துமீறலில் ஈடுபட்டிருந்தால் அதை ஆதாரங்களுடன் அவர்களிற்கு தனிமடல் மூலம் அறிவித்து Source: Link ஐ இணைக்குமாறு கூறுங்கள்

5. காப்புரிமை அத்துமீறல்கள் இடம்பெறுவதை யாழ் இணையத்தில் கண்டால் அதை உடனடியாக நிருவாகத்திற்கு முறைப்பாடு செய்யுங்கள்

* யாழ் கள நிருவாகம் காப்புரிமை அத்துமீறல்களை தடுப்பதற்கு கீழ்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்....

1. காப்புரிமை அத்துமீறல்களை மேற்கொள்பவர்களிற்கு அறிவுறுத்தல் விடுத்தல்

2. காப்புரிமை அத்துமீறல்கள் செய்யப்படும் தலைப்புக்களை பூட்டுப்போட்டு மூடுதல்

3. காப்புரிமை அத்துமீறல்கள் செய்யப்பட்டுள்ள கருத்துக்களை அகற்றுதல்

4. காப்புரிமை அத்துமீறல்கள் செய்யப்பட்டுள்ள இணையங்களிற்கு யாழ்களத்திலிருந்து நேரடித் தொடுப்புக்கள் - Direct Links கொடுக்கப்படுவதை தவிர்க்கலாம் (உதாரணமாக Illegal Music/Movie Downloads Sites)

* மற்றவர்களின் காப்புரிமை யாழ் இணையத்தில் பாதுகாக்கப்படுவதன் மூலம் கிடைக்ககூடிய நன்மைகள்...

1. யாழ் இணையத்தின் தரம் அதிகரிக்கும்

2. சட்டரீதியான சிக்கல்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை தவிர்த்தல்

3. கள உறவுகளின் உண்மையான திறமைகள், ஆற்றல்கள் விருத்தி செய்ய்யப்படுதல்

4. ஆக்கத்தின் உண்மையான சொந்தக்காரன் பாராட்டப்பட சந்தர்ப்பம் கிடைத்தல் (நீங்கள் இணைத்த ஒரு ஆக்கத்தின் உண்மையான மூலம் இணைக்கப்படும்போது வாசகர்கள் அந்த இணைப்பை சொடுக்கி, குறிப்பிட்ட கலைஞனிற்கு/படைப்பாளிக்கு தமது கருத்தை அல்லது பாராட்டை தெரிவிக்க சந்தர்ப்பம் ஏற்படும்)

5. ஒரு ஆக்கத்தை பல சிரமங்களின் மத்தியில் உருவாக்கிய படைப்பாளி/சொந்தக்காரன் சிந்திய வியர்வைக்கு மதிப்பளிக்கப்படுகின்றது

* காப்புரிமை அத்துமீறல் சம்மந்தமான இந்த தலைப்பு இங்கு இணைக்கப்பட்டதற்கான காரணங்கள்...

1. அண்மைக்காலங்களில் யாழ் இணையத்தில் படைப்புக்களத்தில் காப்புரிமை அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளது

2. யாழ் இணையத்தின் மற்றைய பகுதிகளிலும் காப்புரிமை அத்துமீறல்கள் தாராளமாக இடம்பெறுகின்றது (இதற்கான முக்கிய காரணம் சோம்பேறித்தனம் என கூறலாம். அதாவது உடனடியாக ஒரு புதிய தலைப்பை உருவாக்கிவிடவேண்டும் என்பதில் உள்ள ஆர்வத்தை சில கருத்துக்கள உறவுகள் ஆக்கங்களின் மூலங்கள் - Sourece Links ஐ இணைப்பதில் காட்டவில்லை)

3. பல புதியவர்கள் யாழ் களத்தில் இணைந்துள்ளார்கள். இவர்களிற்கு காப்புரிமை அத்துமீறல்கள் பற்றி தெரியாது இருக்கலாம்

4. பழைய கருத்துக்கள உறவுகளிற்கு காப்புரிமை அத்துமீறல்கள் பற்றி தெரிந்திருந்தாலும், அதன் தாக்கம்/பாதிப்புக்கள் பற்றி அக்கறை இல்லாமல் இருக்கலாம்

5. காப்புரிமை அத்துமீறல்பற்றி யாழ் கள நிருவாகத்தை உசார்ப்படுத்துதல். All Rights Reserved to yarl.com என எழுதப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே மற்றையவர்களின் காப்புரிமைகளை மீறிக்கொண்டு எவ்வாறு எமது காப்புரிமைகளை பாதுகாக்க முடியும்?

6. தூரநோக்கு சிந்தனையுடன் பார்க்கும்போது, யாழ் இணையத்தின் முன்னேற்றத்திற்கு மற்றையவர்களின் காப்புரிமைகள் பாதுகாக்கப்படுதல் இன்றியமையாதது

* யாழ் இணையத்தில் காப்புரிமை அத்துமீறல் சம்மந்தமாக விவாதத்திற்குரிய சில சிக்கல்கள்...

1. படங்களை மற்றும் Animations ஐ எவ்வாறு கையாள்வது? செய்தியின் மூலம் அல்லது ஒரு கருத்தாடலில் ஆரம்ப மூலம் புகைப்படம் ஒன்றில் இருந்து ஆரம்பிக்கப்பட்டால் நிச்சயம் அதன் மூலம் Source: Link குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், பதில் கருத்துக்கள் எழுதும்போது இணைக்கும் படங்களிற்கு ஒவ்வொரு முறையும் இணையத்தில் தேடல் செய்யப்பட்டு பெறப்பட்ட மூலம் இணைக்கப்பட வேண்டுமா? இதற்கு நிருவாகத்தின் பதில் என்ன? தற்போது யாழ் களத்தில் புகைப்படங்கள் மூலம் பதில் கருத்துக்கள் எழுதும்போது யாராவது அதன் மூலத்தை இணைப்பதாகத் தெரியவில்லை.

2. மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இணைக்கப்பட்ட ஆக்கங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றது? அவற்றின் ஆரம்ப மூலங்கள் குறிப்பிடப்படுகின்றனவா?

3. தகவலின் மூலம் இணையமாக அல்லாது ஒரு புத்தகமாக அல்லது வேறு ரூபத்தில் இருந்தால் அவற்றின் காப்புரிமை எவ்வாறு பாதுகாக்கபடவேண்டும்? உதாரணமாக புத்தகத்தில் இருந்து ஒன்றை வாசித்து அதை இங்கு பிரதி செய்து ஒட்டி இருந்தால் மூலமாக புத்தகத்தின் பெயர் குறிப்பிடப்படமுடியும். ஆனால், யாழ் இணையத்தில் இது எவ்வாறு கையாளப்படுகின்றது?

4. சில தகவல்களை வழங்கும் போது அதாவது, தகவல் மூலத்தை குறிப்பிடும்போது எமது பல அந்தரங்கமான விடயங்கள் மற்றையவர்களிற்கு வெளிப்பட வாய்ப்பு இருக்கின்றது. ஏனெனில், குறிப்பிட்ட அந்த ஆக்கத்தின் காப்புரிமை நாம் வேலை செய்யும் நிறுவனங்களினுடையதாய் அல்லது படிக்கும் பாடசாலைகளினுடையதாய் இருக்கலாம். இவற்றை யாழ் இணையத்தில் கையாள்வது எவ்வாறு?

நன்றி!

Edited by கலைஞன்

நல்ல கருத்து கலைஞன்.

யாழ் விதிமுறைகளின்படி பதியப்படும் ஆக்கம் சொந்தமாக இல்லாவிடின் அதன் மூலம் எதுவென்று குறிப்பிடப்பட வேண்டும். அப்படிக் குறிப்பிடாதவிடத்தில் நீங்கள் மேற்சொன்ன முறைகளின்படி ஆக்கங்களை ஆராய்வது சுலபமான காரியமல்ல.

உதாரணத்திற்கு, youtube இணையத்திலுள்ள தரவுகளில் பெரும்பான்மையானவை கப்புறுதியற்ற சட்டவிரோதமான இணைப்புக்கள். அவற்றை நிர்வாகிகளால் கண்காணிக்கவே ழுடியாது.

லேடிஸ் அன்ட் ஜென்டில்மேன்ஸ் மாப்பி சொன்ன கருத்தை கேட்டிருப்பீங்க என்று நினைகிறேன் எனக்கு என்ட லெக்சர் சொன்ன அவ்வளவு கருத்தையும் மாப்பி சொன்ன மாதிரி இருக்கு அதை விடுவோம்................... :angry:

மாப்பியின் கருத்துகளுடன் நான் ஒத்து போகும் அதே சமயத்தில் என்னொரு மணம் அந்த கருத்துகளுடன் ஒத்து போகுதில்லை சோ வெறி சொறி மாப்பி சொல்ல வந்ததை சொல்லி போட்டு போறேன் என்ன இவன் எப்ப பார்தாலும் எனக்கு எதிர்கருத்து வைகிறானே என்று யோசிக்க கூடாது........... :unsure:

யாழில 80% மேற்பட்ட கருத்துகள் பிறரின் ஆக்கமாகவே இருகிறது மிகுதி தான் சொந்த ஆக்கங்கள் அதில் எத்தனை சொந்த ஆக்கங்கள் என்று வடிவா தெறியாது உதாரணமாக மாப்பி சொன்னார் லிங்கை போட வேண்டும் என்று ஜ அக்ரி வித் டத் பொலிசி..............ஆனா இப்படி செய்யலாமே வீணா அந்த செய்திகளை இணைக்காம லிங்கை கொடுத்து விட்டா நாங்க சென்று பார்போம் தானே.................அவ்வாறு செய்ய போனால் யாழே மற்ற இணையதளங்களுக்கு லிங் கொடுக்கும் ஒரு ஊடகமாகவே வரும்...............இதனை நாம் ஏற்று கொள்ள முடியாது,அத்துடன் செய்தியை போட்டு லிங்கை கொடுத்தா மற்றவர்கள் அந்த செய்தியை போட்டு விடுவீனம் ஆகையால் லிங் கொடுக்கவே ஏலாது..........சோ மாப்பி இப்படி செய்தா என்ன எல்லா பகுதியிலும் நேரடியா கொப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுவதை விடுத்து அந்த செய்தியை எங்கள் நடையில் எழுதி இடுவது எப்படி இருக்கும்.................அப்படி செயுமிடத்தில் செய்தி குழுமம் என்றே தேவையில்லாம போய் விடும்........ :unsure: :P

அத்துடன் இன்னொரு முக்கியமான விடயத்தை இங்கே சொல்லுறன் அதாவது செய்தி பிரிவில்,பழைய செய்திகளுக்கு கருத்து எழுதும்போது அந்த செய்தி முதலில் வந்து நிற்கிறது இதனால் பார்வையாளராக வருபவர்கள் விசனம் அடைவதை காணகூடியதாக இருகுது இதையும் மாப்பி கணக்கில் எடுங்கோ தலைப்புக்கு பொருத்தமில்லாதது தான் ஆனால் சொல்லி போட்டன்...................... :blink:

சரி வரட்டா

தங் கீயு லேடிஸ் அன்ட் ஜேன்டில் மன்ஸ் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி யம்மு நீங்கள் ஆணா? பெண்ணா?அல்லது வேறு முகங்களிலும் வருபவரா?

  • தொடங்கியவர்

லிசான்... யூ ரியூப் பிரச்சனை எம்முடையது அல்ல. அது யூ ரியூப் உடையது. யாராவது படைப்பாளிகள் யூ ரியூப்பில் தமது காப்புரிமை மீறப்பட்டுள்ளது என அறிந்தால் அதை யூ ரியூப்பிற்கு அறிவிக்கும்போது குறிப்பிட்ட இணைப்பை அவர்கள் - யூ ரியூப் உடனடியாக நீக்கிவிடுவார்கள்...

மேலும்... யூரியூப் தான் எம்பெடட் லிங்கை இலவச விநியோகம் செய்கின்றார்கள். அவர்களே இவ்வாறு எமது இணையங்களில் குறிப்பிட்ட யூ ரிபூப் வீடியோக்களை இணைக்கலாம் என்று கூறும்போது, நாம் யூ ரியூப்பை யாழ் இணையத்தில் இணைப்பதில் தவறில்லை...

யமுனா, நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என விளங்கவில்லை. நான் எழுதியுள்ளவற்றை நீங்கள் சரியாக வாசிக்கவில்லை என நினைக்கின்றேன்.....

அது சரி யம்மு நீங்கள் ஆணா? பெண்ணா?அல்லது வேறு முகங்களிலும் வருபவரா?

தாத்தா என்னை பார்த்து இப்படி ஒரு கியுஸ்சன் கேட்க நோக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ :( எனக்கு அழுகைய............அழுகையா வருது நானும் அவரை மாதிரி கதைக்க டிரை பண்ணி பார்தனான் :P .................ஒரு முகத்தில கருத்து எழுதவே எனக்கு நேரம் காணுதில்லை இதில இன்னொரு முகமா :angry: ..............முதல் ஒரு கேள்வி கேடிருந்திர்களே.........இதற்கு நான் பிறகு விடை சொல்லுறேன்............ :P :unsure:

யமுனா, நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என விளங்கவில்லை. நான் எழுதியுள்ளவற்றை நீங்கள் சரியாக வாசிக்கவில்லை என நினைக்கின்றேன்.....

நான் இவ்வளவு சொல்லியும் ஒன்றுமே விளங்கவில்லையோ அதற்கு தான் சொன்னதே...................இப்ப விளங்கிச்சோ....................இதற்கு விளக்கமா பிறகு விடை சொல்லுறேன்

வரட்டா :lol: :P :(

  • தொடங்கியவர்

நான் ஒன்று கூற நீங்கள் வேறொன்று கூறுகின்றீர்கள் யமுனா....

விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை.

அதாவது செய்தியின் மூலங்களிற்கு இணைப்பு - மூலம் Source Link ஐ போடுமாறு கேட்டதற்கு.. நீங்கள் செய்தியை ஏன் ஒட்டவேண்டும், மூலம் Source Link ஐ மட்டும் போட்டால் காணும், எல்லோரும் அந்த லிங்க்கை கிளிக் செய்து அங்கே போய் செய்தியை வாசித்துவிட்டு பின் யாழ் இணையத்திற்கு வந்து அதைப்பற்றி தமது கருத்துக்களை எழுதுவார்கள் என்று சொல்கின்றீர்கள்... எனக்கு உங்களிற்கு என்ன பதில் எழுதுவதென்று தெரியவில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யமுனா அவர்களை "நான் அவனில்லை" திரைப்படம் நன்றாக பாதித்துவிட்டது போலிருக்கின்றது.சரி நான் வரட்டே :lol:

மாப்ஸ் நல்ல விசயம் எல்லாம் செய்யுறீங்கள் :-) இதைச் சிலர் சீரியஸா எடுக்கிறேல்ல..எனக்கும் கோவம் வாற விசயம். அப்புறம் எல்லாரும் நலம்தானே....

  • தொடங்கியவர்

சினேகிதி உங்கள் கருத்திற்கு நன்றி!

உண்மையான படைப்பாளிகளிற்குத்தான் இக்கருத்துக்களின் முக்கியத்துவம் விளங்கும். சும்மா வெட்டி, ஒட்டுபவர்களிற்கு இந்தவிவாதம் வெறும் ஒப்பாரியாகவே தென்படும். என்ன செய்வது? :lol:

நான் ஒன்று கூற நீங்கள் வேறொன்று கூறுகின்றீர்கள் யமுனா....விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை.
மாப்பி நான் சொல்ல வந்தது வேற கருத்து அதாவது நேரடியாக தமிழீழ செய்திகளை கொப்பி பேஸ்ட் பண்ணாமல் எல்லாம் இணையதளங்களின் இருந்து வரும் ஒரே மாதிரியான செய்திகளை வாசித்து அதை குறிபிட்ட சிலர் ஏன் எங்கள் சொந்த நடைபாவணையில் எழுத கூடாது என்பதே??இது சிலருக்கு நகைப்புகிடமான விசயமா இருக்கலாம் நான் கூறுவது ஆனால் இவ்வாறு செய்வதால் காலபோக்கில் சிறந்த செய்தி ஆசிரியர்களை உருவாக்கும் யாழ் அத்தோடு வரும் காலங்களில் யாழ் மற்றைய இணையதளங்களில் இருந்து செய்தி எடுக்காம யாழே சொந்த செய்திகளை போடலாம் என்றேன் சொல்லவந்தனான்.

வரட்டா

யமுனா அவர்களை "நான் அவனில்லை" திரைப்படம் நன்றாக பாதித்துவிட்டது போலிருக்கின்றது.சரி நான் வரட்டே :)

யாழுக்கு நல்லாவே இது பொருந்தும் தற்போது எல்லா நானும் நானல்ல என்று சொல்லலாம் :P

Edited by Jamuna

  • தொடங்கியவர்

நீங்கள் கூறுவதில் ஓரளவு நியாயம் உள்ளது. ஆனால், மீண்டும் பராபிரேஸ் முறை மூலம் காப்புரிமை அத்துமீறலில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு இது வழிசமைக்கலாம்.

உண்மையில், ஊர்ப்புதினம் பகுதியில் யாழ்கள உறவுகள் யாராவது நாளிதழ்களில் வரும் ஆசிரியர் தலையங்கம் போல் தினமும் எழுதினால் நன்றாக இருக்கும். ஆனால், தினமும் தொடர்ந்து செய்ய வேண்டும். ஓரிரண்டு நாட்கள் எழுதிவிட்டு நிறுத்த முடியாது. ஒருவருக்கு முடியாவிட்டால் இன்னொருவர் தொடர வேண்டும். அல்லது சுழற்சி முறையிலும் எழுதலாம். யாழ் களதில் அரசியல் எழுதக்கூடியவர்கள் நிறையப்பேர் உள்ளார்கள்.

நான் தினமும் ஊர்ப்புதினம் பகுதியில், அன்றைய அன்றைய செய்திகளின் அடிப்படையில் தினமும் ஒரு கார்டூனை இணைக்கலாம் என முன்பு நினைத்தேன். ஆனால், நேரப்பற்றாக்குறை காரணமாக பின்வாங்கி விட்டேன்.

ஊர்ப்புதினம் பகுதியில் வெறும் செய்திகளை வெட்டி ஒட்டாது, யாராவது மிக நன்றாக எழுதக்கூடியவர்கள் தினமும் அன்று அன்றைய செய்திகளின் அடிப்படையில் வித்தியாசமாக ஏதாவது எழுதினால் நன்றாக இருக்கும்.

சில வேளைகளில் எதிர்காலத்தில் இந்த முயற்சியில் நான் ஈடுபடுவேன். நன்றி!

  • தொடங்கியவர்

புதிய டைகர் வானொலி 123» 32

Sivaji Relesed only here...

யாராவது டைகர் வானொலி உரிமையாளர்கள் இதற்கு விளக்கம் தரமுடியுமா?

நாளை உண்மையான பட உரிமையாளர்கள் உங்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்தால் அதை உங்களால் எதிர்கொள்ள முடியுமா?

எத்தனை கோடிகள் செலவளித்து இந்தப்படத்தை இணையத்தில் வெளிவிடுவதற்கான காப்புரிமையை பெற்றுள்ளீர்கள் நீங்கள் என அறிந்து கொள்ளலாமா?

யாழ் இணையத்தில் இருந்து இதற்கான நேரடித் தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் கேட்கின்றேன்.

உங்களை சும்மா சீண்டிப் பார்ப்பதாக தவறுதலாக நினைக்க வேண்டாம். நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஒரு சிலர் மற்றவர்களின் உழைப்பில் வாழ்பவர்களைப்போல.அதாவது ஒருவர் கடினமாக தயாரித்த கட்டுரையை தானே உருவாக்கியமாதிரி பிரதிபலித்துக்காட்டுபவர்கள

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்களால் இந்தப் பகுதியில் குறிப்பிட்ட கருத்து மிகவும் ஆக்கபூர்வமானது.

செய்திகளை..சற்று ஆய்வாக அல்லது எங்க கருத்தாக மாற்றி எழுதினால் யாழ்ததளத்திற்கும் அழகாக இருக்கும், வாசகர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பையும் கொடுக்கலாம்.

உங்கள் சிந்தனைக்கு எனது பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.