Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

37 ஆண்டுகளுக்கு முன் அன்னப்பறவை ஒன்றை மீட்ட நபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

37 ஆண்டுகளுக்கு முன் அன்னப்பறவை ஒன்றை மீட்ட நபர்: இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்!

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் மிர்சான் என்பவர், 37 ஆண்டுகளுக்கு முன் காயம்பட்டுக் கிடந்த அன்னப்பறவை ஒன்றை மீட்டுக் கொண்டுவந்தார். அதை அப்படியே விட்டுவிட்டால்,  நரிகள் கொன்றுவிடக்கூடும் என்பதால், தனது வீட்டுக்குக் கொண்டு வந்து, அதன் முறிந்த இறக்கைகளுக்கு சிகிச்சையளித்தார். சிகிச்சைக்குப் பின் அந்த அன்னப்பறவை குணம் அடைந்தாலும், அது அவரை விட்டுச் செல்லவில்லை. அதற்குக் கரிப் என்று பெயரிட்டுத்  தானே வளர்க்க ஆரம்பித்தார். அந்த அன்னப்பறவையை மீட்டு 37 ஆண்டுகள் ஆன நிலையிலும், அது அவரை விட்டுப் பிரியவில்லை. பொதுவாக அன்னப்பறவைகள் பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகள் வரைதான் உயிர்வாழும். பாதுகாத்து வைத்தாலும், அதிகபட்சம் 30 ஆண்டுகள்வரைதான் அவை வாழும். ஆனால், கரிப் காப்பாற்றப்பட்டு 37 ஆண்டுகள் ஆகிவிட்டது,  ஆக  அது ஒரு அபூர்வ அன்னப்பறவை!  தனது பண்ணையில் வேலை செய்யும்போது, அவருடனேயே இருக்கிறது. சொல்லப்போனால், மனைவியை இழந்த மிர்சான்  மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும்போதும் அவருடனேயே நடந்துசெல்லும் கரிப்பை இன்னமும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் மக்கள். பறந்து செல்ல வாய்ப்பு கிடைத்தும் செல்லாமல், தன்னுடனேயே இருக்கும் கரிப்பைத் தன் சொந்த மகளாகவே பார்க்கிறார் மிர்சான்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

நன்றியுள்ள அன்னம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இணைப்புக்கு நன்றி பாஞ்ச்.

வெள்ளை அன்னம் என்று உண்மையிலேயே இக்காலத்தில் இல்லை என்று யாரோ சொல்லக் கேட்ட ஞாபகம். 

இத் தகவலைப் படிக்கும் போது அவற்றை நேரில் பார்க்கவேணும் என்ற ஆவல் பிறக்கிறது.

இங்கு கறுப்பு அன்னங்களைப் பார்த்துள்ளேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மல்லிகை வாசம் said:

வெள்ளை அன்னம் என்று உண்மையிலேயே இக்காலத்தில் இல்லை என்று யாரோ சொல்லக் கேட்ட ஞாபகம். 

இத் தகவலைப் படிக்கும் போது அவற்றை நேரில் பார்க்கவேணும் என்ற ஆவல் பிறக்கிறது.

இங்கு கறுப்பு அன்னங்களைப் பார்த்துள்ளேன். 

ஒருமுறை துருக்கி போய்வந்தால் பார்த்துவிடலாம். எனது மகனும் மருமகளும் விடுமுறை களிக்க சில வருடங்களுக்கு முன்பாக அங்கு சென்றுவந்தார்கள். அந்நாட்டு மக்களுடன் பழகியபோது, சொந்தங்களைச் சந்தித்தது போன்ற அனுபவம் ஏற்பட்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

போன பிறப்பில் தம்பதியினராய் இருந்திருப்பினம் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, ரதி said:

போன பிறப்பில் தம்பதியினராய் இருந்திருப்பினம் 😂

ஓம் தங்கச்சி எனக்கும் உந்த பொறி தட்டினது. முற்பிறவி ஒண்டு இருக்கெல்லே...😃

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

ஓம் தங்கச்சி எனக்கும் உந்த பொறி தட்டினது. முற்பிறவி ஒண்டு இருக்கெல்லே...😃

அன்னமும், மிர்சானும் இடைக்கிடையாவது கடி பட்ட ஆதாரங்களை இணைத்தால்...நானும் மறுபிறவியை நம்புவன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, புங்கையூரன் said:

அன்னமும், மிர்சானும் இடைக்கிடையாவது கடி பட்ட ஆதாரங்களை இணைத்தால்...நானும் மறுபிறவியை நம்புவன்!

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

என்னையா இது படத்திலையே ஆதாரம் தெரியேல்லையே....?

அன்னம்  ஏதோ ஆத்திரத்திலை செட்டையை உயர்த்தி கொக்கரிச்சுக்கொண்டு போனாலும் சிங்கன் எதுவுமே நடக்காத மாதிரி எவ்வளவு கூலாய் நடந்து போறார். 😎

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

என்னையா இது படத்திலையே ஆதாரம் தெரியேல்லையே....?

அன்னம்  ஏதோ ஆத்திரத்திலை செட்டையை உயர்த்தி கொக்கரிச்சுக்கொண்டு போனாலும் சிங்கன் எதுவுமே நடக்காத மாதிரி எவ்வளவு கூலாய் நடந்து போறார். 😎

இத்தால் தெரிய  வருவது என்னவென்றால்.....போன பிறவியில், மிர்சான் கணவனாகவும், அன்னப் பறவை மனைவியாகவும் இருந்திருக்கிறார்கள்.....!

59 minutes ago, குமாரசாமி said:

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

என்னையா இது படத்திலையே ஆதாரம் தெரியேல்லையே....?

அன்னம்  ஏதோ ஆத்திரத்திலை செட்டையை உயர்த்தி கொக்கரிச்சுக்கொண்டு போனாலும் சிங்கன் எதுவுமே நடக்காத மாதிரி எவ்வளவு கூலாய் நடந்து போறார். 😎

ஹாஹா... அவரது நடையும் அன்னநடையாத் தான் தெரியுது. 😀

3 minutes ago, புங்கையூரன் said:

இத்தால் தெரிய  வருவது என்னவென்றால்.....போன பிறவியில், மிர்சான் கணவனாகவும், அன்னப் பறவை மனைவியாகவும் இருந்திருக்கிறார்கள்.....!

கவிஞர்கள் பலரும் புகழ்ந்து பாடிய அன்னத்துடன் வாழ்க்கை நடத்தவும் ஒரு குடுப்பினை வேணுமெல்லோ புங்கை அண்ணை! 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மல்லிகை வாசம் said:

ஆகா அருமை மல்லிகை வாசம் அவர்களே! 

அன்னமே வந்து ஆடிப் பாடினால் எப்படி இருக்கும்....? இதோ👇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஓம் தங்கச்சி எனக்கும் உந்த பொறி தட்டினது. முற்பிறவி ஒண்டு இருக்கெல்லே...😃

இருக்கிறது சாமியோவ்.... அன்னம் தூது சென்ற நள தமயந்தி கதை படித்தால் முற்பிறவியையும் அறியலாம், படித்தவர்க்குச் சனி தோசமும் வராதாம். 

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால்,  குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.
 
தன் மனைவி ஒருஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து  உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.
 
சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்ன பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான்.  ஒருநாள் அன்னப்பற வையைக் கண்டான்.
 
நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக  தூது சென்று வருகிறேன்” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.
 
இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி  வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற  குழந்தைகள் பிறந்தனர்.
 
தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். அதே  நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.
ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி,  அவனைப் பிடித்து விட்டார்.
 
இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும்  துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தை களை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.
 
பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டி ல் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றி யது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது  ஆசை கொண்டு விரட்டி னான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து  வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
 
தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோ டன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினா ன். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு  இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிது பன்னனின் தேரோட்டி யாக வேலை செய்தான். அவன் அங்கிருப்ப தை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க  தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தா ள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.
 
அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து  தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.
 
திருநள்ளாறு தலத்தை அடைந்த போது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை  படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.
1 hour ago, Paanch said:

நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக  தூது சென்று வருகிறேன்” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இக்கதையைப் படிக்கும் போது பள்ளிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தில் உள்ள நளவெண்பா பாடல்களை வகுப்பில் கற்ற இனிய ஞாபகங்கள் நினைவில் வருகின்றன. இன்றைய காதலர் தினத்துக்குப் பொருத்தமானதாக இந்தத் திரி மாறியது அருமை! 😍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.