Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவரின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை திரட்டுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தீவிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 20-06-2007 13:35 மணி தமிழீழம் [மயூரன்]

தேசியத் தலைவரின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை திரட்டுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தீவிரம்

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை இந்திய புலனாய்வு பிரிவு தீவிர அக்கறை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது

மும்பாயை சேர்ந்த இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படைப் பிரிவினை சார்ள்ஸ் அன்ரனியே வழி நடத்துவதாகவும் அவர் விமானப்பயிற்ச்சி உடப்பட நவீன தாக்குதல் உத்திகள் பலவற்றை இஸ்ரேலிய உளவு அமைப்பான மோசட் மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்

தமிழீழ தேசியத் தலைவரின் புதல்வர் கொண்டுள்ள போரியல் திறன்கள் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம் என்பதால் அவர் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்

விடுதலைப் புலிகளிடம் 7 விமானங்களும் பயிற்றப்பட்ட 9 விமானிகளும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளிடம் உள்ள விமானங்கள் யுத்த களங்களில் தாக்குதல் நடத்தும் திறன் மிக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட்ரா சக்கை அட்ரா சக்கை அப்படி போடு அரிவாளை!!! இவையள் தாங்கள் பயப்பட்டதுபோதாதென்று இப்ப இஷ்ரேலையும் கூட வம்புக்கு இழுக்கீனம்.

அது சரி எதுக்காக இப்படி பயப்பிடீனமோ தெரியல!!!

அய்யோ அய்யோ (சும்மா நகைச்சுவைக்கு மட்டும் தான் :P :blink: :P )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை இந்திய புலனாய்வு பிரிவு தீவிர அக்கறை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது

ஏன்?இந்திய விமானப்படையினர் தமிழீழ தேசிய த் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் சார்ள்ஸ் அன்ரனி அவர்களிடம் விமான போரியல் திறன்கள் பற்றி கற்றுக்கொள்வதற்காகவா? :P :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா முதலில் தகப்பனை முழுமையாய் புரிந்து கொள்ளவேண்டும்

உண்மையில் அவரை இந்தியா புரிந்து கொண்டால்

அவரின் மகன் மட்டுமல்ல

எந்தத்தமிழனையும் பார்த்து இந்தியா பயப்படவேண்டிய அவசியமில்லை.

ஆனால் இந்தியா நடைமுறையையோ அல்லது அனுபவங்களையோ கொண்டு தனது அரசை வகுக்காமல் தனது நலனை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு தனது அரசுக்கொள்கைகளை வகுப்பதால்

வகுத்துக்கொண்டிருப்பதால்

வகுக்கப்போகுமாக இருந்தால்

தலைவருக்கு மட்டுமல்ல

தலைவரின் பிள்ளைக்கு மட்டுமல்ல

ஒவ்வொரு தமிழனுக்கும் பயப்பட்டே ஆக வேண்டும்.

இதுதான் நாம் என்றும் மதிக்கும் இந்தியாவின் சாபக்கேடு.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குகதாசன் ஐயா அவர்களே,

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

இந்தியா ஏன் இப்படி வேடமிட்டு நாடகமாடுகின்றது? 'புலிகளைப் பயங்கரவாதம்' என முத்திரை குத்த ஏன் இப்படி அலைகின்றது?!!

இந்தியா தன் தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக்கொண்டிருக்க

ஒவ்வொரு தமிழனுக்கும் பயப்பட்டே ஆக வேண்டும்.

இதுதான் நாம் என்றும் மதிக்கும் இந்தியாவின் சாபக்கேடு.....

வெறும் தமிழன் என்று கூறிதீர்கள் ஈழத்தமிழன் அல்லது கூறுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Charles under Indian intelligence scanner

http://www.mid-day.com/news/city/2007/june/159598.htm

அடங்கி நடக்க மறுப்பதால்தான் இவையாவும்

அற்பத்தனமான புத்தி

தேசியத் தலைவரின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை திரட்டுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தீவிரம்..

ஏன் நேருவின் பெண் வாரிசு யாருக்காவது சார்ள்ஸ் அன்ரனியை கலியாணம் முடித்து வைக்கப் போறீனமோ?

இந்திய புலனாய்வுத்துறை தாம் செய்த படுகொலைகளை மறந்துவிட்டு ஏதோ கற்பனை உலகில் பறந்துகொண்டு இருக்கின்றது...

கடுகு போன இடம் ஆராய்வார்... பூசணிக்காய் மறைந்தவிதம் தெரியாது.... தூ! :angry:

ஹி ஹ்ஹீ

த்லவர் பிரபாகரனை பிடிக்க முடியல அதுதன் எங்கட மகனை பிடிக்கபோயினம் போல.எங்கட பேரெபிள்ளையின்ட பூட்டன்ட தலையில இருக்ககுறா முடியகூட அவர்களாலஎடுக்க முடியாது. இது பூட்டடன் ட பூட்டன் கதையாகப்போது

www.tamil.2.ag

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நினைப்புத் தான் பாருங்கோ! அமெரிக்க சிஐஏ அல்லது பிரிட்டனின் எம் ஐ எண்டு. இன்னும் தகவலுக்கு நம்பியிருக்கிறது எலும்புத்துண்டுக்கலையிற ஒட்டுக் குழு நாய்களையும் பெண் பொறுக்கி ராமையும் தான். இவைக்கு சாள்சைப் பற்றிப் புலனாய்வு வேற கேக்குது! :rolleyes:

தமிழீழம் என்பதை நசுக்குவதற்கு இந்தியா தலைகீழாக நிற்கின்றது. என்ன செய்தும் தமது உறுதியான நோக்கில் களம் தளம்பாமல் நடைபோட்டுக் கொண்டிருப்பதால் இவர்கள் கையைப் பிசைந்து கொண்டு எதையாவது தேடத்தான் செய்வார்கள். அவர்களிடமும் கவனமாகத்தானிருக்க வேண்டும். சகுனிகளின் வழித்தோன்றல்கள்.

தலைவரின் மகன் குறித்து அக்கறை கொள்கின்றார்களோ இல்லயோ எதிர்காலத்தில் புலிகளின் விமானப்படையால் தங்களுக்கு பாதகமாக அமையலாம் என்று ஒரு புரளியை கிளப்பி விடுவதில் குறியாய் இருக்கின்றார்கள். மூன்று தடவைகள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தி விட்டார்கள் ஒரு சிங்கள பொதுமகன் காயம் கூடப்படவில்லை. மும்பாயில் இருந்து கொண்டு ஏனைய்யா நீங்கள் கவலைப்படுகிறீங்கள்? நீங்கள் செய்யும் நயவஞ்சகங்களால் தான் உங்களுக்கு மன பிராந்தி ஏற்படுகின்றதே தவிர புலிகளின் விமானப்படையால் இல்லை. எனவே நீதியாய் நீங்கள் நடந்து கொண்டால் உங்களுக்கு எந்த வித குழப்பமும் வர மாட்டாது. ஆகவே தன்னுடைய வயிற்று வலிக்கு அடுத்தவன் வயிற்றை சோதிப்பதும் அடுத்தவனுக்கு மருந்து கொடுப்பதையும் விட்டு உங்கள் மேல் அக்கறைப்பட்டால் நீங்களும் குணமாவீர்கள் அடுத்தவனும் பிரச்சனையில்லாமல் இருப்பான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.