Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்று குறித்த தாயாரை கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில், அவர் குழந்தையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் சகோதரன் குழந்தையை துன்புறுத்தப்படுவதை காணொலிப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்தே குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/8-மாதங்கள்-நிரம்பிய-குழந்/

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையை தாக்கிய தாயார் கைது: விரைந்து சென்று குழந்தையை மீட்ட பொலிஸார் 

யாழ்ப்பாணம்  மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் பொலிஸாரில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

155990909_4249804465048979_7197763398244

கைதாகிய 23 வயதுடைய பெண், திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், வாடகைக்கு வீடு எடுத்து மணியந்தோட்டத்தில் வசிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

156228937_176571234043162_66482739689016

 இந்நிலையில், அவர் வசிக்கும் வீட்டுக்கு இன்று காலை சென்ற நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் குழந்தையை மீட்டுள்ளதுடன் தாயாரையும் கைது செய்துள்ளனர்.||155858530_3964423263600665_7612521461250

விசாரணைகளை பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

156406542_3872137159567589_6643659077706

கணவர் குவைத்தில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில், அவர் பிள்ளையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

IMG-7065.jpg

இதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொளியாக பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG-7066.jpg

IMG-7093.jpg

IMG-7101.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

தாய்க்கு உளவியல் நெருக்கடிகள்/கோளாறுகள் உள்ளனவோ என்னவோ. மகப்பேற்றின் பின் பெண்களுக்கு உளவியல் நெருக்கடிகள்/நோய்கள் வருவது வழமை. தாய் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டால் காரணம் தெரியவரலாம். மகப்பேற்றின் பின் சிறிது காலத்தில் தற்கொலை செய்தவர்களும் உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தாய் அடிப்பதை தம்பிக் காரன் வீடியோ எடுத்து அவள் கணவனுக்கு அனுப்பியாவது காசு  கேட்க்கும் எண்ணம் போலும்.    பாவம் குழந்தை 
பெற்ற குழந்தையைக் காப்பாற்ற தெரியாவிடடாள்   ஏன் குழந்தை பேறு?  
உலகம் ரொம்பக் கெட்டுப்போச்சு  அதனால்   தான் இந்த அழிவும் கேடுகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தாய், சேய் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலையாக்க உத்தரவு!

யாழ்ப்பாணம் – மணியந்தோட்டத்தில் 8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி மனநிலை மற்றும் பிற மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது! – யாழில் சம்பவம் (Video உள்ளே)

அத்துடன், குழந்தையின் உடல்நிலை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையைப் பெறுவதற்கு வசதியாக இருவரையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்குமாறும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாய், சேய் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலையாக்க உத்தரவு! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

தாய் அடிப்பதை தம்பிக் காரன் வீடியோ எடுத்து அவள் கணவனுக்கு அனுப்பியாவது காசு  கேட்க்கும் எண்ணம் போலும்.    பாவம் குழந்தை 
பெற்ற குழந்தையைக் காப்பாற்ற தெரியாவிடடாள்   ஏன் குழந்தை பேறு?  
உலகம் ரொம்பக் கெட்டுப்போச்சு  அதனால்   தான் இந்த அழிவும் கேடுகளும்.

தாய்க்கு தேவை சிறை அல்ல. post natal depression காண சிகிச்சை. 

இலங்கையில் இது புரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

தாய்க்கு தேவை சிறை அல்ல. post natal depression காண சிகிச்சை. 

இலங்கையில் இது புரியாது. 

தாய்க்கு சரி 

இதை கூர்ந்து கவனித்து படம் பிடித்த தம்பியை?? 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

அந்த பிள்ளை கதறி அழுகின்றது, ஒரு கையால் சின்னபிள்ளையை தூக்கினால் பிள்ளையின் கை கழட்டுவிடும், தாய்க்கு மனநிலை சரியில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.