Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துபாயில் நிர்வாணமாக படம் எடுத்து வெளியிட்டதாக 11 இளம் பெண்கள் உள்பட 12 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மணி நேரங்களுக்கு முன்னர்
துபாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

துபாயில் பொது வெளியில் நிர்வாண படப்பிடிப்பு நடத்தியதற்காக பெண்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழு, பால்கனியில் நிர்வாணமாக நின்றபடி படம் எடுத்தது, கடந்த சனிக்கிழமை இணையத்தில் வெளியான ஒரு காணொளியில் தெரிந்தது.

இந்த நிர்வாணப் படப்பிடிப்பு பற்றி அறிந்த அதிகாரிகள், அப்பெண்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 11 பெண்களும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என உக்ரைன் நாட்டின் துணைத் தூதரகம் பிபிசியிடம் கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் என ரஷ்ய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில், பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பது தண்டனைக்குரிய குற்றம். இதற்கு 6 மாத காலம் வரை சிறை தண்டணையும், 5,000 திராம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமீரகத்தில் இருக்கும் பல சட்டங்களும் ஷரியா விதிகளை அடிப்படையாகக் கொண்டவை.

இதற்கு முன்பும், விடுமுறைக்கு வந்த வெளிநாட்டவர்கள், பொதுவெளியில் தங்கள் அன்பை உடல் ரீதியில் வெளிப்படுத்தியதற்கு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போது பால்கனியில் இருந்தபடி நிர்வாணப் படம் பிடித்த சம்பவம் துபாயின் மெரினா மாவட்டத்தில் நடந்துள்ளது.

கைதான 11 பெண்களையும் இன்று (06.04.2021 செவ்வாய்கிழமை) சந்தித்துப் பேச இருப்பதாக உக்ரைன் துணைத் தூதரகம் கூறியுள்ளது.

துபாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த படப்பிடிப்பை ஏற்பாடு செய்த ஒரு ரஷ்யரும் கைது செய்யப்பட்டிருப்பதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ரியா செய்தி முகமை கூறியுள்ளது. அவர் 18 மாத கால சிறை வாசத்தை எதிர்கொள்கிறார் எனவும் அம்முகமை குறிப்பிட்டுள்ளது.

ஆபாசப் படங்களை வெளியிடுவதோ அல்லது பொது வெளியில் நன்னடத்தைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் எதையாவது பதிவிடுவதோ சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கத்தக்க குற்றங்கள் என துபாய் காவலர்கள் எச்சரித்துள்ளனர்.

"அது போன்ற ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கைகள் அமீரக சமூகத்தின் மதிப்பையும், நெறிமுறைகளையும் பிரதிபலிக்காது" என காவலர்கள் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருபவர்கள் அல்லது அந்நாட்டில் வாழ்பவர்கள், அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இதில் சுற்றுலா பயணிகளும் அடக்கம். இதற்கு முன்பும் இப்படி சில வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு, ஒரு பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெண்மணி, தான் திருமணம் செய்து கொள்ளாத ஒருவரோடு, இரு தரப்பு சம்மதத்துடன் உடலுறவு கொண்டதற்காக, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்பெண்ணோடு உடலுறவு கொண்ட ஆண், தன்னை பயமுறுத்தும் விதத்தில் குறுஞ்செய்திகளை அனுப்புகிறார் என அதிகாரிகளிடம் புகாரளித்த போதுதான் இந்த விவகாரம் வெளியே தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

துபாயில் நிர்வாணமாக படம் எடுத்து வெளியிட்டதாக 11 இளம் பெண்கள் உள்பட 12 பேர் கைது - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் போட்டா தான் இந்த செய்தியை நம்புவமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

படங்கள் போட்டா தான் இந்த செய்தியை நம்புவமாக்கும்.

நிழலி, ஆதாரம் இல்லாத செய்தி என்று தூக்கப்போறாரோ  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நிழலி, ஆதாரம் இல்லாத செய்தி என்று தூக்கப்போறாரோ  :grin:

படத்துடன் போட்டிருந்தா முதல் ஆளா நின்றிருப்பார்.

3 minutes ago, ஈழப்பிரியன் said:

படத்துடன் போட்டிருந்தா முதல் ஆளா நின்றிருப்பார்.

நேற்று அதன் வீடியோவையே பார்த்து விட்டேன். வட்ஸப் பில் நேற்று பரவிக் கொண்டு இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நேற்று அதன் வீடியோவையே பார்த்து விட்டேன். வட்ஸப் பில் நேற்று பரவிக் கொண்டு இருந்தது.

உண்மையா பொய்யா என்று எங்களுக்கும் தெரிய வேணுமில்ல.
தனிமடலில் அனுப்பினால் சரி பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நேற்று அதன் வீடியோவையே பார்த்து விட்டேன். வட்ஸப் பில் நேற்று பரவிக் கொண்டு இருந்தது.

ஆ.... அப்படியா.... தனி மடலில லிங்கை அனுப்பினாத்தான் நம்புவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த செய்தி இஞ்சை SUPER RTL  எண்ட ரிவி சனலிலை நியூசாய் போனது. நல்ல கிளியராய் HD குவாலிட்டியிலை காட்டினவங்கள்.கிளியர் எண்டால் அந்தமாதிரி கிளியர்.

How Dubai became an unexpected wellness hub | London Evening Standard |  Evening Standard

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

உந்த செய்தி இஞ்சை SUPER RTL  எண்ட ரிவி சனலிலை நியூசாய் போனது. நல்ல கிளியராய் HD குவாலிட்டியிலை காட்டினவங்கள்.கிளியர் எண்டால் அந்தமாதிரி கிளியர்.

How Dubai became an unexpected wellness hub | London Evening Standard |  Evening Standard

ச்சாய்... நேற்றைக்கெண்டு, RTL நியூஸ் பார்க்க மறந்து போனன். 🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, தமிழ் சிறி said:

ச்சாய்... நேற்றைக்கெண்டு, RTL நியூஸ் பார்க்க மறந்து போனன். 🤪

நேற்றைக்கெண்டு பாத்து விசர் வேலை பாத்துட்டியள் சிறித்தம்பி..😷 அந்த குளோசப் இருக்கெல்லே குளோசப் சொல்லி வேலையில்லை. என்ன கமராவை வைச்சு எடுத்தாங்கள் எண்டு தெரியேல்லை....வேறை லெவல். 😂
பூங்காவனம் மாதிரியே இருந்திச்சு.😻

Pin on Animación

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நேற்றைக்கெண்டு பாத்து விசர் வேலை பாத்துட்டியள் சிறித்தம்பி..😷 அந்த குளோசப் இருக்கெல்லே குளோசப் சொல்லி வேலையில்லை. என்ன கமராவை வைச்சு எடுத்தாங்கள் எண்டு தெரியேல்லை....வேறை லெவல். 😂
பூங்காவனம் மாதிரியே இருந்திச்சு.😻

Pin on Animación

 

6 hours ago, குமாரசாமி said:

 

How Dubai became an unexpected wellness hub | London Evening Standard |  Evening Standard

குமாரசாமி அண்ணை.... அந்தக் கமெரா  ரஷ்ய நாட்டு தயாரிப்பாகத் தான்... இருக்கும்.  
உக்ரைன் நாட்டுக்காரர், உப்பிடியான படங்களை, 
படுத்திருந்து படம் எடுப்பதில்...சரியான கெட்டிக்காரர்.  😂
அதுதான்... அந்தப் படங்களை, பூங்காவனம் மாதிரி எடுத்து இருக்கிறார்கள். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துபாயில் நிர்வாண படப்பிடிப்பு: 12 யுக்ரேனிய பெண்களை நாடு கடத்திய அரசாங்கம்

துபாயில் நிர்வாண படப்பிடிப்பில் ஈடுபட்ட 12 யுக்ரேனிய பெண்களை அவர்களின் தாயகத்துக்கு நாடு கடத்தியிருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு.

துபாயின் மெரினா பகுதியில் நிர்வாண ஷூட்டிங்கில் ஈடுபட்ட இந்த பெண்கள், தங்களின் படப்பிடிப்பு காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிறகு அவை வைரலாகின. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண்கள் 12 பேரையும் தங்களின் கட்டுப்பாட்டில் விசாரித்தது துபாய் காவல்துறை.

பொது இடத்தில் ஆபாச செயல்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. துபாயில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவர்களுக்கு உள்ளூர் பண மதிப்பில் ஐந்தாயிரம் திராமுக்கு அபராதமும் ஆறு மாதங்கள்வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இந்திய பண மதிப்பில் ஐந்தாயிரம் திராம்கள் என்பது ஒரு லட்சம் ரூபாயாகும். உலக அளவில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை வரவேற்கும் வகையில் சிறந்த விருந்தோம்பல் அனுபவத்தை தருகிறது துபாய் அரசு. ஆனால், அதே சமயம் பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமையை பாதுகாக்க அங்கு கடுமையான விதிகள் அமலில் உள்ளன.

அதன்படி ஆபாச செயல்களில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடிமக்கள் இல்லையென்றாலும் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டின் சட்டம் வழிவகுக்கிறது.

துபாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்ச்சைக்குள்ளான அந்த சம்பவத்தில் 12 பெண்களும் ஒரு ஒளிப்பதிவாளரும் இருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

அவர்களின் செயல், துபாயின் மதிப்பு மற்றும் பாரம்பரியத்துக்கு உகந்ததாக இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக துபாயில் உள்ள யுக்ரேனிய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட 12 பெண்களிடமும் பேசியிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து அந்த 12 பெண்களும் நாடு கடத்தப்பட்ட தகவலை துபாய் ஊடகத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இது முதல் சம்பவம் அல்ல

துபாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சட்டங்கள் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்துவது, ஓரின சேர்க்கை உறவுகள் போன்ற செயல்பாடுகளுக்காக சிலருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆபாசமான செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துபாய் காவல்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. பொது அமைதிக்கு அத்தகைய செயல்பாடுகள் பாதகமாகலாம் என்றும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் காவல்துறை கூறியது.

கடந்த காலங்களில், துபாயில் விடுமுறைக்காக வந்த சுற்றுலா பயணிகள் சிலரின் சர்ச்சை செயல்பாடுகள் காரணமாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள். அதில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த பெண், உள்ளூர் ஆடவருடன் விருப்ப உறவை வைத்துக் கொண்ட போதும் அவருக்கு துபாய் அரசு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

துபாயில் நிர்வாண படப்பிடிப்பு: 12 யுக்ரேனிய பெண்களை நாடு கடத்திய அரசாங்கம் - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.