Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே நாளில் இந்தியாவில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் இந்தியாவில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. 

இந்நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.

அதன்படி, ஒரே நாளில்  3,14,835  பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

india_covid_19.jpg

இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் ஆரம்பமானதிலிருந்து இந்தியா ஒரே நாளில் பதிவு செய்த மிக உயர்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

மேலும் இந்தியாவில் மகாராஷ்டிராவில் 568  பேரும், டெல்லியில் 249 பேருமாக ஒரே நாளில்  2,104 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் புதிய கொரோனா தொற்றாளர்களுடன் 22,91,428 பேர்  சிகிச்சை பெற்றுவருவதுடன்,  1,34,54,880 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/104189

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உலகின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்

மக்கள் மீது அக்கறை அற்ற அரசு தான்தோன்றி தனமாக நடந்து இந்த அல்ல நிலையில் அவர்களையும் நாட்டையும் விட்டுள்ளது 😡

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

டெல்லியில்.. இந்த நிலைமை என்றால்,
மற்றைய  வட மாநிலங்களின்  நிலைமை, 
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். 

தேர்தல், கும்ப மேளா என்று... கொண்டாட்டங்கள்  வைத்ததால் வந்த வினை.

இதற்கு... முழுப் பொறுப்பும், அரசியல்வாதிகளையே  சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

டெல்லியில்.. இந்த நிலைமை என்றால்,
மற்றைய  வட மாநிலங்களின்  நிலைமை, 
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். 

தேர்தல், கும்ப மேளா என்று... கொண்டாட்டங்கள்  வைத்ததால் வந்த வினை.

இதற்கு... முழுப் பொறுப்பும், அரசியல்வாதிகளையே  சேரும்.

பிரேசிலை விட நிலமை மோசமடையும் என்றே தெரிகிறது

ஐரோப்பா போன்ற தேசங்களில் உதவிகள் மற்றும் கொடுப்பனவுகள் போன்றவற்றால் மக்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளவில்லை 

ஆனால் இந்திய மக்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

டெல்லியில்.. இந்த நிலைமை என்றால்,
மற்றைய  வட மாநிலங்களின்  நிலைமை, 
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். 

தேர்தல், கும்ப மேளா என்று... கொண்டாட்டங்கள்  வைத்ததால் வந்த வினை.

இதற்கு... முழுப் பொறுப்பும், அரசியல்வாதிகளையே  சேரும்.

ஐ.பி.எல் ஐயும் திறந்து விட்டிருந்தால்.. அமோகமாக போய் இருக்கும் தோழர்..

  • கருத்துக்கள உறவுகள்

150 ரூபாவுக்கு போட்ட ஊசி திடீரென 450 ரூபா என அறிவித்துள்ளனர்.

திடீரென 3 மடங்கு விலை கூட்டினால் மக்கள் என்ன செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

பிரேசிலை விட நிலமை மோசமடையும் என்றே தெரிகிறது

ஐரோப்பா போன்ற தேசங்களில் உதவிகள் மற்றும் கொடுப்பனவுகள் போன்றவற்றால் மக்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளவில்லை 

ஆனால் இந்திய மக்கள்??

விசுகு, உலக நாடுகளை... கொரோனாவால், இந்தியா முந்தி விட்டதாக... 
ஒரு, செய்தியில் நேற்று பார்த்தேன்.  

நீங்கள் இணைத்த, காணொளியை பார்த்த பின்...
அந்த அழுகை சத்தங்கள்... மீண்டும் கண் முன்னே வந்து போகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

இந்தியா உலகின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்

இங்கிலாந்து இந்திய விமானங்களுக்கு தடை அறிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஐ.பி.எல் ஐயும் திறந்து விட்டிருந்தால்.. அமோகமாக போய் இருக்கும் தோழர்..

ஏதோ... கடவுள் காப்பாற்றினார் என்று தான்... சொல்ல வேண்டும், தோழர்.

யாழ். நயினா தீவில்,  
சிங்களவர்களின்  "வெசாக்" கொண்டாட்டம்  திட்டமிட்டபடி நடத்தப்  போகின்றார்கள்.
தமிழர்  பகுதியில்... இந்த நேரம், சிங்களவர்  வைக்கும்  கொண்டாட்டம்,
பல தமிழர்களை... கொரோனா மூலம், மீண்டும்  கொல்லப் பார்க்கிறார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஏதோ... கடவுள் காப்பாற்றினார் என்று தான்... சொல்ல வேண்டும், தோழர்.

யாழ். நயினா தீவில்,  
சிங்களவர்களின்  "வெசாக்" கொண்டாட்டம்  திட்டமிட்டபடி நடத்தப்  போகின்றார்கள்.
தமிழர்  பகுதியில்... இந்த நேரம், சிங்களவர்  வைக்கும்  கொண்டாட்டம்,
பல தமிழர்களை... கொரோனா மூலம், மீண்டும்  கொல்லப் பார்க்கிறார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.

மேதினக் கொண்டாட்டம் கொண்டாட விட்டால் அதே கதி தான்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

150 ரூபாவுக்கு போட்ட ஊசி திடீரென 450 ரூபா என அறிவித்துள்ளனர்.

திடீரென 3 மடங்கு விலை கூட்டினால் மக்கள் என்ன செய்வார்கள்.

May be an image of 5 people and text that says 'ஒரே நாடு ஒரே தடுப்பூசி ஆனால் 3 விலைகள் Apollo மத்திய அரசுக்கு ரூ. 150 மாநில அரசுகளுக்கு ரூ.400 மருத்துவ மனைகளுக்கு ரூ.600 கொல்லை நோயிலும் கொள்ளை அடிக்கும் கொலைகாரர்கள்'

May be an image of 2 people and text that says 'NEWS TAMIL #BIGNEWS WS 2021 BREAKING நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்! "தூத்துக்குடி ஸ்டெர்லைட் VEDANTA LIMITED ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்துகொள்ள அனுமதிக்கலாம்" www.newe7tamil.lveo தமா ADIL @ammavasa போட்ட பிளான் சக்சஸ்! இதற்கு தானே ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று சொன்னீர்கள்! ஆக்ஸிஜன் தட்டுபாட்டை உருவாக்கியதே ஸ்டர்லைட் மாதிரி கம்பெனிக்காகத்தான்!'

May be an image of text that says 'நீங்க வச்சுருந்த ஆக்ஸிஜனை, உங்களை கேட்காம வேற மாநிலத்துக்கு அனுப்பிட்டாங்கனு நியூஸ் பார்த்தேன் ப்ரோ! ரொம்ப வேதனையா இருந்தது. செயல்லேட் உழவு ஸ்டெர்லைட் உமான தமிழ்நாடு நாங்க வேணா ஆக்ஸிஜன் தயாரிச்சு தரட்டுமா?'

ஈழப்பிரியன்....
அரசியல் வாதிகளுக்கும், அவர்களுடன் ஒத்துப் போகும் நிறுவனங்களுக்கும்...  
"கொரோனா"  ஒரு வியாபாரம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

மேதினக் கொண்டாட்டம் கொண்டாட விட்டால் அதே கதி தான்.

மே மாதம் வரை சில நிகழ்வுகளுக்கு தடை போட்டு இருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மே மாதம் வரை சில நிகழ்வுகளுக்கு தடை போட்டு இருக்கிறார்கள் 

முனிவர் ஜீ...
நயினாதீவில்... வெசாக் கொண்டாட்டம், 
"தேசிய நிகழ்வு"  என்பதால்....  திட்டம்  இட்டபடி, நடக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ...
நயினாதீவில்... வெசாக் கொண்டாட்டம், 
"தேசிய நிகழ்வு"  என்பதால்....  திட்டம்  இட்டபடி, நடக்குமாம்.

நடந்த  பிறகு  நாட்டைமுடக்குவானுகள்  அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நடந்த  பிறகு  நாட்டைமுடக்குவானுகள்  அவ்வளவுதான்

நாட்டை... முடக்கினாலும், 
இறந்த உயிர்களுக்கும்,  அவர்களின் பிரிவால்...
ஏழ்மை நிலைக்கு சென்றவர்களை.... மீட்டு எடுக்க, 
இவர்களிடம் ஒரு வழியும் இல்லையே...

ஆக.. மிஞ்சினால், சிங்கள  இராணுவத்தில் சேரச்  சொல்வார்கள்.

இது... எல்லாம்,  
கொரோனவை வைத்து, திட்டம் இட்டபடி நடக்கும், ஒரு இன அழிப்பு. 
நாம் தான்... அவதானமாக இருக்க வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தொடந்து மூன்றாவது நாளாகவும் 3 இலட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில்  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

இன்று தொடர்ந்து 3 ஆவது  நாளாக 3 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பதிவாகியுள்ளது.

சரியாக 3 இலட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,264 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை, ஒரே நாளில் 2 இலட்சத்து 19 ஆயிரத்து 838 பேர் குணம் அடைந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை  1 கோடியே 66 இலட்சத்து 10 ஆயிரத்து 481 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள்.

தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 38 இலட்சத்து 67 ஆயிரத்து 997- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்து 89 ஆயிரத்து 544- ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25 இலட்சத்து 52 ஆயிரத்து 940 ஆக உள்ளது. 
 
https://www.virakesari.lk/article/104312

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.