Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் நீதி மன்றத்தின் துணைத்தலைவர் பதவி விலகினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர் பதவி விலகினார்

https://fb.watch/5jKqBcZlzX/

மக்கள் நீதி மையத்தின் மேல் மட்ட நிர்வாகிகள்  அனைவரும்  பதவி விலகினர்

https://fb.watch/5jKHt2BF0S/

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

`கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து டாக்டர் மகேந்திரன், பொன்ராஜ், சந்தோஷ்பாபு, மவுரியா, சி.கே.குமரவேல் என முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகியுள்ளனர். ` இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை' என விலகல் கடிதத்தில் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். என்ன நடந்தது?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு அவருக்கு 36,855 வாக்குகள் கிடைத்தன.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மகேந்திரன், `எங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு வாக்குகளும் நேர்மையானவை என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தேர்தலோடு முடிந்துவிடுவதில்லை நமது அரசியல். மக்கள் நலனுக்காகவும் தமிழக நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவது தொடர்பாக இன்று மாலை அக்கட்சியின் தலைவர் கமலிடம் மகேந்திரன் நேரில் கடிதம் கொடுத்துள்ளார். அவரது விலகல் கடிதம் ஏற்கப்பட்டது தொடர்பாகவும் ம.நீ.ம தலைமைக் கழகத்தில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இது தொடர்பாக, மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் ஆகிய நான் கனத்த இதயத்துடனும் தெளிவான சிந்தனையுடனும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது, நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து உடனடியாக இன்றிலிருந்து விலகுகிறேன்.

இப்படிப்பட்ட ஒரு கடினமான முடிவினை நான் எடுப்பதற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிப்பது எனது முக்கியமான கடமையும் பொறுப்பும் ஆகும். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக் கவனமாக எடுத்திருக்கிறேன்.

கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும் தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் அவர்கள் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறி விடுவார் என்கின்ற நம்பிக்கையும் இல்லை.

எனக்குத் தெரிந்த தலைவர் கமல்ஹாசன், கொள்கைக்காகவும் எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும் அனைத்து நல்ல தலைமைப் பண்புகளைக் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகிறேன்.

தலைவர் கமல்ஹாசனால் நான் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாகமும் உத்வேகமும்தான் என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில் இரண்டு முக்கியமான தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையைக் கொடுத்தது. அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்' என தெரிவித்துள்ளார்.

காரணங்களை பட்டியலிட்ட மகேந்திரன்

கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம்

பட மூலாதாரம்,MAKKAL NEETHI MAIYAM

இதே கடிதத்தின் இணைப்பில், விலகுவதற்கான காரணங்களை வகைப்படுத்தியுள்ளார். அதில், ` 2021 சட்டமன்ற தேர்தலில் நமது தலைவரை முதலமைச்சராக்கி விட வேண்டும் என்கின்ற பெரிய கனவுடன் பயணிக்கத் தொடங்கினோம். நமது அக்கனவிற்கு துணையாக இருக்கும் என்ற நோக்கத்தில் ஐபேக் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் 2019 ஏப்ரலில் கையொப்பமாகி 2019 செப்டம்பர் மாதம் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

அதன்பிறகு `சங்கையா சொல்யூசன்ஸ்' என்ற நிறுவனத்தை தேர்தல் ஆலோசனை நிறுவனமாக உருவாக்கினர். அவர்கள் கட்சியின் பிரசாரத்துக்கு பயனுள்ள வகையில் எந்தப் பணிகளையும் சரிவர செய்யாமல் கட்சிக்குப் பெரும் செலவுகளை மட்டுமே உயர்த்திக் கொண்டிருந்தனர் என்பது எனக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் தெரிந்தது.

இது குறித்து தலைவரிடம் தெரிவித்தபோது, `சட்டமன்ற தேர்தல் வரையில் மட்டுமே அவர்களின் பங்களிப்பு இருக்கும்' என்றார்.

அந்நிறுவனம் கட்சிக்காக முன்னெடுத்த எந்தவிதச் செயல்பாடும் கட்சியினரின் பிரசார ரீதியான வளர்ச்சிக்கு உதவவில்லை. கூட்டணியில் குழப்பம், தொகுதிப் பங்கீட்டில் குழப்பம், வேட்பாளர் தேர்வில் குழப்பம், கட்சியின் தேர்தல் அறிக்கையில் குழப்பம் என்று தொடர் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்கையா சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் கையில் தலைவர் தொகுதி மற்றும் இதர தேர்தல் பணிகளை ஒப்படைத்தால் இங்கும் நமது வெற்றி வாய்ப்பு குறைவாகிவிடும் என்பதை தலைவரிடம் எடுத்துச் சொன்னேன். ஆனால், என் கருத்து கேட்கப்படவில்லை.

கட்சியின் இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. நேர்மையும் திறமையும் விசுவாசமும் நிறைந்த பலர் இந்தக் கட்சியில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவனாக நான் இந்தக் கட்சியில் இந்தக் கட்சியில் இருந்து நேர்மையுடன் வெளியே செல்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மகேந்திரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` விலகல் கடிதத்தை தலைவரிடம் நேரில் கொடுத்துவிட்டேன். அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நான் விலகிவிட்டேன்" என்றார்.

இதையடுத்து, சங்கையா சொல்யூசன்ஸ் நிறுவனம் மீது மகேந்திரன் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ம.நீ.ம செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``அவர் கட்சியில் இருந்து விலகிவிட்டார். அதற்கான காரணமாக சங்கையா சொல்யூசன்ஸ் மீது புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் விவாதித்து விட்டு உங்களிடம் விரிவாகப் பேசுகிறேன்" என்றார்.

`கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவரே, என்னாச்சு ஆண்டவரே?

எல்லோரையுமே, கிளப்பி விட்டுவிட்டு, இவரு போயி, தனது தொகுதியில் மட்டுமே சுத்தி, சுத்தி வந்தால், காசு செலவழிச்சு தேர்தலில் நிக்கிறவனுக்கு கடுப்படிக்கும் தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஆண்டவரே, என்னாச்சு ஆண்டவரே?

எல்லோரையுமே, கிளப்பி விட்டுவிட்டு, இவரு போயி, தனது தொகுதியில் மட்டுமே சுத்தி, சுத்தி வந்தால், காசு செலவழிச்சு தேர்தலில் நிக்கிறவனுக்கு கடுப்படிக்கும் தானே.

வாங்கோ வாங்கோ

வந்து மக்கள் முன் நின்று வேலை செய்யுங்கோ 

அதன் பின்னர் தலைவர் ஆவது பற்றி யோசிக்கலாம் என்பது என்ன என்று இப்பதான் புரிந்து இருக்கும் ???

  • கருத்துக்கள உறவுகள்

கமல் கட்சிக்குள் கடும் மோதல் என்ன நடக்கிறது?

2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை துவங்கினார் கமல்ஹாசன். ஆரம்பத்தில் ஊடக ஆதரவு ஓரளவு கணிசமான கூட்டம் என தன் பக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு மூன்று சதவிகிதத்திற்கு மேல் வாக்கும் பெற்றார். சில தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றார்.
அதனையொட்டி இந்த தேர்தலில் மக்கள் நீதிமன்றம் தனியாக ஒரு கூட்டணியை உருவாக்கி களம் கண்டது. பெரும்பலான தொகுதிகளில் தோல்வியும் அடைந்தது. கோவை தெற்கு தொகுதியில் கமல் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து இன்று கமல் தலைமையில் சென்னையில் உயர் மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பெரும் மோதல் வெடித்துள்ளது. பெரும்பாலனவர்கள் மகேந்திரன் மீதே குற்றம் சுமத்த அவைகளை பரிசீலித்த கமல் மகேந்திரனை சில கேள்விகள் எழுப்பியுள்ளார்.

இது மோதலாக வெடித்துள்ளது. இதனிடையே அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.இதனிடையே ஆலோசனைக்கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே வெளியேறிய மகேந்திரன் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,மிகப்பெரிய தோல்விக்கு பிறகும் கமலின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை.கமல் இனி மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை.கமல்ஹாசன் நல்ல தலைமை பண்பு கொண்டவராக மறுபடியும் செயல்பட வேண்டும்.தொண்டர்களின் உற்சாகமும், உத்வேகமும் தான் தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையை எனக்கு கொடுத்தது.அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த நன்றி’ என்றார்.

ஆனால் அதற்கு காட்டமாக பதிலளித்துள்ள கமல் முதன் முதலாக களையெடுக்கப்பட வேண்டிய களையே மகேந்திரன் தான் என்று கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தனர் என்றும் துரோகிகளைக் களையெடுக்கும் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் மகேரந்தரன் என்றும் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்படச் செயல்பட்டோம்.களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம்.

‘துரோகிகளைக் களையெடுங்கள்’ என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர். மகேந்திரன். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ளத் துணிந்தார். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை.நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர் தன்னுடைய திறமையின்மையும், நேர்மையின்மையையும். தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார். தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு தன்னைத்தானே நீக்கிக்கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்.

இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.ன்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை, தோல்வியின் போது கூடாரத்தைப் பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை” என்று தெரிவித்துள்ளார். வழக்கமாக கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சிக்குள் முரண்பாடுகள் உருவாகும் போது இத்தனை காட்டமாக அறிக்கைகள் வெளியிடுவதில்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் நடந்த வெளிப்படையான மோதலின் விளைவாகவே இப்படியான அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன
 
https://inioru.com/கமல்-கட்சிக்குள்-கடும்-ம/

9 minutes ago, கிருபன் said:

கொஞ்சம் கூட  அரசியல் நாகரீகமற்ற ஒரு அறிக்கை. தன் படத்தின் வில்லன்களை பார்த்து பேசுகின்றமாதிரி இருக்கு.
வானதிக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கொஞ்சம் கூட  அரசியல் நாகரீகமற்ற ஒரு அறிக்கை. தன் படத்தின் வில்லன்களை பார்த்து பேசுகின்றமாதிரி இருக்கு.
வானதிக்கு நன்றி.

அவரு, யாரு.... பிராமணர் சமூகம்....

எப்போதுமே சுஜநலம் மட்டுமே பார்த்துக்கொள்வார். இவர் பிரச்சாரத்துக்கு வருவார் என்று நம்பி, டெபாசிட் கட்டி பார்த்துக் கொண்டிருக்க, இவர், பிளானிலை போய், கோவையில் இறங்கி அங்கேயே இருந்து கொண்டார், வரவே இல்லை.

இவரது வலது கையாக இருந்த ஸ்ரீபிரியா, கூட, தனியே ஆட்டோவில் பிரச்சாரம் செய்தார். நாலுபேர் மட்டுமே சுத்தி நின்றார்கள். ஒரு குடிகாரர் வந்து கையை கொடு என்ற, அவர் கொரோனவை சொல்லி தவிர்க்க, அப்ப உனக்கு வோட்டு இல்லை போ என்று போனார்.

அப்பவே நினைத்தேன்... வேலைக்கு ஆகாது என்று.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

ஆண்டவரே, என்னாச்சு ஆண்டவரே?

எல்லோரையுமே, கிளப்பி விட்டுவிட்டு, இவரு போயி, தனது தொகுதியில் மட்டுமே சுத்தி, சுத்தி வந்தால், காசு செலவழிச்சு தேர்தலில் நிக்கிறவனுக்கு கடுப்படிக்கும் தானே.

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.