Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 ஆண்டுகள் வீட்டில் தன் அறையில் காதல் மனைவியை ஒளித்து வைத்த ரியல் `கில்லி' ரஹ்மான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

``பத்து ஆண்டுகள் நான் ஓர் அறைக்குள் மட்டுமே வாழ்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. என் கணவர், அவரது உணவில் பாதியை எனக்குத் தந்தார்'' என்கிறார் வீட்டில் யாருக்கும் தெரியாமல் 10 ஆண்டுகள் ஓர் அறையில் வசித்த ஸஜிதா.

`கில்லி' திரைப்படத்தில் பெற்றோருக்குத் தெரியாமல் கதாநாயகி திரிஷாவை விஜய் தனது வீட்டில் தங்க வைப்பது போன்ற காட்சி வரும். அதுபோல, காதலித்த பெண்ணை 10 ஆண்டுகள் தனது வீட்டின் ஓர் அறையில் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்துள்ளார் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர். வீட்டில் தாய் தந்தை உட்பட ஐந்து பேர் வசித்தும், 10 ஆண்டுகளாக அதே வீட்டின் ஓர் அறையில் தன் மகனுடன் ஒரு பெண் வாழ்ந்தது குறித்து அவர்கள் அறியாமல் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஹ்மான் (34). எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் சுமார் 100 மீட்டருக்குள் அமைந்துள்ளது ஸஜிதாவின் வீடு. ரஹ்மானும் ஸஜிதாவும் இரண்டு ஆண்டுகள் காதலித்துள்ளனர். அது மற்ற யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ஸஜிதாவை திடீரெனக் காணவில்லை என்று செய்தி. ஆனால், ரஹ்மான் வீட்டில்தான் ஸஜிதா இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இதையடுத்து ஸஜிதாவைக் காணவில்லை என அவரின் தந்தை நென்மாற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தியதில், ஸஜிதா குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் வழக்கமான கேஸ் போன்று இதுவும் கிடப்பில் போடப்பட்டது.

தனி அறையில் ஸஜிதா வசித்த ஓட்டு வீடு
 
தனி அறையில் ஸஜிதா வசித்த ஓட்டு வீடு

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி ரஹ்மான் திடீரெனக் காணாமல் போனார். அவரைக் காணவில்லை என நென்மாற காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவரையும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ரஹ்மானின் அண்ணன் பஷீர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் டிப்பர் லாரி ஓட்டிச்சென்றபோது, நென்மாற பகுதியில் ரஹ்மான் பைக்கில் செல்வதைப் பார்த்திருக்கிறார். சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ரஹ்மானின் பைக்கை மடக்கிப் பிடித்த பஷீர், அவரிடம் வீட்டைவிட்டு வெளியேறியது குறித்துக் கேட்டுள்ளார்.

 

அதற்கு அவர், தனக்குத் திருமணம் ஆகிவிட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாகத் தங்களது வீட்டில்தான் தனது அறையில் தன் காதல் மனைவியைத் தங்க வைத்திருந்ததாகவும், தற்போது ஒரு வாடகை வீட்டில் இருவரும் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரஹ்மானின் மனைவி யார் என அனைவரும் விசாரிக்க, அவர் 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஸஜிதா எனத் தெரியவந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்களது பழைய ஓட்டு வீட்டில், அட்டாச்டு பாத்ரூம்கூட இல்லாத ஓர் அறையில், தன் மனைவியை, தன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்குத் தெரியாமல் ரஹ்மான் 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த அதிர்ச்சியான உண்மையும் வெளிவந்தது. இது போலீஸ் மற்றும் பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஸஜிதா
 
ஸஜிதா

ஸஜிதாவை 10 ஆண்டுகள் வீட்டினருக்குத் தெரியாமல் அறையில் தங்க வைத்திருந்தது குறித்து ரஹ்மான் கூறுகையில், ``இரண்டு வருடங்களாக ஸஜிதாவை காதலித்தேன். திடீரென ஒரு நாள் அவள் வீட்டைவிட்டு வெளியேறி வந்துவிட்டாள். இனி என்னால் வீட்டில் இருக்க முடியாது எனச் சொல்லிவிட்டாள். அவளது வீட்டினர் சம்மதித்தாலும் என் வீட்டினர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் அவளைத் தனியாகத் தங்க வைக்க முடிவு செய்தேன். எனக்குக் கொஞ்சம் பணம் வர வேண்டி இருந்தது. அப்பணம் வந்ததும் நாங்கள் இருவரும் வீட்டைவிட்டுத் தனிக்குடித்தனம் செல்லலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், பணம் வந்த உடன், வீட்டில் உள்ளவர்கள் அதை வாங்கிக்கொண்டார்கள். அதனால், தனி வீடு எடுத்துத் தங்க என்ன செய்வது எனத் தெரியவில்லை. எனவே, என் வீட்டில், என் அறையிலேயே நான் ஸஜிதாவை மறைத்து வைக்க வேண்டிய நிலை வந்தது. 10 வருடங்கள் எப்படிப் போனது என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

 

நான் தினமும் என் உணவை தட்டில் வைத்து வாங்கிக்கொண்டு வந்து, அறையில் வைத்துதான் சாப்பிடுவேன். ஸஜிதாவும் நானும் அதைப் பகிர்ந்து சாப்பிடுவோம். நான் வேலைக்குச் செல்லும்போது, என் மதிய உணவை பார்சல் கட்டி அறையில் ஸஜிதாவுக்குக் கொடுத்துவிடுவேன். வேலைக்குச் செல்லும் இடத்தில் மதியம் நான் ஹோட்டலில் சாப்பிடுவேன். என் மனைவி என்னுடன் இருந்தது பற்றி கடைசிவரை என் வீட்டினர் அறியவே இல்லை. பத்து ஆண்டுகளாக என் மனைவிக்கு எந்த நோயும் வந்ததில்லை. சின்னக் காய்ச்சல் போன்றவை வந்தால் பாரசிட்டமால் போன்றவை வாங்கிக்கொடுத்தால் சரியாகிவிடும்.

ரஹ்மான்
 
ரஹ்மான்

எலெக்ட்ரீஷியன் வேலையில் எனக்கு அதீத ஆர்வம் உண்டு. அதனால் அறையின் கதவை யாராவது தொட்டால் ஷாக் அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளேன் என்று பொய் கூறினேன். `அதுல கரன்ட் லீக்கேஜ் இருக்கு, யாரும் தொடாதீங்க...' என்று வீட்டினரிடம் சொல்லி வைத்திருந்தேன். மேலும், ஸ்விட்சை போட்டால் கதவு திறக்கும் வகையில் அறைக் கதவை வடிவமைத்திருந்த நான், அப்படிதான் திறந்து அறைக்குள் செல்வேன். ஸஜிதா வீட்டில் இருப்பதால் பகல் வேலைக்கு மட்டும்தான் நான் செல்வேன். இரவு வேறு எங்கும் தங்குவது இல்லை. அறையில் பாத்ரூம் இல்லை என்பதால் நள்ளிரவு எல்லோரும் தூங்கிய பிறகு, ஸஜிதாவை அறையில் இருந்து வெளியே அழைத்து வருவேன்" என்றார்.

 

இதுகுறித்து ஸஜிதா கூறுகையில், ``பத்து ஆண்டுகள் நான் ஓர் அறையில் வாழ்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. என் கணவர் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார். அவரது உணவில் பாதியை எனக்குத் தந்தார். என் அறையில் டிவி வைத்திருந்தார். வெளியில் சத்தம் கேட்கக் கூடாது என்பதால் ஹெட்செட் வைத்துக்கொண்டு டிவி பார்ப்பேன். அவர் வேலைக்குச் சென்ற பின்னர் டிவிதான் எனக்குத் துணை.

அறையில் நான் இருக்கும்போது ரஹ்மானின் பெற்றோர் அவரிடம் பேசுவது எனக்குக் கேட்கும். எங்கள் அறைக்கு யாரும் வராத வகையில் வித்தியாசமாக அவர் நடந்துகொண்ட சில முறைகளால், அவரை மனநலம் பாதித்தவர் என எப்போதும் திட்டுவார்கள். அவருக்கு யாரும் சப்போர்ட் செய்ய மாட்டார்கள். சில சமயம் அவர்கள் ரூம் கதவைத் திறக்க முயற்சி செய்தார்கள், நான் உள்ளே இருந்து கதவை இறுக்கப் பூட்டி வைத்துவிடுவேன். கதவில் ஏதோ கோளாறு என்று அவர்கள் சென்றுவிடுவார்கள்.

ஸஜிதா - ரஹ்மான்
 
ஸஜிதா - ரஹ்மான்

பிறகுதான், வாடகைக்கு வீடு எடுத்துச் சென்றுவிட்டோம். இப்போது என் பெற்றோர் சமாதானம் ஆகிவிட்டார்கள். அக்கா, தங்கை அனைவரும் அழைத்திருந்தார்கள். பழையவற்றை நினைத்து சங்கடப்பட வேண்டாம் இனி சந்தோஷமாக இரு எனக் கூறினார்கள்" என்றார்.

`எங்களால வீட்டுல ஒரு பிஸ்கட் பாக்கெட்டைகூட ஒளிச்சுவெச்சு சாப்பிட முடியலயேடா... நல்லாயிருங்க மக்கா...' என்ற 90'ஸ் கிட்ஸின் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கும் கேட்கிறதா?!

10 ஆண்டுகள் வீட்டில் தன் அறையில் காதல் மனைவியை ஒளித்துவைத்த ரியல் `கில்லி' ரஹ்மான்! | kerala man rahman hid lover in his room for 10 years - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

Vijay Prakash Raj Climax Scene | Ghilli | Vijay, Trisha | Tamil Film |  Tamil Matinee on Make a GIF

அடப்பாவி .......ஒரு ரகசியத்தை நாலு நாளைக்குமேல் மனசுக்குள்ளேயே பூட்டி வைக்க முடியவில்லை.....யாரடா சாமி இவன்.......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

10 வருடமாய் ஒரு சின்ன சத்தமும் வர வில்லை எனடால் ரோட்டல் வேஸ்ற்.😀

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

10 வருடமாய் ஒரு சின்ன சத்தமும் வர வில்லை எனடால் ரோட்டல் வேஸ்ற்.😀

ஏதோ பெரிசா எதிர்பார்த்து இருக்கிறயள் அவன் சத்தம் இல்லாமல் 10 வருசமா ஒளிச்சு வச்சிருக்கான் தல😎

  • கருத்துக்கள உறவுகள்

பல ரில்லியன் டாலர்கள் பெறுமானம் வாய்ந்த உலக வர்த்தக மைய  அமெரிக்க இரட்டை கோபுரத்தை அமெரிக்காவே தகர்த்தது என்று எம் அன்பு மார்க்கத்தினர் இன்றுவரை கூறுவதும், அதை நியாயபடுத்த நம்மிடையே சிலர் இருப்பதுவும் போலதான் இதுவெல்லாம்.

அந்த இந்து பெண்ணை லவ் ஜிகாத் எனும் பேரில் மத மாற்றம் பண்ணி விட்டார்கள் என்று பெண்ணின் பெற்றோர்கள் கூறுகிறார்களாம்...

ஆனால் அப்படியில்லை எங்கள் வீட்டுக்குள் ஒரு அறையினுள் பத்து வருசமா அந்த பெண் இருந்தது எங்களுக்கே தெரியாது என்று அந்த ரஹ்மானின் குடும்பத்தினர் சொல்கிறர்களாம்,

மத மாற்றம் பண்ணப்படாத ஒரு பெண்ணுக்கு எப்படி  சாஜிசா என்று பெயர் மாறியது?

இவர்கள்தான் அவர்கள் ..

Screenshot-4.png

எப்படி பத்து வருசமா ஒரு அறைக்குள் ஒளிந்திருந்த பெண்ணின் தலையை மறைத்து இஸ்லாமிய வழக்கத்தில் எகிறி குதிச்சு ஒரு துணி எழும்பியது?

எல்லாமே அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

பல ரில்லியன் டாலர்கள் பெறுமானம் வாய்ந்த உலக வர்த்தக மைய  அமெரிக்க இரட்டை கோபுரத்தை அமெரிக்காவே தகர்த்தது

என்று எம் அன்பு மார்க்கத்தினர் இன்றுவரை கூறுவதும், அதை நியாயபடுத்த நம்மிடையே சிலர் இருப்பதுவும் போலதான் இதுவெல்லாம்.

 

பல ரில்லியன் டாலர்கள் பெறுமானம் வாய்ந்த உலக வர்த்தக மைய  அமெரிக்க இரட்டை கோபுரத்தை அமெரிக்காவே தகர்த்தது

அவையெல்லாம் அரசாங்க சொத்து இல்லை எல்லாம் தனியார் சொத்துக்கள் 
அவையெதும் அழிந்து போகாது கை மாறும் 
ஒரே இழப்பு கட்டிடம்தான் .... அதுக்கு சுவிஸ் நாட்டு காப்புறுதி 
சிறிய எழுத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு தாம் பொறுப்பு இல்லை என்று 
போட்டிருந்ததால் தப்பித்தார்கள் ....அல்லது அதுவும் வந்திருக்கும். 

ஒரு நாளைக்கு பல பில்லியன்கள் எனும் ரீதியில் 
ஒவ்வாரு நாளும் பங்கு சந்தையில் பல ட்ரில்லியன்கள் கை  மாறுகிறது.

கடந்த மாத இறுதியில்  பிற்கொயின் மூன்று நாளில் $580 பில்லியன்களை இழந்தது 
அவையொன்றும் காணமல் போவதில்லை .....சிலர் துடைத்து வழித்துக்கொண்டு போவதுதான். 

 

World Trade Center 7 building did not collapse due to fire: Report

https://canada.constructconnect.com/dcn/news/others/2020/05/world-trade-center-7-building-did-not-collapse-due-to-fire-report

Bitcoin (BTC USD) Cryptocurrency Price Plunges Below $33,000, Key Level:  Chart - Bloomberg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.