Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நட்பும் காதலும்

Featured Replies

நட்பும் காதலும்

அது ஓர் அழகிய காலைப்பொழுது. படுக்கையை விட்டெழுந்த நிஷா நேரத்தைப் பார்த்து திடுக்கிட்டாள்.

"8 மணி ஆகிவிட்டதே 9 மணிக்கு வகுப்பு ஆரம்பம். அதுவும் புதிய விரிவுரையாளர் வருவதாக சொன்னார்களே"

என முணுமுணுத்தபடி குளியலறை நோக்கி விரைகின்றாள். இதமான குளியலை முடித்து தன்னை தயார்ப்படுத்தி

தெருமுனைக்கு வந்தபோது 8 40 ஆகிவிட்டது. வீதியில் ஒரு முச்சக்கரவண்டியும் இல்லாதிருப்பதைக் கண்ட நிஷாவோ சினம்கொண்ட முகத்தோடு விரைந்து நடந்தே சென்றாள். எவ்வளவோ வேகமாக நடந்தும் அவளால் 9 10 க்கு தான் கல்லூரியை அடைய முடிந்தது..

பெருமூச்சு விட்டு அழகிய பிறைபோன்ற நெற்றியில் துளிர்த்த வியர்வைத்துளிகளை அற்புதமான திருக்கரங்களால் ஒற்றி துடைத்துவிட்டு விரிவுரையாளர்கள்; தங்கும் அறையை நோக்கியபோது தான்; அவனைக் கண்டாள். அவனின் வசீகரத்தோற்றம் கண்டு தன்னிலை மறந்து தன் சினத்தை மறந்து தான் வகுப்புக்கு தாமதமாகி விட்டது என்பதையும் மறந்து அவனைப் பார்த்து அவனின் அழகில் மெய்மறந்து புன்னகைத்தாள். அவனின் "ர்நடடழ" என்ற சத்தத்தைக் கேட்ட நிஷா அவன் தன் முன்னால் நிற்பதைக்

கண்டதும் இயல்புநிலைக்கு மாறி தன் வகுப்பறையை நோக்கி விரைந்தாள். வெட்கத்தோடு வகுப்பறையை அடைந்தவளுக்கு மீண்டும் சினம்கொள்ளத்தக்கவாறு அவளது வழமையான இருப்பிடத்தில் இன்னோர் மாணவி உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் தனது தாமதத்தை எண்ணி நொந்தவளாக கடைசி இருக்கையில் தனியாக அமர்ந்தாள்.

சற்று நேரத்தின் பின்னர் விரிவுரையாளர் வருவதாக அறிந்து மாணவ மாணவியர்கள் அனைவரும் எதிர்பார்த்திருக்க அவனோ பவ்வியமாக உள்நுழைந்தான். எல்லோரையும் பார்த்து ஓர் மென்மையான புன்னகையை வீசிவிட்டு எல்லோருக்கும் காலைவணக்கம் சொல்லி எல்லோர் பெயர்களையும் அடுக்காக கேட்டு

வந்த விரிவுரையாளர். ஆம் அவரின் பெயர் முகுந்த். இலங்கையில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவிலேயே வளர்ந்து படித்து பட்டம் பெற்ர ஒரு இளம் விரிவுரையாளர். பெயருக்கேற்றால் போலவே அழகாக எல்லோர் நெஞ்சையும் கொள்ளை கொள்ளக்கூடிய அழகான முகமும் பெண்மை கவரக்கூடிய மென்மையாக சிரிப்பும் திடமான தோள்களையும் கொண்ட முகுந்த் ரொம்ப ரொம்ப எல்லோர் மனதிலும் நீங்காது குடியமரக்கூடியவன்.

எல்லோர் பெயர்களையும் வரிசையாக கேட்டு வந்த முகுநத்; நிஷாவின் கனவைக் கலைக்காது ஏனையோரின் பெயர்களைக் கேட்டு முடித்தபின் "மிஸ் என்ன நடக்குது" என சொடுக்கு போட்டு கேட்ட போதுதான் நிஷா கனவுலகில் இருந்து வகுப்பில் கவனத்தைச் செலுத்தி

"Sorry Sir" என்று சொன்னாள். சொன்னதும் "Nice Name" என முகுந்த்; சொல்ல எல்லோரும் கொல் என சிரிக்க நிஷாவோ ஆத்திரத்தில் முகம் சிவந்தாள்.

தன்னைப் பற்றிய சிறு அறிமுகத்தின் பின்னர் முகுந்த்; வர்த்தக தொடர்பாடல் பாடத்தை மிக துல்லியமாக விளக்கி கற்பித்தான். தொடர்பாடல் என்றால் என்ன தொடர்பு எப்படி எங்கே ஏன் உருவாவது என்பதை எல்லாம் 2 மணித்தியாலங்களில் விளக்கி முடித்து அன்றைய வகுப்பை முடித்தான்.

மாணவர்கள் மத்தியில் முகுநத்; பற்றிய பேச்சுக்களும் மாணவியர் நெஞ்சில் அவனின் நினைப்பும் ஏக்கங்களும் நிறைந்திருந்த வேளை அழகான மென்மையானபதுமையான நிஷாவுக்கோ தன் வழமையான முன்னிருக்கையில் அமர்ந்திருந்த சக மாணவி மீது கோவம்கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினாள்.

வீதியில் இறங்கி முச்சக்கரவண்டியில் தன் வீடு நோக்கி செல்லும் நிஷாவோ மீண்டும் முகுநத்; சேரின் வகுப்பு அடுத்த கிழமையோ என்று

சோகத்தோடு கூடிய பெருமூச்சுடன் வீட்டை அடைந்தவள் தன் அழகை கண்ணாடியில் பார்த்து ஒருதடவை ரசித்தாள் சிரித்தாள். ஏன் இவனைக் கண்டதும்

எனக்குள் ஏன் இவ்வளவு சிலிர்ப்பு என்பதை அடிக்கடி நினைத்தாள். நினைத்தபடியே தனது உயிர்த்தோழி கணணியை இயக்கினாள். மூன்று வருடங்களாக

முகப் பரிச்சயமின்றி பேச்சுமின்றி விசைப்பலகை மூலம் ரைப் செய்து அவளோடு நல்லாக அரட்டை அடிக்கிற துஸ்யந் என்பவனோடு வழமை போல

அரட்டை அடிக்க நினைத்தவளுக்கு ஏமாற்றம் அவனது மின் அஞ்சல் கண்டு. அவனோ ஒரு கிழமைக்கு அரட்டைக்கு வரமாட்டேன் என்பதுதான்.

அப்படியே அவனுக்கு ஒரு பதிலை அனுப்பிவிட்டு கணணியை அணைத்துவிட்டு தன்னுடைய அலுவல்களில் மூழ்கினாள்.

அவளிருக்கும் தொடர்மாடியில் அவளின் வீட்டுக்கு எதிர்பகுதிக்குள் யாரோ குடிவருவதாக தன் தந்தை சொன்னதைக் கூட செவியில் எடுக்காத

அளவுக்கு முகுந்த்; இன் நினைப்பில் மெய் மறந்து இருந்தாள். அடுத்த கிழமையும் கல்லூரிக்கு சென்று வகுப்பை முடித்து வீடு நோக்கி மாலை வேளையை

ரசித்தபடி நடந்து சென்றாள். என்ன ஆச்சரியம் முகுந்த்; தன் பின்னால் வருவதைக் கண்ட நிஷா வேகமாக நடக்க தொடங்கினாள். அவனும் அவள் அடைந்த

காம்பவுண்டுக்குள்ளே நுழைந்தான். அப்போதுதான் அவள் தெரிந்துகொண்டாள் இவன் தான் புதிதாக குடிவந்தவன் என்று. ரொம்ப சந்தோசமும் ரொம்ப ரொம்ப அதிர்ச்சியையும் கொண்டவளாக இதை தன் நண்பன் துஸ்யந்துக்கு சொல்லுவதற்காக கணணிக்குள் புகுந்தாள்.

இவளின் வருகைக்காக காத்திருந்தவன் போல வழமையான வணக்கத்தோடு இருவரும் அரட்டையடித்தார்கள். இருப்பினும் அவளின் பதில்கள் அவனை என்னமோ

நினைக்க செய்து கவி வடிவில் கேள்விகளை ஆரம்பிக்கின்றான்.

"நண்பியே நிஷா

நன்கறிவேன் உன்னை

ஏன் இந்த கோபம்

நான் அதை அறியலாமா?

அவளும் கவிப் புலமையில் சளைத்தவள் இல்லை போல

"கண்டேன் ஓர் காளையை

கல்லூரி வளாகத்தில்

பறித்தான் என் இதயத்தை

பார்த்த அந்த நொடியிலேயே"

என பதிலளித்து அவனும் தான் குடியிருக்கும் தொடர்மாடியில்தான் குடியிருக்கின்றான் என்று அகல கண்கள் விரித்து கூறினாள்..

ஆச்சரியப்பட்ட துஸ்யந் "ஆகா என்னால் நம்பவே முடியல்லையே" என்றான்;. இதுவரையில் இந்த இளம்நட்புள்ளங்களுக்குள் எந்தவிதமான ஒளிவுமின்றி கதைப்பவர்கள் இன்றும் வழமைபோல நிஷா தனது கல்லூரியில் கடந்த இரு கிழமைகளும் நடந்த கதைகளையும் முகுந்த்; பற்றியும் சொன்னாள்.

தினமும் முகுந்த்; அவள் பார்வையில் பட்டான். இல்லையில்லை அவள் தான் முகுந்தை தன் பார்வைக்குள் விழுத்தினாள். இப்படியே இருவரும் பார்த்து பின்னர் கல்லூரி பாட சந்தேகங்களை கேட்டு கேட்டு இருவரும் ஒருவரையொருவர் புரியும் அளவுக்கு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள். இந்தப் பழக்கமே வழக்கமாகி தினமும் அவள் முகுந்த்; இடம் தன் சந்தேகங்களைக் கேட்டாள்;. அவனும் பதில் அளிக்க காத்திருப்பது போல அவளுக்கு தெளிவாக விளங்கப்படுத்தினான்.இதனால் அவன் மீதுள்ள காதல் அவளுக்கு இன்னும் அதிகரித்தது. காதலில் துடித்த நிஷாவோ தன் நண்பனான துஸ்யந்திடம்

"எப்படிச் சொல்வேன்

எப்போ சொல்வேன்

என் புனிதக் காதலை

என்னவனிடம்

எப்போ சொல்வேன்

எப்படிச் சொல்வேன்" எனக் கேட்டாள்.

ஆச்சரியப்பட்ட துஸ்யந் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்து சிலமணித்துளிகள் கண்களை மூடி ஒருவிறாடி கனவுலகிற்குச் சென்று

தன் தோழி நிஷாவுக்கு

பேதையே நிஷா

பதைபதைக்காதே

புதைக்காதே உன் காதலை

அதை அவனிடம் சொல்ல

எழுதிமுடி உன் தேர்வை

எடுத்திடு அதிக மதிப்பெண்கள்

எழுதிக் கொடு உன் காதலை

ஏற்றுக்கொள்வான் உன்னை"

எனக் கூறி அன்றைய அரட்டையை நிறைவு செய்து கணணிக்குள் இருந்து இருவரும் வெளியேறினார்கள்.

;பரீட்சை முடிந்து மதிப்பெண்களும் வெளியானது. நிஸாவோ முகுந்த் இன் பாடத்தில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று அவனின்; வாயினால்

பாராட்டுக்களை பெற்றாள். அன்று மாலை வேளை வானத்தை ரசித்துக்கொண்டிருந்த நிஷாவைக் கண்ட முகுந்த் தன் பாடத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற தன் மாணவி நிஷாவுக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும் என நினைத்து தான் வாங்கி

வைத்திருந்த அழகான காகித உறைக்குள் அடங்கிய அந்த அழகான பரிசுப்பொதியோடு அவளை நோக்கி நடந்தான். அவனின்

வருகையை எதிர்பார்க்காத நிஷா தடுமாறினாள். அவளை வாழ்த்தி அவளுக்கான பரிசைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

ஆர்வத்தோடு பிரித்த அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. "தொடர்பாடல்" என்ற தலைப்பில் அவனின் அழகான முத்து முத்துக் கையெழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் கையேட்டுப்பிரதி. அவசர அவசரமாக ஒவ்வோர் பக்கத்தையும் பிரித்தவளுக்கு வானத்தில் பறப்பது போல உணர்வு மேலிட இது நிஜமா என தோன்றியது. வெட்கத்தில் சிவந்தாள். வர்த்தக தொடர்பாடல் விரிவுரையாளனான முகுந்த் நிஷாவுக்கும் தனக்கும் இடையேயான தொடர்பாடல் பற்றியும் தொடர்பாடல் எவ்வாறு ஏற்பட்டது ஏன் ஏற்பட்டது தொடர்பாடலின் அனுகூலங்கள் தொடர்பாடலினால் ஏற்படும் பிரதிகூலங்கள் அதை நிவர்த்தி செய்யும் விதம் பற்றி இன்னும் நிறைய எழுதி காதலில் துடித்து கலங்கிய மனதோடு நின்ற நிஷாவின் மனதை சந்தோச மலர்களை மலர வைத்தான்.

அவளோ ஆனந்தத்தில் திளைத்தாள். இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் துஸ்யந்துக்கு சொல்ல நினைத்து உறவுப்பாலமான

கணணியை திறந்தாள். சந்தோசத்தில் துஸ்யந்த் என கூப்பிட்டு தன் மாலை வேளை வணக்கத்தை தெரிவித்து தனக்கு மாலை சூட்டும் மணவாளன் கிடைத்து விட்ட செய்தியையும் கூறினாள். சந்தோசத்தில் அவனும் துள்ளினான். இருவரும் நீண்ட நேரம் அளாவளாவி முடித்து விடைபெற்றனர்.

கலகல சிரிப்பில் எல்லோரையும் மயக்கும் நிஷாவின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செழித்து வளர்ந்தது. நண்பனோடும் காதலனோடும் சந்தோஷமாகவே பொழுதைக் கழித்து வஞ்சகமின்றி எல்லோரோடும் பழகும் நிஷாவோ தன் நண்பனைப் பற்றி முகுந்துக்கும் காதலைப்பற்றி துஸ்யந்துக்கும் சொல்லுவாள். தன் நண்பன் துஸ்யந் என்பவன் தான் அவள் காதலன் முகுந்த் என்பதை அறியாதவளாக.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை மறுபடியும் தொடங்கிட்டா நட்பு,காதல் என்று சரி நான் ஆறுதலா வாசித்து விட்டு கருத்து சொல்லுகிறேன்..

  • தொடங்கியவர்

பிள்ளை மறுபடியும் தொடங்கிட்டா நட்பு,காதல் என்று சரி நான் ஆறுதலா வாசித்து விட்டு கருத்து சொல்லுகிறேன்..

வாசித்துட்டு கருத்து சொல்லுங்கோ. ஆனால் பேச கூடாது . :lol:

நிலா அக்கா கதை சூப்பரா இருந்துச்சு அதிலையும் முடிவு சூப்பர்............எப்படி இப்படி எல்லாம் உங்களாள முடியுது................அப்ப நிசாவுக்கு கடைசியா நண்பணும்.............காதலும் ஒன்று என்று தெறிய வந்தாள்...............நட்பை ஏற்பாளா..........அல்லது காதலை ஏற்பாளா..........இதற்கு நீங்க நிசாவா இருந்து விடை சொல்லுங்கோ.............

நான் வரட்டா................ :P

  • தொடங்கியவர்

நிலா அக்கா கதை சூப்பரா இருந்துச்சு அதிலையும் முடிவு சூப்பர்............எப்படி இப்படி எல்லாம் உங்களாள முடியுது................அப்ப நிசாவுக்கு கடைசியா நண்பணும்.............காதலும் ஒன்று என்று தெறிய வந்தாள்...............நட்பை ஏற்பாளா..........அல்லது காதலை ஏற்பாளா..........இதற்கு நீங்க நிசாவா இருந்து விடை சொல்லுங்கோ.............நான் வரட்டா................ :P

:lol: நிலா நிஷாவாக மாறமுடியடஹு. சோ நோ கொமண்ட்ஸ். :angry: காதல் நட்பாய் மாறுமாநட்பு காதலாய் மாறுமா............" பாடலை முணுமுணுத்தபடி நிலா எஸ்கேப். ஜம்மு பாய் பாய்

Edited by வெண்ணிலா

:lol: நிலா நிஷாவாக மாறமுடியடஹு. சோ நோ கொமண்ட்ஸ். :angry: காதல் நட்பாய் மாறுமாநட்பு காதலாய் மாறுமா............" பாடலை முணுமுணுத்தபடி நிலா எஸ்கேப். ஜம்மு பாய் பாய்

நிலா என்ன் நிஷாவாக மாற முடியாது "லா" வுக்கு பதில் "ஷா" போட்டா மாறலாமே...........உது நல்லா இல்லை அது தான் பாட்டை சொன்னேன்.................சரி நிலா அக்கா சார்பில............வேற யாரும் பதில் அளிக்கலாம் ......... :P

என்னங்க ரொம்ப அநியாயமா இருக்கு? கதையென்றால் எப்படியும் எழுதுவதா? :lol:

தொடர்பாடல் விரிவுரையாளர் முகுந்திடம் கணணி இல்லையா? அவர் இண்டர்நெட்டில் அரட்டை அடிப்பதில்லையா? தனது காதலனுடன் அரட்டை அடிக்காமல் இன்னொரு முகம் தெரியாத நண்பனுடன் யாராவது பெண் இவ்வாறு இண்டர்நெட்டில் அரட்டை அடிப்பாளா? சரி அவ்வாறு அரட்டை அடித்திருந்தாள், குறிப்பிட்ட அவன் - துஸ்யந்தன் மீது ஏன் இவளுக்கு காதல் ஏற்படவில்லை? துஸ்யந்தனுடன் அவள் கொண்டிருந்தது நட்பு என்று எவ்வாறு உங்களால் உறுதியாக கூறமுடியும்? நட்பாக இருந்தால் அவள் ஏன் துஸ்யந்தன் ஒரு கிழமைக்கு அரட்டை அடிக்க வரமாட்டான் என்பதை அறிந்ததும் ஏமாற்றம் அடையவேண்டும்? இதைவிட, முகுந்தின் மீது அவளுக்கு உண்மையான காதல் இருந்திருந்தால், இப்படி துஸ்யந்துடன் தீவிரமாக அரட்டை அடிப்பதற்கு ஆர்வம் கொண்டிருக்க மாட்டாள். நல்லாத்தான் காதலை நட்புடன் போட்டு குழப்புறீங்க போங்க! :angry:

சரி அதை விடுங்க,

மனிதன் என்பவன் மனத்தினால் உருவாக்கப்பட்டவன். மனம் என்பது உணர்வுகள் சம்மந்தமானது. கடைசியில் எங்கள் உள்ளங்களில் ஏற்பட்டு நாம் பெறுகின்ற, அடைகின்ற உணர்வுகள் தானே வாழ்க்கை? நட்பின் போது ஏற்படும் உணர்வுகளையும், காதலின்போது ஏற்படும் உணர்வுகளையும் உங்களால் எவ்வாறு வித்தியாசப்படுத்த முடியும்? அவற்றை பட்டியலிட்டு இங்கு காட்ட முடியுமா? பல்வேறு உணர்வுகளின் கலவை தானே வாழ்க்கை? எவ்விதமான உணர்வுகளின் கலவை காதலையும், எவ்விதமான உணர்வுகளின் கலவை நட்பையும் வேறுபடுத்துகின்றன என்று உங்களால் சரியாக குறிப்பிடமுடியுமா?

ஆக மொத்தத்தில் நான் உங்களுக்கு கூறக்கூடிய அறிவுரை, உந்த நட்பையும், காதலையும் போட்டு உங்களை குழப்பிக் கொள்ளாதீர்கள் அல்லது உங்களை நீங்களே ஏமாற்றாதீர்கள்.இன்னும் வெட்ட வெளிச்சமாகச் சொன்னால், நீங்கள் சமுதாயத்திற்கு மிகவும் பயப்படுகின்றீர்கள். சமுதாயம் நான் இப்படி சொன்னால் ஏற்றுக்கொள்ளாது என்று நினைக்கின்றீர்கள். இதனால், எடுத்ததுக்கெல்லாம் காதலாக இருக்கும்போது கூட நட்பு என்ற கவசத்தினுள் ஒளிந்து கொள்கின்றீர்கள்.

மேலும், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது காதல் வரக்கூடாது என்ற சமுதாயம் மீது கொண்ட பயம் காரணமாக ஏற்பட்ட சிந்தனையின் காரணமாக, நீங்கள் காதலை நட்பு என்று சொல்லிக்கொள்ள முயற்சிக்கின்றீர்கள். இதைவிட, காதலிப்பவன் கலியாணம் செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனை, சமுதாயம் மீது நீங்கள் கொண்டிருக்கும் பயம் காரணமாக உங்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவேதான், எப்போதும் ஒரு காதலன் அல்லது காதலியும், பல நண்பர்களும் இருக்குமாறு உங்கள் மனதை வலுக்கட்டாயமாக தயார் செய்ய முயற்சி செய்கின்றீர்கள். இதற்காக, ஒன்றுக்கு மேற்பட்ட காதல் இயல்பாக ஏற்படும்போது அதை நட்பு என்று சொல்லி மூடிமறைக்கப் பார்க்கின்றீர்கள்.

மிகப்பெரிய ஞானிகள், யோகிகள் தான் தமது மனங்களை கட்டுப்படுத்தி மனம் எப்போதும் சலனமடையாது பாதுகாத்துக் கொள்ளக்கூடியவர்கள். உங்களைப் போன்ற சாதாரண மனிதர்களால் முடியாது(யாழில் யாரவது ஞானிகள், யோகிகள் இருக்கின்றார்களோ தெரியாது). ஒன்றுக்கு மேற்பட்டவரை காதலிப்பதில் தவறு உள்ளது என்று நான் கூறமாட்டேன். ஏனெனில், நீங்கள் சாதாரண மனிதர்கள். ஆனால், காதலிப்பவர்களிற்கு பொய் சொல்லி ஏமாற்றுவதுதான் தவறானது.

மற்றவர்களிற்கு நீங்கள் ஒரு நேர்மையானவர் அல்லது நல்லவர் என்று காண்பிப்பதற்காக சும்மா பொய்யாக ஆட்களுக்கு முன்னால் காதலை நட்பு என்று கூறி மறைப்பதில் பிரயோசனமில்லை.

நீங்கள் திட்டமிட்டு காதலிப்பதற்கு காதல் மூளையை பாவித்து அறிவுபூர்வமாக எடுக்கப்படும் முடிவு அல்ல என்பதை மனதில் வைத்து இருங்கள். அது உணர்வு பூர்வமானது. எனவே, ஞானிகள், யோகிகள் தவிர, உணர்வுகளின் உந்துதல்களால் ஏற்படும் காதல் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஏற்படுவதை அல்லது ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் மீது ஏற்படுவதை உங்களால் ஒருபோதும் தவிர்க்க முடியாது. ஆனால், நீங்கள் நேர்மையாக வாழவிரும்பினால் (சமுதாயம் எதிர்பார்ப்பதின்படி), நீங்கள் செய்யக்கூடியது அவ்வாறு காதல் ஏற்படும் பட்சத்தில் குறிப்பிட்ட அந்த இரண்டாவது, மூன்றாவது நபர்களில் இருந்து விலகிச் செல்வது அல்லது சற்று விலகி இருப்பது!

மற்றும், சூழ்நிலை, காலம், நேரம், சம்பவங்கள் எழுந்தமானமான முறையில் நடைபெறும்போது தானே எங்கள் வாழ்க்கை கொண்டு செல்லப்படுகின்றது? வாழ்க்கைப் பாதை தீர்மானிக்கபடுகின்றது? அதாவது இந்தக் கதையின்படி பார்த்தால், இண்டர்நெட் இருந்ததால் துஸ்யந்துடனும், படிக்க போனதால் முகுந்துடனும் தொடர்பு ஏற்பட்டது. இண்டர்நெட் இல்லாதிருந்திருந்தால் அல்லது வேறு இடத்திற்கு படிக்க போய் இருந்தால் அவளின் வாழ்க்கைப் பாதை வேறு விதமாக சென்றிருக்கும். அதாவது, பலருக்கு ஒரு காதல் மட்டும் வாழ்க்கையில் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கலாம். பலருக்கு வாழ்க்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட காதல் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது போகலாம். பலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட காதல் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கலாம். பலருக்கு வாழ்க்கையில் காதலிப்பதற்கே சந்தர்ப்பம் கிடைக்காது இருக்கலாம். எல்லாம் அவனவன் தலைவிதி!

குறிப்பு: இங்கு உங்கள், நீங்கள் என்று நான் குறிப்பிடுவது வெண்ணிலாவை அல்ல. இவ்வாறான தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரையும் தான்!

நன்றி! வணக்கம்! :lol:

  • தொடங்கியவர்

என்னங்க ரொம்ப அநியாயமா இருக்கு? கதையென்றால் எப்படியும் எழுதுவதா? :D

ஏனுங்க?

தொடர்பாடல் விரிவுரையாளர் முகுந்திடம் கணணி இல்லையா? அவர் இண்டர்நெட்டில் அரட்டை அடிப்பதில்லையா? தனது காதலனுடன் அரட்டை அடிக்காமல் இன்னொரு முகம் தெரியாத நண்பனுடன் யாராவது பெண் இவ்வாறு இண்டர்நெட்டில் அரட்டை அடிப்பாளா? சரி அவ்வாறு அரட்டை அடித்திருந்தாள், குறிப்பிட்ட அவன் - துஸ்யந்தன் மீது ஏன் இவளுக்கு காதல் ஏற்படவில்லை? துஸ்யந்தனுடன் அவள் கொண்டிருந்தது நட்பு என்று எவ்வாறு உங்களால் உறுதியாக கூறமுடியும்? நட்பாக இருந்தால் அவள் ஏன் துஸ்யந்தன் ஒரு கிழமைக்கு அரட்டை அடிக்க வரமாட்டான் என்பதை அறிந்ததும் ஏமாற்றம் அடையவேண்டும்? இதைவிட, முகுந்தின் மீது அவளுக்கு உண்மையான காதல் இருந்திருந்தால், இப்படி துஸ்யந்துடன் தீவிரமாக அரட்டை அடிப்பதற்கு ஆர்வம் கொண்டிருக்க மாட்டாள். நல்லாத்தான் காதலை நட்புடன் போட்டு குழப்புறீங்க போங்க! :angry:

எங்கை குழப்புறன் ஆ? ஓகே ஒருநாளைக்கு ஒரு உறுப்பினர் வரவில்லையென்றதுக்கு தேடுறீங்களே. அதேபோல தான் அவளின் அரட்டை நண்பன் அதாவது எம் எஸ் என் நண்பன் 1 கிழமைக்கு வரமாட்டான் என்ற மெயில் பார்த்து ஜஸ்ட் ஒரு ஏமாற்றம். அதாவது தினமும் கதைப்பவன் 1 கிழமைக்கு வரமாட்டேன் என சொல்லிய மெயில் பார்த்து ஒரு சின்ன ஏமாற்றம். முகம் தெரியாதோருடன் தானே இப்ப எல்லாரும் அரட்டை அடிக்கிறீங்க. இல்லையா என்ன? முகுந்த் ஐக் காணும்வரையில் அவளுக்கு காதலன் என்று யாரும் இல்லையே. நீங்கதான் என்னைக் குழப்புறீங்க போங்க :angry:

சரி அதை விடுங்க,

மனிதன் என்பவன் மனத்தினால் உருவாக்கப்பட்டவன். மனம் என்பது உணர்வுகள் சம்மந்தமானது. கடைசியில் எங்கள் உள்ளங்களில் ஏற்பட்டு நாம் பெறுகின்ற, அடைகின்ற உணர்வுகள் தானே வாழ்க்கை? நட்பின் போது ஏற்படும் உணர்வுகளையும், காதலின்போது ஏற்படும் உணர்வுகளையும் உங்களால் எவ்வாறு வித்தியாசப்படுத்த முடியும்? அவற்றை பட்டியலிட்டு இங்கு காட்ட முடியுமா? பல்வேறு உணர்வுகளின் கலவை தானே வாழ்க்கை? எவ்விதமான உணர்வுகளின் கலவை காதலையும், எவ்விதமான உணர்வுகளின் கலவை நட்பையும் வேறுபடுத்துகின்றன என்று உங்களால் சரியாக குறிப்பிடமுடியுமா?

என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியும். எனக்கு ஒரு காதலனும் இருக்கின்றான். சில நண்ப நண்பிகளும் இருக்கின்றனர். காதலருக்கும் நண்பர்களுக்கும் இடையிலான உணர்வுகள் எல்லாம் கவிதைப்பகுதியில் தோழனே திரியில் விவாதமாகவே போயிருக்கு. மேலும் சொல்ல முடியவில்லை.

ஆக மொத்தத்தில் நான் உங்களுக்கு கூறக்கூடிய அறிவுரை, உந்த நட்பையும், காதலையும் போட்டு உங்களை குழப்பிக் கொள்ளாதீர்கள் அல்லது உங்களை நீங்களே ஏமாற்றாதீர்கள்.இன்னும் வெட்ட வெளிச்சமாகச் சொன்னால், நீங்கள் சமுதாயத்திற்கு மிகவும் பயப்படுகின்றீர்கள். சமுதாயம் நான் இப்படி சொன்னால் ஏற்றுக்கொள்ளாது என்று நினைக்கின்றீர்கள். இதனால், எடுத்ததுக்கெல்லாம் காதலாக இருக்கும்போது கூட நட்பு என்ற கவசத்தினுள் ஒளிந்து கொள்கின்றீர்கள்.

:)என்ன கலைஞன் அண்ணா இப்படி சொல்லிப்புட்டீங்க. எல்லோர் மீதும் காதல் வராது. காதல் என்றால் என்ன அது எங்கே போய் முடியணும் என்று எனக்கு நல்லாகவே தெரியும். ஏனெனில் என் காதலில் நான் அதீத நம்பிக்கை வைத்திருப்பவள். அதேபோன்று நட்பும் எவ்வளவு புனிதமானது என்பது நான் நன்கறிந்த விடயமே. நான் ஒன்றும் கவசத்திற்குள் மறையவில்லை.

மேலும், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது காதல் வரக்கூடாது என்ற சமுதாயம் மீது கொண்ட பயம் காரணமாக ஏற்பட்ட சிந்தனையின் காரணமாக, நீங்கள் காதலை நட்பு என்று சொல்லிக்கொள்ள முயற்சிக்கின்றீர்கள். இதைவிட, காதலிப்பவன் கலியாணம் செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனை, சமுதாயம் மீது நீங்கள் கொண்டிருக்கும் பயம் காரணமாக உங்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவேதான், எப்போதும் ஒரு காதலன் அல்லது காதலியும், பல நண்பர்களும் இருக்குமாறு உங்கள் மனதை வலுக்கட்டாயமாக தயார் செய்ய முயற்சி செய்கின்றீர்கள். இதற்காக, ஒன்றுக்கு மேற்பட்ட காதல் இயல்பாக ஏற்படும்போது அதை நட்பு என்று சொல்லி மூடிமறைக்கப் பார்க்கின்றீர்கள்.

காதல் என்ற பூ ஒருக்கால் தான் மலரும். இதுதான் என் பொலிசி. எல்லோர் மீதும் காதல் மலர்ந்தால் அது காதல் இல்லை காமம். நீங்கள் தான் என்னமோ எல்லாம் கதைக்கிறீங்க. மொத்ததில் என்னையே குழப்புறீங்க? சமுதாயத்துக்கு ஏனுங்க பயப்பட வேணும். நான் நானாக இருக்கும் போது ஏன் யாருக்கும் பயப்படணும்?

மிகப்பெரிய ஞானிகள், யோகிகள் தான் தமது மனங்களை கட்டுப்படுத்தி மனம் எப்போதும் சலனமடையாது பாதுகாத்துக் கொள்ளக்கூடியவர்கள். உங்களைப் போன்ற சாதாரண மனிதர்களால் முடியாது(யாழில் யாரவது ஞானிகள், யோகிகள் இருக்கின்றார்களோ தெரியாது). ஒன்றுக்கு மேற்பட்டவரை காதலிப்பதில் தவறு உள்ளது என்று நான் கூறமாட்டேன். ஏனெனில், நீங்கள் சாதாரண மனிதர்கள். ஆனால், காதலிப்பவர்களிற்கு பொய் சொல்லி ஏமாற்றுவதுதான் தவறானது.

ஒன்றுக்கு மேற்பட்டவரை காதலிப்பது தப்பில்லை என நானும் சொல்லவில்லை. காதலிக்கலாம். ஆனால் இக்கதையில் நிஷா ஒருவனைத்தானே காதலித்த்தாள். இதில் ஏது தப்பு?

மற்றவர்களிற்கு நீங்கள் ஒரு நேர்மையானவர் அல்லது நல்லவர் என்று காண்பிப்பதற்காக சும்மா பொய்யாக ஆட்களுக்கு முன்னால் காதலை நட்பு என்று கூறி மறைப்பதில் பிரயோசனமில்லை.

அப்படி யார் மறைச்சா? நண்பனை நண்பன் என்று தான் சொல்லலாம். காதலனை காதலன் என்றுதான் சொல்ல முடியும். யாருக்காகவும் யாரையும் மறைக்க ஏன் முயலனும்?

நீங்கள் திட்டமிட்டு காதலிப்பதற்கு காதல் மூளையை பாவித்து அறிவுபூர்வமாக எடுக்கப்படும் முடிவு அல்ல என்பதை மனதில் வைத்து இருங்கள். அது உணர்வு பூர்வமானது. எனவே, ஞானிகள், யோகிகள் தவிர, உணர்வுகளின் உந்துதல்களால் ஏற்படும் காதல் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஏற்படுவதை அல்லது ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் மீது ஏற்படுவதை உங்களால் ஒருபோதும் தவிர்க்க முடியாது. ஆனால், நீங்கள் நேர்மையாக வாழவிரும்பினால் (சமுதாயம் எதிர்பார்ப்பதின்படி), நீங்கள் செய்யக்கூடியது அவ்வாறு காதல் ஏற்படும் பட்சத்தில் குறிப்பிட்ட அந்த இரண்டாவது, மூன்றாவது நபர்களில் இருந்து விலகிச் செல்வது அல்லது சற்று விலகி இருப்பது!

நெருப்பு என்பது சுடும். அதில் நாம் கையை வைக்கும் போதுதான். :angry:

மற்றும், சூழ்நிலை, காலம், நேரம், சம்பவங்கள் எழுந்தமானமான முறையில் நடைபெறும்போது தானே எங்கள் வாழ்க்கை கொண்டு செல்லப்படுகின்றது? வாழ்க்கைப் பாதை தீர்மானிக்கபடுகின்றது? அதாவது இந்தக் கதையின்படி பார்த்தால், இண்டர்நெட் இருந்ததால் துஸ்யந்துடனும், படிக்க போனதால் முகுந்துடனும் தொடர்பு ஏற்பட்டது. இண்டர்நெட் இல்லாதிருந்திருந்தால் அல்லது வேறு இடத்திற்கு படிக்க போய் இருந்தால் அவளின் வாழ்க்கைப் பாதை வேறு விதமாக சென்றிருக்கும். அதாவது, பலருக்கு ஒரு காதல் மட்டும் வாழ்க்கையில் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கலாம். பலருக்கு வாழ்க்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட காதல் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது போகலாம். பலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட காதல் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கலாம். பலருக்கு வாழ்க்கையில் காதலிப்பதற்கே சந்தர்ப்பம் கிடைக்காது இருக்கலாம். எல்லாம் அவனவன் தலைவிதி!

அதே போல தான் இக்கதையிலும் நிஷாவின் தலைவிதி. அவளுக்கு இன்ரநெட் இருந்ததால் துஸ்யந்தன் என்ற நண்பனும் படிக்க சென்றதால் முகுந்த் என்ற காதலனும் கிடைத்திருக்கின்றார்கள்.

குறிப்பு: இங்கு உங்கள், நீங்கள் என்று நான் குறிப்பிடுவது வெண்ணிலாவை அல்ல. இவ்வாறான தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரையும் தான்!

:angry:

நன்றி! வணக்கம்! :)

ரொம்ப நன்றி

இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்கள் நட்பாக பழகும்போது பரிமாறப்படும் உணர்வுகள், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நட்புடன் பழகும் போது பரிமாறப்படும் உணர்வுகளுடன் அடிப்படையில் ஒத்து ஒரே மாதிரி இருக்கின்றனவா?

இந்தக் கதையில் வரும் நாயகி, ஆணுடன் அல்லாது தற்செயலாக ஒரு பெண்ணுடன் இண்டர்நெட்டில் அரட்டை அடித்து இருந்தால் அவள் சரியாக துஸ்யந்துடன் உணர்வுகளை பரிமாறியதுபோல் தனது நண்பியுடன் உணர்வுகளை பரிமாறி அரட்டை அடித்து இருப்பாளா? நண்பி ஒரு கிழமை அரட்டை அடிக்க வரமாட்டேன் என்று சொன்னபோது இவள் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பாளா? இந்தக் கேள்விகளிற்கு விடை "இல்லை" என்றால் துஸ்யந்துக்கும் கதையில் வரும் பெண்ணிற்கும் உள்ள தொடர்பு நிச்சயமாக நட்பு அல்ல!

நாங்கள் காதல் புனிதமானது, நட்பு புனிதமானது என்று கூறுகின்றோம். இப்படியெல்லாம் சொல்வதற்கு முன், முதலில் நாம் புனிதமாக இருக்கின்றோமா? நாம் புனிதமாக இல்லாத நிலையில் காதல் புனிதமாக இருந்தென்ன! நட்பு புனிதமாக இருந்தென்ன! மேலும், காதல் என்பது ஒரு உணர்வு, நட்பு என்பது ஒரு உறவு! காதலை ஒரு உறவு என்று உங்களால் கூறமுடியுமா அல்லது நட்பை ஒரு உணர்வு என்று உங்களால் கூறமுடியுமா? இல்லையே!

ஆனால், காதல் என்ற உணர்வை வளர்தெடுப்பதன் மூலம் காதலன், காதலி என்ற உறவுகளை உருவாக்க முடியும். இதேபோல் நட்பு என்ற உறவை விருத்தி செய்வதன் மூலம் காதல் என்ற உணர்வை பெற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால் பாருங்கோ காதல் என்ற உணர்வை வளர்த்தெடுப்பதன் மூலம் நண்பன், நண்பி என்ற உறவை உங்களால் உருவாக்க முடியுமா? காதல் என்ற உணர்வு வளர்ந்தால் முடிவு காதலர் தானுங்கோ! நண்பர்கள் அல்ல!

காதல் என்ற பூ ஒருக்கால் தான் மலரும்! இதுதான் என் பொலிசி! நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்! இதைத்தான் நான் விரும்புவேன்! இப்படிச் சொல்வதால் யாருக்கு நன்மை? அடிப்படை உண்மைகளை ஏற்றுக்கொள்ளாத போது பாதிப்பு எமக்குத்தான்! பாதிப்பை நாம் எதிர்கொள்ளத் தயாராய் இருந்தால் உண்மைகளை பொய்மைகளாக நினைப்பதில் தவறு ஏதும் இல்லை!

எல்லோர் மீதும் காதல் மலர்ந்தால் அது காதல் இல்லை காமமா? எல்லோர் மீதும் எப்படி காதல் மலரமுடியும்? ஓரிரண்டு பேர் மீது காதல் மலரமுடியும்! அப்படியென்றால், எல்லோர் மீதும் நட்பு மலர்ந்தால் அதை எப்படி சொல்வது? அதையும் காமம் என்று சொல்லலாமா?

நெருப்பு என்பது சுடும், அதில் நாம கையை வைக்கும் போது மட்டும் அல்ல பாருங்கோ, நெருப்பு நல்லா பத்திக்கிச்சின்னா தூரத்தில தள்ளி நிற்கும்போது கூட சுடும்! அதிலையும் கண்ணுக்க வந்து எரியுற நெருப்பு புகை இருக்குதே, அது தானாகவே நம்மளத் தேடிவரும்!

உண்மையில் இந்தக்கதையில் என்னைப் பொறுத்தவரை துஸ்யந்த்/முகுந்த் ஒரு துரோகி! ஆள்மாறாட்டம் செய்துள்ளான். ஆனால் நிஷா ஏமாற்றப்பட்டுள்ளாள் என்று என்னால் கூறமுடியாது. ஏனெனில், அவளைப் பொறுத்தவரையில் துஸ்யந்த், முகுந்த் ஆகியோர் இருவேறு ஆட்கள்! மேலும், இவ்விருவருடனும் இவளும் Double Game விளையாடியுள்ளாள். முடிவாக, இக்கதையில் நிஷா என்ற பாத்திரம் அமைக்கப்பட்டுள்ள விதம்தான் என்னை இவ்வளவு தூரம் விமர்சனம் செய்யவைத்துள்ளது.

இறுதியாக யாழ்கள ஆடவர்களிடம் ஒரு கேள்வி. விருப்பமென்றால் பதில் கூறவும். நீங்கள் கதையில் வரும் துஸ்யந்த்/முகுந்த் ஆக இருக்கும் பட்சத்தில் கதையின் முடிவில் நிஷாவை திருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கின்றீர்களா? என்னைக் கேட்டால் நான் இல்லையென்றுதான் பதில் சொல்வேன் (துஸ்யந்த்/ முகுந்த் ஒரு துரோகி என்பது அடுத்த பிரச்சனை ஆனால்...) ஏனெனில், நிஷா Double Game விளையாடியுள்ளாள்! என்னைப் பொறுத்தவரை நிஷா துஸ்யந்துடன் நட்புடன் பழகினாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நன்றி! வணக்கம்! :D

கதை நல்லா இருக்கு... நடை முறை நட்புக்கு இது ஒத்து வருமா...??எண்டாலும் வாழ்த்துக்கள் வென்ணிலா.....! கதையை கதையாய் நான் மிகவும் ரசித்தேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா,

தங்கள் கதை!! கதை!! கதை!!...முடிவில் இப்படி ஒரு திருப்பம் வரும் என எதிர்பார்த்தேன்.இத்தனை நாள் பழகியவர்கள் நட்பாக என்று சொல்லி இருக்கீங்கள்.ஒரு தடவை கூடவா புகைப்படம் அனுப்பி இருக்க மாட்டார்கள்? இருவரும் ஒருவராக இருக்கும் பட்சத்தில் எந்த விதத்திலும் அவர் ஒருவரே என்று கண்டுபிடிக்க முடியாதளவு இருந்த போது அந்த நட்பிலும் ஆழம் இல்லை, காதலிலும் ஆழம் இல்லை என்றல்லவா தோன்றுகின்றது?!!

காதலையும் நட்பையும் பலர் போட்டுக்குழப்பிக்கொண்டுள்ள

  • தொடங்கியவர்

இதற்குள் பதில் எழுதும் மனநிலையில் தற்போது நான் இல்லை. ஆனாலும் எழுதுவேன். கொஞ்சம் லேட் ஆக. ஓகே நன்றி

இறுதியாக யாழ்கள ஆடவர்களிடம் ஒரு கேள்வி. விருப்பமென்றால் பதில் கூறவும். நீங்கள் கதையில் வரும் துஸ்யந்த்/முகுந்த் ஆக இருக்கும் பட்சத்தில் கதையின் முடிவில் நிஷாவை திருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கின்றீர்களா? என்னைக் கேட்டால் நான் இல்லையென்றுதான் பதில் சொல்வேன் (துஸ்யந்த்/ முகுந்த் ஒரு துரோகி என்பது அடுத்த பிரச்சனை ஆனால்...) ஏனெனில், நிஷா Double Game விளையாடியுள்ளாள்! என்னைப் பொறுத்தவரை நிஷா துஸ்யந்துடன் நட்புடன் பழகினாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நன்றி! வணக்கம்! :)

ஒருத்தரும் பதில் கூறாதபடியால் நானே பதில் கூறுகிறேன் மாப்பி.............

நீங்கள் கேட்டு இருந்தீர்கள் முகந்தனா/துஸ்யந்தா நான் இருக்கும் சந்தர்ப்பத்தில் நானா இருந்தா நிச்சயமா..............நீ தான் என் தேசிய கீதா நிஷா நிஷா...............என்று நிஷாவை ஏற்றுகொள்வேன்.............மாப்பி நிஷா மற்ற ஆணோட கதைத்தது உண்மை தான் பாருங்கோ..........அதை வந்து தன் காதலனிடம்.................ஒழிவு மறைவு இல்லாம சொல்லுகிறா...........இதை விட என்ன ஜயா தேவை...............நான் கேட்கிறேன் எத்தனை...........பேர் தற்போது இப்படி இருகிறார்கள்...............அங்கால அரட்டை அடித்து விட்டு இங்கால மற்றவனோட போற பட்டாளம் தான் கூட....................இது நட்பும் இல்லை காதலும் இல்லை.......சொல்ல போனால் ஒரு டைம் பாஸிற்கு செய்யிற வேலை பாருங்கோ...........

நம்ம செல்லம் நிஷா காதலையும்..நட்பையும் நேசிப்பதால் தான் இரண்டையும் இருவரிடமும் பகிர்ந்து கொள்கிறா இதில் என்ன தப்பு இருகிறது...............மாப்பி கலாச்சரத்தில் பெண்கள் தலிகுனிந்து கொண்டு போக தேவையில்லை என்று எல்லாம் வாதாடி போட்டு இங்கே வந்து அப்படியே மாற்றி எழுதுறீங்க .............அப்ப நீங்க சொல்வதை பார்த்தால் பெண்கள் மற்ற ஆண்களோடு கதைக்க கூடாத என்ற ஒரு பாணியிலும் பார்கலாம் போல இருக்கு................அது எப்படி நியாயம்..............

மாப்பி நட்பு,காதல் என்று எல்லோரும் குழம்ப என்ன காரணம் தெரியுமோ ஒன்று எங்களின் நட்பை எங்கள் காதலி அல்லது உறவினர்கள் ஏற்று கொள்வார்கள் என்ற பயம் என்றே சொல்லாம்..............அந்த பயம் காரணமாக மற்றவர்களின் நட்பையும் அவ்வாறான பார்வையில் பார்பது மிக தவறு என்றே சொல்லலாம்.............மாப்பி காதல் புனிதமானது தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அதை போல் நட்பும் புனிதமானது.............காதலை உணர்ந்தது போல...........நட்பையும் ஒருக்கா உணர்ந்து பார்த்தா தான் தெரியும்...........அதை விட்டு நட்பு என்றா காதல் என்று சொல்வது எல்லாம்...........என்னால ஏற்று கொள்ளமுடியாது பாருங்கோ.........

மாப்பி காதல் பலரிடம் தோன்றினால அது காமம் ஆனால் நட்பு பல பேரிடம் தோன்றினால் காமமா என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்.........அப்ப யூனியில படிக்கும் போது வேலைக்கு செல்லும் போது பழகும் எல்லோரும்..............நண்பர்கள்.......அ

யம்மு என்னிடன் எல்லாக் கேள்விக்கணைகளையும், கருத்துக்களையும் சொல்லி இருப்பதால் திரும்பவும் விளக்குகின்றேன்.. இங்கு நான் Practical ஆக கதைக்கின்றேன்... சும்மா புனிதம், கினிதம் என்று சொல்லி ஏமாற்று கதை கதைக்க விரும்பவில்லை... :angry: விசயத்துக்கு வருவம்..

கதையில் வருகின்ற நிஷாவைப் பொறுத்தவரை துஸ்யந்தும், முகுந்தும் இருவேறு மனிதர்கள். கதையில் உள்ள பிரச்சனை இதுதான்...

எனவே, துஸ்யந் என்பவன், முகுந்த் அல்லாத வேறு ஒரு மனிதனாக இருக்கும் போது,

துஸ்யந்த் ஏன் அப்படி நிஷாவுடன் உரையாட வேண்டும்? யாராவது ஆண்கள் இப்படி ஒரு பெண்ணுடன் உரையாடி, அவள் காதலிக்கின்ற இன்னொரு ஆடவனைப் பற்றி அரட்டை அடிக்கும் போது விபரமாக அறிந்து மகிழ்வீர்களா? என்னைப் பொறுத்தவரை நான் இப்படி ஒரு பெண்ணுடன் அரட்டை அடிக்கும்போது அவளது காதலனைப் பற்றிய விசயங்களை ஆழமாக அறிந்து மகிழமாட்டேன். ஆனால், நான் அவளது காதலை துருவி, துருவி விசாரிக்கின்றேன் என்றால் அதற்கான காரணம், நான் அவளை காதலிப்பதாக இருக்கலாம். அல்லது என்னை அவள் காதலிக்கமாட்டாளா என்ற நப்பாசையாக இருக்கலாம்.

"நண்பியே நிஷா

நன்கறிவேன் உன்னை

ஏன் இந்த கோபம்

நான் அதை அறியலாமா?"

இவ்வாறு அவன் அவளிடம் கேட்கின்றான். அவளோ இவ்வாறு பதில் சொல்கின்றாள்..

"கண்டேன் ஓர் காளையை

கல்லூரி வளாகத்தில்

பறித்தான் என் இதயத்தை

பார்த்த அந்த நொடியிலேயே"

இதை கேட்டதும் துஸ்யந்த் மனதில் என்ன தோன்றியிருக்கும்? உண்மையில் அவன் மனதில் நிஷாவை காதலித்து இருந்தால் இது அவனது மனதில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனால், துஸ்யந்த் அதை நிஷாவுக்கு வெளிக்காட்டாது மூடிமறைத்து தொடர்ந்து அவளுடன் அவளது காதலை ஆதரிப்பது போல் அரட்டை அடித்து இருக்கலாம். துஸ்யந்த் அவளுடன் நட்புடன் தான் பழகினான், அவனது மனதில் வேறு எண்ணங்கள், சலனம் இருக்கவில்லை என்று எப்படி கூறமுடியும்? "இவ்வளவு காலமும் உன்னுடன் பழகினேனே! அடி, இப்போது நீ இன்னொருவனை காதலிப்பதாக என்னிடம் சொல்கின்றாயே!" என்று துஸ்யந்தின் மனதில் ஒரு ஏக்கம்/தவிப்பு வர சந்தர்ப்பம் இல்லையா? இவ்வாறான ஒரு நிலையில், இவள் தன்னை காதலிக்கவில்லை என்ற ஏமாற்றத்தின் பின் எவ்வாறு துஸ்யந்த் அவளை திருமணம் செய்ய மனதில் விரும்புவான்? இதனால்தான் துஸ்யந்த் ஆக இருக்கும் சந்தர்ப்பத்தில் என்னால் நிஷாவை திருமணம் செய்ய முடியாது என்று கூறினேன். தன் மனம் முழுவதும் முகுந்த் என்பவனின் நினைவை நிறைத்துள்ள ஒருத்தியை துஸ்யந்த் எனப்படும் நான் எவ்வாறு திருமணம் செய்ய முடியும்?

திரும்பவும் நினைவில் கொள்ளுங்கள், கதையில் வருகின்ற நிஷாவைப் பொறுத்தவரை துஸ்யந்தும், முகுந்தும் இருவேறு மனிதர்கள்.

இனி முகுந்தின் பகுதிக்கு வருவோம்...

முகுந்த் என்பவன், துஸ்யந்த் அல்லாத வேறு ஒரு மனிதனாக இருக்கும் போது,

முகுந்திற்கு அவனது காதலி நிஷா துஸ்யந்த் எனப்படும் ஒருத்தனுடன் மணிக்கணக்கில் இண்டர்நெட்டில் அரட்டை அடிக்கும் விசயம் தெரியுமா? நிஷா ஏன் "எனக்கு இண்டர்நெட்டில் எனது அந்தரங்க விசயங்களைப் பற்றியெல்லாம் அரட்டை அடிக்கும் ஒருத்தன் இருக்கின்றான்!" என்று முகுந்திற்கு கூறவில்லை? தனது காதலனிற்கு தனது நண்பனை (?) பற்றி நிஷா கூறாததன் அல்லது அறிமுகம் செய்து வைக்காததன் நோக்கம் என்ன? முகுந்திற்கு பயமா? ஏன் அவர் ஒரு தொடர்பாடல் விரிவுரையாளர் தானே! அவரிடம் சொல்லி இருக்கலாமே?

நான் முகுந்த் ஆக இருக்கு சந்தர்ப்பத்தில் நிஷாவை திருமணம் செய்யமாட்டேன். என்று கூறியதற்கான காரணம் இதுதான். அதாவது, நான் அவளை காதலிக்கும் விசயங்களை, எனது அந்தரங்க விசயங்களை எனது காதலி இன்னொரு ஆடவனுடன் இண்டர்நெட்டில் அரட்டை அடித்து மகிழ்வதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். எனது காதலி இன்னொருவனுடன் நட்பாக பழகுவதில் எதுவித தவறும் இல்லை. ஆனால், இப்படி எனது விசயங்களை இன்னொருத்தனுடன் இண்டர்நெட்டில் வெளிப்படையாக Discuss பண்ணுவதெல்லாம் ரொம்ப ஓவர் பாருங்கோ! நாம் நவீன உலகில் வாழ்கின்றோம். உலகம் தினமும் முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. ஒரு பெண் பல ஆடவர்களுடன் பழகவேண்டி இருக்கும் விடயம் தவிர்க்க முடியாதது. ஆனால், எனது அந்தரங்க விடயங்களை, எனது Privacy ஐ, எனது காதலி இண்டர்நெட்டில் Invade செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், எனது காதலியின் அந்தரங்க விடயங்களை, எனது காதலை நான் இன்னொரு பெண்ணுடன் அல்லது நண்பியுடன் நிஷா செய்வது போல் மணிக்கணக்கில் அரட்டை அடித்து மகிழமாட்டேன்!

"ஹலோ யம்மு, கலாச்சரத்தில் பெண்கள் தலிகுனிந்து கொண்டு போக தேவையில்லை!" என்று எல்லாம் நான் வாதாடினேன். உண்மைதான்! அதற்காக, அடிப்படை நாகரீகங்களை பொருத்தவரை - ஒரு Discipline இல்லாமல் ஒரு பெண் எப்படியும் வாழலாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. இது பெண்களிற்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும்! மேலும், பெண்கள் மற்ற ஆண்களோடு கதைக்க கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. என்னங்கோ, நான் எழுதியதையெல்லாம் அரையுங், குறையுமாக வாசித்துவிட்டு கடைசியில் எனது அழகான சிந்தனைகளை இப்படி கொச்சைப்படுத்துறீங்கள்? :angry:

பிறகு பாருங்கோ, இந்த காமக் கதையை நான் தொடங்கவில்லை. கண்டவர்களிடமும் காதல் வந்தால் அது காமம் என்று கூறப்பட்டது. அது எப்படியங்கோ கண்டவர்களிடமும் காதல் வரும்? அதான் கண்டவர்களிடமும் நட்பு வந்தால் அதையும் காமம் என்று கூறமுடியுமா என்று திருப்பி கேட்டேன். ஏன் உங்களுக்கு அதை வாசித்தபோது காதலை கொச்சைப்படுத்துவது போல் இருக்கவில்லையா? நான் மாற்றிக்கூறும்போது மட்டும் நட்பை கொச்சைப்படுத்துவது போல இருந்ததா?

பிறகு திருமணம் ஆகியபின் நடப்பவை பற்றி கேட்கிறீங்கள். என்னைப் பொறுத்தவரை எனது மனைவி திருமணத்தின் பின் வேறு ஆடவர்களுடன் பழகுவதை நான் தடுக்கமாட்டேன். அல்லது எதிர்ப்பு தெரிவிக்கமாட்டேன். ஆனால், எனது அந்தரங்க விசயங்களை, குடும்ப அந்தரங்க விசயங்களை அவள் இன்னொருவனுடன் இண்டர்நெட்டில் அரட்டை அடித்தோ அல்லது வேறு வழிகளில் இன்னொருவனுக்கு கூறுவதையோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. Privacy முக்கியம் பாருங்கோ! :)

பிறகு... நீங்கள் ஏதேதோ... புலம்பி இருக்கிறீங்கள்... இவற்றுக்கு பதில் எழுத தேவையில்லை என நினைக்கின்றேன்...

மேலும், ஒளவையார் - அதியமான் என்று ஏதோ சொல்லுறீங்கள்... நமக்கு அந்த கதை தெரியவில்லை... எனவே, அதைப்பற்றி கருத்துகூற முடியவில்லை. மன்னிக்கவும்...

நீங்கள் உங்கள் எண்ணங்களை கருத்துக்களை கூறினீர்கள். நான் எனது எண்ணங்களை கருத்துக்களை கூறினேன். நான் நீங்கள் சொல்வதை கேட்க வேண்டிய அவசியமோ அல்லது நீங்கள் நான் சொல்லவேண்டியதை கேட்க வேண்டிய அவசியமோ இல்லை. நிஷாவை கிரேட்! கிரேட்! என்று கூறி அவளை திருமணம் செய்வது உங்கள் சொந்த விருப்பம், இதேபோல், அவளை திருமணம் செய்ய விரும்பாதது எனது சொந்த விருப்பம்!

உங்கள் கருத்தை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! மற்றும் எங்கள் புலம்பல்களை கணணிகளின் முன் நின்று ஆவலுடன் வாசிக்கின்ற அனைவருக்கும் நன்றிகள்! :P

நன்றி! வணக்கம்! :mellow:

கதை வித்தியாசமா இருக்கு.

நட்பும் காதலும் அங்க இங்க எண்டு இப்போ கதை கதையாம் பிரிவுக்கும் வந்து விட்டது :)

நண்பனோடும் காதலனோடும் சந்தோஷமாகவே பொழுதைக் கழித்து வஞ்சகமின்றி எல்லோரோடும் பழகும் நிஷாவோ தன் நண்பனைப் பற்றி முகுந்துக்கும் காதலைப்பற்றி துஸ்யந்துக்கும் சொல்லுவாள். தன் நண்பன் துஸ்யந் என்பவன் தான் அவள் காதலன் முகுந்த் என்பதை அறியாதவளாக.

இதில் எனக்கு ஒன்று விளங்கவில்லை...

நிஷா முகுந்த் பற்றி துஷ்யந்த் கிட்ட சொன்னா தானே

அப்பிடி நடந்தது..இப்பிடி நடந்தது என்று..

அப்போ முகுந்தாக இருக்கும் துஷ்யந்..அவருக்கு அது விளங்கவில்லையா?

சம்பவங்களை சொல்லும் போது..துஷ்யந்த் தான் முகுந்த் என்றால்...முகுந்துக்கும் நிஷாக்கும் நடந்த சம்பவங்களோ..இல்லை துஷ்யந்தும் நிஷாவும் கதைத்த கதைகளோ..இல்லை நட்பை பற்றியோ சொல்லும் போது இருவரும் ஒருவரானவருக்கு கொஞ்சம் கூட புரியவில்லையா?

சரி அதையும் விட்டால்..முகுந்தும் லவ் பண்ணுறார் என்றால்...அது துஷ்யந்த் தான் எனும் பட்சத்தில் அவர் தன் காதலையும் நிஷாவுக்கு சொல்லி இருப்பார்..சொல்லி இருக்கணும். அப்போதாவது நிஷாவுக்கு புரிந்திருக்கணும்....................

என்ன வெண்ணிலா சொல்லுங்கோ நான் சொல்வது சரிதானே?

என்ன எண்டு நிஷாவை ஒருக்கால் கேட்டு சொல்லுங்கோ...

Edited by பிரியசகி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்த வைர அந்த ஆண் (இருவரும் ஒன்று தானே)நிஷாவைக்காதலிக்க தொடங்கியபின்பும் தான்

யார் என்பதை சொல்லாமல் மறைத்தது துரோகம்.இந்த உண்மை தெரிய வந்தால் நிச்சயம் நிஷா அவனை மணக்க மாட்டாள் என்றே நினைக்கிறேன்.மற்றது நிஷா அரட்டையில் என்ன என்ன விசயங்களை கதைக்கிறாள்

என்ன மாதிரி பழகினம் என்பதைப் பொறுத்தது.(அது அந்த ஆனுக்கு தெரியும் தானே) :P

நான் அவளை காதலிக்கும் விசயங்களை, எனது அந்தரங்க விசயங்களை எனது காதலி இன்னொரு ஆடவனுடன் இண்டர்நெட்டில் அரட்டை அடித்து மகிழ்வதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன்.

மாப்பு ஒரு விசயம்..

இது நிஷா ஒன்றும் அந்தரங்க விசயங்களை பகிர்ந்ததாக சொல்லப்படவில்லை..

சாதாரண..கண்டது..பிடித்தது..காத?ித்ததையே பகிர்ந்துக்கிறா...

இது சதாரணமான ஒன்று..இதில் தப்பில்லை!

இது அந்தரங்க விசயமும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

என்னைப்பொறுத்த வைர அந்த ஆண் (இருவரும் ஒன்று தானே)நிஷாவைக்காதலிக்க தொடங்கியபின்பும் தான்

யார் என்பதை சொல்லாமல் மறைத்தது துரோகம்.

ஓ..மறைச்சிட்டாரா?? :) வாத்தி கில்லாடி தான் :mellow:

Edited by பிரியசகி

  • தொடங்கியவர்

நான் இக்கதையில் குறிப்பிட மறந்தது இதுதான். முகுஎது நிஷா முகம் தெரியாத நண்பர்கள் தான். இருவருக்கும் ஒவ்வொருவரது முகவரிகளும் தெரியும். அதனால் தான் துஸ்யந்த் அவள் இருக்கும் குடிமனைக்கே வந்து குடிபுகுந்தான். யெஸ் முகுந்த் துஸ்யந்த் இருவரும் ஒருவரே. அவன் நிஷாவை ஏமாற்றி விட்டான் தான். நண்பனென சொல்லி காதலனாகியது. யெஸ் நிஷாவுக்கு இவ்வுண்மை தெரிந்தால் திருமணம் நடைபெற்றிருக்காதுதான்.

ஆனால் இது நிஜக்கதை.

ஆனால் எல்லோரும் என் கதையில் களங்கத்தை சுமத்தி

ஆளாளுக்கு என்ன என்னமோ எல்லாம் கேட்கிறீங்க

கதை என்று போட்டு கண்டதை எல்லாம் எழுதலாமோ என கேட்கிறீங்க. இனிமேல் என்னால் இங்கு ஒரு ஆக்கமும் கொண்டுவரப்பட மாட்டாது என சொல்லி இக்கதையை எழுதியமைக்காக அது உங்கள் மனசை நோகடித்திருப்பின் மன்னிப்புக்கோரி ஆக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றேன்.

நன்றி வணக்கம்.

  • தொடங்கியவர்

நிஷா அவள் ஒருவனோடு நண்பியாகவும் மற்றவனோடு காதலியாகவும் தான் இருந்தாள். நண்பனுக்கு காதலனைப் பற்றியும் காதலனுக்கு நண்பனைப் பற்றியும் வஞ்சகமின்றி சொல்லுவாள். சொன்னாள். இதில் என்ன தப்பிருக்கு? ஏன் நிஷா ஒன்றும் டபிள் ஹேம் ஆடவுமில்லை றிபிள் ஹேம் ஆடவும் இல்லை. ந்நண்பனுக்கு நண்பியாகவும் காதலனுக்கு காதலியாகவும் இருந்திருக்கின்றாள். ஒளிவு மறைவின்றி கதைக்கின்றாள். ஆனால் அவன் தான் ஏமாற்றிவிட்டான். இங்கு நிஷா மீது தப்பில்லை ஆமா.

வெண்ணிலா, ஒரு விசயம்!

கதையில் நான் களங்கம் சுமத்தவில்லை.

விளங்காததை கேட்டேன். இது நான் அங்கே தயா அண்ணாவின் கதையிலும் கேட்டிருக்கிறேன்.

அப்புறம் என்னோட கருத்து நான் எடிட் பண்ண முதல் உங்க கருத்து பதிவாகி இருக்கு.

அது நான் ரிபிரெஷ் பண்ணாம இருந்ததால உங்கள் கருத்தை நான் காணவில்லை..கண்டு விட்டு எடிட் பண்ணியதாக தவறாக நினைக்க வேண்டாம்.

  • தொடங்கியவர்

ஜம்மு உங்கள் பார்வையில் உங்களுக்கு நட்பு காதல் நிஷா எல்லாமே புரிந்திருக்கு. ரொம்ப நன்றி.

கலைஞன் அண்ணா உங்களின் குழப்பத்திற்கு நான் கதையில் குறிப்பிடாத விசயம் முகவரிகள் தெரிந்ததனால் தான் அவன் அவளின் குடிமனைக்கு வந்ததே என்பது. ஆடவன் தான் அவளை அதாவது நட்புக்குள் காதலைக் கொணர்ந்து ஏமாற்றியது என்பதே இக்கதையில் குறிப்பிட்டேனே தவிர நிஷா ஒன்றும் டபிள் ஹேம் ஆடல்லை :angry: :):mellow:

  • கருத்துக்கள உறவுகள்

கதையை மட்டும் படித்தேன்.. பின்னுள்ள கருத்துக்களைப் படிக்கவில்லை..

கதையின் ஆரம்பத்திலேயே கதையின் முடிவு என்னவென்று தெரிகின்றது (எத்தனை தமிழ்ப் படங்கள் பார்த்திருக்கிறேன்.. இதெல்லாவற்றையும் ஊகிக்கமுடியாதா என்ன!).. கதை கொண்டு செல்லப்பட்ட விதம் செயற்கையாக உள்ளது.. மனித உணர்வுகளைத் தொடும்வகையில் சொல்லப்படவில்லை. மீண்டும் ஒருதடவை வாசிக்கவேண்டும் என்ற உணர்வையும் தரவில்லை.. நட்பையும் காதலையும் வித்தியாசப்படுத்திக் காட்ட எந்தமுயற்சியும் எடுக்கப்படவில்லை என்றே தெரிகின்றது.. அரட்டை நண்பன் தூய நட்புடன் பழகுகின்றான் என்பதற்கு எதையாவது உதாரணமாகக் காட்டியிருக்கலாம். மேலும் கண்டவுடன் காதல் என்பது காதலைக் கொச்சைப்படுத்தத்தான் உதவும்.. ஈர்ப்பு எவ்வாறு காதலாக மாறியது என்பதையும் சொல்லியிருக்கவேண்டும்..

மொத்தத்தில் பிரயாணத்தின்போது நேரத்தைப் போக்கப் படிக்கும் ஒரு சராசரிக் குறுங்கதை!

ஏன் உங்க ஆக்கத்திற்கு முற்று புள்ளி வைக்கிறீங்க..............எந்த ஒரு எழுத்து பாராட்டு பெறாமல் பல தரபட்ட விமர்சனங்களை தாங்கி செல்லுகிறதொ அது தான் எழுத்தாளருக்கு கிடைத்த வெற்றி என்று யாரோ சொல்லி இருக்கீனம் ஆகவே நிலா அக்கா உங்கள் கதை வெற்றி தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்............பொலிசையை யாருக்காகவும் விட்டு கொடுக்க கூடாது இது ஒருத்தரும் சொல்லவில்லை நாமளே சொன்னது........... :)

அப்ப வரட்ட............... :P

சகி,

நீங்கள் அந்தரங்கம் எங்கே மீறப்பட்டுள்ளது என்று கேட்டீங்கள், கதையின் ஓட்டத்தை பாத்தாலே, மற்றும் அங்கு நடைபெற்றுள்ள சம்பாசணைகள், மனநிலை என்பனவற்றை ஆராய்ந்து பார்த்தாலே துஸ்யந்துக்கும், நிஷாவுக்கும் இடையிலான அரட்டையின் போது என்ன நடைபெற்றிருக்கும், எதை எதை பற்றியெல்லாம் Discuss பண்ணி இருப்பார்கள் என்பதை இலகுவாக ஊகிக்க முடியும். இதற்கு Common Sense ஒன்றே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

சஜீவன்,

நீங்கள் சொல்வது மிகவும் சரியானது. நானும் இதை ஏற்கனவே கூறியுள்ளேன். உண்மையில் நான் நிஷாவாக இருந்தால் அந்த முகுந்தை/ துஸ்யந்தை திருமணம் செய்யமாட்டேன். அவன் ஒரு துரோகி! ஆள் மாறாட்டம் செய்தவன். ஒரு பெண்ணை இவன் இப்படி நீண்டகாலம் பொய் சொல்லி ஏமாற்றி இருக்ககூடாது. ஆனால், இதை நிஷாவின் அறீவீனம் என்று கூட சொல்லலாம். தமிழ்தங்கை சொன்னது போல் ஏன் நிஷா துஸ்யந்தின் புகைப்படத்தை அரட்டை அடிக்கும்போது கேட்டு பெறவில்லை? இவ்வளவு தூரம் ஆர்வத்துடன் அரட்டை அடிப்பவள் அவனது புகைப்படத்தை கேட்டு பெற்று இருக்கலாமே? அரட்டை அடிக்கும் ஆடவனின் புகைப்படத்தை கேட்டு பெறுவது தவறா? மேலும், அரட்டை அடிக்கும் போது அவளுக்கு அவன் நண்பனாக இருந்தால் கூட அவனது முகத்தை பார்க்க விருப்பம் இருந்திருக்காதா? இதைவிட, இண்டர்நெட்டில் அரட்டை அடித்தால் கூட நண்பர்களிடையே ஒரு Trust வேண்டாமா? இதற்காகவாவது இருவரும் தமது புகைப்படங்களை அல்லது அடையாளங்களை தெரிவித்து இருந்திருக்கலாமே?

கடைசியாக வெண்ணிலா,

நான் உங்களை Discourage செய்வதற்காக இதை எழுதவில்லை. எனது பார்வையை தெரிவித்தேன். எல்லோரும் வாசிப்பதற்காகத் தானே நீங்கள் இந்தக்கதையை இங்கு இணைத்தீர்கள்? கதையை வாசித்து எங்கள் கருத்துக்களை நாங்கள் கூறுவோம் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் தானே? நாங்கள் சொல்பவை நீங்கள் சொல்பவற்றில் இருந்து வேறுபடும்போது நீங்கள் ஏன் மனம் தளர வேண்டும்? நான் கூட களத்தில் இணைத்த பல விசயங்களை பலர் கீழ்த்தரமாக விமர்சித்தார்கள். என்னை கீழ்த்தரமாக பேசினார்கள். அதற்காக நான் மனம் தளர்ந்து எழுதாமல் இருந்துவிட்டேனா? இல்லையே!

நாங்கள் ஒருவரும் நிறைஞானிகள் அல்ல, பிழைகள் விடாமல் இருப்பதற்கு! எனது சிந்தனையில் கூட ஆயிரம் கோளாறுகள் இருக்கலாம். அதேபோல் மற்றவர்களின் சிந்தனையிலும் பல தவறுகள் இருக்கலாம். ஆனால், நாங்கள் கருத்துக்களை பகிரும்போது எமக்கு தெரியாத பல விசயங்கள், சிந்தனைகள் வெளியே வருகின்றன. இதனால், நானும், நீங்களும், இன்னும் சிலர் மட்டும் இங்கே எங்கள் கருத்துக்களை பகிர்ந்து இருந்தாலும், இதை வாசிக்கும் பல நூறு வாசகர்களிற்கு பல செய்திகள், ஆக்கபூர்வமாக சிந்தனைகள் சென்றடைகின்றன. அவர்கள் இவற்றை வாசிக்கும்போது, தமது வாழ்வில் உள்ள பல சிக்கல்களை தீர்ப்பதற்கு அல்லது தாம் தமது வாழ்வில் நிஷாவைப் போல் வழுக்கிவிழாது இருப்பதற்கு பல ஐடியாக்கள் கூட எமது கருத்தாடலை வாசிக்கும்போது அவர்களிற்கு கிடைக்கக்கூடும்.

நான் எனது விமர்சனங்களில் உங்கள் மனதை நான் நோகடித்திருந்தால் மன்னித்து கொள்ளவும்! :mellow:

நட்பும் காதலும் என்ற இந்தக் கருத்தாடலில் பங்குபற்றுவதை நான் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன். நான் விரிவாக கூறவேண்டியவைகளை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன்! இனி மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கட்டும்!

அனைவருக்கும் நன்றி! வணக்கம்! :)

  • கருத்துக்கள உறவுகள்

அட இது வெண்ணிலா எழுதிய கதையா! நானும் வழமைபோல் வெட்டி ஒட்டிய கதையென்று நினைத்துவிட்டேன்.. ஆண் டபுள் பேம் விளையாடுவதாகக் காட்ட நினைத்து பெண்ணின் பலவீனங்களைத்தான் வெளிப்படுத்தியுள்ளார்.

1) ஒரு அழகிய ஆடவனைப் பார்த்தால் ஈர்ப்பு வருவது இயற்கை. எனினும் அவன் ஆசிரியர் என்று தெரிந்தபின்னர் மனதை அதட்டி இருந்திருந்தால் ஆசிரியர்-மாணவி என்ற உறவுக்கு அப்பால் செல்ல வாய்ப்பிருந்திருக்காது. எனினும் நிஷா ஆசிரியரை காதலிப்பதை நிறுத்தவில்லை.

2) ஆசிரியரான முகுந்த் திட்டமிட்டு நிஷாவை காதலில் விழுத்தியதாகக் கதையில் இல்லை. மாறாக நிஷாவே காதல் வலையில் வீழ்ந்ததாகத்தான் உள்ளது.. இதில் ஆணைக் குற்றம் சாட்டமுடியாது!

3) முகம் கூடத் தெரியாத ஒருவனைத் தூய நட்புடன் பழகுவதாக நம்பும் நிஷா உண்மையிலேயே பலவீனமானவள்.. முகம் தெரியாத ஒருவரிடம் மனதைத் திறந்து கொட்டுவது நல்லதல்ல!

ஆக இப்படியான பெண்கள் இருக்கும்வரை துஸ்யந் என்ற முகமூடி அணிந்த முகுந்த் போன்றவர்கள் அதிகம் கஷ்டப்படாமலேயே தாங்கள் விரும்பியதைச் சாதிக்கலாம்.

கடைசியாக இப்படியான கதைகளை வாசித்துக் கருத்தும் எழுதி நேரத்தை வீணாக்கிய என்னை நானே சபித்துக்கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.