Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது

  • அன்பரசன் எத்திராஜன்
  • பிபிசி செய்திகள்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
ரத்தினவியல் வல்லுநர் காமினி ஜோய்சா நட்சத்திர நீலக்கல் தொகுப்பை ஆராய்கிறார்.

பட மூலாதாரம்,MR GAMAGE

படக்குறிப்பு,

ரத்தினவியல் வல்லுநர் காமினி ஜோய்சா நட்சத்திர நீலக்கல் தொகுப்பை ஆராய்கிறார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 745 கோடி இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு வீட்டின் பின்புறம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும்போது தொழிலாளர்கள் இந்தக் கல்லைக் கண்டுபிடித்ததாக கூறுகிறார் ஒரு ரத்தின வணிகர்.

வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல்லின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.745 கோடி (இந்திய ரூபாய்) இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

இந்தக் கல்லின் எடை 510 கிலோ. ரத்தினங்களை அளவிடும் முறையில் சொன்னால், 25 லட்சம் காரட். கிணறு தோண்டிக்கொண்டிருந்த நபர் ஏதோ ஒரு அரிய கல் இருப்பதாக எங்களிடம் கூறினார். பிறகு இந்தக் கல் கிடைத்தது என்று பிபிசியிடம் தெரிவித்தார் கல்லின் உரிமையாளர் கமாகே.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, அவர் தமது முழுப் பெயரையோ, துல்லியமான வசிப்பிடத்தையோ குறிப்பிட விரும்பவில்லை.

மூன்றாம் தலைமுறை ரத்தின வியாபாரியான கமாகே, இந்தக் கண்டுபிடிப்பு குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அந்தக் கல்லில் ஒட்டிக்கொண்டிருந்த மண் மற்றும் பிற அசுத்தங்களை நீக்கிவிட்டு அதை பகுப்பாய்வு செய்து சான்றிதழ் வழங்க அவர்கள் ஓராண்டுக்கு மேலாக எடுத்துக்கொண்டனர்.

இப்படி சுத்தம் செய்யும்போது அந்த தொகுப்பில் இருந்து சில கற்கள் உதிர்ந்து விழுந்தன என்றும் அவை உயர் தரத்திலான நட்சத்திர நீலக்கற்கள் என்றும் கமாகே கூறியுள்ளார்.

ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதி இலங்கையின் ரத்தினத் தலைநகரம் என்று கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் பல விலை மதிப்பு மிக்க ரத்தினக் கற்கள் கடந்த காலத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

நீலக்கற்கள் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க ரத்தினக் கற்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னணியில் உள்ள நாடு. கடந்த ஆண்டு மட்டும் இலங்கை 50 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ரத்தினங்கள், பட்டை தீட்டிய வைரங்கள் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

"இதைப் போல இவ்வளவு பெரிய கல்லை நான் முன்பு பார்த்ததில்லை. இது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக இருக்கும்," என்று பிபிசியிடம் கூறினார் புகழ்பெற்ற ரத்தினவியலாளர் டாக்டர் காமினி ஜோஸ்சா.

இந்த கல் அதிக காரட் கொண்டதாக இருந்தாலும் தொகுப்பின் உள்ளே இருக்கிற எல்லா கற்களும் உயர் தரத்தில் இல்லாமல்கூட இருக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக இலங்கையின் ரத்தின தொழில்துறை மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கும் சூழ்நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்செயல் கண்டுபிடிப்பு சர்வதேச வல்லுநர்களையும், வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் என்று இந்த தொழிலில் வேலை செய்கிறவர்கள் நம்புகிறார்கள்.

"இது சிறப்பான நட்சத்திர நீலக்கல் தொகுப்பு. உலகத்திலேயே இதுதான் பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்தக் கல் மீது அருங்காட்சியகங்களுக்கும், ரத்தினங்கள் சேகரிப்போருக்கும் ஆர்வம் ஏற்படும் நினைக்கிறோம்," என்கிறார் இலங்கையின் தேசிய ரத்தினங்கள், நகைகள் ஆணையத்தின் தலைவர் திலக் வீரசிங்கே.

https://www.bbc.com/tamil/sri-lanka-57983169

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

இந்தக் கல்லின் எடை 510 கிலோ. ரத்தினங்களை அளவிடும் முறையில் சொன்னால், 25 லட்சம் காரட். கிணறு தோண்டிக்கொண்டிருந்த நபர் ஏதோ ஒரு அரிய கல் இருப்பதாக எங்களிடம் கூறினார். பிறகு இந்தக் கல் கிடைத்தது என்று பிபிசியிடம் தெரிவித்தார் கல்லின் உரிமையாளர் கமாகே.இது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக இருக்கும்," என்று பிபிசியிடம் கூறினார் புகழ்பெற்ற ரத்தினவியலாளர் டாக்டர் காமினி ஜோஸ்சா.

மகிழ்ச்சியானதும்,  ஆச்சரியமானதுமான செய்தி.

போகிற போக்கில்... அரசே, இதை தனது உடையாக்கினாலும் ஆக்கிப் போடும்.

கிணறு கிண்டியவர்களுக்கும், வீட்டு உரிமையாளருக்கும்...
அதன்  பெறுமதியில்  சிறிதாதவது கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

மகிழ்ச்சியானதும்,  ஆச்சரியமானதுமான செய்தி.

போகிற போக்கில்... அரசே, இதை தனது உடையாக்கினாலும் ஆக்கிப் போடும்.

கிணறு கிண்டியவர்களுக்கும், வீட்டு உரிமையாளருக்கும்...
அதன்  பெறுமதியில்  சிறிதாதவது கொடுக்க வேண்டும்.

அரசு அல்ல, அதனை ஆட்டையை போட, அரசை நடத்துபவர்கள் போட்டி போடுவார்கள். கடைசியில் இவருக்கு வெடியும் விழலாம்.

பிளட் டைமென்ட் என்ற படம் வந்தது, இந்த வைரங்கள், தங்க புதையல்களினால், பல யுத்தங்கள், கொலைகள் நடந்து இருக்கின்றன. 🥴

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் நாடு பிச்சை பாத்திரம் தூக்கும் நேரம்களில் இப்படித்தான் ஏதாவது மத்தாப்பு வான வேடிக்கை காட்டுவான்கள் . கொஞ்ச நாளில் இந்த கல்லு யாரும் தேடுவார் இல்லாமல் போனாலும் அதிசயப்படதேவையில்லை . காலிபெருங்காய டப்பா கூட்டம் .

உண்மையிலே அந்த கல்லு இரத்தினம் தான் என்றால் கோத்தபாய விட்டு வைப்பாரா ? யார் அவர் ?🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

உண்மையிலே அந்த கல்லு இரத்தினம் தான் என்றால் கோத்தபாய விட்டு வைப்பாரா ?

இது அரும்பொருள் காட்சியகத்துக்கு தேவையானது என்று எடுத்துச் செல்வார்கள்.  அதன்பின் கோத்தாவின் சொத்து.  ஒன்று செய்யலாம்: அந்த நபர் இதை விற்று நாடு பெற்றுள்ள கடனை கட்டி நாட்டை வாங்கலாம்?      

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகப் பாரிய நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு!

IMG_20210728_073229-01.jpeg

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினங்களின் நகரமான இலங்கையின் இரத்தினபுரி நகரத்தில் வீடொன்றின் கொல்லைப்புறத்தில் எதேச்சையாக இக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

கூலித் தொழிலாளி ஒருவர் மூலம் தனது வீட்டில் கிணறு ஒன்றிற்காக தோண்டியபோது, இக்கல் கண்டுபிடிக்கப்பட்டதாக தனது முழுப் பெயரை வெளியிடாத கமகே என அழைக்கப்படும் குறித்த கல்லின் உரிமையாளர் பிபிசி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார் மிக மெல்லிய இளம் நீல நிறத்தில் காணப்படும் இக்கல், சர்வதேச சந்தையில் 200 மில்லியன் டொலர் (ரூ. 2,000 கோடி) வரையான பெறுமதியை கொண்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் எடை 510 கிலோகிராம்
(2.5 மில்லியன் கரட்) என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட நீல மாணிக்கம் எனும் பொருள்பட (செரண்டிபிட்டி சபையர்) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

FB_IMG_1627437839062.jpg
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

அரசு அல்ல, அதனை ஆட்டையை போட, அரசை நடத்துபவர்கள் போட்டி போடுவார்கள். கடைசியில் இவருக்கு வெடியும் விழலாம்.

பிளட் டைமென்ட் என்ற படம் வந்தது, இந்த வைரங்கள், தங்க புதையல்களினால், பல யுத்தங்கள், கொலைகள் நடந்து இருக்கின்றன. 🥴

அங்கை சுத்தி இங்கை சுத்தி கடைசியில பிபிசிக்காரனுக்கும் அலுவா கொடுத்தாச்சு https://www.bbc.co.uk/news/world-asia-57981046🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அங்கை சுத்தி இங்கை சுத்தி கடைசியில பிபிசிக்காரனுக்கும் அலுவா கொடுத்தாச்சு https://www.bbc.co.uk/news/world-asia-57981046🤣

பிபிசி தான் செய்தியை முதலில் சொன்னது.

கடைசீல, கல்லு சீனா கொண்டு போய் அங்கே ஏலம் விடபோகினம் என்று சொல்லியாச்சு.

சீனா தான் எல்லோருக்கும் பெரிய அல்வா கொடுத்து, கல்லை கிளப்பிக்கொண்டு போட்டுது.

https://www.dailymirror.lk/top_story/Worlds-largest-star-sapphire-cluster-to-be-sold-at-gem-auction-in-China/155-217041

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சிலவேளை சைனா காரனுக்கு அல்வா கிண்டப்படுதோ ?

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்ய 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம்

இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதியை (Sapphire Cluster) கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர்.

குருந்தம் வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலமணி - இரத்தினக்கல் எனக் கருத்தப்படும் இரத்தினக்கல் தொகுதி இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

510 கிலோகிராம் எடை கொண்ட இந்த இரத்தினக்கல் தொகுதி வீடொன்றிற்கு அருகில் கிணறு தோண்டும் போது கிடைத்திருப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்தது;

இதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது.

இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்ய 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

சிலவேளை சைனா காரனுக்கு அல்வா கிண்டப்படுதோ ?

சீனாக்காரன்… எஸ்கிமோவருக்கே, ஐஸ்கிறீம் விக்கிற ஆட்கள். 🤣

அவங்களுக்கே… அல்வாவா….  😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சீனாக்காரன்… எஸ்கிமோவருக்கே, ஐஸ்கிறீம் விக்கிற ஆட்கள். 🤣

அவங்களுக்கே… அல்வாவா….  😂😂

வழக்கமா கடன் இறுகும்  நேரம்களில் மன்னார் வளைகுடாவுக்குள் சவூதியை போல் பலமடங்கு எண்ணெய் என்பார்கள் இல்லை தங்க  குவியல் உலகிலே இல்லாத அளவுக்கு என்பார்கள் இந்தமாதம் பில்லியன் கணக்கில் திருப்பி செலுத்த வேண்டிய  நேரத்தில் இந்த இரத்தினக்கல் கதை வந்திருக்கு . சும்மா  சுறா பல்லை வைத்தே குறளிவித்தையாட்டம் உல்லாசப்பயணத்துறையை வளர்க்கும் கூட்டம் இந்த கல்லை காட்டி கல்லின் பெறுமதிக்கு மேல் உழைத்து விடுவார்கள் அவசர அவசரமாய் ஏலத்தில் என்கிறார்கள் கதை எங்கேயோ இடிக்குதே .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதியை (Sapphire Cluster) கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர்.

கொரோனாவாலும், இயற்கை அநர்த்தங்களாலும் உலகம் முழுக்க தத்தளிக்குது. இதில இரத்தினக்கல் கொள்வனவில் நாடுகள் முண்டியடிக்குதாம். அனர்த்தம் முடிய நாடுகள் உணவுபற்றாக் குறையில் தவிக்கப்போகுது. இவை கல்லை வைச்சு பணம் சம்பாத்திக்க கனவு காணுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2021 at 15:34, பெருமாள் said:

வழக்கமா கடன் இறுகும்  நேரம்களில் மன்னார் வளைகுடாவுக்குள் சவூதியை போல் பலமடங்கு எண்ணெய் என்பார்கள் இல்லை தங்க  குவியல் உலகிலே இல்லாத அளவுக்கு என்பார்கள் இந்தமாதம் பில்லியன் கணக்கில் திருப்பி செலுத்த வேண்டிய  நேரத்தில் இந்த இரத்தினக்கல் கதை வந்திருக்கு . சும்மா  சுறா பல்லை வைத்தே குறளிவித்தையாட்டம் உல்லாசப்பயணத்துறையை வளர்க்கும் கூட்டம் இந்த கல்லை காட்டி கல்லின் பெறுமதிக்கு மேல் உழைத்து விடுவார்கள் அவசர அவசரமாய் ஏலத்தில் என்கிறார்கள் கதை எங்கேயோ இடிக்குதே .

சந்தேகப்பட்டது சரியாகி விட்டது .

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை - செய்திகளின் தொகுப்பு

உலகின் மிகப் பெரிய இரத்தினக்கலின் பெறுமதி தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

சுமார் 510 கிலோகிராம் எடையுடைய இரத்தினக்கல் கொத்தொன்று, இரத்தினபுரி − கஹவத்தை பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கிடைத்திருந்தது.

தேசிய இரத்தினக்கல் அதிகார சபை கூறும் விதத்தில், இந்தக் கல் பெறுமதி வாய்ந்தது கிடையாது என இரத்தினக்கல் துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கல்லின் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் எனக் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பிலான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

https://tamilwin.com/article/new-controversy-erupts-world-s-largest-gemstone-1627561969?itm_source=parsely-special

Those working in the industry hope the "Serendipity Stone" will now attract international buyers and experts - though the rock has yet to be analysed and authenticated by independent international experts.

https://www.bbc.co.uk/news/world-asia-57981046

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பெருமாள் said:

Those working in the industry hope the "Serendipity Stone" will now attract international buyers and experts - though the rock has yet to be analysed and authenticated by independent international experts.

 எட்டு மாதத்துக்கு  முன்பே கண்டுபிடித்தவர்கள் சர்வதேச நிபுணர்களை வரவழைத்து அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை .

இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று பள்ளிக்கூட பக்கம் மழைக்கு ஒதுக்காதவர்கள் கேக்கிறம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

எட்டு மாதத்துக்கு  முன்பே கண்டுபிடித்தவர்கள் சர்வதேச நிபுணர்களை வரவழைத்து அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை .

அதை சுத்தம் செய்யவே ஒரு வருடம் எடுத்ததாக அறிவித்திருக்கிறார். ஏதோ சுத்துகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.