Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி-பா.உதயன் 

சென்ற இடம் எல்லாம் தமிழன் சிறப்பும் பெருமையும் அடைகிறான். டாக்டராக பொறியியளாளராக சட்டவாளராக பாராளுமன்ற உறுப்பினங்களாக பெரும் வியாபார உரிமையாளராகவெல்லாம். புலம் பெயர் தமிழர்கள் குறுகிய காலத்தில் தமது கடின உழைப்பால் கல்வியால் முன்னேற்றம் அடைந்து வரும் இனமாக பார்கப்படுகிறார்கள். ஒரு காலம் நாகரீகங்களோடு இராட்சியங்களையும்  தேசங்களையும் கட்டி ஆண்டவர்களின் வேர்களில் இருந்து வந்தவர்கள் நாங்கள். இன்று ஒரு நாடு மட்டும் இவனுக்கு இல்லாது இருப்பது தான் பெரும் துன்பம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இருப்பதனாலோ என்னவோ தெரியவில்லை. 

இம் முறையும் உயர் கல்வி படிப்பதற்கு ஐரோப்பா நாடுகள் பூராகவும் இருந்து தமிழ்ப் பிள்ளைகள் தெரிவாகி இருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆற்றலும் கல்வி அறிவும் கொண்ட தமிழ் சமூகமாக நாம் வளர்ந்து வருவது அதை விட மகிழ்ச்சியும் பெருமையும். அரசியலில் கூட இப்போ படிப் படியாக வளர்ந்து வருகிறார்கள். 

சர்வதேச தொடர்பு (International relations), பொருளாதாரம், (Economics) சமூகவியல், (Sociology) ஐரோப்பிய தத்துவம், (European Philosophy) உலக சரித்திரம், (World History) அரசியல் விஞ்ஞானம், (Political Science) உளவியல் , (psychology) ஊடகத் துறை, (journalism ) மானிடவியல்(Social Anthropology) போன்ற கற்கை நெறிகளிலும் கூடிய கவனம் செலுத்தி அதில் ஆழமான தேடலோடு ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் போன்ற பெரும் பெரும் உலகக் கூட்டு ஸ்தாபானங்களில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களாக நாம் மாற முயற்சிக்க வேண்டும். இது புலம் பெயர் சமூகத்தில் சாத்தியப்படாத தொன்றல்ல. புதுமை புது உலகம் செய்பவர்களாகவும் மாற வேண்டும். இந்தத் துறைகளை நீங்கள் ஆழமாக கற்றுக் கொள்ளும் பொழுது தான் எதையும் ஆளமாக பேசவும் எழுதவும் விவாதம் செய்யவும் முடியும். எதையும் தேடாமல் விளங்காமல் எதையும் கடக்க முடியாது.

நாங்கள் விழுந்து விட்டோம் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் நாங்கள் மெல்ல எழுந்து வருவோம் என்று சொல்பவர்களாக இருக்க வேண்டும். வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி (Rise and fall are part of life) புதைத்து விட்டோம் என்று தான் நினைத்தார்கள் ஆனால் அவர்கள் புதைத்ததெல்லாம் விதை என்பதை மறந்து விட்டார்கள். ( “They tried to bury us, they didn’t know we were seeds.” ).

புலம் பெயர் தமிழர் வாழும் நோர்வே நாட்டிலும் எம் தமிழ் பிள்ளைகள் கல்வியில் காட்டி வரும் ஊக்கத்தால் இம் முறையும் பலர் உயர் கல்வி படிப்புக்கு தெரிவாகியுள்ளார்கள். இதனால் நோர்வீய சமூகத்தினரால் பெரிதும் மதிக்கத் தக்கவர்களாகவும் போற்றத் தக்கவர்களாகவும் பார்க்கப் படுகின்றோம். அத்தோடு கடினமான உழைப்பாளிகளாகவும் எந்த வித அரச சமூகக் கொடுப்பனவுகளிலும் தங்கி  இல்லாதவர்களாகவும் வாழ்ந்து வருவது பெருமை தான். இதே போலவே பல ஐரோப்பிய நாடுகளிலும் தமிழன் பெருமை சேர்த்து வருகிறான். அந்த நாடுகளின் அரச தலைவர்கள் கூட தமிழர் கலாச்சார விழாக்களில் பங்கு பெறுவதும் தமிழர் பெருமை பற்றி அவர்கள் பேசுவதும் பெருமை தான். 

 நாம் தமிழர் என்ற பெருமையுடனும் எமது உரிமையை வென்றெடுக்க புலம் பெயர் அடுத்த தலை முறையும் உழைக்க வேண்டும். உங்கள் சேவையை செய்யும் அதே வேளை தன்னலனும் சுய நலனும் மட்டுமே கருத்தில் கொள்ளாமல் உங்கள் குரல் உங்கள் மக்களுக்காகவும் ஒலிக்க வேண்டும். கனடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கனேடிய தமிழர்கள் தமிழின் வளம் வளர்ச்சி கருதி தமிழுக்காக ஒரு சில முக்கிய சட்டங்களை  அப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். உங்கள் அறிவு ஆற்றல் ஒரு பக்கத்தோடு இருக்க உங்கள் முன்னேற்றதிற்காக  பாடுபட்டு சரியான பாதையை காட்டிய  பெற்றோர்கள் நண்பர்ககளுக்கு நன்றியுடையவர்களா  இருங்கள்.

ஒரு காலம் யூதர்கள் வாழ்ந்து வந்த யுடைய(Judea) என்ற நிலப்பரப்பில் ரோமானியப் பேராசின் ஆதிக்கத்தின் பின் தாம் வாழ்ந்த நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட யூத மக்கள் புலம் பெயர்ந்து ஐரோப்பா முழுவதும் வாழ்ந்து வந்தார்கள். அங்கு கூட  அவர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை எத்தனையோ துன்பங்களையும் அழிவுகளையும் சந்தித்தபோதும் தமது அடையாளம் உரிமைகளை இழக்காமல் ஒன்றாகப் போராடினார்கள். ஒரே சிந்தனை சித்தாந்ததுடன் இறுதியில் ஒரு நாட்டை தமக்காக உருவாக்கினார்கள். 

நான் நோர்வீயன் என்றும், நான் ஆங்கிலேயன், என்றும் நான் கனேடியன், நான் பிரான்ஸின் பிரஜை, என்று அவர் அவர் தம் அடையாளத்தை தேசிய உணர்வை தொலைக்காமல் சொல்லி வருவது போல் நாம் தமிழர் என்ற அடையாளத்தையும் தொலைக்காமல் வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆற்றலும் அறிவும் ஆளுமையும் கொண்டு இனி வரும் நூற்றாண்டு களையும் உமதாக்கி உங்கள் வரலாறுகளை உங்கள் கதைகளை நீங்கள் எழுத வேண்டும் பேச வேண்டும். எழுத்தும், பேச்சும், கூத்தும், இசையும், கவியும், பாட்டும் இல்லாத உலகம் மூச்சிழந்து நிற்பது போலாகிவிடும். வாழ்ந்து போகு மட்டும் நீ இருந்தாய் என்பதை இந்த உலகு நினைக்க வேண்டும்.

✍️பா.உதயன் 

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சகோ

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2021 at 14:21, uthayakumar said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2021 at 10:51, uthayakumar said:

நாம் தமிழர் என்ற அடையாளத்தையும் தொலைக்காமல் வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆற்றலும் அறிவும் ஆளுமையும் கொண்டு இனி வரும் நூற்றாண்டு களையும் உமதாக்கி உங்கள் வரலாறுகளை உங்கள் கதைகளை நீங்கள் எழுத வேண்டும் பேச வேண்டும்.

விரக்தியடையும் மனங்கள் மேலும் விரக்தியடையாமல் உறுதிப்படவைக்கும் ஒரு பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்களை நீங்கள் விதைத்துள்ளீர்கள் உதயன்........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

13 hours ago, suvy said:

நல்ல கருத்துக்களை நீங்கள் விதைத்துள்ளீர்கள் உதயன்........!  👍

13 hours ago, Paanch said:

விரக்தியடையும் மனங்கள் மேலும் விரக்தியடையாமல் உறுதிப்படவைக்கும் ஒரு பதிவு.

On 30/7/2021 at 13:31, விசுகு said:

நிச்சயமாக சகோ

நன்றி 

விசுகு,சுவே,புரட்சிகர தமிழன் ,Paanch உங்கள் கருத்துக்கு நன்றிகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.