Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்ராந்த் கப்பலின், சோதனை ஓட்டம் நிறைவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவு!

விக்ராந்த் கப்பலின், சோதனை ஓட்டம் நிறைவு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானம் தாங்கி போர் கப்பலான விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும், கப்பலின் செயல் திறன் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 ஆயிரம் டன் எடையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது விமானம் தாங்கி கப்பல் விரைவில் கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதன் சோதனை ஓட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1233208

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தயாரித்த விமானம் தாங்கி போர்க்கப்பல் வெள்ளோட்டத்தில் வெற்றி

இந்தியாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.ஏ.சி.1 விக்ராந்தின் வெள்ளோட்டம் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.ஏ.சி. 1 விக்ராந்த் இந்தியக் கடற்படையின் தற்காப்பு, தாக்குதல்களுக்கு பலம் சேர்ப்பதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பலாகும்.

233467409_513672596360929_24893500455719

இந்தக் கப்பலைத் தயாரிக்க கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்திய மதிப்பில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபா செலவிடப்பட்டு கப்பல் கட்டுமான பணிகள், கேரள மாநிலம் கொச்சியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

222014873_243035050876805_18271252331403

முழுவதும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான, இந்தக் கப்பலின் வெள்ளோட்டம் கடந்த நான்காம் திகதி கொச்சியில் ஆரம்பமாகியது.

இந்நிலையில் இந்த வெள்ளோட்டம் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

231792495_227398292615070_37668178113365

கடந்த ஒரு வாரகாலமாக, கப்பலின் செயற்றிறன், உந்துசக்தி, மின் உற்பத்தி, விநியோகம், துணை உபகரணங்கள் சோதனை உள்ளிட்டவை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.

233567344_229978399016647_28660260583054

262 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும், 40 ஆயிரம் தொன் எடையையும் கொண்டுள்ள இந்த போர்க்கப்பலில் 2,300 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளதோடு, மொத்தமாக 14 தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

222134260_1035852503827217_6942803866713

மேலும் ஒரே நேரத்தில் 1,700 இராணுவ வீரர்கள் தங்கக் கூடியதாகவும், அதிகபட்சமாக 32.2 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய இந்த கப்பலானது 7,500 மைல்கள் வரை நிற்காமல் செல்லும் திறன்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

222045182_571316980708568_10759223246401

புதிய விக்ராந்த், ஏற்கனவே இந்தியாவின் செயற்பாட்டில் இருக்கும் விக்ரமாதித்யாவுடன் ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாக உள்ளது. 

விக்ரமாதித்யா 44.500 தொன்கள் எடை கொண்ட கப்பலாகும். இதில் நவீன 34 போர் விமானங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

233677854_1016131279133422_8587091077984
 

 

https://www.virakesari.lk/article/110995

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சினிலிருந்து  சென்னைக்கு வருவது என்றால் சிறிலங்காவை சுற்றி தான் வரவேணுமோ அல்லது பாக்குநீரிணையை உடைச்சு கொண்டு குறுக்கால வர இந்த கப்பலுக்கு முடியுமோ?....

இவையள் சிறிலங்காவை சுற்றி சென்னைக்கு வர முதல் சிறிலங்கா கடற்படைமுகாமிலிருந்து சீனாக்காரன் ஏவுகணையை ஏவிவிடுவான் கொச்சின் கடற்படை முகாமுக்கும் கல்பாக்காம் அணுமின்நிலையத்துக்கும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மனம் சொல்கிறது , கிந்தியா கப்பல்களை அனுப்ப,பயிற்றசையின் இடையில் பழுதாகி, சீன நேவி அயல் நாடு என்று சொல்லி, கப்பல்களை  திருத்தி அனுப்ப வேண்டிய நிலை வரும் என்று.

அமெரிக்கா, தலையில் கைவைத்து, அடுத்த முறை பயிற்றசிக்கு அழைப்பதன் முதல்  , us navy கப்பல்களை மீளவு செய்ய வேண்டும், அதன் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த பின்   , US navy அதை சரி பார்த்து, உறுதிப்படுத்தினாலே, பயிற்சியில் கப்பல்கள் உள்வாங்கப்படும் என்ற நிலைக்கு US  வந்து நிற்கும்.

சில வேளைகளில், us navy, கிந்தியா  கப்பலை கைவிட்டு, புதிதாக தொடங்க வேண்டும், செலவு மற்றும் நம்பகத்தமையை கருத்தில் கொண்டு   என்றால், கிந்தியாவின் நிலை?

மனம் தானே, மாறியும் நடக்கலாம்.

மற்றவர்களின் கணிப்பு எப்படி.    

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

எனக்கு மனம் சொல்கிறது , கிந்தியா கப்பல்களை அனுப்ப,பயிற்றசையின் இடையில் பழுதாகி, சீன நேவி அயல் நாடு என்று சொல்லி, கப்பல்களை  திருத்தி அனுப்ப வேண்டிய நிலை வரும் என்று.

அமெரிக்கா, தலையில் கைவைத்து, அடுத்த முறை பயிற்றசிக்கு அழைப்பதன் முதல்  , us navy கப்பல்களை மீளவு செய்ய வேண்டும், அதன் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த பின்   , US navy அதை சரி பார்த்து, உறுதிப்படுத்தினாலே, பயிற்சியில் கப்பல்கள் உள்வாங்கப்படும் என்ற நிலைக்கு US  வந்து நிற்கும்.

சில வேளைகளில், us navy, கிந்தியா  கப்பலை கைவிட்டு, புதிதாக தொடங்க வேண்டும், செலவு மற்றும் நம்பகத்தமையை கருத்தில் கொண்டு   என்றால், கிந்தியாவின் நிலை?

மனம் தானே, மாறியும் நடக்கலாம்.

மற்றவர்களின் கணிப்பு எப்படி.    

அப்படி நடக்கவேணும் என்று மனம் கூத்தாடுது.....சந்தோசப்படுகிறது....

ஆனால் இந்தியாவின் தொழில்நுட்பம் உலக தரத்தில் இல்லை என்றாலும் ஆசியா தரத்தில் சிறந்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.