Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் துணைவியாரான, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்.

திடீரென சுகயீனமடைந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.

தமிழ் அரசியல் கைகளின் வழக்குகள் உள்ளிட்ட இலங்கையில் பிரபல்யமான இருந்த பல வழக்குகளில் ஆஜராகி, தனது வாதத்திறமையால் நியாயத்தை பெற்றுக்கொடுத்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilmirror Online || சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...இவ எல்லோ றிசாட்டின் மனைவிக்காய் கோட்டில் வாதாட இருந்தவ 😐

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு கனமானான இதயத்துடன் கௌரி மற்றும் தவாவையும் (தவராசா) உங்கள் பிரார்த்தனைகளில் இனணத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

 

இவர்கள் சாதாரண மக்களின் உரிமைகளுக்கு அச்சமின்றி போராடி வருகின்ற இரண்டு முன்னணி சட்டத்தரணிகள் ஆவர்.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காக இவர்கள் பல சந்தர்ப்பங்களிலும் போராடுவதற்காக ஆஜராகியிருந்தார்கள்.

ஐதேகவுடன் அவர்களுடைய ஆரம்ப ஈடுபாட்டை என் ஆரம்ப அரசியல் ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகவே நினைவில் வைத்திருக்கிறேன்.

இன்று, கௌரி கொடிய கொரோனா வைரஸால் மரணித்ததோடு தவா அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்.

உங்கள் பிரார்த்தனைகளில் அவர்களை நினைவுகூரும் அதேவேளை, விரைவாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவும் பாதுகாப்பாக இருக்கவும் மறந்துவிட வேண்டாம்.

 

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் 

பாராளுமன்ற உறுப்பினர் 

ஐக்கிய மக்கள் சக்தி

http://www.jaffnamuslim.com/2021/08/mp_23.html

  • கருத்துக்கள உறவுகள்


 

பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகளில் துணிச்சலாக களமிறங்கியவர் கெளரிசங்கரி - ஈ சரவணபவன் இரங்கல்!

பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளில் பலரின் விடுதலைக்குக் காரணமான கௌரிசங்கரியின் இறப்பு பேரிழப்பு. தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஈஸ்வரபாதம் சரவணபவன் இரங்கல்.

பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகளில் சட்டத்தரணிகள் முன்னிலையாக பயந்த சமயத்தில் துணிச்சலாக களமிறங்கி பலரின் விடுதலையை சாத்தியமாக்கியதுடன் தொடர்ந்தும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் காரணமாயிருந்தவர், சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா. அத்தகையவரின் இறப்பு பேரிழப்பாகிவிட்டது.

இவ்வாறு இரங்கல் தெரிவித்தார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், உதயன் குழுமத் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன்.

இது தொடர்பில் அவர் அனுப்பிய செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ். தவராசாவின் பாரியார் சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசவின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினரின் துயரில் பங்குபெறுவதோடு அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நாட்டில் அதிகம் பேசப்படுகின்ற பல வழக்குகளில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா முன்னிலையாகியிருந்தார். தமிழ் அரசியல் கைதிகளுக்காக வாழ்நாள் முழுவதும் வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி என மறைந்த பெருந்தகை போற்றப்படுகிறார். சவால்மிக்க பல வழக்குகளை எதிர்கொண்டவர். அவர் புகழ்பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி மட்டுமல்ல ஒரு தலைசிறந்த மனித உரிமைச் செயற்பாட்டாளருமாவர். அத்துடன் தமிழ் தேசியத்தின்பால் அதீத பற்றுக் கொண்டவர்.

1983க்குப் பின்னரான காலகட்டத்தில் எதுவித குற்றமும் அறியாத பல தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது தன்னலம் கருதாது தாமாக முன்வந்து பல தமிழ் இளைஞர்களை காப்பாற்றியவர். நாட்டின் முக்கியமான வழக்குகளிலும், சர்வதேச அளவில் பேசப்படும் வழக்குகளிலும் கௌரி சங்கரி தவராசா முன்னிலையாகியிருந்தவர்.

அது மட்டுமல்ல எமது உதயன் பத்திரிகை நிறுவனம் மீது அதிகாரவர்க்கத்தினர் திட்டமிட்டு பொய் வழக்குகள் பலவற்றைத் தாக்கல் செய்தபோது, அதை சட்ட ரீதியாக எதிர்கொண்டவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவும், அவரது பாரியார் கௌரிசங்கரி தவராசாவும் ஆவர்.

பல சவால்களுக்கு முகம் கொடுக்க சட்டத்தரணி தவராசா தம்பதிகள், நீதிமன்றங்களில் தோன்றி வழக்குகளிலிருந்து உதயன் நிறுவனம் விடுபட பேருதவி புரிந்துள்ளனர். அத்துடன் கடந்த கார்த்திகைத் திங்களில் எமது உதயன் நிறுவனம் எதிர்கொண்ட வழக்கை வெற்றிகரமாக எதிர்கொள்ளக் காரணமாயிருந்தவர்கள் சட்டத்தரணி தவராசா தம்பதிகள்.

இந்தநிலையில், சுகவீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அன்னார் நேற்று மாலை காலமானதாக அறிந்தேன்.

அமரர் கௌரிசங்கரி தவராசாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். – என்றுள்ளது.

 

https://newuthayan.com/பயங்கரவாத-தடைச்-சட்ட-வழக/

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஷாலினிக்கு எதிராக, ரிஷாட் பதியுதீனுக்கு வழக்காடப் போய்… 

தன்னுடைய பெயரை… கெடுத்துக் கொண்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது செயற்பட்டவர் கௌரி சங்கரி - தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்

(எம்.நியூட்டன்)

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்திருந்த சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம் என சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இவர் ஆரம்ப காலங்களில் தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை போன்ற முக்கியமானவர்களின் வழக்கு விவகாரங்களில், ஆட்சியாளர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களையும் மீறி துணிவோடு நீதிமன்றப்படி ஏறி வழக்காடிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.ரி.தவராசாவுக்கு எப்போதும் பக்க பலமாக நின்று சட்ட ஆலோசனைகள் உட்பட பல்வேறு வழிவகைகளிலும் உதவி வந்திருக்கின்றார்.

உயர்நீதிமன்றில் அரசமைப்பு தொடர்பான மிக முக்கிய வழக்குகளை முன்னின்று நெறிப்படுத்தியதன் ஊடாக தனது சட்டப்புலமையையும் வாதத்திறமையையும் இவர் பறைசாற்றி வந்திருந்தார்.

பிரதானமாக குடிமக்களின் அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு விடயங்களில் மிகுந்த கரிசனை கொண்டிருந்தார். மனித கடத்தல்கள், திட்டமிடப்பட்ட அரசியல் படுகொலைகள் போன்ற வழக்குகளுக்காக உயர்நீதிமன்றில் சட்டத்தரணிகள் குழுவோடு நின்று, அவற்றை நெறிப்படுத்தியதன் மூலம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் பேசப்பட்ட பிரபல சட்டத்தரணி ஆவார்.

இவர் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகப் பல பணிகளை ஆற்றியுள்ளதுடன், நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தின் உயிர்ப்யையும் தக்கவைப்பதில் தனது சட்டத்துறை மூலம் முக்கிய வகிபாகத்தை செய்து வந்திருக்கின்றார்.

மேலும், குடியியல் வழக்குகள், பெண்களுக்கு எதிரான அத்துமீறல் செயற்பாடுகள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகி நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஒருபோது பின்னின்றதில்லை. இவரின் திடீர் இழப்பு எமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்  என்றுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது செயற்பட்டவர் கௌரி சங்கரி - தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.