Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

~ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு..........|

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

~ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு..........|

பாகம் - 1

-சபேசன் (அவுஸ்திரேலியா)-

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று, தன்னைத்தானே அழைத்துக் கொண்டு வருகின்ற திரு. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மைக் காலங்களில் அறிக்கைகளையும், ~பகிரங்கக் கடிதங்களையும்| எழுதி வருகின்றார். ~தமிழீழம் என்பது பகல் கனவு என்றும்|, ~தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும்|, ~சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் இப்போதைய பிரச்சனைக்கு உரிய ஒரே தீர்வு என்றும்|, ~தமிழீழத் தேசியத் தலைவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை| - என்றும் திரு ஆனந்தசங்கரி கூறி வருகின்றார்.

~யாரோ சிலரின்| தூண்டுதல் காரணமாக, ~அவர்களுடைய| தேவைகளுக்காகச் செயல்படுகின்ற, - அரசியல் வாழ்க்கையில், ஒழுக்கமோ, குறிக்கோளோ இல்லாத - ஓர் அரசியல்வாதியான ஆனந்தசங்கரிக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை எவருக்கும் இல்லை. அரசியல் ரீதியாக, மக்களால் தெரிவு செய்யப்படாத அரசியல்வாதிகளுக்கு, மக்களால் ஒதுக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு, யாரோ சிலரின் பணத்திலே, யாரோ சிலரின் பலத்திலே இருப்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. அறியாமல் பேசுபவர்களுக்குப் பதில் சொல்லலாம். தெரிந்து கொண்டு, விடயங்களை அறிந்து கொண்டு, ஆனால் வேண்டுமென்றே அரசியலுக்காகக் குதர்க்கமாகப் பேசுபவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைத்தான்.!

ஆனாலும் திரு ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்குப் பதில் சொல்ல விழைகின்றோம்.

ஏன்? எதற்காக??

இன்றைய இளைய தலைமுறைக்கு ஆனந்தசங்கரியைப் பற்றியோ, அவருடைய அரசியல் திருகு தாளங்கள் குறித்தோ தெரியாது. இவரைப் போன்றவர்கள் எவ்வாறு கட்சி விட்டு கட்சி தாவினார்கள், பதவிக்காக எங்கெங்கெல்லாம் ஓடினார்கள், தங்களுடைய கொள்கை இலட்சியங்களிடமிருந்து எவ்வாறு குத்துக்கரணம் அடித்தார்கள் என்று இளைய தலைமுறைக்குத் தெரியாமல் இருக்க கூடும்.! பழைய தலைமுறை, ஆனந்தசங்கரி போன்றவர்களைக் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு ஆனந்தசங்கரியின் சுயரூபம் நன்கு தெரியும். ஆனால் இளைய தலைமுறைக்குச் சில விடயங்களைச் சொல்லவேண்டிய தேவை உள்ளது. அதனால் முக்கியமான சில விடயங்களைச் சொல்ல விழைகின்றோம். இதன்மூலம் திரு ஆனந்தசங்கரியை ஆள்பவர்களின் நோக்கங்களை நாம் அறியக்கூடியதாக இருக்கும்.!

சுதந்திரன் பத்திரிகையின் 09.12.1977 ஆம் ஆண்டு இதழில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 28.11.1977ம் ஆண்டு, சிறிலங்காத் தேசிய அரசுப் பேரவையில், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிய உரையை, சுதந்திரன் பத்திரிகை வெளியிட்டிருந்தது. அந்தத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கீழ்வருமாறு பேசியிருந்தார்:-

~தமிழீழக் கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்கு இன்று காலம் கடந்து விட்டது. தமிழீழம் ஏற்கனவே அமைந்து விட்டது. தமிழீழத்தை (முன்பு) போர்த்துக்கீயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் படைப்பட்டாளம் கொண்டு அடக்கி ஆண்டது போல், (இன்று) நீங்களும் இராணுவ முகாம்களை அமைத்து அடக்கி, ஆள்கின்றீர்கள். உங்களுடைய இராணுவ முகாம்கள்- அவை எத்தனை முகாம்களாக இருந்தாலும், அவற்றை எதிர்த்துச் சுதந்திரத் தமிழீழம் அமையப் போகின்றது!

- இவ்வாறு அந்தத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிலங்கா பாராளுமன்றத்தில் 1977 ஆம் ஆண்டு முழங்கியிருந்தார்.

இவ்வாறு சுதந்திரத் தமிழீழ முழக்கமிட்ட தமிழ்;ப் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்று வாசகர்கள் கேட்கக்கூடும்! அவர் வேறு யாருமில்லை. இன்று ~தமிழீழம் ஒரு பகல் கனவு| - என்று கூறி வருகின்ற திரு வீ.ஆனந்தசங்கரி அவர்கள்தான், அன்று பாராளுமன்றத்தில் ~தமிழீழக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய முடியாது| என்று முழங்கியவராவார்.

இதைத் தவிர திரு ஆனந்தசங்கரி மேலும் பல விடயங்கள் குறித்து, அன்று- 28-11-1977 அன்று- பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தைச் சிங்களப் பொலிஸ் தாக்கியது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் உதவிப் பொலிஸ் அதிபராக இருந்தவரை, பொலிஸ் அதிபராக பதவி உயர்வு கொடுத்து உயர்த்தியிருப்பதாகவும் ஆனந்தசங்கரி தெரிவிக்கின்றார். அது மட்டுமல்லாது, கிளிநொச்சி-வவுனிக்குளத்தில் ஐந்து தமிழ் இளைஞர்கள், சிறிலங்காப் படையினரால் நாயைப்போல் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் குறித்தும்; ஆனந்தசங்கரி அன்று முறையிட்டிருக்கின்றார். அன்று சிறிலங்கா அரசோடு சேர்ந்தியங்கிய ஒரு தமிழ் அமைச்சர் குறித்தும் எள்ளலாக ஆனந்த சங்கரி குறிப்பிட்;டுள்ளார். ~ஒரு தமிழரை அரசாங்கம் குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது. ஒரு 500 வாக்குகளால் தப்பித் தவறி வென்ற ஒரு தமிழரை, செல்வாக்காக அரசு வைத்திருக்கின்றது| என்று ஆனந்த சங்கரி கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆனந்தசங்கரி, அன்று இன்னுமொரு கருத்தையும் வெளியிட்டிருந்தார். ~இன்று (அதாவது 1977ல்) காலம் கடந்து விட்டது. பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு (அதாவது 1957 காலப்பகுதியிலேயே) இந்தப் பிரச்சனையைத் தீர்த்திருக்க வேண்டும். ஆனால் இன்று காலம் கடந்து விட்டது|- என்று ஆனந்தசங்கரி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ~தமிழீழக் கொள்கையை மீள் பரிசீலனை செய்ய முடியாது| என்றும், ~சிறிலங்காப் பொலிஸின் அராஜகங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை| என்றும், ~இராணுவம், தமிழர்களை நாய்களை சுடுவது போல் சுட்டுத்தள்ளுகின்றது| என்றும், ~சிங்கள அரசோடு சேர்ந்து இயங்கும் தமிழர்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டவர்கள|; என்றும், ~சிங்கள இராணுவ முகாம்களை எதிர்த்துச் சுதந்திரத் தமிழீழம் அமையப் போகின்றது| என்றும் பாராளுமன்றத்தில் கூறிய ஆனந்தசங்கரி அவர்கள் இன்று தன்னுடைய இலட்சியத்தைக் காவு கொடுத்துவிட்டு, ~தமிழீழம் ஒரு கனவு| என்றும், ~தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும்| என்றும், ~சமஷ்டி முறையில்தான் தீர்வு| என்றும், ~சிங்கள அரசுகளுடன் ஒத்துப்போவதுதான் நல்லது| என்றும், ~சிங்கள அரசு நல்ல தீர்வு தரும்| என்றும் சொல்லி வருகின்றார்.

முன்னர் ஆனந்தசங்கரி சமசமாஜக் கட்சியிலிருந்து பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு கட்சி மாறியதைப் போல் இன்றும் ஆனந்த சங்கரி ~கட்சி| மாறுகின்றார். ஏனென்றால், ஆனந்தசங்கரியை ஆள்பவர்கள், அவரையும் குத்தகைக்கு எடுத்து விட்டார்கள்.

இவற்றினூடாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது!

ஆனந்தசங்கரியின் இந்தப் பாராளுமன்றப் பேச்சு, பேசப்பட்ட காலம் 1977 ஆம் ஆண்டு! தமிழீழ விடுதலைப் புலிகளுடைய விடுதலைப் போராட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியது, 1972 ஆம் காலப்பகுதியாகும். வேறு தமிழ் அமைப்புக்களும் ஆயுதமுனையில் போராடத் தொடங்கி விட்டன. ஆனந்தசங்கரியின் அன்றைய பேச்சு, தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தால், இராணுவ முகாம்கள் அழிக்கப்படும், பின்னர் தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் எழுந்த பேச்சாகும். இதனூடாகத் தன்னைப் போன்றவர்கள் சொகுசாகப் பதவிக்கு வரலாம் என்று ஆனந்தசங்கரி எண்ணினார். விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றும் ஆனந்தசங்கரி நம்பினார். இதன் அடிப்படையில்தான் அமிர்தலிங்கமும், தன்னுடைய இரண்டாவது மகன் மூலம் ஒரு படையமைப்பை உருவாக்கினார். (இந்தப் படையமைப்புப் பின்னர் கலைக்கப்பட்டு இப்போது அவரது மகன் வெளிநாட்டில் உள்ளார்.) தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி, மற்றைய அமைப்புக்கள் செயல்படுகின்ற காரணத்தினால், தன்னுடைய சொந்தக் கட்டுப்பாட்டுக்குள் ஓர் அமைப்பைக் கொண்டுவர அமிர்தலிங்கம் ஆசைப்பட்டார். இதே ஆசையைத்தான் ஆனந்தசங்கரியும் கொண்டிருந்தார்.

இங்கே அடிப்படையான விடயம் என்னவென்றால், ஆயுதப் போராட்டம் ஊடாகத்தான் தமிழீழத்தை அடையலாம் என்பதே ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கம் போன்றோரின் உறுதியான கருத்தாக அமைந்திருந்தது என்பதேயாகும்.! ஆனால் ஆயுதப் போராட்டம், தங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றுதான் ஆனந்தசங்கரி போன்றோர் விரும்பியிருந்தார்கள். ஆனந்தசங்கரி ஆயுதப் போராட்டத்தை ஆள முடியாத காரணத்தால், எதிரியை எசமானனாக வரித்து, அவர்கள் தன்னையே ஆளும்படி தடம் புரண்டு விட்டார்.!

தான் எழுதிய கடிதங்களுக்குத் தமிழீழத் தேசியத்தலைவர் பதில் தரவில்லை என்று இப்போது புலம்பிக் கொண்டிருக்கும் ஆனந்தசங்கரி அவர்கள், ஒரு விடயத்தை மட்டும் குறிப்பிட (வேண்டுமென்றே) மறந்து விட்டார். சமாதானப் பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஆனந்தசங்கரி அவர்களை வன்னிக்கு வந்து கருத்தாடல்களில் கலந்து கொள்ளுமாறு விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் பலமுறை கேட்டுக்கொண்ட போதும், ஆனந்தசங்கரி அதற்கு இணங்கவில்லை. தன்னைத் தற்போது ஆளுகின்ற சிங்களப் பேரினவாதத்திற்குத் தன்னை அர்ப்பணித்துவிட்டுத் தன்னுடைய துரோகத்தை மூடி மறைக்கும் சதி முயற்சியில் இன்று ஈடுபட்டு வருகின்றார். தமிழினம் யாரையெல்லாம் வெறுத்து ஒதுக்குகின்றதோ, அவர்களையெல்லாம் தலைவர்களாக அல்லது முக்கியமானவர்களாக மாற்றுவது, சிங்கள அரசின் போக்காகும். ஆனந்தசங்கரிக்கும் கருணாவிற்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் யாவரும் ~செயற்கைத் தவைர்களே!.| பதவி கிடைப்பது என்றால், தம்மை முழுமையாக விற்பதற்கும் இவர்கள் தயார்!

இன்று - தன்னை ஆள்பவர்களான, சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் கட்டளைப்படி, - தமிழீழக் கோரிக்கையைக் கைவிடும்படி, தமிழீழத் தேசியத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாக ஆனந்தசங்கரி தெரிவிக்கின்றார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று தன்னை அழைத்துக் கொண்டு வருகின்ற ஆனந்த சங்கரியை இன்று ஆள்பவர்களிடம், ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம்.

உங்களுடைய கட்டளைப்படி, தமிழீழக் கோரிக்கையைக் கைவிடும்படி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற ஆனந்தசங்கரி கோரிக்கை வைத்து வருகின்றார். ஆனால் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதியன்று, தமிழர் விடுதலைக் கூட்டணி, வட்டுக்கோட்டையில், வரலாற்றுப் புகழ் வாய்ந்த ~வட்டுக்கோட்டைத் தீர்மானம்| என்று அழைக்கப்படுகின்ற தமிழீழப் பிரகடனத்தை அறிவித்தது. அதில் உள்ள இரண்டு பந்திகள் வருமாறு:-

~இத்தீவில் உள்ள தமிழீழ நாட்டினத்தின் நிலையான வாழ்வைப் பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், ஒரு சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற சோசலிசத் தமிழீழ அரசை மீள்வித்துப் புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இந்த மகாநாடு தீர்மானிக்கின்றது. ???.|

~சுதந்திரத்திற்கான புனிதப் போரில் தம்மை முற்று முழுதாக அர்ப்பணிக்க முன்வருமாறும், இறைமையுள்ள சோசலிசத் தமிழீழ அரசு என்ற இலக்கை அடையும்வரை, தயங்காது உழைக்குமாறும், தமிழ்த் தேசிய இனத்திற்குப் பொதுவாகவும், தமிழ் இளைஞர்களுக்குச் சிறப்பாகவும், இந்த மகாநாடு அறைகூவல் விடுகின்றது|.

(~புதிய தமிழ்ப் புலிகள்| என்று இயங்கி வந்த விடுதலைப் புலிகள், இந்த வட்டுக்கோட்டை மகாநாட்டிற்கு முன்னதாகவே அதாவது 5.5.1976 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மீளப் பெயர் சூட்டிக் கொண்டமை ஒரு வரலாற்றுத் தகவலாகும்.)

பிறிதாகப் பாராளுமன்றத்திலும் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழக் கோரிக்கையை முன் மொழிந்தவர்களில், கிளிநொச்சித் தொகுதியைச் சேர்ந்த வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் ஒருவராவார்!

ஆனந்தசங்கரி அவர்களின் எசமானர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி இதுதான்:-

~தமிழீழக் கோரிக்கையைக் கைவிடும்படி, உங்களது சிந்தனையைச் சொல்கின்ற ஆனந்தசங்கரியின் கட்சியான ~தமிழர் விடுதலைக் கூட்டணி| தன்னுடைய வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மாற்றி விட்டதா? பாராளுமன்றத்தில் தமிழீழப் பிரகடனத்தை முன்மொழிந்த ஆனந்த சங்கரி, அதனை உத்தியோக பூர்வமாக மீளப்பெற்று கொண்டு விட்டாரா?| இல்லையென்றால் - அவற்றை அவர் செய்யுமாறு, அவருக்கு ஆணையிடுங்கள், அவருடைய எசமானர்களே!

அரசியல் தலைவர்கள் மாறி மாறி வரக்கூடும். ஆனால் தமிழ் மக்களால் கொடுக்கப்பட்ட, தமிழ் மக்களால் அறிவிக்கப்பட்ட, தமிழ் மக்களின் வேட்கையைப் பிரதிபலித்த அந்தக் கோட்பாடு இன்னும் மாறவில்லை. ஆனந்தசங்கரி இன்று தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல! தமிழ் மக்களுக்காகப் பெரிய போராட்டங்களையும் நடாத்திய வரும் அல்ல! சிங்களப் பௌத்தப் பேரினவாத எசமானர்களது வேலைக்காரனின் கூக்குரல், தமிழ் மக்களிடம் பலிக்காது.

இன்று இந்திய சமஷ்டி முறையின் அடிப்படையில் ஒரு தீர்வை அடையலாம் என்று ஆனந்த சங்கரி தன்னை ஆள்பவர்களுக்காகக் குரல் கொடுத்து வருகின்றார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையே தூக்கி எறிந்து விட்ட இவரது எசமானர்கள், தமிழர்களுக்கு ஒன்றும் தரப்போவதில்லை என்பது வெளிப்படையான விடயம்தான்!. இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறையானது இலங்கைக்கு உகந்தது அல்ல என்பதையும் நாம் முன்னரும் தர்க்கித்து வந்துள்ளோம். எனினும் ஆனந்த சங்கரி அவர்களின் எசமானர்களது பார்வைக்காக, இந்திய சமஷ்டி ஆட்சிமுறை குறித்துச் சில கருத்துக்களைத் தர விழைகின்றோம்.

~இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை என்பது, உண்மையிலேயே ஒரு முழுமையான சமஷ்டி ஆட்சி முறையா?| என்ற கேள்விக்கு ~இல்லை| என்பதுதான் சரியான பதிலாகும்! ஏனென்றால் இந்திய சமஷ்டி ஆட்சி முறை அடிப்படையில் ஓர் ஒற்றையாட்சி முறையைக் கொண்டதாகும்.

உப கண்டம் என்று சொல்லக்கூடிய இந்தியாவின் விரிந்து பரந்துள்ள பாரிய நிலப்பரப்பானது, பல்வேறு மொழி பேசுகின்ற, பல்வேறு தேசிய இனங்களை, மாநில ரீதியாகக் கொண்டிருந்தாலும், அங்கே மத்தியிலேதான் அதிகாரம் அமைந்துள்ளது. மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க முடியும். சர்க்காரியா கமிஷன் அதிகாரப் பரவலாக்கலைச் சிபாரிசு செய்திருந்தாலும், பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை போன்ற பல விடயங்களில் மத்திய அரசுதான் இறுதி முடிவுகளை எடுக்கும். மொழி வழி மாநிலங்களாக, ஆட்சியின் சில அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை என்பது அடிப்படையில் ஓர் ஒற்றை ஆட்சி முறைதான்! இந்தி மொழி மசோதாவை ஓர் உதாரணத்திற்கு நாம் சுட்டிக்காட்டலாம்.!

ஆயினும் இந்திய சமஷ்டி ஆட்சி முறை, இன்றைய காலகட்டத்தில் ஓர் ஒற்றையாட்சி முறையைக் கடந்து செல்வதையும் நாம் காண்கின்றோம். கடந்த பல ஆண்டுகளாக மாநில அரசுகள் வலுப்பெற்று வருகின்றன. முன்னரைப்போல் ஒரு கட்சியின் தனி ஆட்சியாக, இன்று மத்திய அரசு இல்லை. தாயகக் கோட்பாட்டில், வெளிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், திட்டமிட்ட குடியேற்றங்களை மத்திய அரசு செய்ய முடியாது. இந்தியாவின் ஊடகத்துறையும், நீதித்துறையும் பல குறைகளைக் கடந்து மெதுவாக வலுப்பெற்று வருவதையும் நாம் இப்போது காண்கின்றோம். சுருக்கமாச் சொன்னால், அடிப்படையில் ஓர் ஒற்றையாட்சி முறையைக் கொண்டுள்ள இந்திய சம~;டி ஆட்சி முறை தனது ஒற்றையாட்சித் தன்மையை மெதுவாக இழந்து வருகின்றது என்று கூறலாம்.

இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை, ஒரு முழுமையான சமஷ்டி ஆட்சி முறை அல்ல என்ற கருத்தைத் தர்க்கித்த நாம், அதே வேளை தற்போது இந்தியா தனது ஒற்றையாட்சிக்குரிய தன்மையை மெதுவாக இழந்து வருவதையும் சுட்டிக்காட்டியிருந்தோம். இரண்டு வேறு தளங்களில் இருந்து, இக்கருத்துக்களை நாம் தர்க்கித்தமைக்குக் காரணம் உண்டு!

இந்தியாவையும், இலங்கையையும் சமஷ்டி ரீதியில் ஒப்பிட முடியாது என்பதையும், அப்படி ஒப்பிட முனைவது தவறானது என்பதையும் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் நாம் மேற்கூறிய விடயங்களைத் தர்க்கித்திருந்தோம்.

இந்தியாவின் சம~;டி ஆட்சி முறை ஏன் இலங்கைக்குப் பொருந்தி வராது என்பது குறித்து மேலும் சில முக்கிய காரணிகளை இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமானதாகும்.

- இன்று இந்தியாவில் அமையக் கூடிய மத்திய அரசு, ஒரு கட்சி ஆட்சியாக இல்லை. பல மொழிகளைப் பேசுகின்ற பல இனங்களைச் சேர்ந்த கட்சிகளின் ஆதரவு மத்திய அரசுக்கு தேவையாக உள்ளது. ஆனால் இலங்கையில் பெரும்பான்மை இனக்கட்சியின் ஆட்சியாகவோ அல்லது பெரும்பான்மை இனத்தவர்கள் சேர்ந்த கட்சிகளின் ஆட்சியாகவோதான், அரசு அமைவதற்குரிய நிலைமை உள்ளது!

- இந்தியாவில் சிறுபான்மை இனத்தவருக்கு எதிராகச் சட்டத்தை மாற்றுவதற்கு முடியாது. ஆனால் இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை, தமிழ் இனத்திற்கு எதிராகச் சட்டத்தை மாற்றும். மாற்றியும் உள்;ளது!. இந்திய சமஷ்டி ஆட்சி முறை, அதாவது பல்லின பல மொழிகளைப் பேசுகின்ற பல தேசிய இனங்களை உள்ளடக்கிய சம~;டி ஆட்சி முறையானது, ஒரு தனிப் பெரும்பான்மை இனம் செய்யக்கூடிய அநீதிகளைத் தடுத்து நிறுத்தும். அந்த நிலைமை இலங்கைச் சமஷ்டி ஆட்சி முறையில் ஏற்பட வழியில்லை.

- இந்தியா சுதந்திரம் அடைந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் பல்வேறு பிரச்சனைகளையும், இடர்களையும் சந்தித்தபோதும், ஒப்பீட்டளவில், தன்னகத்தே உள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களை அழித்தொழிக்க முயன்றதில்லை. இந்தியா தன் முழுத்தேசத்தின் சகல மக்களுக்கும் உரிய வளர்ச்சியை நோக்கியே நகர்ந்து வந்துள்ளது. மாறாக, சிறிலங்கா அரசோ இலங்கைத் தீவில் வாழுகின்ற ஒரு தேசிய இனமான தமிழினத்தை அழிக்கின்ற இன அழிப்புச் செயல்களிலும், அந்த இன மக்களின் பொருளாதார வளர்ச்சிகளை அழிப்பதற்குரிய செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளது.

- தனிப் பெரும்பான்மை இனத்தின் ஆட்சி இல்லாத இந்தியாவில், அதனது நீதித்துறை ஒப்பீட்டளவில், மதிப்பிற்குரிய வகையில் செயல்பட்டு வருகின்றது. ஆனால் சிறிலங்காவில், அதன் அரசு மட்டுமல்ல, அதன் நீதித்துறையும் நீதிக்குப் புறம்பான செயல்களை மட்டுமே புரிந்து வருகின்றன. ஓர் உதாரணத்திற்கு, சுனாமி நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்புக்கு, சிறிலங்காவின் நீதித்துறை விதித்த இடைக்காலத் தடையுத்தரவைக் குறிப்பிடலாம்.

- இவற்றைத் தவிர வேறு சில சரித்திர நிகழ்வுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய தேசம் என்பது மிகப் பெரிய போராட்டத்தின் பின்பு, எத்தனையோ பாரிய இழப்புக்களின் பின்பு, வேதனைகளின் பின்பு தனது சுதந்திரத்தைப் பெற்றது. இந்தியா தனது சுதந்தரத்திற்காகக் கொடுத்த காலத்தின் விலையும் பெரிதுதான்! மிகப் பெரிய போராட்டத்தின் மூலம் தனது சுதந்திரத்தினைப் பெற்றதன் காரணமாகவோ என்னவோ, சுதந்திரத்தின் பின்னர் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் இந்தியாவில் நடாத்தப்படாமலேயே, மொழிவாரி ரீதியாகவும் மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

- ஆனால் இலங்கைத் தீவோ, அப்படியல்ல! ஒப்பீட்டளவில் இலங்கைத் தீவு இரத்தம் சிந்தாமலேயே தன் சுதந்திரத்தைப் பெற்றது. இங்கே இரத்தம் சிந்தியவர்கள் இன்னொரு தேசிய இனமான தமிழர்கள்தான்! தமிழர்கள் அதிகம் இரத்தம் சிந்தியதும், இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகுதான் தமிழர்களை இவ்வாறு இரத்தம் சிந்த வைத்தது, இரத்தம் சிந்தாமலேயே சுதந்திரத்தைப் பெற்றுவிட்ட சிங்களப் பௌத்தப் பேரினவாதம்தான்!

- ஒரு புறம் இந்திய தேசமானது, கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில். பல தேசிய இனங்களோடு இணைந்து குறிப்பிடத்தக்க வளர்ச்;சியை நோக்கி நகர்ந்;தது. ஆனால் மறுபுறம், இலங்கைத்தீவில் பெரும்பான்மைச் சிங்கள இனம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக, மற்றைய தேசிய இனமான தமிழினத்தை அழித்தொழிப்பதையே முன்னெடுத்து வந்துள்ளதை நாம் மேற்கூறிய கருத்துக்களோடு மீண்டும் இணைத்துப் பார்ப்பது பொருத்தமானதாகும்!

- இந்திய தேசம் என்பதானது இரண்டு தேசிய இனங்களையும், இரண்டு தேசிய மொழிகளையும் மட்டும் கொண்டுள்ள தேசமல்ல! பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டுள்ள தேசமாகும்! அத்தோடு, தன்னிச்சையாக ஒரு பெரும்பான்மைத் தேசிய இனம், மற்றைய தேசிய இனத்தை அழித்து விடுவதற்கு முயல முடியாது. அதற்கு மற்றைய சிறுபான்மைத் தேசிய இனங்களும் அங்கு இடம் கொடுக்காது. ஆகவே அடிப்படையில், இந்திய தேசமும் அது எதிர்கொள்ளுகின்ற பிரச்சனைகளும்;;;; இலங்கைத்தீவும் அது எதிர் கொள்ளுகின்ற பிரச்சனைகளும் எதிர்மாறானவை! ஆகவே இந்தியாவின் சமஷ்டி முறை ஆட்சி என்பதானது இலங்கையின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்காது! மாறாகப் பிரச்சனையை மேலும் அதிகரிக்கவே செய்யும்!! இது நாமெல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயமாகும்!!!

ஆகவே இந்தியாவின் உள்ள ஆட்சி முறையை மீறி, அதற்கும் மேலாக, ஈழத் தமிழர்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது, கொடுக்க முடியாது என்ற சிந்தனை முற்றிலும் மூடத்தனமானதாகும். இந்தச் சிந்தனை முதலில் மாற வேண்டும். இன்று இந்தியாவே பாரிய அதிகாரப் பரவலாக்கலை நோக்கி நகர்ந்து செல்கின்றது என்ற யதார்த்தத்தையும், ஆனந்த சங்கரியின் எசமானர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய சமஷ்டி ஆட்சி முறை ஈழத்தமிழர்களுக்குப் பொருந்தி வராது.

காலத்தைக் கடத்தும் பொருட்டு ஆனந்தசங்கரி மூலம், இந்திய சமஷ்டி ஆட்சி முறை பற்றிப் பேசி வருகின்றார்கள், அவரது எசமானர்கள். இந்தியா கொண்டு வந்த 13 ஆவது சட்டத்திருத்தத்தையே தூக்கி எறிந்துவிட்ட சிங்கள அரசா, இந்திய சமஷ்டி ஆட்சி முறையை இலங்கையில் அமல் படுத்தும்.? அது பொருத்தமற்றதாக இருந்தாலும் கூட, சிங்களப் பௌத்த பேரினவாத அரசு, தமிழர்களுக்கு எதையும் தரப்போவதில்லை!

தமிழீழக் கொள்கையில் இருந்து குத்துக்கரணம் அடித்த ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல் பின்புலத்;தைப் பற்றியும், அவருக்குள்ளே இருக்கின்ற முரண்பாடுகள் பற்றியும், தன்னுடைய புதிய எசமான விசுவாசம் காரணமாக அவர் பேசி வருகின்ற இந்திய சமஷ்டி ஆட்சி முறையில் உள்ள பொருத்தமற்ற தன்மை குறித்தும் இதுவரை தர்க்கித்திருந்தோம். தன்னுடைய எசமானர்களின் பொருட்டு அவர் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கான பதில்களை எமது அடுத்த வாரக் கட்டுரை ஊடாகத் தர விழைகின்றோம்.!

http://www.tamilnaatham.com/articles/2007/jul/sabesan/10.htm

இவ் ஆய்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ன் ~தமிழ்க்குரல்| வானொலியில் 09.07.07 ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

'ஆனந்த சங்கரியை ஆள்பவர்களுக்கு...!' - பாகம் இரண்டு

திரு ஆனந்தசங்கரி அவர்களினூடாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, திரிபுபடுத்திப் பல கருத்துருவாக்கங்களை, அவரை ஆள்பவர்கள் முன் வைத்து வருகின்றார்கள். எமது கடந்த வாரக் கட்டுரையூடாக, தமிழீழக் கொள்கையில் இருந்து குத்துக்கரணம் அடித்த ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல் பின் புலத்தைப் பற்றியும், அவருக்குள்ளே இருக்கின்ற முரண்பாடுகள் பற்றியும், தன்னுடைய புதிய எசமான விசுவாசம் காரணமாக அவர் பேசி வருகின்ற, இந்திய சம~;டி ஆட்சி முறையில் உள்ள பொருத்தமற்ற, பொருந்தி வராத தன்மை குறித்தும் தர்க்கித்து, அவரை ஆள்பவர்களுக்குப் பதில் சொல்லியிருந்தோம். ஆனநதசங்கரியூடாக, அவரை ஆள்பவர்கள் முன்வைத்துள்ள, திசை திருப்பும் கருத்துக்களுக்கான பதில்களை, எமது இந்த வாரக் கட்டுரையூடாகத் தர்க்கிக்க விழைகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு, ஐக்கிய இலங்கைக்குள், (இந்திய முறையிலான) சம~;டி அடிப்படையிலான தீர்வை ஏற்பார்களேயானால், அதற்குப் பெரும் வரவேற்புக் கிடைப்பது மட்டுமல்லாது, ஆச்சரியப்படக் கூடிய விதத்தில் எதிர்பாராதவர்களின் ஆதரவு கூடக் கிடைக்கும் என்றும், இந்தியாதான் இலங்கையைக் காப்பாற்ற வல்லது என்ற ரீதியிலும், ஆனந்தசங்கரி தன்னை ஆள்பவர்களின் திசை திருப்பும் கருத்தொன்றை முன் வைத்துள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலமாக, இந்தியா கொண்டு வந்த 13வது சட்டத் திருத்தத்தையே, மகிந்த ராஜபக்சவின் அரசு இன்று தூக்கியெறிந்து விட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தைக் கூட, செயற்படுத்தாத நிலையில்தான் சிpறிலங்கா அரசு உள்ளது. தவிரவும், 13வது சட்டத்திருத்தம், பிரிவினைக்குரிய திருத்தம் கூட அல்ல! இதைக்கூட சிங்கள அரசு தூக்கியெறிந்து விட்டது என்றால், சிங்கள அரசு, தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு எதையும் சமாதான முறையில் தரப்போவது இல்லை என்பதே புலனாகிறது. இரண்டு அரசுகளாலும் இணக்கப்பாடு காணப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட விடயத்தைத் தூக்கி எறிந்து, கிழக்கு மாகாணத்தைத் தனித் தனியாகப் பிரித்து, புதிய கொடிகளை உருவாக்கி, தமிழர்களைத் துரத்தியடித்து, ஒப்பந்தத்தின் அடிப்படையையே சிதைத்து விட்ட, சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசை, இந்த ஒப்பந்தத்திற்காகப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற இந்திய அரசால் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை. மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி- என்று சொல்லி வந்தவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனையே அமலாக்க முடியாத இந்தியாவும், சர்வதேசமும் என்ன ஆதரவைத் தந்து, எதைத்தான் நிறைவேற்றப் போகின்றன?

ஷதமிழீழத் தேசியத் தலைவர் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, ஐக்கிய இலங்கைக்குள் சம~;டி முறையிலான ஒரு தீர்வை ஏற்றால், அவருக்கு நாட்டு நிர்வாகத்தில் ஒரு கணிசமான பங்களிப்புக் கிட்டும்| என்கின்ற ரீதியிலும், திரு ஆனந்தசங்கரி தனது எசமானர்களின் கருத்தொன்றை முன் வைக்கின்றார். இது குறித்து நாம் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட விழைகின்றோம். இந்திய-இலங்கை ஒப்பந்தம் தமிழீழத் தேசியத் தலைவருக்குப் பதவியையும், அந்தஸ்தையும் கொடுக்க முன் வந்த ஒப்பந்தமாகும். ஆனால், இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற, அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்காத ஒப்பந்தம் என்ற காரணத்தினால், தேசியத் தலைவர் அதனை ஏற்கவில்லை. அத்தோடு, இந்த ஒப்பந்தத்தையும், சிங்களப் பேரினவாத அரசு தூக்கியெறிந்து விடும் என்று, தேசியத் தலைவர் அன்றே தீர்க்க தரிசனமாகச் சொன்னார். அது அவ்வாறே நடந்தது. நீங்களாக (ஆனந்த சங்கரியாக) இருந்தால், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, தமிழீழ மக்களை மீண்டும் ஏமாற்றியிருப்பீர்கள்! பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் மட்டும் வாழவேண்டும் என்றால், உங்களுடைய கடிதங்களில் சொல்லப்படுகின்றபடி வாழலாம்தான்! ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக வாழ்ந்து, சொத்துக்கள்-வாகனங்கள் போன்றவற்றை வாங்கி, தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராகக் கடிதங்களையும் அறிக்கைகளையும் எழுதி, சுகமாக வாழ்ந்து முடித்து, வானுலகமோ, எந்த உலகமோ போய்ச்சேரலாம்தான். ஆனால் அது நேர்மையற்ற வாழ்க்கையாகும்!

வேலுப்பிள்ளை பிரபாகரன் இதற்காகப் பிறக்கவில்லை !

ஆனந்த சங்கரியைப் போன்ற அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக விடுதலைப் போராட்டத்தோடு இணைந்து நின்றிருந்தால், தமிழீழ விடுதலை மிகச் சுலபமாகியிருக்கும். இவர்களைப் போன்ற சந்தர்ப்பவாத, சுயநல அரசியல்வாதிகள் குழப்புவதால்தான் சிக்கல்கள் உருவாகின்றன. ஆனந்தசங்கரி போன்றவர்களின் கடிதங்களும், அறிக்கைகளும் அவர்களை ஆள்பவர்களுக்காக, இவர்கள் செய்கின்ற வேலைகள்தான்! இவர்களைப் போன்றவர்கள் தங்களுக்காக என்னவெல்லாம் செய்கின்றார்களோ அவற்றைத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்யவில்லை என்பதுதான் சிங்கள அரசுகளின் கோபமாகும். ஆனந்தசங்கரிக்கும் அதுதான் கோபம். இவர்களுக்குத் தமிழ் மக்கள் முக்கியமில்லை. தனி நபரின் சுயநலவாழ்வுதான் முக்கியம். இதுதான் இவர்களுக்கும் தேசியத் தலைவருக்கும் உள்ள வித்தியாசம்!

தமிழர்களின் நலனில் தான் அக்கறை கொண்டவன் என்று திரு ஆனந்தசங்கரி சொல்லி வருகின்றார். தமிழர்களின் நலனில் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ளவர்கள் எவருமே, தமிழீழம்தான் சரியான தீர்வு என்ற கருத்தில் உறுதியாக ஒருமித்துத்தான் உள்;ளார்கள். ஆனால் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டவன் என்று சொல்லி;க்கொண்டு, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது அக்கறையானவர் செய்யக் கூடிய செயல் அல்ல! அந்தச் செயலுக்கு வேறு ஒரு பெயர்தான உண்டு!

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை, சிங்கள அரசுகள் தீர்க்காததால்தான் நிலைமை சிக்கலாகியது என்பதையும், சிங்கள அரசுகள் பிரச்சனையைத் தீர்க்காமல் இழுத்தடிக்கின்றன என்பதையும் இன்று சர்வதேசமும் விளங்கிக் கொண்டுதான் உள்ளது. ஆனால் ஆனந்தசங்கரி; போன்றவர்கள் பிரச்சனையை நன்கு விளங்கிக் கொண்டுள்ள போதிலும் விளங்காத மாதிரி நடிப்பது தமிழர்களி;ன் நலன்மீது அக்கறை கொண்டவர்களின் செயல் அல்ல, என்பதைத்தான் தெளிவாக்குகின்றது. தமிழர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ளவர் தமிழர்களுக்கான சரியான தீர்வை வலியுறுத்த வேண்டும். தமிழர்களுக்கான சரியான தீர்வு தமிழீழம்தான்! இதனை வலியுறுத்துவதுதான் ஆனந்தசங்கரியுடைய முழு நேர வேலையாக இருக்க வேண்டும். ஆனால் இன்று அவர் செய்யும் வேலை என்ன?

தேசியத் தலைவர் பிரபாகரன் குழப்பாமல் இருந்திருந்தால், மிகப் பிரபல்யமான அஹிம்சைவாதி தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, சமாதான முறையில் தீர்வு ஒன்றைக் கண்டிருக்கும் என்று ஆனந்த சங்கரி இன்று குறிப்பிடுகின்றார். ஷமிகப் பிரபல்யமான அஹிம்சைவாதி| - என்று தந்தை செல்வநாயகத்தைப் புகழுகின்ற ஆனந்தசங்கரி, தான் அன்று தந்தை செல்வாவை மிகக் கீழ் நிலையில் வைத்துப் பண்பாடற்ற முறையில் திட்டித் தீர்த்ததையும், அவரைப்பற்றி அவதூறாகப் பேசியும், எழுதியும் வந்ததையும் ஏனோ குறிப்பிட மறந்து விட்டார். ஆனந்தசங்கரி அவர்கள்தான் அன்றிலிருந்து இன்றுவரை கொள்கையிpல் உறுதியான பிடிப்பில்லாமல், தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வைக் குழப்பி வருகி;ன்றார். குழப்புவது ஆனந்தசங்கரியே தவிர தேசியத் தலைவர் அல்ல! தந்தை செல்வா அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த தமிழீழக் கோரிக்கையை இன்று குழப்புவது திரு ஆனந்த சங்கரி அல்லவா? இவ்வாறு ஆனந்த சங்கரி குழப்;புவது தந்தை செல்வா அவர்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், தமிழர்களுக்கும் செய்கின்ற துரோகம் அல்லவா?

முன்னர் 15ஆயிரம் அதிகப்படி வாக்குகள் பெற்று ஓர் அமைச்சரையே தோற்கடித்த தனக்கு, பின்னால் வெறும் 187 வாக்குகள் மட்டுமே கிடைத்ததற்கும் விடுதலைப் புலிகளைத்தான் ஆனந்த சங்கரி குற்றம் சாட்டுகின்றார். இங்கே சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழர்களின் உரிமைக்குரலுக்கு ஆதரவாக இருந்தபோது, ஆனந்தசங்கரி வென்றார் என்பதுவும், தமிழர்களின் உரிமைக் குரலுக்கு எதிராக இருந்தபோது ஆனந்தசங்கரி தோற்றார் என்பதுவும்தான். ஆனந்தசங்கரி மட்டுமல்ல, அமிர்தலிங்கமும் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்தான். அமிர்தலிங்கம் வடக்கிலிருந்து மட்டக்களப்பு சென்று, இந்திய ஆதரவுடன் தேர்தலில் நி;ன்று, அங்கேயும் தோற்றார். இவர்களுடைய அரசியல் தோல்விகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை. தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களைக் காலம் காலமாக புறக்கணித்தே வந்துள்ளார்கள் என்பதுதான் வரலாற்று உண்மையுமாகும்!

ஷதமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் இன்றைய பேரழிவுக்குக் காரணம்| என்று, ஆனந்தசங்கரி அவர்கள் தன்னுடைய ஆள்பவர்களின் கருத்தை முன்வைக்க்pன்றார். தமிழ் மக்களுடைய உயிரழிவையும் அவர்களுடைய பொருளாதார அழிவையும் ஆனந்தசங்கரி பட்டியல் இட்டுக் காட்டியிருக்க்pன்றார்.

இவ்வாறு தமிழர்களின் பேரழிவையும், பொருளாதார அழிவையும் ஆனந்த சங்கரி சுட்டிக் காட்;டுவதன் மூலம், தெரிந்தோ தெரியாமலோ ஓர் உண்மையையும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் பேரழிவுகளையெல்லாம் சிங்கள அரசுகளே செய்துள்ளன என்பதை ஆனந்தசங்கரியே ஒப்புக் கொண்டுள்ளார் என்றுதான் பொருள். இந்தப் பேரழிவு ஏன் வந்தது? இந்தப் பேரழிவுகளைத் தமிழ்மக்கள் தொடர்ந்;து எதிர் கொண்டு வந்தபோது தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட ஆனந்தசங்கரி என்ன செய்து கொண்டிருந்தார்? சிங்கள அரசுகளுக்கு பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரா?

சுய சிந்தனையின்படி எழுதாத காரணத்தினாலோ என்னவோ, தமிழீழ விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டுகின்ற ஆனந்தசங்கரி அவர்கள், சில உண்மைகளையும் எழுதி விட்டார். அவருடைய வசனங்களைக் கிழே தருகின்றோம்.

ஷதனிச் சிங்களச் சட்டத்தை மைல் கல்லாக வைத்துப் பார்த்தால் எமது இனப்பிரச்சனை 50வயதைத் தாண்டி விட்டது. அப்போது (பிரபாகரன்) பிறந்திருக்கவில்லை அல்லது குழந்தையாக இருந்திருப்பார்.|

ஷசகல இன மக்களும் அமைதியாக வாழ்ந்த நாட்டிற்கு அழிவைக் கொண்டு வந்ததே தனிச்சிங்கள சட்டம்தான்.!|

உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் குழப்பப்படாதிருந்தால், கடந்த 50 ஆண்டுகளில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களும், பல கோடானுகோடி பெறுதியான சொத்துக்களும் இழக்கப்படாது காப்பாற்றியிருக்க முடியும். சில அரசியல் தலைவர்களின் முரட்டுப்பிடிவாதமே இத்தனை இழப்புக்களுக்கும் காரணமாக இருந்துள்ளது. ……. அதற்குரிய விடையை இன்றைய தலைமுறையினர் கூறட்டும்.|

இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும், தமிழ் பேசும் மக்களின் காலை வாரிவிட்டு நாட்டுக்குப் பெரும் அபகீர்த்தியை எவ்வாறு ஏற்படுத்தினர் என்பதையும், அதனாலேயே 70 ஆயிரம் பேரின் உயிர்களையும், பலகோடி பெறுமதியான சொத்துக்களையும் நாடு இழந்தது என்பதையும் இளம் தலைமுறையினர் அறிய வேண்டும்.|

ஷபண்டா - செல்வா ஒப்பந்தம், ட்டலி-செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றை நிறைவேற்றாது, மாறிமாறி ஆட்சிப்பீடமேறிய அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் சிறுபான்மையினரைப் புறக்கணித்து விட்டன என்பதை ஒருவரும் உணராது இருக்க முடியாது.|

ஜேஆர் ஜெயவர்த்தனா ………… இனப்பிரச்சனைத் தீர்வில் பெரிய அக்கறை காட்டவில்லை.|

தீங்கு விளைவிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் செய்பவர்கள் உலகத்திலேயே எமது நாட்டில் மட்டும் இருப்பது ஆச்சரியமே! உதாரணம் - கண்டி தலதா மாளிகாவிற்கு மேற்கொள்ளப்பட்ட யாத்திரை|.

ஷபண்டா செல்வா ஒப்பந்தம் 1957ம் ஆண்டு அமல் படுத்தப்பட்டிருப்பின், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களும், பலகோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். கறுப்பு யூலை 1983 கலவரத்தைத் தடுத்திருக்க முடியும். 70 ஆயிரம் பேரின் உயிரைக் குடித்த இந்தப் போரையும் தடுத்திருக்கலாம். இந்த இழப்புக்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? இவற்றிற்கும் இதேபோன்ற எதிர்கால் நிகழ்வுகளுக்கும் எமது நாட்டில் உள்ள சில சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்.|

இவ்வாறு தன்னையும், தன்னுடைய எசமானர்களையும் தெரிந்தோ தெரியாமலோ ஆனந்தசங்கரி தோலுரித்துக் காட்டியிருந்தாலும், தன்னுடைய எசமானர்களுக்கான சப்பைக்கட்டு வாதங்களை முன்வைக்கவும் தவறவில்லை.

1970ம் ஆண்டு தரப்படுத்தல் என்ற துயரமான முடிவு எடுக்கப்பட்ட போதும் 1977ம் ஆண்டு ஆட்சி புரிந்த அரசு எல்லோருக்கும் திருப்தி தரக்கூடிய ஒரு திட்டத்தை வகுத்தது| என்று ஆனந்தசங்கரி கூறுகின்றார்.

இங்கே சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், 1977களில்தான் நீங்கள் தமிழீழத்திற்கான தேர்தலில் நின்றீர்கள். சிறிலங்கா அரசுகளின் திட்டங்களில் திருப்தி இல்லாத காரணத்தினால்தான் தமிழீழத்தைப் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தீர்கள். அரசின் திட்டம் சரியில்லை, ஏமாற்றுவித்தை என்பதுதானே அதற்கு காரணமாக இருந்தது. இன்று தலைகீழான ஒரு காரணத்தை நீ;ஙகள்தான் சொல்கின்றீர்கள்.

பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் நிறைவேற்றப் படாததைச் சுட்டிக் காட்டுகின்றார் ஆனந்தசங்கரி. இங்கே சொல்லப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இவை நிறைவேறாமல் போனதற்கு தமிழ் மக்கள் காரணம் இல்லை என்பதுதான். சிங்கள அரசியல்வாதிகளுக்கு அப்பால், சிங்கள பொதுமக்களும் பௌத்த பீடாதிபதிகளும் இந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப் பட்டதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால் இவர்களையும் தூக்கிப் பிடிக்கின்ற வேலையையும் ஆனந்த சங்கரி செய்கின்றார். அதனைப் பின்னர் தர்க்கிப்போம்.

திரு ஆனந்தசங்கரி அவர்கள், முன்னாள் அரச அதிபரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை மிகச் சிறந்த தீர்வாக கணிக்கின்றார். ஷநாம் இழந்த இன்னொரு சந்தர்ப்பம், இதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட தீர்வுகளில், மிகச் சிறந்த தீர்வாகக் கணிக்கப்பட்ட, 1995ம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வாகும். பலர் அதை ஏற்றுக் கொண்டனர். அத்தீர்வு ஏற்கப்பட்டு அமல்படுத்தப்பட்டிருந்தால், பெறுமதி மிக்கப் பெரும் தொகையான சொத்துக்கள், 12 ஆண்டுகால யுத்தத்திற்காகச் செலவிடப்பட்ட பெருந்தொகைப் பணம், யுத்தமுனையில் இழக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அத்தனையையும் காப்பாற்றி இருக்க முடியும். ….. இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்;பட்ட உயிர்ச்சேதம் பொருட்சேதத்திற்கு யார் பொறுப்பாளி? என்று ஆனந்த சங்கரி தனது எசமானர்களுக்காக கேள்வி எழுப்புகின்றார்.

ஆனந்தசங்கரி புகழுகின்ற சந்திரிக்கா அம்மையார் முன்வைத்த தீர்வுத் திட்டம் தான் என்ன? அதற்கு என்ன நடந்தது?

சந்திரிகா அம்மையார் யூனியன் அதிகாரம் (ருnழைn Pழறநச) என்று ஒரு திட்டத்தைத் தயாரிக்க முனைந்தார். ஒற்றையாட்சி முறையிலிருந்து வெளியில் வருவதற்கான திட்டம்தான் அது. இரட்டையாட்சியல்ல! தொகுதிகளை மாநிலங்களாகப் பிரி;ப்பது என்ற அடிப்படையில் ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டத்தை முன்வைக்க சந்திரிக்கா முயன்றார். ஆனால் அவரே அந்த அதிகாரங்களைக் குறைத்துக் குறைத்துக் கொண்டு போய் ஈற்றில் சிங்கள மக்களின் எதிர்ப்பால் அதனைக் கைவிட்டு விட்டார். பண்டாரநாயக்காவின் திட்டத்தை பண்டாரநாயக்காவே கிழித்தெறிந்தார். சந்திரிக்காவின் திட்டத்தை சந்திரிக்காவே கைவிட்டார். இத் திட்டங்கள் கைவிடப்பட்டதற்கு காரணம் தமிழர்கள் அல்ல! சிங்கள மக்கள்தான் காரணம்!. சிங்கள மக்கள் பண்டாரநாயக்காக் காலத்திலும் தீர்வுக்கு எதிர்ப்புத்தான்! சந்திரிக்கா-மகிந்த காலத்திலும் தீர்வுக்கு எதிர்ப்புத்தான்!

ஆனந்தசங்;கரி அவர்கள் இன்னுமொரு திட்டம் பற்றியும் கூறுகின்றார். ஷசட்டவல்லுனர்களையும், அனுபவம் வாய்ந்த அரசியல் யாப்புச் சட்;டத்தரணிகளையும் கொண்ட நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கும், சர்வதேச சமூகத்திற்கும் ஏற்புடைய அரசில் தீர்வுத்திட்ட நகல் ஒன்று தயாரிக்கப்பட்டது. அது சி;றுபான்iயினரின் அபிலாசைகளுக்கு ஏற்புடையதாய இருந்தும், எல்லேருக்கும் தெரிந்த ஒரு காரணத்தினால் எதிர்பாராத வகையில் நிராகரிக்கப்பட்டது. அந்த நகலை ஏற்கும்படி வேண்டப்பட்டிருந்தால் நிலைமை முற்று முழுதாக மாறியிருக்கும்| என்று ஆனந்தசங்கரி சொல்லி வருத்தப்படுகின்றார்.

இந்த விடயத்திற்குரிய பதிலை அல்லது தெளிவை ஆனந்தசங்கரி அவர்கள்தான் தரவேண்டும். இது என்ன தீர்வுத் திட்டம்? இது யாரால் தயாரிக்கப்பட்டது? இது யாரால் நிராகரிக்கப்பட்டது என்பது ஆனந்தசங்கரிக்கும், அவருடைய எசமானர்களுக்கும்தான் தெரியும்! எமக்குத் தெரியாது!

ஆனந்தசங்கரி அவர்கள் சிpறிலங்கா படையினருக்காகவும் வக்காலத்து வாங்குகின்றார். புத்திஜீவிகள், கல்விமான்கள் பல்வேறு தரப்பட்ட அரச ஊழியர்கள் …… என்பவர்களில் ஒருவர்தானும் (சிpறிலங்கா) அரசபடையினரால் கொல்லப்பட்டிருக்கின்றாரா? …… என்று ஆனந்தசங்கரி கேள்வி எழுப்புகின்றார்.

ஷயாரையோ| திருப்திப் படுத்துவதற்காக ஆனந்தசங்கரி இவ்வாறு கேட்கின்றார். இராணுவ நடவடிக்கைகளாலும், விமானப் படைத் தாக்குதல்களாலும், ஒட்டுக்குழுக்களாலும் எவ்வளவோ பேர் கொல்லப்பட்டும், தொடர்ந்தும் கொல்லப்பட்டு வருவதையும் ஆனந்தசங்கரி அறியவில்லையா? தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் இன்ன பிறர் என்று பட்டியல் துன்பகரமாக நீண்டு கொண்டே போகின்றது.

ஆனந்தசங்கரி தனது எசமானர்களின் பொருட்டு, இனவாதம் பேசுகின்ற சிங்கள வகுப்பு வாதிகளையும் உயர்த்த்pப் பிடிக்கின்றார். ஷஇனவாதம் பேசுகின்ற பௌத்த-சிங்கள வகுப்புவாதிகள் பொறுப்பற்ற முறையில் பேசி வந்தாலும், ஒரு தமிழ் உயிரையும் பறித்ததில்லை| என்று ஆனந்த சங்கரி சிங்கள இனவாதிகளின் கருணை குறித்து மெச்சுகின்றார்.

சிங்கள இனவாதிகள் புரிந்த தமிழினப் படுகொலைகள் குறித்து சிங்கள அறிஞர்கள் மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். 1956ம் ஆண்டிலிருந்து இன்றுவரை சிங்கள இனவாதப் பொதுமக்கள் தமிழ் மக்களைக் கொன்று குவித்தே வந்துள்ளார்கள். இவ்வாறு சிங்கள இனவாதப் பொதுமக்கள் தமிழர்களைக் கொல்வதை இராணுவம் தடுக்கவில்லை. மாறாக சிங்கள இனவாதிகளுக்குப் பக்க பலமாக நின்று தமிழினப் படுகொலைகளுக்கு பேருதவி செய்தது. சிங்களப் பொதுமக்கள்தான் இனக்கலவரங்களின் போது கொன்று குவித்துக் கொள்ளையடித்தார்கள். ஆனால் ஆனந்தசங்கரியோ சிங்கள இனவாதிகளை மெச்சிக் கொண்டிருக்கின்றார்.

சிங்கள மக்களின் சார்பில் ஆனந்தசங்கரி அவர்கள் இன்னுமொரு கருத்தையும் முன்வைக்கின்றார். ............. பெரும்பகுதியான சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் சமமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள்| என்று ஆனந்தசங்கரி கருத்துக் கணிப்பு ஒன்றைத் தருகின்றார்.

மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்து, அவரைப் பதவியில் அமர்த்திய சிங்கள மக்கள், தமிழ் மக்களோடு தாம் சமமாக வாழவேண்டும் என்பதற்காக வாக்களிக்கவில்லை. அடிப்படைச் சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீதான போருக்;காகத்தான் வாக்களித்தார்கள். அடிப்படையிலேயே போர் என்கின்ற போது, தமிழ் மக்களை அழித்தொழிப்பது என்பதுதான் விருப்பமே தவிர, சரிசமமாக வாழ்வது என்பது அல்ல!

சமமாக வாழ்வது என்றால், தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப் படுகின்றபோது சிங்கள மக்கள் ஆதரித்திருக்க வேண்டும். ஒப்பந்தங்களும், பொதுக் கட்டமைப்பும் தூக்கியெறியப்பட்ட போது சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து எதிர்த்த்pருக்க வேண்டும். ஆனால் சிங்கள மக்கள் தமிழர் அழிவுக்குத்தான் ஆதரவாக உள்ளார்கள். தமிழர்களின் உரிமைக்கு எதிராகத்தான் உள்ளார்கள்.

ஆனந்தசங்கரி அவர்கள், சிங்கள மக்கள் பற்றியும் பௌத்த பீடாதிபதிகளான நான்கு மகாநாயக்கர்கள் குறித்தும் தனது எசமானர்களின் கருத்தை வெளியிடுகின்றார். ஷதமிழ் மக்களுக்கு ஏற்புடையதான ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சம~;டி ஆட்சி முறையைப் பெற்றுக் கொடுக்க சிங்கள மக்கள் போராடுவார்கள்| என்றும், ஷபிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக மகிந்தவின் அரசுக்குப் பூரண ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நான்கு மகாநாயக்கர்கள் கேட்டுள்ளார்கள|; என்றும் ஆனந்தசங்கரி உற்சாகத்துடன் பேசுகின்றார்.

தமிழ் மக்களுக்கு ஆதரவாக இதுவரை எந்த ஒரு வெகுசனப் போராட்;டத்தையும் சிங்கள இனம் நடாத்தவில்லை. இதற்கான வரலாற்றுச் சான்றும் இல்லை. மாறாகத் தமிழர்களுக்கு எதிராகத்தான் சிங்கள இனம் போராட்டங்களை நடாத்தியுள்ளது. அதேபோலத்தான் சிங்கள பௌத்த பீடாதிபதிகளும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள். இன்று மகிந்தவின் அரசுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று பீடாதிபதிகள் கேட்டுக் கொண்டிருப்பது, மகிந்தவின் இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதரவின் வெளிப்பாடுதான்!

ஷதமிழ் மக்கள் யுத்தம் காரணமாகச் சந்தித்து வரும் பேரழிவுகளுக்கு அடிப்படைக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான்| என்று ஆனந்த சங்கரி குற்றம் சாட்டுகின்றார்.

முன்பு அக்கராயனில் சிங்களக் குடியேற்றத்தை ஆர்ம்பித்து வைத்த ஆனந்தசங்கரி இன்று தமிழர்களின் அழிவு பற்றியும் பேசுகின்றார். இந்த அழிவுகள் யாரால் மேற்கொள்ளப்படுன்றதோ, அவர்களைத் தனது எசமானர்களாக ஏற்றுக்கொண்டுள்ள ஆனந்தசங்கரி, தமிழினத்தைக் காப்பாற்றுகின்ற தலைமையைக் குற்றம் சொல்ல முயற்சிக்கின்றார். அன்று தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் வென்று, இராணுவ முகாம்களை அழித்துத் தமிழீழம் பெறுவோம் என்று முழங்கிய ஆனந்தசங்கரி இன்று இவ்வாறு புலம்புகின்றார்.

கிழக்குத் தீமோர் சுதந்திரப் போராட்டம் பாரிய அழிவுகளைச் சந்தித்த போராட்டமாகும். சர்வதேசம் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டுதான் அந்த அழிவைப் பார்த்துக் கொண்டு நின்றது. அதற்காக அந்த நாடு போராடாமல் இருக்கவில்லை. பாலஸ்தீனம் இன்றும் பாரிய அழிவுகளை சந்தித்துக் கொண்டுதான் உள்ளது. அதற்காக அந்த நாடும் போராடாமல் இருக்கவில்லை. நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தை எவருமே கைவிட முடியாது. போராட்டத்தைக் கைவிட்டால் போராடுகின்ற இனங்கள் முழு அழிவுக்கு ஆளாகும். போராடுவதன் மூலம்தான் பேரழிவைத் தவிர்க்கும் வாய்ப்பும், வெற்றிக்கான வாய்ப்பும் உண்டு.

ஹிட்லர் போன்ற பாசிசவாதிகளை எதிர்கொள்ளும் போது, பேரழிவுகள் இல்லாமல் போரிட முடியாது. ஹிட்லர் போன்ற பாசிசவாதிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக, உலகநாடுகள் பாரிய அழிவுகளைச் சந்தித்துப் போராடின.

தமிழர்கள் தமது போராட்டத்திற்கு முன்பிருந்தே - அதாவது 1956ல் இருந்தே - தொடர்ச்ச்pயாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள். அப்போது ஆயுதப் போராட்டம் இல்லை. 1983லும் ஆயுதப் போராட்டம் பெருமளவில் வளர்ச்;சி பெறவில்லை. ஆயினும் தமிழர்கள் அழிக்கப் பட்டார்கள். சிங்கள தேசம் அழிவைக் கூட்டியதே தவிர குறைக்கவில்;லை.

ஆனந்தசங்கரி அவர்களே! விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலை ஒரு வான் வேடிக்கை என்று நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் உமது எசமானர்களுக்கோ இது உயிர் போகின்ற விடயமாக இருப்பதனால், உலகெங்கும் ஒடித் திரிகின்றார்கள். உங்களால் முடியாத காரியங்களை இன்று இந்த விடுதலைப் போராட்டம் சாதித்துள்ளது. கூட்டாட்சியைக் கொண்டு வர வேண்டிய அளவிற்கு உலக மட்டத்தில் கொள்கையளவில் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக - பிரச்சனை தீர்க்கப்படாமல் - தமிழீழம் என்ற தீர்வுக்கு உலக மட்டத்தில் எமது விடுதலைப் போராட்டம் நகரும். ஆகவே தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டம் தன் இலக்கை நோக்கிய பயணத்தின் உச்சத்தை நெருங்கித்தான் உள்ளது.

திரு ஆனந்தசங்கரி அவர்களே!

இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில், போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்ற வகையில் செயல்படாமல் இருப்பதுதான் தமிழ் மக்கள் மீது பற்றுக் கொண்டோர் என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்ய வேண்டியதாகும். தமிழீழப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில், சர்வதேச மக்களின் கருத்துக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வருகின்ற வேளையில், அவற்றைத் திசை திருப்பி அடக்குவதுதான் பொதுவான நடைமுறை! இவ்வாறான திசை திருப்புதலையும், கொச்சைப்படுத்தலையும் செய்பவர்கள் சிறிலங்கா அரசின் பணத்தையும், பலத்தையும், ஆதரவையும் கொண்டவர்களாகவும் உள்ளார்கள். இத்தகைய உத்திக்கு விலை போகாமல் இருப்பதுதான் தமிழ் மக்கள்மீது ஷபற்றுக் கொண்டவர்கள்| செய்ய வேண்டிய முதல் வேலை.

ஆனந்தசங்கரி அவர்களே சிந்தியுங்கள்! உங்களை ஆள்பவர்களை விலக்கி விட்டு வெளியே வாருங்கள். இல்லாவிட்டால் எட்டப்பர் பட்டம்தான் உங்களுக்கு மிஞ்சும்!

-தமிழ் நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.