Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வரலாற்று சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

வசி,

நீங்களும் கடஞ்சாவும் சேர்ந்து, பங்கு, நாணய வர்தகம் பற்றி ஒரு திரியை ஆரம்பிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இது மருதரின் @Maruthankerny ஐடியா. ஆனால் ஆள் பிசியாகிவிட்டார் போலுள்ளது.

பிரபா @பிரபா சிதம்பரநாதன் உம் ஆர்வமாக உள்ளார் என தெரியும்.

கேள்வி கேட்க நானும் தயார்🤣.

நல்ல விடயம் நானும் கேட்கலாமா என யோசித்து இருந்தேன்.. ஆனால் கொஞ்சம் பொறுங்கோ இந்த Rogue Trader பார்த்துவிட்டு கேள்விகளை கேட்கிறேன்.. 

@Maruthankerny login id, email ஆக மாறப்போகுது என்றதிலிருந்து ஆளைக்காணவில்லை.. 

உண்மையில் இந்த பங்கு சந்தை, பங்கு பரிவர்த்தனையை பற்றி அறிய விரும்புகிறேன்.. என்னுடைய  எனது அப்புவின் தம்பி (இந்த பங்கு சந்தையில் ஆர்வமும் அதில் மூதலீடுகளும் செய்திருந்தார்) ஒவ்வொரு ஞாயிறுகிழமையும் Sunday Observer பத்திரிக்கையை கொண்டுவந்து அதிலுள்ள பங்குசந்தை பற்றிய விபரங்களையும் விலைகளையும் என்னை வாசிக்க கூறுவார்.. அப்பொழுது எனக்கு பிடிக்காவிட்டாலும் வாசித்துக்காட்டுவேன்.. ஆங்கிலத்தையும் பங்கு சந்தைபற்றியும் எனக்கு படிப்பிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவர் இதை செய்தார்.. இப்பொழுது I missed him a lot.. 

அவர் உருவாக்கிவிட்ட ஆர்வத்தினால்தான் என்னையறியாமல் இது சம்பந்தமான விடயங்களில் மூக்கை நுழைக்கிறேன்.. 

ஆனால் இது சம்பந்தமான திரி தொடங்கினால் நானும் எனது சந்தேகங்களை கேட்பேன்.. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

நீங்களே அந்த திரியை ஆரப்ம்பியுங்கள், உங்கள் கேவிகள் மிகவும் சிந்திக்கவைக்கக்கூடிய கேள்விகள் அதற்கு பதில் தெரிந்தவர்கள் பதிலளிக்கலாம்.

நன்றி வசி,

எனக்கு திரி திறக்க ஓகேதான் - ஆனால் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத விசயத்தில் திரியை துறக்க கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.

பங்கு/நாணய/கிரிப்டோ வர்தகம் - அவதானிப்புகள் 

என்று ஒரு திரியை துவக்க நினைகிறேன்.

பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்ல விடயம் நானும் கேட்கலாமா என யோசித்து இருந்தேன்.. ஆனால் கொஞ்சம் பொறுங்கோ இந்த Rogue Trader பார்த்துவிட்டு கேள்விகளை கேட்கிறேன்.. 

@Maruthankerny login id, email ஆக மாறப்போகுது என்றதிலிருந்து ஆளைக்காணவில்லை.. 

உண்மையில் இந்த பங்கு சந்தை, பங்கு பரிவர்த்தனையை பற்றி அறிய விரும்புகிறேன்.. என்னுடைய  எனது அப்புவின் தம்பி (இந்த பங்கு சந்தையில் ஆர்வமும் அதில் மூதலீடுகளும் செய்திருந்தார்) ஒவ்வொரு ஞாயிறுகிழமையும் Sunday Observer பத்திரிக்கையை கொண்டுவந்து அதிலுள்ள பங்குசந்தை பற்றிய விபரங்களையும் விலைகளையும் என்னை வாசிக்க கூறுவார்.. அப்பொழுது எனக்கு பிடிக்காவிட்டாலும் வாசித்துக்காட்டுவேன்.. ஆங்கிலத்தையும் பங்கு சந்தைபற்றியும் எனக்கு படிப்பிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவர் இதை செய்தார்.. இப்பொழுது I missed him a lot.. 

அவர் உருவாக்கிவிட்ட ஆர்வத்தினால்தான் என்னையறியாமல் இது சம்பந்தமான விடயங்களில் மூக்கை நுழைக்கிறேன்.. 

ஆனால் இது சம்பந்தமான திரி தொடங்கினால் நானும் எனது சந்தேகங்களை கேட்பேன்.. 

ஓம்…மருதர் வேறு பெயரில் வந்தாவது கருத்தை எழுதுவார்.

பெரிய windfall ஏதும் கிடைச்சு, காஜலோடு பஹாமாஸ் பக்கம் ஒதுங்கீட்டாரோ?🤣

எதுக்கும் காணவில்லையில் போட்டு பாப்பம்.

எனக்கு கொழும்பில் ஆண்டு 11இல் ஒரு நண்பன் சொன்னான் - வா மச்சான் செய்து பாப்பம் எண்டு, அப்ப இண்டிரெஸ்ட் இல்லை, தவிரவும் வீட்டில் இதுவும் ஒருவகை சூதுதான் என்று சொல்லி ரொம்பவே பயப்பிடுத்தி விட்டுடுதுகள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2021 at 23:24, பிரபா சிதம்பரநாதன் said:

நல்ல விடயம் நானும் கேட்கலாமா என யோசித்து இருந்தேன்.. ஆனால் கொஞ்சம் பொறுங்கோ இந்த Rogue Trader பார்த்துவிட்டு கேள்விகளை கேட்கிறேன்.. 

@Maruthankerny login id, email ஆக மாறப்போகுது என்றதிலிருந்து ஆளைக்காணவில்லை.. 

உண்மையில் இந்த பங்கு சந்தை, பங்கு பரிவர்த்தனையை பற்றி அறிய விரும்புகிறேன்.. என்னுடைய  எனது அப்புவின் தம்பி (இந்த பங்கு சந்தையில் ஆர்வமும் அதில் மூதலீடுகளும் செய்திருந்தார்) ஒவ்வொரு ஞாயிறுகிழமையும் Sunday Observer பத்திரிக்கையை கொண்டுவந்து அதிலுள்ள பங்குசந்தை பற்றிய விபரங்களையும் விலைகளையும் என்னை வாசிக்க கூறுவார்.. அப்பொழுது எனக்கு பிடிக்காவிட்டாலும் வாசித்துக்காட்டுவேன்.. ஆங்கிலத்தையும் பங்கு சந்தைபற்றியும் எனக்கு படிப்பிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவர் இதை செய்தார்.. இப்பொழுது I missed him a lot.. 

அவர் உருவாக்கிவிட்ட ஆர்வத்தினால்தான் என்னையறியாமல் இது சம்பந்தமான விடயங்களில் மூக்கை நுழைக்கிறேன்.. 

ஆனால் இது சம்பந்தமான திரி தொடங்கினால் நானும் எனது சந்தேகங்களை கேட்பேன்.. 

கடஞ்சா Actual margin, Variable margin மற்றும் future பற்றி மிக இலகுவான ஒரு உதாரணத்தை வேறு ஒரு திரியில் கூறியிருந்தார், Rogue Trader இலும் Actual margin, Variable margin மற்றும் future பற்றி  கூறியுள்ளார்கள் ஆனால் புரியாவிட்டால் கதையை தொடர்வது கடினமாகவிருக்கும் என்பதால் கடஞ்சா கூறிய உதாரணத்தை இங்கு மறு பதிவிடுகிறேன்.

நாம் வீடு வாங்கும்  போது மொத்த வீட்டின் பெறுமதியில் ஒரு 5% வைப்பாக(Actual margin) இட்டு வீட்டை வாங்குவோம், வீட்டின் பெறுமதி சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும் (Variable margin).

future தோன்றிய வரலாறு பற்றி கூறுவார்கள் முன்பு (19 ஆம் நூற்றாண்டிலாக இருக்கலாம்) ஒரு விற்பனை பிரதிநிதி விளைநிலங்கள் அதிக விளைச்சல் ஏற்படுவதை கணித்தார், அவருக்கு ஒரு சிந்தனை உருவாகியது அறுவடைக்காலத்தில் அறுவடைக்கு தேவையான இயந்திரங்களின் மதிப்பு அதிகரிக்கலாம் அதனால் கடைக்கு சென்று ஒரு ஒப்பந்தம் இட்டாராம் இந்த இயந்திரங்களை இப்போதிருக்கும் வாடகை விலைக்கு எதிர்காலத்திற்கு தருமாறு ( உதாரணமாக 7 மாதற்கு பின்).

மாதா மாதம் செலுத்தும் வட்டியும் பகுதி முதலும் வீட்டின் விலை குறைதல் பாதிப்பை (Variable margin) நடைமுறையில் வெளிக்காட்டாது.ஆனால் பங்கு சந்தையில் நீங்கள் விலை உயரலாம் என்று வாங்கிய Actual margin future விலை குறைந்தால் அந்த நட்டத்தில் Actual margin விகிதத்தினை வைப்பிலடக்கூறுவார்கள் (margin call).

எனக்கு Future மற்றும் Option அனுபவம் இல்லை, ஆனால் CFD அனுபவம் உண்டு, இதுவரை margin call ஏற்படவில்லை என்பதால் எனது தரவுகள் பிழையாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி. ஆர்வத்துடன் வாசிப்பேன். எனக்கு பெரியளவில் ப்ரக்டிகலாக நிதிசந்தையில் நேரடி அனுபவமில்லை. ஆனால் இங்கு பாவிக்கப்படும் technical term எல்லாவற்றின் வரைவிலகணம் / அர்த்தமும் தெரியும்.

Technical Analysis, Fundamental Analysis, Futures, Forwards, option, (call option/put option, long call, short call/long put short put) Swaps 

MBA finance ல் -  Derivatives எனும் பகுதியில் இவை படிப்பிக்கப்பட்டது  இவை ஒரு பாடமாக படித்ததினால் தியரி அனுபவமே உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2021 at 23:50, goshan_che said:

எனக்கு கொழும்பில் ஆண்டு 11இல் ஒரு நண்பன் சொன்னான் - வா மச்சான் செய்து பாப்பம் எண்டு, அப்ப இண்டிரெஸ்ட் இல்லை, தவிரவும் வீட்டில் இதுவும் ஒருவகை சூதுதான் என்று சொல்லி ரொம்பவே பயப்பிடுத்தி விட்டுடுதுகள்🤣.

image.png

இந்த வகை Technical analysis 19ஆம்நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் selling climax (Shake the weak hand, இயல்பாக அதிகளவான volume காணப்படும். சிவப்பு bar selling volume நீல bar buying volume) ஏற்படும். பின்னர் பெரிய முதலீட்டாளர்கள் விலையை அதிகரிக்காமல் மெதுவாக பங்குகளை வாங்கி குவிப்பார்கள். 

பொதுவாக சந்தை மீண்டும் அதே விலையை தொட முயற்சிக்கும் (Re-test) விலையை வலிந்து உயர்த்துவதற்கு முன்பாக மீண்டும் அந்த குறைந்த விலைக்கு கொண்டு சென்று ஏதாவது பங்குகள் இருக்கிறதா என அவதானிப்பார்கள் அதன் போது அந்த விலையில் யாரும் விற்பதற்கு ஆர்வம் காட்டாவிடில் விற்கப்படும் பங்குகளைன் (Volume) அளவு குறைவாக இருந்தால் அதன் பின்னர் வலிந்து விலயினை அதிகரிப்பர் ( ஏற்கனவே அவர்கள் பங்குகள் இல்லை என்பதை பரீட்சித்து விட்டமையால் விலயினை உயர்த்தும் போது அந்த நேரம் யாரும் பங்குகளை விற்று அவர்களுக்கு நட்டம் ஏற்படுத்த முடியாது).

இந்த நடவடிக்கையினை அவதானிக்கும் சில்லறை முதலீட்டாளர்கள், பெரிய முதலீட்டாளருடன் சேர்ந்து முதலிடுவர் ( Test level) சந்தை திட்டமிட்டபடி உயராமல் கீழிறங்கினால் அவசரகால வெளியேற்றமாக அந்த பங்குளை Low volume failed sell off இல் விற்பதற்கு  திட்டமிட்டிருப்பர் (stop loss).

எதிர்பாராமல் நிகழும் நிகழ்வின் போது ஏற்படும் இழப்பை முன்னராகவே திட்டமிடுவர் ( உதாரணமாக மொத்த முதலீடாக 10000 இருந்தால் அதில் stop loss 1% என எடுத்து கொண்டால் 100).

பல முறைகள் technical analysis இல் உள்ளது, ஒரு உதாரணத்திற்கே இந்த முறையை குறிப்பிட்டுள்ளேன்.

இதன் அடிப்படையில் ஒரு முறைமையை பரீட்சித்து பார்த்து (Back test) அதன் தரவுகளின் அடிப்படையில் அந்த முறைமையில் முதலீடு செய்யும் போது எமது முதல் பாதுகாக்கப்படுமா என்று கணக்கியல் ( Risk or Ruin calculator) ரீதியாகப்பரீட்சித்த பின்னரே முதலிடுவார்கள்.

http://bettersystemtrader.com/riskofruin/

திட்டமிடாத முதலீடுகள் சூது என்றே கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2021 at 16:43, goshan_che said:

நன்றி வசி,

எனக்கு திரி திறக்க ஓகேதான் - ஆனால் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத விசயத்தில் திரியை துறக்க கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.

பங்கு/நாணய/கிரிப்டோ வர்தகம் - அவதானிப்புகள் 

என்று ஒரு திரியை துவக்க நினைகிறேன்.

பார்ப்போம்.

blockchain, bitcoin பற்றியும் எழுதவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.