Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

😂😂உருட்டுதான் எங்கள் சொத்து🤗🤗  · 

Sivasubramanian Sankaralinganadar ·osntSodpre2hihiH1hgaf8g 04r43132mu1 i5feu2:3u027l10a,9ammmcà ·

(அதனால்தான் டாடா பெரும் கோடீஸ்வரர்)

JRD Tata விடமிருந்து

அமிதாப் கற்றுக் கொண்டார்

அமிதாப் சொல்கிறார்...

எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன்.

எனக்கு அருகில் இருந்த பயணி,

ஒரு சாதாரண சட்டை,பேண்ட்

அணிந்து அமர்ந்திருந்தார்.

வயதான மனிதர்,

நடுத்தர வர்க்கம்,

நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார்.

நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள்.

என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர்.

ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை.

ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன்.

தேநீர் வழங்கப்பட்ட போது, அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார்.

என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா?

அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா?

என்னால் பொருத்து கொள்ள முடியாமல்,

அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன்.

அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார்.

நாங்கள் பேச ஆரம்பித்தோம்.

சமூகம்,

பொருளாதாரம்,

அரசியல்,

என்று பல விஷயங்களை பற்றி பேசினோம்.

அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன்.

சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன்.

நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன்.

ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார்.

நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன்.

அப்படியா? ரொம்ப நல்லது.

நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.

நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன்.

அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை.

அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது,

உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி.

நல்லது,

என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன்.

அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே,

உங்களை சந்தித்த இந்த நாள்,

நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி:

என் பெயர்: JRD டாட்டா.

மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன்.

நான் விக்கித்து நின்று விட்டேன்.

அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவை பற்றி.

பேரையும், புகழையும் வைத்து,

நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், நம்மை விட வசதியிலும்,

அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

எப்போதுமே பணிவாய் பேசுங்கள்.

நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது.

வாழ்க்கையில் பல கால கட்டங்களில்,

அறிவு,

பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது.

பணிவும் நல்ல நடத்தையும்,

எல்லா இடத்திலும் வென்றுள்ளது.

எந்த சூழ்நிலையிலும்,

பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள்.

அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும்.

Voir la traduction.......!

561340771_3950299795261703_8589940538713

"அடக்கம் அமரருள் உய்க்கும் " .......!

  • Replies 917
  • Views 135.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்

561260424_771735942532648_20465059817866

  • கருத்துக்கள உறவுகள்

Vino Mohan ·

Christmas Eve என்றே கிருஸ்துவ பெருமக்கள் கொண்டாடுகிறார்கள் உலகமெங்கும்..

நாம் அது போல கொண்டாடுவதில்லை தான்..

ஆனால் ஒவ்வொரு பண்டிகைக்கும் முந்திய நாள் வீடு அமர்க்களப்படும்.

அதிலும் தீபாவளிக்கு முதல் நாள் என்றால்..

ஏ அப்பா! ஏக ரகளை தான் போங்கள்.

65 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான கோபுலு அவர்களின் ஜோக் இது.

ஒரே ஒரு வரிதான்..

தீபாவளிக்கு முதல் நாள்!

மொத்த சேதியையும் சொல்லி விட்டார் கோபுலு..

அது தான் கோபுலு.

எவ்வளவு விவரங்கள் பாருங்கள்..

இந்த ஒரே ஒரு சித்திரத்தில்.

1960 க்கு முந்தைய, ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை.....

ஒன்றும் பிரமாதம் இல்லை அய்யா! தீபாவளிக்கு முதல் நாள் வந்து சேர்ந்து விடுகிறேன் என்று கடிதம் போட்டுவிட்டார் மாப்பிள்ளை சார்வாள்..

கடிதம் பெண்ணின் கையில் இருக்கு.

பேருக்கு ஒரு புத்தகமும் கையில் இருக்கு.

இன்னொரு கை விரல் எத்தனை மணி, நிமிஷம் இன்னும் இருக்கு, அவர் வருவதற்கு என்று கணக்கு போடுகிறது.

கண்கள் இப்போ என்ன மணி ஆச்சுது என்று ஒரு பார்வை பார்த்து கொள்ளுகிறது.

மற்றபடி பெண்ணின் உடல் மட்டும் ஆத்தில் இருக்கு. மற்றபடி மனசெல்லாம் அகமுடையானிடத்தில்..

மகளுக்கு வாங்கிய தலை தீபாவளி புடவையை பார்த்து பார்த்து ஆனந்தித்து கொண்டிருக்கிறார் தகப்பனார்.

மூத்த பொண்ணோல்லியோ.

பெருமையும் மகிழ்ச்சியும் பூரிப்பும் முகத்தில் பொங்கி பெருகுகிறது.

மற்ற பேருக்கு வாங்கிய ஜவுளி ஒரு மூட்டையாக கட்டி அவருக்கு பின்னே இருக்கும் ஸ்டூலில் இருக்கு.

அம்மா விறகு அடுப்போது போராடி கொண்டிருக்கிறாள்.

அத்தனை பட்சணங்களையும் சுட்டு எடுக்கணுமே...

எண்ணெய் புகை வாணலிக்கு மேலே...

சாதாரணமாக அப்பளம் பொரித்தால் கூட அடுப்படியை வட்டமிடும் குழந்தைகள் பட்டாசு பிரிவினையில் அதிருப்தி கொண்டு பேதப்பட்டு கிடக்கிறார்கள்.

மூத்த பயல் தங்கையைகெஞ்சலும் மிரட்டலுமாக ஏதோ கேட்கிறான்.

அவளோ எனில் பட்டு பாவாடையும் தானுமாக குத்து காலிட்டு அமர்ந்து கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் பார்க்கிறாள்.

பேரத்திற்கு படிய மாட்டாள் என்றே போடுகிறது. இன்னொரு பயல் தன்னுடைய பங்கை எடுத்துக்கொண்டு நகர்ந்து விட்டான்.

அது போல வார் வைத்து தைத்த அரை கால் சட்டையை போட்ட பேர் இங்கே யார் யார்? நான் ஆறாம் வகுப்பு வரை வார் வைத்து தைத்த அரைகால் சட்டை தான்.

M R ராதா இதே போல் வார் வைத்து தைத்த முழு கால் சட்டையையே போட்டுக்கொண்டு வருவார். சட்டையை டக் இன் செய்திருப்பார். 😂"

கடை குட்டியை கவனிப்பார் இல்லை.

வீட்டுக்கு வேணப்பட்ட காய்கறிஎல்லாம் மேலே ஒரு பிரம்பு கூடையில் தொங்குகிறது.

ஒரு மாத காலண்டர், ஒரு டெய்லி காலண்டர்.. ஒரு ஸ்வாமி படம்.

முழம் பூ போட்டிருக்கிறது படத்திற்கு.

இன்றைக்கு உதிரி சாமந்தி பூ தான் ஒவ்வொரு படத்திற்கும்.

சுவரில் ஒரே ஒரு மாடம்.

அதில் தான் கேச வர்த்தினி முதல் ரெமி பவுடர் வரை.

பார்க்க பார்க்க மனம் நிறைந்து போகிறது சார்.

நானே பிறக்காத போது வந்த விகடன் மலரில் கோபுலு போட்டிருக்கிறார் இந்த சித்திரத்தை.

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் மக்களே.

ஆனந்தமாக கொண்டாடுங்கள்.

Voir la traduction

559812155_4265490713734745_4293554790211

  • கருத்துக்கள உறவுகள்

Chandran Veerasamy ·

சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார்.

1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.

தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”

Voir la traduction

570197699_25154950684168827_128173284739

  • கருத்துக்கள உறவுகள்

571237959_1845680242746125_3689937624675

  • கருத்துக்கள உறவுகள்

Vijayakumaran Panchadcharaiyer ·

“படித்ததில் பிடித்தது”

💒"திருமண நிபந்தனைகள் 💍"

மும்பையின் முலுண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை வைத்த அசாதாரணமான நிபந்தனைகள் கேட்டு திகைத்துப் போனது.

ஆனால், இவை எதுவும் வரதட்சணை சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் அல்ல - மாறாக, திருமண சம்பிரதாயங்களில் கௌரவம், எளிமை மற்றும் மரியாதை ஆகியவற்றை மீட்டுக் கொண்டு வருவது பற்றியது!

நகரம் முழுவதும் இப்போது அதிகம் பேசப்படும் அந்த மாப்பிள்ளையின் நிபந்தனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1️⃣திருமணத்திற்கு முன் 'ப்ரீ-வெட்டிங் ஷூட்' எடுக்கக் கூடாது.

2️⃣" மணமகள் லெஹங்காவுக்கு பதிலாக, சேலை அணிந்து வர வேண்டும்.

3️⃣" சத்தமான, ஆபாசமான இசைக்கு பதிலாக, திருமணத்தின்போது மென்மையான இசைக்கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்க வேண்டும்.

4️⃣" மாலை மாற்றும் (வர்மாலா) சடங்கின்போது மணமகன் மற்றும் மணமகள் மட்டுமே மேடையில் இருக்க வேண்டும்.

5️⃣"மாலை மாற்றும் சடங்கின்போது மணமகனையோ அல்லது மணமகளையோ தூக்க முயற்சிப்பவர்கள் விழாவிலிருந்து வெளியேறச் சொல்லப்படுவார்கள்.

6️⃣" அர்ச்சகர் திருமணச் சடங்குகளைத் தொடங்கியவுடன், யாரும் அவரைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது.

7️⃣"புகைப்படக் கலைஞர்/வீடியோகிராஃபர் படங்களுக்காக சடங்குகளில் குறுக்கிடவோ அல்லது நிறுத்தவோ கூடாது - புகைப்படங்கள் அமைதியாக, தூரத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும். "இது இரு மனங்கள் இணையும் புனிதமான திருமணம், படப்பிடிப்பு அல்ல."

8️⃣" புகைப்படக் கலைஞர்களின் அறிவுறுத்தலின் பேரில் மணமகன் மற்றும் மணமகள் கேமராவுக்கு இயற்கைக்கு மாறாக போஸ் கொடுக்கக் கூடாது.

9️⃣"திருமணச் சடங்கு பகலில் நடைபெற வேண்டும், மற்றும் விடைபெறும் சடங்கு (பிடாய்) மாலைக்குள் முடிவடைய வேண்டும். இது, விருந்தினர்களுக்கு இரவு தாமதமான உணவால் (இது பெரும்பாலும் தூக்கமின்மை, அமிலத்தன்மை அல்லது அஜீரணத்தை ஏற்படுத்தும்) சிரமம் ஏற்படாமலும், அவர்கள் சரியான நேரத்தில் சௌகரியமாக வீடு திரும்பவும் உதவுகிறது.

🔟" புதிதாகத் திருமணமானவர்களைப் பொதுவெளியில் கட்டிப்பிடிக்கவோ அல்லது முத்தமிடவோ சொல்லிக் கேட்பவர் யாராக இருந்தாலும், அவர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.

மணமகளின் குடும்பம் இந்த நிபந்தனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

👍" படித்ததில் பிடித்தது👍"

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்

Chandran Veerasamy ·

" அண்ணாவுக்கு ரவா உப்புமாப் பிடிக்கும்; உளுத்தம் பருப்பு வடையைவிருப்பமாச் சாபிடும்!

வெந்நீரில்தான் குளிக்கம்; எண்ணெய் தேய்த்து குளிக்கிறதுன்னா ஒரே அடந்தான்!

சின்ன வயசிலே பள்ளிக்கூடம் போறப்போ, நெத்தியிலே நாமம் போட்டுக்கிட்டுத்தான் போகும்!

சில சமயம், முஸ்லிம் போல தொப்பியெல்லாம் வச்சு டிரஸ் பண்ணி அனுப்புவோம்; முஸ்லிம் பெரியவங்கல்லாம் அதைப் பார்த்து, வழியிலே தூக்கி வச்சுக்கிட்டு பொஞ்சுவாங்க!

அஞ்சு ஆறு வயசு நடக்கிறப்போ, அதுக்குப் பெண் குழந்தை வேஷம் போட்டு அழுகு பார்ப்போம்!

படுக்கப் போறப்போ, பாட்டு வேணும்; இல்லேன்னா அதுக்கு தூக்கம வராது!

சினிமாவுக்கு அவ்வளவாகப் போகாது; தெருக்கூத்துன்னா அதுக்கு அவ்வளவு இஷ்டம்; ஒரு நாள் கூத்துப் பாத்திட்டு வந்து, இரணியன் வேஷம் போட்டுக்கிட்டு, அண்ட ரெண்டம் கதி கலங்க வந்தேன்னு பாடி, ஆடிச்சு பாருங்க. வேஷம் கட்டுறவுங்களே ஆச்சரியப்படணும். அப்படி ஆடிச்சு!

அவுங்க தொத்தா, அண்ணா மாஜிஸ்திரேட்டா வரணும் - கலெக்டரா வரணும்னு சொல்லிக்கிட்டே இருக்கும்! இது போயி, அரசியலிலே நுழையும்னு யாரு கண்டா?

அண்ணா பேரைச் சொன்னா இன்னக்கி எவ்வளவு கூட்டம் வருது? சின்னப் பிள்ளையிலே அதுக்குக் கூட்டத்தைக் கண்டா பயம்! 12 வயசிலே, காலு நோவுதுன்னு சொல்லிச்சு; திருத்தணி முருகனுக்குப் பிரார்த்தனை பணிணிக்கிட்டேன்; கோலிலுக்குக் கூட்டிக்கினு போனா, கூட்டத்தைக் கண்டு, உள்ளே வரமாட்டேன்னு சொல்லி வெளியே உட்காந்திருச்சி!

அண்ணாவை அஞ்சு வயசிலே பள்ளிக்கூடத்திலே சேர்த்தோம்; அப்போல்லாம் பள்ளிக்கூடத்திலே சேர்க்கிறது பெரிய வைபவம் மாதிரி நடக்கும்; அண்ணாவுக்குக் கடுக்கன் போட்டு பொட்டு வச்சு சிங்காரிச்சு டபுள் குதிரை பூட்டிய சாரட்லே வாத்தியாரையும் உட்காரவச்சு மேளதாளத்தோட ஊர்கலமா கூட்டிக்கிணு போய்ச் சேர்த்தோம்!

முதல்லே, நெல்லு மேலதான் எழுதணும்; அப்ப அவ்வளவு அமக்களம்; பச்சையப்பா பள்ளிக்கூடத்திலேதான் சேர்த்தோம். பள்ளிக்கூடத்துக்கு, வண்டியிலேயும் போகும் சைக்கிளும் ஓட்டும்.

அண்ணாவுக்குக் கோபம் வந்திச்சின்னா, ஒண்ணும் பேசாது - பெஞ்சுக்குக் கீழே போய் பூந்துக்கும்; கூப்பிட்டா வராது; அப்படியே தூங்கிடும்; அவ்வளவுதான் அதோட கோபம்!

ஆனா, வீட்டிலே சும்மா இருக்காது - எதையாவது படிச்சிக்கிட்டே இருக்கும்; பகோடா, ஓமப்போடி வாங்கிவந்த பேப்பரைக் கீழே போட்டா அதைக் கூட எடுத்துப் படிக்கும்!

எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணினதுக்கு அப்புறம், இது நால்லாப் படிக்குதே, இன்னும் படிக்கடடுமேன்னு அவுங்க தொத்தா கூட்டிக்கிணு போயி, சென்னையிலே காலேஜிலே படிக்க வச்சாங்க! அண்ணா இங்கிலீஷ் படிச்சுக்கிட்டு இருக்கும்; டேய், சரியாய்ப் படின்னு தொத்தா சும்மாவாவது அதட்டுவாங்க; தொத்தாவுக்கு இங்கிலீஷ் தெரியாது; அதுக்காக, தொத்தா வார்த்தையை அலட்சியப் படுத்தாம, நிதானமாய்ப் படிக்கும்; இது, அண்ணாவுடன் கூடப் பிறந்த பண்பு!

அண்ணாவுக்கு 23 வயதிலே திருமணம் நடந்திச்சு; கல்யாணத்துக்குமுன், அண்ணா, பெண்ணைப் பார்க்கலே; நாங்க பாத்திட்டு வந்து, அழகா இருக்குன்னு சொன்னோம், ஒத்துக்கிடுச்சு! இந்தக் காலம் மாதிரி அப்பெல்லாம் பெண்ணை சுலபமாப் பாத்திர முடியாது!

அண்ணா ரொம்ப நாளா சைவமா இருந்திச்சு; பெரியார் கூடக் கூட்டங்களுக்குப் போறப்பத்தான் சைவத்தை விட்டிருச்சி; பெரியார் கூட நாகூருக்குப் போயிருந்தப்போ, சாப்பாட்டுக்குப் பதிலா மீனை மட்டும் கொண்டு வந்து வச்சாங்களாம்; இது வேண்டா மின்னிருக்கு; பெரியாரு, சாப்பிடு, சாப்பிடுன்னு வம்பு பண்ணினாராம்; வேறு வழியில்லாமே சாப்பிட்டிருக்கு; சாப்பிட்டுட்டு, சைவமா இருந்தவன் இப்போ அசைவமா மாறிட்டேன் அப்படின்னு லெட்டர் எழுதிச்சு!

அண்ணா எழுதின நாடகங்களைப் பார்த்திருக்கேன்; அதிலே வேலைக்காரி நாடகம்தான் எனக்குப் பிடிக்கும்! வீட்டுக்கு வந்தா, எங்களோட பேசறதுக்கு எங்கே நேரமிருந்துச்சு? எப்பவாவது ரொம்ப முக்கிய விஷயம்ன்னு சொல்லும்!

ஒரு சமயம் தீக்குளிச்ச சின்னசாமியைப் பத்தி சொல்லிக் கண் கலங்கிச்சு!

இன்னொரு சமயம், வார்னிஷ் குடிச்சிட்டுச் செத்தவங்களைப் பார்த்துடடு வந்து, யாரு கூடவும் பேசல்லே! ஒரு நாளு முழுதும் சாப்பிடாமே வருததமா இருந்திச்சு! அதுக்கு ஒரு கஷ்டமின்னா யாரு கூடவும் பேசாது!

அண்ணா மந்திரியானதுக்கு மறு நாளு சாயங்காலம் வந்து, உனக்கு சேதி தெரியுமாம்மான்னு சொல்லிவிட்டு என் கால்லே விருந்து கும்பிட்டிச்சு! தொத்தா இல்லாததுதான் குறை; இருந்தா, ரொம்ப சந்தோஷப்பட்டிருக்கும்!

மந்திரியானதுக்குப் பின்னாலே, அண்ணா, வீட்டுக்கு வர்றது ரொம்ப அரிதாப் போச்சு!

அது மந்திரியானதுக்குப் பிறகு ஒரு மாற்றம் தெரிஞ்சுது; தினசரி சேவ் பண்ணிக்கிட்டது, குளிச்சது, உடுப்பு மாத்திக்கிட்டது! "

- 1967-ல் அறிஞர் அண்ணா அவர்களின் அன்னையாரைக்

காஞ்சிபுரத்தில் பேட்டி கண்ட போது கூறிய செய்தி .

(19.09.1976 - கழகக்குரல்) நன்றி : அறிஞர் அண்ணா இணையதளம் .

Voir la traduction

571636307_25219576754372886_530081634295

  • கருத்துக்கள உறவுகள்

தமிழா தமிழா ·

லாபத்தை விட இரக்கம் -

**மருத்துவ அற்புதங்கள் பெரும்பாலும் மில்லியன் டாலர் விலைக் குறிச்சொற்களுடன்** வரும் உலகில், **பெங்களூரைச் சேர்ந்த தொலைநோக்கு பார்வை கொண்ட **புற்றுநோய் நிபுணர்** டாக்டர் விஷால் ராவ்**, லாபத்தை விட இரக்கத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையை என்றென்றும் மாற்றினார். 👨‍⚕️"

*தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குரல் பெட்டிகளை இழந்த பிறகு மீண்டும் பேச உதவும் ஒரு புரட்சிகரமான சாதனமான **ஆம் வாய்ஸ் புரோஸ்டெசிஸ்** ஐ அவர் கண்டுபிடித்தார். இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களின் விலை **₹15,000 முதல் ₹30,000** வரை இருந்தாலும், டாக்டர் ராவின் பதிப்பின் விலை **₹50** மட்டுமே - ஆனால் பணத்தால் வாங்க முடியாததை மீட்டெடுக்கிறது: **கண்ணியம், நம்பிக்கை மற்றும் குரல்.** 🔊"

சிலிகானால் தயாரிக்கப்பட்ட இந்த சிறிய சாதனம், மூச்சுக்குழாய் மற்றும் உணவுக் குழாய்க்கு இடையில் **ஒரு வழி வால்வாக** செயல்படுகிறது, இதனால் நோயாளிகள் மீண்டும் இயற்கையாகப் பேச முடியும். 🙌"

இன்னும் ஊக்கமளிக்கும் வகையில் - டாக்டர் ராவ் மற்றும் அவரது இணை கண்டுபிடிப்பாளர் **காப்புரிமையை இந்திய அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினர்**, சுகாதாரத் திட்டங்களின் கீழ் தேவைப்படுபவர்களுக்கு இது **மலிவு விலையில் அல்லது இலவசமாக** இருப்பதை உறுதி செய்தனர். 🤝"

லாபத்தால் இயக்கப்படும் ஒரு சகாப்தத்தில், மனிதகுலத்தால் இயக்கப்படும் **₹50 அதிசயத்தை** அவர் உருவாக்கினார் - உண்மையான கண்டுபிடிப்பு இதயத்திலிருந்து நேரடியாகப் பேசுகிறது என்பதை நிரூபிக்கிறது. 💙"

#DrVishalRao #AumVoiceProsthesis #IndianGenius #HealthcareHero #Innovation #Inspiration #PrideOfIndia #fblifestyle

Voir la traduction

574390038_122234949938123506_60731504147

  • கருத்துக்கள உறவுகள்

Thapes Vlogger est à Oslo, Norvège.  ·

வீட்டுக்கு பக்கத்தில் ஒரு Petrol நிரப்பும் நிலையமும் அதனுடன் சேர்ந்து ஒரு சிறிய உணவகமும் ( snacks, Coffees) இருக்கிறது.

இது 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

இந்த கடையில் அடிக்கடி ஒரு விளம்பரத்தை பார்க்க முடியும்..

அது இரவு நேர ஊழியர் ஒரு தேவை என்று..

இரவு நேர வேலைக்கு வருபவர்கள், நின்று பிடிப்பதில்லை.

நோர்வேயில் இரவு வேலை எனில் என்ன ஒரு நல்ல விசயம் எனில்..

ஒரு கிழமை வேலை, ஒரு கிழமை விடுமுறை, அதாவது

7 நாட்கள் வேலை, அடுத்த 7 நாட்கள் விடுமுறை..

அதாவது மாதத்தில் 14 நாட்கள் வேலை, 14 நாட்கள் விடுமுறை, அது என்ன இரவு நேர வேலையாக இருந்தாலும்..

இரவு 09:00 மணியிலிருந்து காலை 06:00 மணிக்குள்

7.5 மணிநேர வேலை.

மாதத்தில் 105 மணிநேரம் தான் வேலை.

சம்பளம்..??

Just 14 நாட்கள் வேலைக்கே முழுமையான ஒரு மாத சம்பளம் கிடைக்கும்.

அதைவிட இரவு நேர வேலைக்கு உங்கள் வழமையான சம்பளத்தை விட 25% அதிக சம்பளம்.

(உதாரணம்- பகலில் ஒரு வேலைக்கு ஒரு மணி நேரத்திற்க்கு 200 குரோனர் எனில், அதே வேலையை இரவு 09:00-06:00 மணிக்குள் செய்தீர்கள் என்றால் ஒரு மணி்நேரத்திற்க்கு 250 குரோனர்)

இதுவும் ஒரு காரணம் இரவு ஒன்பது மணிக்கு பின் Scandinavian நகரங்கள் ஆள் நடமாட்டம் அற்ற நிலையில் இருப்பதற்க்கு..

நகரத்துக்குள் பல உணவகங்களே இரவு 10:00 மூடப்பட்டுவிடும்.

உலகில் வாழச்சிறந்த நாடுகளாக வகைப்படுத்த படுவதற்க்கு, எடுக்கப்படும் ஒரு முக்கிய காரணி

Work Life Balance,

8 மணி நேரம் வேலை

8 மணி நேரம் உறக்கம்

8 மணி நேரம் உங்களுடைய இதர அலுவல்களுக்கு.

இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், நீண்ட ஆயுளுக்குமான பல காரணிகளில் இதுவும் ஒன்று.

#fblifestyle

Voir la traduction

575093189_25340066798939762_313381963735

  • கருத்துக்கள உறவுகள்

579869110_1868192287109118_5576966628747

  • கருத்துக்கள உறவுகள்

before-marriage.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Pattukkottai - பட்டுக்கோட்டை  ·

Krv Raja ·rSeodtnpso4hgu53g256hmg62f7t7iih31t18ha8c18c544 7tm3h49044ht ·

இன்று முக்கியமான நாள்...

தமிழக வரலாற்றில் பிழை நிகழ்ந்த நாள்.... மாமனிதர் #காமராஜர் அரசு 1967-ல் தூக்கி எறியப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள்..

ஏன் காமராஜர் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது?

தமிழ் நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் என்ன கொடுமைகள் அவரது ஆட்சியில் நடந்தது?

1) காமராஜர் முதல்வராக 1954-ல் பதவி ஏற்றபோது தமிழ் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 7 %. அவர் 1963-ல் பதவி விலகியபோது எழுத்தறிவு சதவீதம் 37% .

கொடுமை நெம்பர் 1 .

2) ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்: ஏழை பணக்காரன் பேதம் இளம் பிஞ்சுகள் மனத்தை பாதிக்காமல் இருக்க பள்ளிகளில் சீருடை திட்டம் ..

கொடுமை நெம்பர் 2 .

3) வைகை அணை, மணிமுத்தாறு, சாத்தனூர் அணை, கீழ் பவானி, மேல் பவானி அணைகள், அமராவதி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம், நெய்யாறு .. இப்படி பல நீர்ப்பாசனத் திட்டங்கள். இதில் கீழ் பவானி திட்டத்தால் மட்டும் 207000 ஏக்கர் (842 ச .கிமீ ) நிலங்கள் சாகுபடி பயன் பெற்றன...

கொடுமை நெம்பர் 3 .

4) BHEL திருச்சி, ஆவடி ரயில் பெட்டித் தொழிற்சாலை, ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், சௌத் இந்தியா விஸ்கோஸ் இப்படி பல தொழில் வளர்ச்சி "கொடுமைகளும்" நடந்தேறின..

கொடுமை நெம்பர் 4.

இதுபோக மந்திரிகள் தங்களை பிரபல படுத்திக் கொள்ளாமை, பதவி போனவுடன் அரசாங்க டவுன் பஸ்ஸில் - கக்கன் போல- வீடு திரும்பும் எளிமை, அரசாங்க செலவில் நடைபெறும் நலத் திட்டங்களில் தங்கள் முகத்தை போஸ்டரில் போட்டு, ஏதோ தங்கள் கைக் காசில் அவற்றை நடத்துவதுபோல "வள்ளலே, ஏழைகளின் இதயத் துடிப்பே" என்றெல்லாம் ஜால்ராக்களை வைத்து எழுத வைக்காத எளிமை...

இப்படிப் பல உப "கொடுமைகளும்" செய்த "கொடிய எதேச்சாதிகார " காமராஜா் ஆட்சி "தோற்கடிக்கப்பட்ட பொன் நாள்" இந்த நன்னாள்..

ஒரே ஒரு கார்ப்பரேஷன் கக்கூஸ் கட்டி விட்டால் கூட, தெரு முழுக்க டியூப் லைட் போட்டு, ஆளுயர போஸ்டர் அடித்து "வரலாற்று சாதனை" என்று வர்ணிக்கும் அடுக்கு மொழி வித்தகர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள்..

இன்னும் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் என்று சகலத்திலும் "காசு பார்ப்பதாக" குற்றச் சாட்டுகள் எழுந்த "பொற்காலத்தின்" ஆரம்ப விதை போடப்பட்ட நாள்..

"தமிழக அரசியலில் விஷக் கிருமிகள் புகுந்துவிட்டன" - என்று, முப்பது வருஷம் மந்திரியாய் இருந்தும் பத்து பைசா கஜானா காசை பாக்கெட்டில் போடாத பக்தவத்சலத்தால் வர்ணிக்கப்பட்ட நாள்..

அந்த மாபெரும் எளிய மனிதன் காமராஜை அவருடைய சொந்த ஊரிலேயே தோற்கடித்து, தமிழன் தன்னுடைய நன்றியைக் காட்டிய நாள்.. ஆம்.. 1967- பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள்.

அன்று "தமிழ் அன்னை" பொங்கி எழுந்தாள்.. ஆம் பொங்கி எழுந்த தமிழ் அன்னை இன்று "டாஸ்மாக்" வாசலில் தன் பிள்ளைகளை தேடும் நிலையை அடைய அச்சாரம் போட்ட நாள்..

தமிழன் தன் தலையில் மண் அள்ளி போட்டு 57 வருடம் ஆகி விட்டது இன்னும் திருந்தவில்லை....... Krv Raja

Voir la traduction

581941324_2285176935282976_6006517806417

Creativity கிரியேட்டிவிட்டி  ·

Krv Raja ·rSeodtnpso4hguo30merh1g62fn 5ii:31,18h18c18v54b 7tm3h49044he ·

#நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். பதிலில்லை.

முதல்வர் #ராஜாஜியிடம் முறையிட்டார்.

ஒன்றும் நடக்கவில்லை.

#காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்.

மிக விரிவான விஞ்ஞான பூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார்.

காகிதங்களைப் புரட்டிய நேரு கையை விரித்தார் ..

" இதெல்லாம் சாத்தியமில்லை..!"

"ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன.

ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை. அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.." Krv. #Raja

கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளி நேருவை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி காமராஜர்.

காமராஜருக்கு கை சுத்தம் ..! அதனால் பிரதமராவது, பெரிய தலைவராவது ,. ..

( உள்துறை செயலாளரைப் பார்த்து நடுங்குகிறவர்கள், ஊழல் செய்து மாட்டிக் கொண்டு கைகால் பிடித்துவிடும் அரசியல் தலைகளுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை )

அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார், விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார் காமராசர்.

"திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்..."

"அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி ..

எங்களால் எப்படி....?"

" நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும் என்கிறார். ஆண்டுக்கு 50 கோடி போடுங்க..." என்கின்றார் பிரதமர்.

முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். என்ன ஒரு மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம்.

1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன.

அடுத்த வருடம் 50 கோடி.

1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்கத் தொடங்கினார்.

பிள்ளை பெண்டாட்டிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற இன்றைய ஊழல் பெருச்சாளிகளின் கவலையல்ல.

மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே ...!

சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்....

முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார்.

அதோ..

நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர்.

ஓடினார் முதல்வர்....

தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது ?

தாவியணைத்தார் அந்த தொழிலாளியை... கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார்.

வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது.

இன்று ஆண்டுக்கு லாபம் 2000 கோடிகள்...!

இந்த பதிவை படித்த போது என்னையுமறியாமல் என் கண்கள் நனைந்தன.

இப்படியும் ஒரு மனிதர் இவரன்றி பிறந்ததுமில்லை ! இனி பிறக்கபோவதுமில்லை !

ஆனால் இருக்கும் வரை அவர் அருமை தெரியவில்லை. Krv Raja— avec Rajini Padmanaban Padhu et

13 autres personnes

.

Voir la traduction

581945534_2282068312260505_6382668743788

  • கருத்துக்கள உறவுகள்

இந்தம்மா கோட்டலில் சாப்பிட வருபவர்களுக்கு இரும்பு சத்து குறை

irumbu-sathu.jpg

  • கருத்துக்கள உறவுகள்

thatuvam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

586179426_896198122737315_12263783291981

  • கருத்துக்கள உறவுகள்

cdma.jpg

  • கருத்துக்கள உறவுகள்

590743940_1158641323152032_3025863305122

  • கருத்துக்கள உறவுகள்

593457989_1883076775620669_1328322136936

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.