Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, அபராஜிதன் said:

நன்றி  வசீ ,இன்னும் கேள்விகள் உள்ளன தொடருகிறேன் 

கேளுங்கள் எனக்கு தெரிந்தால் கூறுகிறேன்.

  • Replies 665
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/12/2022 at 08:48, vasee said:

அதனால் 1825 இல் stop loss இனை இட்டு 1810 இல் ஒரு தொகுதியினையும் 1820 பகுதில் இன்னொரு தொகுதியினையும் விற்க தீர்மானித்துள்ளேன்.

1819 இல் மட்டும் தங்கம் ஒரு தொகுதி விற்றுள்ளேன் Stop loss 1825.

தங்கத்தின் விலை தற்போது 1814 இல் உள்ளது, விலை அதிகரித்தால் மீண்டும் ஒரு விற்கவுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று ஜப்பான் மத்திய வங்கி பணமுறிகளை வாங்குவதாக அறிவித்த பின்னர் ஏற்பட்ட சடுதியான ஜென் பெறுமதி அதிகரிப்பினால் அனைத்து ஜென் இணை நாணயங்கள் பெருத்த சரிவினை சந்தித்தது  AUDJPY முக்கிய வலயத்தில் 87.858 விலையில் வாங்கியுள்ளேன் stop loss 86.984.

ஜப்பான் மத்திய வங்கியின் எதிர்பாரா முடிவு மிக பெரிய அளவில் சந்தையில் தாக்கத்தினை செலுத்தியுள்ள நிலையில் AUDJPY வாங்கியது ஒரு தவறான முடிவாகவே தெரிகிறது ஆனால் வெறும் தொழில்னுட்ப அடிபடையில் வாங்கியுள்ளேன்.

AUDJPY no indicator trading  இது பற்றி முன்பு குறிப்பிட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.amazon.com.au/gp/product/B09BK4GSZJ/ref=dbs_a_def_rwt_hsch_vapi_tkin_p1_i0

இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவலை அடிப்படையாக கொண்டு AUDJPY வர்த்தகம் செய்துள்ளேன், இந்த புத்தகம் இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம் என நினைக்கிறேன்.

தேவையற்ற விளக்கங்கள், குழப்பநிலையினை உருவாக்கிவிடும் அதனால் மிக மிக சுருக்கமாக சொல்ல வேண்டியவற்றை குறிப்பிடுகிறேன்.

 

Trend - விலையின் போக்கு

விலையின் போக்கினை 3 வகைகளாக வகைப்படுத்துவர்.

Sideways Trend

1. Uptrend - தொடர்ச்சியான விலை அதிகரிப்பு

 

2. Downtrend - தொடர்ச்சியான விலை வீழ்ச்சி

 

3. Sideway / Trading range/ ranging - விலை பக்கவாட்டாக நகர்தல். (ex)

Sideway / Trading range/ ranging - விலை பக்கவாட்டாக நகர்தல்

 

சந்தை பெரும்பாலான தருணங்களில் விலை பக்கவாட்டாகவே நகரும், இந்த வகையான சந்தைகளில் வர்த்தகத்திலீடுபடுவது நிகழ்தகவு அடிப்படையில் அதிக பாதகமான நிகழ்தகவு கொண்டது.

இதனாலேயே பெரும்பாலான நேரங்களில் முதலீட்டாளர்கள் இந்த வகை சந்தைகளை தவிர்ப்பதுண்டு.

ஆனால் பெரும்பாலான நேரங்களில் சந்தை இவ்வாறாகவே இருக்கும், அப்படியாயின் இவ்வாறான சந்தையில் எவ்வாறு வர்த்தகத்திலீடுபடுவதற்கு இந்த வகையான உத்தி சிறந்தது.

 

Key level area - முக்கிய வலயங்கள்.

1.Support area - ஆதரவு வலயம்.

2.Resistance area - எதிர்ப்பு வலயம்.

AUDJPY Daily Chart

 

Support area - ஆதரவு வலயம் 

விலை வீழ்ச்சி தொடர்ச்சியாக நிகழும் தருணத்தில் குறிப்பிட்ட வலயத்தில் விலை வீழ்ச்சி இழப்பு தடுக்கப்பட்டு விலை அதிகரிப்பு நிகழும் இடம்.

 

Resistance area - எதிர்ப்பு வலயம் 

விலை அதிகரிப்பு தொடர்ச்சியாக நிகழும் தருணம் குறிப்பிட்ட வலயத்தில் விலை அதிகரிப்பு தடுக்கப்பட்டு விலை வீழ்ச்சி ஏற்படும் இடம்.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Monthly candlestick chart 

முக்கிய வலயங்களை அடையாளங்காண்பதற்கு நாள், வாரம் மற்றும் மாத வரைபடங்கள் பயன்படுத்துவர், பொதுவாக மாத வரைபடத்தினை நான் பயன்படுத்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இலிருந்து line chart மாற்றவும், மேலே சிகப்பு வட்டத்தினால் குறியிடபட்ட MT4 platform பார்க்கவும்.

Candle chart - open, high, low, close

line chart - close

Candle chart என 4 விலைகள் கொண்டதாக ஒவ்வொரு மெழுகுதிரியும் காணப்படும் ஆனால் line chart வெறும் இறுதி விலை மட்டும் காணப்படும்.

முதலில் அதி கூடிய விலையினையும் அதி குறைந்த விலையினையும் குறிக்கவும் (நடைமுறை விலையில் இந்த வலயம் எந்த தாக்கமும் ஏற்படுத்தாவிடிலும் எதிர்காலத்தில் உதவலாம்).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விலை உயரும் போது அல்லது இறங்கும் போது (தொடர்ச்சியாக) ஒரு இடத்தில் விலையின் பயணம் தடைப்பட்டு திரும்பும் விலை மீண்டும் ஒரு முறை அந்த விலையினை கடக்க முற்படும் அது பயனளிக்காத வலயத்தினை Failed level என குறிப்பிட்டுள்ளேன்.

இந்த வல்யம் தனிய குறித்த ஒரு கோடிட்ட விலையினை குற்ப்பதில்லை அந்த கோட்டினை சுற்றியுள்ள பகுதியினை குறிப்பிடுகிறது.

எதிர்வரும் காலங்களில் இந்த வலயம் முக்கிய ஆதரவு வலயமாகவோ அல்லது எதிர்ப்பு வலயமாகவோ மாறிவிடுகிறது, ஒரு ஆதரவு வலயம் உடைக்கப்பட்டு விலை கீழிறங்கினால் எதிர்காலத்தில் அது ஒரு எதிர்ப்பு வலயமாக மாறிவிடுகிறது. அது போலவே ஒரு எதிர்ப்பு வலயம் உடைக்கப்படும்போது அது ஆதரவு வலயமாக மாறிவிடுகிறது.

இதனடிப்படையில்  AUDJPY தற்போதய முக்கிய வலய்மாக் 88.000 வல்யம் உள்ளது

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

4 மணிநேர வரை படத்தில் Bullish engulfing signal  அடிபடையில் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, தற்போது ஒரு ஒரு வர்த்தகம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது இரண்டாவது வர்த்தகம் விலை குறைந்தால் மட்டுமே ஏற்படும் (50% retracement of Bullish engulfing candle).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Reversal candlestick pattern

1. Doji

DojiDefinition-efc3ba7213db4200a0a69f354369960b.png

2. Shooting star / Hammer

shooting star example

Hammer Candlestick

3.tweezer top / tweezer bottom

railway tracks - tweezers

4.  Bullish Engulfing candle / Bearish engulfing candle 

vxfrjzm0TQGRtkVT0o5HcImesNlh1MK5wY--Um-NvmRYvfYU0BsArbWVe14d05T3vhR8feGUiTPAPehgpHx_lDVa_lJzF1KN0RAPIZrP7V3sPcUMguHL3JZyxnPsIE0i97Dm8rw

Bearish engulfing candlestick pattern

சாதாரணமாக இந்த மெழுகுதிரி எந்த தாக்கமும் செலுத்தாத உபயோகமற்ற வடிவங்கள், ஆனால் முக்கிய வலயங்களில் இவை நிகழும்போது இவை பலமிக்க அறிகுறியாக சந்தையின் போக்கில் ஏற்படப்போகும் மாற்றத்தினை முன் கூட்டியே கூறுபவையாக திகழ்கிறது.

மெலும் இவை 100 % சரியானது அல்ல, ஆனால் சாதகமான நிகழ்தகவினை கொண்டவையாக திகழ்கிறது.

மேலே குறிப்பிடப்பட்ட வர்த்தக முறைமை அப்படியே அந்த புத்தகத்திலிறுந்து  பின்பற்றப்படவில்லை, ஆனால்  அந்த புத்தகத்தில் குறிப்பிட்ட அடிப்படையில் சில மாற்றங்களுடன் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாவது வர்த்தகம் 4Hour candle bullish engulfing 50% retracement இல்லை 100% retracement.

மேலே குறிப்பிட்ட வர்த்தகம் 4 மணித்தியால வரைபடத்தில் மேற்கொள்ளப்பட்டது, அதன் ஒரு மணித்தியால வரைபடத்தில் Hammer candle reversal pattern தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, அதே போல் 88.000 முக்கிய வலயத்தில் ஒரு மணித்தியால வரைபடத்தில் Bullish engulfing signal ஆனால் அது எதிர்பார்த்தவாறு விலை உயராமல் பின்னர் விலை வீழ்ச்சி அடைந்துவிட்டது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, vasee said:

அதே போல் 88.000 முக்கிய வலயத்தில் ஒரு மணித்தியால வரைபடத்தில் Bullish engulfing signal ஆனால் அது எதிர்பார்த்தவாறு விலை உயராமல் பின்னர் விலை வீழ்ச்சி அடைந்துவிட்டது.

மேலே உள்ள வரைபடம் 1 மணிநேர வரைபடம், 1, 2 என சிகப்பு வட்டங்களினால் குறியிடப்பட்ட இடங்களில் விலை உயர்வதற்கான அறிகுறியினை காட்டுகிறது, ஆனால் அடுத்த மெழுகுதிரி Bearish engulfing candle எனும் நேரெதிரான சந்தை மாற்றத்தினை காட்டுகிறது அதே போல் 3 என குறியிடப்பட்ட வட்டம் முக்கிய வலயத்தில் விலை மேலே செல்லாமல் விலை திரும்பும் என குறிப்பிடுகிறது.

குறைந்த நேர வரைபடம் பயன்படுத்தும் போது சந்தை மாற்றத்தினை ஆரம்பத்தில் உணரலாம் ஆனால் மேற்கூறிய உதாரணங்கள் போல தவறான அறிகுறியினையும் காட்டி விடுகிறது.

இந்த காரணத்திற்காகவே 4 மணிநேர வரைபடம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இலாபம் குறைவு ஆனால் தேவையற்ற தவறான அறிகுறிகளை வடிகட்டிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலே உள்ள வரைபடத்தில் 1 என குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள விலை உயர்ந்த மெழுகுதிரியின் ஆகக்கூடிய விலை 88.100 ஆக உள்ளது இந்த விலையினை கடந்தால் தற்போது விலை குறையும் போது வாங்குவதற்காக போட்டு வைத்துள்ள 87.360 ஒடரினை இரத்து செய்துவிட்டு 88.100 மேல் சந்தைவிலையில் இன்னொரு தொகுதி வாங்கவுள்ளேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திரைப்படத்தில் கைதிகள் ஒரு கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த கப்பல் எங்கு நிலை கொண்டுள்ளது என தெரியாது அதனை கண்டுப்டிப்பதற்காக மூக்கு கண்ணாடி பேனாவினை பயன்படுத்தி துருவநட்சத்திரத்தின் உதவியினூடு கப்பலின் தரிப்பிடத்தினை கணிக்கிறார்கள் (மூக்கு கண்ணாடியிற்கு பதிலாக முகம் பார்க்கும் கண்ணாடி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் தவறுதலாக காட்டிவிட்டார்கள்).

இங்கு எவ்வாறு துருவநட்சத்திரம் உள்ளதோ அதே போல் பங்கு வர்த்தகத்தில் Money management உள்ளது.

உதாரணமாக மேலே கூறப்பட்ட ஒரு மணிநேர வரைபடத்தில் 1 என குறிப்பிடப்பட்ட பகுதியில் வர்த்தகம் எடுக்கப்பட்டிருக்குமாயின் எதிர்பார்க்கப்படும் விலை 90.780 இனை அடையும்போது இலாபம் 1:2 மேல் இருந்திருக்கும்.

Entry 88.900

Stop 88.130

Profit target 90.780

ஆனால் அது தோல்வியான வர்த்தகமாகியிருக்கும்.

அடுத்து 2 என குறிப்பிட்ட வட்டத்தில் (ஒரு மணிநேர வரைபடத்தில்) இரண்டாவது தோல்வியான் வர்த்தகத்தினை எடுத்தால் அது சாதகமாக சென்றால் கிட்ட்டதட்ட 1:5 எனும் வீதத்தில் இலாபம் கிடைத்திருக்கும்.

இப்போது ஏற்கனவே 2 தோல்வி வர்த்தகம் உள்ளது 3 ஆவதாக 88.360 hammer candle வர்த்தகம் ஒரு மணிநேர வரைபடத்தில் எடுக்கப்பட்டிருக்குமாயின் எதிர்பார்க்கப்படும் இலாம் 1:7 எனும் விகிதத்தில் இலாபம் எதிர்பார்க்கப்படுகிறது ( விலை 90.780 இனை இன்னமும் அடையவில்லை).

முதல் 2 இரண்டு வர்த்தக நட்டத்தினை இலாபத்திலிருந்து நீக்கினால் 1:5 எனும் விகிதத்தில் இலாபம் ஏற்படலாம் (விலை 90.780 எட்டாமலும் போகலாம்).

ஆகவே குறைந்த நேர வரைபடம் பயன்படுத்துவது தவறாகாது, ஆனால் தொடர்ச்சியாக (ஒவ்வொரு மணித்தியாலமும் )பார்க்கவேண்டும்.

Money management பொறுத்தவரை எனது கணக்கின்0.10% இலிருந்து அதிக பட்சமாக 1% வரை ஒரு குறிப்பிட்ட வர்த்தகத்திற்கு risk உள்ளது.

உதாரணமாக $10000 இல் எனது வர்த்தக கணக்கு இருக்குமாயின் எனது Risk
0.10% = $10
1% = $100

https://www.earnforex.com/metatrader-indicators/Risk-Calculator/

நான் இந்த இணையத்திலிலுள்ள இலவச மென்பொருள் மூலம் எனது forex trading ஆன lot இனை தீர்மானிக்கின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதாரணத் திற்காக குறிப்பிட்ட படம் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

AUDJPY 88.100 முக்கிய வலயத்தினை விலை கடந்தால் இன்னொரு தொகுதி வாங்குவதாக கூறியிருந்தேன், விலை 88.100 பகுதியில் விலை திரும்புவதற்கான அறிகுறியாக Shooting star reversal pattern தோன்றியது, ஆனால் உடனடியாக வர்த்தக்த்தினை மூடவில்லை, மஞ்சள் கோட்டினால் குறிப்பிடப்பட்டுள்ள channel break இற்கு பின்னரே எனது வர்த்தகத்தினை மூடுவதற்கு ஏற்ப எனது trailing stop ஐ உயர்த்தி வைத்திருந்தமையால் அந்த பகுதியில் வர்த்தகம் தானாக மூடப்பட்டது.

தற்போது Bearish flag எனும் chart pattern உருவாகி யுள்ளது.

இது ஒரு கொடி வடிவம் கொண்ட வரைபட அமைப்பு கொண்டது, இது பெரும்பாலும் சிறப்பான நிகழ்தகவு கொண்ட அமைப்பு.

பொதுவாக கொடி போன்ற அமைப்பிலிருந்து விலை உயரும் போதோ அல்லது இறங்கும் போதோ அந்த வர்த்தகத்திலீடுபடுவார்கள்,

ஆனால் இன்னமும் இந்த நாணயத்தினை விற்க ஆரம்பிக்கவில்லை, காரணம் விலை இன்னமும் lower low எனும் பகுதியினை கடக்கவில்லை என காரணம் கூற முயன்றாலும் இதுவரை AUDJPY Bullish நிலையிருந்து உடன்டடியாக எதிர்நிலை (Bearish) எடுக்க முடியவில்லை, முடிவு சரியா எனும் ஒரு குழப்பநிலை.

விலை உடைப்பு பகுதியான 88.600 நெருங்கும்போது விற்க தீர்மானித்துள்ளேன் (50/50 நிகழ்தகவு).

கொடியின் கம்பின் நீளம்தான் இதன் எதிர்பார்ப்பு விலை.

கொடியின் கம்பின் நீளம் 92.00 - 87.000 = 5.000

Target (Break) 88.600 - 5.000 = 83.600

தங்கம் இரண்டாவது தொகுதி 1820 பகுதிகளில் விற்றுள்ளேன் கணிசமான இலாபத்தில் உள்ளது, தற்போது ஆதரவு வலயத்தில் (Support) உள்ளது விலை இறங்குவது தடைப்பட்டு உயர்ந்தால் அனைத்து தங்க வர்த்தகங்களையும் மூடிவிட்டு, தங்கத்தினை வாங்க தீர்மானித்துள்ளேன்.

 

  • Like 1
Posted

வசீ 
chart எந்த வரையறைக்குள் பார்க்க வேண்டும் 5   நிமிட chart அல்லது மணித்தியால அளவிலான CHART ? forex டிரேடிங் ன்  போது?

MT5  ஐ  burkkorage ஆப்ஸ் உடன் இணைப்பதும் சிக்கலாக உள்ளது ?
எந்த platform  பயன்படுத்துகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, அபராஜிதன் said:

வசீ 
chart எந்த வரையறைக்குள் பார்க்க வேண்டும் 5   நிமிட chart அல்லது மணித்தியால அளவிலான CHART ? forex டிரேடிங் ன்  போது?

MT5  ஐ  burkkorage ஆப்ஸ் உடன் இணைப்பதும் சிக்கலாக உள்ளது ?
எந்த platform  பயன்படுத்துகிறீர்கள் ?

1,5,15,30 நிமிட வரைபடங்கள் வேகமானவை, பொதுவாக தினவர்த்தகத்திற்கு (Day trading) பாவிப்பவை.

Momentum trading (Trend trading using with indicators) பொதுவாக Indicatorகள் மிகவும் மெதுவாகவே அறிகுறி காட்டும்.

Chart pattern Break trading பொதுவாக indicators விட துரிதமானவை.

குறைந்த நேரம் பாவிக்கலாம் 

ஆனால் Price action trading 

இல் கிக குறுகிய நேரம் தவறான சமிஞ்சைகள் அதிகாம் கொண்டதானது, இதற்கு 1,4,நாளாந்த வரைபடம் பாவிக்கலாம்.

London session & Us session மட்டும் தினவர்த்தகத்திற்கு பயன்ப்டுத்தவும் (Trending sessions).

ஆசிய வர்த்தக நேரத்தினை தவிர்க்கவும், அந்த நேரத்தில் விலை பக்கவாட்டாக நகரும்.

Momentum & Chart pattern break trading  நீண்ட கால முதலீட்டிற்கும் பயன்படுத்தலாம்.

உதாரணத்திற்கு stochastic, MACD இந்த இரு indicator பயன்படுத்தப்பட்ட Trading system (Daily) back test result

Year Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec Yr%
1995 0.30% 1.60% -2.10% -1.60% -1.50% 1.40% 4.00% 4.10% 5.30% 3.50% -0.80% 2.20% 17.10%
1996 0.70% -0.80% 0.70% -0.70% 1.20% 1.40% 0.70% 0.10% -0.50% 2.70% -1.40% 1.50% 5.70%
1997 -0.70% -1.70% 3.30% -1.50% -1.40% -1.60% -0.30% 5.20% 0.10% 0.70% 3.90% -2.20% 3.50%
1998 0.00% 0.60% 0.40% -0.40% 5.10% -1.20% 4.00% -0.90% 3.60% -2.80% 1.50% -2.10% 7.70%
1999 -1.10% 2.00% -2.50% -1.50% 0.20% 0.00% 0.00% 0.00% 1.50% 0.40% 0.00% -1.00% -2.20%
2000 3.90% 2.30% -1.00% -1.90% 2.60% 1.00% -0.30% -2.40% 2.20% -1.30% 2.40% 9.70% 18.10%
2001 -3.20% -1.50% -0.20% -1.00% -2.60% 1.60% 3.10% -1.90% -0.70% 0.60% 1.60% 4.00% -0.40%
2002 -1.30% -1.40% 2.00% -1.20% -0.20% 2.50% -3.40% -0.90% 3.10% 1.10% -0.50% 1.00% 0.60%
2003 3.50% 0.30% 0.50% 2.50% 2.20% -2.60% 0.70% 0.00% 1.80% -2.20% 4.00% 2.70% 14.00%
2004 -0.80% 2.30% -3.30% 2.40% 1.80% -1.40% 0.50% 0.50% 1.60% -1.40% 0.50% 1.40% 4.00%
2005 0.10% 1.60% -0.30% 0.10% -0.80% 0.10% 0.70% 1.00% -0.20% 1.90% 0.80% 0.20% 5.30%
2006 2.10% -1.10% 1.20% 0.60% 0.50% 0.70% -0.40% 2.20% -0.70% -0.80% 1.90% 2.50% 9.00%
2007 0.00% -1.60% 1.10% 3.30% 0.10% 0.70% 0.30% -1.30% 3.40% 3.00% -1.60% 0.10% 7.50%
2008 -0.50% 0.60% 1.10% 3.50% 1.60% 1.10% 0.00% -1.40% -0.20% 0.00% -2.30% 5.40% 9.10%
2009 -2.90% 7.20% 4.60% 0.50% 2.60% 1.30% 1.90% 0.10% -1.30% 3.40% 0.00% 2.00% 21.00%
2010 -0.70% 0.00% 3.00% -2.80% 0.00% 0.90% -0.10% -2.10% 6.00% -1.30% -0.90% -0.20% 1.60%
2011 1.90% 0.50% 3.70% 1.30% -0.50% 0.30% -0.50% -1.00% -2.00% 4.10% -1.30% -0.20% 6.40%
2012 2.10% 7.30% -0.40% -2.60% 0.00% 1.80% -0.70% -0.40% 3.70% 1.00% 4.60% 6.00% 24.20%
2013 8.40% 0.40% 1.50% 5.10% 1.70% -1.00% 0.80% -0.40% 1.10% 1.10% 3.10% 4.00% 28.70%
2014 -0.30% 1.90% 1.10% 0.00% 0.00% 0.00% 0.00% -0.90% 0.60% 1.80% 5.20% -1.30% 8.20%
2015 0.00% 0.20% -0.10% 4.60% 1.80% 2.00% -0.60% -0.90% 0.50% 0.20% 0.00% 2.20% 10.10%
2016 2.20% -1.00% 2.80% -0.40% -0.60% -2.60% 1.90% 0.60% -0.30% 1.80% 5.30% 0.70% 10.60%
2017 0.00% -0.70% 1.30% 4.20% 2.20% 3.30% 1.30% 0.20% 1.70% -0.50% 0.60% -0.50% 13.90%
2018 -0.10% -1.70% -0.10% 0.20% -0.60% 0.60% 1.50% 0.60% 1.30% -1.20% -0.20% -2.00% -1.70%
2019 -0.40% 1.50% -0.30% 1.10% -0.90% 0.00% -0.40% -1.10% 0.70% 2.00% -0.30% 0.60% 2.60%
2020 0.50% -0.60% -0.60% 0.80% -1.80% -0.70% 2.70% 0.30% 0.30% -0.30% 0.80% 1.20% 2.50%
2021 1.00% 1.40% 0.10% 0.90% 1.90% -1.00% 0.00% 0.00% 0.10% 1.10% -1.10% 0.70% 5.10%
2022 -1.20% 1.50% 5.00% 1.10% -0.80% 1.80% -2.20% 0.90% 2.90% 3.60% -1.90% -0.80% 10.20%
Avg 0.50% 0.80% 0.80% 0.60% 0.50% 0.40% 0.50% 0.00% 1.30% 0.80% 0.90% 1.30%  

 

  All trades Long trades Short trades Buy&Hold (EURJPY)
Initial capital 10000 10000 10000 10000
Ending capital 95624.47 95624.47 10000 11217.99
Net Profit 85624.47 85624.47 0 1217.99
Net Profit % 856.24% 856.24% 0.00% 12.18%
Exposure % 52.13% 52.13% 0.00% 100.00%
Net Risk Adjusted Return % 1642.60% 1642.60% N/A 12.18%
Annual Return % 8.40% 8.40% 0.00% 0.41%
Risk Adjusted Return % 16.11% 16.11% N/A 0.41%
Total transaction costs 0 0 0 0
 
All trades 316 316 (100.00 %) 0 (0.00 %) 1
 Avg. Profit/Loss 270.96 270.96 N/A 1217.99
 Avg. Profit/Loss % 0.74% 0.74% N/A 12.18%
 Avg. Bars Held 15.72 15.72 N/A 8894
 
Winners 172 (54.43 %) 172 (54.43 %) 0 (0.00 %) 1 (100.00 %)
 Total Profit 127631.67 127631.67 0 1217.99
 Avg. Profit 742.04 742.04 N/A 1217.99
 Avg. Profit % 2.09% 2.09% N/A 12.18%
 Avg. Bars Held 21.75 21.75 N/A 8894
 Max. Consecutive 7 7 0 1
 Largest win 6175.33 6175.33 0 1217.99
 # bars in largest win 71 71 0 8894
 
Losers 144 (45.57 %) 144 (45.57 %) 0 (0.00 %) 0 (0.00 %)
 Total Loss -42007.2 -42007.2 0 0
 Avg. Loss -291.72 -291.72 N/A N/A
 Avg. Loss % -0.86% -0.86% N/A N/A
 Avg. Bars Held 8.53 8.53 N/A N/A
 Max. Consecutive 5 5 0 0
 Largest loss -2220.02 -2220.02 0 0
# bars in largest loss 5 5 0

0

 

 

மேலே உள்ள முதலீடு மிகவும் மெதுவாகவே நகரும் மாதம் ஒன்றிற்கு 1 வர்த்தகம் என்ற அளவிலேயே மேற்கொள்ளும், 27 ஆண்டிற்கு 856% விகிதத்தினால் அதிகரிக்கும் என தரவு காட்டப்பட்டாலும் (10000 ஆனது 95264 ஆக அதிகரிக்கும்) அது உண்மையில் நிகழாது அதற்கு காரணம் ஆண்டு தோறும் வருமான வரி கழிக்கும் போது வருமானம் குறையும் என கருதுகிறேன். 

உங்களுடைய CFD broker MT4/MT5 username, password அத்துடன் Sever detail தந்திருந்தால் நீங்கள் தவறான சேர்வரை தெரிவு செய்தால் வேலை செய்யாது அல்லது உங்களது குறியீட்டு சொல் அல்லது உங்கள் பாவனையாளர் பெயர் தவறாக இருந்தால் வேலை செய்யாது.

உங்களுடைய  Trading strategy உண்மையான வர்த்தகத்திலீடுபடுவதற்கு முன்னம் Back test செய்து சரிபார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

EA (Auto Trading) பாவிபதாக இருந்தால் amazon EC2 பாவிப்பது உகப்பானது மின்சார செலவும் குறைவு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Price action trading 1 மணித்தியாலம், 4 மணித்தியாலம்,நாளாந்த வரைபடம் பயன்படுத்துவது நல்லது, மேலே சில சொற்கள் தவறுதலாக இடம்பெறவில்லை, அத்துடன் முதலீட்டு வர்த்தகத்திற்கு நாளாந்த வரைபடம் பயன்படுத்தலாம்.

சில Manage fund களில் முதலிடுவது ஓரளவிற்கு நீங்களாக முதலீடு செய்வதற்கு இணையாகும் தேவையற்ற மினக்கேடு இல்லை ஆனால் அவர்களது சேவைக்கட்டணம் மிக அதிகமாக இருக்கும் சராசரியாக 1.5% அறவிடுவார்கள்.

Back test செய்வதற்கு காசு செலவழித்து மென்பொருள் வாங்க தேவையில்லை FX blue trading simulator plug in பயன்படுத்தி MT4 data பயன்படுத்தலாம்.

Trading journal இற்கு evernote போல பல இலவச மெபொருள் இணியத்தில் உள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  All trades Long trades Short trades
Initial capital 10000 10000 10000
Ending capital 13341.84 13341.84 10000
Net Profit 3341.84 3341.84 0
Net Profit % 33.42% 33.42% 0.00%
Exposure % 51.67% 51.67% 0.00%
Net Risk Adjusted Return % 64.68% 64.68% N/A
Annual Return % 235.22% 235.22% 0.00%
Risk Adjusted Return % 455.27% 455.27% N/A
Total transaction costs 0 0 0
 
All trades 191 191 (100.00 %) 0 (0.00 %)
 Avg. Profit/Loss 17.5 17.5 N/A
 Avg. Profit/Loss % 0.15% 0.15% N/A
 Avg. Bars Held 16.4 16.4 N/A
 
Winners 106 (55.50 %) 106 (55.50 %) 0 (0.00 %)
 Total Profit 4613 4613 0
 Avg. Profit 43.52 43.52 N/A
 Avg. Profit % 0.38% 0.38% N/A
 Avg. Bars Held 21.14 21.14 N/A
 Max. Consecutive 6 6 0
 Largest win 294.62 294.62 0
 # bars in largest win 41 41 0
 
Losers 85 (44.50 %) 85 (44.50 %) 0 (0.00 %)
 Total Loss -1271.16 -1271.16 0
 Avg. Loss -14.95 -14.95 N/A
 Avg. Loss % -0.13% -0.13% N/A
 Avg. Bars Held 10.48 10.48 N/A
 Max. Consecutive 4 4 0
 Largest loss -54.12 -54.12 0
# bars in largest loss 4 4 0
 
Max. trade drawdown -133.61 -133.61 0
Max. trade % drawdown -1.2 -1.2 0
Max. system drawdown -161.68 -161.68 0
Max. system % drawdown -1.42% -1.42% 0.00%
Recovery Factor 20.67 20.67 N/A
CAR/MaxDD 165.08 165.08 N/A
RAR/MaxDD 319.5 319.5 N/A
Profit Factor 3.63 3.63 N/A
Payoff Ratio 2.91 2.91 N/A
Standard Error 133.36 133.36 0
Risk-Reward Ratio 108.76 108.76 N/A
Ulcer Index 0.49 0.49 0
Ulcer Performance Index 467.6 467.6 N/A
Sharpe Ratio of trades 12.67 12.67 0
K-Ratio 0.1 0.1 N/A

 

இது முன்பு  குறிப்பிட்ட முதலீட்டிற்கான உத்தி (Break out) 15நிமிட இடைவெளியில் வர்த்தகம் செய்யும் போது.

Year Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec Yr%
2022 N/A N/A N/A N/A N/A N/A N/A N/A N/A 8.80% 13.90% 7.60% 33.40%
Avg 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 8.80% 13.90%

7.60%

 

 

இந்த மாதமும் இதற்கு முந்திய இரண்டு மாதமுமாக ஏறத்தாழ 3 மாதகாலப்பகுதியில் செய்யப்பட்டது.

 

 

Posted

எனது முதலீட்டினை இழந்ததாலும் நேரம் இன்மையாலும் சில நாட்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தது.

இப்போது மீண்டும் இறங்கியுள்ளேன். ஆனால் முதலீடு இல்லாமல் Virtuel Trading இல். இதில் பெரிய தொகை முதலீடாகத் தரப்பட்டதால் பல்வேறு விதமான வர்த்தகங்களை முயன்று பார்க்க முடிந்தது. குறிப்பாக விற்கும் வர்த்தகம் (Sell) பல்வேறு முதலீடுகளில் முயன்று பார்க்க முடிந்தது.

இன்று Nasdaq இல் குறுகிய trading வர்த்தகம் ஒன்றை முயற்சி செய்தேன். இதற்காக அதிக நேரம் தேவைப்படும். நான் நேரம் கிடைக்கும்போது மட்டும் முதலீட்டினைச் செய்துள்ளேன்.

இன்று நான் வர்த்தகம் செய்த நேரத்த்தில் பங்குகளின் நிலை கீழ்கண்டவாறு உள்ளது.

day.png

ஆரம்பப் புள்ளியும் முடிவுப் புள்ளியும் ஏறத்தாள ஒன்றாக இருப்பதை அம்புக்குறியில் காட்டியுள்ளேன். ஆரம்பத்தில் முதலிட்டால் முடிவில் இலபமும் நட்டமும் இல்லாமல் இருக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது குறிப்பிட்ட சில மணி நேரம் வரைபு ஒரு நிலையான எல்லைக்குள் நிற்கிறது. படத்தில் வட்டமிக்குக் காட்டிய பகுதியை அடுத்த படத்தில் பெருப்பித்துள்ளேன்.

step.png

இவ் வரைபில் சிவப்பு அம்புக்குறி காட்டியுள்ள உயரமானது 200$ முதலீட்டில் 5 டொலர்களுக்குச் (13 அலகுகள்) சமமானது. உதாரணமாக 10850 இலிருந்து 10863 ற்கு நகருதல்.

குறிப்பிட்ட வலையத்தினுள் விலை வலையத்தின் கீழ்மட்டத்திற்கு வரும்போது வாங்கும் வர்த்தகமும் (buy) வலையத்தின் உச்சிக்குச் செல்லும்போது விற்கும் வர்த்தகமும் (sell) செய்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் TP யின் அளவு 5$ தான். SL முக்கியமில்லை, அல்லது இதில் எனக்குச் சரியான அனுபவம் இல்லை.

200 டொலர் (+200$) முதலீட்டில் இன்றைய வர்த்தக விபரம் இதோ. விற்கும் வர்த்தகங்களை மஞ்சள் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

list.png

இதில் முதலாவதாக உள்ள வர்த்தகத்தின் நேரத்தைக் கவனியுங்கள். அது நான் ஆரம்பத்தில் இட்ட முதலீடு இறுதியில் 5 டொலர் இலாபத்தில் முடிந்துள்ளது. இது முதலாவது படத்தில் காட்டிய தொடக்க - முடிவு அம்புக்குறிக்கு இணையாகும். 🙂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 31/12/2022 at 10:08, இணையவன் said:

எனது முதலீட்டினை இழந்ததாலும் நேரம் இன்மையாலும் சில நாட்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தது.

இப்போது மீண்டும் இறங்கியுள்ளேன். ஆனால் முதலீடு இல்லாமல் Virtuel Trading இல். இதில் பெரிய தொகை முதலீடாகத் தரப்பட்டதால் பல்வேறு விதமான வர்த்தகங்களை முயன்று பார்க்க முடிந்தது. குறிப்பாக விற்கும் வர்த்தகம் (Sell) பல்வேறு முதலீடுகளில் முயன்று பார்க்க முடிந்தது.

இன்று Nasdaq இல் குறுகிய trading வர்த்தகம் ஒன்றை முயற்சி செய்தேன். இதற்காக அதிக நேரம் தேவைப்படும். நான் நேரம் கிடைக்கும்போது மட்டும் முதலீட்டினைச் செய்துள்ளேன்.

இன்று நான் வர்த்தகம் செய்த நேரத்த்தில் பங்குகளின் நிலை கீழ்கண்டவாறு உள்ளது.

day.png

ஆரம்பப் புள்ளியும் முடிவுப் புள்ளியும் ஏறத்தாள ஒன்றாக இருப்பதை அம்புக்குறியில் காட்டியுள்ளேன். ஆரம்பத்தில் முதலிட்டால் முடிவில் இலபமும் நட்டமும் இல்லாமல் இருக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது குறிப்பிட்ட சில மணி நேரம் வரைபு ஒரு நிலையான எல்லைக்குள் நிற்கிறது. படத்தில் வட்டமிக்குக் காட்டிய பகுதியை அடுத்த படத்தில் பெருப்பித்துள்ளேன்.

step.png

இவ் வரைபில் சிவப்பு அம்புக்குறி காட்டியுள்ள உயரமானது 200$ முதலீட்டில் 5 டொலர்களுக்குச் (13 அலகுகள்) சமமானது. உதாரணமாக 10850 இலிருந்து 10863 ற்கு நகருதல்.

குறிப்பிட்ட வலையத்தினுள் விலை வலையத்தின் கீழ்மட்டத்திற்கு வரும்போது வாங்கும் வர்த்தகமும் (buy) வலையத்தின் உச்சிக்குச் செல்லும்போது விற்கும் வர்த்தகமும் (sell) செய்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் TP யின் அளவு 5$ தான். SL முக்கியமில்லை, அல்லது இதில் எனக்குச் சரியான அனுபவம் இல்லை.

200 டொலர் (+200$) முதலீட்டில் இன்றைய வர்த்தக விபரம் இதோ. விற்கும் வர்த்தகங்களை மஞ்சள் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

list.png

இதில் முதலாவதாக உள்ள வர்த்தகத்தின் நேரத்தைக் கவனியுங்கள். அது நான் ஆரம்பத்தில் இட்ட முதலீடு இறுதியில் 5 டொலர் இலாபத்தில் முடிந்துள்ளது. இது முதலாவது படத்தில் காட்டிய தொடக்க - முடிவு அம்புக்குறிக்கு இணையாகும். 🙂

நஸ்டாக் 100 குறியீட்டில் வர்த்தகம் செய்துள்ளீர்கள் என கருதுகிறேன், எனது கருத்து சரியா என அறியத்தரவும்.

இதில் 4 விற்றல் வர்த்தகமும் ஏனையவை அனைத்தும் வாங்கல் வர்த்தகம் (பிரென்சு தெரியாது ஊகத்தினடிப்படையில்) மேற்கொண்டுள்ளீர்கள்.

இது ஒரு தின வர்த்தக அடிப்படையில் செய்துள்ளீர்கள் குறித்த நாள் ஆரம்ப விலையும் இறுதி விலையும் கிட்டதட்ட ஒன்றாக உள்ளது.

இந்த நாளிற்குரிய மெழுகுதிரி அமைப்பு (Daily candle stick ) Doji candle ஆகும், விலை ஒரு புள்ளியில் ஆரம்பித்து விலை அதிகரித்து பின்னர் குறைந்து அல்லது மறுவளமாக இறுதியில் குறித்த விலையில் முடிவடைகிறது.

இந்த நிலையினை நடுநிலையான அல்லது தீர்மானமற்ற சந்தை நிலவரம் என கூறுவார்கள், ஒவ்வொரு நாளும் இதே மாதிரி நிகழாது அல்லது அதற்கான நிகழ்தகவு குறைவு என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

உங்களது இந்த முயற்சி ஒரு சிறந்த முயற்சி, நீங்கள் தனித்துவமாக உங்களுக்கு ஏற்ற ஒரு முறைமையினை (strategy) கடைப்பிடிக்க முயல்வது நல்லது.

Maximum adverse excursion vs Maximum favorable excursion  

மேலே இணித்துள்ள காணொளிகள் சிறந்த காணொளிகள் அல்ல விடயத்தினை சுருக்கமாக கூறுகின்றன.

ATR என்பது சராசரி நாளில் சந்தை எவ்வளவு ஏற்றத்தாழ்வு ஏற்படும் எனபதுடன் நிற்காமல் சந்தை நிலவரத்தினை கூறுகின்றது (trending market / Ranging market).

தனிய ஒரு பங்குகளில் முதலிடாமல் குறியீட்டில் முதலிடும்போது Stop loss எனபது பிரச்சினையில்லைதான் எப்படியாவது விலை மீண்டும் குறைந்த பட்சம் வாங்கின விலைக்கு வரும் ஆனால் சில வேளை நீண்ட நாள் காத்திருக்கவேண்டும்.

கிட்டதட்ட ஆரம்பகாலத்தில் இதே போல தின வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளேன் ஆனால் சிறிய வித்தியாசம் அவுஸ்ரேலிய சந்தைகளில்.

அமெரிக்க சந்தைகள் இங்கு அதிகாலையில் முடிவடைய இங்கு சந்தை ஆரம்பமாகும், அமெரிக்க சந்தை சிறப்பாக செயற்பட்டால் 99% அதனை அப்படியே அவுஸ்ரேலிய சந்தை பின் தொடரும்.

அமெரிக்க சந்தை சிறப்பாக செயற்பட்டால், அவுஸ்ரேலிய சந்தை (ALL ordinaries, ASX 200)  திறக்கப்பட்டதும் முந்தைய நாளின் விலையினைவிட அதிகரித்த விலையில் ஆரம்பிக்கும், இதனை இடைவெளி வர்த்தகம் (gap trade) என அழைப்பார்கள்.

இதில் 3 வகையுண்டு ஆனாலும் பெரும்பாலும் runaway gup நிகழும்(Gap never filled that day).

முதல் 15 நிமிடங்களில் ஏற்படும் ஆக உயர் விலை (Resistance) Break out / Reverse (temporally)

முதல் 15 நிமிடங்களில் ஏற்படும் ஆக குறைந்த விலை (Support) Reverse

குறியீட்டிற்கும் தனித்தனி பங்குகளின் விலைக்குமிடையே சிறிது நேரத்திற்கு மட்டும் வேறுபாடு காணப்படும் அதன் அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம்.

அதே நேரம் குறியீட்டின் ஆரம்ப அதிக / குறைந்த விலை நோக்கி குறியீடு நகரும்போது பங்குகளின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்னரே அறிகுறி காட்டிவிடும்.

இது உங்களுக்கு விளங்கும வகையில் சொல்லவில்லையோ என கருதுகிறேன்.

இவர் அமெரிக்காவில் ஒரு மிக பெரிய நிதி நிறுவனம் நடாத்துகிறார்.

தினவர்த்தகம் செய்யும் போது

1.Tape reading (level 2) 

2.Catalyst (News)

3.Chart

4.intution 

5. Big picture

முக்கியம் என கூறுகிறார்.

இதில் Big picture என்பது குறியீட்டினை என கருதுகிறேன், இதனையே மேலே குறிப்பிட்டுள்ளேன்.

Edited by vasee
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/12/2022 at 15:08, இணையவன் said:

இதில் முதலாவதாக உள்ள வர்த்தகத்தின் நேரத்தைக் கவனியுங்கள். அது நான் ஆரம்பத்தில் இட்ட முதலீடு இறுதியில் 5 டொலர் இலாபத்தில் முடிந்துள்ளது. இது முதலாவது படத்தில் காட்டிய தொடக்க - முடிவு அம்புக்குறிக்கு இணையாகும். 🙂

@இணையவன் @vasee
இருவரும் அடிக்கடி வாங்கி விற்கிறீர்களே 

கமிசன் பணம் போக கையில் மிஞ்சுமா?

சிறிது லாபம் வந்தாலும் வருட முடிவில் வரி கட்ட வேண்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

@இணையவன் @vasee
இருவரும் அடிக்கடி வாங்கி விற்கிறீர்களே 

கமிசன் பணம் போக கையில் மிஞ்சுமா?

சிறிது லாபம் வந்தாலும் வருட முடிவில் வரி கட்ட வேண்டுமே?

சி எப் டி இல் கொமிசனாக விலகல் எடுப்பார்கள் (அதாவது வாங்கும் விலை உதாரணமாக 2.00 என எடுத்து கொண்டால் 2.80 வாங்கும் விலையாக இருக்கும்), இன்னொரு வகை குறைந்த விலகல் ஆனால் கொமிசன் எடுப்பார்கள், நான் தேர்ந்தெடுத்தது முதலாவது.

வரி செலுத்தவேண்டும், ஆனால் வரி குறைப்பதற்காக கணக்காய்வாளர் சில நடைமுறைகளை கையாளக்கூடும், ஒரு தடவை எனது கணக்காய்வாளர் முன்பு ஏதோ கூறினார் நினைவில் இல்லை (ஆர்வம் இல்லாததனால் கண்டு கொள்ளவில்லை).

உங்களது கணக்காய்வாளருடன் கதைத்துவிட்டு கணக்கினை ஆரம்பிக்கலாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி வசி.

 

17 hours ago, vasee said:

வரி செலுத்தவேண்டும், ஆனால் வரி குறைப்பதற்காக கணக்காய்வாளர் சில நடைமுறைகளை கையாளக்கூடும், ஒரு தடவை எனது கணக்காய்வாளர் முன்பு ஏதோ கூறினார் நினைவில் இல்லை (ஆர்வம் இல்லாததனால் கண்டு கொள்ளவில்லை).

பெரிதாக வரி செலுத்தும் நிலையில் தற்போது எனது பங்கு வர்த்தகம் செல்லவில்லை என்பதுதான் உண்மை, குறிபாக சொன்னால் நட்டத்தில்தான் செல்கிறது, அதனால் பெரிதாக வரியினை பற்றி கவலைப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Sell on MAY and go away

https://www.investopedia.com/terms/s/sell-in-may-and-go-away.asp

"மே இல் விற்றுவிட்டு எங்காவது செல்" எனும் பதம் பங்கு சந்தையில் உள்ளது.

பொதுவாக அமெரிக்க சந்தைகள் மட்டுமல்ல அவுஸ்ரேலிய சந்தையிலும் இது பொருந்தும், காரணம் இங்கு வர்த்தக ஆண்டு யூனில் முடிவதால் பங்கு சந்தையில் பெரியநிதி நிறுவனங்கள் தமது பங்குகளை விற்று கணக்கெடுக்கின்றன.

யூனில் இருந்து ஒக்டோபர் வரை (6 மாதங்கள்) பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வதினை தவிர்த்துவிட்டு ஒக்டோபரில் பங்குகலை வாங்கி கிறிஸ்மஸ் முன்னர் விற்றல் (3 மாதகாலம்), மார்கழி மற்றும் தை மாதம் பங்கு சந்தை மெதுவாக இருக்கும் இந்த 2 மாதங்களை தவிர்த்துவிட்டு மாசியில் வாங்கி சித்திரையில் விற்றல்.

இந்த நடவடிக்கையினை  எனது நீண்டகால முதலீட்டு அடிப்படையில் ஓய்வூதிய கணக்கில் செய்வதுண்டு.

இந்த ஒளிப்பதிவில் ஒக்டோபர் முதல் இன்றுவரையான ASX 20 (Blue chip) பங்குகளின் 5 bar break out (15 நிமிட) Back test உள்ளது.

அவுஸ்ரேலிய பங்கு சந்தையில் முதல் 20 பங்குகள்.

இந்த பங்குகள் Dividend ஆக வாங்கப்படும் பங்குகள் பெரிய அளவில் இலாபத்தினை நட்டத்தினையோ கொடுக்காத பாதுகாப்பான பங்குகள் தை மாதத்தில் வாங்கி டிசம்பரில் வித்தால் -0.04% நட்டமேற்படும்.

ஆனால் டிவிடன் அதனை ஈடு செய்துவிடும் ஆனால் வங்கி வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும் காலங்களில் இதனை விட வங்கி வட்டி விகிதம் இலாபகரமாக இருக்கும்.

இணையவன் நீங்கள் கூறிய ஒரு நாள் வர்த்தக உதாரணம் போன்றதே இதுவும், ஆனால் இது ஒரு வருட காலத்தினை கொண்டது.

Initial capital 10000 10000
Ending capital 13856.79 13856.79
Net Profit 3856.79 3856.79
Net Profit % 38.57% 38.57%
Exposure % 83.88% 83.88%
Net Risk Adjusted Return % 45.98% 45.98%
Annual Return % 351.35% 351.35%
Risk Adjusted Return % 418.89% 418.89%
Total transaction costs 830 830
 
All trades 83 83 (100.00 %)
 Avg. Profit/Loss 46.47 46.47
 Avg. Profit/Loss % 0.17% 0.17%
 Avg. Bars Held 31.76 31.76
 
Winners 41 (49.40 %) 41 (49.40 %)
 Total Profit 5567.87 5567.87
 Avg. Profit 135.8 135.8
 Avg. Profit % 1.25% 1.25%
 Avg. Bars Held 46.24 46.24
 Max. Consecutive 4 4
 Largest win 692.87 692.87
 # bars in largest win 130 130
 
Losers 42 (50.60 %) 42 (50.60 %)
 Total Loss -1711.08 -1711.08
 Avg. Loss -40.74 -40.74
 Avg. Loss % -0.89% -0.89%
 Avg. Bars Held 17.62 17.62
 Max. Consecutive 4 4
 Largest loss -234.17 -234.17
# bars in largest loss 31 31
 
Max. trade drawdown -276.31 -276.31
Max. trade % drawdown -7.11 -7.11
Max. system drawdown -342.76 -342.76
Max. system % drawdown -2.76% -2.76%
Recovery Factor 11.25 11.25
CAR/MaxDD 127.34 127.34
RAR/MaxDD 151.81 151.81
Profit Factor 3.25 3.25
Payoff Ratio 3.33 3.33
Standard Error 202.23 202.23
Risk-Reward Ratio 98.61 98.61
Ulcer Index 0.84 0.84
Ulcer Performance Index 412.06 412.06
Sharpe Ratio of trades 1.83 1.83
K-Ratio 0.12

0.12

மேலே உள்ள தரவு 01 ஒக்டோபர் முதல் 20 டிசம்பர் வரையான தரவாகும்.

 
Edited by vasee
இணைப்பு அகற்றப்பட்டுள்ளது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.