Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

உண்மைதான். ஏலவே இறங்கி விட்டது.

ஓம். பைசரின் வக்சீன் அங்கீகரிக்கபட்ட சமயம் அதன் CEO இப்படி விற்றார்.

XRP இத்தனை சாதக செய்திக்கும் பின்னும் .50 இல் நிற்பது கடுப்பாக இருப்பினும், விலை artificially suppressed ஆக இருக்க கூடுமோ எனவும் யோசிக்க வைக்கிறது.

intrinsic value என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

  • Replies 665
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, vasee said:

intrinsic value என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

நாணயத்தை நிறுவனங்கள் வங்கிகள் பலரும் adopt பண்ணினால் $15-20 என நினைக்கிறேன்.

ஆனால் பாக்யராஜ் காமெடி போல் பலர் 100, 586, 1000 எண்டு அடிச்சு விடுகிறார்கள்🤣.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, goshan_che said:

நாணயத்தை நிறுவனங்கள் வங்கிகள் பலரும் adopt பண்ணினால் $15-20 என நினைக்கிறேன்.

ஆனால் பாக்யராஜ் காமெடி போல் பலர் 100, 586, 1000 எண்டு அடிச்சு விடுகிறார்கள்🤣.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தெரியவில்லை, தற்போது மேலோட்டமாக வரைபடத்தினை பார்த்தேன், தற்போதய uptrend line இலிருந்து விலை கீழிறங்கியுள்ளது, இதனை மட்டும் கருத்தில் கொண்டு விலை வீழ்ச்சியடையும் என கூற முடியாது விலை 0.45 விட்டு கீழிறங்கும் போது downtrend (Market structure) ஆரம்பமாகும்.

தற்போதுள்ள நிலையில் 0.58 resistance, 0.45 support நீண்டகால கணிப்பீடல்ல இது technical analysis அடிப்படையில் கூறப்பட்டது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, vasee said:

தெரியவில்லை, தற்போது மேலோட்டமாக வரைபடத்தினை பார்த்தேன், தற்போதய uptrend line இலிருந்து விலை கீழிறங்கியுள்ளது, இதனை மட்டும் கருத்தில் கொண்டு விலை வீழ்ச்சியடையும் என கூற முடியாது விலை 0.45 விட்டு கீழிறங்கும் போது downtrend (Market structure) ஆரம்பமாகும்.

தற்போதுள்ள நிலையில் 0.58 resistance, 0.45 support நீண்டகால கணிப்பீடல்ல இது technical analysis அடிப்படையில் கூறப்பட்டது.

நன்றி. பலர் utility அதிகரிக்கும் போது விலை கூடும் என்கிறார்கள். சர்வதேச பணப் பரிவர்த்தனையில் கணிசமான பங்கை XRP எடுக்கும் பட்சத்தில் - விலை 1,2,5 டாலர் ஆக இருக்க முடியாது என்றே நானும் எண்ணுகிறேன். இதன் அடிப்படையில்தான் $15-20 என்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

நன்றி. பலர் utility அதிகரிக்கும் போது விலை கூடும் என்கிறார்கள். சர்வதேச பணப் பரிவர்த்தனையில் கணிசமான பங்கை XRP எடுக்கும் பட்சத்தில் - விலை 1,2,5 டாலர் ஆக இருக்க முடியாது என்றே நானும் எண்ணுகிறேன். இதன் அடிப்படையில்தான் $15-20 என்கிறேன்.

2018 இல் 3.00 ஆரம்பித்து பின்னர் அடிப்படை support 0.28 விலையில் பயணம் செய்து பின்னர் கிரிப்டோக்களின் அதீத வளர்ச்சிக்காலமான கோவிட் காலகட்டத்தில்(2021 ஆரம்ப காலத்தில்) 1.60 எட்டியுள்ளது. பின்னர் மீண்டும் 0.28 support வரை கீழிறங்கி (0.30) தற்போதுள்ள நிலையில் உள்ளது.

இதனை தொழினுட்ப ஆய்வடிப்படையில் தெளிவாக கூறுவதாயின் கோவிட் காலத்திலிருந்த விலையின் இறங்குமுகத்தின் தொடர்ச்சி இன்னமும் மாறவில்லை.

What Is Market Structure? Ultimate Definition - TRADEPRO Academy TM

HH = higher high (Uptrend)

HL = higher low (Uptrend)

LH = Lower high (Downtrend)

LL = Lower low (Downtrend)

கோவிட் காலத்திலிருந்து தற்போது வரை Downtrend இலேயே உள்ளது, கடைசி Lower high 0.73, ஆனால் விலை 0.30 இற்கும் 0.52 இடையில் விலை ranging எனும் நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இந்த ஆண்டு நடுப்பகுதி வரை சென்றுள்ளது.

இதனை Accumulation என கூறுவார்கள்

How to trade crypto using Wyckoff accumulation theory

இந்த ஆண்டு ஜூலை பகுதியில் ஏற்பட்ட 0.73 விகித அதிகரிப்பு மேலே உள்ள வரைபடத்தில் உள்ள Low volume sell off  ஆகும் தற்போதுள்ள விலை நிலையினை Jump the creek இணையாக கூறலாம்.

அடுத்து நிகழ உள்ளது Mark up விலை 0.73 கடக்கும் போது speculators இணைந்து கொள்வார்கள், அதன்பின் விலை சடுதியாக அதிகரிக்கும்.

இவ்வாறுதான் நிகழும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை ஆனால் அதற்கான வாய்புகள் அதிகம்.

The three skills of top trading இந்த புத்தகத்தினை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம் ( கிட்டதட்ட 100 அவுஸ்ரேலிய  காசளவில் வாங்கலாம்) இது ஒரு தத்துவார்த்தமான புத்தகம் மட்டுமே.

ஆரம்பத்தில் அவசரமாக எழுதியதால் சரியாக வரைபடத்தினை அவதானிக்கவில்லை.

தற்போது 3.00 அதிகபட்ச விலையாக உள்ளது அந்த விலையினை மீறினால்  ஒப்பீட்டளவில் நல்ல எதிர்காலம் என கூறலாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, vasee said:

2018 இல் 3.00 ஆரம்பித்து பின்னர் அடிப்படை support 0.28 விலையில் பயணம் செய்து பின்னர் கிரிப்டோக்களின் அதீத வளர்ச்சிக்காலமான கோவிட் காலகட்டத்தில்(2021 ஆரம்ப காலத்தில்) 1.60 எட்டியுள்ளது. பின்னர் மீண்டும் 0.28 support வரை கீழிறங்கி (0.30) தற்போதுள்ள நிலையில் உள்ளது.

இதனை தொழினுட்ப ஆய்வடிப்படையில் தெளிவாக கூறுவதாயின் கோவிட் காலத்திலிருந்த விலையின் இறங்குமுகத்தின் தொடர்ச்சி இன்னமும் மாறவில்லை.

What Is Market Structure? Ultimate Definition - TRADEPRO Academy TM

HH = higher high (Uptrend)

HL = higher low (Uptrend)

LH = Lower high (Downtrend)

LL = Lower low (Downtrend)

கோவிட் காலத்திலிருந்து தற்போது வரை Downtrend இலேயே உள்ளது, கடைசி Lower high 0.73, ஆனால் விலை 0.30 இற்கும் 0.52 இடையில் விலை ranging எனும் நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இந்த ஆண்டு நடுப்பகுதி வரை சென்றுள்ளது.

இதனை Accumulation என கூறுவார்கள்

How to trade crypto using Wyckoff accumulation theory

இந்த ஆண்டு ஜூலை பகுதியில் ஏற்பட்ட 0.73 விகித அதிகரிப்பு மேலே உள்ள வரைபடத்தில் உள்ள Low volume sell off  ஆகும் தற்போதுள்ள விலை நிலையினை Jump the creek இணையாக கூறலாம்.

அடுத்து நிகழ உள்ளது Mark up விலை 0.73 கடக்கும் போது speculators இணைந்து கொள்வார்கள், அதன்பின் விலை சடுதியாக அதிகரிக்கும்.

இவ்வாறுதான் நிகழும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை ஆனால் அதற்கான வாய்புகள் அதிகம்.

The three skills of top trading இந்த புத்தகத்தினை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம் ( கிட்டதட்ட 100 அவுஸ்ரேலிய  காசளவில் வாங்கலாம்) இது ஒரு தத்துவார்த்தமான புத்தகம் மட்டுமே.

ஆரம்பத்தில் அவசரமாக எழுதியதால் சரியாக வரைபடத்தினை அவதானிக்கவில்லை.

மிக அருமையாக எனக்கு கூட புரியும் படி எழுதியுள்ளீர்கள் நன்றி.

வழக்கின் தீர்ப்பு சாதகமாக வந்த போதுதான் ஜூலை 2023 விலை ஏற்றம் நடந்தது. பின்னர் profit taking ஆல் பழையபடி .52க்கு வந்ததாக நான் எண்ணுகிறேன்.

அதே போல் இந்த வாரமும் 6% கூடி பின் இறங்கி விட்டது (இன்னொரு சாதக தீர்ப்பு).

எலோன் மஸ்க் தும்மினாலே ஷிபா ஏறுகிறது. எத்தனை பொசீடிவ் செய்தி வந்தாலும் இது கூடுவதில்லை. கூடினாலும் உடனே இறங்கி விடும்.

கொஞ்சம் கான்ஸ்பிரசி தியரிதான் - ஆனால் வேணும் எண்டே price suppression செய்கிறார்களோ எனவும் எண்ணுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் தற்போது AUDJPY  நாணய மட்டுமே வர்த்தகத்தில் ஈடுபடுவதால் மற்ற  முதலீட்டு பொருள்களை கவனிப்பதில்லை சில வேளை எனது கணிப்பீடு தவறாக இருக்கலாம்.

https://www.youtube.com/channel/UCVD_DPF1dSV9kZRuv6ePckg

காணொளி கருத்து பகுதியில் எனது வர்த்தக கணக்கினை இனைத்துள்ளேன் அந்த இணையத்தளத்திற்கு சென்று வரைபடத்தினை அழுத்தினால் எனது வாங்கல் விற்றல் நடவடிக்கையினை அவதானிக்கலாம் அத்துடன் முடிந்த வரை வார இறுதியில் எனது தொழில்னுட்ப ஆய்வினை(AUDJPY) காணொளியாக பதிவிடுவேன்.

4 minutes ago, goshan_che said:

மிக அருமையாக எனக்கு கூட புரியும் படி எழுதியுள்ளீர்கள் நன்றி.

வழக்கின் தீர்ப்பு சாதகமாக வந்த போதுதான் ஜூலை 2023 விலை ஏற்றம் நடந்தது. பின்னர் profit taking ஆல் பழையபடி .52க்கு வந்ததாக நான் எண்ணுகிறேன்.

அதே போல் இந்த வாரமும் 6% கூடி பின் இறங்கி விட்டது (இன்னொரு சாதக தீர்ப்பு).

எலோன் மஸ்க் தும்மினாலே ஷிபா ஏறுகிறது. எத்தனை பொசீடிவ் செய்தி வந்தாலும் இது கூடுவதில்லை. கூடினாலும் உடனே இறங்கி விடும்.

கொஞ்சம் கான்ஸ்பிரசி தியரிதான் - ஆனால் வேணும் எண்டே price suppression செய்கிறார்களோ எனவும் எண்ணுவேன்.

விலை தற்போதுள்ள விலையினை விட அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது போலவே உள்ளது, ஆனால் உறுதிபட கூறமுடியாது.

எனது கணக்கு இலாப விகிதம் அதிகமாக இருப்பதற்கான காரணம் எனது கணக்கில் 3% ஒவ்வொரு வர்த்தகத்தின் போதும் Risk ஆக பயன்படுத்துகிறேன் இது ஒரு மிகவும் ஆபத்தான முயற்சி, ஆனால் தற்போது உள்ள சிறிய கணக்கினை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உயர்த்திய பின் ஆபத்தின் அளவினை குறைத்துவிடுவேன,

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Jump the creek இனை testing the support என கூறுவார்கள் இந்த Support (0.52)இல் ஒரு தொகுதி speculators வாங்குவார்கள், ஆனால் 0.73 விலை மீறும்போது வாங்குவதுதான் சிறந்த முடிவு (நிகழ்தகவு சாதகமானது).

Edited by vasee
  • 2 weeks later...
Posted

எலன் மஸ்கின் Tesla நிறுவனத்தின் நிதி அறிக்கை இன்று வெளியானதையடுத்து பங்குச் சந்தையில் இந் நிறுவனம் பாரிய சரிவைச் சந்தித்தது. இன்று 70 பில்லியன் டொலர்களுக்கு மேல் பங்குச் சந்தையில் இழந்துள்ளதாகக் கூறம்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

XRP வழக்கில் ரிப்பிள் நிர்வாகிகள் மீதான தனிப்பட்ட வழக்கை SEC கை விட்டது. இந்த செய்தி சில நாட்களுக்கு முன்பே வந்து விட்டது. இன்று உத்யோகபூர்வமாக நீதிபதி இவ்விரு வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மிகபெரும் கிரிப்டோ மோசடியில் ஈடுபட்ட SBF எனப்படும் நபர் அவர் மீதான 7 குற்றச்சாட்டிலும் குற்றவாளி என தீர்ப்பு!

 

 

 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/10/2023 at 10:55, vasee said:

நான் தற்போது AUDJPY  நாணய மட்டுமே வர்த்தகத்தில் ஈடுபடுவதால் மற்ற  முதலீட்டு பொருள்களை கவனிப்பதில்லை சில வேளை எனது கணிப்பீடு தவறாக இருக்கலாம்.

https://www.youtube.com/channel/UCVD_DPF1dSV9kZRuv6ePckg

காணொளி கருத்து பகுதியில் எனது வர்த்தக கணக்கினை இனைத்துள்ளேன் அந்த இணையத்தளத்திற்கு சென்று வரைபடத்தினை அழுத்தினால் எனது வாங்கல் விற்றல் நடவடிக்கையினை அவதானிக்கலாம் அத்துடன் முடிந்த வரை வார இறுதியில் எனது தொழில்னுட்ப ஆய்வினை(AUDJPY) காணொளியாக பதிவிடுவேன்.

விலை தற்போதுள்ள விலையினை விட அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது போலவே உள்ளது, ஆனால் உறுதிபட கூறமுடியாது.

எனது கணக்கு இலாப விகிதம் அதிகமாக இருப்பதற்கான காரணம் எனது கணக்கில் 3% ஒவ்வொரு வர்த்தகத்தின் போதும் Risk ஆக பயன்படுத்துகிறேன் இது ஒரு மிகவும் ஆபத்தான முயற்சி, ஆனால் தற்போது உள்ள சிறிய கணக்கினை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உயர்த்திய பின் ஆபத்தின் அளவினை குறைத்துவிடுவேன,

இது வரை 3% Risk பயன்படுத்தி வந்தேன் கடந்த வார இறுதியில் 50% Risk இனால் எனது கணக்கின் இலாபத்தினை இழந்ததுடன், எனது கணக்கில் 22% வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்குகள் வாங்க நினைப்பவர்கள் இப்ப வாங்கினால் நல்லது, 5 வருடங்களில் பல மடங்காகும் என நினைக்கின்றேன், லித்தியம் இப்ப குறைந்திருந்தாலும், ஏதிர்காலம் இதுதான்

With 100% ownership of 34,572 Ha (346km2) of prospective lithium projects within the James Bay region of Quebec.

 

https://www.jamesbayminerals.com.au/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த பங்கினை வாங்கியுள்ளீர்களா?

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பங்கு அல்லது அது போன்ற வர்த்தகம், சந்தையில் கணிதம் / பௌதிகம் எவ்வாறு செல்வாக்கு செலுத்த தொடங்கியது என்பது பற்றிய வரலாறும், நவீன வினைத்திறனான சந்தை கணித அடிப்படையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது போன்றவற்றை, ஆழமான துறை சார் விளங்கள் இல்லாமால், பொதுவாக விளங்க கூடியவாறு சொல்லப்பட்டு இருக்கிறது.

சுவராசியமான, நியூடன் அவரது இறுதி காலத்தில் முதலீட்டால் இழந்த பணம் பற்றியும் சொல்கிறது.

 

Black Scholes இப்பொது பெரும்பாலும் பாவிக்கப்படுவதில்லை என்றாலும் (குறிப்பாக 2008 க்கு பின்), அது சந்தையைப் பற்றியும், சொத்துக்களின் ஆபத்து தன்மை பற்றியும்  அறியத்தந்த கணித அடிப்படையிலான அறிவே இந்த அளவுக்கு பங்கு சந்தையை வளர்த்துவிட்டது.
 


முழுவதையும் பார்கவும். 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

xrp தண்டக்கட்டணத்தின்  காரணமாக sec உடன் பிரச்சனை ஆரம்பமாகி இருக்கிறது.

sec தான் இதை ஆரம்பித்தது. 

தலைப்பு செய்தி மட்டும் கீழே பதிவிடப்பட்டு உள்ளது. விபரங்களுக்கு இணைப்புக்குள் சென்று பார்க்கவும்.

 

https://en.bitcoinsistemi.com/there-is-no-calm-between-ripple-and-sec-there-has-been-a-new-development-in-the-xrp-case-here-are-the-details/

 

There is no calm between Ripple and SEC: There has been a new development in the XRP case! Here are the Details…

Ripple objected to the SEC's $2 billion penalty request in a petition to the court.

ஒன்றும் (நிதி) அறிவுரை அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒன்றும் அறிவுரை அல்ல.

அனால், கிரிப்டோ இல் ஒழுங்குமுறை (regulations) மாறுவாது மிக வேகமாக நடைபெறுவது.

இறுதியாக வந்த கிரிப்டோ புரிதல் உடன்பாட்டில், குறிப்பிட்ட விளக்கத்துக்கு இணங்க  வேண்டும், தொடர்ந்து கிரிப்டோ மத்திம பரிமாற்ற (cex) (இணைய) தளத்தை பாவிப்பதற்கு.

அந்த விளக்கம் 

'ஆம், (நான்) முதலிட்ட முழுப்பணத்தையும் இழக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை விளங்கி இணங்குகிறேன்'

என்பது.

இது பொதுவாக, கிரிப்டோ இல் எல்லோருக்கும் தெரியும் என்றாலும், அப்பட்டமாக  கையெழுத்து வைத்து இணங்குமாறு இதுவரை கேட்கப்படவில்லை.

இப்போது இணங்காவிட்டால், கிரிப்டோ மத்திம பரிமாற்ற (cex) (இணைய) தளத்தை பாவிப்பது, இணங்கும் வரையிலும் தடுக்கப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிதி அறிவுரை அல்ல. எதுவும் ஈடுபடுவரின் மதிப்பீடும், முடிவும்.

Blockchain தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கிய ஓர் Hedra எனும் கிரிப்டோ (அமைப்பு, Hedra foundation) - கிரிப்டோ நாணயத்தின்  குறியீடு $HBAR - மீள்சக்தி பத்திர பரிவர்த்தனையில் $HBAR ஐ  உபயோகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது  (proof of concept for Automating Renewable Energy Certificates Transactions using Hedera of concept) தொடங்கப்பட்டு இருக்கிறது. 

Hedra ($HBAR) இன் அமைப்பு ஆளுமை சபையில் இருக்கும் முக்கிய உறுப்பினர் EDF, பிரான்சின் (தேசிய, பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான நிறுவனம்) மின்னுற்றப்பத்தி நிறுவனம்.

இந்த ஆய்வை செய்வதில்  ஈடுபடுவது, Hedra கிரிப்டோ அமைப்பும், EDF உம்.    

கீழே இணைய இணைப்பு இருக்கிறது .

https://hedera.com/blog/edf-redex-and-rekursive-labs-collaborate-on-proof-of-concept-for-automating-renewable-energy-certificates-transactions-using-hedera

 

EDF, REDEX, and Rekursive Labs Collaborate on Proof-of-Concept for Automating Renewable Energy Certificates Transactions using Hedera
 
Nov 29, 2023
by Hedera Team
Hedera is the most used, sustainable, enterprise-grade public network for the decentralized economy.
 

The joint project uses distributed ledger technology (DLT) to streamline efficiency, transparency, and verification in the global $19 billion renewable energy certificate market

Paris, France  29 November  Électricité de France (EDF), one of the world's largest electricity producers, the largest renewable energy producer in Europe, and an active member of the Hedera Council, has successfully completed a proof-of-concept (POC) that aims to revolutionize and automate the management of renewable energy certificates (RECs). The project enables end consumers to retire small quantities of RECs in real time. This empowers individuals to send a clear market signal that they care about how the power they consume is being produced.

This ground-breaking effort was a collaboration with REDEX, a leading RECs solutions provider, and Rekursive Labs, a specialist in Web3 distributed ledger technology (DLT) enterprise solutions. The project leverages the power of Hedera's DLT and open-source Guardian platform to automate the issuance and redemption of RECs, paving the way for a more efficient and transparent renewable energy market. EDF, REDEX, and Rekursive Labs intend to further refine the solution, develop new use cases, and offer automated REC services to other producers and consumers of renewable energy globally.

Edouard Lavillonniere, Managing Director at EDF Lab Asia Pacific said: “With our expertise in renewable energy and electrical vehicle charging, EDF is the ideal partner for this collaboration. Our commitment to sustainability aligns perfectly with the vision of a greener future enabled by DLT. We believe this collaboration will drive positive change in the renewable energy sector. We are shaping a future where renewable energy adoption is streamlined, transparent, and accessible to all.”

Using EDF's MASERA Microgrid demonstrator in Singapore, this POC successfully demonstrated the automatic redemption of tokenized RECs at electric vehicle charging stations. This initiative involved collecting data from multiple sources, including solar panels, generators, and energy storage systems, to calculate the rate of green energy production into the grid. This data was then matched in near-real time with the energy consumed by electric vehicle chargers, to ensure that the certified green energy usage perfectly matched the actual consumption at the charging stations, down to the watt-hour. In addition, EDF provides the possibility for the customer to adjust the amount of energy to be certified for each individual charging session.

“Europe’s CBAM has created an urgent need to calculate and track the embedded carbon of traded goods. The complexity of this task will increase exponentially as we trend towards tracking even more attributes, and for products closer and closer to the end consumer. We believe tokenization presents a simpler and more scalable architecture for tracking multi-faceted environmental attributes across global supply chains  imagine a complex product like hydrogen or a car,” said Zhaotan Xiao, Executive Director at REDEX.

Many of Hedera’s council members are also RE100 members, whom I am sure will be enthusiastic early adopters of this elegant solution," he added.

As a concept, RECs are very simple – the instrument traces one’s power consumption to renewable energy sources. Its simplicity is precisely why the instrument is the most convenient and practical way for companies to achieve Scope 2 neutrality. This is driving the number of RECs issued and retired to more than double year on year.

By integrating the technologies developed by REDEX and Rekursive Labs, any renewable energy production or consumption system can now achieve full automation of the REC lifecycle, from issuance to redemption. For REDEX, whose mission is to accelerate the world’s transition towards renewable energy, this project is yet another step towards further digitizing, automating and enhancing trust in the RECs ecosystem.

Jason Loh, co-founder and Chief Commercial Officer at Rekursive Labs said: “We believe the future of sustainability solutions lies in embedding the REC tech stack into any renewable energy production or consumption system, from residential meters to hydro farms, and from solar farms to consumer products. By utilizing Web3 technologies and processes, organizations can trace renewable energy consumption across the entire supply and production chain, ensuring transparency and integrity. We are excited about the potential of this proof-of-concept and the impact it can have on accelerating the global movement towards sustainable energy production.”

The Hedera network is ideally suited for this POC due to its speed, scalability, enterprise focus and open source Guardian infrastructure. Hedera offers fast and cost-effective transactions, making it the perfect choice for real-time REC redemptions when compared to alternative DLTs. Additionally, Hedera's commitment to its carbon negative status aligns perfectly with the goal of promoting a global movement towards sustainable energy production.

For more information, please visit https://www.rekursive.com/rec-pilot.html for a video walkthrough of this project.

###

About EDF

EDF (Électricité de France) is a global, integrated energy company - one of the world's largest electricity producers and the largest renewable energy producer in Europe. With 140 GW of generation capacity across more than 30 countries, EDF generates over 650 TWh of electricity for 38 million customers, and 85% of that electricity has low or no carbon emissions. With 160,000 employees worldwide, EDF is active in the entire value chain of the electric industry, including R&D, project development, generation, trading, transmission, distribution, sales, and energy services.The group raison d’être is to build a net zero energy future with electricity and innovative solutions and services, to help save the planet and drive wellbeing and economic development.

About REDEX

REDEX Group Pte Ltd operates Asia’s leading trading platform for Renewable Energy Certificates (RECs). The company offers a one-stop ecosystem for RECs, supporting clients through the full RECs lifecycle – asset registration, production verification, marketplace, and retirement. As an early mover in Asia with a proven track record, REDEX is developing practical and innovative solutions to meet the clean energy needs of corporations globally. The company’s mission is to accelerate the world’s transition towards renewable energy. For more information, please visit https://redex.eco/.

About Rekursive Labs

Rekursive Labs is a specialist in Web3 DLT solutions, providing SaaS products that facilitate real world asset (RWA) tokenization and fractionalization of traditional finance (TradFi) products for enterprise customers. Their mission is to enable companies to leverage the benefits of distributed ledger technology with minimal additional costs. For more information, please visit https://www.rekursive.com.

About Hedera

Hedera is an open source, leaderless proof-of-stake network. Hedera’s robust ecosystem is built by a global community, on a network governed by a diverse council of industry-leading organizations, including abrdn, Avery Dennison, Boeing, Chainlink Labs, COFRA Holdings, DBS Bank, Dell, Dentons, Deutsche Telekom, DLA Piper, EDF (Électricité de France), eftpos, FIS (WorldPay), Google, IBM, the Indian Institute of Technology (IIT), LG Electronics, The London School of Economics (LSE), Magalu, Nomura Holdings, ServiceNow, Shinhan Bank, Standard Bank Group, Swirlds, Tata Communications, Ubisoft, University College London (UCL), Wipro, and Zain Group.

For more information, visit www.hedera.com, or follow us on Twitter at @Hedera, Telegram at t.me/hederahashgraph, or Discord at www.hedera.com/discord. The Hedera whitepaper can be found at www.hedera.com/papers.

Media Contact:

Wachsman
E: hedera@wachsman.com
T: +353 (87) 232 1670

  • 3 months later...
Posted

சென்ற வாரம் 70000 டொலர் பெறுமதியில் இருந்த பிட்கொயின் இன்று அதிகாலை 49000 டொலர் வரை இறங்கியுள்ளது. இந்த வருட இறுதியிலாவது ஒரு இலட்சம் டொலரைத் தாண்டும் என்றார்கள். யாராலும் எதிர்வு கூற முடியாத நிலையில்லாத பெறுமதியுடைய பிட்கொயின் எவ்வாறு வர்த்தக பணமற்று நாணயமாக ஆக முடியும் என்று புரியவில்லை.

 XRP யும் இதே மாதிரித்தான், இன்று 0.46 டொலர் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/8/2024 at 18:23, இணையவன் said:

சென்ற வாரம் 70000 டொலர் பெறுமதியில் இருந்த பிட்கொயின் இன்று அதிகாலை 49000 டொலர் வரை இறங்கியுள்ளது. இந்த வருட இறுதியிலாவது ஒரு இலட்சம் டொலரைத் தாண்டும் என்றார்கள். யாராலும் எதிர்வு கூற முடியாத நிலையில்லாத பெறுமதியுடைய பிட்கொயின் எவ்வாறு வர்த்தக பணமற்று நாணயமாக ஆக முடியும் என்று புரியவில்லை.

 XRP யும் இதே மாதிரித்தான், இன்று 0.46 டொலர் போகிறது.

VTX index ஏற்ப சந்தை சல சலப்பிற்கு ஏற்ற வகையிலேயே மற்ற முதலீடுகள் போலவே பிட் கொயினும் செயல்படும், இதன் மூலம் இது ஒரு ஆபத்தான முதலீடாகவே உள்ளது, தங்கம் போலவோ அல்லது நாணயங்கள் போலவோ செயற்படாது என்பது ஒரு புறம் இருக்க USDJPY கூட இரண்டு வாரத்தில் 14% சரிவினை சந்தித்துள்ளது( பிட் கொயினது ஒருவார இழப்பில் பாதியளவு) இது அமெரிக்க டாலரின் பெறுமதி வீழ்ச்சியால் ஏற்பட்டதல்ல, ஜப்பான் தனது பணப்பெறுமதி தொடர் இழப்பு சந்தித்து வரும் நிலையில் அதனை ஈடுகட்டும் முயற்சியினது விளைவு.

இரண்டு தசாப்தங்களாக ஜப்பான் எதிர்மறையான வட்டிவிகிதம் மூலம் தனது பொருளாதாரத்தினை வளர்க்க முற்பட்டத்து, உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் ஆபத்து மிகக்குறைந்த carry trade இரண்டு தசாப்தங்களாக செய்து வந்தனர்.

இறுதியாக பங்குனி மாதம் ஜப்பான் முதலாவது வட்டிவிகித அதிகரிப்பினை மேற்கொண்டலும் யென் தொடர்ச்சியாக அடிவாங்கியநிலையில் ஜப்பான் 150 யென் அமெரிக்க டொலருக்கு எதிரானநிலையில் ஜப்பானிய அரசு தலையிடலை மேற்கொள்ளும் என சந்தையில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டபோது 160 வரை சென்றது, இரண்டு தசாப்தங்களாக மேற்கொண்டனர் தற்போது பலர் தமது இந்த வர்த்தகத்தினை மூடுவதால் சந்தியில் பெரிய சல சலப்பு ஏற்படுகிறது அத்துடன் பூகோள அரசியலும் இணைந்து கொண்டுள்ளது.

அதன் படி 155 இனை யென் நெருங்கிய போது மே மாதத்தில் முதலாவது தலையீட்டினை மேற்கொண்டது அதற்காக செலவழித்த பணம் வீணாகப்போனது, ஏனெனில் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைய ஜூலையில் மீண்டும் வட்டிவிகித அதிகரிப்பு மூலம் ஜப்பான் இதனை எட்டி உள்ளது தற்போது கிட்டதட்ட 141 இல் உள்ளது எதிர்பார்க்கப்படும் இலக்கு 130 இனை இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலோ எட்டுவதே ஜப்பானின் நோக்கம்.

ஆனால் இந்த நிகழ்வு அமெரிக்க பொருளாதாரத்தின் சவப்பெட்டியின் முதல் ஆணியாக உள்ளது, அமெரிக்க பொருளாதாரத்துடன் உலகப்பொருளாதாரமும் பெரும் நெருக்கடியினை சந்திக்கலாம், சந்தையில் தற்போதய நிகழ்வினை Market correction ஆக நோக்குகிறார்கள், ஆனால் இதனை நான் பொருளாதார சரிவாகவே எதிர்பார்க்கிறேன், அமெரிக்க S&P 500 இரண்டு short நிலைகளை சந்தை மூடும் நேரத்தில் முடியிருந்தேன் பின்னர்,  சந்தைக்கு பிந்திய நேரத்தில் 2 short நிலைகளை எடுத்துள்ளேன் அதனை சந்தை ஆரம்பிக்கும் முன்னர் விற்கவுள்ளேன் காரணம் அமெரிக்க அரசு பெரும் பொருளாதார சரிவினை எதிகொள்ளுகின்ற நிலையில் ஒரு அவசரகால வரி விகித குறைப்பு ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது (அதனாலேயே அந்த இரண்டுநிலைகளையும் மூடியிருந்தேன்).

ஆனால் செப்ரெம்பரில் முதலாவது வரி விகித குறைப்பு என முன்னர் கூறப்பட்டது, அவ்வாறு அவசரகால வரிவிகித குறைப்பு ஏற்படாவிட்டால் சந்தை சரிவு தொடரும் (இதற்கு முன்னர் 3 அவசரகால வரிக்குறைப்பு அமெரிக்க பொருளாதாரத்தில் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தியிருந்ததனால் அவசரகால வரி விகிதகுறைப்பு சாத்தியம் மிக குறைவு) அதற்கு பூகோள அரசியல் ஒரு தூண்டல் காரணியாக உள்ளது, அதனாலேயே மத்திய கிழக்கில் தற்போதுள்ள பதற்ற நிலையினை உலக பொருளாதாரம் விரும்பவில்லை, அமெரிக்காவும் விரும்பாது என நம்புகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனைத்து வர்த்தகங்களையும் மூடிவிட்டேன், நிக்கி 225 சுட்டெண் நேற்றைய அளவினை விட அதிக விலையில் தற்போது உள்ளது இது ஒரு Market correction போலவே உள்ளது.

பிட்  கொயின் 58000 Resistance level (தற்போது 55000), இதனை கடந்து விலை ஏறினால இந்த சந்தை நிகழ்வு ஒரு தற்காலிக சந்தை பின்னடைவே (Market correction) பிட் கொயினை விற்பதில் (short trade) ஆர்வம் காட்டவில்லை அது ஒரு ஆபத்தான முடிவாக இருக்கலாம் என்பதாலேயே பலவீனமான அமெரிக்க பங்கு சந்தையினை விற்பதில் ஆர்வம் காட்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, vasee said:

அனைத்து வர்த்தகங்களையும் மூடிவிட்டேன், நிக்கி 225 சுட்டெண் நேற்றைய அளவினை விட அதிக விலையில் தற்போது உள்ளது இது ஒரு Market correction போலவே உள்ளது.

பிட்  கொயின் 58000 Resistance level (தற்போது 55000), இதனை கடந்து விலை ஏறினால இந்த சந்தை நிகழ்வு ஒரு தற்காலிக சந்தை பின்னடைவே (Market correction) பிட் கொயினை விற்பதில் (short trade) ஆர்வம் காட்டவில்லை அது ஒரு ஆபத்தான முடிவாக இருக்கலாம் என்பதாலேயே பலவீனமான அமெரிக்க பங்கு சந்தையினை விற்பதில் ஆர்வம் காட்டுகிறேன்.

பிட் கொயின் 58000 மற்றும் 60000 களில் எவ்வாறு சந்தை அந்த விலைகளை அணுகுகின்றது என்பதற்கேற்ப விற்க திட்டமிட்டுள்ளேன் அடிப்படையில் பிட் கொயினது இறங்குமுகம் ஆரம்பமாகிவிட்டது போல தோன்றுகிறது ஆனால் அதனை 58000 மற்றும் 60000 விலைகல் உறுதிப்படுத்தவேண்டும்.

மறுவளமாக அமெரிக்க SP500 பிட் கொயினை விட பலவீனமாக காணப்படுகின்றது அது 5400 புள்ளிகளில் கடந்து உயர்ந்தால் தற்போதய நிகழ்வு ஒரு தற்காலிக சந்தை பின்னடைவாக கருதப்படும்(Market correction) ஆனால் அமெரிக்க பங்கு சந்தை( SP500) 5400 புள்ளிகளுக்கு உயருமா என தெரியவில்லை தற்போது மிகவும் பலவீனமாகக்காணப்படுகிறது, 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.investopedia.com/what-is-the-sahm-rule-8637564

இந்த கருதுகோளின் அடிப்படையில் அமெரிக்கா பொருளாதார சரிவிற்குள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

https%3A%2F%2Fbucketeer-e05bbc84-baa3-437e-9518-adb32be77984.s3.amazonaws.com%2Fpublic%2Fimages%2Fa7365ad9-0d8f-46fb-9c91-ab4830049023_968x450.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்ரேலியாவின் கடந்த 12 மாத குறைந்த வேலையின்மை விகிதம் 3.5% தற்போது 4.1%, இந்த கருதுகோளின்படி அவுஸ்ரேலியாவும் பொருளாதார சரிவிற்குள் வந்துவிட்டது, ஆனால் வரிவிகித குறைப்பில் ஆர்வமில்லாமல் மத்திய வங்கியுள்ளது, அதற்குக்காரணமான பணவீக்கம் இன்னும் கட்டுப்பாட்டிற்கு வரவில்லை என கூறப்படுகின்றது, ஆனால் அதனைவிட பாதகமான பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்கவுள்ளது, உலகில் நிகழும் பூகோள அரசியல்கள் எரியும்  நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

https://www.cnbc.com/2024/08/05/recession-what-is-the-sahm-rule-and-why-is-everyone-talking-about-it.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு பொருளாதார மந்தநிலையைத் தூண்டும் வேலையின்மை விகிதம் போல இது ஒரு மேல் பார்வைக்கு தெரிந்தாலும், அமெரிக்காவின் வேலையின்மை விபரங்களை பார்க்கும் போது, இதன் காரணமாக பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்றும் சொல்கின்றனர். கடந்த மாதத்தில் சில துறைகளில் வேலை இழப்புகள் ஏற்பட்டிருக்கும் அதே நேரத்தில் வேறு சில துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டும் இருக்கின்றன என்கின்றனர். ஒரு பொருளாதார மந்தநிலையில் வேலை இழப்புகள் என்பது பொதுவாக எல்லா துறைகளிலும் இருக்கும். அடுத்த ஆறாம் திகதி வரை அடுத்த அறிக்கைக்காக காத்திருந்து முடிவு செய்யலாம் என்கின்றனர். 

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.