Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை!

எந்தவித அரசியல் பின்புலமுமற்ற(Non - Biased) பார்வையாளர்களுக்கு மட்டும். இந்த காணொளியில் அமெரிக்க வங்கிகளின் நிலையினையும் அதனை மூடி மறைக்க முற்படும் அரசியல்வாதிகளை நகைச்சுவையாக கூறுவதால் சில பார்வையாளர்களை பாதிக்கக்கூடும்.

  • 2 weeks later...
  • Replies 669
  • Views 60k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

  • சாமானியன்
    சாமானியன்

    வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

  • விலை என்பது அதன் உண்மையான மதிப்பிலேயே தங்கியுள்ளது. அசையும் சொத்துகளின் (Goods) விலை ஓரளவிற்கு நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படும் (efficient market hypothesis). உதாரணமாக கார் விலை

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2023 at 09:50, vasee said:

Proprietary trading firms பற்றி ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என கருதுகிறேன், இவை தமது காசினை உங்களுக்கு தற்காலிகமாக வழ்ங்குவார்கள் உங்களது வர்த்தகத்திற்காக பின்னர் அதில் ஏற்படும் வருமானத்தில் ஒரு பகுதியினை எடுத்து கொண்டு மிகுதியினை உங்களுக்கு இலாபமாக கொடுப்பார்கள், முன்னர் அவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் வேலைக்கமர்த்தி பயிற்சி கொடுத்து வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள்.

தற்போது இணையத்தில் பல நிறுவனங்கள் இணையத்தினூடாக இந்த வேலையினை வழங்குகின்றார்கள்.

அவர்களுடைய பணநிர்வாகத்தினடிப்படையில் வர்த்தக மாதிரி போட்டியில் ஈடுபட்டு உங்களது இயலுமையினை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு தமது நிதியினை வர்த்தகம் செய்வதற்காக வழங்குவார்கள்.

ஆரம்பத்தில் உங்கள் இயலுமையினை தெரிவிக்கும் தகுதிகாண் போட்டிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இதில் பல போட்டியாளர்கள் ஆர்வமாக கலந்து கொள்வதால் ஒரு நிறுவனம் ஒரு போட்டி மாதிரியினை உருவாக்கி  ஆண்டு ஒன்றிற்கு அதில் வேலை செய்யும் வேலையாளர்களுக்கு கிட்ட தட்ட 20 மில்லியன் பணத்தினை வழங்கியுள்ளது, ஆனால் அதே நிறுவனம் இவ்வாறு போட்டியில் கலந்து தோற்று போவர்களிடம் இருந்து பெறும் பணமாக 220 மில்லியனுக்கு மேலாக குறித்த ஆண்டில் பெற்றது அந்த  நிறுவனம்.

முழு நேர வேலையாக நிதிச்சந்தை வர்த்தகத்தினை ஈடுபட விரும்புவர்கள் சரியான புரிதல் இல்லாமையால் தமது பணத்தினை தகுதி காண் போட்டியில் இழக்கிறார்கள் என்பதால் ஆரம்பத்தில் பல நிறுவனங்கள் புதிது புதிதாக ஆரம்பிக்கப்பட்டன, அதில் சில வெறுமனே ஏமாற்று நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டன அவை காணமல் போயும் உள்ளன.

ஒரு சில நிறுவனங்கள் உண்மையாக இருக்கலாம், அப்படி உண்மையான நிறுவனமாக இருக்கும் என நான் கருதும் ஒரு நிறுவனத்தில் மிக சிறிய கணக்கு ஒன்றிற்காக 180 அமெரிக்க டொலர் போட்டி கட்ட்டணம் செலுத்தி போட்டியில் கலந்து அதில் தேர்வு பெற்றுள்ளேன்.

இந்த நிறுவனத்தில் பொருளாதார முக்கியத்துவம் உள்ள  செய்திகள் வரும்போது உங்கள் வர்த்தகம் மூடப்படாமல் இருந்தாலும் உங்கள் ஒப்பந்தம்  முறிக்கப்படாது, வார இறுதியிலும் உங்கள் வர்த்தகத்தினை மூட வேண்டும் எனும் விதிமுறை இல்லை என்பதால் எனது வகை வர்த்தகத்திற்கு ஏற்ற மாதிரியுள்ளது, ஆனால் பங்கு பிரிப்பு மட்டும் 50/50 எனும் அடிப்படையில் பாதகமாக உள்ளது ஆனால் இது ஒரு உண்மையான நிறுவனம் என நான் கருதுவதால் இந்த நிறுவனத்தில் இணைந்துள்ளேன்.

 

பகுதிநேர வேலையாக இணைந்துள்ளேன்.

ஒவ்வொரு 10% அதிகரிப்பினை கணக்கில் ஏற்படுத்தும் போது அந்த கணக்கினை இரட்டிப்பாக்குவார்கள்.

 

On 5/5/2023 at 19:18, vasee said:

கட்டணம் 235 யுரோ செலுத்தியுள்ளேன், தவறுதலாக 180 அமெரிக்க டொலர் என குறிப்பிட்டுள்ளேன், யாழ் கள உறவுகள் இந்த மாதிரியான நிதிநிறுவனங்களின் தகுதிகாண் போட்டியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியாயின் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

2 வாரங்களுக்கு ஒரு முறை உங்களது பங்கு இலாபத்தினை நிறுவனம் வளங்குகிறது, அதனை DEEL எனும் நிறுவனத்தினூடாக வளங்குகிறது, டீல் நிறுவனத்திற்கு உங்களது அடையால உருதிப்படுத்தல் செய்யப்பட்ட பின்னர் நீங்கள் விரும்ம்பும் மார்க்கம் மூலமாக உங்கள் பணத்தினை பெறலாம்,

Bank transfer

Support 180+ currencies
 
 

Revolut

Only available in USD
 
 

PayPal

Only available in USD
 
 

Wise

Instant and supports 7+ currencies
 
payoneer-transfer.svg

Payoneer

Only available in USD
 
 

Coinbase

Supports 5 cryptocurrencies
 
 

Binance International

Only available in BUSD

முதலில் பணத்தினை பெறுவதற்கான ஆணையினை நிறுவனத்திற்கு வழங்கியபின் 24 மனித்தியாலத்திற்குள் டீல் நிறுவனத்தினிடமிருந்து உங்களது பணம் தயாராக உள்ளது எனும் தகவல் வழங்கும் அந்த தகவல் கிடைத்தவுடன் உங்கள் வங்கிக்கணக்கிற்கோ அல்லது நீங்கள் விரும்பும் மேலே குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒரு முறையில் உங்கள் பணத்தினை பெற்றுகொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இரஸ்சிய  ஊடகங்களில் வெளியான பென்டகன் குண்டு வெடிப்பு புரளியால் பங்கு சந்தை பாதிப்பு, AI துணைகொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்களை யாழில் தடை செய்யப்பட்ட RT போன்ற ஊடகங்கள் காவி வந்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த RT ஊடக்த்தினை யாழில் தடை செய்யப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரித்தவர்களில் நானும் ஒருவன். தற்போது யாழின் முடிவு சரியானதுதான் என்பதை காலம் உணர்த்தியுள்ளது.

https://nypost.com/2023/05/22/ai-generated-photo-of-fake-pentagon-explosion-sparks-brief-stock-selloff/

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரத்திற்கு முந்தய வாரத்தில் ஒருவரை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

எடுத்தவுடனேயே கோபத்துடன் கூறினார் நீங்கள் கூறினீர்கள் 2025 வரை வட்டி விகிதம் அதிகரிக்காது என ஆனால் தற்போது வட்டி விகிதம் அதிகரிக்கிறது, வீட்டு கடன் கட்டுவதில் சிரமாக உள்ளதாகக்கூறினார்.

ஆம் அவர் எனது அபிப்பிராயத்தினை கேட்டிருந்தார் அது கோவிட் கட்டுபாடுகள் முடிவடைந்த கால கட்டம், அவர் என்னிடம் கேட்ட கேள்வி வட்டி விகிதத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? 

அவுஸ்ரேலிய அரசுகளும் வங்கிகளும் வட்டி விகித அதிக்ரிப்பு 2025 பின்னரே ஏற்படும் என கூறுகின்றன ஆனால் எனக்கு தெரியாது ஏனவே கூறியிருந்தேன், அத்துடன் கோவிட் பொருளாதார தூண்டலின் காரணமாக பணவீக்கம் ஏற்படும் என நான் கருதுவதாக கூறினேன் எனது கருத்து தவறாக இருக்கலாம் என கூறியிருந்தது எனது நினைவில் இருந்தது.

அவர் Fixed / variable வீட்டு கடன் தொடர்பாக ஆர்வம் காட்டுவதாக் காண்பித்தார், அதனால் நானும் அது தொடர்பாக எந்த அறிவுரையும் கூறவில்லை.

ஆனால் அவர் தனது வீட்டை விற்று அதனைவிட ஒரு பெரிய வீட்டினை வாங்கியிருந்தார் தற்போது வீட்டுக்கடன் மிக பெரியளவில் ஏற்பட்டு விட்டது வட்டி விகித அதிகரிப்பினால் அவ்ர் நிலை மோசமாக உள்ளது.

பின்னர் என்னிடம் மீண்டும் எனது கருத்தினை கேட்டார் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதா என, இந்த முரை தெளிவாக இல்லை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என கூறிவிட்டு வந்துவிட்டேன்.

கடந்த வாரம் வட்டி விகிதம் அதிகரிக்கப்படாது என அனைவரும் எதிர்பார்க்க மத்திய வங்கி 25 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

மே மாத இறுதியில் எதிர்பார்க்கப்பட நுகர்வோர் விலைசுட்டெண் 0.40 அதிகரித்திருந்ததே இதற்கு காரணம் ஆனால் மக்கள் அதனை கவனிக்க தவறியிருந்தார்கள்.

அதில் வீட்டு விலை, உணவு, போக்குவரத்து அந்த விலை அதிகரிப்பிற்கு காரணமாக இருந்தது.

இந்த மாத நடுப்பகுதியில் முக்கிய  4 வங்கிகளும் இந்த வட்டி விகித அதிகரிப்பினை அமுல்படுத்தவுள்ளது.

consumer confident, China PMI என்பன சரிவு ஏற்பட்டாலும் பணவீக்கம் குறைவதாக இல்லை அதற்கு காரணம் பெற்றோலிய பொருளின் விலையேற்றம் போக்குவரத்து உணவுப்பொருலின் விலையில் நேரடித்தாக்கம் ஏற்படுத்துகிறது.

China PMI சுட்டெண் சரிவினால் மூலப்பொருளின் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் அவஸ்ரேலியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் வெளிவரும் நிகர்வோர் விலைசுட்டெண்ணும், இந்த வாரத்தில் வெளிவரவுள்ள வேலையின்மை தரவுகளும் எதிர்கால வட்டி விகிதத்தினை தீர்மானிக்கும் சக்தியாகவுள்ளது, இந்த இரண்டு விடயங்களும் கடந்த மாதத்தில் அதிகரித்து வருவது கலைக்குரிய அம்சமாகவுள்ளது.

வேலைகளை தக்க வைத்தல் அத்துடன் பக்க வருவாயினை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும், இது எல்லோருக்கும் ஒரு கடினமான காலமாக உள்ளது.

தேவையற்ற ஆடம்பர போலி கவுரத்திற்கான செலவுகளை குறைத்தல், தேவையற்ற பெரிய கடனை சுமப்பதால் குடும்பத்தில் நிம்மதி இழப்பு, அதிகரித்த வேலையினால் முக்கியமான் குடும்ப நேர இழப்பு ஏற்படும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதாரணத்திற்காகவே அவுஸ்ரேலிய உள்நாட்டு பொருளாதாரத்தினை மேலே குறிப்பிடப்பட்டது, ஆனால் அனைத்து நாடுகளும் தற்போது இதே பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றன அதற்கு காரணம்

Spillover effect என பொருளாதாரத்தில் வரையறுத்துள்ளார்கள், உலக மயமாதலின் பக்க விளைவு எனவும் கூறுவர்.

ஒரு குறிப்பிட்ட நாடு உலகத்தில் உள்ள விடுதலை அமைப்புகள் உள்ளடங்கலாக உள்ள அமைப்புகளை தனது சுய இலாபத்தினடிப்படையில் பயங்கரவாத நாடு, பயங்கரவாத அமைப்பு என வரையறுக்கின்றது.

அந்த குறிப்பிட்ட நாட்டினை பொருளியலாளர் பொருளாதார பயங்கரவாதி என செல்லமாக அழைக்கிறார்கள், குறிப்பாக உலகில் பொருளாதார ரீதியில் ஏற்படும் அழிவுகளுக்கு காரணமாக பெரும்பாலும் இருந்து வந்ததனாலேயே அவ்வாறு அழைக்கிறார்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள போரினால் எதிர்பாராவிதமாக எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கத்தினை விட அதிக அளவில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது, அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சியினால் பண திர்வத்தன்மையில் நெருக்கடி உருவாகிறது என பொருளியலாளர்கள் பலர் அபாய குரலெழுப்புகிறார்கள், ஆனால் எவ்வாறு கோவிட் காலத்தில் எடுத்த கடும் முடிவு போலவே (பொருளாதார தூண்டல்) தற்போது அதனை கட்டுப்படுத்துவதில்(பணவீக்கம்) ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் அதனால் ஏற்பட போகும் பக்க விளைவை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.

அல்லது அதனை வேண்டும் என அலட்சியபடுத்துகிறார்களா என தெரியவில்லை, 1930 இல் உலகில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன்  தோற்றம் பெற்ற உலகமயமாதல் அதே போன்றதோர் நெருக்கடியுடன் முடிவுக்கு வருமோ எனும் ஒரு அச்ச நிலை உருவாகியுள்ளது.

தற்போது பல நாடுகளின் பொருளாதாரம் சரிவடைந்து செல்கிறது, அவுஸ்ரேலியாவில் இந்த காலாண்டிற்கான எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 0.50% பதிலாக 0.20% எனும் நிலையினை அடைந்துள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகள் எதிர்மறை வளர்ச்சி வீதம் ஏற்பட்டால் அதனை பொருளாதார சரிவு என அழைக்கிறார்கள், வருமான வளர்ச்சியினை விட பணவீக்க அதிகரிப்பு அதிகமாக உள்ளது, இதனைதான் களுதை தேந்து கட்டெறும்பாவது என கூறுகிறார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் வங்கியில் பெற்றுள்ள வீட்டுக்கடனின் பெறுமதியினை விட வீட்டின் விலை குறைவடையும் போது நிலமை மோசமாகிவிடும் வீட்டிற்கான கட்டணம் செலுத்துவதில் சிரமம் காணப்படும் நிலையில் வீட்டினை விற்கவும் முடியாது எனும் நிலை ஏற்படலாம்.

வீட்டினை விற்றாலும் வங்கிக்கு கடனாக பணம் செலுத்தும் நிலையில் இருப்பார்கள் இதனால் பலர் வங்குரோத்தாகும் நிலை ஏற்படலாம்.

ஆனால் தற்போது அதற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை

https://www.corelogic.com.au/news-research/news/2023/corelogic-home-value-index-further-evidence-australias-housing-downturn-is-over

தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் வீட்டின் விலை சரிந்திருந்தது ஆனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விலைகள் சிறிதளவு ஏற்றம் காணப்படுகிறதாக கூறுகிறது இந்த ஆய்வு.

ஆனால் பல மாறா வட்டி வீட்டுக்கடன் இந்த ஆண்டு நடுப்பகுதியில் மாற்றம் ஏற்படும் வட்டிக்கு வரவுள்ளது (இந்த மாதத்தில்) அதனால் எதிர்வரும் மாதங்களில்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

போர் தொடரும் நிலையில் நிலமை மேலும் மோசமாகவே வாய்ப்புள்ளது,இது அச்சுறுத்துவதற்கான பதிவல்ல ஆனால் இது தொடர்பான முன் தெளிவு அவசியமாவதாக கருதுகிறேன்,  உலகின் பல்வேறு பாகக்களில் வாழும் யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துகளை முடிந்தால் கூறவும்.

இது ஒரு பொருளாதார அறிவுரை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க கடன் உச்ச எல்லை நீட்டிக்கப்பட்டதை அடுத்து 1 ரில்லியன் பெறுமதியான பணமுறியினை அமெரிக்க கருவூலம் வெளியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்க கருவூல செயலாளர் ஜெனட் ஜெலன் அமெரிக்கா நாணயம் உலக சேமிப்பு நாணயநிலையில் சரிவு ஏற்படலாம் என கூறியுள்ள நிலையில் (8% சரிவு 2022 இல் ஏற்பட்டுள்ளது), அமெரிக்காவினது பொருளாதார தடை அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட 1 ரில்லியன் பெறுமதியான (859 பில்லியன் ஏறத்தாழ) பணமுறிகளை சீனா சந்தையில் விற்கமுற்படலாம் எனும் அச்சத்தில் முதலீட்டாளர்கள்  உள்ளார்கள்.

வட்டி விகித அதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது, 

முதலீட்டினை பொறுத்தவரை முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளின் ஆபத்தான முதலீடுகளை தவிர்க்க முதலீடுகளை பன்முகப்படுத்த வேண்டும் என கருத்து நிலவுகிறது, சில நிதி நிறுவனங்கள் தமது முதலீட்டினை பொதுமக்கள் வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக கூறுகிறார்கள், இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி அமெரிக்காவில் உள்ள யாழ்கள உறவுகள் கூறவேண்டும்.

பிரிட்ஜ் வோட்டர் நிதிநிறுவனத்தின் முகாமையாளர் அமெரிக்காவின் சில வறுமையான  பகுதிகளில் உயர்நிலை பள்ளிகளில் இருந்து விலகுவோர் எண்ணிக்கை 22% ஆக அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார், அத்துடன் அங்குள்ள குழந்தைகளின் போசாக்குநிலையினையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்? (கெனடிக் அல்லது கனடிக் என கூறியதாக நினைவுள்ளது)

இது உண்மையான நிலவரமா? அல்லது மிகைப்படுத்தப்படுகிறதா என அமெரிக்காவில் வாழும் யாழ்கள உறவுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

முதலீட்டினை பொறுத்தவரை உகப்பான காலம் அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து தவறாக இருக்கலாம், அத்துடன் இது ஒரு பொருளாதார நிதி அறிவுரை அல்ல.

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நானும், @Kadancha @vasee @Elugnajiru இன்னும் பலர் பலவாறு சிலாகித்த, XRP வழக்கில் முடிவு வந்து விட்டது. 

கிட்டதட்ட 80% XRP/Ripple க்கு வெற்றி.

ஒரே மூச்சில் 0.47$ இல் இருந்து 0.79$ ஆகி விட்டது. இன்னும் நிறைய ஏறும் என எதிர்பார்க்கிறார்கள் (நிதி ஆலோசனை அல்ல).

  • கருத்துக்கள உறவுகள்


இந்த xrp வழக்கு 'வெற்றியை' இருபக்கமும் கொண்டாடுகிறது 


அமெரிக்காவின் SEC க்கும் , XRP  (Ripple) உம்.

 

ஏனெனில், இரு பக்கத்துக்கும் முழு வெற்றி இல்லை.

 

XRP ஐ நிறுவனமயமடுத்தப்பட்ட முதலீட்டில் ஈடுபடத்தாவிட்டால் (மட்டுமே), XRP நிதி பத்திரங்கள் (securities) அல்ல என்பதே முடிவு.

 

அனால் ,எல்லா கிரிப்டோ க்களின் நோக்கமும் ஏதோ ஒரு நாள், அவை, எதோ ஒருவிதமாக  நிறுவனமயப்படுத்தப்பட்ட நிதி / செல்வ புழக்கத்தில்   ஈடுபடுத்த சந்தர்ப்பம் உருவாகும், அதன் மூலம்  செல்வதை கட்டி எழுப்பும் பங்கு பரந்த  அளவில்  வகிக்கும், அவற்றின் பெறுமானம், உபயோகம், பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மை,  ஏறத்தாழ fiat currency (அரசால் அங்கீகரிக்கப்பட்ட பண வடிவம்) க்கு ஒப்பானதாக மாறும் என்று. 

 

xrp க்கு வெற்றி ஆயினும், xrp ஐயும், மற்ற கிரிப்டோகளையும் ஒருவிதத்தில் இது சொன்ன விளக்கத்தால் கட்டிப்போட்டுவிட்டது.

 

ஏனெனில், SEC ஆனது Polygon, BNB மற்றும் வேறு சில முக்கியமான கிரிப்டோகளை குறிவைத்து  வழக்கு  போட்டு  உள்ளது. 


ஆயினும், நீண்ட கலப்போக்கை சொல்ல முடியாது, அப்படி அமெரிக்கா தடுத்தால், அமெரிக்காவை விட்டு விட்டு, மிகுதி உலகில் கிரிப்டோ ஈடுபடுத்தப்படும் போக்கு அதிகரிக்கிறது.

 

இதை பிரித்தானியா, eu    முன்னெடுக்க அரச பக்கத்தில் இருந்து ஆவன  செய்கின்றன.

 

இது நிதி ஆலோசனை அல்ல 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

XRP வழக்கு - ஒரு பின்னோட்டம் 

கலைச்சொற்கள்:

1. பாதுகாப்பு-முதலீடு -security - இலகுவாக விளங்கி கொள்ள ஒரு வியாபாரத்தின் பங்குகள் - பாதுகாப்பு-முதலீடுகள்.

2. நாணயம் - currency

வழக்கின் பின்புலம்

நிதி வர்த்தகம் பொதுவாக மூவகைப்படும்.

1. பாதுகாப்பு முதலீடுகள் shares, security tradings - உதாரணம் ஒரு நிறுவனத்தின் பங்குகள். 

2. நாணய வர்த்தகம் currency trading  - உதாரணம் டாலர் வர்த்தகம், பிட்காயின் வர்த்தகம்.

3.  நுகர்பொருள் வர்த்தகம் - commodity trading - உதாரணம் - பெற்றோல், கோதுமை.

கடைசி இரண்டையும் விட பாதுகாப்பு-முதலீடு வர்த்தகம், பங்கு விற்பனை என்பன அதிகம் அரசால் கண்காணிக்கப்படுவன. அதற்கு பல விதிமுறைகள் உண்டு. இதை கண்காணிக்கும் அமெரிக்க அரச நிறுவனம் Securities & Exchanges  Commission. சுருக்கமாக SEC.

என்ன வழக்கு?

XRP என்பது ஒரு கிரிப்டோ சொத்து crypto asset. 
Ripple என்பது ஒரு நிறுவனம். இதன் உலகளாவிய, மிக விரைவான நாணய பரிவர்த்தன வலையமைப்பு - Ripple net. 
இந்த பரிவர்தனையில் பயன்படுத்த ரிப்பிள் உருவாக்கிய கிரிப்டோ குற்றி (crypto coin) தான் XRP.

XRP யை ரிப்பிள் விற்பனை செய்தது ஒரு வகை - பங்கு/பாதுகாப்பு/security வர்தகம் என்று கூறி SEC ரிப்பிள் நிறுவனம், அதன் நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு போட்டது.

XRP வழக்கில் XRP யின் விற்பனை ஒரு பங்கு விற்பனையா? இல்லையா என்பதையே நியூயார்க் சேர்கிட் நீதிபதி டொரேஸ் முடிவு செய்ய வேண்டி இருந்தது

வழக்கின் முகாந்திரம் என்ன?

SEC பின் வரும் முகாந்திரங்களில் வழக்கு தொடர்ந்தது 

1. XRP காயினை, institutional investors எனப்படும் பெரிய நிதி நிறுவனங்களுக்கு ரிப்பிள் 785 மில்லியன் அளவில் விற்பனை செய்தத்து- இது ஒரு பங்கு வர்த்தகம்.

2. XRP யை programic sales எனப்படும், தானியங்கி முறையில் ரிப்பிள் விற்றது. இதுவும் ஒரு பங்கு வர்த்தகம்.

3. XRP ஐ - ரிப்பிள் ஊழியர்கள் வாங்கி விற்றனர். இதுவும் ஒரு பங்கு வர்த்தகம்.

4. XRP ஐ, கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில், சில்லறை வர்தகர்கள் வாங்கி விற்றனர். இதுவும் ஒரு பங்கு வர்த்தகம் (secondary sales).

தீர்ப்பு என்ன?

மேலே குறிப்பிட்ட 4 முகாந்திரங்களில் கடைசி 3 இல் XRP ஒரு பங்கு/பாதுகாப்பு இல்லை என தீர்ப்பு வந்துள்ளது.

முதலாவது முகாந்திரமான ரிப்பிள், நிறுவனமயபட்ட முதலீட்டாளருக்கு விற்ற 785 மில்லியன் பெறுமதியான XRP பரிவர்த்தனை மட்டுமே பங்கு வர்த்தகம் என நீதிபதி கூறியுள்ளார்.

தீர்ப்பின் அடிப்படை என்ன?

 Howey என்ற ஒரு வழக்கே, எது பங்கு வர்த்தகம், எது பங்கு வர்தகம் இல்லை, என்ற  வரையறையை தருகிறது.

அதிகம் சட்ட நுணுக்கத்துள் போகாமல் சொல்லுவதாயின் - ஒரு விடயம் பங்கு வியாபாரமாக கருதப்பட - அதை வாங்குபவர், அதை விற்பவர் அல்லது அவரின் முகவர் இந்த பொருளை லாபமீட்ட வைக்க உழைப்பார் என்ற உறுதி மொழி அடிப்படையில் அந்த பொருளை வாங்கி இருக்க வேண்டும்.

அதாவது நான் இன்று ஒரு XRP ஐ. 1 பவுனுக்கு வாக்கினால், ரிப்பிளின் முயற்சியால் நாளை அது 10 பவுனாகும் என நம்பி நான் வாங்கினால், எனக்கும் ரிப்பிளிக்கும் இடையில் ஒரு முதலீட்டு ஒப்பந்தம் உருவாகி விடும் (investment contract). அது பங்கு வர்த்தகம் ஆகும்.

XRP   வழக்கில் ஒரே ஒரு விடயத்தை தவிர மிகுதி 3 விடயங்களில் ripple நிறுவனம், அதன் இரு நிர்வாகிகள் சார்பாகவே தீர்பு வந்துள்ளது.

அந்த ஒரு விடயம் யாதெனில்: ரிப்பில், நிறுவனமயப்பட்ட பெரு நிதி நிறுவனங்களுக்கு XRP விற்ற போது அவர்கள் ரிப்பிளின் முயற்சியை நம்பியே அதை வாங்கினர். ஆகவே இது மட்டுமே - பங்கு வர்த்தகம். இதில் ஈடுபட்டமைக்காக, ரிப்பிள் அபராதம் கட்ட வேண்டி வரும். இரு நிர்வாகிகள் தமது பங்கு பற்றி ஜுரிகள் முன் சிவில் வழக்கை அடுத்த வருடம் சந்திப்பர்கள்.

ஆனால்….

மிக தெளிவாக அதன் தனிபட்ட நிலையில் XRP ஒரு பங்கு அல்ல என நீதிபதி கூறியுள்ளார்.

அதேபோல் விற்பது ரிப்பில்தான் என தெரியாமல் வாங்கும் வர்தகங்களான, ஊழியர்களிடையான XRP வர்த்தகம், தானியங்கி வர்த்தகம் programic sales, சில்லறை வர்த்தகம் என்பன பங்கு வர்த்தகம் இல்லை எனவும் கூறியுள்ளது.

ஆகவே,

XRP ஒரு பங்கு இல்லை (ரிப்பிள் தானான தேடி போய் விற்ற (promote) XRP மட்டுமே பங்கு என கூறியதன் மூலம் வழக்கின் அடிப்படை புள்ளியில் SEC இற்கு எதிராகவே இந்த தீர்ப்பு வந்துள்ளது.

ஆகவே SEC இற்கு தோல்வி. ரிப்பிள், சில்லரையாக XRP வைத்திருப்போருக்கு பெரிய, கொண்டாடவேண்டிய வெற்றிதான்.

XRP/டாலர் விலை 0.47 இல் இருந்து 0.80 க்குமேல் போய் இப்போ 0.72 இல் நிற்பதே இதற்கான சாட்சி எனலாம்.

(அடுத்த பதிவில் இனி என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் ஜோசியம் போல ஆராய்ந்து பார்க்கலாம்).

 

 

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன நடக்கலாம்?

அதற்கு முன் - கவனிக்க.

இந்த XRP பங்கா, நாணயமா என்ற குழறுபடி அமெரிக்காவில் மட்டும்தான். 

யூகே, ஈயூ, சிங்கப்பூர் என பல நாடுகள் கிரிப்டோ கரன்சியை பங்கு அல்ல என ஏற்றுகொண்டு விட்டன.

1. ரிப்பிள் பெரு நிறுவனங்களுக்கு விற்றது பங்கு என தீர்ப்பு ஆனது என முன்னர் பார்த்தோம் அல்லவா? ஆகவே இனி ரிப்பிளால் அப்படி விற்பதும் முடியாது.

ஆனால் பெரு நிறுவனங்கள் வாங்கினால்தானே XRP விலை கூடும் என நீங்கள் நினைக்கலாம். 

ஆனால் ரிப்பிளிடம் நேரடியா வாங்க முடியாவிடில் பெரு நிறுவனங்கள் எங்கே XRP ஐ வாங்கலாம்?

1. வெளிநாடுகளில் (பின்னர் தம் அமெரிக்க கணக்குக்கு மாற்றலாம்)

2. அல்லது அமெரிக்காவில் வாங்குவதாயின் எம்மை போல சாதாரண சில்லறை வர்தகர்களிடம், அமெரிக்க கிரிப்டோ எக்ஸ்சேஞ்களில்.

உண்மையில் இப்படி நடந்தால் - சில்லறை XRP வைத்திருப்போர் காட்டில்- பண மழை கொட்ட வாய்பிருக்கிறது.

2. பெரு நிறுவனங்கள் programic sales இல் வாங்கலாம். 

3. Escrow என்று மாதாதந்தம் தானியங்கியாக XRP பெருந்தொகை சந்தைக்கு திறந்து விடப்பட்டு, சிறிது நேரத்தில் மீண்டும் உபரி XRP பூட்டப்படும். இந்த முறை தொடரலாமா இல்லையா என்பதில் யாருக்கும் தெளிவில்லை. ரிப்பிளின் முதன்மை தொழிநுட்ப அதிகாரி கூட - இதை நாம் இன்னும் ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம் என்கிறார்.

இந்த முறை தடைப்பட்டாலும், XRP விலை சடுதியாக கூட வாய்ப்புண்டு. ஆனால் போதிய அளவு XRP circulation இல் இல்லாவிடில் அது பரிவர்த்தனையை கடுமையாக்கும், நேரம் எடுக்கும் இது XRP யின் விலையை குறைக்கும்.

4. வழக்குக்கு என்ன நடக்கும். 785 மில்லியன் வித்த வழக்கு - தன்பாட்டில் நடக்கும். இரு பகுதியும் சமரசமாய் போகவும் கூடும். ஆனால் அது ரிப்பிளின் முந்தைய நடவடிக்கை பற்றியது. இதனால் XRP விலை அதிகம் பாதிக்கப்படாது

5. XRP பங்கு இல்லை, மற்றும் ஏனைய 3 முகாந்திரங்களில் - கிடைத்த தீர்ப்பை எதிர்த்து SEC அடுத்த appellate court, அதன் பின் Supreme Court போகலாம்.

ஆனால் பல சட்ட வல்லுனர் கருத்துப்படி அப்பீல் வெல்வது கடினம் என்கிறார்கள். நீதிபதியின் காரணங்கள் காற்றுபுகாத அளவுக்கு இறுக்கமாகவே எனக்கும் படுகிறது.

அப்படியே அப்பீல் செய்தாலும் அதில் முடிவு வர 2025 க்கு மேல் ஆகும். அதற்குள் ஆட்சி மாறலாம். பல விடயங்கள் நடக்கலாம். காங்கிரஸே சட்டம் மூலம் -  கிரிப்டோவை கட்டுப்படுத்தலாம். 

ஆனால் அதுவரை பிட்காயினும், XRP யும் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ சொத்துக்களாய் இருக்கும்(ஏனைய பல காயின்கள் மீது SEC கண் வைத்துள்ளது) .

6. அதே போல் இந்த தீர்ப்பு எதூரம் தவிர்ந்த ஏனைய கிரிப்டோக்களுக்கு ஒரு நல்ல செய்தியே. அதேபோல் அங்கீகரிக்கப்படாத பங்கு விற்பனையில் ஈடுபட்டதாக SEC வழக்கு போட்டுள்ள Coinbase போன்ற எக்ஸ்ச்செஞ்சுகளுக்கும் இது நல்ல செய்தியே.

7. மிக முக்கியமாக இப்போ இருக்கும் சட்ட ஆசீர்வாதத்தை (regulatory clarity) பயன்படுத்தி பெரு நிறுவனங்களிடையான உலக நிதி பரிவர்தனை வியாபாரத்தை XRP கைப்பற்றினால் !

இதற்கு கணிசமான வாய்ப்பு உள்ளது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு விடயம் எழுதாமல் விடப்பட்டு விட்டது.

வெளிவந்த தீர்ப்பை பலர் தவறாக விளங்கி கொண்டுள்ளார்கள். இதில் சில Fox News அறிவிப்பாளர்களும் அடக்கம்.

XRP is sometimes a security, sometimes it’s not (XRP சில நேரத்தில் பங்கு போலவும், சில நேரத்தில் பங்கு அல்ல எனவும் கருதப்படும்)  - என தீர்ப்பு கூறுவதாக இவர்கள் எழுதுகிறார்கள்.

இது மிக தவறான புரிதல்.

இவர்களுக்கு சட்டம், தீர்ப்புகள் பற்றிய புரிதல் இல்லை என நான் அனுமானிக்கிறேன்.

ரிப்பிள் நேரடியாக institutional investors ற்கு விற்ற பங்குகள் மட்டுமே securities. மிகுதி எதுவுமே அல்ல. இனிமேலும் ரிப்பிள் நேரடியாக institutional investors ற்கு விற்றால் அதுவும் security (ஆனால் ரிப்பிள் அப்படி இனி செய்யாது).

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

XRP வழக்கின் தீர்ப்பின் பின் escrow வில் இருக்கும் பெருந்தொகை XRPயின் சட்டப்படியான நிலைப்பாடு என்ன என்பதை விபரம் அறிந்தோர் பின் வருமாறு விளக்குகிறனர்.

1. இந்த  XRP ஐ எரிக்க வேண்டிய தேவை இல்லை (burn).

2. இந்த XRP ஐ அமெரிக்காவில் வைத்து, பெரு நிறுவனங்களுக்கு விற்க முடியாது.

3. ஆனால் அமெரிக்காவுக்கு அப்பால், ரிப்பிள், நிறுவனங்கள் இடையே உருவாகும் ஒப்பந்தங்களை இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது.

———

அநேகமாக escrow வில் உள்ள XRP - புழக்கத்தில் வர, அதை பிறிதொரு வழியால் அமெரிக்க பெரு நிறுவனங்களும், நேரடியாக ஏனைய நாட்டு நிறுவனங்களும் வாங்க தடை இல்லை.

சில்லறை வியாபாரம் - அநேகமாக அனைத்து அமெரிக்க கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகளும் XRP ஐ மீள விற்க தொடங்கி விட்டன.

இந்த வழக்கில் முன்னர் விட்ட பிழைக்கு ரிப்பிள் கட்ட வேண்டிய அபராதம், இந்த பிழையில் உதவியில்  ஈடுபட்டனரா (aiding & abetting securities law breach) என இரு ரிப்பிளின் இரு அதிகாரிகள் மீது ஜூரி விசாரணை - இவைதான் இதில் ரிப்பிளிக்கு பாதகமாக வந்துள்ளது.

ஆனால் இது கடந்தகாலம் பற்றியது. தவிரவும் அபராதம் கட்டும் படி ஆனாலும் அது ரிப்பிள் நிறுவனம், இரு அதிகாரிகளின் பிரச்சனை மட்டுமே. 

XRP ஐ பொறுத்த மட்டில் - அடுத்து SEC அப்பீல் செய்தால், அதன் பின் 2025 அளவில் அந்த அப்பீல் முடிவு வரும் வரை - XRP ஒரு security அல்ல.

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2023 at 08:04, goshan_che said:

இந்த திரியில் நானும், @Kadancha @vasee @Elugnajiru இன்னும் பலர் பலவாறு சிலாகித்த, XRP வழக்கில் முடிவு வந்து விட்டது. 

கிட்டதட்ட 80% XRP/Ripple க்கு வெற்றி.

ஒரே மூச்சில் 0.47$ இல் இருந்து 0.79$ ஆகி விட்டது. இன்னும் நிறைய ஏறும் என எதிர்பார்க்கிறார்கள் (நிதி ஆலோசனை அல்ல).

XRP இல் உங்களுக்கு இலாபம் கிடைத்துள்ளது, நல்ல விடயம் தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2023 at 22:53, இணையவன் said:

தங்கம் மீண்டும் 1898 இல் உள்ளது.

தற்போது AUDJPY  இல் மட்டும் வர்த்தகம் செய்வதால் கவனிக்கவில்லை(Prop trading).

தங்கத்தில் பல பூகோள நிகழ்வுகள் தாக்கத்தினை செலுத்தபோகிறது..

அமெரிக்க பண்முறிகளை இங்கிலாந்து உள்ளடங்கலாக விற்க ஆரம்பித்து விட்டன.

அதிகளவில் அமெரிக்க பணமுறிகளை கொண்ட ஜப்பான் நாட்டு நாணயத்தினை முதலீட்டாளர்கள் விற்பதனை நிறுத்தியுள்ளார்கள்.

பிட்சினால் அமெரிக்காவினது AAA இலிருந்து AA+ குறைத்குள்ளது.

இது தொடர்பான வ்ரிவான கருத்தினை எதிர்வரும் வாரம் பதிவிடுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, vasee said:

XRP இல் உங்களுக்கு இலாபம் கிடைத்துள்ளது, நல்ல விடயம் தொடர்ந்து எழுதுங்கள்.

லாபம்தான். ஆனால் எதிர்பார்த்த அளவு இன்னமும் எட்டப்படவில்லை. முன்னரே திட்டமிட்ட 5% கையிருப்பை விற்கும் லாப நிலையை எட்டாமையால் - விற்கவிக்கவில்லை. 

Dollar average படி பார்த்தால் பேப்பரில் லாபம் என கருதலாம். ஆனால் வீட்டில் உள்ள equity போலத்தான் இப்போ - வெறும் பேப்பரில் மட்டும்தான் லாபம்.

விலை ஒரு டாலருக்கு கீழே இருக்கும் வரை கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது என்ற முடிவின்படி இப்போதும் மேலும் வாங்கும் நிலையில்தான் நிற்கிறேன்.

பார்க்லாம் - ஆளாளுக்கு 586, 120, என்றெல்லாம் புழுகுகிறார்கள். 20$ ஐ அடைந்தாலே அதை எடுத்து வேறு ரிஸ்க் குறைவாம முதலீட்டில் போட்டு விட்டு இருக்கலாம்.

ஆனால் எப்போதும் 20% கையில் வைத்திருப்பதே எண்ணம்.

ரஸ்ய ரூபிள் வீழ்ச்சியால் மத்திய வங்கி வெளிநாட்டு நாணயமாற்றுச் செய்வதை நேற்றிலிருந்து தடை செய்துள்ளது.

முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ரூபிளை வாங்கி வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் இலாபம் தருமா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

ரஸ்ய ரூபிள் வீழ்ச்சியால் மத்திய வங்கி வெளிநாட்டு நாணயமாற்றுச் செய்வதை நேற்றிலிருந்து தடை செய்துள்ளது.

முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ரூபிளை வாங்கி வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் இலாபம் தருமா ?

நீண்ட கால நோக்கில் தரலாம் என நினைக்கிறேன்.

ஆனால் எங்கே வாங்குவது?

நான் பாவிக்கும் platform மூன்றிலும் USD/RUB இணையை வாங்க முடியாது.

————————-

XRP வழக்கில் programmatic sales பற்றிய நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய அனுமதி கோரும் கடிதத்தை (அதே நீதிபதியிடம்) SEC நேற்று கையளித்துள்ளது.

Securities Laws ஐ மீறினர் என்ற இரு ரிப்பிள் அதிகாரிகள் மீதான வழக்கின், யூரி வழக்குக்கான தேதியை நீதிபதி தோராயமாக அறிவித்துள்ளார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2023 at 20:33, இணையவன் said:

ரஸ்ய ரூபிள் வீழ்ச்சியால் மத்திய வங்கி வெளிநாட்டு நாணயமாற்றுச் செய்வதை நேற்றிலிருந்து தடை செய்துள்ளது.

முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ரூபிளை வாங்கி வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் இலாபம் தருமா ?

இரஸ்சிய நாணய வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த இரஸ்சிய நிதியமைச்சரின் கருத்தான "இரஸ்சியா தங்கம் மற்றும் வேறு நாட்டு நாணயங்களை மீண்டும் வாங்க உள்ளது" எனும் அறிவிப்பாகும்.

உக்கிரேன் யுத்தத்தின் பின் இரஸ்சிய பொருளாதாரம், பொருளாதாரத்தடையாலும் போரினால் ஏற்படுகின்ற செலவினாலும் மிகவும் பாதிப்படைந்தமையால் தற்காலிகமாக வேறுநாட்டு தங்கம் மற்றும் நாணயங்களை வாங்குவதை நிறுத்தியிருந்தது மட்டுமின்றி தனது இருப்புகளை விற்றிருந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு காரணம் ஓய்வூதிய நிதியத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது, போரினால் ஏற்பட்ட அதிகரித்த செலவினை ஈடுகட்ட இரஸ்சிய அரசு ஓய்வூதிய நிதியினை(NWF) பாவித்ததாக கூறுகிறார்கள்.

இரஸ்சிய நிதியமைச்சரின் கருத்து வெளியானபோது  இரஸ்சியா தனது நாணயத்தின் பெறுமதியினை திட்டமிட்ட முறையில் வலுவிழக்க முயற்சிக்கிறதா எனும் எண்ணம் ஏற்பட்டது(Dirty float).

காரணம் ஒபெக் மற்றும் ஒபெக் + நாடுகள் தமது எண்ணெய் உற்பத்தியினை குறைப்பதாக அறிவித்தன அது உலக பொருளாதாரம் சமகால நிகழ்வுகளால் ஏற்படும்  பொருளாதார சரிவினால் எரிபொருள் உற்பத்தியாளர் நட்டமடையாமல் காப்பதற்காக (அடிப்படை உற்பத்தி செலவு) என கூறப்பட்டாலும் கிட்டதட்ட நாளொன்றிற்கு 5% உற்பத்திகுறைப்பினை மேற்கொள்ள உத்தேசித்துள்ளன ஆனால் உலக பொருளாதார சுருக்கம் 2-3 விகித அளவிலேயே ஏற்படும் என கருதுகிறார்கள்.

உற்பத்தியினளவினை தேவைக்கு அதிகமாக குறைக்கும் போது ஏற்படும் தட்டு பாட்டால் எரிபொருள் விலை அதிகரிக்கும்.

ஆகவே இது ஒரு சந்தை ஏகபோக(Monopoly) நடவடிக்கையாகவே கருத இடமுண்டு.

இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் ரூபிளின் பெறுமதி அதிகரிப்பினை தடுப்பதற்காகவே நிதியமைச்சினால் தனது சொத்து இருப்பு அதிகரிப்பிற்காக தங்கம் மற்றும் வேறு நாட்டு நாணயத்தினை வாங்கும் அறிவிப்பு ஏற்படுத்தப்பட்டதோ என கருதினேன்.

நாணயத்தின் பெறுமதியினடிபடையில்(Purchasing Power Parity) இந்தியாவிற்கு அடுத்த நிலையில் 5ஆவது நிலையில் இரஸ்சிய பொருளாதாரம் உள்ளதாக கூறுகிறார்கள்.

நாணயத்தின்  உண்மையான பெறுமதியினை கணிப்பதற்கு முதலீட்டாளர் பாவிக்கும் கருவிPurchasing Power Parity

https://www.statista.com/statistics/274326/big-mac-index-global-prices-for-a-big-mac/

பிக் மக் இன்டெக்கில் இரஸ்சியா இல்லை, இரஸ்சியாவில் மக்டொனால்ட் தற்போது இல்லை என கருதுகிறேன் ஆனால் கூடை பொருள்களினடிப்படையில் கணிக்கப்படும் கணிப்பு மிகவும் நம்பகமான நடைமுறை என கருதப்படுகிறது.

ஆனால்

1.ஏற்றுமதி இறக்குமதி நிலுவை:

இரஸ்சியாவின் ஏற்றுமதினளவினை விட இறக்குமதி அதிகம் அதனால் நாணய பெறுமதி குறைவாகவே இருக்கும்.

2.அதிகரித்த வட்டி விகிதம்

இரஸ்சிய பணமுறி கிட்டத்தட்ட 11.72%(Yield) இந்த நிலை பணவிக்கத்தினை உருவாக்கும் இதனால் பணத்தின் பெறுமதி குறையும்.

3.தொடரும் போர்

எந்த ஒரு பொருளாதாரமும் போரினால் பதிப்படையும் இந்த நிலையில் தொடருகின்ற போர் இரஸ்சிய நாணயத்திற்கு உவப்பானதல்ல.

4.பாதீட்டு பற்றாக்குறை

போர் மற்றும் பொருளாதார தடையினால் இரஸ்சியாவினது செலவுகள் அதிகரித்தமையால் ஏற்படும் பாதீட்டு பற்றாக்குறை பணத்தின் பெறுமதி குறையும்.

இந்த காரணிகள் ரூபிளிற்கு பாதகமான விடயங்கள் (மேற்கு ஊடகங்களில் வந்த செய்திகளினடிப்படையில்) மேலோட்டமாக இந்த தரவுகளினடிப்படையில் பார்க்கும் போது ரூபிளில் முதலிடுவது சாதகம் அற்றது என கருதுகிறேன் (தவறான கருத்தாக இருக்கலாம்).

ஆனால் முதலீட்டாளர்கள் பல தரவுகளினடிப்படையில் செயல்படுவதால் சந்தை நடவடிக்கையினை(Price action) அவாதனித்து முதலிடுவது பாதுகாப்பானது என கருதுகிறேன்.

எரிபொருளில் முதலிடுவது தற்போதய பூகோள அரசியல் நிலவரங்களின்டைப்படையில் சாதகமாக தோன்றுகிறது(என்ணெய் உற்பத்தி குறைப்பு, மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய நிலவரங்கள்) (தவறான கருத்தாக இருக்கலாம்).

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ், இதை முன் பக்கத்தில்  பிரசுரிக்கவும் (எதாவது மேலதிக விபரங்கள் வந்தால் திரியி இணைக்கிறேன்)

நிதி அறிவுரை இல்லை.


1) XRP airdrop நடக்க இருப்பதாக தகவல்.

 

2) xrp இருக்க வேண்டிய கிரிப்டோ Wallet,  XUMM wallet - இப்போதைக்கு mobile க்கே இருக்கிறது.

 

3) ஆக குறைந்த அளவு இருக்க வேண்டிய XRP அறியப்படவில்லை,  அனால் 30 - 40 இல் இருப்பது நல்லது.

 

4) Snap shot time, செப்டம்பர் 1. எனவே நேரம் இருக்கிறது.

 

5) XUMM wallet ஐ சோதித்து பார்க்கவும், gas எவ்வளவு போன்றவற்றுக்கு.

 

6) முழுமையாக, ஈடுபடுவரின் பொறுப்பு பிரச்சனைகள், இழப்புகள் (ஏற்பட்டால்)  போன்றவற்றுக்கு.    
 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2023 at 07:13, Kadancha said:

யாழ், இதை முன் பக்கத்தில்  பிரசுரிக்கவும் (எதாவது மேலதிக விபரங்கள் வந்தால் திரியி இணைக்கிறேன்)

நிதி அறிவுரை இல்லை.


1) XRP airdrop நடக்க இருப்பதாக தகவல்.

 

2) xrp இருக்க வேண்டிய கிரிப்டோ Wallet,  XUMM wallet - இப்போதைக்கு mobile க்கே இருக்கிறது.

 

3) ஆக குறைந்த அளவு இருக்க வேண்டிய XRP அறியப்படவில்லை,  அனால் 30 - 40 இல் இருப்பது நல்லது.

 

4) Snap shot time, செப்டம்பர் 1. எனவே நேரம் இருக்கிறது.

 

5) XUMM wallet ஐ சோதித்து பார்க்கவும், gas எவ்வளவு போன்றவற்றுக்கு.

 

6) முழுமையாக, ஈடுபடுவரின் பொறுப்பு பிரச்சனைகள், இழப்புகள் (ஏற்பட்டால்)  போன்றவற்றுக்கு.    
 

தொடர்ந்து எழுதுங்கள், கோவிட் காலத்தில் உலக நாடுகள் பெரியளவில் quantitative easing ஈடுபட்டமையால் சந்தையில் நிரம்பி வழிந்த காசில் பல முதலீடுகள் asset inflation உருவாக்கி விட்டிருந்திருந்தது, எதில் முதலிட்டாலும் இலாபம் எனும் நிலை உருவாகி அதனால் கிறிப்டோக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு போல  அடுத்த ஒரு வருடத்திற்கு நிகழாது எனவே தோன்றுகிறது.

அவுஸ்ரேலியா தனது முதலாவது வட்டி விகித குறைப்பினை எதிர்வரும் ஆண்டு ஆவணி மாதமளவில் ஏற்படுத்தும் என கருதுகிறார்கள், ஆனால் வேலையின்மை விகிதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது, அத்துடன் தற்போது மேற்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுருக்கம் உழைப்பாளர்களின் ஒரு அலகு உறபத்திக்கான செலவினை அதிகரித்துள்ளது, இது பல நிறுவனந்கள் வேலை நீக்க அதிகரிப்பினை தூண்டும் என கூறப்படுகிறது.

இந்த QE மற்றும் QT பயன்படுத்தும் பணமுறி வாங்கல் விற்றல் நடவடிக்கையால் நாடுகளின் மத்திய வங்கிகள் பெரும் இழப்பினை சந்திப்பதாக கூறுகிறார்கள், இது போல 1916 இல் நிகழ்ந்ததாக கூறுகிறார்கள், அதன் தொடர்ச்சியாக பெரும் பொருளாதார பேரிடர் ஏற்பட்டது (இவ்வாறு நிகழும் என எந்த பொருளியல் நிபுணர்களும் இது வரை கூறவில்லை அதனால் இவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பில்லை).

இவற்றினை பார்க்கும் போது தற்போது நிகழும் அரசியல் பூகோள சூழ்நிலைகள் மாறாவிட்டால், புதிய முதலீடுகள் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/8/2023 at 00:13, vasee said:

இரஸ்சிய நாணய வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த இரஸ்சிய நிதியமைச்சரின் கருத்தான "இரஸ்சியா தங்கம் மற்றும் வேறு நாட்டு நாணயங்களை மீண்டும் வாங்க உள்ளது" எனும் அறிவிப்பாகும்.

உக்கிரேன் யுத்தத்தின் பின் இரஸ்சிய பொருளாதாரம், பொருளாதாரத்தடையாலும் போரினால் ஏற்படுகின்ற செலவினாலும் மிகவும் பாதிப்படைந்தமையால் தற்காலிகமாக வேறுநாட்டு தங்கம் மற்றும் நாணயங்களை வாங்குவதை நிறுத்தியிருந்தது மட்டுமின்றி தனது இருப்புகளை விற்றிருந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு காரணம் ஓய்வூதிய நிதியத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது, போரினால் ஏற்பட்ட அதிகரித்த செலவினை ஈடுகட்ட இரஸ்சிய அரசு ஓய்வூதிய நிதியினை(NWF) பாவித்ததாக கூறுகிறார்கள்.

இரஸ்சிய நிதியமைச்சரின் கருத்து வெளியானபோது  இரஸ்சியா தனது நாணயத்தின் பெறுமதியினை திட்டமிட்ட முறையில் வலுவிழக்க முயற்சிக்கிறதா எனும் எண்ணம் ஏற்பட்டது(Dirty float).

காரணம் ஒபெக் மற்றும் ஒபெக் + நாடுகள் தமது எண்ணெய் உற்பத்தியினை குறைப்பதாக அறிவித்தன அது உலக பொருளாதாரம் சமகால நிகழ்வுகளால் ஏற்படும்  பொருளாதார சரிவினால் எரிபொருள் உற்பத்தியாளர் நட்டமடையாமல் காப்பதற்காக (அடிப்படை உற்பத்தி செலவு) என கூறப்பட்டாலும் கிட்டதட்ட நாளொன்றிற்கு 5% உற்பத்திகுறைப்பினை மேற்கொள்ள உத்தேசித்துள்ளன ஆனால் உலக பொருளாதார சுருக்கம் 2-3 விகித அளவிலேயே ஏற்படும் என கருதுகிறார்கள்.

உற்பத்தியினளவினை தேவைக்கு அதிகமாக குறைக்கும் போது ஏற்படும் தட்டு பாட்டால் எரிபொருள் விலை அதிகரிக்கும்.

ஆகவே இது ஒரு சந்தை ஏகபோக(Monopoly) நடவடிக்கையாகவே கருத இடமுண்டு.

இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் ரூபிளின் பெறுமதி அதிகரிப்பினை தடுப்பதற்காகவே நிதியமைச்சினால் தனது சொத்து இருப்பு அதிகரிப்பிற்காக தங்கம் மற்றும் வேறு நாட்டு நாணயத்தினை வாங்கும் அறிவிப்பு ஏற்படுத்தப்பட்டதோ என கருதினேன்.

நாணயத்தின் பெறுமதியினடிபடையில்(Purchasing Power Parity) இந்தியாவிற்கு அடுத்த நிலையில் 5ஆவது நிலையில் இரஸ்சிய பொருளாதாரம் உள்ளதாக கூறுகிறார்கள்.

நாணயத்தின்  உண்மையான பெறுமதியினை கணிப்பதற்கு முதலீட்டாளர் பாவிக்கும் கருவிPurchasing Power Parity

https://www.statista.com/statistics/274326/big-mac-index-global-prices-for-a-big-mac/

பிக் மக் இன்டெக்கில் இரஸ்சியா இல்லை, இரஸ்சியாவில் மக்டொனால்ட் தற்போது இல்லை என கருதுகிறேன் ஆனால் கூடை பொருள்களினடிப்படையில் கணிக்கப்படும் கணிப்பு மிகவும் நம்பகமான நடைமுறை என கருதப்படுகிறது.

ஆனால்

1.ஏற்றுமதி இறக்குமதி நிலுவை:

இரஸ்சியாவின் ஏற்றுமதினளவினை விட இறக்குமதி அதிகம் அதனால் நாணய பெறுமதி குறைவாகவே இருக்கும்.

2.அதிகரித்த வட்டி விகிதம்

இரஸ்சிய பணமுறி கிட்டத்தட்ட 11.72%(Yield) இந்த நிலை பணவிக்கத்தினை உருவாக்கும் இதனால் பணத்தின் பெறுமதி குறையும்.

3.தொடரும் போர்

எந்த ஒரு பொருளாதாரமும் போரினால் பதிப்படையும் இந்த நிலையில் தொடருகின்ற போர் இரஸ்சிய நாணயத்திற்கு உவப்பானதல்ல.

4.பாதீட்டு பற்றாக்குறை

போர் மற்றும் பொருளாதார தடையினால் இரஸ்சியாவினது செலவுகள் அதிகரித்தமையால் ஏற்படும் பாதீட்டு பற்றாக்குறை பணத்தின் பெறுமதி குறையும்.

இந்த காரணிகள் ரூபிளிற்கு பாதகமான விடயங்கள் (மேற்கு ஊடகங்களில் வந்த செய்திகளினடிப்படையில்) மேலோட்டமாக இந்த தரவுகளினடிப்படையில் பார்க்கும் போது ரூபிளில் முதலிடுவது சாதகம் அற்றது என கருதுகிறேன் (தவறான கருத்தாக இருக்கலாம்).

ஆனால் முதலீட்டாளர்கள் பல தரவுகளினடிப்படையில் செயல்படுவதால் சந்தை நடவடிக்கையினை(Price action) அவாதனித்து முதலிடுவது பாதுகாப்பானது என கருதுகிறேன்.

எரிபொருளில் முதலிடுவது தற்போதய பூகோள அரசியல் நிலவரங்களின்டைப்படையில் சாதகமாக தோன்றுகிறது(என்ணெய் உற்பத்தி குறைப்பு, மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய நிலவரங்கள்) (தவறான கருத்தாக இருக்கலாம்).

நல்ல பதிவு, அடிப்படை காரணங்களையும் உள்ளடக்கி. 
 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

XRP வழக்கில் ஏலவே மூல்குடைபட்ட SEC முந்தைய தீர்ப்பை எதிர்த்து செய்த interlocutory appeal request ஐ சில நிமிடங்களுக்கு முன் நீதிபதி டொரெஸ் நிராகரித்தார்.  தீர்ப்பின் பின் 10 நிமிடத்தில் 4% வீதமளவில் விலை கூடியுள்ளது.

(நிதி ஆலோசனை அல்ல)

இதன் அர்த்தம் SEC வழக்கில் அறுதியான தோல்வியை சந்தித்து விட்டது என்பதல்ல. தொடர்ந்தும் appellate courts க்கு நேரடியாக அப்பீலை எடுத்து போகலாம். 

ஆனால் அப்படி செய்ய ரிப்பிள் நிர்வாகிகள் மீதான வழக்கின் trial முடியும் வரை பொறுக்க வேண்டும்( குறைந்தது ஒரு வருடம்).

அல்லது நிர்வாகிகள் மீதான வழக்கை, trial ஐ கைவிட்டு - அப்பீலுக்கு போதல் வேண்டும்.

எப்படி பார்த்தாலும் SEC க்கு இன்னுமொரு பின்னடைவு ஆனால் (இன்னும்) மரண அடி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2023 at 10:16, goshan_che said:

XRP வழக்கில் ஏலவே மூல்குடைபட்ட SEC முந்தைய தீர்ப்பை எதிர்த்து செய்த interlocutory appeal request ஐ சில நிமிடங்களுக்கு முன் நீதிபதி டொரெஸ் நிராகரித்தார்.  தீர்ப்பின் பின் 10 நிமிடத்தில் 4% வீதமளவில் விலை கூடியுள்ளது.

(நிதி ஆலோசனை அல்ல)

இதன் அர்த்தம் SEC வழக்கில் அறுதியான தோல்வியை சந்தித்து விட்டது என்பதல்ல. தொடர்ந்தும் appellate courts க்கு நேரடியாக அப்பீலை எடுத்து போகலாம். 

ஆனால் அப்படி செய்ய ரிப்பிள் நிர்வாகிகள் மீதான வழக்கின் trial முடியும் வரை பொறுக்க வேண்டும்( குறைந்தது ஒரு வருடம்).

அல்லது நிர்வாகிகள் மீதான வழக்கை, trial ஐ கைவிட்டு - அப்பீலுக்கு போதல் வேண்டும்.

எப்படி பார்த்தாலும் SEC க்கு இன்னுமொரு பின்னடைவு ஆனால் (இன்னும்) மரண அடி இல்லை.

தொடர்ந்து எழுதுங்கள்,

நீங்கள் கூறிய அந்த  4% அதிகரிப்பு விலை ஒரு தற்காலிக அதிகரிப்பாகவே இருக்கும், பின்னர் விலை பழைய விலையினை விட குறைவதற்கும் வாய்ப்புள்ளது (பொதுவான நடைமுறை).

பெரிய நிதிநிறுவனங்கள் தமது கையிருப்பிலுள்ள பங்குகளை விலை குறையாமல் விற்பதற்கு இந்த நல்ல செய்திகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

1-1.png

Buying climax

இந்த வரைபடத்தில் விலை மாற்றத்தினை குறிக்கும் Candle ( open price, high price, low price, close price ஆகிய 4  தரவுகலை கொண்ட), Candle நீளம் சிறிதாக இருக்கும் ( குறைந்த அளவு விலை மாற்றம்) ஆனால் கைமாறிய எண்ணிக்கை அதிகமாக இருக்கும் (Volume).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, vasee said:

நீங்கள் கூறிய அந்த  4% அதிகரிப்பு விலை ஒரு தற்காலிக அதிகரிப்பாகவே இருக்கும், பின்னர் விலை பழைய விலையினை விட குறைவதற்கும் வாய்ப்புள்ளது (பொதுவான நடைமுறை).

உண்மைதான். ஏலவே இறங்கி விட்டது.

13 minutes ago, vasee said:

இந்த வரைபடத்தில் விலை மாற்றத்தினை குறிக்கும் Candle ( open price, high price, low price, close price ஆகிய 4  தரவுகலை கொண்ட), Candle நீளம் சிறிதாக இருக்கும் ( குறைந்த அளவு விலை மாற்றம்) ஆனால் கைமாறிய எண்ணிக்கை அதிகமாக இருக்கும் (Volume).

ஓம். பைசரின் வக்சீன் அங்கீகரிக்கபட்ட சமயம் அதன் CEO இப்படி விற்றார்.

XRP இத்தனை சாதக செய்திக்கும் பின்னும் .50 இல் நிற்பது கடுப்பாக இருப்பினும், விலை artificially suppressed ஆக இருக்க கூடுமோ எனவும் யோசிக்க வைக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.