Jump to content

புதுடெல்லியுடன் நெருக்கும் ராஜபக்‌ஷர்கள்: கூட்டமைப்பின் நிலை என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லியுடன் நெருக்கும் ராஜபக்‌ஷர்கள்: கூட்டமைப்பின் நிலை என்ன?

புருஜோத்தமன் தங்கமயில்

சீர்கெட்டிருந்த இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் முடிவுகளுக்கு, ராஜபக்‌ஷர்கள் வந்திருக்கிறார்கள். சீனாவை மட்டும் நம்பியிருந்த ராஜபக்‌ஷர்கள், இந்தியாவை வேண்டாத பங்காளியாகவே இதுவரை காலமும் கையாண்டு வந்திருக்கிறார்கள். 

குறிப்பாக, முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ராஜபக்‌ஷர்கள் சீனாவையே முழுவதுமாக நம்பியிருக்கத் தலைப்பட்டார்கள். அது, இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனான உறவைப் பலமாகச் சீர்குலைத்தது.

ராஜபக்‌ஷர்களின் சீன விசுவாசம், பிராந்தியத்தின் பாதுகாப்பை  கேள்விக்குள்ளாக்குவதாகத் தெரிவித்து இந்தியா, தன்னுடைய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவு செயலர் உள்ளிட்டவர்களை பல தடவைகள் கொழும்புக்கு நேரடியாக அனுப்பி அறிவுறுத்தியும் வந்திருந்தது. 

ஆனாலும், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த தற்போதையை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ, இந்தியாவின் அழுத்தங்களையும் அறிவுறுத்தல்களையும் கணக்கில் எடுத்திருக்கவில்லை. 

மாறாக, இந்தியாவை ஆத்திரப்படுத்தும் காரியங்களை சீனாவோடும், பாகிஸ்தானோடும் இணைந்து பல தருணங்களிலும் செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல், இந்தியாவை ராஜபக்‌ஷர்கள் எவ்வளவுக்கு வெறுத்தார்கள் என்றால், தன்னுடைய  ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு இந்தியா(வும்) முக்கிய காரணமென்று, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். 

அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் ராஜபக்‌ஷர்களின் முடிவு என்பது கவனிக்கத்தக்கது. அதுவும், இந்தியாவுடனான ராஜபக்‌ஷர்களின் இன்றைய உடல்மொழியே, தலைகீழாக மாறியிருக்கின்றது.

இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷரிங்லா, செவ்வாய்க்கிழமை (05) ஜனாதிபதி கோட்டாவை சந்தித்தார். இதன்போது, வழக்கத்துக்கு மாறாக  ஜனாதிபதி நீண்ட விளக்கத்தை, இந்திய வெளியுறவு செயலாளரிடம் கொடுத்திருக்கின்றார். 

அந்த விளக்கங்களில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு நிலைப்பாடுகளுக்கும், இலங்கை ஒத்துழைப்பு வழங்காது, சீனாவுடனான தங்களின் உறவு, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையாது; மற்றும், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பிலான பிரச்சினைக்கு, உடனடியாகத் தீர்வு காணப்படும் என்கிற விடயங்கள் முக்கியமானவை. 

அத்தோடு, 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வழக்கத்துக்கு மாறாக கோட்டா, இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்தும் கருத்துகளையே இம்முறை வெளியிட்டிருக்கின்றார். அதாவது, 13ஆவது திருத்தம் அவசியமில்லாத ஒன்று. அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலானது என்று, தென் இலங்கை முழுவதும் கடந்த காலங்களில் ராஜபக்‌ஷர்கள் முழங்கி வந்திருக்கிறார்கள். 

அப்படிப்பட்ட நிலையில், 13ஆவது திருத்தம் பலமும் பலவீனங்களும் கொண்டிருக்கின்றன. அதன் பலங்களை இனங்கண்டு கையாள வேண்டும் என்று கோட்டா கூறியிருக்கின்றார். இந்த விடயங்கள், இந்தியாவைக் குளிர்விக்க போதுமாவை என்பது, ராஜபக்‌ஷர்களின் எண்ணம். இந்தியாவைப் பொறுத்தளவில் வடக்கு - கிழக்கில் சீனாவின் கரங்கள் நீளாது இருப்பது முக்கியமானது. அந்த உத்தரவாதத்தை ராஜபக்‌ஷர்கள் வழங்கினாலே, அவர்களை அரவணைக்கத் தயாராக இருக்கின்றது. ஏனெனில், இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் சீனா கடன் பொறியினால் தன்னுடைய சேவகர்களாக மாற்றி வைத்திருக்கின்றது. பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் என்று இந்தியாவின் பெரும் எல்லைப்பகுதிகளைப் பகிரும் நாடுகளில் சீனாவின் முதலீடுகளும், கடன் உதவிகளும் என்றைக்கும் இல்லாதளவுக்கு அதிகரித்திருக்கின்றது. 

குறிப்பாக, 2015இல் ஏற்பட்ட நில அதிர்வினால் நேபாளம் சிதைவடைந்தது. 9,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள். அதன் பின்னராக மீள்கட்டுமானத்துக்காக இந்தியாவின் உதவியை நேபாளம் எதிர்பார்த்தது. ஆனால், அதனை இந்தியா தட்டிக்கழித்த போது, அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு சீனா, நேபாளத்துக்குள் நுழைந்தது. 

இன்றைய காத்மண்டுவின் பெரும் கட்டுமானங்கள் எல்லாமும் சீனாவின் உதவியுடன் நிகழ்ந்தவை. அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவைத் தாண்டிய நெருக்கத்தை, சீனாவோடு பேணுவதற்கு நேபாளம் தள்ளப்பட்டிருக்கின்றது.

இப்படித்தான், மாலைதீவு, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளையும் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இலங்கையையும் அதே பாணியிலேயே சீனா அணுகியது. கடன் பொறியை உடைக்கும் சீனாவின் வல்லமை, இந்தியாவிடம் இல்லை என்பதுதான் பெரும் பிரச்சினை. 

இந்தியப் பொருளாதாரம் என்பது, சில தனி மனிதர்களின் சாம்ராஜ்யத்தை முன்னேற்றும் அடிப்படைகளைக் கொண்டது. பிராந்திய இராஜதந்திர அணுகுமுறையிலும் கூட, அப்படிப்பட்ட நடவடிக்கைகளையே இந்திய ஆட்சியாளர்கள் முன்னிறுத்துவார்கள். 

அண்மையில், கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவின் அதானி குழுமத்திடம் வழங்கப்பட்டதும் அப்படித்தான். ஆனால், சீனா எந்தவொரு நாட்டில் முதலிட்டாலும், கடன் வழங்கினாலும் அதன் உரித்தினை சீன அரசே  கொண்டிருக்கும். சீன நிறுவனங்களும் வங்கிகளும் அரசின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அங்கு தனி நபர்களை இராஜதந்திர கட்டமைப்புக்குள் உள்வாங்கும் அல்லது வளர்த்துவிடும் நோக்கம் இருப்பதில்லை.

 அதனால், சீனாவின் முதலிடுகளும் அதன் பின்னரான பிரதிபலன்களும் அரசினுடையதாகவே இருக்கும். அப்படிப்பட்ட நிலையில், சீனாவுடனான ஒப்பந்தங்களை மீறுவதோ அல்லது முறித்துக் கொள்வதோ இன்னொரு நாட்டுக்கு பெரும் சிக்கலானது. 

இலங்கையில் சீனா முதலீடுகளும் கடன்களும் வேறு வேறு நிறுவனங்கள், வங்கிகளின் பெயர்களில் வழங்கப்பட்டாலும், அவை அனைத்தும் சீன அரசின் நேரடி நிறுவனங்களே.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் அனைத்து நாடுகளையும் சீனா கையாளத் தொடங்கிவிட்ட பின்னர், இலங்கையின் வடக்கு - கிழக்கை தன்னுடைய கரிசனையோடு பேண, இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்வருகிறார்கள் என்றால், இந்தியா அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். குறிப்பாக, அவர்களின் எந்த இழுப்புக்கும் இணங்கும். இதனால், பாதிக்கப்படப் போவது என்னவோ தமிழ் மக்களே.

இந்தியாவோடு உறவினைப் பேணுவது சார்ந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆர்வத்தோடு இருந்து வந்திருக்கின்றது. ஆனால், அந்த உறவு தென் இலங்கையில் தங்கள் மீதான நல்லெண்ணத்தை இல்லாமல் செய்துவிடாது இருக்க வேண்டும் என்று கருதி, இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் ஒரு வகையிலான சமநிலையைப் பேணவே விரும்பினார்கள். 

கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்கள் இந்தியாவுடனான வரையறையற்ற நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்பினாலும் சம்பந்தன், சுமந்திரனின் நிலைப்பாடுகளால் அது பெரியளவில் சாத்தியமாகியிருக்கவில்லை. உத்தரவாதங்கள், உறுதிப்பாடுகளற்ற எந்தவோர் இராஜதந்திர நகர்வும், தெளிவான செயற்பாடுகள் அல்ல என்கிற அடிப்படையில், சம்பந்தனின் அணுகுமுறை சரியானதுதான். 

ஆனால், இந்தியாவுக்கு சீனாவினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் நலன்கள் சார்ந்து இந்தியா முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கவே முடியாது. அதனால்தான், கூட்டமைப்பைத் தாண்டி ராஜபக்‌ஷர்களுடனான நெருக்கத்தை இந்தியா பேண முயலும். இதனால், ‘அணிலை மரத்தில் ஏறவிட்ட நாயின் நிலை’க்கு தமிழ் மக்களின் நிலை வந்திருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளை தங்களது நலன்களுக்கான கருவியாகவே இந்தியாவும் மேற்கு நாடுகளும் இவ்வளவு காலமும் கையாண்டு வந்திருக்கின்றன. அவ்வாறானதொரு தருணமே மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களைக் காட்டி ராஜபக்‌ஷர்களை கையாள முயற்சித்த இந்தியா, இன்றைக்கு அவர்கள் இணக்கமான நிலை எடுத்ததும் தமிழ் மக்களை சில காலத்துக்கு தள்ளிவைக்கும் நிலையையே  வெளிப்படுத்தும். 

இந்திய வெளியுறவுச் செயலாளர் அண்மைய வருகையின் போது, கூட்டமைப்பினை புதுடெல்லிக்கு அழைத்திருக்கின்றார். கூட்டமைப்பினை புதுடெல்லிக்கு ஏற்கெனவே அழைத்து ஒன்றரை வருடங்களாகிவிட்டது. ஆனால், புதுடெல்லில் இருந்து அதற்கான நேரம் ஒதுக்கப்படவே இல்லை. 

கூட்டமைப்பினை ஒரு கட்டம் வரையில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரை வைத்தே கையாண்டு கொள்ளலாம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. ராஜபக்‌ஷர்கள் இந்தியாவோடு முறுக்கிக் கொண்டிருந்த தருணத்திலேயே நிலைமை அப்படியிருந்தது. அப்படியான நிலையில், தற்போது இந்தியாவோடு நெருங்கிக் குழைய ராஜபக்‌ஷர்கள் தயாராக இருக்கும் போது, கூட்டமைப்பின் மீதான அணுகுமுறை என்பது இன்னும் கரிசனையற்ற ஒன்றாகவே இருக்கும்.

கூட்டமைப்பைத் தாண்டிய தமிழ்த் தரப்புகளை, இந்தியா உதிரிகளாகவே கருதுகின்றது. அதனால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் சார்ந்து இராஜதந்திர நகர்வுகள் என்றால் அது கூட்டமைப்பின் கைகளிலேயே இன்னமும் இருக்கின்றது. 

அதனால், தக்க தருணத்தில் சரியான முடிவுகளை எடுக்காது விடுத்து, வேண்டப்படாத தரப்பாக கூட்டமைப்பு தன்னை மாற்றிக் கொள்ளக் கூடாது. அது, அவர்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பாதிக்கும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புதுடெல்லியுடன்-நெருக்கும்-ராஜபக்-ஷர்கள்-கூட்டமைப்பின்-நிலை-என்ன/91-282481

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம் மஜில்ஸ் 
ஐயோ எரியுதுடி  மாலா அந்த பேனை 18 இல வை , நிலைமை இப்படியாகிவிட்டதே மஜில்ஸிற்கும் கூத்தமைப்பின் குஜால்ஸிற்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2021 at 23:25, கிருபன் said:

அத்தோடு, 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வழக்கத்துக்கு மாறாக கோட்டா, இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்தும் கருத்துகளையே இம்முறை வெளியிட்டிருக்கின்றார். அதாவது, 13ஆவது திருத்தம் அவசியமில்லாத ஒன்று. அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலானது என்று, தென் இலங்கை முழுவதும் கடந்த காலங்களில் ராஜபக்‌ஷர்கள் முழங்கி வந்திருக்கிறார்கள். 

தமிழ்மிரர் கோத்தா மகிழ்ச்சிய்  படுத்துவதை விட ஒரு படி முன்னே பாய்கிறது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 10:47 AM   லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க,  3940 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,790 ரூபாவாகும். 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன்,  அதன் புதிய விலை 1,522  ரூபா என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை  28 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, அதன் புதிய விலை  712  ரூபாவாகும். https://www.virakesari.lk/article/185272
    • உத்தர பிரதேச மாநிலம்  இந்திய தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் மாநிலமாக இரு‌ந்து வரு‌ம் நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 42 தொகுதியில் முன்னிலை உள்ளது  இதுவரை 5 சுற்று  வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அகில இந்திய ரீதியாக பா ஜ க  கூட்டணி  297 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது   
    • ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான்  அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களின் அதிரடியான ஆட்டத்துடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய உகண்டா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 16 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. ஆப்கான் வீரர் Fazalhaq Farooqi  4 ஓவர்களில் 9 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்! முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.
    • இரண்டாவது சுற்று வாக்குகள் முடிவில் ராதிகா 3 இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் விஜயகாந்தின் மகன் இருக்கிறார்
    • Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 10:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார். இந்திய தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளிவரவுள்ள நிலையில், இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயமானது இருநாடுகளின் உறவுகளின் வலுவான நிலையையும் இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் இன்றியமையாத ஒன்று என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. எனவே தான் இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் யார் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசாங்கத்துடன் ஒன்றித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் புதிய பொருளாதார இணைப்புகளை துரிதப்படுத்தல் போன்றவற்றில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் டெல்லி செல்கின்றார்.   குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார பெரும் நெருக்கடியின் பின்னர் இலங்கைக்கு இந்தியா பல உதவித்திட்டங்களை வழங்கியது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த போதும் கூட, எரிபொருள் தட்டுப்பாட்டை சீரமைக்க முழு அளவில் இந்தியா உதவிகளை செய்தது. மேலும், உணவு, மருந்து மற்றும் உரம் என பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பல உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியது. அது மாத்திரமன்றி சர்வதேச அரங்கிலும் இலங்கைக்காக இந்தியா ஒத்துழைப்பு கோரியது. நெருக்கடியின்போது மாத்திரம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியிருந்தது. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்று சுமார் ஒரு வருடத்தை கடந்த பின்னரே டெல்லி விஜயத்திற்காக அழைப்பு கிடைக்கப்பெற்றது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடலுக்காக இலங்கை பலமுனைகளில் முயற்சிகளை மேற்கொண்டது. இந்த தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் அப்போது கூறப்பட்டன. சீன உளவுக்கப்பல் விவகாரம், மாத்திரமன்றி இலங்கை மக்களின் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க இந்திய ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், சீன கப்பல்களுக்கு அவற்றை வழங்குவதாக கூறி டெல்லி அதிருப்தியை வெளியிட்டது.  அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு இணக்கப்பாடுகளுடனான 15க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான திட்டங்கள் இலங்கையில்  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் டெல்லி கவலை தெரிவித்தது. இவ்வாறானதொரு நிலையில், சுமார் ஓருவருடத்திற்கு பின்னர் கடந்த வருடம் ஜுலை மாதம்  உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டு ஜனாதிபதி ரணிலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டதுடன், புதுப்பிக்கதக்க ஆற்றல் சக்தி, இரு நாடுகளுக்கு இடையில் கடலூடான எரிபொருள் குழாய் மற்றும் மின்சார கேபில் இணைப்புகளை ஏற்படுத்தல், திருகோணமலையில் பொருளாதார வலயம்,  மருந்து பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்தல் மற்றும் பால் உற்பத்தி ஆகியவை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு சீராகவும் செயல்திறன் மிக்கதாகவும் தற்போது காணப்படுகின்றது. இலங்கையில் இந்தியாவின் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய பொருளாதரத்துடன் இலங்கை இணைய வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்திய தேர்தலில் வெற்றிப்பெறும் தலைவருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் டெல்லி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185265
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.