Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கோயில் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலமானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு அகில இலங்கை இந்துமா மன்றம் இரங்கல்

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் பிரிவு குறித்து, அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றுப் பெருமைமிக்க நல்லூர் கந்தப்பெருமானின் அறங்காவலராக கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அரும்பணி ஆற்றிய பெருமகன் ஸ்ரீமான் குமாரதாஸ மாப்பாண முதலியாரின் பிரிவு குறித்து மிகுந்த கவலையடைகின்றேன்.

எவ்வித ஆடம்பரமும் இன்றி பக்தரோடு பக்தராக நின்று ஆலயத்தைக் கட்டி வளர்த்த பெருந்தகையை இனி எங்கே காண்போம்.

தனது சகோதரன் அமரர் சண்முகதாஸ மாப்பாண முதலியார் காலமான நாள் முதல் தனது உத்தியோகப் பதவியாவற்றையும் துறந்து முழுநேரத் தொண்டராகத் தனது வாழ்வை அர்ப்பணித்த பெருமகன்.

எவருக்கும் அஞ்சாத தன்மகத்துவம் மிக்க ஆளுமையால் பல்வேறு திருப்பணிகளை நிறைவேற்றிய பெருந்தகையின் சாதனைகளை சொல்லிமுடிக்க முடியாது.

நல்லூர் ஆலய ஒழுங்குகளை எவர் வருகைக்காகவும் மாற்றி அமையாது, தெய்வசந்நிதிதானத்தில் அனைவரும் ஒன்றே என்ற அற்புதக்குறிக்கோளை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர்.

கண்ணை இமை காப்பது போல் ஒவ்வொரு விநாடியும் ஆலய ஒழுங்குகளை அவதானித்து அரிய பணி ஆற்றிய இப்பெருந்தகையை நல்லூர்க் கந்தப்பெருமான் தனது திருவடிக்கு அழைத்துவிட்டார்.

என்செய்வோம், அவது தூயபணியை நல்லூர் மரபுப்படி இளைய எஜமானார் தந்தையின் வழியில் நெறிப்படுத்தப் பிராத்திப்போம்.

எல்லா ஆலயங்களிலும் நல்லூர் கந்தனின் சிறப்பைப் பின்பற்ற வைக்க ஒப்பற்ற தலைமகனை அனைவரும் மீள நினைந்து பிராத்தித்து வழி அனுப்பி வைப்போம் என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2021/1243973

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பாண முதலியாரின் சடலம் தீயுடன் சங்கமம்

October 10, 2021

spacer.png

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி  குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின்  இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

மாப்பாண முதலியார் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (09) காலை இறைவனடி சேர்ந்தார்.இந்நிலையில் இறுதி கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை  நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றது.

இதில் அரசியல் பிரமுகர்கள், ஆலய தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பூதவுடல் காலை 11 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது

1964 டிசம்பர் 15 முதல் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக அவர் சேவையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கத்து

3-1-1.jpg?resize=696%2C321

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2021/167074

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த இரங்களைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,

55-2.jpg

https://athavannews.com/2021/1243980

  • கருத்துக்கள உறவுகள்

AVvXsEhQfHObSyB8kkifXlNEeZ7jhwcu8LEsojL-lSMzLlJugqwotyzxVIKGTlVT8F0NW_6D8A0K-PjM1h9XP0F6m5dVNrjIGCkBFP7f84VxyBOnAqf1lDzuzgPLc5Z29exJpGwaacJZ6rxRyU27KUIAE4EfQp29sDzocfxqBsNYhmuDKn2V552w0dCe8q-2Ng=w483-h640

நல்லூர் கோவில் அறங்காவலர் குகஶ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் குகபதமடைந்தார்..!!!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது அறங்காவலர் குகஶ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று(09.10.2021) காலை குகபதமடைந்தார்.

1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது அறங்காவலராக பணியாற்றிக்கொண்டிருப்பவர் இரகுநாத குமாரதாஸ் மாப்பாணமுதலியார் அவர்களாகும்.

1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்தார்.

ஏற்கனவே ஆலய வழிநடத்தல் திறனில் தந்தை இரகுநாத மாப்பாண முதலியார் பின்னர் தமையன் சண்முகதாஸ மாப்பாண முதலியாருடன் பணியாற்றிய அனுபவம் இருந்தமையாலும் இயல்பாகவே முருகப்பெருமான் மீது தீராத பக்திப்பெருக்கை கொண்டிருந்தமையாலும் இவரது பணிக்காலம் ஆலய வளர்ச்சியில் மிகப்பெரும் தனித்துவமிக்கதாய் நகர்ந்து வந்தது.

அதுமட்டுமல்லாது எப்போதும் ஆலயத்திலேயே இருந்து முருகனுக்கு நெருக்கமான பணியாற்றியதுடன் முருகனின் அன்புக்குப்பாத்திரமானவரான கடந்த 50 வருடங்களாக சேவையாற்றிவருகின்றார்.

மிக எளிமையாய் எவ்வித ஆடம்பரங்களும் அற்ற இவரது நிர்வாகத்திறனும் கோயிலுக்கான ஒரு சதத்தையேனும் இறைதிருப்பணிக்காக்கும் நேர்த்தியிலும் தூய்மைப்பகதியினாலும் இவரது பணிச்சிறப்பு எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது என்றால் மிகையில்லை.

கோயில் வளர்ச்சிக்கு ஏற்பவே பக்தர் கூட்டமும் பெருமளவில் திரள திரள ஆலய வளாகமும் இவர்காலத்தில் விஸ்தரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தையும் இன்னும் இன்னும் மெருகேற்றி அழகுபடுத்தியதிலும் சரி நல்லூர் ஆலயம் அலங்காரக்கந்தன் என புகழப்படுமளவிற்கு முருகப்பெருமானின் அலங்காரத்தில் தனித்துவ மரபை கொண்டு வந்து அதனை தானே நேரடியாக அமைத்துவருபவர் குமாரதாஸ் மாப்பாணமுதலியார் ஆவார்.

இதுமட்டுமன்றி ஒவ்வொரு மகோற்சவத்திற்கு முன்பும் ஏதாவது திருப்பணியை நிறைவேற்றுவது என்னும் மரபும் நடைமுறைக்கு வந்தது இவருடைய காலத்திலேயே அந்த வகையில்

இவரது காலத்தில் ஆலயத்தில் இடம்பெற்ற பெரும் திருப்பணிகள் சில

*ஷண்முகருக்கான அழகிய சிறிய கோபுரப்பணியும் நிறைவு கண்டு 1966 குடமுழுக்கு நிகழ்த்தப்பட்டது,
*ஆலய மூலஸ்தானத்தை விடுத்து மற்ற அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அழகுறஅமைத்து இன்றைய பெருங்கோயிலாக வளர்சியடைய இவரது பணிகள் உதவின,
*மகாமண்டபம், ருத்திர மண்டபம் என்பன அழகுபடுத்தப்பட்டன,
*முத்துககுமார சுவாமிக்கும் விமானத்துடன் கூடிய சந்நிதி அமைக்கப்பட்டது,
*தேர் முட்டி அமைக்கப்பட்டது.
*இலங்கை கோவில்களுக்கே அடையாளமாகவும் இன்றைய நல்லூரின் சின்னமான திகழும் கோபுரத்திற்கு வெளியேயான யாழ்ப்பாண கலாச்சாரத்துடன் பின்னிபிணைந்த சொக்கட்டான் பந்தல் வடிவான வில்லுமண்டபத்தை அமைத்து யாழ்ப்பாணத்திற்கே தனித்துவ வரலாற்றை வித்திட்டவர். இதுவே மாப்பாணர்பாணி கலையம்சத்தின் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது…
*தொடர்ந்து வந்த ஆண்டுகளில் படிகளுடனான தேர் மண்டப அமைப்பும் அமைக்கப்ட்டது.
*1978ல் வசந்தமண்டபம் இன்னும் பெரிதாக அழகுற அமைக்கப்பட்டது.
*2012ல் சண்முக நவதள ராஜகோபுரமும்,
*2015ல் குபேர நவதள ராஜகோபுரமும் அமைக்கப்பட்டது.
*2017ல் சண்முக தீர்த்த கேணி புனர்த்தானம் செய்யப்பட்டது.
*2018ம் ஆண்டு ஷண்முகருக்கான தனித்த பொன்னால் ஆன சுவர்ண சபை விமானம் அமைக்கப்பட்டது,

குமாரதாஸ் மாப்பாணருடன் அவரது புதல்வாரன இளவலும் சேர்ந்து தற்போது ஆலயப்பணிகளை மிக நேர்த்தியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆலயதிருப்பணிகள் எங்குமில்லாதவாறு தனித்துவமாய் நடைபெறுவதே நல்லூர்வழக்கமாகும்.

முருகனின் உத்தரவுபடி ஒருவரது முடிவிலேயே ஆலயம் இயங்குவதும் இவ்வாலயத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாகும்.

ஏழை, பணக்காரன் பேதமின்றி முருகனுக்காய் வழங்கும் பொருட்கள் அனைத்தும் முருகனது சொத்துடமையாக்கப்பட்டு ஆலயவளாகத்தில் வைத்தே அதிகாரிகளின் நேரடிப்பார்வையுடன் அனைவரும் காணும்வண்ணம் வெளிப்படைத்தனமையுடனேயே அனைத்து பணிகளும் இடம்பெறும்.

அதனைவிட கட்டப்பணிகளாயினும் சரி வாகன பணிகளாயினும் சரி நல்லூரானுக்கான ஆபரணங்கள் இப்படி எதுவாயினும் உருவாக்குதற்கு அப்பால் அவற்றை மிகத்திறம்பட பராமரிப்பதிலும் அனைத்துப் பொருட்களையும் காலாதி காலமாக பாவனைக்கு ஏற்ற வகையில் பேணிப்பாதுகாப்பதிலும் கூட நல்லைமுருகன் முன்னோடியாகவே இருக்கின்றார்.

ஆலய கட்டுமானங்களைப்பொறுத்தவரையில் ராஜகோபுரத்துடனான இருமணிக்கூட்டு கோபுரமாயினும் சரி, கோபுரத்திற்கு முன்னால் கம்பீரமாக அமைக்கப்பட்ட திருவாசிவடிவிலான வில்லுமண்டபமாயினும் சரி ஏற்கனவே இருந்த திராவிட கட்டடகலை மரபையும் தாண்டி ஏனைய பலதனித்துவ மரபுகள் போன்று மாப்பாணர் கட்டடப்பாணி என உலகவரலாற்றில் தனித்துவம் மிக்கதான பெருமையையும் நல்லூர் தன்னகத்தே கொண்டுள்ளது. பின்னாட்களில் ஈழத்தின் பல ஆலயங்கள் இப்பாணியை பின்பற்றி எழுந்தவையாகும்.

இவைமட்டுமல்லாது ஆலயத்தின் நிர்வாகி சிவாச்சாரியர்கள் அந்தணப்பெருமக்கள் முதல் பணியாளர்கள், தொண்டர்கள், பக்தர்கள் வரை அனைவருக்கும் உரிய கடப்பாடுகள் ஒழுங்குகள் விதிக்கப்பட்டு முருகனையே பிரதானமாக்கி அவருக்கான வழிபாடுகளையே முதன்மைப்படுத்தி அந்த பக்திப்பிரவாகம் எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைவரையும் சென்றுசேர்வதை நல்லூரான் கோட்டம் எப்போதும் உறுதிப்படுத்தியே வந்துள்ளது.

ஆரம்பகாலங்களில் இருந்த முக்கிய பிரமுகர்களுக்கான செங்கம்பள வரவேற்புகள் கூட பிற்காலங்களில் நிறுத்தப்பட்டது ஒருமுறை அப்போதைய ஜனாதிபதியான டட்லிசேனநாயக்கா மற்றும் ஜீ.ஜீ. பொன்னம்பலம் வருகையின்போதே இவையாவும் நிறுத்தப்பட்டு ஆலயவளாகத்தில் அதுவும் முருகன் சந்நிதானத்தில் அனைவரும் சமம் எனும் புரட்சிகர நடைமுறை பேணப்பட்டு அது இன்றுவரை அப்பழுக்கற்று குமாரதாஸ மாப்பாண முதலியாரால் நிறைவேற்றப்பட்டுவருகின்றது.

அன்பு, பக்தியுடன் ஆலயத்திற்கு வருபவர்களுக்கு பணமோ அல்லது வேறுவிதமான சூழல்களோ இறை வழிபாட்டுக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதில் ஆலய நிர்வாகியான குமாரதாஸ் மாப்பாணமுதலியார் மிகத்தெளிவாக இருக்கிறார்.

உலகில் எந்த ஆலயத்திலும் இல்லாத தனித்துவ நடைமுறைகள் நல்லூரில் இருப்பது பெருமை தரும் விடயமாகும்.

ஒரு ரூபாய்க்கு அர்ச்சனைச்சீட்டு முதல் குறைந்த கட்டணத்திலேயே உருத்திரா அபிஷேகம் மற்றும் ஷண்முக அர்ச்சனைகள் என்பன உட்பட அனைத்து உபயங்களும் இன்றளவும் ஏசமான் ஐயாவினுடைய தலைமைத்தவத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆலயத்தை நன்கு அவதானிப்பவர்களுக்கு நல்லூரில் இடம்பெறும் வளர்ச்சியான மாற்றங்கள் அனைத்தும் ஆலய பக்திப்பாரம்பரியத்தை இன்னும் அதிகரிக்கவே அன்றி வேறில்லை என்பது புரியும்.

மற்றும் இவருடைய காலத்தில்

ஆரம்பத்தில் கேணிக்கு இடையில் இருந்த பொதுப்போக்குவரத்து வீதி அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்ததனாவிடம் அனுமதிவேண்டி ஆலயத்துடன் இணைக்கப்பட்டு ஆலய வளாகம் விஸ்தரிக்கப்பட்டு வெளிவீதியே போக்குவரத்துக்குரியதாக மாற்றப்பட்டது.

ஆலய வளாகத்தில் இருந்த வணிக இடங்கள் எல்லாம் 1980 களில் அகற்றப்பட்டு அவற்றுக்கான தனியிடம் வெளிப்பகுதியில் ஒதுக்கப்பட்டது.
வீதிமுழுதும் வெள்ளை மணல் பரப்பப்பட்டு ஆலயவளாகம் விஸ்தாரமாகவும் தூய்மையாகவும் பேணப்படுகின்றது.

உண்மையில் நல்லூரான் ஆலயம் ஒரு மடாலயமாக இருந்தாலும் காலப்போக்கில் சிவாகம மரபுகளையும், குமாரதந்திர மரபுகளையும்
தேவைக்கு ஏற்ப அளவில் தன்னுள் கொண்டு ஆறுகால பூஜை நியமங்களையும் 25நாள் மஹோற்சவ பண்பியலையும் கொண்டுள்ளமை சிறப்பானதாகும்.

இத்தனை பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஆலயத்தின் இன்றைய அதிகாரி குமாரதாஸ மாப்பாண முதலியார் என்றால் நிகரில்லை....

https://www.yarldevinews.net/2021/10/blog-post_469.html

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1565307036729.jpg

நல்லூரான் மகிமை... இவரல்லோ!

இந்திய பிரதமர் மோடி அவர்கள் யாழ்ப்பாணம் வந்தபோது, மேலாடையோடு ஆலயத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கோம் என்று ஆலய அறக்காவலர் மாப்பாணர் முதலியார் அவர்கள் கூறிவிட்டார். இந்தியப் பிரதமர் மேலாடை கழற்றி ஆலயத்துள் செல்வது இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவ்வளவு உவப்பாகப்படாமையினால் கொஞ்சம் அதிகாரத் தொனியில் கேட்டுள்ளார்கள்.
அதற்கு மாப்பாணர் முதலியார் அவர்கள், நீங்களே அச்சகர்களைக் கூட்டிவந்து நீங்களே பூசைசெய்து, நீங்களே என்னவும் செய்யுங்கள்.ஆனால் முருகன் அடியார்களாகிய நாம் எதுவும் செய்யோம்.
எமது அந்தணரும் எதுவும் செய்யார்.
முருகன் விக்கிரகத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதா இல்லையா என்பதை அவர் பார்த்துக் கொள்வார் என்று உறுதிபடக்கூறிவிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு வரும் அரசியற் தலைவர்கள்,வெளிநாட்டுப் பிரமுகர்கள் எவர்பொருட்டும் ஆலயத்துள் எந்த சிறப்புப் பூசைகளும் இல்லை.சிறப்பு மரியாதைகளும் இல்லை.ஆனால்; யாழ்ப்பாணத்தின் அடையாளமாக நல்லூர் ஆலயமே விளங்குவதால், அனைத்து அரசியல்த் தலைவர்களும் ஆலயத்திற்குச் செல்வதை தமது வாடிக்கையாகக் கொள்வர். ஆலயத்துள் மேலாடையைக் கழற்றிவிட்டே சென்றுவருவர்.

ஒருமுறை இலங்கைப் பிரதமராக சிறிமா அம்மையார் அவர்கள் இருந்தபோது யாழ்ப்பாண வருகையின்போது நல்லூருக்குச் சென்றிருந்தார்.ஆலயம் பூட்டியிருந்தது. திறந்து பூசைசெய்யும்படி வேண்டினார்.ஆனால் மாப்பாணர் முதலியார் அவர்கள் மறுத்திடவே, பிரதமருக்காகக்கூட ஆலய விதிகளை மாற்றமுடியாது என்ற அவரைப் பாராட்டிச் சென்றார்.ஆக; இலங்கை பிரதமர் என்றாலும்,சனாதிபதி என்றாலும் பிச்சைக்காரன் என்றாலும் முருகன் முன்னால் ஒருவரே என்ற மாப்பாணர் முதலியாரின் உறுதி, பரம்பரை பரம்பரையாக அவர்கள் பேணிவரும் முருகபக்தியின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

இலங்கைப் பிரதமராயினும் சனாதிபதியாயினும் ஆலயப் பூசை நேரத்துக்கு ஏற்பவே தமது நேர அட்டவணைகளை யாழ்ப்பாண வருகைகளின் போது கையாண்டு, மேலாடைகளைக் கழற்றிச் செல்வர்.
இவ்வழமை யாழ்ப்பாண ஆலயங்கள் அனைத்திலும் இருக்கின்றபோதும், இறுதியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் நகுலேசுவர ஆலய தற்போதைய பிரதம குருவும் ஆலய உரிமையாளருமான நகுலேசுவர குமாரசுவாமிக் குருக்களை நாடி, நகுலேசுவர ஆலய விதிகளைத் தளர்த்தி, இந்தியப் பிரதமர் அவர்களை மேலாடையோடு உள்ளே அழைத்துச் சென்றனர். குறித்த குருக்களோடு நாம் இதுபற்றி வினாவியபோது, மேற்கூறிய சம்பவக் கருத்துக்களை உரைத்து, மாப்பாணர் முதலியார் தவறிழைத்ததாகவும், தாம் ஒருவரே புத்தியோடு நடந்ததாகவும் கூறினார்.

யாழ்ப்பாண ஆலயங்களுக்குள் மேலாடை கழற்றிச் செல்லும் வழமை இந்தியப் பிரதமர் அவர்களுக்காகவே முதன்முறை, அதுவும் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேசுவரத்தில் கைவிடப்பட்டிருந்தது. சிவபெருமானை நீலநிறக் கடவுளென்ற ஆகமத் தெளிவற்றார்களுடைய கைகளுக்கு ஆலய உரிமையும் பிரதம குரு பொறுப்பும் சென்றால் அது அரசியல்வாதிகளுக்காய் ஆடும் களமாக மாறிவிடும் என்பதற்கு இதுவே சான்றாகும். இக்குருக்கள் ஆலய சம்பிரதாயங்களை மாற்றமுடியாதென்று தெளிவாகக் கூறியிருப்பின், இந்தியப் பிரதமர் அவர்களுக்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாண சம்பிரதாய வழமையைக் கூறியிருப்பர்.நிச்சயமாக அவரும் மேலாடையைக் கழற்றிவிட்டு ஆலயத்துக்குச் சென்றுவந்திருப்பார்.
வரலாற்றுத் தவறிலிருந்து தப்பியிருப்பார்.அவருடைய பெயரும் மாசடைந்திராது.

இப்படி,
ஆலயத்தினை தொன்றுதொட்டு முருகன் அனைவரும் சமம் என்கின்ற பாவனையில் நிர்வகித்துவரும் மாப்பாணர் முதலியார் அவர்களின் பரம்பரையின் முருகபத்தியின் சிறப்புத்தான் நல்லூரில் முருகன் விரும்பி அருள்பாலிக்கும் அற்புதத்தின் ஆதாரம்.

சைவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவராயினும் அவர்க்கு கோயில் என்றால் சிதம்பரம்தான். பாக்கிஷ்தான் நாட்டுச் சைவராயினும், ஜேர்மனிக்காரர் ஒருவர் சைவ சமயத்தினை ஏற்பினும், ஒரு இரசிய நாட்டவர் சைவசமயத்தினை ஏற்பினும் அவருக்குக் கோயில் என்றால் அது சிதம்பரமேயாம். எனவே ஒரு கோயில் எந்தவொரு நாட்டினதும் சொத்தல்ல! அது சிவன் சொத்தாகும். அடியார் அனைவருக்கும் உரியது. நாமார்க்கும் குடியல்லோம் என்று அப்பர் பெருமான் காட்டிய அறமும் இதுவே. ஆனால் ஆகம முறைக்கு முரணாக, சிதம்பரத்தில் நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்படுவது ஏற்கப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும் அடிபணியோம் என்ற நல்லூர் மாப்பாணர் முதலியாரின் முருகபத்தி, தமிழரின் நல்வினைப் பயனாகும். முருகன் உள்ளான் என்பதனை உலகுக்கு உணர்த்தும் அருமையுமாகும்.

மாப்பாணர் முதலியார் அவர்களை எப்போதும் ஆலயத்துள் பார்க்கலாம்.சாவிக்கொத்தோடு எங்கேனும் ஒருமூலையில் அமர்ந்திருப்பார்.அவருடைய மேனி சிவப்பொலிவோடு மினுங்கியபடி இருக்கும். முதுமையிலும் முருகன் பணிகள் ஒழுங்காய் நடக்கிறதா என்பதை மூலையில் இருந்து பார்த்தபடி இருக்கும் அவர், ஒரு சுவாமியாரின் அருட்பொலிவோடு காண்பார் கண்களுக்குத் தோன்றிடுவார். ஆடம்பரம் இல்லாது,பேச்சு மூச்சு இல்லாது, முருகனின் பணிகளை தனது கடைக்கண்களால் நோட்டமிட்டபடி அமர்ந்திருக்கும் அவர்கோலம் முருகனின் அருளாட்சியின் சாட்சியாகும்!

வறுமைப் பிணிக்கு மருந்தொன் றிருக்குது
வந்து பாருங்கள் நல்லூரில்
வந்து மருந்தை அருந்திய மாதவர்
வாழ்ந்தார் வாழ்ந்தார் வாழ்ந்தாரே
-சிவயோக சுவாமிகள்

மருந்தென்று சொன்னால் புளிப்பு, கசப்பு இருக்கத்தான் செய்யும்.மருந்தைக் குடிப்பதும் குடிக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். மருந்தை ஏன் புளிப்பாக உள்ளது என்று சாடுவதால் மருந்துக்கு எந்தப் பாதகமும் வராது...

https://www.tamilarul.net/2019/08/blog-post_62.html

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

யாழ் மாகாணத்தாரிடம் உள்ள வைராக்கிய குணம். மரண தறுவாயிலும் கொண்ட கொள்கையிலிருந்து விலகமாட்டார்கள்.

இரங்கல் திரியில் அரசியல் பேச விரும்பவில்லை அண்ணை, ஆனா இது உங்களுக்கே ஓவரா தெரியேல்லையோ?

எனக்கு ஜி ஜி பொன்னம்பலம் முதல் கே பத்மநாதன் வரை நினைவில் வந்து போகிறார்கள்.

வைராக்கியமான மனிதர்களும், கொள்கைமாறுபவர்களும் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள். இவை ஒரு மாவடத்தின் தனி குணமாக எனக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முதலியாரின் வைராக்கியம் மகனிடம் தற்போது பொறுப்பெடுத்து இருப்பவரிடம் இருக்குமா என்பது சந்தேகமே . 

1 hour ago, goshan_che said:

இரங்கல் திரியில் அரசியல் பேச விரும்பவில்லை அண்ணை, ஆனா இது உங்களுக்கே ஓவரா தெரியேல்லையோ?

எனக்கு ஜி ஜி பொன்னம்பலம் முதல் கே பத்மநாதன் வரை நினைவில் வந்து போகிறார்கள்.

வைராக்கியமான மனிதர்களும், கொள்கைமாறுபவர்களும் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள். இவை ஒரு மாவடத்தின் தனி குணமாக எனக்கு தெரியவில்லை.

மனித மூளையின் செயற்பாடு சிறப்பாக செயற்படுவதன் அறிகுறியே,  அது கால மாற்றங்களை உள்வாங்கி தன்னைத்தானே update செய்து கொள்வதே. கொள்கை என்பது நடைமுறை சாத்தியம்  மற்றும் எம்மால் செயற்படுத்தக்கூடிய செயற்பாட்டு திறனுடன் சம்பந்தப்பட்டது. மாற்றங்களை  அனுசரிக்காது எம்மால் செயற்படுத்தக்கூடிய திறனையும் அளவிடாது  கொண்ட கொள்கை என்று விடாக்கொண்டானாக இருப்பவன் மூளை சரிவர செயற்படும்  இயல்பான சாமான்ய மனிதரில் இருந்து வேறுபட்டவனாகவே(Dummkopf) இருப்பான்.

இலங்கையில் பிரச்சனை கூர்மையடைய தொடங்க முதலே நாட்டின் அரசியல் நிலமைகளை அவதானித்து அதனை சரியாக உள்வாங்கி இரவு வசந்த மண்டப பூசை நேரத்தை மாலை 05.30 மணியாக மாற்றி  இரவு 08.00 மணியாக இருந்த  வெளி உலா போகும் நேரத்தை மாலை 6 மணிக்கு மாற்றி மக்களை பாதுகாப்பாக இருள முதல் வீடு செல்லும் நடைமுறையை ஏற்படுத்திய முதலியாரின் நடவடிக்கை அவர்  மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும்  சிறப்பான மனிதர் என்பதனை எடுத்து காட்டுகிறது. சூரிய அஸ்தமனத்தின் பின்னரே சுவாமி இரவு வெளி உலா போக வேண்டும் என்ற பழைய கொள்கை வைராக்கியத்தை மக்களின் பாதுகாப்புக்காக மாற்றியதையே குறிப்பிடுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் எளிமையாக வாழ்ந்து இறைபணியாற்றி மறைந்துவிட்ட அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் இறுதிக் கிரிகைகள்

யாழ்ப்பாணம்- நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி  குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின்  இறுதிக்கிரிகைகள், நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மாப்பாண முதலியார் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை இறைவனடி சேர்ந்தார்.

இந்த நிலையில் இறுதி கிரியைகள் இன்று, நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றது.

இதில் அரசியல் பிரமுகர்கள், ஆலய தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பூதவுடல் காலை 11 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டபோது, வழிநெடுகிலும் பொதுமக்கள், வீதிகளில் நின்றவர்கள் அஞ்சலி செலுத்தியதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தினர் .

சுகாதார நடைமுறைப்படி, ஆரவாரங்கள் எதுவுமின்றி மிகவும் அமைதியான முறையிலே இறுதி ஊர்வலம் இடம்பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

https://athavannews.com/2021/1244040

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மாப்பாணரின் நினைவாக 92 பனை வித்துக்கள் நாட்டப்பட்டன

October 24, 2021

நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக 92 பனை வித்துக்கள் நடாத்தப்பட்டன. 
குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி தனது 92ஆவது வயதில் காலமானார். 

அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடத்தினரின் ஏற்பாட்டில் , அன்னாரது 92ஆவது அகவையை குறிக்கும் முகமாக செம்மணியில் அமைந்துள்ள நல்லூர் வரவேற்கும் அலங்கார வளைவில் இருந்து செம்மணி வீதியின் இரு மருங்கிலும் 92 பனை வித்துக்கள் நாட்டப்பட்டன

1-1.jpg?resize=720%2C4972-13.jpg?resize=720%2C324

https://globaltamilnews.net/2021/167634

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.