Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

"ரஜினிகாந்த்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு நீக்கப்பட்டது": மருத்துவமனை அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அதை நீக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை கூறுகிறது.

நடிகர் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர்.

இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்த் நேற்று சிறிய தலைசுற்றலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் (Carotid Artery) அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என்று கூறியுள்ளது.

இதையடுத்து அவருக்கு அந்த அடைப்பை நீக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு நீக்கப்பட்டதா அல்லது ஸ்டென்ட் பொருத்தப்பட்டதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

அவர் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என காவிரி மருத்துவமனையில் அறிக்கை கூறுகிறது.

 

ரஜினிக்கு இதற்கு முன்பாக 2011ஆம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சைபெற்றார். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், பக்கவாதத்திற்கு முந்தைய நிலையான மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ரஜினி. ஏற்கெனவே, 2011 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன்பிறகு, ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது உடல்நலனைப் பரிசோதிப்பதில் ரஜினி அக்கறை செலுத்தினார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பேரிடர் காரணமாக, அவர் வெளிநாடு செல்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதன்பிறகு, மத்திய அரசின் அனுமதியோடு அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற தகவலும் வெளியானது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியலுக்கு வருவதாகக் கூறி வந்த ரஜினி, ஐதராபாத்தில் `அண்ணாத்த' படப்பிடிப்பில் இருக்கும்போது ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் ரஜினி

பட மூலாதாரம்,PRODIP GUHA

 
படக்குறிப்பு,

நடிகர் ரஜினி

ஒருகட்டத்தில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிவிட்டார். கடந்த சில நாள்களுக்கு முன் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான `தாதா சாகேப் பால்கே' விருதைப் பெற்ற ரஜினிகாந்த், மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்.

நேற்று முன்தினம், தனது பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தைப் பார்த்தார். இதுதொடர்பாக, தனது மகள் சௌந்தர்யாவின் ஹூட் செயலியில் பகிர்ந்த ரஜினி, ` நான், என் மகள்கள், மருமகன் விஷால், மனைவி, சம்பந்தி மற்றும் பேரன்களுடன் அண்ணாத்த படத்தை பார்த்தோம். குறிப்பாக என் பக்கத்தில் உட்காந்து என் பேரன் முதன் முறையாக படம் பார்த்தான். படம் பார்த்து முடித்தவுடன் எனது பேரன் என்னை விடவே இல்லை. கட்டிப்பிடித்து `தாத்து தாத்து படம் வெரி நைஸ்' என்றான்.

அவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தால் என்னை `தாத்து' என அழைப்பது வழக்கம். படம் முடித்து வெளியே வந்த பிறகு கலாநிதி மாறன் திரையரங்குக்கு வெளியே காத்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.

மணி 10க்கு மேல் இருக்கும்.. அப்போது என்ன சார் இங்க என கேட்டேன். இல்லை உங்களை பார்க்கணும் என்றார். பிசியான ஆளாக இருப்பவர், என்னை சந்திக்கனும் என்றார். எப்போதும் மேன்மக்கள் மேன் மக்களே' எனப் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, திடீரென மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி. இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், ` இது வழக்கமான பரிசோதனைதான். அவரது உடல்நிலை குறித்து கவலைப்பட எதுவுமில்லை. அவர் நலமாக இருக்கிறார்' என்றார். மேலும், மருத்துவமனையில் ஒருநாள் தங்கியிருந்துவிட்டு பரிசோதனை முடிந்த பிறகு ரஜினி வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தார்.

"ரஜினிகாந்த்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு நீக்கப்பட்டது": மருத்துவமனை அறிக்கை - BBC News தமிழ்

Posted

ஒவ்வொரு படமும் வெளியாகும் போது செய்யும் அரசியலுக்கு வரப் போகின்றேன் என்ற ஸ்டண்ட் இனி செய்ய ஏலாது என்பதால் பரட்டை இந்த முறை போய் ஆஸ்பத்திரியில் படுத்து அனுதாபத்தை தேடுறார். 

இனி ஒவ்வொரு பட வெளியீட்டுக்கும் முன் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஜினி டிஸ்சார்ஜ்!

spacer.png

கடந்த அக்டோபர் 28ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்று (அக்டோபர் 31) இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அக்டோபர் 28ஆம் தேதி மயக்கம், வாய்க் குழறுதல் உள்ளிட்ட பாதிப்புகளோடு அவசரமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அக்டோபர் 29 அன்று மருத்துவமனை வெளியிட்ட அதிகாரபூர்வ செய்தியில், “ரஜினிகாந்த்துக்கு கரோடிட் தமனி ரீவாஸ்குலரைசேஷன் சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஜினிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மின்னம்பலத்தில் ‘ப்ரெய்ன் அட்டாக்: ரஜினியின் அடுத்த மருத்துவப் போராட்டம்என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் நேற்று இரவு ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மூளைக்குச் செல்லும் ரத்த நாளமான கரோடிட் தமனியில் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்யப்பட்டு, அதன்பின் கண்காணிப்பில் இருந்த ரஜினி நேற்று இரவு வீடு திரும்பினார். போயஸ் கார்டன் வீட்டு வாசலில் ரஜினிக்கு ஆரத்தி எடுத்து அவரது குடும்பத்தினர் திருஷ்டி கழித்து அவரை அழைத்துச் சென்றனர்.

முன்னதாக நேற்று காலை காவேரி மருத்துவமனையில் ரஜினியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

https://minnambalam.com/politics/2021/11/01/10/rajinikanth-discharged-from-kaveri-hospital-

 

Posted

அண்ணாத்தைக்கான இலவச விளம்பரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் சுமன் பற்றி எதுவும் கேட்கவில்லை.  என் கேள்வியை மீள வாசிக்கவும். நீங்கள் ஒரு இடத்தில் “நல்லாட்ட்சி கால வரைபை நிறைவேற்றுவேன்” என அனுர சொன்னார் என்கிறீர்கள். பின்னர் அதே பந்தியில் அந்த நல்லாட்ட்சி கால வரைபு “தமிழ் தேசியத்துக்கு ஆப்பு” என்று உங்கள் கருத்தை சொல்கிறீர்கள்.  நான் உங்களிடம் கேட்பது,  அனுர தமிழருக்கு ஆப்பு அடிக்கும் தீர்வை அமல்படுத்துவேன் என சொல்லும் போது, நீங்கள் ஏன் அனுரவை ஆதரிக்கிறீர்கள் என்பதே. அவர்கள் துரோக அரசியல் செய்தார்கள் என்பதில் எனக்கும் உடன்பாடே. அதுக்காக நாம் ஏன் ஒரு கொள்கையாக தமிழ் தேசியத்தை, திம்புவை கைவிட வேண்டும்? நீங்கள் டிசுவோடு கோவித்து கொண்டு, சுத்தம் செய்யாமல் விடும் ஆளா?
    • சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ  சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு? ம்.... எந்தச்சிங்களமும் இதைத்தான் செய்ய துடித்தது, சர்வதேசமும் கூட. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இந்த அனுர குழுவும் நம்மைப்போன்று பல துன்பங்களை அனுபவித்தவர்கள். சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு. அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மக்கள் விழிப்படைந்து ஊழல்களை கையிலெடுத்ததும் ஊழல்வாதிகளை விரட்டியதும் அனுராவுக்கு பிளஸ் பொயிண்ட். இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளை மாற்றி, கொள்கைகள் சட்டங்களை மாற்றி அவர்களது மனநிலையை மாற்றி, அதன் பின்னே இந்த கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி, விக்கினேஸ்வரன் காலத்திலிருந்து சுமந்திரனின் விசிறி.   
    • கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்? ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.
    • தமிழ் காங்கிரஸ் என்ன குத்தி முறிந்தாலும் கனடாவுக்கான இலங்கை தூதர் பதவி எங்கள் யாழ்கள அனுரவின் உத்தியோகபூர்வ cheer leaderக்குத்தான். கருணையே உருவான, முள்ளிவாய்க்காலில் மக்களை பாதுகாக்க அரசு மேற்கொண்ட யுத்தத்தை வெளிநாடுகள் பேச்சை கேட்டு தாமதிக்காமல் விரைந்து முடிக்கும் படி மகிந்தவை நெருக்கிய மானிட நேயன் அனுரவின் அரசு தமிழருக்கு போதும், போதும் என்று கதறும் அளவுக்கு ஒரு தீர்வை தரப்போகிறது. அந்த தீர்வு பொதி மிக கனமானது. அதை தூக்கி அலுங்காமல் குலுங்காமல் தமிழ் மக்கள் தலையில் அரைக்கும், மன்னிக்கவும் வைக்கும் இயலுமை அவருக்கு மட்டும்தான் உள்ளது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.