Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிரியாரின் அதிர்ச்சி...... மோசடிகள் பலவிதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எனது வீட்டில் Tress-passers இருக்கிறார்கள்.... வெளியே அனுப்பு.... பொலீஸ்காரா என்பேன்....

எங்கு இருக்கிறீர்கள்? எப்போதோ வீடு வாடைக்கு விட்டதாக பதிவை படித்த நினைவு இருக்கிறது.

trespassers ஐ அகற்றுவதத்திற்கு கூட court order தேவை.

இந்த விடயத்தில், வாங்கியவர்   trespassers  அல்ல சட்டத்தின் பார்வையில்.

  • Replies 171
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

கொஞ்சநாளில் உண்மை வெளியாள் வரும் இவ்வளவு ரேடியோ டிவி இணையம் எல்லாம் அலறுது வழமைபோல் போலீஸின் அசமந்தமான  பதிலை போட்டு தாக்குகிறார்கள் .

உண்மை வெளிவரும் ஆனால் அதுக்குள் பாவம் பாதிரியாருக்கு யோசிச்சே பாதிச் சீவன் போயிடும்🙁.

பொலிஸ் பாதிரியார் சொன்ன பின்பும் இதை ஒரு ஒரு fraud என்ற கோணத்தில் அணுகாமை தவறுதான்.

ஆனால் legal owner யாரென பார்த்து, பாதிரியாரை வீட்டை விட்டு வெளியேற்றியதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் நான் அறிந்த வரையில், ஒவ்வொரு purchaseற்கு முன்பும் பின்பும், title search கட்டாயம் செய்வார்கள், அப்படி UKயில் செய்வதில்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

வாங்கியவர் தனது மகன் உரிமையாளர் என வெளியே போக சொல்லி, பொலீஸ் வந்து பாதிரியாரை வெளியே அழைத்து போனது.

இண்டைக்கும் பாதிரியார் அந்த வீட்டுக்குள் போக முடியாது. போனால் பொலிஸ் சட்டபடி அவரைத்தான் வெளியேற்ற வேண்டும். This is the advantage of having title in your name and possession under your control.

மேலும் வாங்கியவர் மேல் ஒரு குற்றமும் இல்லை. நாளைக்கு நீங்கள் ஒரு வீட்டை சட்டபூர்வமாக வாங்கியபின் யாரோ ஒரு பாதிரியார் திடீரென வீட்டுக்குள் வந்து பைத்தியம் போல இது என் வீடு என கத்தினால் வீட்டை கொடுப்பீர்களா?

இல்லைதானே. போலிசுக்கு அழைத்து இந்த மனிதரை வெளியேற்றுங்கள் என்றுதானே சொல்வீர்கள்?

அதுதான் சொல்கிறேன் land registry யில் டைட்டில் மாறி விட்டது. ஆகவே புதிய ஓனர்தான் இப்போதைக்கு legal owner. பாதிரியார்தான் வழக்கு போட்டு வீட்டின் டைட்டிலை மீட்க வேண்டும்.

என்னைப் பொறுத்த வரை.... அந்த நிமிடத்தில் இருந்து.... இது பணத்தை.... மோசடி கோஸ்டிக்கு கொடுத்த வங்கியின் பிரச்சணை....

நல்ல கதை.... பாதிரி... யேசுவே ரட்சியும் என்று கிளம்பி இருப்பார்....

நான் பொல்லைத் தூக்கியிருப்பன்..... நான் கையெழுத்து போடவில்லை.....I never sold this to anyone. போங்கடா வெளில..... கள்ளக் கோஸ்டிகளே என்டெல்லோ நின்று இருப்பேன்.....

போலீஸ்காரர்.... என்னை வெளில போகச் சொன்னா...... எழுத்தில தா..... நான் நஸ்டஈடு கேட்பேன் என்பேன்.....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பிரபா சிதம்பரநாதன் said:

மேலும் நான் அறிந்த வரையில், ஒவ்வொரு purchaseற்கு முன்பும் பின்பும், title search கட்டாயம் செய்வார்கள், அப்படி UKயில் செய்வதில்லையா?

செய்வார்கள். ஆனால் இது title fraud அல்ல. பாதிரியாரின் identity ஐ மொத்தமாகவும் சில்லாரையாகவும் களவாடி, அவரே வீட்டை விற்க்கும் தோற்றபாட்டை உருவாக்கியுள்ளார்கள். ஆகவே title search இந்த களவை கண்டு பிடிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பதிப்பவர்களுக்கு, பிரச்சனைக்கு  முகம் கொடுக்காமல் எல்லாம் இனிதே நடைபெற்று உள்ளது, வீட்டை பொறுத்தவரையில். 

நான் ஈடுபட்ட, ஈடுபடும் எல்லாவற்றிலும், விதியாக கூட  இருக்கலாம், பிரச்சனைக்கு முகம் கொடுத்த அடிப்படியிலேயே இங்கு பதிவது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உண்மைதான்.. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

என்னைப் பொறுத்த வரை.... அந்த நிமிடத்தில் இருந்து.... இது பணத்தை.... மோசடி கோஸ்டிக்கு கொடுத்த வங்கியின் பிரச்சணை....

வங்கியின் பிரச்சனை என சுலபமாக முடிக்க முடியாது. ஒரு வீடு விற்கும் போது பணம் சொலிசிட்டரின் client account ஊடாகவே மறு பக்கம் போகும். 

4 minutes ago, Nathamuni said:

நான் பொல்லைத் தூக்கியிருப்பன்..... நான் கையெழுத்து போடவில்லை..... போங்கடா வெளில..... கள்ளக் கோஸ்டிகளே என்டெல்லோ நின்று இருப்பேன்.....

போலீஸ்காரர்.... என்னை வெளில போகச் சொன்னா...... எழுத்தில தா..... நான் நஸ்டஈடு கேட்பேன் என்பேன்.....

குண்டு கட்டாக வெளியே தூக்கி போய், attempted GBH என்று ஒரு வழக்கும் போட்டு அனுப்பி இருப்பார்கள்.

3 minutes ago, Kadancha said:

இங்கே பதிப்பவர்களுக்கு, பிரச்சனைக்கு  முகம் கொடுக்காமல் எல்லாம் இனிதே நடைபெற்று உள்ளது, வீட்டை பொறுத்தவரையில். 

நான் ஈடுபட்ட, ஈடுபடும் எல்லாவற்றிலும், விதியாக கூட  இருக்கலாம், பிரச்சனைக்கு முகம் கொடுத்த அடிப்படியிலேயே இங்கு பதிவது.

நீங்கள் எழுதிய இரெண்டு கருத்தும் 👏🏾👏🏾👏🏾

உங்களுக்கு இருக்கும் title, possession, legal ownership பற்றிய புரிதல் எல்லாருக்கும் இருக்காதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

என்னைப் பொறுத்த வரை.... அந்த நிமிடத்தில் இருந்து.... இது பணத்தை.... மோசடி கோஸ்டிக்கு கொடுத்த வங்கியின் பிரச்சணை...

இதில் வங்கியின் பிரச்சனை இல்லை, எப்படி நீங்கள் வங்கியின் பிரச்சனை என கூறமுடியும்? 

வங்கியின் lending sectionற்கு இந்த விற்பனை deal வந்தால் அதன் அனுகுமுறை என் அனுபவத்தில். 

Consumer lending policies ற்கு அமைவாக விதிகளை மீறாமல் credit check தொடங்கி சகல ஆவணங்கள் சரியாகவும் serviceability வரை சரியாகவும் இருந்தால் வங்கி வீட்டை வாங்குவதற்கான அனுமதியை வழங்கும்.. 

Solicitor transactions கவனித்திருப்பார்கள்..

சரி இனி யாரை கூறப்போகிறீர்கள் நாதமுனி அண்ணா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

வங்கியின் பிரச்சனை என சுலபமாக முடிக்க முடியாது. ஒரு வீடு விற்கும் போது பணம் சொலிசிட்டரின் client account ஊடாகவே மறு பக்கம் போகும். 

குண்டு கட்டாக வெளியே தூக்கி போய், attempted GBH என்று ஒரு வழக்கும் போட்டு அனுப்பி இருப்பார்கள்.

இதென்னப்பா.... உங்கண்ட கதை.... நாளைக்கு பாதிரியாருக்கு சொத்து பத்தோட.... மனிசி இருந்தால்..... இவவுக்கு டிமென்ஷியா..... மடக்கி வைத்திருக்கிறார்....

இந்தா...கலியாணப்பதிவுபத்திரம்... எண்டமனிசி ..... எண்டு தள்ளிக்கொண்டு போகலாம்...... பாதிரி பார்த்துக் கொண்டு நிக்க வேண்டியதுதானோ.....

என்ன சட்டம் இது?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

தவறான உதாராணம் நாதம். ஆனால் அதை விளக்க வெளிகிட்டால் இன்னொரு பக்கம் எடுக்கும்.

சுருங்க சொல்லின் மேலே நான், பிரபா, கடஞ்சா சொன்னதுதான் சட்டத்தின் நிலைப்பாடு. உங்கள் அங்கீகாரம் சட்டத்துக்கு தேவையில்லை.

தெரியும்தானே saying the law is an ass is never a good defence🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இதென்னப்பா.... உங்கண்ட கதை.... நாளைக்கு பாதிரியாருக்கு சொத்து பத்தோட.... மனிசி இருந்தால்..... இவவுக்கு டிமென்ஷியா..... மடக்கி வைத்திருக்கிறார்....

இந்தா...கலியாணப்பதிவுபத்திரம்... எண்டமனிசி ..... எண்டு தள்ளிக்கொண்டு போகலாம்...... பாதிரி பார்த்துக் கொண்டு நிக்க வேண்டியதுதானோ.....

என்ன சட்டம் இது?

நீங்கள் எதை எதை உதாரணமாக கூறவேண்டும் என யோசிக்கவில்லையா????

திருமனமும் வீடு வாங்குவதும் ஒன்றா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதில் வங்கியின் பிரச்சனை இல்லை, எப்படி நீங்கள் வங்கியின் பிரச்சனை என கூறமுடியும்? 

வங்கியின் lending sectionற்கு இந்த விற்பனை deal வந்தால் அதன் அனுகுமுறை என் அனுபவத்தில். 

Consumer lending policies ற்கு அமைவாக விதிகளை மீறாமல் credit check தொடங்கி சகல ஆவணங்கள் சரியாகவும் serviceability வரை சரியாகவும் இருந்தால் வங்கி வீட்டை வாங்குவதற்கான அனுமதியை வழங்கும்.. 

Solicitor transactions கவனித்திருப்பார்கள்..

சரி இனி யாரை கூறப்போகிறீர்கள் நாதமுனி அண்ணா!!

நீஙகள் சட்டம் புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்....

பணத்தை இழந்தது யாரு? பாதிரியார் என விற்ற மோசடி கோஸ்டிக்கு பணத்தை அனுப்பிய வங்கி, சரியா?

இப்போது நிலை என்ன?

பாதிரி தனது என்கிறார்...... அவரது உரிமை உறுதிப்படுத்தப்படும்...... ரைற்றில் மட்டுமல்ல..... அங்கே வாழ்ந்தமை... தமிழில் ஆட்சி உருத்து என்பர்.

வாங்கியவர், பாதிரியார் சம்பந்தபடவில்லை. கையெழுத்து போடவில்லை என்பது உறுதியான பின்னர் தான் மோசடிக்காளானதை உணர்கிறார். இந்நிலையில்..... வங்கிக்கு மாதாந்த கொடுப்பனவு செலுத்தார்..... வங்கிக்கு கொடுத்த தனது டெபோசிற் திரும்பிப் பெற முயல்வார்.

ரைரிலை வைத்துக்கொண்டு..... அந்த வீட்டில் குந்தியிருக்கும் முட்டாள் தனத்தை செய்ய அவரது புரோக்கிராசியார் ஆலோசணை கொடுக்க மாட்டார்கள்.

மேலே சொன்னேன்..... ஒரு ரைற்றில் தொடர்பில் சந்தேகம் எழுந்தால்.... அதன் பதிவு நீதிமன்றில் உறுதியாகும் வரை suspension ஆகும் என்பது சட்டம்.....

சரி..... நீஙகள் ஒரு பொருளை சந்தையில் வாங்குகிறீர்கள்.

அது திருடி விற்கப்பட்டது என்றும், அந்த பொருளை உரிமையாளரும், போலிசாரும் தேடுகிறார் என்று அறிந்தால்..... என்ன செய்வீர்கள்?

ஜயோ நாதமுனி அண்ணா!!

அதுதான் நான் கேட்டேன், வங்கி எப்படி customer identification ஒழுங்காக இல்லாமல் வங்கிக்கணக்கை திறந்தது என்று அதற்கு காரணம் கூறீனீர்கள் இங்கே driver’s license வைத்து திறக்கலாம் என்று so customer profile identification  ✔️

சரி வாங்கியவரின் நிலைக்கு வருவோம், credit check  ✔️ , Application  ✔️ 
NCC policy ✔️, serviceability ✔️ contract of sale verified by the solicitor ✔️, transfer  ✔️ 
title search confirmed the vendor  ✔️

Settlement completed according to the process and policy.. வங்கி பணத்தை கொடுக்கிறது.. 
இதுதான் நடைமுறை.. 

இதில் மோசடி செய்தது பாதிரியாரின் பெயரில் இருந்தவர். இவருக்குத்தான் இனி வங்கியாலும் பிரச்சனை unless தலைமறைவானால் கஷ்டம்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நீஙகள் சட்டம் புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்....

உங்களுடன் விதண்டா வாதம் செய்ய வரவில்லை.

நீங்கள் சட்டம் புரியவில்லை என்று மற்றவர்களை சொல்ல முதல், உங்களுக்கு சட்டத்தில் ஊன்றுதல் இருக்க வேண்டும். 

அனால், இதுவரையும் இருக்கும் பதிவில் இருந்து உங்களுக்கு நுனிப்புல் அளவு கூட சட்டத்தில் மேய்ந்தது  இல்லை என்பது வெளிப்படை.  

mortgage registration, title registration, title registration against mortgage ஐ பற்றி தெரியாமல் மற்றவர்களை சாடுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் நீங்கள் கூறியபடி வங்கிக்குத்தான் பிரச்சனை என்றாலும், இந்த வழக்கின் முடிவைப்பொறுத்து வங்கியின் நிலைப்பாடும் இருக்கும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே common sense உடன் பேசுகிறேன்.....

கோசன் சொல்லும் சட்டம் குறித்து எனக்கு அக்கறையில்லா சாமானியன் என்ற வகையிலும்....

வெம்ளியில் நடந்த தமிழ் கணவன், மணைவி விடயம் முன்னர் விபரமாக ஒருதிரியிளும், இங்கே சுருக்கமாகவும் குறித்தேன்.

அந்த வழக்கில் என்ன நடந்தது என்பதையும்.... கணவர், பொய் மனைவி சம்பந்தப்பட்ட பக்கம் இருந்த புறக்கிறாசியார் தமிழர் என்பதால், அவர் குறித்த வழக்கு தொடர்பில் தந்த விபரம் அடிப்படையில் பாதிரியார் விடயத்தில் என்ன நடக்கும் என்று எனது கருத்தை வைத்தேன்.

இதுக்கு.... சட்ட அறிவு கொண்ட மேதைகள் போல.... நேரத்தினை விரயம் செய்யாமல்....

இரண்டொரு வாரம் காத்திருந்தால்.... சர்யான சட்ட நிலை தெளிவாகும்.....

பெருமாள் சொன்னது போல.... டிவியில், பேப்பரில் விவாதம் நடக்கின்றது.....

இங்கே.... ஓவர் அலம்பறை பண்ணாமல்... காத்திருப்போம்.....

விவாதித்தவர்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் கூற மறந்துவிட்டேன்..

வங்கி ஒரு சாதாரன மனிதன் தொடங்கி வியாபார நிறுவனங்களுக்கு கொடுக்கும் பொழுது சட்டரீதியாக தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வகையிலேயே கடன்களை வழங்கும்.. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்..அதற்குதானே வங்கிகளும் சட்ட ஆலோசகர்களை வைத்து அவர்களுடைய loan agreements சரி security documents வரை தயாரிக்கிறார்கள்..

இந்த மாதிரி fraud அல்லது dispute வரும் பொழுது சட்டரீதியாக அனுகுகிறார்கள்.. 

ஆகையால் வங்கியின் மீது தவறு என்று கூறுவதோ இல்லை வங்கிக்குத்தான் பிரச்சனை என்பதோ சரியானதாக படவில்லை. 

மேலும் பார்ப்போமே இந்த வழக்கில் முடிவை..

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

இந்நிலையில்..... வங்கிக்கு மாதாந்த கொடுப்பனவு செலுத்தார்..... வங்கிக்கு கொடுத்த தனது டெபோசிற் திரும்பிப் பெற முயல்வார்.

படு பிழையான புரிதல். இப்படி ஒருத்தரும் அட்வைஸ் பண்ண மாட்டார்கள். மோசடி வங்கி செய்யவில்லை. பாதிரியாரும் செய்யவில்லை. உனக்கு possession இருக்கு, title இருக்கு நீ வழமை போல் இரு - பாதிரியார் வழக்கு போடட்டும் என்பது தான் வாங்கியவருக்கு சட்ட ஆலோசனையாய் இருக்கும். 

42 minutes ago, Nathamuni said:

மேலே சொன்னேன்..... ஒரு ரைற்றில் தொடர்பில் சந்தேகம் எழுந்தால்.... அதன் பதிவு நீதிமன்றில் உறுதியாகும் வரை suspension ஆகும் என்பது சட்டம்.....

👆🏼 காணி விடயம் இப்படி அணுகப்படும் என ஆதாரம் காட்டவும். 

43 minutes ago, Nathamuni said:

சரி..... நீஙகள் ஒரு பொருளை சந்தையில் வாங்குகிறீர்கள்.

அது திருடி விற்கப்பட்டது என்றும், அந்த பொருளை உரிமையாளரும், போலிசாரும் தேடுகிறார் என்று அறிந்தால்..... என்ன செய்வீர்கள்?

மேலே தெளிவாக கூறி விட்டேன் பொருள் வாங்குவதில் இருந்து நில உரிமை வேறுபட்டது. பொருளை வாங்கியதும் அதை title register பண்ணுவதில்லை. நிலத்தை பண்ணுவோம். இதற்காகத் சட்ட படிப்பின் கடைசி ஆண்டில் land law வை தனியா ஒரு பாடமாக படிப்பிப்பது. ஏனைய contracts இல் இருந்து பெரிதும் வேறு பட்டது காணிச்சட்டம்.

நாதம் திரும்ப திரும்ப ஒரே விசயத்தை எழுத முடியாது. 

போதுமான சட்ட விளக்கம் மேலே கொடுக்கபட்டுள்ளது. நான் மட்டும் அல்ல, பிரபா, கடஞ்சா இருவராலும் கூட.  

அது விளங்குவதும் விளங்காததும் உங்கள் கொடுப்பினையை பொறுத்து🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

படு பிழையான புரிதல். இப்படி ஒருத்தரும் அட்வைஸ் பண்ண மாட்டார்கள். மோசடி வங்கி செய்யவில்லை. பாதிரியாரும் செய்யவில்லை. உனக்கு possession இருக்கு, title இருக்கு நீ வழமை போல் இரு - பாதிரியார் வழக்கு போடட்டும் என்பது தான் வாங்கியவருக்கு சட்ட ஆலோசனையாய் இருக்கும். 

👆🏼 காணி விடயம் இப்படி அணுகப்படும் என ஆதாரம் காட்டவும். 

மேலே தெளிவாக கூறி விட்டேன் பொருள் வாங்குவதில் இருந்து நில உரிமை வேறுபட்டது. பொருளை வாங்கியதும் அதை title register பண்ணுவதில்லை. நிலத்தை பண்ணுவோம். இதற்காகத் சட்ட படிப்பின் கடைசி ஆண்டில் land law வை தனியா ஒரு பாடமாக படிப்பிப்பது. ஏனைய contracts இல் இருந்து பெரிதும் வேறு பட்டது காணிச்சட்டம்.

நாதம் திரும்ப திரும்ப ஒரே விசயத்தை எழுத முடியாது. 

போதுமான சட்ட விளக்கம் மேலே கொடுக்கபட்டுள்ளது. நான் மட்டும் அல்ல, பிரபா, கடஞ்சா இருவராலும் கூட.  

அது விளங்குவதும் விளங்காததும் உங்கள் கொடுப்பினையை பொறுத்து🤣

பார்ப்போம் இந்த வழக்கு முடிவை..... அதுவரை பொறுப்போமே....

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இரண்டொரு வாரம் காத்திருந்தால்.... சர்யான சட்ட நிலை தெளிவாகும்.....

உங்கள் மனதில் பட்டது. நடந்தால், அதாவது 2 கிழமையில் முடிவு, நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

பார்ப்போம் இந்த வழக்கு முடிவை..... அதுவரை பொறுப்போமே....

இங்கே வழக்கு முடிவு எப்படி இருக்கும் என யாரும் எதிர்வு கூறவில்லையே நாதம்.

இப்போதைக்கு வீடும், possession உம், title ம் வாங்கியவரதே என்றே கூறப்பட்டது.

அதனால் இப்போ பாதிரியார் வீட்டுக்குள் போக முடியாது.

Fraud investigation நடந்து, அதன் முடிவில் சமரச தீர்வோ, நீதி மன்ற தீர்ப்போ யாருக்கு வீடு, யாருக்கு நட்ட ஈடு, யார் நட்ட ஈடு வழங்க வேண்டும் என தீர்த்த பின், அதனடிப்படையில் இறுதி முடிவு ஒருக்கும்.

இந்த முடிவை எடுக்க பத்திரிகை செய்தியை மட்டும் வாசிக்கும் எம்மால் முடியாது. அதுக்கு அதிக தரவுகள் தேவைப்படும். அது வழக்கின், விசாரணையொன் போதே வெளிவரும்.

பிகு

சட்டக் கல்லூரியில் மழைக்கு ஒதுங்கியவர்கள் கூட - ஒரு வழக்கு இப்படிதான் முடியும் என எதிர்வு கூற மாட்டார்கள். Never pre judge a case. It’s a cardinal rule.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இன்னம் ஒரு விடயத்தையும் சொல்லி முடிக்கிறேன்...... மோசடியாளர்களிடம் வாங்கியவர்கள் அதே ஆதனத்தினுள் தொடர்ந்து இருப்பது, பொலீஸ் அஙகே ஒரு கிரிமினல் வேலை நடந்துள்ளது என கண்டு கொள்ளாமல், சிவில் விடயம் என நழுவியதால் என்கிறார்கள்.

இறுதியில் பிபிசி களத்தில் இறங்கிய பின்னர் கிரிமினல் கேசாக எடுத்து உள்ளனர்.

அநேகமாக இரு பகுதியும்.... முக்கியாக பாதிரியார், பொலீசார் மீது நஸ்டஈடு கோருவர் என்று நிணைக்கிறேன்.

எனது கரிசனை...... பலர் இணைய வெளியில் போட்ட பின்னாட்டம் போல... இது ஒரு ஆபத்தான போக்கு.....

போலிசார், ஆரம்பத்தில் இருந்து கிரிமினல் கேசாக நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

ஆக.... வழக்கம் போல.... ஒரு கிரிமினல் கேஸ் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பார்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இதனுடன் தொடர்பு பட்ட  ஒன்று, ஓரளவு சட்டத்தை தெரிந்து வைத்து இருங்கள். மேற்கு  நாட்டில் அது அவசியம். 

சட்டத்தையும், court எவ்வாறு அந்த சட்டத்தை பாக்கிறது என்பது வேறு வேறானவை.

ஏனெனில், court இடம் எப்போதுமே சட்டத்தை விளக்கமளிக்கவும், விலத்தவும்  (discretion) இடம் கொடுக்கிறது சட்டம்.

இதனால் தான், மிகவும் ஒத்த தன்மை உள்ள இரு வழக்குகள் வேறு வேறு முடிவில் வந்து  நிற்பது; court இதை balance of probability என்று சொல்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இன்னம் ஒரு விடயத்தையும் சொல்லி முடிக்கிறேன்...... மோசடியாளர்களிடம் வாங்கியவர்கள் அதே ஆதனத்தினுள் தொடர்ந்து இருப்பது, பொலீஸ் அஙகே ஒரு கிரிமினல் வேலை நடந்துள்ளது என கண்டு கொள்ளாமல், சிவில் விடயம் என நழுவியதால் என்கிறார்கள்.

இறுதியில் பிபிசி களத்தில் இறங்கிய பின்னர் கிரிமினல் கேசாக எடுத்து உள்ளனர்.

அநேகமாக இரு பகுதியும்.... முக்கியாக பாதிரியார், பொலீசார் மீது நஸ்டஈடு கோருவர் என்று நிணைக்கிறேன்.

ஆக.... வழக்கம் போல.... ஒரு கிரிமினல் கேஸ் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பார்கலாம்.

இந்த விடயம் தனியே சிவிலும் இல்லை, தனியே கிரிமினலும் இல்லை. காணி தகறாறு சிவில் ஆனால் fraud கிரிமினல்.

முன்பே சொன்னதுதான்,
Buyer கூட்டு களவாணி இல்லை என பொலீஸ் முடிவு செய்தால் - அதன் பின் buyerக்கும் பாதிரிக்கும், land registry க்கும், சொலிசிட்டர்சுக்கும், வங்கிக்கும் இடையே இது ஒரு சிவில் மேட்டர்.

Identify fraud இல் buyer க்கும் பங்கு இருந்தால் இந்த வீடு proceeds of crime. சட்டபடி பாதிரிக்கு மீளும்.

உங்களுக்கு சட்டம் கொஞ்சம் அலர்ஜி போல தெரிகிறது - ஆனாலும் சொல்கிறேன் - நஸ்ட ஈடு எடுக்க - நட்டம் இருக்க வேண்டும். தாமதமாகவேணும் பொலிஸ் விசாரிக்கிறது, பொலிஸ்சுக்கு பாதிரியார் போக முதலே நட்டம் ஏற்பட்டு விட்டது. பொலீஸ் விசாரணையை தாமதித்ததால் வந்த நட்டம் என்ன? அப்படி இருந்தாலும் அது சொற்பகாமகவே இருக்கும் 

.

13 minutes ago, Kadancha said:

உங்கள் மனதில் பட்டது. நடந்தால், அதாவது 2 கிழமையில் முடிவு, நல்லது.

அப்படி 2 கிழமையில் முடிவு வராட்டில் common sense approach ஐயும் எடுக்கலாம். அதான் good-faith buyer ஐ பொல்லாங்கட்டையால் நாலு சாத்து சாத்துவது🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.