Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமண பந்தத்தில் இணைந்தார் மலாலா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமண பந்தத்தில் இணைந்தார் மலாலா

spacer.png

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாயின் திருமணம் பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து முடிந்துள்ளது.

அசர் மாலிக் என்பவரை மலாலா யூசப்சாய் திருமணம் முடித்துள்ளார். தங்கள் திருமண நாள் தமது வாழ்வின் ஒரு மதிப்புமிக்க நாள் என்று 24 வயதாகும் மலாலா யூசப்சாய் கூறியுள்ளார்.

"எங்களது குடும்பத்தினர் கலந்து கொண்ட சிறிய திருமண நிகழ்வில் அசரும் நானும் வாழ்விணையர்களாகத் திருமணம் செய்து கொண்டோம்," என்று செவ்வாய்க்கிழமை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் மலாலா.

இந்தப் பயணத்தில் ஒன்றாகப் பயணிப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

spacer.png

spacer.png

பாகிஸ்­தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய் இளம் வயதிலேயே பெண்களின் கல்விக்காகவும், தீவிரவாத ஒடுக்கத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராடியவர்.

பாகிஸ்தானின் ஸ்வெத் வேலியில் பிறந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.

மலாலா கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் பிரிட்­டனில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு உயிர் தப்­பினார். மலாலா சிறு­மி­களின் முன்­னேற்­றத்­துக்­காகக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/116916

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காலம் எவ்வளவு வேகமாய் ஓடுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

அசார் பாகிஸ்தான் கிரிகெட் வாரியத்தில் பொறுப்பான பதவியில் உள்ளாராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/11/2021 at 11:13, கிருபன் said:

மலாலா கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் பிரிட்­டனில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு உயிர் தப்­பினார். மலாலா சிறு­மி­களின் முன்­னேற்­றத்­துக்­காகக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ இப்ப என்ன செய்யிறா? 😁

1 hour ago, goshan_che said:

அசார் பாகிஸ்தான் கிரிகெட் வாரியத்தில் பொறுப்பான பதவியில் உள்ளாராம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லறத்தில் சிறக்க வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எளிமையாக திருமணம் செய்துள்ளார். வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இவ இப்ப என்ன செய்யிறா? 😁

 

 

அப்பிள் ரீவியில் புரோக்கிராம்கள் செய்கின்றாராம்..

Today, Apple is unveiling a multiyear programming partnership with women’s rights activist and youngest Nobel laureate Malala Yousafzai. Building on Malala’s longstanding relationship with Apple, her original programming for Apple TV+ will span dramas, comedies, documentaries, animation, and children’s series, and draw on her ability to inspire people around the world.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

அப்பிள் ரீவியில் புரோக்கிராம்கள் செய்கின்றாராம்..

 மலாலாவை மாதிரி பல லட்சம் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் நோபல் பரிசு கொடுத்து அப்பிள் போன்ற நிறுவனங்கள்  வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும்.

என்ன நான் சொல்லுறது சரிதானே? 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 மலாலாவை மாதிரி பல லட்சம் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் நோபல் பரிசு கொடுத்து அப்பிள் போன்ற நிறுவனங்கள்  வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும்.

என்ன நான் சொல்லுறது சரிதானே? 😁

எல்லோரும் மலாலாவைப் போல அக்கிரமங்களை இளவயதிலேயே தட்டிக்கேட்க முனைவதில்லை. ஏன் வம்பு என்று பிரச்சினைகளில் இருந்து ஓடித்தப்பி ஒதுங்கத்தான் பார்ப்பார்கள். அதனால்தான் நோபல் பரிசும், அப்பிள் நிறுவன வாய்ப்பும் தகுதியானவர்களுக்கே கிடைக்கின்றது. வெறும் தோட்டா பாய்ந்த உடம்பு மட்டும் போதாது!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.