Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலுவை சம்பளத்துடன் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம்

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் பணியில் இல்லாது விடுமுறையில் இருந்த காலத்துக்கான சம்பள நிலுவையையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு  உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து சுமத்தப் பட்டு, இங்கே யாழிலும் "இவர் செய்து தான் இருப்பார்" என்று பலர் விவாதித்தது நினைவிருக்கிறது.

இவரது அரசியல் எமக்கு பாதகமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக மருத்துவ, விஞ்ஞான ரீதியில் சாத்தியமேயில்லாத செயல்களைச் செய்தாரென்று வாதிட்டவர்களுக்கு அவர்களது அறியாமை இப்போது விளங்கியிருக்குமென நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

அறியாமை இப்போது விளங்கியிருக்குமென நம்புகிறேன்.

மனித குலத்துக்கே ஒவ்வாத பெரும் கொலைகளையும், களவு, பாலியல் வல்லுறவுகளையும் மேற்கொண்டு பிடிபட்டோரை, மிருகங்களைவிடவும் கொடூரமானவர்களாக நாங்கள் எண்ணியிருந்த வேளையில்.... அவர்களை, அரச தலைவர்களும், அவர்கள் சார்பான நீதிபதிகளும் விடுதலை செய்தபோதுதான்! எங்கள் அறியாமையை நாங்களும் விளங்கிக்கொண்டோம்.!!🧐  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

திரிமாறி எழுதி விட்டீர்கள் போல! இதற்கும் நான் குறிப்பிட்ட அறியாமைக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. (அல்லது சிங்களவரைத் திட்டினால் ஷாபியை குற்றம் சாட்டிய நம் அறியாமையை ஒளித்து வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டமோ தெரியாது!😂)

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2021 at 15:19, பிழம்பு said:

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

On 16/12/2021 at 17:32, Justin said:

இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு  உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து சுமத்தப் பட்டு, இங்கே யாழிலும் "இவர் செய்து தான் இருப்பார்" என்று பலர் விவாதித்தது நினைவிருக்கிறது.

இவரது அரசியல் எமக்கு பாதகமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக மருத்துவ, விஞ்ஞான ரீதியில் சாத்தியமேயில்லாத செயல்களைச் செய்தாரென்று வாதிட்டவர்களுக்கு அவர்களது அறியாமை இப்போது விளங்கியிருக்குமென நம்புகிறேன்.

6 hours ago, Justin said:

திரிமாறி எழுதி விட்டீர்கள் போல! இதற்கும் நான் குறிப்பிட்ட அறியாமைக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.

தொர்புடைய இடுகைகள்போல் தெரிந்ததால் என் கருத்தை இட்டேன். தவறானால் மன்னிக்கவும்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2021 at 15:13, Paanch said:

தொர்புடைய இடுகைகள்போல் தெரிந்ததால் என் கருத்தை இட்டேன். தவறானால் மன்னிக்கவும்.🙏

செய்ததாகச் சொல்லப் பட்ட குற்றமே மருத்துவ ரீதியில் சாத்தியமில்லாதது என்பதை இன்னும் நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை! அப்ப அறியாமைக்கு ஆயுள் நீளமென்று எடுத்துக் கொள்கிறேன்!😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

செய்ததாகச் சொல்லப் பட்ட குற்றமே மருத்துவ ரீதியில் சாத்தியமில்லாதது

வைத்தியர் அதனை குறித்த விதமும், மருந்தினை ஏற்றியவரின் கவனக் குறைவும் உயிரிழப்புக்கான காரணமாக அமைத்திருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.மனித உயிரானது மிகவும் பெறுமதியானது, அதனைப் பாதுகாப்பது கட்டாயமானது. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது, குறித்த வைத்தியரும் சட்டத்தரணி வாயிலாக நீதிமன்றில் ஆஜர் ஆகி இருப்பதாக அறிய முடிகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.  அது மருத்துவராக இருந்தாலும் சரி, அரசியல் வாதியாக இருந்தாலும் சரி சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்கள்தான்.

http://www.vtnnews.com/

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

என்ன பேசுகிறீர்கள் என விளங்கவில்லை! 

வைத்தியர் சாபி சட்ட விரோத கருத்தடை செய்தார் என்பது தான் வதந்தி. அது தான் பொய்யென நிரூபணமாகியிருக்கிறது. நீங்கள் நோயாளி இறந்தார் என்கிறீர்கள்? இது நிச்சயமாக வேறு கேசோடு குழம்பியிருக்கிறீர்கள் - மேலே செய்தியைப் பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2021 at 14:19, பிழம்பு said:

நிலுவை சம்பளத்துடன் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம்

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் பணியில் இல்லாது விடுமுறையில் இருந்த காலத்துக்கான சம்பள நிலுவையையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

சொறீலங்கா தற்போதைய சுகாதார அமைச்சின் முடிவு தான் இது.

அங்கால.. பவுதீன் குற்றமற்றவராம்.. இங்கால இவர் பணியில் அமர்வு.

குண்டு வெடிச்சதே கோத்தாவின் தேவைக்குத் தானே. 

இந்த டாக்குத்தரை சொறீலங்கா மருத்துவத்துறை சுத்தமுன்னு சொன்னதாகத் தெரியவில்லை..???!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

இந்த டாக்குத்தரை சொறீலங்கா மருத்துவத்துறை சுத்தமுன்னு சொன்னதாகத் தெரியவில்லை..???!

தவறான தகவல்.  நிரந்தரக் கருத்தடையை இவர் செய்யவில்லை, செய்திருக்கவும் வாய்ப்புகள் இல்லை என்று இவரோடு பணி செய்த பல சத்திர சிகிச்சை அறைத் தாதிகள் சாட்சி சொல்லியிருந்தனர்.

நோயாளிக்குத் தெரியாமல் சத்திர சிகிச்சை செய்து மலடாக்குவது சாத்தியமென்று நீங்களும் நம்புகிறீர்கள் போல!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

நோயாளிக்குத் தெரியாமல் சத்திர சிகிச்சை செய்து மலடாக்குவது சாத்தியமென்று நீங்களும் நம்புகிறீர்கள் போல!

சிஸ்ட் (cyst) என்று அறுத்து விட்டிருந்தால்.. நோயாளிக்கு தெரியாவா போகுது.. அந்தளவுக்கு நோயாளிகளின் அறிவுமட்டத்தை உயர்த்த.. சொறீலங்கா வைத்தியவர்கள் விரும்புவார்களா..?! அப்படி உயர்த்திட்டால்.. அவைட அந்தஸ்து என்னாவுறது..?!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

சிஸ்ட் (cyst) என்று அறுத்து விட்டிருந்தால்.. நோயாளிக்கு தெரியாவா போகுது.. அந்தளவுக்கு நோயாளிகளின் அறிவுமட்டத்தை உயர்த்த.. சொறீலங்கா வைத்தியவர்கள் விரும்புவார்களா..?! அப்படி உயர்த்திட்டால்.. அவைட அந்தஸ்து என்னாவுறது..?!

நெடுக்கர், ஒரிஜினல் திரியில் எல்லா சாத்தியங்களையும் பேசியாகி விட்டது. 

 "சூலகத்தை எடுத்து விட்டார்" என்று முறைப்பாடு செய்த சிங்களப் பெண்கள் ஆயிரம் பேருக்கு மேல்! பலரை வரவழைத்து அல்ட்ரா சவுன்ட் செய்தால் சூலகம் இருக்கிறது. இந்த நிலையில் தான் சத்திர சிகிச்சை அறையில் அவரோடு வேலை செய்த தாதிகள் அப்படி அவர் எதுவும் அறுக்கவில்லை என்று சாட்சியம் கூறியிருந்தனர். இலங்கை போன்ற ஒரு நாட்டில் பல விடயங்கள் அப்படி இப்படித் தான் - ஆனால் மருத்துவ சிகிச்சைத் துறை இன்னும் கீழ் நிலைக்குப் போகவில்லை. 

உங்கள் போல உயிரியல், மருத்துவம் தெரிந்த சிலர் கூட படித்த விஞ்ஞானத்தை மறந்து விட்டு "அப்படி ஊசி போட்டிருக்கலாம், இப்படி அறுத்திருக்கலாம்" என்று ஒரு முஸ்லிம் என்பதற்காகவே சும்மா அவித்துக் கொண்டிருந்தார்கள். இப்ப எங்க கொண்டு போய் முகத்தை வைத்திருக்கிறார்களோ அறியேன்!😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

உங்கள் போல உயிரியல், மருத்துவம் தெரிந்த சிலர் கூட படித்த விஞ்ஞானத்தை மறந்து விட்டு "அப்படி ஊசி போட்டிருக்கலாம், இப்படி அறுத்திருக்கலாம்" என்று ஒரு முஸ்லிம் என்பதற்காகவே சும்மா அவித்துக் கொண்டிருந்தார்கள். இப்ப எங்க கொண்டு போய் முகத்தை வைத்திருக்கிறார்களோ அறியேன்!

இவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஒரு தாதி சாட்சியம் சொல்லி.. அதன் அடிப்படையில்.. இவர் மீள பதவியில் அமர்த்தப்படுவாராயின் அது தவறான செயலாகும்.

இலங்கை மருத்துவர் சங்கம் உட்பட பொறுப்பு வாய்ந்த மருத்துவ அமைப்புக்கள் முழு விசாரணைக்கும் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சார்ந்து எல்லா ஆதாரங்களும் சரியாக ஆராயப்பட்டு அதனடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதே சமூகத்துக்கு நல்லதாகும்.

மற்றும்படி.. கிழக்கு மாகாணத்திலும் உணவகம் ஒன்றில்.. தமிழ் பெண்களுக்கு கருத்தடை/கருக்கலைப்பு மாத்திரை கலந்த உணவு பரிமாறப்பட்டதாக செய்திகள் உலா வந்திருந்தன. அதேபோல்.. மலையகத்தில்.

எனவே இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்தவர்களை எள்ளி நகையாடிக் கொண்டு இருக்காமல்.... குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது சரியான நடுநிலை மற்றும் துறைசார் நிபுணத்துவ விசாரணைகளின் பகுப்பாய்வுகளின் பின் தான் திடமான முடிவுகள் எடுக்கப்பட்டு மீள் நியமனம் வழங்கப்பட வேண்டும். இன்றேல்.. அரசியல் காரணங்களுக்காக எடுப்படும் முடிவுகள்.. தவறான நிகழ்வுகள் தொடர்வதையே தூண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

இவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஒரு தாதி சாட்சியம் சொல்லி.. அதன் அடிப்படையில்.. இவர் மீள பதவியில் அமர்த்தப்படுவாராயின் அது தவறான செயலாகும்.

இலங்கை மருத்துவர் சங்கம் உட்பட பொறுப்பு வாய்ந்த மருத்துவ அமைப்புக்கள் முழு விசாரணைக்கும் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சார்ந்து எல்லா ஆதாரங்களும் சரியாக ஆராயப்பட்டு அதனடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதே சமூகத்துக்கு நல்லதாகும்.

மற்றும்படி.. கிழக்கு மாகாணத்திலும் உணவகம் ஒன்றில்.. தமிழ் பெண்களுக்கு கருத்தடை மாத்திர கலந்த உணவு பரிமாறப்பட்டதாக செய்திகள் உலா வந்திருந்தன. அதேபோல்.. மலையகத்தில்.

எனவே இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்தவர்களை எள்ளி நகையாடிக் கொண்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது சரியான நடுநிலை மற்றும் துறைசார் நிபுணத்துவ விசாரணைகளின் பகுப்பாய்வுகளின் பின் தான் திடமான முடிவுகள் எடுக்கப்பட்டு மீள் நியமனம் வழங்கப்பட வேண்டும். இன்றேல்.. அரசியல் காரணங்களுக்காக எடுப்படும் முடிவுகள்.. தவறான நிகழ்வுகள் தொடர்வதையே தூண்டும். 

மன்னிக்கவும் நெடுக்கர்: ஒரு தாதி அல்ல! அவரோடு வேலை செய்த பல தாதிகள். இலங்கை மருத்துவர் சங்கம் மூச்சே விடவில்லை. ஏன் தெரியுமா? நீங்கள் எப்படி மருத்துவ அறிவை ஒரு பக்கம் வைத்து விட்டு இவரை முஸ்லிம் என்று சந்தேகத்துடன் பார்க்கிறீர்களோ , அதே போலவே அவர்களும் பார்த்தார்கள்.

நீங்கள் சொன்ன ஆய்வுகளெல்லாம் செய்தார்கள். நிரந்தரமாக கருத்தடை செய்ய சூலகத்தை எடுக்க வேண்டும் அல்லது IUD வைக்க வேண்டும்! இவையிரண்டையும் செய்யவில்லை என்று கண்ட பின்னரே இந்த முடிவு.

இப்ப பாருங்கள், "உணவில் முஸ்லிம்கள் கருத்தடை  மாத்திரை கலந்தார்கள்" என்ற வதந்தியை செய்தி என்று நீங்களே நம்புகிறீர்கள் என்றால் பாமர மக்களின் நிலை என்ன? இந்த வதந்தி தான் இவரது வழக்கு! 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

இப்ப பாருங்கள், "உணவில் முஸ்லிம்கள் கருத்தடை  மாத்திரை கலந்தார்கள்" என்ற வதந்தியை செய்தி என்று நீங்களே நம்புகிறீர்கள் என்றால் பாமர மக்களின் நிலை என்ன? இந்த வதந்தி தான் இவரது வழக்கு! 

அவை செய்திகள். வதந்திகள் என்று ஒரேயடியா மறுத்துக் கடந்து சென்றுவிட முடியாது. ஊடகங்கள் ஆதாரமின்றி செய்திகள் சொல்லி இருக்குமா என்ற கேள்வியை இலகுவாக மறைத்து விடுகிறீர்கள். 

மேலும் இவர் மீதான வழக்கு சட்ட ரீதியாக அணுகப்பட்டிருக்க வேண்டும். அதேவேளை இவர் மீதான துறைசார் விதி மீறல் குற்றச்சாட்டுக்கள்.. துறைசார் அமைப்புக்கள் மூலம் விசாரிக்கப்பட்டு இவர் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர் ஆதார பூர்வமாக விடுவிக்கப்பட்டிருக்கவும் வேண்டும்.

ஆனால்.. இவர் மீதான மீள் நியமனத்தில் அப்படி எதுவும் தெளிவாக வரையறுத்துக் கூறப்படவில்லை. அதனால்.. இந்த மீள் நியமனமும் சந்தேகத்தையே உண்டு பண்ணுகிறது. 

இவர் முஸ்லிம் என்பதற்காக அல்ல.. மருத்துவத் துறையினர் தமது பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்பதே இங்கு முதன்மையானது. அது சமூக நலன் சார்ந்த விடயமாகும். இதில் முஸ்லிம் தமிழ் சிங்களப் பாகுபாடு அவசியமில்லை. அதைக் காட்டி தவறுகளை செய்துவிட்டு தப்பிக்க முயலக் கூடாது. 

On 16/12/2021 at 14:19, பிழம்பு said:

இன்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் சந்தேகத்தை அதிக்கப்படுத்துகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

அவை செய்திகள். வதந்திகள் என்று ஒரேயடியா மறுத்துக் கடந்து சென்றுவிட முடியாது. ஊடகங்கள் ஆதாரமின்றி செய்திகள் சொல்லி இருக்குமா என்ற கேள்வியை இலகுவாக மறைத்து விடுகிறீர்கள். 

மேலும் இவர் மீதான வழக்கு சட்ட ரீதியாக அணுகப்பட்டிருக்க வேண்டும். அதேவேளை இவர் மீதான துறைசார் விதி மீறல் குற்றச்சாட்டுக்கள்.. துறைசார் அமைப்புக்கள் மூலம் விசாரிக்கப்பட்டு இவர் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர் ஆதார பூர்வமாக விடுவிக்கப்பட்டிருக்கவும் வேண்டும்.

ஆனால்.. இவர் மீதான மீள் நியமனத்தில் அப்படி எதுவும் தெளிவாக வரையறுத்துக் கூறப்படவில்லை. அதனால்.. இந்த மீள் நியமனமும் சந்தேகத்தையே உண்டு பண்ணுகிறது. 

இவர் முஸ்லிம் என்பதற்காக அல்ல.. மருத்துவத் துறையினர் தமது பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்பதே இங்கு முதன்மையானது. அது சமூக நலன் சார்ந்த விடயமாகும். இதில் முஸ்லிம் தமிழ் சிங்களப் பாகுபாடு அவசியமில்லை. அதைக் காட்டி தவறுகளை செய்துவிட்டு தப்பிக்க முயலக் கூடாது. 

இதுதான் சந்தேகத்தை அதிக்கப்படுத்துகிறது. 

முகத்தில மூக்கு இருக்கிற ஒருவர் போய் பொலிசில் "டாக்டர் என் மூக்கை அகற்றி விட்டார்" என்று முறைப்பாடு செய்தால் அது கோர்ட்டுக்குப் போகாது நெடுக்கர்!😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

என்ன பேசுகிறீர்கள் என விளங்கவில்லை! 

வைத்தியர் சாபி சட்ட விரோத கருத்தடை செய்தார் என்பது தான் வதந்தி. அது தான் பொய்யென நிரூபணமாகியிருக்கிறது. நீங்கள் நோயாளி இறந்தார் என்கிறீர்கள்? இது நிச்சயமாக வேறு கேசோடு குழம்பியிருக்கிறீர்கள் - மேலே செய்தியைப் பாருங்கள்!

வைத்தியர்கள் தவறே செய்ததில்லை என்ற உங்கள் வாதம் புல்லரிக்கிறது.

குற்றவாளிகள் எனக்கண்டு தண்டனை கொடுக்கப்பட்டபின்பு, கோத்தபாய அரசும், அரசின் நீதிமன்றங்களும் அவை வதந்திகள் என்று கண்டுதான் பலரை விடுதலை செய்துள்ளனவா? குற்றவாளிகள் எனக் காணப்பட்ட அத்தனைபேரும்  உங்கள் வாதப்படி குற்றவாளிகள் அல்ல எனக் கொள்ளலாமா?? வைத்தியர் சாபி செய்தகுற்றத்தை அலசி ஆராயாமலே தண்டனை கொடுத்தார்களா???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

😂பாஞ், சாபிக்கு

1) எந்த நீதிமன்றில்

2) எப்போது குற்றம் நிரூபிக்கப் பட்டு,

3) என்ன தண்டனை வழங்கப் பட்டது

என்று தகவலளை இங்கே பதியுங்கள்: மேற்கொண்டு பேசலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2021 at 15:25, Justin said:

😂பாஞ், சாபிக்கு

1) எந்த நீதிமன்றில்

2) எப்போது குற்றம் நிரூபிக்கப் பட்டு,

3) என்ன தண்டனை வழங்கப் பட்டது

என்று தகவலளை இங்கே பதியுங்கள்: மேற்கொண்டு பேசலாம்!

கடந்த மே மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இரு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு குருணாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

thinakaran.lk

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கடந்த மே மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இரு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு குருணாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

thinakaran.lk

நீங்கள் சொன்னது போல நீதிமன்றில் தண்டனை வழங்கப்படவில்லையென்பது தெரிகிறதா இப்போது?

விளக்க மறியல் என்பது சிறைத்தண்டனை தான் என்று வாதிட மாட்டீர்களென நம்புகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதை குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டார்.. என்று மாத்திறாங்கப்பா யாழ் களத்தில். ஒருவேளை யாழில் இந்த கள்ளக்கருத்தடை குற்றச்சாட்டுள்ள.. டாக்குத்தருக்கு நெருங்கிய நண்பர்கள் இருக்கினமோ என்னமோ..?!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதை குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டார்.. என்று மாத்திறாங்கப்பா யாழ் களத்தில். ஒருவேளை யாழில் இந்த கள்ளக்கருத்தடை குற்றச்சாட்டுள்ள.. டாக்குத்தருக்கு நெருங்கிய நண்பர்கள் இருக்கினமோ என்னமோ..?!

பிரபல கருத்தடை  வைத்தியர் சிஹாப்தீனுக்கு… சிலர்,   வெள்ளை அடிக்கிறதை பார்த்தால்…

இரண்டு பேரும்…. இணை பிரியாத நண்பர்கள் போலுள்ளது. 😁 😂 🤣

ஹ்ம்ம்ம்ம்…. நடக்கட்டும்.  🤣🤣🤣🤣🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

நீங்கள் சொன்னது போல நீதிமன்றில் தண்டனை வழங்கப்படவில்லையென்பது தெரிகிறதா இப்போது?

விளக்க மறியல் என்பது சிறைத்தண்டனை தான் என்று வாதிட மாட்டீர்களென நம்புகிறேன்!

சூதும் வாதும் வேதனைசெய்யும் என்று படித்ததால் நான் அதிகமாக வாதிட விரும்புவதில்லை ஐயா🙏

ஆனால் இந்த விக்கிப்பீடியாவை (https://ta.wikipedia.org/) என்ன செய்வது👇🤔

நீதிமன்றக் காவல் அல்லது விளக்க மறியல், (Remand (detention)) ஒரு குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரால் காவல் துறையின் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை நீதிமன்றத்தில் போதிய ஆதாரத்துடன் எடுத்துரைத்தால், காவல் துறையின் விசாரணை முடியும் வரையோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கு துவங்கும் வரையோ அல்லது வழக்கு முடியும் வரையோ குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தின் ஆணையின் பேரில் சிறையில் அடைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.