Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

43 ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளுடன் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

43 ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளுடன் கைது!

December 19, 2021

spacer.png

 

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த  கடற்படையினர் 43 மீனவர்களை கைது செய்துள்ள அதே வேளை 6 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்கள் பயணித்த படகுகளும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2021/170654

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

43 பேரின் விடுதலையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

 

 

 

மீனவர்கள்  நேற்று சுமார் 9 மணியளவில் நெடுந்தீவுக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியியல் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர்  மீன்பிடிக்க சென்ற சக்தி, பிரபு, காளிமுத்து, குமார் உள்ளிட்ட 43 மீனவர்களை படகுடன்  கைது செய்து யாழ்ப்பாண மாவட்ட மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் மீனவர்களுக்கு பரிசோதனை செய்து யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

இதனை கண்டித்து இன்று ராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள  மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள  43 ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்தனர்.

மேலும் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவ குடும்பத்தினருடன்  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

மீனவர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தால் சுமார் 800க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுக் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் 50 ஆயிரம் மீனவர்களும் ஒரு இலட்சம் மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.

https://athavannews.com/2021/1257618

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு என்றால் கூட ஓகே.. நெடுந்தீவு எங்கே இருக்கு.?

சிங்கள கடற்படை அட்டகாசமாம் அத்து மீறலாம் கலைஞர் ரீ.வி யில் செய்தி போடுகினம் 

ஒரு நியாய தர்மம் வேண்டாமா.😢

268287676_5345137532215078_6489032907143

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் 55 பேர் கைது: நடவடிக்கை எடுக்ககோரி தமிழக முதல்வர் கடிதம்; இலங்கை அமைச்சர் முன் வைத்த கோரிக்கை

  • பிரபுராவ் ஆனந்த் மற்றும் ரஞ்ஜன் அருண் பிரசாத் (இலங்கையிலிருந்து)
  • பிபிசி தமிழுக்காக
11 நிமிடங்களுக்கு முன்னர்
 

படகுகள்

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்களையும், அவர்களது 8 மீன்பிடி விசைப்படகுகளையும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 55 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இலங்கைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடிக்க சென்ற 55 தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பவில்லை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

மீனவர்கள் தனுஷ்கோடிக்கும், நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் கருப்பையா, தென்னரசு, லியோன், ஆல்டன், பீட்டர், உள்ளிட்டோருக்கு சொந்தமான ஆறு விசைப்படகுகளையும் அதில் இருந்த கோபி, சக்தி, பிரபு, குட்வின், கருமலையான், ராஜ் உள்ளிட்ட 43 மீனவர்களை படகுடன், எல்லைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள் மீனவர்களை கைது செய்து இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

மீனவர்களை அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து பின் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

தமிழக மீனவர்களுக்கு சிறைக்காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஒப்படைக்கப்பட்ட மீனவர்களை இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் ஊர்காவல்துறை நீதிமன்ற வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை வரும் 31-ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கொரோனா மருந்து

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அருளனந்தம் மற்றும் சவரிராஜ் ஆகியோரது இரண்டு விசைப்படகுகளில் சென்ற சிலுவை, இன்னாசி, மைக்கேல், ராமநாதன், ஜாக்சன், அந்தோணி உள்ளிட்ட 12 மீனவர்களையும் அவர்கள் சென்ற படகையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் தாழ்வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 55 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததையடுத்து ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலக வளாகத்தில் விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள் மற்றும் மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அந்த கூட்டத்தில்; சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடு போவதாகவும், திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 50 ஆயிரம் மீனவர்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

"இந்தாண்டு மீனவர்களுக்கு கருப்பு கிறிஸ்மஸ்"

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா, "நேற்று மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் கண்டனத்திற்குறியது. தொடர்ச்சியாக இந்த பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கை நிகழ்வாக உள்ளது. கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வர இருக்கும் நேரத்தில் படகையும், மீனவர்களையும் கைது செய்து அழைத்து சென்றால் மீனவர்களின் குடும்பங்கள் பண்டிகையை எப்படி கொண்டாட முடியும். மீனவர்கள் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை கருப்பு தினமாக தான் கொண்டாட முடியும். துரித நடவடிக்கை எடுத்து படகுடன் மீனவர்களை விடுதலை செய்து தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இலங்கை கடற்படையின் இந்த தொடர் பிரச்னையால் மீன் பிடி தொழில் அழியும் நிலை ஏற்படும். எனவே உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்," என்றார்.

தந்தை மகன் இருவர் கைது

இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்லப்பட்டு இலங்கை சிறையில் வாடும் மீனவர் காளிமுத்துவின் மனைவி செல்லம்மாள் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எனது கணவருக்கு 65 வயது ஆகிறது. உடல் முடியாதவர் அவரால் உழைக்க முடியாத சூழலில் என்னுடைய மூத்த மகனுடன் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தினசரி எனது கணவர் மற்றும் மகனின் சம்பாத்தியத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த என் குடும்பம் இருவரும் சிறையில் இருந்து திரும்பி வரும் வரை சாப்பாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் என தெரியவில்லை," என்றா.

விரைவில் மீனவர்கள் சொந்த ஊர் அழைத்து வர ஏற்பாடு

ஒரே நாளில் 55 மீனவர்கள் கைது செய்து இலங்கைக்கு பிடித்து சென்றது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். நாளை டெல்லி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உடனடியாக இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர அனைத்து ஏற்படுகளையும் முதலமைச்சர் துரிதப்படுத்துவார். முதலமைச்சர் மத்திய அரசை தொடர்பு கொண்டு துறை சார்ந்த அதிகாரிகள் மூலம்; இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீடட்பது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளார்,

வறுமையில் வாடும் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து நிவாரணம் வழங்கப்படும். மேலும் மீன் வளத்துறையின் அதிகாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து முழு உதவிகளும் செய்வார்கள்," என தெரிவித்தார்.

"யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் துன்புறுத்தப்படுவதை தமிழக மீனவர்கள் நிறுத்த வேண்டும்" - டக்ளஸ் தேவானந்தா

இந்நிலையில் இதுகுறித்து பேசிய இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்களிடம் பகிரங்க கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

யுத்தத்தினால் அனைத்தையும் இழந்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்புறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை, கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக உறவுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இலங்கையின் கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய மீனவர்களின் கைது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''இந்தியக் கடற்றொழிலாளர்களினால் கடல் வளங்கள் எந்தளவிற்கு அநியாயமாக அழிக்கப்படுகின்றன என்பதற்கு, இன்று கைது செய்யப்பட்ட 6 இந்திய மீன்பிடிப் படகுகளில் இருந்தும் கைப்பற்றப்பட்ட பல மெட்ரிக் டன் மீன் குஞ்சுகளே சாட்சிகளாக இருக்கின்றன,'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், படகிலிருந்து கைப்பற்றப்பட்ட மீன் குஞ்சுகளின் படங்களையும், கடற்றொழில் அமைச்சு இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டது.

இவ்வாறு பெருந்தொகையான மீன்வளம் யாருக்கும் பயனற்ற முறையில் நாள்தோறும் அழிக்கப்படுவதாக கூறிய அவர், இலங்கை கடற்றொழிலாளர்களின் வலைகளையும் நாள்தோறும் இந்திய மீன்பிடிக் படகுகள் அறுத்து நாசம் செய்வதாகவும் குறிப்பிடுகின்றார்.

இதனால் இலங்கை கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார பிரச்னைகளை எதிர்கொள்வதோடு, இலங்கையின் கடல் வளமும் நாசமாக்கப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

சட்டவிரோத தொழில் முறையான இழுவை வலை தொழில் முறையைப் பயன்படுத்துவதனால் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைக்குடாப் பிரதேசத்தில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அழிக்கப்படுகின்றன.

இதனால் இலங்கை கடற்றொழிலாளர்கள் மாத்திரமன்றி இந்தியக் கடற்றொழிலாளர்களின் எதிர்காலச் சந்ததிக்கும் வாழ்வாதாரமான கடல் வளம் இல்லாத சூழல் உருவாக்கப்படுகின்றது.

அதேவேளை, இந்த எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளுகின்ற சட்ட ரீதியான நடவடிக்கை காரணமாக, அப்பாவி தமிழக கடற்றொழிலாறர்களும் அவர்களது குடும்பத்தினரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது என அவர் கூறுகின்றார்.

எனவே, இந்தியக் கடற்றொழிலாளர்கள் யதார்த்தத்தினைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன் சிறந்த வருமானத்தை பெற்றுத் தரக்கூடிய ஆழ்கடல் கடல் தொழிலில் ஆர்வத்தை செலுத்தி நிலைபேறான எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்களின் பாதுகாப்பு நிச்சயம் உறுதி செய்யப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சீன தூதுவரின் இலங்கை பயணத்துக்கும் இந்திய மீனவர்கள் கைதுக்கும் தொடர்பா?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
30 நிமிடங்களுக்கு முன்னர்
 

டக்ளஸ் மற்றும் தூதுவர்

பட மூலாதாரம்,MINISTRY OF FISHERIES - SRI LANKA

இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், அண்மையில் வடப் பகுதிக்கான பயணத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரது பயணம் நிறைவு பெற்ற அடுத்த தருணத்திலேயே தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ள போதிலும், இந்தியாவிற்கு அருகாமையில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளுக்கு மாத்திரமே சீன தூதுவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

வட மாகாணத்திலுள்ள ஏனைய மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளாதிருந்தமை, பலரது மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

வடக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட சீன தூதுவர், இந்தியா தொடர்பிலேயே அங்கு அதிக கவனம் செலுத்தியிருந்தார்.

தனது யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான பயணத்தின் போது, பருத்தித்துறை பகுதிக்கு சென்ற சீன தூதுவர், ''இந்தியாவிற்கு எவ்வளவு தூரம்?" என அங்கு பாதுகாப்பு கடமைகளில் இருந்த இராணுவத்திடம் கேள்வி எழுப்பினார்.

''30 கிலோ மீட்டர்" என இராணுவ அதிகாரியொருவர் பதிலளித்த நிலையில், குறித்த பகுதியிலிருந்து ட்ரோன் கேமரா ஒன்றை பறக்கவிட்டு, அந்த பகுதியை கண்காணித்திருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

இதையடுத்து, யாழ்ப்பாணம் நூலகத்திற்கு பயணம் மேற்கொண்ட சீன தூதுவர், யாழ்ப்பாணம் நூலகத்தின் ''இந்தியன் கார்னர்" என்ற பிரிவிற்கும் சென்று, அங்கும் விடயங்களை ஆராய்ந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மன்னார் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட சீன தூதுவர், மன்னார் வழியாக பாக்கு நீரிணைக்குள் கடற்படைக்கு சொந்தமான படகில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

ராமர் பாலம் என்று அழைக்கப்படும் மணல் திட்டுக்களில் மூன்றாவது மணல் திட்டை சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் அப்போது பார்வையிட்டனர்.

வடக்கு மீனவர்களுக்கு சீனா உதவி

வடக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள மீனவ சமூகத்திற்கு சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகளை இலங்கைக்கான சீன தூதுவர் வழங்கியிருந்ததாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

 

மீனவர்களுக்கு உதவி

பட மூலாதாரம்,CHINESE EMBASSY IN SRI LANKA

மீனவர்களின் நல் அபிப்பிரயத்தை பெற்றுக்கொள்வதற்காகவே சீனா இவ்வாறான உதவித் திட்டங்களை வழங்கியிருந்ததாக தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர்.சிவராஜா தெரிவித்திருந்தார்.

''இந்தியா தொல்லை. ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகின்றார்கள். இந்திய மீனவர்கள் எம்மை அடிக்கின்றார்கள். சீனா எமக்கு உதவி செய்கின்றது என்றே வட பகுதி மீனவர்கள் எண்ணுவார்கள். வட பகுதி மீனவர்களுக்கு இந்தியா இன்று வரை இவ்வாறான உதவிகளை செய்யவில்லை என வட பகுதி மீனவர்கள் எண்ணுவார்கள் என்பதற்காகவே சீனா உதவிகளை செய்கின்றது," என அவர் கூறினார்.

தமிழக மீனவர்கள் அதிரடி கைது

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான பயணத்தை சீன தூதுவர் கடந்த 17ம் தேதி நிறைவு செய்த நிலையில், அடுத்த நாளான 18ம் தேதி இரவு யாழ் மாவட்டத்திற்கு சொந்தமான நெடுந்தீவு பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 43 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதன்பின்னர், மன்னார் பகுதியில் 19ம் தேதி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்;.

இவ்வாறு 48 மணித்தியாலங்களில் இரு வேறு சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

படகுகள்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு சீன தூதுவர் பயணம் மேற்கொண்டு, பயணத்தை நிறைவு செய்த பின்னரான நாட்களில், அதே பிரதேசங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

சீன தூதுவரின் பயணத்தில் இணைந்துக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து

இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும், சீன தூதுவரின் வடக்கு விஜயத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழுக்;கு தெரிவித்தார்.

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளும் நோக்கிலேயே, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் காணப்படுகின்ற நிலையில், இந்தியாவிற்கு அருகிலுள்ள இரண்டு மாவட்டங்களை மாத்திரம் இலக்கு வைத்து, ஏன் சீன தூதுவர் பயணம் மேற்கொண்டார் என டக்ளஸ் தேவானந்தாவிடம் கேள்வி எழுப்பியபோது,''இது பலர் ஊகிக்கின்ற விடயமாக காணப்படுகின்றது. அதில் உண்மை இல்லை. இந்தியாவிற்கும், சீனாவிற்கும், பூகோள அரசியல் நலன்கள் இருக்கும் தானே? அதற்கு நாங்கள் துணை போக போறது இல்லை. எங்களுக்கு தேவை, எங்கள் நாட்டிற்கும், மக்களுக்குமான உதவி. மற்றது பக்கத்தில் உள்ள நாடுகளுடன் நல்லெண்ணம். இந்தியா தானே எங்களுக்கு பக்கத்துல இருக்கின்றது. அதனால, இந்தியாவோட நல்லெண்ணம் வைத்திருப்பது தானே எங்கட விருப்பமா இருக்க முடியும்" என அவர் கூறினார்.

இந்தியா தொடர்பில் சீன தூதுவரின் கருத்து

''சீனாவும், இந்தியாவும் சிறந்த நண்பர்கள். சிறந்த பங்காளர்கள். சிறந்த அயலவர்கள். சீனாவும், இந்தியாவும், இலங்கையுடன் நட்பை பேண முடியும் என நான் நினைக்கின்றேன். இரு தரப்பினராலும் தமிழ் சமூகத்திற்கு அனுகூலங்கள் கிடைக்க முடியும்" என இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், யாழ்ப்பாணம் விஜயத்தின் போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

சீன தூதுவரின் வடக்கு விஜயத்தின் பின்னரே, இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், அவரது வடக்கு விஜயத்திற்கும், இந்திய மீனவர்களின் கைதுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என இலங்கை அரசாங்கத்தை அங்கம் வகிக்கும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-59730728

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

சீன தூதுவரின் இலங்கை பயணத்துக்கும் இந்திய மீனவர்கள் கைதுக்கும் தொடர்பா?

தமிழ்பிபிசி இங்கிலாந்து  எங்கடை டாக்ஸில்  பிழைத்துக்கொண்டு டெல்லிக்கு காவடி எடுக்குது .

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2021 at 03:44, கிருபன் said:

43 ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளுடன் கைது!

அமைதிப்படை என்று இறங்கிய இந்தியா 

மீனவர்களை காப்பாற்ற என்று சொல்லி இறங்க போகுது.

எல்லாரும் மேல பார்த்துக் கொண்டிருங்கோ.

இல்லை பார்சலுகள் விழும் அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

அமைதிப்படை என்று இறங்கிய இந்தியா 

மீனவர்களை காப்பாற்ற என்று சொல்லி இறங்க போகுது.

எல்லாரும் மேல பார்த்துக் கொண்டிருங்கோ.

இல்லை பார்சலுகள் விழும் அதுதான்.

அந்த மாதிரி நிலைமையை நோக்கித் தான் நாடு போகுதோ!
பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவோமோ நாங்களடி கிளியே ஆறுமுகன் தஞ்சமடி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.