Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 வருடத்தில் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இல்லாத நிலை ஏற்படலாம்; சாணக்கியன் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 வருடத்தில் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இல்லாத நிலை ஏற்படலாம்; சாணக்கியன் எச்சரிக்கை

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு தமிழ் மக்களுடன் இணைந்துவாழ விரும்பம் இல்லையென்றால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே இல்லாதநிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வடகிழக்கில் நாங்கள் நிரந்தரமான தீர்வொன்றை அடைவதாகயிருந்தால் முஸ்லிம் மக்கள் இல்லாமல் எந்த தீர்வினையும் அடையமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

269923000_460939208733410_58036179872954

25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார்.

அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு தினம் நேற்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

நிகழ்வுக்கு முன்பாக அன்னாரின் படுகொலைக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் சார்ள்ஸ் மண்டபம் வரையில் கையில் கைகளிலும் கழுத்திலும் கறுப்பு பட்டியணிந்து பேரணி நடைபெற்றது.

பேரணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலைசெய்யப்பட்ட புனித மரியால் பேராலயம் வரையில் வருகைதந்து அங்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.மலர் மாலையினை இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சோயோன்,மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் ஆகியோர் அணிவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய வரலாற்று பாதையில் வேதனைகள்,சோதனைகள்,சாதனைகள் என்னும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்பணி அ.நவரெட்னம் அடிகளார் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பொன்.செல்வராஜா,தமிழரசுக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சி முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் அண்மையில் காலமான மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச முக்கியஸ்தருமான தவராஜாவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன்,

மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு காரணமாக அமைந்தவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடித்திரிகின்றனர்.இந்த நாட்டில் நிதியும் இல்லை, நீதியும் இல்லாத சூழ்நிலையே இன்று உள்ளது.

இந்த நாட்டில் நீதியமைச்சர் இராஜினாமா செய்யும் நிலையில் இந்தநாடு உள்ளது.அவ்வாறான நிலையில் மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்திற்கு இந்த அரசாங்கம் நீதியைத்தரும் என்று எதிர்பார்க்கமுடியாது.

இவ்வாறான நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பெண்களுக்கு நடந்த அநீதிகள் தொடர்பாக ஊடகங்களில் பேசியிருந்தார். இன்று அவரெல்லாம் தூயவராக வந்து மட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் பற்றி பேசுவது என்பது கவலையான விடயமாகும்.இவ்வளவு நீதிகோரும் அவர் ஏன் அன்று ஜோசப்பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது நீதிகோரவில்லை.அவருக்கு அந்த குற்றச்சாட்டு இருந்தது ஆனால் நீதிமன்றம் ஊடாக ஏதோவொரு வகையில் வெளிவந்துவிட்டார்.அவர் அந்த கொலையினை செய்யவில்லையென்றால் ஏன் அந்த கொலைக்கு எதிரான நீதிகோரமுடியாது.

ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவினை நினைவுகூரப்படும் இந்த வேளையில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் ஒரு பட்டியலே நீதிகோரப்படாத நிலையில் உள்ளது.கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத், பிரேமினி என்னும் அரசார்பற்ற நிறுவனத்தில் வேலைசெய்த பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

இவர்களுக்காக ஏன் நீதிகோரமுடியாது.தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாங்கள் நீதிகோரியே வருகின்றோம். இதேபோன்று வர்சா ரூத் ரெஜி என்னும் 06வயது சிறுமி பணத்திற்காக கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

தினேஸிகா சதீஸ்குமார் எட்டு வயது சிறுமி மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இன்று தூயவர்களாக மாறி நீதிகோருகின்றவர்கள் ஏன் இவர்களுக்காக நீதிகோரமுடியாது.

270035545_460939072066757_85528157161277

நீளமான படுகொலைசெய்யபட்டவர்களின் பட்டியலே உள்ளது.நாங்கள் இவர்களுக்கான நீதியை கோரிவருகின்றோம். நீங்கள் தூயவர்களாகயிருந்தால் எங்களுடன் இணைந்து இவர்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க எங்களுடன் வாருங்கள் என்று பகிரங்கமாக அழைக்கின்றேன். இந்த மாவட்டத்தில் மீண்டும் அராஜகம் ஏற்பட்டுவருகின்றது. இதற்கு காரணம் பொலிஸாருக்கும் அரசாங்த்துடன் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் உள்ள நல்ல உறவாகும்.இதற்கு காரணம் மண்மாபியாக்களும் மண் வியாபாரங்களுமாகும்.அவர்கள் வியாபாரம் செய்யும்போது பொலிஸார் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும் என்பதற்காக பொலிஸார் தவறு செய்யும்போது இவர்கள் கண்டுகொள்ளாமலிருக்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினைப்பொறுத்தவரை சிங்களவராகயிருக்கலாம்,முஸ்லிம்களாக இருக்கலாம்,தமிழர்களாக இருக்கலாம் எந்த இடத்தில் எவருக்கு அநீதி நடந்தாலும் அவர்களுக்கு நீதிகோரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகயிருக்கின்றோம்.

தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த அடக்குமுறை செயற்பாடுகளை இன்று முஸ்லிம் மக்கள் மீது காட்டப்படுகின்றது.1980 காலப்பகுதிக்கு பின்னரும் முன்னரும் தமிழர்கள் மீது எவ்வாறான அடக்குமுறைகளை முன்னெடுத்தார்களோ அதே அடக்குமுறையினை இன்று முஸ்லிம்கள் மீது பிரயோகிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதனை பார்த்து நாங்கள் சந்தோசப்படமுடியாது.

அதற்கு நாங்கள் நீதிகோராவிட்டால் இன்று நாங்கள் ஜோசப் ஐயாவின் மரணத்திற்கு நீதிகோருவதற்கு தகுதியில்லாதவர்களாக மாறிவிடுவோம். நாங்கள் எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதிகோரும்போது இன்று நடக்கும் அநீதிகளுக்கும் நாங்கள் நீதிகோரவேண்டும்.அதனை எங்களது கட்சியின் ஒரு நிலைப்பாடாக எடுக்கவேண்டும்.இன்று முஸ்லிம்களுக்கு அநீதிகள் நடக்கும்போது அதனை ஆதரிக்கின்றனர்.

வடக்கு கிழக்கில் நாங்கள் நிரந்தர தீர்வொன்றினை அடைவதாகயிருந்தால் அதில் இஸ்லாமிய மக்கள் இல்லாமல் தீர்வு ஒன்றும் இல்லை.வடகிழக்கில் தமிழர்களுக்கு மட்டும் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. அதனை நாங்கள் அனைவரும் உணரவேண்டும்.எம்மவர்களே முஸ்லிம் மக்களுக்கு எதிராக போராடவேண்டும் என்று கூறுவார்கள்.

இன்னுமொரு சமூகம் எவ்வாறு எமக்கு அநீதிகள் செய்ததோ நாங்களும் இன்னுமொரு சமூகத்திற்கு எதிராக அநீதிசெய்யக்கூடாது.அதுவே எனது நிலைப்பாடாகும்.தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்கும்.தமிழ்-முஸ்லிம் இரு சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வே தேவையென கட்சி யாப்பிலும் உள்ளது.பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக நாங்கள் அந்த அரசியலை செய்யமுடியாது.அவ்வாறு செய்வதாகயிருந்தால் கட்சி யாப்பில் திருத்தம்கொண்டுவரப்பட்டு முன்கொண்டுசெல்லவேண்டும்.

மயிலத்தமடு-மாதவனை பகுதியை பாதுகாப்பதற்கு அரசாங்கத்துடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை எங்களுக்கு ஒத்துழைக்குமாறு கோரியிருந்தோம்.அவர்கள் இதுவரைக்கும் எந்த ஒத்துழைப்பினையும் வழங்கவில்லை.பட்டிப்பளையில் வனஇலாகா காணிகள் அபகரிக்கப்படுகின்றன.அவற்றினை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருக்கு இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பெரும்பான்மை சமூகத்தினால் அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் பக்கமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக துவேசங்களை வளர்த்துக்கொண்டிருந்தாலும் அதனை நாங்கள் செய்யமுடியாது.

அவ்வாறு செய்தால் வடகிழக்கில் தமிழ் மக்களுக்கான தீர்வினை மறக்கவேண்டும்.

 

இதேபோன்று முஸ்லிம் மக்களுக்கும் சொல்கின்றார்கள், கிழக்கில் நாங்கள்தான் பெரும்பான்மை சமூகம்,நாங்கள் எதற்கு தமிழ் மக்களுடன் இணைந்து வாழவேண்டும் என்று கூறுகின்றார்கள். அவர்களுக்கு தமிழ் மக்களுடன் இணைந்துவாழ விரும்பம் இல்லையென்றால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே இல்லாதநிலையேற்படும். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மாகாணசபை தேர்தல் வந்தால் அம்பாறையை சேர்ந்த தமிழ் பேசாதவர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெரும்பான்மை சமூகத்தினைக்கொண்ட ஆளுநரை வைத்துக்கொண்டே பல கஸ்டங்களை எதிர்கொண்டுவருகின்றோம் என்றும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்
 

 

https://thinakkural.lk/article/157165

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் சமுகம் தமிழ்பேசும் சமுகமாக இருப்பது வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட ஓர் துன்பியல் நிகழ்வு. இச்சமுகத்தினர் சிங்களம் பேசும் சமுகமாக இருந்திருந்தால் ஒருவேளை தீர்வு எப்போதோ கிடைத்திருக்கக்கூடும். சிங்களப் பிராமணர்களும், சிங்கள முஸ்லிம்களும் இல்லாதிருப்பதே சிங்களச் சமுகத்தின் பெரும் வெற்றிகளுக்குக் காரணம். 

முதலில் சாணக்கியன் சுமந்திரன் போன்றவர்கள் முஸ்லிம் சமுகத்துக்காக குரல் கொடுப்பதை நிறுத்தவேண்டும். தமிழர் தரப்பில் 50 எம்பிகள் இருந்து பாராளுமன்றில் சாதிப்பதைவிட 1 முஸ்லிம் எம்பி பல விடயங்களை  சாதித்து விடுவார். இப்பொது பராளுமன்றில் கிட்டத்தட்ட 10-15 முஸ்லிம் எம்பிக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமானதைவிட மிகவும் அதிகமானது.

நிவாகத் திறன் சற்றுமே இல்லாத முன்னாள் வடமாகாண முதல்வர் விக்கி, கஜே1, கஜே2 போன்றோர் செய்வது போல பாராளுமன்ற இருக்கைகளை அலங்கரிப்பதுடன் சும்மா சாக்கு போக்கிற்காக பாராளுமன்ற அமர்வுகளில் உரை நிகழ்த்திவிட்டு சாணக்கியன் சுமந்திரன் போன்றோர் இருந்துவிட வேண்டும். முஸ்லிம் சமுகம் தமக்காக குரல்கொடுத்துகொள்ளும். பிழைத்துக்கொள்ளும். இவர்கள் அவர்களுக்காக தேவையில்லாமல் ஆணி ஒன்றையும் புடுங்கத் தேவையில்லை.  இப்பவும் கோட்டாவின் கடைக்கண் பார்வைக்காக முஸ்லிம் சமுகம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அடுத்த பாராளுமன்றம் மகிந்தவுக்கு அறுதிப் பெரும்பான்மையைத் தராது. அப்போது மகிந்தவுக்கு கைகொடுக்க முஸ்லிம் சமுகம் தேவை கூடவே மலையக சமுகமும் தேவை. எனவே முஸ்லிம் சமுகம் குறித்த தமது கடும்போக்கு நிலையில் இருந்து கோட்டா இறங்கி வரக்கூடும். 

அதுக்குப் பிறகு முஸ்லிம் சமுகமும் சிங்கள சமுகமும் கிரிபத்தும் கட்டுசம்பலும் போல.

 

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

 நிலைமை அப்படி இருந்தும்….

கிழக்கு மாகாண முதல் அமைச்சர் பதவியை, சம்பந்தர் ஏன் முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்தவர் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

 நிலைமை அப்படி இருந்தும்….

கிழக்கு மாகாண முதல் அமைச்சர் பதவியை, சம்பந்தர் ஏன் முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்தவர் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

அது சம்பந்தரின் அரசியல் ராஜதந்திரம். எந்த தந்திரமும் முஸ்லிம்களிடம் எடுபடாது. அவர்கள் எங்களை வைத்து தாங்கள் பிழைத்துக்கொள்வார்கள், நாமோ எல்லாவற்றையும் இழந்த பூனைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

டோன்ட் ஒரி மிஸ்டர் சான்ஸ் 
தமிழர்கள் இல்லாமல் போனால் என்ன முஸ்லிம்கள் இருக்கிறார்கள் தானே அவர்கள் வோட்டு போடுவினம் 
அடுத்த காத்தான்குடி சனாதிபதி நீங்கள் தானாமே, பாராளுமன்றில் முஸ்லிம்களுக்காக  நீங்கள் கத்திய சத்தத்தை கேட்டு  உச்சிகுளிர்ந்த ஒரு பட்சி சொல்லுது. நீங்கள் பா.உ  ஆனது எங்களுக்கு கிடைத்த வரம் என்று தமிழர்கள் சொல்லவில்லை முஸ்லிம்கள் சொல்லுகிறார்கள் என்றால் பாருங்கோவன். உங்களை போன்ற கூத்தாடிகளுக்கு பின்னால் இன்னும்  இழுபடும் வால்களுக்கு சமர்ப்பணம்     

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களோடு வாழக்கிடைத்தது பாக்கியமே புகழ் சுமந்திரன் இன்னும் ஒரு 5  வருசம் அரசியல் பரப்பில் இருந்தாலே போதும்.. வடக்குக் கிழக்கு பூரண சிங்கள.. பெளத்த மயமாகிடும்.

கடந்த 2009 இல் இருந்து.. சுமந்திரன் சம்பந்தன்.. வகையறாக்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணியே இதுதானே.

எந்த உலகப் பரப்பில்.. சிங்கள பெளத்த ஆதிக்கம் இலங்கையில் தமிழர் பூர்வீக நிலத்தில் நடக்குது.. அதை தடுத்து நிறுத்துக்கோண்ணு இவர்கள் தொடர் விண்ணப்பத்தை வைச்சிருக்கினம். வைக்கேல்லையே.. மாறாக தேவையில்லாத 13.. 13+..13-, ஒத்த நாடு.. எல்லாரும் ஒண்டுக்கு இருங்கோ.. இதை தானே சொல்லிக்கிட்டு இருக்கினம்.

இப்படியே போனா. 20 வருசம் தேவையில்லை. கோத்தாவின் இந்த ஆட்சி முடிவதற்குள் வடக்குக் கிழக்கு பூரண சிங்கள பெளத்த பூமி ஆகிடும். சம் சும் கும்பலின்.. ஆதரவு.. நல்லாட்சி அரசிலும் இதற்கு குறைவிருக்கவில்லை.. வேகம் மத்திமமானதை தவிர. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.