Jump to content

ஒரு கிலோ அரிசி 300 ரூபா வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் - ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ அரிசி 300 ரூபா வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் - ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.

May be an image of indoor

சேதன பசளை திட்டத்தின் காரணமாக விவசாயிகள் பாரிய நெருக்கடிகயை எதிர்க்கொண்டுள்ளார்கள். பிரதான நெற்செய்கை பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் விவசாய நடடிவக்கையில் இருந்து விலகியுள்ளார்கள்.

இம்முறை பெரும்போக விவசாயத்தில் அதிக விளைச்சலை பெற முடியாது. விவசாயிகள் தங்களின் சுய தேவைக்காக மாத்திரமே விளைச்சலை மேற்கொண்டுள்ளார்கள்.

டொலர் நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு தற்போது வரிசையில் நிற்கிறார்கள். 

இந் நிலையில் எதிர்வரும் மாதம் முதல் பொது மக்கள் அரிசியை பெற்றுக் கொள்வதற்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். 

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து நாடு பாரிய அழிவை நோக்கி செல்லும். இயற்கை காரணிகளினால் அந்த அழிவு ஏற்படாது. அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கை திட்டத்தினால் முழு நாடும் பாரிய அழிவை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 

 

https://www.virakesari.lk/article/120339

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிசியின் விலை உயரும் போது தான்… பொது மக்களின் கோபம், அரசு மீது திரும்பும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அரிசியின் விலை உயரும் போது தான்… பொது மக்களின் கோபம், அரசு மீது திரும்பும்.

கோபப்படுவதற்கு மக்கள் உயிருடன் இருக்க வேண்டுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம், சாவித்திரிபுரத்தில் ஒரு கடை. அங்கே பலர் மளிகை வாங்கிக்கொண்டிருந்தனர். ஒரு வழக்கமான வாடிக்கையாளர் வந்தார்.... கல்லாவில் இருந்த முதலாலியிடம் தயக்கத்துடன் கேட்டார். பிள்ளைகள் மூன்று நாட்களாக சாப்பிடவில்லை. உங்கள் தோட்டத்தில் உள்ள பப்பா மரத்தில் இருந்து, பச்சைக்காய்கள் இரண்டை பறித்துக்கொள்ள அனுமதிப்பீர்களா? அசந்து போன கடைக்காரர், சம்மதித்தார். வேறு பொருட்களை கடனாக கொடுக்கும் நிலையில் அவரும் இல்லை.

தென்பகுதியில் ஒரு கிராமம். பெண் ஒருவர் இருந்த  200கிராம் மாவில் ரொட்டி சுட்டார். இரண்டு ரொட்டியில் ஒன்றை பசியில் வாடிய பிள்ளைக்கும், அடுத்ததை பாதியாக பிரித்து, தனக்கும், சிறுநீரக நோயில் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் கணவருக்குமாக பகிர்ந்து கொண்டார். கணவர் வேலை செல்ல முடியாததால், உழைப்பு இல்லை, அவருக்கு மருந்து வாங்கும் நிலையிலும் குடும்பம் இல்லை.

நாட்டின் மீடியா அனைத்துமே, அடித்தட்டு மக்களுக்கு புரியாத, டாலர் பிரச்சனை, பணம் அச்சடித்தல், உலக வங்கி குறித்து பேசுகின்றன, விவாதிக்கின்றன. ஆனால் மக்கள், படும் பாட்டினை சொல்வதில்லை.

மேலே, சொல்லப்பட்டவை, ஒரு சிறு விடயம் மட்டுமே.

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு முன்னர், பணிஸ் வழக்கப்பட்டது. பின்னர் திரிபோசா வழங்கப்பட்டது. இப்போது பாடசாலையே இல்லை. 

அடித்தட்டு மக்களின் வலி, வேதனைகள், மீடியாக்களுக்கு நல்ல விடயமாக இராது, ஆனாலும், அது சொல்லப்படாவிடில், அவர்களுக்கும் விடிவு இல்லை.

கொழும்பு டெலிக்ராப் இல் வந்த பசில் பெர்னாண்டோவில் கட்டுரையின் சுருக்கம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ அரிசி 300 ரூபா என்பது ஐரோப்பிய விலை

சிறீலங்காவின் பணவீக்கத்தை அளவிட வேறு அளவீடு தேவையற்றது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   04 MAY, 2024 | 08:46 AM குப்பையில்லா தூய்மையான நாட்டை உருவாக்க கடுமையாக உழைத்து வரும் சுத்திகரிப்பு பணியாளர்களின் உரிமைகளுக்கு பொறுப்பானவர்கள் அக்கறையின்மையால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அதற்கு முன்தினம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய வடமாகாண சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிர்வாதம் ஜோன்சன், தொழிற்சங்க இயக்கங்களின் ஆதரவுடன் நாட்டின் உயரிய கதிரைக்கு வந்தவர்களும் கூட பின்னர் தொழிலாளர் உரிமைகளை மறுப்பதாக சுட்டிக்காட்டினார். "நாங்கள் தோல்விடைந்துள்ளோம். எங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எங்களது உரிமைகள் குறித்து மகஜராக கையளித்தாலும் அது நிராகரிக்கப்படுகிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு ஜனாதிபதிகளும் தொழிற்சங்கத்தில் இருந்துதான் வந்திருக்கின்றார்கள். எனினும் அவர்கள் நாட்டின் தலைவர்களாக வந்த பின்னர் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கின்ற சூழல் உருவாகிறது.” என்றார். பணியில் இருக்கும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் வழங்காததால், எதிர்காலத்தில் தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். "தொழிலாளிகள் தமது வேலைகளை செய்கின்ற போது அவர்கள் பாதுகாப்பு அங்கிகளை பயன்படுத்த வேண்டும். எனினும் அது குறைவாக காணப்படுகிறது. எதிர்காலத்தில் தொழிலாளிகள் நோய்வாய்ப்படும் நிலைமை உருவாகிறது. வேலைகளை செய்கின்றபோது சீருடை, பாதணி, கையுறை அணிந்திருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அந்தந்த பிரதேசத்தில் பொறுப்பாளர்களாக செயற்படுபவர்கள் மற்றும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார். தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிர்வாதம் ஜோன்சன் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார். “வீதிகளில் பணியாற்றும் மற்றும் பல இடங்களில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் காணப்படுகின்றோம். ஒன்று அரச ஊழியர்கள், ஒன்று தனியார் ஊழியர்கள். அரசாங்கம் எமக்குத் தர வேண்டியதை தர வேண்டும். எங்கள் சம்பளம் உயர வேண்டும். பொருளாதார நெருக்கடியிலும் நாங்கள் தொழிலை முன்னெடுக்கின்றோம் எனினும் எங்கள் சம்பளம் உயரவில்லை.” https://www.virakesari.lk/article/182629
    • நூற்றுக்கும் மேற்பட்ட வடக்கின் பரம்பரை நில உரிமையாளர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் துறை வழக்குத் தாக்கல் Published By: DIGITAL DESK 3 04 MAY, 2024 | 08:53 AM   காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், ஜனாதிபதி "உறுமய” வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சேதப்படுத்தியதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பங்கேற்ற புதுக்குடியிருப்பு கரியல்வயல் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், தாம் பரம்பரையாக பயிரிட்டு வந்த காணியை வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்த முயற்சிப்பதோடு, தற்போது தமக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார். “83 வரை நாங்கள் வயல் செய்தோம். அதன் பின்னர் அங்கு போக முடியாமல் போய்விட்டது. பின்னர் 2010 - 2012ற்கு இடையில் நாங்கள் மீள் குடியேறிய பின்னர் காணியை துப்பரவு செய்து விவசாயம் செய்து கொண்டு வருகின்றோம். 2015இல் வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்தது. அதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்தது.” என்றார். சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் அனுமதியின்றி பிரவேசித்தமை, பூங்காவிலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டி அழித்தமை, பாதை  உருவாக்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், புதுக்குடியிருப்பு, கரியல்வயல் பிரதேச மக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் தாக்கல் செய்த வழக்கு, இரண்டாவது தடவையாக கடந்த மே 2ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக 80களின் முற்பகுதியில் தமது கிராம நிலங்களை விட்டு வெளியேறிய கரியல்வயல் கிராமத்தின் 130 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த கிராம நிலங்களுக்குத் திரும்பி, பரம்பரையாக பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்திய சுமார் 980 ஏக்கர் காணியில் சுமார் 610 ஏக்கர் நிலப்பரப்பை சுத்தப்படுத்தி விவசாய உற்பத்திகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கின்றனர். 2015ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த காணி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்து, அதனைத் தொடர்ந்து குறித்த கிராம மக்கள் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, வழக்கு 2024ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதிக்கு  நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது. வனஜீவராசிகள் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட 130 பேரில் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் நிலத்திற்கான உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மே 2ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி. எஸ். தனஞ்சயன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். “இந்த வழக்குடன் தொடர்படைய மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான, அதாவது பிரிடிஷ் உறுதி என அழைக்கப்படுகின்ற நூற்றாண்டுக்கு முற்பட்ட உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும், அரச அனுமதிபத்திரம், எல்டிஓ அனுமதிப்பத்திரம் (LDO - Land Development Ordinance) பெற்ற மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் குறைகளை சுட்டிகாட்டியிருந்தோம். நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறு, வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவித்ததாக சடடத்தரணி வி. எஸ். தனஞ்சயன் தெரிவிக்கின்றார். "குறித்த விடயங்கள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்து, இந்த வழக்குகள் தொடர்பாக,  குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறு, நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்குகளில் ஒரு பகுதி வழக்குகள் எதிர்வரும் ஜுலை 25ஆம் திகதிக்கும், இதர திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது." மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக சுவீகரிப்பதாக தொடர்ந்தும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக சுவீகரிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, 1985ல் வனத்துறை உருவாக்கிய வரைபடத்திற்கு அமைய செயற்பட  வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்ததாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், 2023ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/182630
    • Published By: VISHNU   04 MAY, 2024 | 12:11 AM   (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் மற்றும் எண்ணெய் தாங்கி முனையம், விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளார். அதற்கமைய இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனம்மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்படும் சம்பூரில் அமைந்துள்ள சூரிய சக்தி ஆலையையும் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பார்வையிட்டார். கடந்த ஆண்டு ஜூலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு விஜயம் செய்த போது, இந்த திட்டத்திற்கான ஆற்றல் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா திருகோணமலை எண்ணெய் தாங்கிகளையும் பார்வையிட்டார். அங்கு லங்கா ஐ.ஓ.பி.எல்.சி.யின் முதலீடுகள் மூலம் ஈர்க்கக்கூடிய அபிவிருத்தி குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. லூப்ரிகண்ட் கலப்பு ஆலை மூலம் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் கிரீஸ் உற்பத்தி ஆலையையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இந்தியா - இலங்கை எரிசக்தி கூட்டாண்மைக்கு பங்களிக்கும், எண்ணெய் தாங்கி அபிவிருத்தி திட்டங்களின் வளர்ச்சியின் சாத்தியக்கூறுகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. இதே வேளை மூதூர் ஆதார வைத்தியசாலைக்கு லங்கா ஐ.ஓ.சி.பி.எல்.சி. மருத்துவ உபகரணத்தை வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்ட உயர்ஸ்தானிகர், திருகோணமலை எண்ணெய் தாங்கி முனையத்துக்கு அருகில் வசித்து வரும் மக்களுக்கு உணவுப் பொருட் பொதிகளையும் வழங்கி வைத்தார். இதே வேளை இலங்கை மக்கள் தங்கள் சொந்த வீடுகள் என்ற கனவை நிறைவேற்ற உதவும் வகையில் திருகோணமலையில் இந்தியாவினால் செயல்படுத்தப்பட்ட மாதிரி கிராம வீட்டுத் திட்டத்தையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். இதன் போது மக்களை மையப்படுத்திய திட்டத்திற்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் திருகோணமலையில் உள்ள விமானப்படை தளத்துக்கு விஜயம் செய்த உயர்ஸ்தானிகர், இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றிய இந்திய கடற்படை டோர்னியர் தொழில்நுட்பக் குழுவுடன் கலந்துரையாடினார். https://www.virakesari.lk/article/182625
    • பரீட்சை அனுமதி அட்டையில் பிரச்சினை! 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள சுமார் 11,000 பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் விண்ணப்பிக்காத விஞ்ஞானப் பாடத்தை மேலதிக பாடமாக அறிவித்து பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த செயற்பாடு பரீட்சை பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகளை கணினி மயமாக்கும் செயற்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை அனுமதி அட்டையில் மேலதிக பாடங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ள போதிலும் அந்த பரீட்சைக்கு தோற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300848
    • இந்திய மீனவர்கள் மூவர் விடுதலை! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் இன்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதத்தின் இரு வேறு தினங்களில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த மீனவர்கள், 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த மூவரும் படகோட்டிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் இந்திய அரசினால் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விசைப் படகோட்டிகள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பதால், நல்லிணக்க அடிப்படையில் 06 மாத சிறைத்தண்டனையை இரத்து செய்து, யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதற்கிணங்க, இன்று மூன்று இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையும் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூவரையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300829
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.