Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா செட்டிக்குளத்தில் கிளைமோர் தாக்குதல்: 14 படையினர் பலி! 8 படையினர் படுகாயம்

Featured Replies

இன்று மதியம் செட்டிக்குளத்தில் இராணுவ வாகனத்தினை இலக்கு வைத்து கிளைமோர்த் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மதியம் 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் விடுமுறையில் செல்லும் இராணுவத்தினரை மதவாச்சி நோக்கி கொண்டுசென்றுகொண்டிருந்த வாகனம் இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by தமிழினீ

பிந்திய செய்திகளின் படி ஒன்பது பேர் மரணமடைந்ததாகவும் எட்டுப் பேர் காயமுற்றிருப்பதாகவும் தகவல்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • தொடங்கியவர்

Nine Soldiers killed eight injured in LTTE claymore attack- Cheddikulama

Nine soldiers have been killed and eight others were injured when the LTTE terrorists carried out a cowardly claymore blast targeting an army bus at Cheddikulama on the Mannar-Madawachchiya road around 12.30 this afternoon (July 24).

According to the defence sources from Vavuniya, the bus was carrying unarmed army personnel who were going on leave. The injured has been rushed to the General Hospital Anuradhapura.

பாரிய கிளைமோருக்கும் சாதாரண கிளைமோருக்கும் எத்தனை கில்லோ வித்தியாசமுங்கோ?

:D

10 பேர் மரணம் 15 பேர் காயம் அதில் பொதுமக்கள் 8 பேர். இருவரின் நிலை கவலைக்கிடம்.

ஈழத்திலிருந்து

ஜானா

10 பேர் மரணம் 15 பேர் காயம் அதில் பொதுமக்கள் 8 பேர். இருவரின் நிலை கவலைக்கிடம்.

வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: 10 படையினர் பலி! 8 படையினர் படுகாயம்: 9 பொதுமக்கள் காயம்

வவுனியா செட்டிக்குளத்தில் கெரில்லா அணி ஒன்று பதுங்கியிருந்து நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படைத் தரப்பில் 10 படையினர் கொல்லப்பட்டு மேலும் 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னார் - மதவாச்சி வீதியில் இன்று மதியம் 1.00 மணியளவில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விடுமுறைக்காகப் பேருந்தில் சென்றுகொண்டிருந்த படையினரை இலக்கு வைத்தே கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த படையினர் அநுராதபுர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்டு 15 நிமிடங்களின் பின்னர் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

வவுனியா செட்டிக்குளத்தில் பாரிய கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது.

(2 ஆம் இணைப்பு) வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: சிறிலங்கா இராணுவத்தினர் 14 பேர் பலி- 7 பேர் படுகாயம்.

வவுனியா செட்டிகுளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் பேரூந்து மீது இலக்கு வைத்து இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து மதவாச்சிக்கு சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பேரூந்தை இலக்குவைத்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பேரூந்தில் விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் 30 பேர் பயணித்தனர்.

இத்தாக்குதலில் சம்பவ இடத்தில் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டனர். படுகாயமடைந்த நிலையில் 7 இராணுவத்தினர் வவுனியா மருத்துவமனைக்கும் அனுராதபுரம் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பொருத்தப்பட்ட கிளைமோரைப் பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக வவுனியா சிறிலங்கா காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கடும் தேடுதல் நடவடிக்கை நடத்தப்படுவதாக வவுனியா தகவல்கள் தெரிவித்தன.

வீதியை வழிமறித்து அனைத்து வாகனங்களையும் பயணிகளையும் இராணுவத்தினரும் காவல்துறையினரும் துருவித்துருவி சோதனை செய்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் 9 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

-Puthinam-

இராணுவத்தினரின் இறப்புக்காக யாழ்கள மனித உரிமை அமைப்பாளர்களுடன் இனைத்து காசு சேர்ந்து வழக்கு ஆட போகிறோம்............

பாரிய கிளைமோருக்கும் சாதாரண கிளைமோருக்கும் எத்தனை கில்லோ வித்தியாசமுங்கோ? :D

500 கிறாமில் ஆரம்பித்து 50 கிலோவுக்கும் மேலையும் வித்தியாசம் வரும்.... அது இலகின் அளவையும் தூரத்தையும் பொறுத்து..!!

இராணுவத்தினரின் இறப்புக்காக யாழ்கள மனித உரிமை அமைப்பாளர்களுடன் இனைத்து காசு சேர்ந்து வழக்கு ஆட போகிறோம்............

அப்ப உண்டியல் பணிதொடர வாழ்த்துக்கள்..... :P

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தினரின் இறப்புக்காக யாழ்கள மனித உரிமை அமைப்பாளர்களுடன் இனைத்து காசு சேர்ந்து வழக்கு ஆட போகிறோம்............

நல்லதண்ணை!

வாதாடக்கே இப்படி சில சொல்லுகளையும் சேருங்கோ.அப்பாவி இராணுவச் சிறார்கள், அபலைப் பிஞ்சு இராணுவத்தினர், பால்மணம் மாறாத இராணுவக் குழந்தை .... என்று சொல்லுச் சேர்ப்பதன் மூலம் உங்கட மனிதஉரிமைப் பற்றைக் காப்பாற்றுங்கோ. என்ன நான் சொல்றது..

முதலே நான் ஒண்டைச் சொல்லி மனிதஉரிமை வாதியாகுறன்.

அபலை இராணுவக்குழந்தைகள் 10 பேருக்கு அஞ்சலிகள். அடுத்த முறை அதிக கணக்கீட்டில் சொல்ல வைக்கப் பினார்த்திகிறன் சொறி பிரார்த்திக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

பத்து இராணுவத்தைக் கொன்றிட்டால்.. ஈழம் கிடைச்சிடும் என்று இன்னும் நம்புற சனம்.. துள்ளுது குதிக்குது..!

அண்மையில் மாங்குளத்தில் நடந்த இராணுவ ஆள ஊடுருவும் அணியின் கிளைமோருக்கு தமிழீழ மருத்துவப் பிரிவு சிக்கி அதில் 5 வர் உயிரிழந்ததுக்கு பழிக்குப் பழி.. அவ்வளவும் தான் நடந்தேறியுள்ளது..! :D

நெடுக்காலைபோவான் பத்து இராணுவத்தினர் செத்ததாலை நீங்கள் கவலைப் படுகிற மாதிரிக் கிடக்குது?

பத்து இராணுவத்தைக் கொன்றிட்டால்.. ஈழம் கிடைச்சிடும் என்று இன்னும் நம்புற சனம்.. துள்ளுது குதிக்குது..!

அண்மையில் மாங்குளத்தில் நடந்த இராணுவ ஆள ஊடுருவும் அணியின் கிளைமோருக்கு தமிழீழ மருத்துவப் பிரிவு சிக்கி அதில் 5 வர் உயிரிழந்ததுக்கு பழிக்குப் பழி.. அவ்வளவும் தான் நடந்தேறியுள்ளது..! :D

யுத்தத்தில் வரும் இழப்புக்களை விட யுத்தத்திற்கான நோக்கமே பெரிது அதிலும் எமது போராளிகளின் மனவுறுதியானது எதிரியின் நவின ஆயுதங்களை விட வலிமையானது.............

அதை விடுத்து தற்காலிகமாக யுத்தத்தில் இடையில் அகப்பட்டு இறக்கும் அப்பாவிமக்களுக்காக அடுத்து வரும் சந்ததிகளை சிங்கள வரிம் அடிமைகளாகவும் அன்னிய இனத்தவ்ருக்கு அனுதாபமாக பாக்கும் பொருளாக விட்டு விட முடியாது தானே?????????????

இந்த கருத்தை எழுதி முடிக்க முன் தமிழீழத்தில் பல அப்பாவி தமிழ் மக்களின் உயிரோ இல்லை எனது மாவட்டத்தில் பல உயிர்களோ எனது கிராமத்திலோ எனது உறவினர்களில் ஒருவரோ இல்லை எனது குடும்பத்தில் ஒருவரோ கொடுர யுத்தத்துக்கு பலியாகலாம் அதுக்காக நான் சண்டையை நிறுத்த சொல்லி ஆர்பாட்டமோ இல்லை கொக்கரிக்கவோ போவது இல்லை எமது மக்களின் விடுதலைக்கு போராளிகளும் பொது மக்களும் வித்தாகி கொண்ட்டே இருப்பார்கள்.................

அன்னிய நாட்டில் மனித உரிமை சனி பிடித்த ஜன(நாய்)கம் பேசி கொண்டு இருப்பதை விட இருக்கும் விதியில் நாய்களின் கழிவுகளை அப்புற படுத்த உதவுகள்................

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒரு உறுப்பினர் ...பாதிக்கப்பட்ட...பலரின் உணர்ச்சிகளை தூண்டி..விவாதிக்க முயற்சிக்கின்றார்..

.அர்த்தமில்லாத கருத்துக்களை முன்வைத்து தலைப்பையே திசை திருப்ப முயற்சியா? வேண்டாம் நண்பா....

பத்து இராணுவத்தைக் கொன்றிட்டால்.. ஈழம் கிடைச்சிடும் என்று இன்னும் நம்புற சனம்.. துள்ளுது குதிக்குது..!

அண்மையில் மாங்குளத்தில் நடந்த இராணுவ ஆள ஊடுருவும் அணியின் கிளைமோருக்கு தமிழீழ மருத்துவப் பிரிவு சிக்கி அதில் 5 வர் உயிரிழந்ததுக்கு பழிக்குப் பழி.. அவ்வளவும் தான் நடந்தேறியுள்ளது..! :D

நெடுக்ஸ் சொன்னதில் தவறில்லை எனவே நினகின்றேன் அதன் உண்மைதன்மையை விளங்கி கொள்ளுங்கள்

cmw3.jpg

cmw.jpg

cmw1.jpg

cmw2.jpg

cmw3.jpg

cmw4.jpg

நன்றி-நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

(4 ஆம் இணைப்பு) வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: சிறிலங்கா இராணுவத்தினர் 14 பேர் பலி- 7 பேர் படுகாயம்

[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2007, 14:09 ஈழம்] [தாயக செய்தியாளர்]

வவுனியா செட்டிக்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் பேரூந்து மீது இலக்கு வைத்து இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 8 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

மன்னாரில் இருந்து மதவாச்சிக்கு சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பேரூந்தை இலக்கு வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பேரூந்தில் விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் 30 பேர் பயணித்தனர்.

இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். காயமடைந்து சிகிச்சை பலனின்றி 4 இராணுவத்தினர் உயிரிழந்தனர். 7 இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனை, அனுராதபுரம் பொது மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பொருத்தப்பட்ட கிளைமோரைப் பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக வவுனியா சிறிலங்கா காவல்நிலையப் பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கடும் தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டதாக வவுனியா தகவல்கள் தெரிவித்தன.

வீதியை வழிமறித்து அனைத்து வாகனங்களையும் பயணிகளையும் இராணுவத்தினரும் காவல்துறையினரும் துருவித்துருவி சோதனை செய்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன.

வவுனியாவிலிருந்து தென்மேற்கில் 23 கிலோ மீற்றர் தொலைவில் செட்டிக்குளம் உள்ளது.

இத்தாக்குதலில் 9 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் தேநீர் கடையில் இருந்தவர்களும், கடைக்கு அருகில் நின்றவர்களும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த பொதுமக்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளைமோர் தாக்குதலில் தேநீர்க் கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்தின் சாரதியான

ஆனந்தராஜா (முதலியார் குளம்),

நடத்துனரான உதயகுமார் (கோவில்குளம்),

சபாரட்ணம் கணேஸ் (வயது 52),

பொன்னம்பலம் திருநாவுக்கரசு (வயது 37),

செல்லையா கிருபாகரன் ( வயது 38),

தில்லைநாதன் ஐங்கரன் (வயது 24),

அநுராதபுரத்திலிருந்து மரக்கறி வியாபாரத்திற்காக வந்திருந்த ரிஸ்வான் (வயது 30),

எம்.எஸ்.எம்.சாமுலெப்பை (வயது 45) ஆகியோர் காயமடைந்தவர்கள் ஆவர்.

வவுனியாவைச் சேர்ந்த தில்லைநாதன் ஐங்கரன் என்பவர் சேவா லங்கா தொண்டு நிறுவனத்தின் பணியாளரும், செல்லையா கிருபாகரன் என்பவர் செட்டிகுளம் மகா வித்தியாலய ஆசிரியரும் ஆவர்.

இவர்கள் பேரூந்துக்காக காத்திருந்த போது இராணுவத்தினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

puthinam

மொத்தம் 16 பொதுமக்கள் காயமடைந்ததாக புதினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் சரியாக 8 பேர் சிறிலங்கா இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலிலும், 8 பேர் கிளைமோர் தாக்குதலிலும் காயமடைந்தனராம்

அந்தச் செய்தி:

......"சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்........

......கிளைமோர் தாக்குதலில் தேநீர்க் கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்தின் சாரதியான

ஆனந்தராஜா (முதலியார் குளம்),

நடத்துனரான உதயகுமார் (கோவில்குளம்),

சபாரட்ணம் கணேஸ் (வயது 52),

பொன்னம்பலம் திருநாவுக்கரசு (வயது 37),

செல்லையா கிருபாகரன் ( வயது 38),

தில்லைநாதன் ஐங்கரன் (வயது 24),

அநுராதபுரத்திலிருந்து மரக்கறி வியாபாரத்திற்காக வந்திருந்த ரிஸ்வான் (வயது 30),

எம்.எஸ்.எம்.சாமுலெப்பை (வயது 45) ஆகியோர் காயமடைந்தவர்கள் ஆவர்......

Edited by சபேசன்

பத்து இராணுவத்தைக் கொன்றிட்டால்.. ஈழம் கிடைச்சிடும் என்று இன்னும் நம்புற சனம்.. துள்ளுது குதிக்குது..!

அண்மையில் மாங்குளத்தில் நடந்த இராணுவ ஆள ஊடுருவும் அணியின் கிளைமோருக்கு தமிழீழ மருத்துவப் பிரிவு சிக்கி அதில் 5 வர் உயிரிழந்ததுக்கு பழிக்குப் பழி.. அவ்வளவும் தான் நடந்தேறியுள்ளது..! :D

என்ன செய்வது? முன்பு 50, 100 என்று கொத்துக் கொத்தா போன காலம் எல்லாம் போய் இப்ப மாவிலாற்றில இருந்து குடும்பிமலைக் கொட்டம் வரை எல்லாம் போய்விட்டது. தந்திரோபாயம், தற்காலிகம் என்று சொல்லி இண்டைக்கு நாளைக்கு என்று சனம் எல்லாம் காத்திருந்தே களைச்சுப்போய் இருக்கேக்க, இது ஒரு பெரிய விசயமாய்தான் எல்லோருக்கும் தெரியுது. இங்க சிலர் தொலைபேசியில கூப்பிட்டு "14 போயிட்டுதாம் என்ன" என்று கேட்டினம். மகிந்தவின்ட கிழக்கு வெளுப்பு கொண்டாங்களோட சுரணை இல்லாமலிருந்த சிலர் கூட "இனி விடக்கூடாது" எண்டு கொந்தளிச்சுக் கொண்டு நிக்கினம். விட்டா தாங்களே போய் ஏதோ செய்யிற மாதிரி.

என்டைக்கு சிறிலங்கா அரசு ராணுவரீதியிலையும், பொருளாதார ரீதியிலையும் பாரிய அழிவுகளை ஒரே நேரத்தில சந்திச்சு அதேநேரம் அயல் நாடு மற்றது உந்த உதவி வழங்கும் நாடுகள் எல்லாம் எட்ட நிக்குதோ அண்டைக்குத்தான் தமிழனுக்கு ஒரு விடிவு கிடைக்கும்!

உண்மையை சொன்னால் இராணூவத்தை ஒரு இடத்தில் குவிக்க வைத்து அதாவது புலிகளின் முன்னணிக்குள் முடக்கி வைத்து தாக்குவது என்பது வல்லரசுகளால் மட்டும்தான் முடியக்கூடிய செயல்.... ஆனால் முன்னணியில் இராணுவத்தை குவித்து பின்னால் சிறிய முக்காம்களையும் புலனாய்வு உறுப்பினர்களான தமிழ் குழுக்களையும் வைத்து எல்லாவற்றையும் சமாளிக்க நிக்கிறது எதிரி படை...

ஆனால் இண்றைய கிளைமோ தாக்குதல் பின்னணியில் இராணுவ பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தி இராணுவத்தை தற்காப்பு நிலைக்கு கொண்டு செல்ல வல்லது...

ஆகவே இந்த தாக்குதலின் நோக்கத்தால் மன மகிழ்பவர்களின் பட்டியலில் நான் முதலாவதாக வர விரும்புகிற்றேன்....

இந்த கிளைமோர் தாக்குதலையடுத்து ஒட்டுசுட்டானில் வான்குண்டு வீச்சு நடபெற்றதாக பதிவு இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதனை கனடாவ ரி.வி.ஐயும் தனது செய்தியில் வாசித்துள்ளது.

உண்மையில் வான் குண்டு வீச்சு நடைபெற்றது திங்கட்கிழமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.