Jump to content

எனது பயண நினைவுகளின் தொகுப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, P.S.பிரபா said:

மிக்க நன்றி

சுண்டிக்குளம் பறவைகள் சரணலாயம் தொடுவாயிற்கு மற்றப்பக்கத்தில் தானே உண்டு. 

நான் போனது முல்லைத்தீவு பரந்தன் வீதியால் போய் சுண்டிக்குளம் வீதியூடாக.. அந்த இடமே வறண்டு போய், சரியான வீதி கூட இல்லை. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்தமையால் நீண்ட நேரம் இருக்க நினைக்கவில்லை. 

IMG-2560.jpg

👆🏽இப்படித்தான் அனேகமான பகுதி இருந்தது. 

IMG-2782.jpg

மிக்க நன்றி சுவி அண்ணா

ஓம் மற்றப்பக்கம்தான்….அத்தோடு இப்போ வட அரைகோளத்தில் கோடை ஆரம்பம் என்பதால் பறவைகள் இடம்பெயர்ந்தும் இருக்க கூடும்.

மற்றப் பக்கத்தால் போனாலும் சன நடமாட்டம் இன்றி கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். குறிப்பாக மம்மல் நேரம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும்

P.S.பிரபா

அரிவிவெட்டுக்கு வன்னேரிக்கு போன பொழுது, அங்குள்ள வன்னேரிக்குளமும் அதன் அருகே ஆள் அரவமற்று இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விடுதி ஒன்றும்!   அங்கே பூவரசைப் பார்த்து ஒரு பரவசம்..சிறுவ

P.S.பிரபா

ஒரு இரவுப்பொழுதில் ஆரியகுளத்திற்கு ஒரு நடை!! யாருமற்ற அந்த இரவு நேரத்தில் மணிக்கூட்டு கோபுரத்தை காவல் செய்யும் இந்த மூன்றுமன்னர்களுடன் ஒரு பொழுது!!! உன்னதமான ஊடக சுதந்திரத்திற்கா

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இயற்கை காட்சி/ படங்களுடன் கூடிய  பயண நிகழ்வுகள் மிக பிரமாதம். எல்லோருக்கும் இந்த சந்தர்ப்பங்கள்கிடைப்பதில்லை.
நன்றி தெரிவிப்போடு  உங்கள் பயணத்தை தொடருங்கள். 👍🏼

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nochchi said:

படங்களும் பார்வைகளும் சிறப்பு. சில இடங்கள் நான் சென்ற இடங்களாகவும் உள்ளன. காட்சிக்குள் நானும் இணைவதுபோன்றதொரு உணர்வு.  சிறுகுறிப்புப்போல் இருந்ததாலும் அவை கனதியான செய்திகளைச் சொல்லி நிற்கிறது. படங்களைப் பேசவைத்துள்ளீரகள். வலைஞனைத்தொலைத்தவிட்டு நினைவுகளோடு அலையும் இனமாகத் தமிழினம்.

படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி!

மிக்க நன்றி.

இந்த ஊர்களின் தோற்றம் காலப்போக்கில் மாறலாம் ஆனால் மனதை விட்டு சம்பவங்கள் இலகுவில் மறையாது தானே. 

22 hours ago, alvayan said:

பிரபா நீங்கள் ஊரில் எடுத்த அனைத்து புகைப்படங்களும் பிரமாதம்.

மிக்க நன்றி

21 hours ago, goshan_che said:

மற்றப் பக்கத்தால் போனாலும் சன நடமாட்டம் இன்றி கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். குறிப்பாக மம்மல் நேரம்.

பகலோ, மம்மல் பொழுதோ இந்தப் பிரதேசமே ஒரு மனப்பயத்தைத் தருவதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

உங்கள் இயற்கை காட்சி/ படங்களுடன் கூடிய  பயண நிகழ்வுகள் மிக பிரமாதம். எல்லோருக்கும் இந்த சந்தர்ப்பங்கள்கிடைப்பதில்லை.
நன்றி தெரிவிப்போடு  உங்கள் பயணத்தை தொடருங்கள். 👍🏼

மிக்க நன்றி..

எனக்கு ஊரில் ஒரு கடமை உள்ளது, சகோதரியின் மேல் முழுப் பொறுப்பையும் போட மனம் வரவில்லை, அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அங்கே போகிறேன். அப்படி போகும் பொழுதெல்லாம் நான் பார்க்க நினைப்பதை பார்க்க முயற்சிக்கிறேன். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, P.S.பிரபா said:

பகலோ, மம்மல் பொழுதோ இந்தப் பிரதேசமே ஒரு மனப்பயத்தைத் தருவதுதான் உண்மை

தனியாகவா போறனிங்கள்?

நான் 2009 க்கு பின் பலதடவை போய் விட்டாலும், வற்றாப்பளைக்கு வடக்கே போக விரும்பியதில்லை. விரும்பியதில்லை என்பதை விட முடிவதில்லை.

ஒரு வகையில் out of sight, out of mind நழுவல் புத்திதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

தனியாகவா போறனிங்கள்?

நான் 2009 க்கு பின் பலதடவை போய் விட்டாலும், வற்றாப்பளைக்கு வடக்கே போக விரும்பியதில்லை. விரும்பியதில்லை என்பதை விட முடிவதில்லை.

ஒரு வகையில் out of sight, out of mind நழுவல் புத்திதான்.

2009ற்கு பின் பல தடவைகள் போயிருந்தாலும் நானும் சில இடங்களுக்கு ஒரு தடவை மாத்திரமே போயிருக்கிறேன். போய் வந்தபின்பு மிகவும் கவலையாக இருக்கும். அதனால் ஒரு தரம் மட்டுமே போவதுண்டு. 

தனியாகப் போவதில்லை. எனது சித்தி வசிப்பது வன்னியில் அதனால் அவரோடு போவதுண்டு. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

large.IMG_2784.jpeg.a80a1bdd6953f95c6ec6b47da7d87df2.jpeg

சங்குப்பிட்டிப் பாலத்தில் அதிகாலை அழகு

large.IMG_2785.jpeg.38a03c04cf906a5848424cb05698ec31.jpeg

ஆனால் அதே பாலத்தில் ஆயிரங்கள் செலவழித்தும் மனிதர்களின் அடிப்படைக் குணம் மாறாதமையால் இருளில் இருக்கும் வீதி.

large.IMG_2901.jpeg.7e3ed577d13125a4a189f94e8d9e29ac.jpeg

முற்றம் தெரியும் முதலியார் வாசிகசாலை..

ஆர் கண்பட்டதோ தெரியவில்லை போன வருடம் போன பொழுது பற்றையாக(👇🏼) இருந்த வாசிகசாலை இன்று முற்றம் தெரிகிறது.. 

IMG-2902.jpg

Edited by P.S.பிரபா
படம் இணைப்பதற்காக
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, P.S.பிரபா said:

ஆனால் அதே பாலத்தில் ஆயிரங்கள் செலவழித்தும் மனிதர்களின் அடிப்படைக் குணம் மாறாதமையால் இருளில் இருக்கும் வீதி.

ஆயிரத்தில் ஒரு வசனம். அதுவும் நன்றாக சொன்னீர்கள். 👈🏽 👍🏼
அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை குணங்களை மாற்றினாலே ஆயிரம் பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, P.S.பிரபா said:

large.IMG_2785.jpeg.38a03c04cf906a5848424cb05698ec31.jpeg

ஆனால் அதே பாலத்தில் ஆயிரங்கள் செலவழித்தும் மனிதர்களின் அடிப்படைக் குணம் மாறாதமையால் இருளில் இருக்கும் வீதி.

வீதியோர சோலார் மின்விளக்குகள் பழுதாகிவிட்டன என நினைக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, P.S.பிரபா said:

large.IMG_2784.jpeg.a80a1bdd6953f95c6ec6b47da7d87df2.jpeg

சங்குப்பிட்டிப் பாலத்தில் அதிகாலை அழகு

large.IMG_2785.jpeg.38a03c04cf906a5848424cb05698ec31.jpeg

ஆனால் அதே பாலத்தில் ஆயிரங்கள் செலவழித்தும் மனிதர்களின் அடிப்படைக் குணம் மாறாதமையால் இருளில் இருக்கும் வீதி.

large.IMG_2901.jpeg.7e3ed577d13125a4a189f94e8d9e29ac.jpeg

முற்றம் தெரியும் முதலியார் வாசிகசாலை..

ஆர் கண்பட்டதோ தெரியவில்லை போன வருடம் போன பொழுது பற்றையாக(👇🏼) இருந்த வாசிகசாலை இன்று முற்றம் தெரிகிறது.. 

IMG-2902.jpg

தங்கச்சியின் ஊர் மருதங்கேணி போல இருக்கு.

இங்கு இந்த ஊர் பெயரிலேயே ஒரு கள உறவு இருக்கிறார்.

கல்லோ கல்லோ @Maruthankerny  உங்க ஊர் படங்கள் தான் வாங்க சார்.

பாலத்தில் விளக்குகள் எரியவில்லை என்றால் மக்கள் என்னம்மா செய்வார்கள்?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

வீதியோர சோலார் மின்விளக்குகள் பழுதாகிவிட்டன என நினைக்கிறேன்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

பாலத்தில் விளக்குகள் எரியவில்லை என்றால் மக்கள் என்னம்மா செய்வார்கள்?

இந்த சங்குப்பிட்டி பாலம், இரவில் விளக்குகள் எரியும் பொழுது அழகாக இருக்கும். ஆனால் இப்பொழுது வீதியோர சோலர் மின் விளக்குகள் எரிவதில்லை. 

2023 தை மாதம் வந்த பொழுது இவை ஒழுங்காத்தான்இருந்தன (ஒன்றிரண்டு பழுதடைந்தாலும் கூட) ஆனால் இம்முறை ஒன்றுமே எரியவில்லை.. அப்பொழுதுதான் தெரிய வந்தது பழுதடைந்தது, களவு எடுத்துக்கொண்டு போனது, பாராமரிப்பு இல்லை என.. 

சோலர்களை தனிநபர் ஒருவர்தான் வழங்கியிருந்தார் எனக் கூறினார்கள்( உண்மையா என தெரியாது) ஆனால் அங்கே இருப்பவர்களும் கொஞ்சம் அக்கறை காட்டலாம் தானே..

3 hours ago, குமாரசாமி said:

அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை குணங்களை மாற்றினாலே ஆயிரம் பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும்.

ஊருக்குப் போய் வரும் சந்தர்ப்பங்களில் சில நடவடிக்கைகளைப் பார்க்கையில் கவலையாகவும் ஒருவித விரகத்தியையும் ஏற்படுத்துவது உண்மை.. அதனால்தான் அப்படி எழுதினேன்.. மற்றப்படி அங்கே வாழ்பவர்களின் நடவடிக்கைகளில் அதிகம் மூக்கை நுளைப்பதில்லை

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, P.S.பிரபா said:

சோலர்களை தனிநபர் ஒருவர்தான் வழங்கியிருந்தார் எனக் கூறினார்கள்( உண்மையா என தெரியாது) ஆனால் அங்கே இருப்பவர்களும் கொஞ்சம் அக்கறை காட்டலாம் தானே..

இது சீனர்களால் கட்டப்பட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

இது சீனர்களால் கட்டப்பட்டதா?

இல்லை என்றுதான் நினைக்கிறேன்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, P.S.பிரபா said:

ஊருக்குப் போய் வரும் சந்தர்ப்பங்களில் சில நடவடிக்கைகளைப் பார்க்கையில் கவலையாகவும் ஒருவித விரகத்தியையும் ஏற்படுத்துவது உண்மை.. அதனால்தான் அப்படி எழுதினேன்.. மற்றப்படி அங்கே வாழ்பவர்களின் நடவடிக்கைகளில் அதிகம் மூக்கை நுளைப்பதில்லை

நாங்கள் இருக்கிற காலத்திலை தட்டிக்கேட்டால் தடியுடன் வருவார்கள். இப்போது வாளுடன் வருகின்றார்களாம்.🤣
உங்கள் முடிவு சரியானதே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2925.jpg
கோணமா மலைமீதில் அலை மோதிப் பாயும்.. அது ஒரு தனி அழகு!!

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, P.S.பிரபா said:

IMG-2925.jpg
கோணமா மலைமீதில் அலை மோதிப் பாயும்.. அது ஒரு தனி அழகு!!

தமிழீழத்தின் அழகு தனி அழகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழீழத்தின் அழகு தனி அழகு.

உண்மையில் எங்களது பகுதிகளில் இருக்கும் வளங்களும் அழகும் எங்களைத் தவிர மற்றவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. 

நான் ஊருக்குப் போகும் ஒவ்வொரு சமயங்களிலும் உணர்வது இதனைத்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமுனை தபால் பெட்டியில் கடிதத்தைப் போட்டுவிட்டு இந்த வருட பயணத்தை நிறைவு செய்தாயிற்று.. large.IMG_2926.jpeg.4d73a874104796cf7fc78fed366a2fe6.jpeg

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.