Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத்தினர் இலக்கதகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்திருக்க கூடாது – பொலிஸார் அவர்களை தாக்கியிருக்க கூடாது – சரத்பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினர் இலக்கதகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்திருக்க கூடாது – பொலிஸார் அவர்களை தாக்கியிருக்க கூடாது – சரத்பொன்சேகா

 

 

 
நாடாளுமன்றத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவத்தினரை தாக்கியிருக்ககூடாது என முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
SarathFonseka-300x194.jpg
இராணுவத்தினர் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தாலும் நான் அதனை எதிர்த்திருப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் இலக்கதகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்திருக்ககூடாது- அவர்களை யாராவது அனுப்பினார்களா என தெரியாது-எனினும் அவர்கள் அவ்வாறு செயற்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ வீரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் – பொன்சேகா கண்டனம் !

இராணுவ வீரர்கள் மீது... பொலிஸார், தாக்குதல் – பொன்சேகா கண்டனம் !

மோட்டார் சைக்கிளில் சென்ற இராணுவ வீரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு முன்பாக நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் முன்னெடுத்த இந்த செயற்பாடு அவமானகரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் பேசிய அவர், சீருடை அணிந்திருக்கும் அதிகாரியை இப்படியா நடத்துவது என்றும் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1275388

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் அராஜகங்களுக்கு துணை போய், இவர்களை காப்பவர்கள் இராணுவத்தினர். இவர்களை நம்பித்தான் அரசியலே நடக்குது, எப்படி விட்டுக்கொடுப்பார்கள் இராணுவத்தை? காக்கி காற்ட்சடை, கருப்பு மேலங்கி, கருப்பு தலைக்கவசம் அணிந்த ஒருவர் ஆர்பாட்டக்காரருக்கு மத்தியில் இருந்து நாங்கள் சீருடை அணிந்திருந்தாலும் உங்களுடன் இருக்கிறோம் என்று சொன்னாராம், அவர் காவற் துறையை சேர்ந்தவரா என்று ஆராய்கினமாம். அதோடு இதுவும் சேர்ந்துகொண்டது,  போலீசாருக்கும் அரசுக்குமிடையில் மோதல் எழலாம் போலிருக்கிறது. தாங்களாகவே தங்களை காட்டிக்கொடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகா... வழமை போல் சிங்கள இராணுவத்தின் சட்டவிரோத.. தாந்தோன்றித்தனமான.. மிடுப்புச் செயற்பாடுகளுக்கு துணை போவது.. இவரின் கடந்த கால போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு இவர் எவ்வளவு துணை நின்றிருப்பார் என்பதை இனங்காட்டுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து.. சிங்களப் பொதுமகன் ஒருவர் இப்படி பதிவிட்டிருக்கிறார்..

How come armed individuals come in number plateless bikes and try to attack the protest or create unnecessary problems. Police were not informed and they did the right thing. Time for lawyers and hr to stand against these thugs and help those genuine police officers. Probably these are the same guys who set bus on fire and damaged mps properties to put blame on protestors.

https://www.dailymirror.lk/breaking_news/Probe-underway-over-verbal-clash-between-police-and-army-personnel-near-Parliament/108-234587

  • கருத்துக்கள உறவுகள்

நுணலும் தன்வாயாற் கெடும். பொறுங்கள் ஒவ்வொருவராக தங்கள் வாயாலேயே மாட்டுப்படுவார்கள். காவற்துறையினருக்கு எதிராக பணியிட மாற்றல், வேலை இடை நிறுத்தம் எனும் பூச்சாண்டி காட்ட வெளிக்கிட்டால் மூக்குடைபடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

Former Army Commander Field Marshal Sarath Fonseka said in parliament that the conduct of those who came in motorbikes could not be approved.  “It was an idiotic act. These solders have just passed grade 8 and they could have panicked and many things could have happened. There would have been a possibility of someone taking a weapon from these solders by force and firing it,” Fonseka, a battle-hardened   former officer, added.

 “I don’t approve of an armed soldier entering a place like that. Whether he came or he was sent is not an issue for me. You can have an inquiry on that,” the former Army Commander stated. He added that if necessary an inquiry on how the police conducted themselves could be done. 

இச்சம்பவம் தொடர்பில் பொன்சேகா இப்படி குறிப்பிட்டதாக கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் ஆங்கில ஊடக இணையக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This is not the time to test the patience of young protestors.

https://www.dailymirror.lk/opinion/This-is-not-the-time-to-test-the-patience-of-young-protestors/172-234692

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டக்காரரின் விளக்கங்களை கேட்டு ஒரு போலீசார் கண்கலங்கினராம், அவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் கட்டித்தழுவிகொண்டானாம். துலைஞ்ச்சுது போ....  எத்தனை விசாரணை எதிர்நோக்கப்போகிறாரோ? அல்லது சத்தமில்லாமல் கடத்தப்படுவாரோ? முகமூடிப்படை வேறை  களத்தில் இறங்கி இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து பிக்குகள் தாக்கப்பட கூடும். இந்த அரசுக்கு முண்டு கொடுத்தவர்கள் எல்லாம் துரத்தியடிக்கப்படும் நிலை வரலாம். கர்தினால் குத்துக்கரணம் அடித்து தப்பிவிட்டார் என நினைக்கிறன். மக்கள் தங்கள் உயிரை கொடுத்து இவரின் கண்ணை திறந்து விட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாம் தரம் சித்தியடைந்த இராணுவத்தை பொதுமக்கள் போராடும் இடங்களுக்கு அனுப்பக்கூடாது - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் இடங்களுக்கு இராணுவத்தினர் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இராணுவத்தில் உள்ள பலர் எட்டாம் தரம் சித்தியடைந்தவர்கள். இவர்கள் ஆவேசப்பட்டு ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட முடியும், எனவே இதனை நிறுத்த வேண்டும் எனவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்ற அமர்வுகள் நேற்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் நேற்று முன்தினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது முகமூடி, சீருடை அணிந்து, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கிகளுடன் நுழைந்தவர்கள் யார் என்ற கேள்வி எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா,

இலக்கத்தகடுகள் இல்லாத, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களில் ஆயுதத்துடன் இராணுவம் வருவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. யார் எவர் என்பது வேறு விடயம். அது குறித்து விசாரணைகளை நடத்த வேண்டும். 

அதேபோல் இராணுவ சீருடையில் உள்ள ஒருவரை பொலிசார் தாக்குவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். 

இராணுவம் பொலிசாரை தாக்கினாலும் அதற்கும் நான் எதிராகவே கருத்துக்களை முன்வைப்பேன். எவ்வாறு இருப்பினும் மக்கள்போராட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு இராணுவத்தினர் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியான நேரங்களில் எவரேனும் ஒருவர், இராணுவ வீரரிடம் இருக்கும் துப்பாக்கியை பிடிங்கி, இராணுவத்தினரை நோக்கி சுடக்கூடும் என்பதே இதற்கு காரணம் எனவும் அப்போது நிலைமை விபரீதமாக மாறும். 

எனவே இது தொடர்பில் ஆராயப்பட வேண்டும். இலக்கத்தகடுகள் இல்லாது இராணுவம் ஆயுதத்துடன் வந்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. எவரேனும் இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. இராணுவத்தில் உள்ள பலர் எட்டாம் தரம் சித்தியடைந்தவர்கள். 

இவர்கள் ஆவேசப்பட்டு ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட முடியும். ஆகவே இது குறித்து சுயாதீனமாக விசாரணைகளை நடத்தி கட்சி பேதம் இல்லாது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இராணுவம் தவறு செய்திருந்தால் அதற்கு எதிராக இராணுவ தளபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் குறித்த பொலிசார் தவறு செய்திருந்தால் அதற்கும் எதிராக பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/125416

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.