Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் இலங்கை தமிழரின் சஞ்சலமும். 

நான் ஏற்கனே திண்ணையில் எழுதிய நிலைப்பாடுதான். எனக்கென்னமோ இலங்கை தமிழர்கள்; திரும்பவும் எதையோ கோட்டைவிடுவது போல ஒரு உணர்வு. நானும் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் பற்றிய பல சிங்கள செய்திகள், பல் துறை சார்ந்தவர்களின் சிங்கள பேட்டிகள் கேட்பதோடு,  ஆர்ப்பாட்ட தளத்தில் தினமும் பங்கு கொள்ளும் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடும்  சிங்கள இளைஞர்கள் குழுக்களோடும் தொடர்பில் இருக்கிறேன், அவற்றை தொடர்ந்தும் அவதானிக்கிறேன். 
அதன்பட்சத்தில்; எந்த நேரத்தில் எமது மக்களின் பிரச்சினைகள் (காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதி விவகாரங்கள்,  முள்ளிவாய்க்கால் அழிவுகள், மற்றும் எமக்கு நடந்த 74 வருட வக்கிரங்கள் பற்றி  பேசப்படவேணுமோ அதை செய்யாதால்; எமது சோதனைகள், துன்பங்கள் வெளிச்சத்தில் அரங்கேறாமல் வெறும் இருட்டாய் , வெற்றிடமாக இருப்பதாக நான் உணர்கிறேன். 

இங்கே சிங்களவருக்கு என்ன தமிழர்களின் 74 வருட அவலங்கள் தெரியாமலா போயிற்று என்ற கேள்வி எழுவதை நான் உணருகிறேன்.  அவர்கள் பௌத்த சங்கங்களாலும், தேரர்களாலும், அரசியல்வாதிகளாலும்  லங்காபுவத், தினமின, ராவய, மவ்பிம போன்ற செய்திகளாலும் பல தசாப்தங்கள் மூளை சலவை செய்யப்பட்ட கூட்டம் என்பதையும் மறக்கக்கூடாது.
நாங்கள் எப்படி எமது தரப்பு செய்திகளுக்கு  இன்றைக்கு வரை முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல அவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில்; நீங்கள் நினைப்பதை போலவே அவர்களின் பெரும்பாலானோர் வெறும் மின்சாரத்துக்கும், டீசலுக்கு, விலைவாசிக்கும் தான் ரோட்டில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், மாற்றுக்கருத்து இல்லை. 
ஆனாலும், அங்கே இன்றைய அரசியல் செய்வோரின் (ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, இதர கட்சி) அனைவரின்  நரித்தனம், மதவாதம், ஊழல், லஞ்சம், ரவுடித்தனம், மக்களை பிரித்தாளும் தந்திரம் என்பன பற்றியும் பெரியளவில் பேசப்படுகிறது என்பதையும் கவனிக்க தவறக்கூடாது.
பௌத்த பீடங்கள், விகாராதிபதிகள், பிக்குகள் முதலானோர் பற்றிய கடுமையான பார்வை கூட ஓரளவுக்கு பார்க்கக் கூடியதாய் உள்ளது. 
நான் மேலே குறிப்பிட்டதை போல சிங்கள பேட்டிகள், மக்கள் கருத்தாடல்களிலும் கூட முஸ்லீம், கத்தோலிக்க மக்கள் பற்றிய கரிசனைகள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறிப்பிட்டு பேசப்படுகின்றன அன்றி,  தமிழர்கள்(சைவர்கள், இந்துக்கள்) போன்ற கருத்துக்கள் இயல்பாக தவிர்க்கப்படுகின்றன. இது என்னுடைய அவதானிப்பு. இதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு.

தமிழர்கள் நாங்கள் மதத்தை தூக்கி பிடிப்பவர்கள் அல்ல,  இருந்தாலும் எங்களை அவர்கள் ஒரு பொருட்டாக நோக்காமல் தாண்டிச்செல்வதும், நாங்களும் அதை கண்டும் காணாமலும் போவதும், யாரும் நாங்கள் பட்ட அனைத்து துன்பங்களையும் கணக்கிலெடுப்பதாக தெரியவில்லை. 

மேலும் ஒரு அவதானிப்பு, இன்றைய சிங்கள இளம் தலைமுறை ஓரளவுக்கு அவர்களின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி காலத்து சிந்தனைகளை தலையில் தூக்கி பிடிப்பவர்களாகவும் தெரியவில்லை. 
உதாரணமாக இன்றைக்கு என்னால் சிங்களவர்கள்  40, 50 பேர் கூடி இருக்கும் ஒரு தளத்தில் ஒருவித தயக்கமும் இல்லாமல்;  நான் எனது வாழ்க்கையில் சந்தித்த சிங்களவரின் இனத்துவேச செயல்கள், 1977, 1983 மற்றும் இலங்கை ராணுவ கொடூரங்கள், தேசிய தலைவரின் சில சிந்தனைகள், செயல்பாடுகள் பற்றி தடையின்றி பேசக்கூடியவாறு இருக்கிறது. அவர்களும் நான் பகிரும் தகவல்களை, உணர்வுகளை  இடையூறு செய்யாமல், சர்ச்சைகள் ஏற்படாமல் பொறுமையாக கேட்டு உணருகிறார்கள், சிலர் பகிரங்கமாக எமக்கு சார்பாகவும் பேசுகிறார்கள், சிலர் இந்த தவறுகளுக்கு வருந்துவதாகவும் இனிமேலாவது நாங்கள் இப்படியாக இருக்காமல் ஒற்றுமை, சமத்துவம் பேணுவோமாக  என்றும் பேசுகிறார்கள். முன்னர் இதுவெல்லாம் முடிவதில்லை, இது ஒரு சின்ன மாற்றமே அன்றி இதில் எமக்கொன்றும் தீர்வு வரும் என்று நான் கூறவில்லை. ஆனாலும் இதுவும் நிகழவேணும் என்பதே எனது உணர்வு. 
புலிகளின் காலத்தில் கூட அவர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களிடையியே தங்கள் அரசியல் கருத்துக்களை, மக்கள் அவலங்களை சிறப்பு வானொலி சேவையூடாக செய்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

இந்த சந்தர்ப்பத்தில் எமது அவலங்களை அவர்களிடம் மீண்டும், மீண்டும் நாங்கள் கொண்டுசெல்லாவிட்டால் அப்படியே ஏதாவது "நல்லது" நடந்தாலும் "காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன" கதையாக தமிழர்கள் நிலை முடியும் என்பது போல நான் உணர்கிறேன்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Sasi_varnam said:

இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் இலங்கை தமிழரின் சஞ்சலமும். 

சசிவர்ணம், அருமையான அவதானிப்புடனும்.... 
எச்சரிக்கை உணர்வுடனும் எழுதப் பட்ட கட்டுரை.  

எமது அரசியல் கட்சிகளுக்குள்  உள்ள பெரிய குறையே...
பொது விடயமான தமிழர் தீர்வில் கூட,
ஒற்றுமையாக செயல் பட மாட்டார்கள் என்பதே..
அத்துடன்.. எமது அரசியல்வாதிகளுக்கு,
தூர நோக்கு பார்வை என்பது அறவே... இல்லை.

கொழும்பில்... ஒரு வீட்டுக்கும், அமைச்சு பதவிக்கும் ஏங்கும்,
இந்த அரசியல் வாதிகாளால், மீண்டும் ஏமாறப்  போகின்றோம்... 
என்ற அச்ச உணர்வே ஏற்படுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் இலங்கை தமிழரின் சஞ்சலமும். 

நான் ஏற்கனே திண்ணையில் எழுதிய நிலைப்பாடுதான். எனக்கென்னமோ இலங்கை தமிழர்கள்; திரும்பவும் எதையோ கோட்டைவிடுவது போல ஒரு உணர்வு. நானும் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் பற்றிய பல சிங்கள செய்திகள், பல் துறை சார்ந்தவர்களின் சிங்கள பேட்டிகள் கேட்பதோடு,  ஆர்ப்பாட்ட தளத்தில் தினமும் பங்கு கொள்ளும் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடும்  சிங்கள இளைஞர்கள் குழுக்களோடும் தொடர்பில் இருக்கிறேன், அவற்றை தொடர்ந்தும் அவதானிக்கிறேன். 
அதன்பட்சத்தில்; எந்த நேரத்தில் எமது மக்களின் பிரச்சினைகள் (காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதி விவகாரங்கள்,  முள்ளிவாய்க்கால் அழிவுகள், மற்றும் எமக்கு நடந்த 74 வருட வக்கிரங்கள் பற்றி  பேசப்படவேணுமோ அதை செய்யாதால்; எமது சோதனைகள், துன்பங்கள் வெளிச்சத்தில் அரங்கேறாமல் வெறும் இருட்டாய் , வெற்றிடமாக இருப்பதாக நான் உணர்கிறேன். 

இங்கே சிங்களவருக்கு என்ன தமிழர்களின் 74 வருட அவலங்கள் தெரியாமலா போயிற்று என்ற கேள்வி எழுவதை நான் உணருகிறேன்.  அவர்கள் பௌத்த சங்கங்களாலும், தேரர்களாலும், அரசியல்வாதிகளாலும்  லங்காபுவத், தினமின, ராவய, மவ்பிம போன்ற செய்திகளாலும் பல தசாப்தங்கள் மூளை சலவை செய்யப்பட்ட கூட்டம் என்பதையும் மறக்கக்கூடாது.
நாங்கள் எப்படி எமது தரப்பு செய்திகளுக்கு  இன்றைக்கு வரை முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல அவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில்; நீங்கள் நினைப்பதை போலவே அவர்களின் பெரும்பாலானோர் வெறும் மின்சாரத்துக்கும், டீசலுக்கு, விலைவாசிக்கும் தான் ரோட்டில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், மாற்றுக்கருத்து இல்லை. 
ஆனாலும், அங்கே இன்றைய அரசியல் செய்வோரின் (ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, இதர கட்சி) அனைவரின்  நரித்தனம், மதவாதம், ஊழல், லஞ்சம், ரவுடித்தனம், மக்களை பிரித்தாளும் தந்திரம் என்பன பற்றியும் பெரியளவில் பேசப்படுகிறது என்பதையும் கவனிக்க தவறக்கூடாது.
பௌத்த பீடங்கள், விகாராதிபதிகள், பிக்குகள் முதலானோர் பற்றிய கடுமையான பார்வை கூட ஓரளவுக்கு பார்க்கக் கூடியதாய் உள்ளது. 
நான் மேலே குறிப்பிட்டதை போல சிங்கள பேட்டிகள், மக்கள் கருத்தாடல்களிலும் கூட முஸ்லீம், கத்தோலிக்க மக்கள் பற்றிய கரிசனைகள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறிப்பிட்டு பேசப்படுகின்றன அன்றி,  தமிழர்கள்(சைவர்கள், இந்துக்கள்) போன்ற கருத்துக்கள் இயல்பாக தவிர்க்கப்படுகின்றன. இது என்னுடைய அவதானிப்பு. இதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு.

தமிழர்கள் நாங்கள் மதத்தை தூக்கி பிடிப்பவர்கள் அல்ல,  இருந்தாலும் எங்களை அவர்கள் ஒரு பொருட்டாக நோக்காமல் தாண்டிச்செல்வதும், நாங்களும் அதை கண்டும் காணாமலும் போவதும், யாரும் நாங்கள் பட்ட அனைத்து துன்பங்களையும் கணக்கிலெடுப்பதாக தெரியவில்லை. 

மேலும் ஒரு அவதானிப்பு, இன்றைய சிங்கள இளம் தலைமுறை ஓரளவுக்கு அவர்களின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி காலத்து சிந்தனைகளை தலையில் தூக்கி பிடிப்பவர்களாகவும் தெரியவில்லை. 
உதாரணமாக இன்றைக்கு என்னால் சிங்களவர்கள்  40, 50 பேர் கூடி இருக்கும் ஒரு தளத்தில் ஒருவித தயக்கமும் இல்லாமல்;  நான் எனது வாழ்க்கையில் சந்தித்த சிங்களவரின் இனத்துவேச செயல்கள், 1977, 1983 மற்றும் இலங்கை ராணுவ கொடூரங்கள், தேசிய தலைவரின் சில சிந்தனைகள், செயல்பாடுகள் பற்றி தடையின்றி பேசக்கூடியவாறு இருக்கிறது. அவர்களும் நான் பகிரும் தகவல்களை, உணர்வுகளை  இடையூறு செய்யாமல், சர்ச்சைகள் ஏற்படாமல் பொறுமையாக கேட்டு உணருகிறார்கள், சிலர் பகிரங்கமாக எமக்கு சார்பாகவும் பேசுகிறார்கள், சிலர் இந்த தவறுகளுக்கு வருந்துவதாகவும் இனிமேலாவது நாங்கள் இப்படியாக இருக்காமல் ஒற்றுமை, சமத்துவம் பேணுவோமாக  என்றும் பேசுகிறார்கள். முன்னர் இதுவெல்லாம் முடிவதில்லை, இது ஒரு சின்ன மாற்றமே அன்றி இதில் எமக்கொன்றும் தீர்வு வரும் என்று நான் கூறவில்லை. ஆனாலும் இதுவும் நிகழவேணும் என்பதே எனது உணர்வு. 
புலிகளின் காலத்தில் கூட அவர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களிடையியே தங்கள் அரசியல் கருத்துக்களை, மக்கள் அவலங்களை சிறப்பு வானொலி சேவையூடாக செய்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

இந்த சந்தர்ப்பத்தில் எமது அவலங்களை அவர்களிடம் மீண்டும், மீண்டும் நாங்கள் கொண்டுசெல்லாவிட்டால் அப்படியே ஏதாவது "நல்லது" நடந்தாலும் "காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன" கதையாக தமிழர்கள் நிலை முடியும் என்பது போல நான் உணர்கிறேன்.

இந்த கருவாக்காடு ஸ்டைல்  ஆர்ப்பாட்டத்தில்   சிறிலங்கா தேசியகொடிக்கு  அதிக முக்கியத்துவம்  கொடுப்பதை கவனித்திருப்பீர்கள் என  நம்புகிறேன்...

சிங்கள அரசியல்வாதிகளுக்கும் ,பிக்குமார்களுக்கும் ,ஏன் இந்த திருந்திய சிங்கள இளைஞர்களுக்கும் இனிவரும் காலங்களில் 
தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடுப்பதில் பிரச்சனை இருக்காது ,
இந்து ,கிறிஸ்தவம்,இஸ்லாம் சம அந்தஸ்து கொடுப்பதிலும் பிரச்சனை இருக்காது..
 காரணம் சிறிலங்கா தேசியத்தினுள் எல்லாம் அடக்கம் சிறிலங்கா தேசிய பிரஜைகள்...

ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்துவமான நிலப்பரப்பை ஒரு நாளும் அங்கிகரிக்க மாட்டார்கள்... 74 வருடங்களாக அவர்கள் அதை புத்த பகவானுக்கு செய்யும் பணியாக செய்து கொண்டிருக்கிறார்கள்...

இன்று பெற்றோல்,டிசல்,பான் பருப்பு இல்லை என்ற காரணத்தால் ஆட்சியை கலைக்க சொல்கின்றனர் .....நாளை வேறு ஆட்சி வந்து சகலதும் கிடைக்க தொடங்க 
மீண்டும் வேதாளம் முருங்கையில் ஜம்ப் பண்ணும்....

ஆட்சி மாற்றத்துக்கு ஏன் தேசிய கொடி ?
கோத்தாவும் ,மகிந்தாவும் தேசிய கொடிக்கு எதிரானவர்களா?

கோத்தா இன்னும் மெளனமாக இருப்பது ஏன் என தெரியவில்லை...

கோத்தாவை நிச்சயம் அடுத்த தேர்தலில் தோற்கடிப்பார்கள் ஆனால் அதுவரை அவர் ஏதாவது செய்யத்தான் பார்ப்பார்...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் இலங்கை தமிழரின் சஞ்சலமும். 

நான் ஏற்கனே திண்ணையில் எழுதிய நிலைப்பாடுதான். எனக்கென்னமோ இலங்கை தமிழர்கள்; திரும்பவும் எதையோ கோட்டைவிடுவது போல ஒரு உணர்வு. நானும் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் பற்றிய பல சிங்கள செய்திகள், பல் துறை சார்ந்தவர்களின் சிங்கள பேட்டிகள் கேட்பதோடு,  ஆர்ப்பாட்ட தளத்தில் தினமும் பங்கு கொள்ளும் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடும்  சிங்கள இளைஞர்கள் குழுக்களோடும் தொடர்பில் இருக்கிறேன், அவற்றை தொடர்ந்தும் அவதானிக்கிறேன். 
அதன்பட்சத்தில்; எந்த நேரத்தில் எமது மக்களின் பிரச்சினைகள் (காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதி விவகாரங்கள்,  முள்ளிவாய்க்கால் அழிவுகள், மற்றும் எமக்கு நடந்த 74 வருட வக்கிரங்கள் பற்றி  பேசப்படவேணுமோ அதை செய்யாதால்; எமது சோதனைகள், துன்பங்கள் வெளிச்சத்தில் அரங்கேறாமல் வெறும் இருட்டாய் , வெற்றிடமாக இருப்பதாக நான் உணர்கிறேன். 

இதற்கு இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் அமைதியக இருப்பதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது சிங்களவர்கள் மீதோ அல்லது எந்த ஒரு சிங்கள அரசின் மீதோ உள்ள நம்பிக்கையின்மையே. ஏனெனில் இன்று வரை அங்கே உள்ள தமிழர்களில் சாதரான சிங்களவர் தொடங்கி அரசு வரை ஏதோவொரு ஆதிக்க மனப்பாங்கை காட்டுவதே ஆகும். அதுமட்டுமல்ல காலங்காலமாக இவர்களால் ஏற்பட்ட தாக்கங்கள் உளவியல் ரீதியாக ஒரு வித பயத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனால்தான் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.. 

அதே வேளை சிங்கள மக்களின் உளவியலையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 

நான் அவதானித்த வரையில் இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகங்களின் செய்திகளுக்கு பதிவிடும் சிங்கள தமிழ் மக்களின் கருத்துகளை வாசிக்கும் பொழுது, அவர்கள் இந்த அரசின் மீது வெறுப்பை கொண்டுள்ளார்கள், ஆனால் இந்த பொருளாதாரப் பிரச்சனையின் அடிப்படை உண்மையை ஏற்க விருப்பமில்லை. எங்களுக்கு நடந்தவற்றை சிலர் எழுதும் பொழுது, அதை ஓரிருவர் சாட்டுக்கு ஏதாவது எழுதினாலும், எங்களுடைய பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்பதை கடந்து போகிறார்கள் என தோன்றுகிறது. எப்பொழுது அவர்கள் இந்த பிக்குகளின் பிடியில் இருந்து வெளிவருகிறார்களோ அன்றுதான் சக இனங்களையும் மனிதர்களாக மதிப்பார்கள் என நினைக்கிறேன். 

ஆனால் புலம்பெயர் அமைப்புகள், தமிழ் அரசியல்வாதிகள்(வெளிநாட்டில் உள்ள, இலங்கையில் உள்ள)தமிழர்களுக்கான நாடு கடந்த அரசாங்கம்(?), போன்றவை, அந்தந்த நாட்டு அரசுகளின் ஊடாக, இலங்கை IMF நாடும் பொழுது இவர்கள் ஊடாக சிலவற்றை சாதிக்கலாம் என நினைக்கிறேன். வெளி அமைப்பு/நாடு ஒன்றின் அழுத்தம் இல்லாமல் அவர்கள் எங்களுக்கு நியாயமான தீர்வை வழங்க மாட்டார்கள் என நினைக்கிறேன். 

நீங்கள் கூறுவது போல இந்த சந்தர்ப்பத்தையும் நாங்கள் கோட்டைவிட்டு விடுவோமோ என்ற பயம் உள்ளது. ஆனால் எங்களால் இந்த வெளிநாடுகளில் சிங்களவர்கள் நடத்தும் அரசிற்கு எதிரான பேரணிகளில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை கூற முடியுமா? சந்தேகமே. அப்படியிருக்க இலங்கையில் உள்ள தமிழர்கள் எப்படி எங்களுக்கு நடந்தவற்றை பயமின்றி கதைக்க முடியும்? 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் எங்களால் இந்த வெளிநாடுகளில் சிங்களவர்கள் நடத்தும் அரசிற்கு எதிரான பேரணிகளில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை கூற முடியுமா? சந்தேகமே. அப்படியிருக்க இலங்கையில் உள்ள தமிழர்கள் எப்படி எங்களுக்கு நடந்தவற்றை பயமின்றி கதைக்க முடியும்? 

எம்மால் நிச்சயமாக முடியாது. புலம்பெயர் நாடுகளில் சிங்களவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் போர்க்குற்ற விசாரனைகளுக்கான கோரிக்கைகளையோ அல்லது இனவழிப்பிற்கான நீதிகோரலையோ அல்லது காணாமற்போனவர்களுக்கான நீதியையோ அல்லது எமது தேசத்தில் ஆக்கிரமிப்பில் இன்றும் ஈடுபட்டுவரும் பெளத்த - ராணுவ மேலாதிக்கத்தை அகற்றுமாறோ கேட்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால், இவை எல்லாவற்றையும் சிங்களவர்கள் பிழையானவை, முறைகேடானவை என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர்களைப்பொறுத்தவரையில்  போர்க்குற்றங்களோ, இனவழிப்போ நடைபெறவில்லை என்பதுடன், தமது நாட்டில் தாம் எங்கு வேண்டுமானாலும் விகாரைகளையோ, குடியேற்றங்களையோ அமைக்கலாம் என்கிற மனோநிலையே உள்ளது.

சிங்களவரின் பொருளாதாரப் பிரச்சினையோடு, எமது அரசியல் உரிமைகளுக்கான கோரிக்கைகளையோ, எமது அழிவிற்கான நீதி தேடலையோ சேர்ப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றுதான் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

மேலும் ஒரு அவதானிப்பு, இன்றைய சிங்கள இளம் தலைமுறை ஓரளவுக்கு அவர்களின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி காலத்து சிந்தனைகளை தலையில் தூக்கி பிடிப்பவர்களாகவும் தெரியவில்லை. 

இங்கே யாழ் இணையத்தில் தாரகி அவர்களின் கட்டுரை ஒன்றின் சிறிய பகுதியை எழுஞாயிறு அவர்கள் இணைத்திருந்தார்கள், அதில் வரும் சிங்களவர்களின் எண்ணங்களைப் பாருங்கள். அதே போல இந்த பேராசிரியர் சிங்களவர்களின் மனநிலை 6 விதமாக வகுத்திருக்கிறார். எல்லோரும் கூறுவது இதுதான் சிங்களர்வர்களின் எண்ணங்கள் மாற வேண்டும். அதற்கு அவர்கள் இந்த மதத்தின் பிடியில் இருந்து வெளிவர வேண்டும். தமிழர்கள் தங்களில் எப்பொழுதும் தங்கியிருக்க வேண்டும் என்ற போக்கு மாறவேண்டும். நாங்கள் எவ்வளவு போராட்டங்களை முன்னெடுத்தும் சாதாரன சிங்கள மக்கள் கூட எங்களுக்கு மனிதாபிமான எண்ணத்தில் கூட உதவ வரவில்லை. 

உண்மையில் இந்த சந்தர்ப்பத்தை எங்களது தமிழ் அரசியல்வாதிகள் சரியாக பயன்படுத்தி பேரம் பேச வேண்டும், அதே நேரம் எங்களுக்கு நடந்தவற்றை இவர்கள் மத்தியில் எச்சரிக்கையுடன்தான பரப்பவேண்டும், இல்லாவிடில் எங்களது கருத்துக்களை வைத்தே இன்னொரு இனவாத போரை முன்னெடுக்கவும் தயங்கமாட்டார்கள்.  

இதில் உள்ளது தாரகி சிவராம் அவர்களின் கட்டுரையில் வந்த சிறிய பகுதியை எழுஞாயிறு அவர்கள் இணைத்திருக்கிறார்கள்

Edited by பிரபா சிதம்பரநாதன்
இணைப்பு சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

இந்த கருவாக்காடு ஸ்டைல்  ஆர்ப்பாட்டத்தில்   சிறிலங்கா தேசியகொடிக்கு  அதிக முக்கியத்துவம்  கொடுப்பதை கவனித்திருப்பீர்கள் என  நம்புகிறேன்...

சிங்கள அரசியல்வாதிகளுக்கும் ,பிக்குமார்களுக்கும் ,ஏன் இந்த திருந்திய சிங்கள இளைஞர்களுக்கும் இனிவரும் காலங்களில் 
தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடுப்பதில் பிரச்சனை இருக்காது ,
இந்து ,கிறிஸ்தவம்,இஸ்லாம் சம அந்தஸ்து கொடுப்பதிலும் பிரச்சனை இருக்காது..
 காரணம் சிறிலங்கா தேசியத்தினுள் எல்லாம் அடக்கம் சிறிலங்கா தேசிய பிரஜைகள்...

ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்துவமான நிலப்பரப்பை ஒரு நாளும் அங்கிகரிக்க மாட்டார்கள்... 74 வருடங்களாக அவர்கள் அதை புத்த பகவானுக்கு செய்யும் பணியாக செய்து கொண்டிருக்கிறார்கள்...

இன்று பெற்றோல்,டிசல்,பான் பருப்பு இல்லை என்ற காரணத்தால் ஆட்சியை கலைக்க சொல்கின்றனர் .....நாளை வேறு ஆட்சி வந்து சகலதும் கிடைக்க தொடங்க 
மீண்டும் வேதாளம் முருங்கையில் ஜம்ப் பண்ணும்....

ஆட்சி மாற்றத்துக்கு ஏன் தேசிய கொடி ?
கோத்தாவும் ,மகிந்தாவும் தேசிய கொடிக்கு எதிரானவர்களா?

கோத்தா இன்னும் மெளனமாக இருப்பது ஏன் என தெரியவில்லை...

கோத்தாவை நிச்சயம் அடுத்த தேர்தலில் தோற்கடிப்பார்கள் ஆனால் அதுவரை அவர் ஏதாவது செய்யத்தான் பார்ப்பார்...

தேசியக்கொடி தாய்நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவதுடன் அதை வைத்திருப்பவர்களை தாக்காமல் இருப்பதற்காகவும் இருக்கலாம் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தம்பி  சசி உங்களது  ஆக்கத்துக்கும்  ஆதங்கத்துக்கும்...

ஆனால் என்னைப்பொறுத்தவரை 

இன்னும்  காத்திருப்பு நன்று

இன்னும் சிங்களத்துக்குள் சிதைவுகளும் நலிவுகளும் பஞ்சங்களும் பட்டிறிவின்  அடிப்படையிலான ஆக்கபூர்வமான  தேடலும்  வரணும்

இல்லையென்றால் பசி முடிந்ததும் பூதம்  மீண்டும்  முருக்க  மரத்தில்  ஏறி விடும்

இதற்கு சாட்சியாக வரலாறையும்  தங்களுக்குள் தாழ்வுகள்  வரும்போது எழுதப்பட்ட  ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒப்பந்தங்களின்  நிலையையும்

கோத்தா காத்திருப்பது  தமிழர்களை ஏதாவது  ஒரு  விதத்தில் இழுத்து  விட்டு இனவாதப்பூதத்தை கையிலெடுக்கவே  என்பதையும் இங்கே  எனது  கருத்துக்கு சாட்சியங்களாக  வைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

தேசியக்கொடி தாய்நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவதுடன் அதை வைத்திருப்பவர்களை தாக்காமல் இருப்பதற்காகவும் இருக்கலாம் என நினைக்கிறேன்

சோறு இல்லையென்றாலும் தேசிய கொடி தேவை என்றால்  கஸ்டம் தான்.....
சோறு இல்லை என்றால் தேசிய கொடி
சக இனத்தை கொலை செய்தால் தேசிய கொடி
கிரிக்கெட் வென்றால் தேசிய கொடி

இந்த கொடிவெறியும் ,மத வெறி இனவெறி க்கு சமன் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

எம்மால் நிச்சயமாக முடியாது. புலம்பெயர் நாடுகளில் சிங்களவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் போர்க்குற்ற விசாரனைகளுக்கான கோரிக்கைகளையோ அல்லது இனவழிப்பிற்கான நீதிகோரலையோ அல்லது காணாமற்போனவர்களுக்கான நீதியையோ அல்லது எமது தேசத்தில் ஆக்கிரமிப்பில் இன்றும் ஈடுபட்டுவரும் பெளத்த - ராணுவ மேலாதிக்கத்தை அகற்றுமாறோ கேட்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால், இவை எல்லாவற்றையும் சிங்களவர்கள் பிழையானவை, முறைகேடானவை என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர்களைப்பொறுத்தவரையில்  போர்க்குற்றங்களோ, இனவழிப்போ நடைபெறவில்லை என்பதுடன், தமது நாட்டில் தாம் எங்கு வேண்டுமானாலும் விகாரைகளையோ, குடியேற்றங்களையோ அமைக்கலாம் என்கிற மனோநிலையே உள்ளது.

சிங்களவரின் பொருளாதாரப் பிரச்சினையோடு, எமது அரசியல் உரிமைகளுக்கான கோரிக்கைகளையோ, எமது அழிவிற்கான நீதி தேடலையோ சேர்ப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றுதான் நினைக்கிறேன். 

உண்மையான கருத்து ...அவர்களை பொறுத்தவரை அழிவுகளுக்கு காரணம் புலிகள்,புலிகளை ஒழித்து விட்டோம் அங்கு நடந்தது பயங்கரவாதிகளின் அழிப்பு இனவழிப்பு இல்லை என நம்புகிறார்கள் ...அதைத்தான் வெளிநாடுகளும் நம்புகிறது.. எமது  இனவழிப்பை தமிழ்ர்களை தவிர வேறு எவரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் ....ஐ.நா மனித உரிமைகள் சபையே ஏற்றுக்ககொள்ள வில்லை சாட்சியங்கள் இருந்தும்.....நேற்று  யுக்ரேயினில் நடந்த விடயத்தை அடுத்த நாளே இனவழிப்பு  மீறல் என கூறுகிறார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.