Jump to content

இருவகை பிரியாணி - திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி, ஹைதராபாதி சிக்கன் பிரியாணி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2020 இல் இந்த pandemic துவங்கியபோது, நிறைய நேரம் சும்மா இருந்தது. அப்பொழுது பிரியாணி செய்து பாப்போம் என்று விதம் விதமான ரெஸிபிகள், YouTube விடீயோகள் நிறைய பார்த்து செய்வது. ஆரம்பத்தில் ஒன்றுமே சரியாக வராது, தண்ணி அளவு பிழைக்கும், அல்லது அடிப்பிடிக்கும், சரியான ingredients இருக்காது, தம் சரியாக வைக்க வராது. அப்பிடி இருந்து படிப்படியாக  இப்பொழுது, விருப்பமான சுவையில், உறைப்பில்  செய்யும் அளவுக்கு வந்துவிட்டேன். ஒரே குறை, பிரியாணி செய்வது கொஞ்சம் நேரம் எடுக்கும் வேலை

இதில்  ஹைதராபாதி சிக்கன் பிரியாணி , எனது மகன்களில் ஒருவருக்கு பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு கிழமையும் அவருக்காகவே செய்வேன், நாங்களும் சாப்பிடுவோம். இந்த பிரியாணி மற்றைய வகைகளை விட கொஞ்சம் இலகுவானது, தண்ணி அளவு அவ்வளவு முக்கியமில்லை. இதற்கு நூற்று கணக்கில் விடியோக்கள் உள்ளது, நான் எனக்கென்று ஒரு அளவு, ingredients, செய்முறை  வைத்து செய்வேன். எங்கள் மிளகாய்த்தூள் கூட கொஞ்சம் போடுவதுண்டு.

தலப்பாக்கட்டி பிரியாணியும், வெவ்வேறு விடியோக்கள் பார்த்து பல தடவை செய்திருக்கிறேன், சில வேளைகளில் சரி வரும், சில வேளைகளில் பிழைக்கும். இந்த வகை பிரியாணிக்காக முன்பு வாங்கிவைத்த சீரக சம்பா அரிசி மூட்டை சும்மா இருந்ததால்,  கிட்டடியில் வேறு ஒரு நல்ல விடியோவை பார்த்து கடந்த இரண்டு தடவை செய்தது மிகவும் சுவையாகவே வந்தது.  இப்பொழுது இது எப்பிடி சரியாக செய்வது என்று கொஞ்சம் பிடிபட்டு விட்டது.

ஒரு கிழமைக்கு முன், முழுநாள் ஓய்வு கிடைத்தபோது இரண்டுவகை பிரியாணிகளையும் ஒரே நாளில், நேரம்  எடுத்து செய்தேன். நான் இப்பிடியெல்லாம் செய்தேன், எனக்கு இப்பிடியெல்லாம் செய்யத்தெரியும் என்று வேறெங்கே படம் காட்டுவது😆? அதனால் கொஞ்ச படங்கள் கீழே: 

20220421-130308.jpg

20220421-130324.jpg

ஹைதராபாதி சிக்கன் பிரியாணி

20220421-115506.jpg

20220421-115523.jpg

திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி

20220421-114405.jpg

தலப்பாக்கட்டி பிரியாணி செய்யும் முறை கீழே, இதில் இவர் போடும் காரம், தண்ணி அளவைவிட எனக்கு கொஞ்சம் கூட போட வேண்டி இருந்தது:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைவரே நான் தம் பிரியாணி மாதத்தில் ஒருதடவை மட்டும் எண்டு முறைவச்சு பாஸ்மதி அரிசியில் செய்வேன்.. முதலில் வீடியோக்கள் பாத்து கொஞ்சம்தடுமாறி தடுமாறி பிழைகள் சரிகளோடு செய்து செய்து இப்பொழுது என் சொந்த ஸ்டைலை கண்டடைந்து செய்கிறேன்.. செமயாக இருக்கும்.. அடுத்தமாதம் செய்யும்போது வீடியோ போடுரன்.. கைதரபாத் பிரியாணி மட்டும் செய்ய தெரியா.. பாஸ்மதி அரிசி என்பதால் உடல் நலத்துக்கு கூடாது என்பதால் மாதத்தில் ஒரு முறை மட்டும் என்று முறைவைத்து செய்வேன்.. ஆனால் சீரகச்சம்பா அரிசி பாஸ்மதிபோல் உடல் நலத்துக்கு அவ்வளவு தீங்கானது அல்ல.. நன்றி பகிர்விற்கு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓணாண்டி, நீங்கள் செய்யும் முறையை பார்க்க ஆவலாக உள்ளேன், செய்துவிட்டு படங்கள், செய்முறையுடன் போடுங்கள், நாங்களும் செய்து பார்க்கலாம். இதைவிட வேறு வகை புரியாணிகளும் செய்துள்ளேன், அடிக்கடி செய்வதில்லை. சீராக சம்பா அரிசி சுவை கொஞ்சம் வித்தியாசமானது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீர்வேலியான் உங்களது பிரியாணி இரண்டும் பிரசன்ட்டேசன் சுப்பராய்  இருக்கு .......ஹைதராபாத் சிக்கன் முட்டை போடுவதில்லையா .......அதில் ஒரு முழு முட்டை வைத்திருந்தால் இன்னும் நல்லாய் இருந்திருக்கும்.....அல்லது திண்டுக்கல் பிரியாணியில் இருக்கும் முட்டையை எடுத்து வைத்தாவது படமெடுத்திருக்கலாம்.......!

திண்டுக்கல் பிரியாணியும் கலக்கலாய் இருக்கு.....ஆனால் அந்த முட்டையை சரிபாதியாக நீளவாக்கில் வெட்டி வைத்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்......வெங்காயம் நல்ல வடிவாக பொன்நிறமாக வதங்கி இருக்கு.......நெய் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.....போத்தலில் நிறையத்தான் இருக்கும்......நாங்கள்தான் அளவாகப் போடவேணும்.......மற்றும்படி எல்லாம் சூப்பர்.......!

( குறை நினைக்க வேண்டாம், குக் வித் கோமாளியின் பாதிப்பு)

செஃவ் தாமுவின் தாசன் ......!   👍  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, suvy said:

சுவி,
முட்டை எல்லா பிரியாணிக்கும் வைக்கலாம், பசியில் இருந்ததால் முட்டையை, முதலாவது செய்த பிரியாணியுடன் சாப்பிட்டு விட்டேன்! இந்தியர்கள் போல், நெய் நான் நிறைய போடுவதில்லை, பார்த்தால் நிறைய போட்டது போல் உள்ளதா? உங்கள் கருத்துகள், திருத்தங்களை எப்போதுமே வரவேற்கிறேன், நீங்கள் சொன்ன புரோக்ராம் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. சிறப்பானதா?     

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நீர்வேலியான் said:

விஜய் டீ .வீ யில் சனி ஞாயிறுகளில் வரும் சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.......கலகலப்பாகப் போகும்.....நேரமிருந்தால் நீங்களும் ஒருமுறை பார்க்கலாம்.....அதில் வரும் விமர்சனம் போலத்தான் சும்மா பகிடிக்கு எழுதினேன் .........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்புக்கு நன்றி நீர்வேலியான்.

யுவர் ஆனர் உங்க வீட்டுக்கு வரலை என்றதுக்காக ரொம்பவும் கடுப்பேத்துறீங்களே!

சரி சரி காலம் இடம் கொடுத்து சுகமா இருந்தா வந்து பாயை போட்டு படுக்க தான் இருக்கு.

புரியாணி சூப்பராக இருக்கு.எனக்கு மிகவும் பிடித்தது.முன்னரெல்லாம் அடிக்கடி சாப்பிடுவோம்.நெய்யை ஊத்துறதால இப்ப வருடம் ஒருக்கா என்ற நிலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.