Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாணப்படுத்தலை ஏன் சிங்களவர்கள் ரசிக்கின்றனர்... -ஜெரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Courtesy: ஜெரா

இலங்கை மீளவும் தீப்பற்றி எரியத்தொடங்கியிருக்கின்றது. கடந்த 70 வருட காலமாக இடம்பெற்ற வன்முறைகளில் இந்நாட்டின் பெரும்பான்மையினராகிய சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்குவார்கள். அல்லது முஸ்லிம்களைத் தாக்குவார்கள். அவர்தம் சொத்துக்களை சூறையாடுவார்கள். தீ வைப்பார்கள். தாம் தாக்கும் இனத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்கள் என எந்த வித்தியாசமும் பார்க்காது அடித்துத் துன்புறுத்திக் கொல்வார்கள். இறுதியில் அகப்படுபவரை நிர்வாணமாக்கி தெருத்தெருவாக இழுத்துச் சென்று இன்புறுவார்கள். இவையனைத்தையும் செய்துமுடிக்க அவர்களுக்கு ஒரு சாராயப் போத்தல் போதுமானதாகும்.

இப்போது 2022. உலகம் நவீன தொழில்நுட்பத்துறையில் அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. மனித விழுமிய மாண்புகளும், சக உயிரினங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள் குறித்தெல்லாம் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டுவருகின்றது. இந்நிலையில் சிங்கள காடையர்களோ மீண்டும் வன்முறையில் இறங்கியிருக்கின்றனர். ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அதிகார இருப்பிற்காக பலியிடப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள காடையர்கள் வன்முறையில் ஈடுபடும்போது மேற்கொள்ளும் வயதுவரம்பு பாராத தாக்குதல்கள், சொத்தெரிப்புகள், நிர்வாணமாக்கி ரசிப்பது என அத்தனை படிமுறைகளையும் இப்போதும் பின்பற்றுகிறார்கள். இத்தகைய காடையர்கள் மேற்கொள்ளும் வழமையான வன்முறைகளுக்கும், தற்போது அவர்கள் மேற்கொள்ளும் வன்முறைகளுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அது என்னவென்றால், சிங்களவர்கள் தமக்குள்ளேயே மோதிக்கொள்வதுதான். உள்ளின வன்முறையில் ஈடுபடுவதுதான்.

ராஜபக்ச குடும்பத்தினரது எதேச்சாதிகார ஆட்சியை அகற்றுவதற்காக கடந்த ஒரு மாத காலமாக காலி முகத்திடலில் “அன்பின் போராட்டம்” நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கும், ராஜபக்சக்களின் ஆதரவாளர்களுக்குமிடையிலான வன்முறை. ஆரம்பத்தில் ராஜபக்சக்களின் ஆதரவாளர்களின் கையோங்கியிருந்தாலும், விரைவாக தன்னின இயல்பை புதுப்பித்துக்கொண்ட “அன்பின் போராட்டக்காரர்கள்” விரைவாகத் தாக்கத்தொடங்கினர். வெறித்தனமான வன்முறையில் ஈடுபட்டு, தம் உள்ளின எதிரணியினரை நிர்வாணப்படுத்தி குதூகலித்தனர்.

இவ்வாறு சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடும்போது தம் எதிரிகளை நிர்வாணப்படுத்தி ரசிப்பது ஏன்?

வன்முறைகளின்போது நிர்வாணப்படுத்தி ரசிக்கும் வன்கலைக்கும் நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. அகிம்சையையும், உயிர்நேசி்த்தலையும் வாழ்வின் தத்துவமாகப் போதித்த புத்தரின் பாதத்தின் கீழ் அமர்ந்து எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றை மகாவம்சம் என்ற நூல் தருகிறது.

தமிழர்கள் மீதான வன்முறையை வரலாற்றில் கட்டவிழ்த்துவிடும் நோக்கோடு படைக்கப்பட்ட இந்நூலில் அதிகளவு போர்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், நிர்வாணம் பற்றி எங்கும் குறிப்பிடப்பவில்லை. நிர்வாணப்படுத்தி, சித்திரவதைக்குட்படுத்தி கொலைசெய்யப்பட்ட – வெளித்தெரிந்த சில சம்பவங்களை இவ்விடத்தில் பதிவிடலாம்.

இலங்கை வரலாற்றிலேயே 1971 தொடக்கம் 1977 வரையான காலப் பகுதியில் மிகமோசமான அரச பயங்கரவாத ஆயுத வன்முறைகள் நடத்தப்பட்டன. கம்யூனிச சிந்தாந்தத்தின் அடிப்படையில் இலங்கை நாட்டைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர றோகண விஜயவீர தலைமையில் போராடிய ஜே.வி.பியினரை ஒடுக்க அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போதே முதலாவது நிர்வாண சம்பவம் பதிவாகியுள்ளது.

“கதிர்காமத்து அழகி” எனப் பட்டமளிக்கப்பட்டிருந்த பௌத்த பாட ஆசிரியையான பிரேமாவதி மனம்பெரி ஜே.வி.பி ஆயுதக் குழுவினருக்கு ஆடைகள் தைத்துக்கொடுத்திருந்தார். அதனை அறிந்துகொண்ட இலங்கை இராணுவம் அவரைப் பிடித்து சித்திரவைக்குட்படுத்திக் கொன்றது. கொன்றது மட்டுமல்லாது நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்தியது. இவ்வாறு தன் சொந்த இனப் பெண்ணையே நிர்வாணப்படுத்தியதோடுதான், இலங்கையின் நிர்வாண ரசிப்பு வரலாறு ஆரம்பிக்கிறது.

1956 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் மீது சிங்களவர்கள் வன்முறைகளை மேற்கொண்டபோதும், நிர்வாணப்படுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தரவுகளைப் பெறமுடியவில்லை. தமிழர்களை நிர்வாணப்படுத்தி ரசித்த முதல் சம்பவம் 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த நிழற்படம் நம் அனைவருக்கும் நினைவிருக்கும்.

பேருந்து நிலையமொன்றில் உயிர் தப்பித்தலுக்காக சிக்கிக்கொண்ட தமிழர் ஒருவரை சுற்றிவளைத்திருக்கும் சிங்கள வன்முறையாளர்கள் அவரை நிர்வாணப்படுத்தி, சூழநின்று சிரித்து மகிழ்ந்துகொண்டிருப்பார்கள். தமிழர் மீது நடத்தப்பட்ட வன்முறைகளது கோரத்தின் அத்தனை வலிகளையும் வெளிப்படுத்தி நின்ற அந்த மனிதர் பின்னர் உயிர் பிழைத்தாரா? கொலைசெய்யப்பட்டு கொதிக்கும் தாரில் வீசப்பட்டாரா? உயிரோடு தீயில் தூக்கயெறியப்பட்டாரா? அல்லது எல்லாவற்றிலிருந்தும் தப்பி உயிரோடிருக்கிறாரா என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆனால் அவர் அந்தக் கனத்தில் வெளிப்படுத்திய அவமானம், பயம், ஏக்கம், கவலை என அத்தனை உணர்வுகளும் சந்ததி கடத்தப்பட்டிருக்கிறது.

1984 ஆம் ஆண்டில் மணலாற்றுப் பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள், அப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களை வன்முறைகளை ஏவி துரத்தினார்கள். அதன்போது, மணலாற்றுப் பகுதியில் இருந்த கிராமம் ஒன்று காடையர்களால் சுற்றிவளைக்கட்டது. அதில் சிக்கிக்கொண்ட பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்முறைக்குட்படுத்தி, அவரை நிர்வாணப்படுத்தி சித்திவதைக்குட்படுத்தினர். அதிலிருந்து தப்பித்து தென்னமரபடி வரைக்கும் நிர்வாணமாகத் ஓடி வந்த அப்பெண், சிங்கள காடையர்கள் வருகிறார்கள் என்ற செய்தியை அக்கிராம மக்களுக்கு அறிவித்துவிட்டு, அவமானம் தாங்காது தீயில் விழுந்து இறந்துபோனாள்.

இதனைவிட போர்க்காலத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்காக வவுனியா கடந்து செல்லும் விடுதலைப் புலிகளின் போராளிகள் கைதுசெய்யப்பட்டால் அவர்களை நிர்வாணப்படுத்தி தண்டனைக்குட்டுபடுத்தும் காட்சிகளையும், விடுதலைப் புலிகளின் போராளிகளது இறந்த உடல்கள் கிடைப்பின் அதனையும் நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று இன்பம் காணும் சம்பவங்களைத் தமிழர்கள் அறிந்திருக்கின்றனர். அந்தக் குரூரங்கள் இலங்கையின் வரலாற்றில் எங்கேயும் பதிவுசெய்யப்படவில்லை.

நிர்வாணப்படுத்தி ரசிக்கும் காட்சிகளின் உச்சத்தை இறுதிப் போர்க்காலத்திலேயே தமிழர்கள் அதிகம் அனுபவித்தனர். இராணுவத்திடம் சரணடைந்த பெண் போராளிகள், ஆண் போராளிகள் எனப் பலர் நிர்வாண நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. போராளிகள் தவிர மக்கள்கூட தம் நிர்வாணத்தை இராணுவத்திடம் காட்டிய பின்னரே சரணடைய அனுமதிக்கப்பட்டனர்.

பெண் – ஆண், வயது என எந்த வித்தியாசங்களுமின்றி ஒரு கூடாரத்துக்குள் தம்மை நிர்வாணப்படுத்திக் காட்டும்படி கட்டளையிடப்பட்டார்கள். இதன் விளைவாகவே, “இனி இழக்க எங்களிடம் எதுவுமில்லை. எங்களிடம் ஒன்றுமில்லை என்பதை ஆமிக்காரனுக்கு கழற்றிக்காட்டிப்போட்டுத்தான் வந்தனாங்கள். இந்த உயிருக்கு ஒரு மயிர் பெறுமதிகூட இல்லை” என்ற வார்த்தைப் பிரயோகம் வன்னி மக்களின் நாளாந்த வாழ்வில் இப்போதும் பரிச்சயமானதாக இருக்கிறது. இதற்காகத் தான் நிர்வாணப்படுத்துகின்றனர்.

தம் எதிரிகள் இனி உயிர்வாழவேக் கூடாது என்னும் அளவிற்கு அவமானப்படல் வேண்டும். எத்தனை தலைமுறைக்கும் பெருவலியாக அது கடத்தப்பட வேண்டும். அந்த உளவியல் சிங்கள இனம் மீதான பயப்பீதியை ஏற்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற உளவியலின் அடிப்படையில்தான் நிர்வாணப்படுத்தலை ரசிக்கிறார்கள்.

எனவே இங்கு நிர்வாணப்படுத்தல் என்பது ஒருவித இனவழிப்பு ஆயுதம். ஒரு துப்பாக்கி ரவைக்கு இருக்காத வீரியத்தை, ஒரு எறிகணைத்துண்டுக்கு இல்லாத தசையை துளைத்தெடுக்கும் சக்தியை நிர்வாணப்படுத்தல் ஆறாவடுவாக ஏற்படுத்திவிடுகிறது. இந்த ஆறா வடுவிற்காகவே நிர்வாணப்படுத்தப்படுகின்றனர்.

இனமொன்றின் இயல்பைத் தீர்மானிப்பதில், அவ்வின உருவாக்கம் தொடர்பான நம்பிக்கை (Myth) மிக முக்கியமானது. சிங்கள இனவுருக்கத்துடன் சொல்லப்படும் நம்பிக்கையானது மிருகத்தோடும் மனிதரோடும் இணைத்தே புனையப்பட்டிருக்கிறது. சிங்கமொன்று இளவரசியைக் கடத்தி சென்று குகையில் சிறைவைத்திருந்த காலத்தில் பிறந்த பிள்ளைகளில் இருந்தே சிங்கள இனம் பல்கிப் பெருகியது என்ற நம்பிக்கை இனவுருவாக்க கதையாகப் பின்தொடரப்படுகிறது.

முரண்மிகு இந்த நம்பிக்கை சிங்கள இனத்தின் உளவியலைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியிருக்கிறது. அதேபோல இலங்கையில் சிங்களவர் அரச உருவாக்கமும், தந்தையினாலேயே கட்டுப்படுத்தமுடியாத ஒழுக்கம் தவறியவனான விஜயனின் வருகையுடன்தான் ஆரம்பிக்கிறது. விஜயன் தன் 700 தோழர்களுடன் இலங்கைத் தீவை அடைந்தவுடன் செய்த முதற் காரியமும் தமிழர்கள் என்று நிரூபிக்கப்படும் குவேனி குலத்தின் ஆண்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்தமைதான்.

எனவே தன்னினத்தின் வரலாற்றை, அவ்வினமே, முரண்களோடும், வன்முறையோடும், இனப்படுகொலையோடும் உருவாக்கிவைத்திருக்கிறது. அதனைப் புனிதப்படுத்திப் பேணுகின்றது. இந்நிலையில் அதன் இனவுருவாக்க உளவியல் எப்படியானதாக இருக்க முடியும்..! இத்தகைய பின்னணியில்தான் நிர்வாணப்படுத்தல் பிறரை அச்சுறுத்தும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது

நிர்வாணப்படுத்தல் ஒடுக்குமுறையின் வலிமை மிக்க ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. தன் எதிராளியின் வாழ்க்கையை நிமிரமுடியாதளவுக்கு சிதைக்கும் கதாயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிங்களவர்கள் நேசிக்கும் அவர்தம் கடவுளரான புத்த பகவானோ நிர்வாணம் பற்றி வேறொரு அர்த்தத்தைத் தருகிறார். ஆசைகளைத் துறந்து பற்றற்று வாழ்தலே நிர்வாணம் என்கிறார். நிர்வாணம் ஆன்ம ஞானத்தைத் தருகிறது என்கிறார். நிர்வாணத்திற்கு இப்படியொரு அர்தத்தைக் கொடுத்த புத்தபகவானின் பக்தர்களோ, நிர்வாணத்தை கூரிய ஆயுமென்கின்றனர்.       

நிர்வாணப்படுத்தலை ஏன் சிங்களவர்கள் ரசிக்கின்றனர்... - தமிழ்வின் (tamilwin.com)

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பிழம்பு said:

இனி இழக்க எங்களிடம் எதுவுமில்லை. எங்களிடம் ஒன்றுமில்லை என்பதை ஆமிக்காரனுக்கு கழற்றிக்காட்டிப்போட்டுத்தான் வந்தனாங்கள். இந்த உயிருக்கு ஒரு மயிர் பெறுமதிகூட இல்லை”

நிர்வாணம் ஆன்ம ஞானத்தைத் தருகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

நிர்வாணம் ஆன்ம ஞானத்தைத் தருகிறது 

புத்தர் அரசமரத்தடியிலை பரி நிர்வாணம் அடைந்தார் எண்டதை பிழையா விளங்கீட்டினம் போல.... 🥺

  • கருத்துக்கள உறவுகள்

பரிநிர்வாணம் எண்டதை, நிர்வாணம் என புரிந்துகொண்டுள்ளார்கள். 

இதுக்கெல்லாம் காரணம் புத்தன் நிர்வாணம் அடைந்ததுதான் காரணம். இதுக்கு காரணமான புத்தனைப் புடிச்சு வெளுக்கோணும். 

(எல்லாம் (மண்டைக்க) ஏறிவிட்டதா என்று ஆசிரியர் கேட்டதற்கு, வகுப்பறையின் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவன் (எலியின்)  வால்மட்டும் ஏறயில்ல என்று கூறிய மாணவனின் மனநிலையில்தான் கட்டுரையாசிரியர் இருக்கிறார்)

🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.