Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழ் அகதியின் வழக்கில் பிரிட்டிஷ் நீதிமன்றம் நேற்று திருப்புமுனையான முக்கிய தீர்ப்பு

Featured Replies

பிரிட்டனில் அகதிஅந்தஸ்துக் கோரி விண்ணப்பம்செய்த ஈழத்தமிழர் ஒருவரின் வழக்கில் திருப்புமுனையான, முக்கியமான தீர்ப்பை பிரிட்டனின் அகதி மேன்முறை யீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது.

வழக்குத்தாக்கல் செய்த அகதி, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் அந்நாட்டு அரசாங்கத்தால் கைது செய்யப் பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படு வார் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்புமூலம், பிரிட்டனின் உள் துறைத் திணைக்களத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான அணுகுமுறையிலும் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள அவர்களுடைய மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான சட்டநிவாரணங்களிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வவுனியாவைச் சேர்ந்த பிரஸ்தாப நபர் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்ட னில் தஞ்சம்கோரியிருந்தார். அவரது அகதி அந்தஸ்துக் கோரிக்கை 2005ஆம் ஆண்டு உள்துறை அமைச்சினால் நிராகரிக்கப்பட் டது. அவரது மேன்முறையீடும் அதே ஆண் டில் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் அவர்செய்த மேன்முறையீட்டை விசாரித்த, பிரிட்டிஷ் அகதிகள் விவகார மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு வழங்கியது.

1999ஆம்ஆண்டு சம்பந்தப்பட்டவர் இலங்கைப் படையினரால் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டு ஐந்து தினங்கள் வைத்து சித்திரவதை செய்யப்பட்டபின்னர் களுத் துறைச் சிறைச்சாலையில் தடுத்துவைக் கப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தினால் பிணையில் விடு விக்கப்பட்ட இவர், மீண்டும் தாம் கைது செய்யப்படலாம் என அஞ்சி பிரிட்டனுக்கு வந்து அகதிஅந்தஸ்துக் கோரியிருந்தார்.

Wednesday August 08 2007 08:48:48 AM GMT

அனேகமாக உலக மனித உரிமை அமைப்பின் அறிக்கை அடிப்படையில்தான் அகதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள் தீர்ப்பு அழிப்பார்கள்... இப்போது அங்கு பிரச்சினை இல்லை எண்று மனித உரிமை அமைப்பு அறிக்கை வெளியிட்டால் அதையே காரணமாக்கி வழக்குகளின் தீர்ப்பில் அகதி அந்தஸ்தை நிராகரிப்பார்கள்....

முக்கியமாக யாராவது வெளிநாடுகளுக்கு வந்து அகதி அந்தஸ்து கோரும் இடத்து முக்கியமாக சொல்ல வேண்டியது எனது உயிருக்கு ஆபத்து என்பதை தான்.. அண்ணாவை கொண்றவன், அப்பாவைகொண்று விட்டார்கள் என்பது எல்லாம் வழக்குகளில் எடுபடுவதில்லை...

விடுதலைபோரில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக அரச படைகள் சந்தேகிக்கின்றன... அதனால் நான் தேடப்படும் நபர்... என்னை தேடி பலரை துன்புறுத்தி இருக்கிறார்கள்.. நான் பிடிபட்டால் கொலை செய்து விடுவார்கள் என்பதை சொல்ல வேண்டும்...

அதை விட்டு என்னை ஆமி பிடிச்சு வச்சு இருந்து காசு கொடுத்து வெளீல வந்திட்டன் என்பதுக்கும்... அதிகாரிகளின் பதில் நீ பிரச்சினையானவர் இல்லை... அதனால்தான் அரச படைகள் உன்னைவெளியில் விட்டு விட்டார்கள்... ஆதலால் நீ தாராளமாக கொழும்பில் தங்கலாம் என்பதாகும்...

இன்னும் சிலர் எனக்கு புலிகளால் பிரச்சினை என்னை கொல்ல போகிறார்கள் எண்று வழக்கு கொடுதவர்களை எனக்கு தெரியும்.... அதுக்கு இங்குள்ள அதிகாரிகளின் பதில்... உமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது இலங்கை அரசாங்கம்.. நாங்கள் அல்ல...!!

தமிழர்களுக்குச் சார்பான இத் தீர்ப்பு ஸ்ரீலங்காவில் நடந்துகொண்டிருக்கும் இராணுவ அராஜக ஆட்சியையும் இன ஒருக்குமுறையையும் உலக அரங்கில் வெளிக்கொணர்ந்துள்ளது. இதை இலங்கை அரசுக்கெதிரான பிரச்சாரங்களில் சாட்சியாகப் பயன்படுத்தத் தவறக்கூடாது.

UK in landmark Sri Lanka ruling

By Saroj Pathirana

BBC News

_44047230_aaaaa.jpg

The tribunal's ruling has given hope to other Sri Lankan asylum seekers

Sri Lankan Tamil asylum seekers in the UK are at risk of torture if returned to Sri Lanka, according to a landmark ruling by a British tribunal.

An asylum and immigration tribunal on Monday upheld an appeal by a Sri Lankan refugee known only as Mr LP.

The ruling is also intended to offer guidance for similar cases in the UK.

Mr LP's lawyers argued that he was at risk of torture if he returned home because of his perceived support for Tamil Tiger separatists.

'Substantive weight'

"This is the first such judgement after the breakdown of the Sri Lankan Cease Fire Agreement (CFA) signed in 2002," said Arun Gananathan, a lawyer from the firm who represented Mr LP.

The fact that the Tamil Tigers are banned in the UK should not affect Sri Lankan asylum seekers who are their supporters

Barrister Fritz Kodagoda

He said that the judgment has set a precedent for future cases about Sri Lankan asylum seekers.

"However, the tribunal has made it clear that every case need to be assessed individually," Mr Gananathan said.

The tribunal ruled that a 2006 UN High Commission for Refugees (UNHCR) report on Sri Lankan asylum seekers could be used as the basis for providing protection to Mr LP in the UK.

The British Home Office had argued against this.

"Individuals suspected of having (rebel) Tamil Tiger affiliations are at risk of human rights abuses by the authorities or government-sponsored paramilitary groups," the UNCHR report had said.

The tribunal ruled that the report carried "substantive weight".

Under earlier rulings, only those who were "actively engaged" with the Tamil Tigers were considered genuinely capable of arguing that they faced persecution by the Sri Lankan authorities.

Endangered

But the ruling on Wednesday said that Tamil Tiger sympathisers - including relatives and those who have not actively taken part in combat - are also in danger.

_44047234_tigerpatrol2_ap.jpg

The Tigers are fighting in the north and east of Sri Lanka

The Tigers are fighting for a separate state in the north and east of Sri Lanka. They are banned in the UK as a terrorist outfit.

"According to the ruling, the fact that the Tamil Tigers are banned in the UK will not affect Sri Lankan asylum seekers who are their supporters," said Fritz Kodagoda, a Sri Lankan barrister in London.

Over 60 Sri Lankan asylum seekers have been on hunger strike over their planned repatriation to Sri Lanka from several UK detention camps.

The asylum seekers said their lives would be in danger if they are forced back.

Human rights groups say both the government and the rebels have committed abuses against each other's supporters.

There has been no immediate response from the Sri Lanka government on the ruling, but on Monday it strongly denied a report by Human Rights Watch which accused the security forces of gross human rights violations.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6937471.stm

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை திருப்பியனுப்பும் போது இலங்கையில் சித்திரவதைகளுக்கான ஆபத்துக்கள் அதிகம்: பிரித்தானியா சிறப்பு நீதிமன்றம்

தமிழர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பும் பட்சத்தில் அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் சித்திரவதைகளுக்கான ஆபத்துக்கள் அதிகம் என்று அகதி அந்தஸ்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த பிரித்தானியாவின் அகதிகள் மற்றும் குடிவரவிற்கான சிறப்பு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

உயர்மட்ட விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களே இலங்கையில் தடுத்து வைக்கப்படுவதாகவும், சித்திரவதை செய்யப்படுவதாகவும், விடுதலைப் புலிகளுடன் குறைந்த அளவு தொடர்புகளை உடையவர்களை சிறிலங்கா அதிகாரிகள் தடுத்து வைப்பதில்லை என்ற உள்நாட்டு அலுவலகத்தின் வாதத்தையும் சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பின்வரும் பட்டியலில் கீழ் உள்ளவர்களுக்கு இலங்கையில் ஆபத்துக்கள் அதிகம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

1. தமிழ் மக்கள்

2. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் அல்லது சந்தேக நபர்கள்

3. முன்பு குற்றச்செயல்களை புரிந்தவர்கள் அல்லது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள்

4. தடுப்புக்காவலில் இருந்து தப்பியவர்கள் அல்லது பிணையில் செல்ல அனுமதித்த போது தப்பியவர்கள்

5. குற்றங்களுக்காக கையெழுத்திட செல்பவர்கள்

6. படையினரால் தகவல் தருபவராக செயற்படுமாறு கேட்கப்படுபவர்கள்

7. உடற்காயங்களுக்கு உள்ளானவர்கள்.

8. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளை செய்த பின்னர் பிரித்தானியா அல்லது வேறு நாடுகளில் இருந்து சிறிலங்கா திரும்புவோர்

9. சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறியோர்

10. அடையாள அட்டைகள் அல்லது வேறு ஆவணங்கள் அற்றவர்கள்

11. வெளிநாடுகளில் புகலிடத் தஞ்சம் கோரியவர்கள்

12. விடுதலைப் புலிகளின் உறவினர்கள்.

மனித உரிமை மீறல்கள் உள்ள மிகவும் ஆபத்தான நாடாக இலங்கை உள்ளதனை நீதிமன்ற தீர்ப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கையிலிருந்து வந்து புகலிடத் தஞ்சமடையும் தமிழர்களை வெளியேற்றுவதை போத்துக்கல் அரசு அண்மையில் நிறுத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் மேலும் ஒருவரின் வழக்கு விசாரணையின் போது அவரை மறு அறிவித்தல் வரை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்த வேண்டாம் என கடந்த ஜூன் 25 ஆம் நாள் உத்தரவிட்டிருந்தது.

- புதினம்

நன்றி : Tamilflame.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.