Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொலர் வரக்கூடிய ஒரு வழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

இதை பற்றி தான் கதைக்கிறோம்.

அனால், அதி சொல்லப்பட்டு இருக்கும் defacto, dejure, legal tender என்பதில் பிரச்சனை இருக்கிறது.

legal tender என்று வந்தால், currency விநோயொகம், மற்றும் வழங்குதலை யார் செய்வது, ஹிந்தியை மத்திய வாங்கி தானே?

அந்த நிலையில், கிந்தியா சிங்களத்தின் கொளகைகளை கட்டுப்படுத்தலாம், அதற்கு வேண்டிய விதத்தில்.

அதாவது, சிங்களத்தின் இறைமை படிப்படியாக பறி போகும், அத்துடன் இந்த நிலையில் இலங்கைத்தீவின் பொருளாதாரம் கிதியாவுக்குள் இழுக்கப்படும்.

வெளியில் மீண்டு வருவதும் சுலபம் அல்ல.        
 
On 28/6/2022 at 16:02, Kadancha said:

பசிபிக் தீவுகளின் நிலை வேறுபட்டது.

ஆனால், பசிபிக் தீவுகள், nz நாணயத்தை கைவிடமுடியுமா என்றால், பொருளாதாரம் படுக்காமல், கை  விட முடியாது. 

உ.ம். ஆக பசிபிக் தீவுகள் சிலவற்றின் வெளியாக பாதுகாப்பை கூட US பொறுப்பேற்று கொண்டு இருக்கிறது,

ஆனால்  அவை இறைமை கொண்ட அரசுள்ள  நாடுகள்  என்கின்றன, உண்மையில் அவை protectorate.

இது போன்றதே நாணயத்தில் உள்ள ஏற்பாடாகும்.  

கொஞ்சம் விளக்கமாகக்கூறவும்.

  • Replies 56
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இதுதான் இலங்கையில் இந்தியா 75ஆண்டுகளாக ஆடிய  விளையாட்டின் end game என நீங்கள் நினைக்கவில்லையா?

7 hours ago, goshan_che said:

ஆனால் சிங்களவர் இதை ஜீரணிக்க கஸ்டபடுவார்கள். 

கிந்தியாவுக்கு அது வேண்டும் தான். அத்துடன் மேற்கும், குறிப்பாக US உம் அதை விரும்புகிறது.

அனால், பிரச்சனை சிங்கள அரசியல் வாதிகள் மட்டும் அல்லாது, புத்தி ஜேவிகள், intelligentsia, திறமை, திறன்  சார் வர்க்கம்,  அதை விடுத்த  சகல தட்டு, தர சிங்கள மக்கள் எல்லோரும் அதை வெறுக்கிறார்கள்.   

உ.ம். ஆக, என்னக்கு தெரிந்தவருடன் கதைக்கும் போது, யாழில் இருப்பவர் அவர்களின் வயலில் இருந்து நெல்  வந்ததால் அரிசி  கையிருப்பில் இருப்பதை மட்டும் 2009 க்கு பின்  தெரிந்த சிங்களவரிடம் சொல்ல, அந்த சிங்களவர்  சொன்னது உங்களுக்கு கிந்தியா தரும் தானே எனவே நீங்கள்  கவலைப் படவேண்டியதில்லை என்று. 

பின் அவர்  எப்படி அரிசி கையில்ருப்பில் வந்தது என்பதை சொல்ல,  சிங்கள  கிராமப்புறங்களில்   அந்த நிலை இருப்பதாக அந்த சிங்களவர் சொல்லி உள்ளார். 

இப்படியான நிலையில். அநேகமாக மகிந்த, கோத்தாவின் கட்சியே உடைந்து விடும், கோத்த இறங்கவேண்டிய நிலையம் வரலாம்.

இப்போதே ஹிந்தியை சிங்களத்தின் இறைமையை சிறிது சிறிதாக எடுக்கிறது எனும் அரசியல் பிரச்சாரம், சிங்கள அரசியலில் ஓரளவு நியாயத் தன்மையோடு  கதைக்கும் அரசியல் வாதிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎06‎-‎2022 at 02:28, vasee said:

கோசான் நீங்கள் கூறும் இந்திய நாணயம் இலங்கை நாணயத்தினை மாற்றீடு செய்யுமா என கேட்டால் எனது புரிதலின் படி ஆம் என்பதுதான் பதில், அதற்கான  சாத்திய கூறு 90 % உள்ளதாகக்கருதுகிறேன்.

ஏனெனில் இந்தியாதான் இலங்கையின் முக்கிய வர்த்தக பங்காளி.

1. அது நிகழ்வதற்கு இலங்கை நாணயப்பணவீக்கம் மிகையாக அதிகரித்தல்

2. இலங்கை நாணயம் பெறுமதியிழத்தல்

பல நாடுகளில் இந்த மாதிரியான  பகுதி மற்றும் முழுமையான நாணய மாற்றீடு காலங்காலமாக நிகழ்கிறது அதில் எந்த சிக்கலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

சீனா இரண்டு நாணெயங்களை கொண்ட நாடு உள்நாட்டு நாணயம் வெளிநாட்டு வர்த்தக நாணயம் என 2 நாணயங்களை கொண்ட  நாடு.

சில பசுபிக் தீவுகள் நாடுகள் நியுசிலாந்து நாணய்த்தினை தமது நாட்டில் பயன்படுத்துகின்றன.

மன்னிக்கவும் கோசான், கடஞ்சா நீங்கள் விவாதிப்பது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை, இலகுவான முறையில் கூறினால் புரியக்கூடியதாக இருக்கும்.

மன்னிக்கவும் நான் எப்போதும் கடைசி வரிசை மாணவன். 

அப்பாடா நான் எனக்கு மட்டும் தான் விளங்கவில்லை என்று நினைத்தேன் ...இருவரும் இதில் எழுதுவதையும் பார்க்க தனி மடலில் உரையாடலாம் ...சுத்தமாய் விளங்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2022 at 18:21, ரதி said:

அப்பாடா நான் எனக்கு மட்டும் தான் விளங்கவில்லை என்று நினைத்தேன் ...இருவரும் இதில் எழுதுவதையும் பார்க்க தனி மடலில் உரையாடலாம் ...சுத்தமாய் விளங்கவில்லை

4 அல்லது 5 மாதங்களுக்கு முன்னர், இலங்கை பணம் வலு இழந்தால் இந்திய பணம் பயன்படுத்தப்பட சாத்திய கூறு அதிகமுள்ளது என நான் கூறியபோது, ரதி, நீங்கள் கேட்டிருந்தீர்கள் அது எப்படி சாத்தியம் என.

இரு வேறுபட்ட நாணயமாற்று விகிதத்தில் அது சாத்தியமா என்பதான கேள்வி  என நினைக்கிறேன்.

வெறுமனே ஒரு சிம்பாவே காணொளி ஒன்றினை பதிலாக போட்டுவிட்டேன், மன்னிக்கவும்,

ஆனால் உண்மையில் வேறு நாட்டு பணத்தினை மற்ற நாட்டில் பதீலீடாகப்பாவிக்கும்போது மேலே கூறுவது போல் பிரச்சினைகள் இருக்குமா என்பது அப்போதும் தெரியாது, இப்போதும் தெரியாது.

ஒரு நாட்டின் முகப்பெறுமதி நாணயத்தினை ( Fiat currency) பாதுகாப்பது, குறித்த நாட்டின் அரசினால் உருவாக்கப்படவோ அல்லது அந்த நாட்டின் சட்டம் மூலம் பாதுகாக்கப்படுவதில்லை, அதனை மக்களே அதற்கான அங்கீகாரத்தினை அந்த பணத்தின் மீது வைக்கும் நம்பிக்கையால் உருவாக்குகிறார்கள்.

இதனை நான் கூறவில்லை, பொருளாதார நிபுணர் கார்ல் மேக்னர் கூறுகிறார்.

அது ஒரு உண்மையும் கூட உதாரணமாக சிம்பாவேயில் பல ஆண்டுகளுக்கு முன் சிம்பாவே அரசினால் வெளியிடப்பட்ட சிம்பாவே 100 டொலருக்கு சட்ட அங்கீகாரம் கூட இருக்கலாம் ஆனால் இப்போது அதற்கு பழய மதிப்பினை பெறமுடியாத ஒரு அரச குப்பை.

பணத்தின் முக்கிய தொழில்பாடு பர்மாற்று ஊடகமாகத்திகழ்வது (Medium).

ஒரு நாட்டில் அதன் எல்லைக்குள்ளேயே, அதிலும் குறிப்பாக அரச வளாகத்திற்குள்ளேயே அந்த நாட்டின் பணத்திற்கு மேலாக சிகரட் பரிமாற்று ஊடகமாகத்திகழ்கிறது, அது சிறைசாலைக்குள்.

வங்கி காசோலைகள் கூட முகப்பெறுமதி மட்டும் கொண்டவை, அதற்கு அரசினால் உருவாக்கப்பட வேண்டும் என்றோ அல்லது சட்ட அங்கீகாரமும் தேவையில்லை அதனை பயன்படுத்தும் மக்கள் அங்கீகரித்தால் போதும்.

இதனை Fiduciary money என்பார்கள் அதே போல இந்திய நாணயமும் பயன்படுத்தலாம் எனும் அபிப்பிராயத்திலே இருந்தமையால் அதனை ஆளமாக நோக்கவில்லை.

கோசான் ஒரு சுவாரசியமான ஒரு கருத்தை தொடங்கியிருந்தார், அதற்கு பதிலழித்த கடஞ்சாவின் பதில் எனக்கு முதற்தடவையாக இன்னொரு பரிணாமம் இருப்பது தெரிகிறது, ஆனால் அது தொடர்பாக இணையத்தில் எதுவும் இல்லாத்தனாலேயே அதனை விளக்கமாக கூறுமாறு கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

அதனை விளக்கமாக கூறுமாறு கேட்டேன்.

ஒன்றும் நான் சொல்லாமல், ஒருமுறை சிந்தித்து பாருங்கள், NZ டாலர் பாவிக்கும் பசிபிக் தீவு, அதை ஒன்றில் கைவிடுவதாக முடிவு எடுத்தால், அதன் பொருளாதாரம் ஓரிரவில் படுத்து விடும்.

 சரி பசிபிக் தீவு, முக்கிய கேந்திர முடிவை எடுக்கிறது, US /NZ  கூட்டின் நலன்களை மிகவும் பாதிக்கும் முடிவு, அந்த பசிபிக் தீவை NZ சொல்லலாம், அந்த கேந்திர முடிவுக்குப் பின் NZ டாலர் ஐ  அந்த தீவு பாவிக்க கூடாது, NZ first level sanctions ஐ கொண்டுவரும் என்று.

சாதாரணமான peg இல் கூட இறைமை தேய்வடையும்.

இலங்கை  தீவு, ஹிந்தியா  என்பதை பொறுத்தவரையில், இது ஓர் தனித்துவமான ஆபத்து சிக்கல் தன்மை வாய்ந்தது - ஏனெனில், சமகால அனுபவம், வரலாறு, பொருளாதாரம், புவியியல் கேந்திர வகிபாகம் எல்லாம் சேர்ந்து உருவாகும் விளைவு ஒருவராலும் எதிர்வு கூற முடியாது, இலங்கை தீவு அதன் நாணயம் மீதான இறைமையை கைவிட்ட பின். (அப்படி சிங்களம் கைவிடும் என்றால், கிந்தியாவுக்குக்கு பழம் நழுவி பாலில் விழுந்த கதை).

நீங்கள் சொல்லும் face value என்பது யதார்த்தமானது (இதை பற்றி முன்பே சொல்லி இருக்கிறேன், இது எவ்வாறு உருவாகுவது என்று), ஆனாலும் அந்த குறிப்பிட்ட (ஒன்றில் அந்த (உள்) நாட்டு அரசு அல்லது புழக்கத்துக்கு வரும் நாணயத்தை கொண்டுள்ள அரசு) அரசின் sovereign guarantee தேவை.

face value உருவாக்கத்தை வைத்து பார்த்தால் - நாணயம் பெறுமானத்தை கடத்துவது,  பெறுமானம் எதாவது ஒன்றை (பொதுவாக உழைப்பு) கொடுத்து (கிந்திய) நாணயத்தை பெறுகிறோம், இப்பொது பெறுமானம் வேறு ஓர் அரசின் (கிந்திய) அரசின் financial system இல் - அந்த பெறுமானத்தை (aggregate) மீள எவ்வாறு பெறுவது? 

(கிட்டத்தட்ட காஸ்மீர் நிலையில் வந்து முடிவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம், யதார்த்தம், ஏனெனில் கிந்தியா establishment இன்  போக்கானது expansionist ஆக தான் இன்னமும் இருக்கிறது) 

Theoretical ஆக, தமிழ் ஈழம்  எனும் அரசு (இருக்கிறது என்று வைத்தால்)  இப்படையான நிலையில் இருக்கிறது என்றால், உங்களில் எவரேனும் தமிழீழ அரசின்  நாணயத்தை (தற்கலிகமாக, இதை போன்ற அரசியல், சமூக, பொருளாதர, கேந்திர பூகோள நிலையில்)  கைவிடுவதற்கு ஒப்புக்  கொள்வீர்களா? 

கொள்கை  அளவில் (மக்கள் திண்டாட்டம் வேறு), சொறி  சிங்களம் அவ்வளவு பிரச்சனையை எதிர் நோக்கவில்லை. எல்லோரும் உதவி செய்ய ஆயத்தம். எப்படி என்பதே கேள்வி. 
 
இதில் விழங்குவதற்கு சிக்கல்கள் ஒன்றும் இல்லை.

அனால்,  சிங்களம் ஹிந்தியை நாணயத்தை கையில் எடுத்தால், தமிழருக்கு வாய்ப்பாக அமையலாம் (ஜம்மு காஸ்மீர் நிலையில்).
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

நன்றி கடஞ்சா.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎-‎07‎-‎2022 at 14:55, vasee said:

4 அல்லது 5 மாதங்களுக்கு முன்னர், இலங்கை பணம் வலு இழந்தால் இந்திய பணம் பயன்படுத்தப்பட சாத்திய கூறு அதிகமுள்ளது என நான் கூறியபோது, ரதி, நீங்கள் கேட்டிருந்தீர்கள் அது எப்படி சாத்தியம் என.

இரு வேறுபட்ட நாணயமாற்று விகிதத்தில் அது சாத்தியமா என்பதான கேள்வி  என நினைக்கிறேன்.

வெறுமனே ஒரு சிம்பாவே காணொளி ஒன்றினை பதிலாக போட்டுவிட்டேன், மன்னிக்கவும்,

ஆனால் உண்மையில் வேறு நாட்டு பணத்தினை மற்ற நாட்டில் பதீலீடாகப்பாவிக்கும்போது மேலே கூறுவது போல் பிரச்சினைகள் இருக்குமா என்பது அப்போதும் தெரியாது, இப்போதும் தெரியாது.

ஒரு நாட்டின் முகப்பெறுமதி நாணயத்தினை ( Fiat currency) பாதுகாப்பது, குறித்த நாட்டின் அரசினால் உருவாக்கப்படவோ அல்லது அந்த நாட்டின் சட்டம் மூலம் பாதுகாக்கப்படுவதில்லை, அதனை மக்களே அதற்கான அங்கீகாரத்தினை அந்த பணத்தின் மீது வைக்கும் நம்பிக்கையால் உருவாக்குகிறார்கள்.

இதனை நான் கூறவில்லை, பொருளாதார நிபுணர் கார்ல் மேக்னர் கூறுகிறார்.

அது ஒரு உண்மையும் கூட உதாரணமாக சிம்பாவேயில் பல ஆண்டுகளுக்கு முன் சிம்பாவே அரசினால் வெளியிடப்பட்ட சிம்பாவே 100 டொலருக்கு சட்ட அங்கீகாரம் கூட இருக்கலாம் ஆனால் இப்போது அதற்கு பழய மதிப்பினை பெறமுடியாத ஒரு அரச குப்பை.

பணத்தின் முக்கிய தொழில்பாடு பர்மாற்று ஊடகமாகத்திகழ்வது (Medium).

ஒரு நாட்டில் அதன் எல்லைக்குள்ளேயே, அதிலும் குறிப்பாக அரச வளாகத்திற்குள்ளேயே அந்த நாட்டின் பணத்திற்கு மேலாக சிகரட் பரிமாற்று ஊடகமாகத்திகழ்கிறது, அது சிறைசாலைக்குள்.

வங்கி காசோலைகள் கூட முகப்பெறுமதி மட்டும் கொண்டவை, அதற்கு அரசினால் உருவாக்கப்பட வேண்டும் என்றோ அல்லது சட்ட அங்கீகாரமும் தேவையில்லை அதனை பயன்படுத்தும் மக்கள் அங்கீகரித்தால் போதும்.

இதனை Fiduciary money என்பார்கள் அதே போல இந்திய நாணயமும் பயன்படுத்தலாம் எனும் அபிப்பிராயத்திலே இருந்தமையால் அதனை ஆளமாக நோக்கவில்லை.

கோசான் ஒரு சுவாரசியமான ஒரு கருத்தை தொடங்கியிருந்தார், அதற்கு பதிலழித்த கடஞ்சாவின் பதில் எனக்கு முதற்தடவையாக இன்னொரு பரிணாமம் இருப்பது தெரிகிறது, ஆனால் அது தொடர்பாக இணையத்தில் எதுவும் இல்லாத்தனாலேயே அதனை விளக்கமாக கூறுமாறு கேட்டேன்.

நன்றி வசி ..அடிப்படை விளங்காத அளவிற்கு முட்டாள் இல்லை .கடஞ்சாவின் தமிழ் புரிவது கொஞ்சம் கஷ்டமாய் உள்ளது  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.