Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கால பைரவரின் சிலை மது அருந்துவதைக் கண்டுள்ளீர்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img1070730013_1_1.jpgimg1070730013_2_2.jpg

வீடியோ

சிலை ஏதாவது மது அருந்துவதை கண்டுள்ளீர்களா? நிச்சயம் இல்லை என்றுதான் கூறுவீர்கள். சிலை எவ்வாறு மது அருந்த முடியும்? சிலை உயிரற்ற ஒன்று, நமது அனுபவத்தைப் பொறுத்தவரை உயிரற்ற எதற்கும் பசியோ, தாகமோ ஏற்படாது என்றுதான் கூறுவோம்... ஆனால், உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்) நகரில் உள்ள கால பைரவர் சிலை இதற்கு விதிவிலக்கு. கால பைரவர் சிலைக்கு பக்தர்கள் மது அளிக்கிறார்கள். அந்த மதுவை அவர்கள் கண்ணெதிரிலேயே அச்சிலை குடிக்கிறது.

நம்பினால் நம்புங்கள் என்பதன் தொடர்ச்சியாக இந்த சிலையின் மர்மம் என்ன என்பதை அறிய புறப்பட்டோம். அதற்காக, கோயில்களின் நகரம் என்றும், மஹாகாளீஸ்வரரின் (சிவபெருமானின் 12 ஜோதி லிங்க திருத்தலங்களில் ஒன்று) நகரம் என்றும கூறப்படும் உஜ்ஜைன் நகருக்குச் சென்றோம்.

மஹாகாளீஸ்வரர் கோயிலில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள கால பைரவர் கோயிலிற்குச் சென்றோம். கோயிலின் பிரதான வாயிலிற்கு அருகே சென்றபோது அங்கு ஆச்சரியம் காத்திருந்தது. கோயிலிற்கு வெளியே பூஜைக்காகவும், அர்ச்சனை செய்யவும் பயன்படுத்தும் பொருட்களை விற்கும் கடைகளில் பூக்களுடன் மது பாட்டில்களும் விற்கப்படுவதைக் கண்டோம். சில பக்தர்கள் மது பாட்டில்களை வாங்கிச் செல்வதையும் பார்த்தோம்.

இக்கோயிலைப் பற்றிக் கூறப்படும் மர்மம் குறித்து அங்குள்ள கடைக்காரரான ரவிவர்மா என்பவரிடம் விசாரித்தோம். அவர் கூறினார், "பைரவரின் கோயலிற்கு வரும் ஒவ்வொரு பக்தரும் அந்தக் கடவுளிற்கு மதுவை அளிக்கின்றனர். மது நிரப்பப்பட்ட கிண்ணம் பைரவரின் வாயைத் தொட்டதும் அதிலிருந்த மது மறைந்துவிடுகிறது" என்று கூறினார்.

கோயிலிற்குள் நுழைந்தோம், அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஒவ்வொருவர் கையிலும் அர்ச்சனைக்காக கொண்டுவரப்படும் பூக்கள், உடைப்பதற்கான தேங்காய் ஆகியவற்றுடன் ஒரு மது பாட்டிலும் அவர்கள் வைத்திருந்த அர்ச்சனைக் கூடையில் இருந்தது.

கோயிலின் கருவறையில் (பைரவரின் சிலை உள்ள இடத்தில்) ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று பைரவர் எப்படி மது குடிக்கிறார் என்பதனைக் காண காத்திருந்தோம். கருவறையின் சூழலே வித்தியாசமாக இருந்தது. அங்கிருந்த பூசாரி கோபால் மகராஜ் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே மது ஊற்றப்பட்ட தட்டு ஒன்றை கால பைரவரின் வாய்க்கு கொண்டு சென்றார்... அவ்வளவுதான்!!!... அந்தத் தட்டில் ஒரு துளி மது கூட மிச்சமிருக்கவில்லை.

இப்படி ஒவ்வொரு பக்தரும் அளிக்கும் மது தட்டில் ஊற்றப்பட்டு சிலையின் வாயில் வைக்கப்படுவதும், தட்டிலிருந்து மது மாயமாவதும்... எங்களின் கண்களுக்கு முன்னாலேயே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த பூசாரி கொடுத்த மதுவை அச்சிலை குடித்துக் கொண்டிருந்தது.

இதுபற்றி ராஜேஷ் சதுர்வேதி என்ற பக்தரிடம் பேசினோம். தான் உஜ்ஜைனில் வசித்து வருவதாகவும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இக்கோயிலிற்கு வருவதாகவும் கூறிய அவர், ஆரம்பத்தில் தனக்குக்கூட இந்த மது எங்கே செல்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்ததாகவும், ஆனால் அதைக் கால பைரவர்தான் குடிக்கின்றார் என்பதை தற்பொழுது முழுமையாக நம்புவதாகவும் கூறினார்.

இந்த கால பைரவர் கோயில் 6,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலை வாம் மார்கி தாந்திரிக (மந்திர சக்திகள் கொண்ட) தலம் என்று கூறுகிறார்கள். இந்த வகைக் கோயில்களில் தசை, மது, பணம் ஆகியன கடவுளிற்கு அளிக்கப்படுகிறது.

புராண காலத்தில் தாந்திரிகள் மட்டுமே இக்கோயிலிற்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், பிறகு எல்லோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மர்மத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஏராளமான விவாதங்கள் நடந்துள்ளது. கணக்கிலடங்கா ஆராய்ச்சிகளும் நடந்துள்ளது. ஆனால், இது எப்படி நிகழ்கிறது என்று விளக்கப்படவேயில்லை.

ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஒரு வெள்ளைய அதிகாரி இந்த சிலை பற்றிய உண்மையை வெளிக்கொணர முயற்சித்ததாகவும், ஆனால் அவருடைய முயற்சி பூஜ்ஜியத்தில்தான் முடிந்ததாகவும் சிலர் கூறினர்.

அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் நாங்கள் ஆராய்ந்தோம். பலருடனும் விவாதித்தோம். இறுதியில் கால பைரவர் சிலை மது அருந்துவது நிஜம்தான் நாங்களும் நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

இந்த நம்பிக்கையின் துவக்கம் : இப்படிப்பட்ட பாரம்பரியம் எத்தனை பழமையானது என்பது யாருக்கும் தெரியவில்லை. சிறு வயது முதலே தாங்கள் இக்கோயிலிற்கு வருவதாகவும், கால பைரவருக்கு மது அளித்து வருவதாகவும் சில பக்தர்கள் கூறினர். முற்காலத்தில் மதுவுடன் இங்குள்ள பலி பீடத்தில் விலங்குகளும் பலியிடப்பட்டதாகவும், ஆனால் தற்போது மது மட்டுமே அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில் உஜ்ஜைன் நகர நிர்வாகமும் கால பைரவருக்கு மது அளிக்கிறது.

வெப்டுனியா

Edited by Kishaan

என்ன சிலை மது அருந்துதா...........நல்லா தான் இருக்கு............கிஷாண் அண்ணா இதை பற்றி அறிவாளியான உங்கள் கருத்து என்ன............அத்தோட எனக்கு ஒரு டவுட் எனி விரதம் எல்லாம் இருக்க தேவையில்லை போல சிலை மது குடிக்கிறது பிறகு மச்சமும் சாப்பிடும் தானே பிறகு ஏன் விரதம் எல்லாம் இருக்கீனம் சில பேர்.... :P :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருந்தாலும் உங்களுக்கு நக்கல்தான்.. :lol:

என்ன சிலை மது அருந்துதா...........நல்லா தான் இருக்கு............கிஷாண் அண்ணா இதை பற்றி அறிவாளியான உங்கள் கருத்து என்ன............அத்தோட எனக்கு ஒரு டவுட் எனி விரதம் எல்லாம் இருக்க தேவையில்லை போல சிலை மது குடிக்கிறது பிறகு மச்சமும் சாப்பிடும் தானே பிறகு ஏன் விரதம் எல்லாம் இருக்கீனம் சில பேர்.... :P :lol:

இதே மாதிரி பிள்ளையார் பால் குடிச்ச கதையின் விஞ்ஞான விளக்கம் இதிலை இருக்கு.. அதே மாதிரிதான் இதுவும் இருக்கும் என்று நினைக்கிறேன்..

http://en.wikipedia.org/wiki/Hindu_milk_miracle

http://www.ibnlive.com/news/science-behind...s/19175-11.html

Scientists say the milk was disappearing from the spoons of the devotees not due to the slurping by the idols, rather because it was caused by surface tension, a force that pulls the liquid toward the statues, and capillary action, through which the milk is leached into the statues by tiny pores on the surface of the stone.

"Milk disappears the same way water reaches the top of a tree through roots," A. K. Sharma, a professor at Lucknow University told the AP.

http://www.allheadlinenews.com/articles/7004605758

http://www.ibnlive.com/news/science-behind...s/19175-11.html

Edited by Kishaan

பஞ்ச பாதக விதிகளை மீறி மது அருந்துவதன் மூலம் பைரவர் என்ன சாதிக்கப் போகிறாரோ தெரியவில்லை.

கோயில் 6000 வருடம் பழமையானது என்பது பொய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனால் கடவுளே தண்ணி அடிக்கிறார்.. நாங்கள் அடிச்சால் என்ன என்று எல்லோரும் நியாயப்படுத்தப்போகிறார்கள

சிலவேளை சுத்துமாத்து செய்து வைரவரின் வாய்க்குள்ள Vacuum cleaner போன்ற ஏதாவது ஒன்றை (மதுவை உள்ளே இழுக்கும்படி) வைத்து சிலையை செய்தார்களோ தெரியாது..

யாருக்குத் தெரியும்? :o

கிஷாண் அண்ணா உங்களாள மட்டும் தான் இப்படி யோசிக்கம் முடியும்......... B) :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னவோ சந்தேகமா தான் இருக்கு.

இவர் வைரவருக்கு ஊத்திக் குடுக்கேக்க ஏன் வாயினுள் கொண்டு செல்கிறார்கள்? வாயின் உள் புறம் எப்படி இருக்கும் என்பது காட்டப்படவில்லை. அதை மூடி மறைத்துள்ளார்கள்.

எனது ஆராய்ச்சியின் படி யாரோ ஒருத்தன் வைரவரின் வாயினுள் குழாய் கோட்டு ஊறிஞ்சி எடுக்கின்றான்.

இதில் உள்ள வீடியோவில் காட்சிகள் நல்ல தெளிவாக உள்ளன. ஆனால் தட்டில் மது ஊத்தப்படுவதும், பைரவரின் வாய்க்கருகில் தட்டை வைப்படும் அடிக்கடி காட்டப்பட்டு உடனே காட்சி மாற்றப்படுகிறது. ஒரு தடயையேனும் மது மறைவது காட்டப்படவில்லை.

அருகிலுள்ள மதுக்கடைக்கு நல்ல வருமானமாக இருக்க வேண்டும்.

வைரவரை மதுவோடு மட்டும் நிறுத்தச்சொல்லுங்கள்.

மாது வேண்டாம்

எப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். வடிவேல் சொல்வதுபோல் றூம்போட்டு யோசிப்பாங்களோ ? ?? ? ?

வைரவரை மதுவோடு மட்டும் நிறுத்தச்சொல்லுங்கள். மாது வேண்டாம்

எப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். வடிவேல் சொல்வதுபோல் றூம்போட்டு யோசிப்பாங்களோ ? ?? ? ?

:o:o

முதலில் ஜனங்களை கொஞ்சமாவது அறிவை வளர்க்க தூண்டவேணும். இல்லாவிட்டால் வைரவர் வைரமாலையே எடுத்துத் தருவார். என்னத்தை சொல்ல. :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிஷாண் அண்ணா உங்களாள மட்டும் தான் இப்படி யோசிக்கம் முடியும்......... B) :P

இப்படி யோசித்தால்தான் இந்த உலகத்திலை வாழமுடியும்.. அல்லது காதிலை பூவை சுத்திப்போடுவாங்கள்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே தண்ணி அடிக்கிறார் பிறகு என்ன ஆண்கள் எல்லாரும் அடிக்கலாம் தண்ணி

இப்படி யோசித்தால்தான் இந்த உலகத்திலை வாழமுடியும்.. அல்லது காதிலை பூவை சுத்திப்போடுவாங்கள்.. :o

ஆமாம் பேபி கூட உங்களிட்ட இருந்து நிறைய விசயம் படிக்க வேண்டும் போல கிடக்கு............நீங்க ஒரு அறிவு கடல் ஆச்சே........... :P B)

கடவுளே தண்ணி அடிக்கிறார் பிறகு என்ன ஆண்கள் எல்லாரும் அடிக்கலாம் தண்ணி

கறுப்பி அக்காவே சொல்லிட்டா பிறகு என்ன...........எல்லாரும் அடியுங்கோ....... :P

எப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். வடிவேல் சொல்வதுபோல் றூம்போட்டு யோசிப்பாங்களோ ? ?? ? ?

பரணி அண்ணா ரூம் கூட அவையின்ட காசில போடமாட்டீனம் நம்ம அறிவில்லாத சனம் அதற்கும் காசு கொடுக்கும்........... :P

:o:o

முதலில் ஜனங்களை கொஞ்சமாவது அறிவை வளர்க்க தூண்டவேணும். இல்லாவிட்டால் வைரவர் வைரமாலையே எடுத்துத் தருவார். என்னத்தை சொல்ல. :D:D

அறிவான ஆட்கள் தான் அண்ணா இப்படி எல்லாம் திரியினம்.........அதுக்கு சிறந்த உதாரணம் சாய்பாபா அவரிட்ட போற ஆட்களை பார்க்க விளங்கும்..............உதை தான் சொல்லுறது கேட்கிறவன் கே..... இருந்தா எருமை மாடு ஏரோபிளேண் ஓட்டும் என்று அவர் நல்லா தான் ஓட்டுறார்............வைரமாலை இல்லை எல்லா மாலையும் தருவார்....... :P ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி அக்காவே சொல்லிட்டா பிறகு என்ன...........எல்லாரும் அடியுங்கோ....... :P

அண்ணா எனக்கு தண்ணி வேண்டி தாங்கோ :P

அண்ணா எனக்கு தண்ணி வேண்டி தாங்கோ :P

அது பெரிய ஆட்கள் குடிகிறது உங்களுக்கு தேவையில்லை நானே குடிக்கவில்லை பேபி உங்களிற்கு வேண்டுமோ............ ;) :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது பெரிய ஆட்கள் குடிகிறது உங்களுக்கு தேவையில்லை நானே குடிக்கவில்லை பேபி உங்களிற்கு வேண்டுமோ............ ;) :P

நீங்க தானே சொன்னீங்க அக்கா சொல்லீட்டா எல்லாரும் அடியுங்கோ என்டு???? :lol:

நீங்க தானே சொன்னீங்க அக்கா சொல்லீட்டா எல்லாரும் அடியுங்கோ என்டு???? :lol:

அக்கா சொன்னது எல்லா ஆண்களும் அப்ப நீங்க ஆணா :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா சொன்னது எல்லா ஆண்களும் அப்ப நீங்க ஆணா :P

அப்ப நீங்க ஆணில்லையா????? :lol: :P B)

அப்ப நீங்க ஆணில்லையா????? :lol: :P B)

நான் சொன்னது உங்களிற்கு............ஏன் என்றா நீஙக் தானே கேட்டீங்க வேண்டும் என்று அப்ப நீங்க ஆணா..... :P :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொன்னது உங்களிற்கு............ஏன் என்றா நீஙக் தானே கேட்டீங்க வேண்டும் என்று அப்ப நீங்க ஆணா..... :P :P :P

அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியிலை நீங்கள் ஆணா பெண்ணா என்ற விவாதத்திற்கு வந்திட்டமாதிரி இருக்கு.. :)

நீங்கள் கேட்டது "இன்னிசை"க்கு விளங்கலபோல இருக்கு.. :lol:

அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியிலை நீங்கள் ஆணா பெண்ணா என்ற விவாதத்திற்கு வந்திட்டமாதிரி இருக்கு.. :)

நீங்கள் கேட்டது "இன்னிசை"க்கு விளங்கலபோல இருக்கு.. :lol:

ஆமாம் கிஷாண் அண்ணா விவாதம் என்று வந்திட்டா பிறகு கிஷாண் அண்ணாவின்ட பெருமையை எடுத்து காட்ட பேபி அந்த மாதிரி விவாதம் பண்ணும் பயப்பிடாதையுங்கோ.......... :P ;)

இன்னிசைக்கோ அவாவிற்கு விளங்கிட்டு ஆனா விளங்காத மாதிரி போயிட்டா..........பின்னா நாம் யாரு......... :D B)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.