Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

 

பக்கத்துல நீயிருந்தும்
பாவிமனம் பாக்கல
கண்ணுக்குள் நீரிருந்தும்
காணாமல் தூங்கல
பாசம் வெச்ச நேச மச்சான்
பேசாம போவதேன்
உள்ளுக்குள் உன் நெனப்பு
உறங்காம விழிப்பதேன்
உன்னோடு வாழ வழியில்ல
உன் நெனப்ப மறக்க முடியல
எங்கே நான் செல்ல தெரியல
என் நேசம் ஏனோ! புரியல
ஒத்தச் சொல் சொன்னாயே 
உள்ளத்துல ஒசுரா நின்னாயே 
எங்கே நீ சென்றாயோ?
என்னை நீ மறந்தாயோ!
நேசம் வெச்ச ஆசை மச்சான்
என் நெனப்பு பேசலையா!
சுவாசிக்கும் காற்றும்
என் மனவலியச் சொல்லலையா?

சரவிபி ரோசிசந்திரா

Posted
On 22/6/2022 at 18:35, ஈழப்பிரியன் said:

சரசு
இது சினிமா பாட்டா?கவிதையா?

இது நான் எழுதிய கவிதை சகோ

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.