Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்கால திட்டத்தை... மக்களிடம் முன்வைத்த, போராட்டக்காரர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அடுத்து… வேறு எவரை நம்பி, களம் இறக்கலாம் என நினைகிறீர்கள்.

இதுதான் முதலில் தீர்க்கபட வேண்டிய பிரச்சனை.

ஊரில் உள்ள எந்த தமிழ் அரசியல்வாதியையும் நம்பமுடியவில்லை. சரி. நானும் ஏற்கிறேன்.

புலம்பெயர்தேசத்தில் யாரின் அழைப்பில் ஜெனிவா போய் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களோ, எவரின் சொல் கேட்டு இந்த நாட்டு எம்பிக்களை சந்திக்கிறீர்களோ, யாரை கூட்டி கொண்டு போய் பாராளுமன்றில் கூட்டம் போடுகிறீர்களோ - அவர்களை ஒருங்கிணைத்து - இதை கேட்க முடியாதா?

1 hour ago, nochchi said:

அதற்கான மதிநுட்பத்தடனான தமிழ்த்ததலைமைகள் யாராவது இருக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

ஓம் சரியே.

ஐசே, இங்ச பாருங்கோ...
நான் முற்றாக அதிலையே மூழ்கச் சொல்லவில்லை. எம்மில் சிங்களம் அறிந்தோரைக் கொண்டு ஏலுமான வழிகளிலை முயற்சிப்பம் என்டுறன். நீங்கள் கொஞ்சம் முன்னலை போய் அதையேதான் சொல்லுறீங்கள்; வழிகிடைத்தபடியால் ஏலுமானதைத் செய்வம் என்டுறியள். 

சரிதான் ஏற்கிறேன் - ஆனால் நாம் “எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, ஒண்ணாய் இருந்து புதிய தேசத்தை கட்டி எழுப்புவோம்” என்பதாகத்தான் இந்த இளைஞர்களும் சிந்திக்கிறார்கள்.

எனது அனுபவத்தில் இனவாதம் இல்லாத சிங்களவர் கூட எப்போதும் எமது பிரச்சனையை அதிகார பரவலாக்கம், அபிவிருத்தி, போன்றுதான் சிந்திப்பார்கள்.

நாம் வேண்டி நிற்பது ஸ்கொட்லாந்து, கியூபெக் போல ஒரு சுயநிர்ணய தேசத்தை ஆனால் அது கிடைக்காது. சரி பரவாயில்லை - நாம் இருக்கும் நிலையில் அதை எதிர்பார்ப்பதே முட்டாள்தனம் என நானே பல தடவை எழுதியுள்ளேன்.

ஆனால் குறைந்த பட்சம்.

1. வட-கிழக்கினை இணைத்தல். மாகாண அரசை (சபையை அல்ல) உருவாக்கல்.

2. காணி அதிகாரத்தை எம்மிடம் முற்றாக தரல்.

3. பொலீஸ் அதிகாரத்தை தரல்:

இவை பற்றியாவது இந்த அறகளைகாரார் பேசியுள்ளார்களா?

நாம் அவர்கள் விரும்பியபடி, கோட்டா எங்களை அழித்தார் என அவர்களிடம் எடுத்து சொன்னால் - இப்போ ஓம் என்று கேட்பார்கள். ஓம் உங்களை அடித்த போது நாம் சும்மா இருந்தது தவறு என்றும் சொல்வார்கள். ஆனால் அதே இடத்தில் ரணவிரு கமவும் வைப்பார்கள். இன்றைக்கும் ராஜித (அதிகம் இனவாதி அல்ல) வுக்கு விழும் அடி, பொன்சேக்காவுக்கு விழாது.

இப்போ ராஜபக்சேக்கள் அவர்களுக்கும் வில்லன் ஆகி விட்டதால் நாம் சொல்வதை கேட்கிறார்கள்.

இதுவே நாம் காணி, பொலீஸ் அதிகாரம் என கதைக்க வெளிக்கிட்டால் - அறகளை, ரகளை ஆகிவிடும்.

1948 இல் இருந்து நாம் எடுத்து சொல்லாமல் விட்டதால் அவர்களுக்கு விளங்கவில்லை என்பது ஒட்டு மொத்த சிங்கள இனமும் செவிபுலனற்றோர் என்பதை போல இருக்கிறது.

நடக்கும் அத்தனை அநியாயங்களை கண் முன்னே கண்டும், கண்ணை மூடி கொண்டிருந்தவர்கள்.

அவர்கள் கேட்க விரும்புவதை மட்டுமே இப்போதும் நாம் சொல்ல அனுமதிக்க படுகிறோம். நாம் சொல்ல விரும்புவதை அல்ல.

என்றைக்கு நாம் சொல்ல விரும்புவதை சொல்ல வெளிகிடுகிறோமோ அன்றே சொல்பவர் பயங்கரவாதியாகி போவார்.

முடிந்தால் - அவர்களிடம் எடுத்து சொல்லி, மாளிகைகளை உடைத்தது போல் சிறைகளை உடைத்து அரசியல் கைதிகளை விடுவிக்க சொல்லி ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள் அப்போ நான் சொல்வது புரியும்.

இலங்கை மகாசபை - சிங்கள மகாசபை, தமிழர் மகாசபை என பிரிந்த காலத்தில் இருந்து இந்த “எடுத்து சொல்லும்” படலமும் நடக்கிறது. 

#இலவு காத்த கிளி

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

இதுதான் முதலில் தீர்க்கபட வேண்டிய பிரச்சனை.

ஊரில் உள்ள எந்த தமிழ் அரசியல்வாதியையும் நம்பமுடியவில்லை. சரி. நானும் ஏற்கிறேன்.

புலம்பெயர்தேசத்தில் யாரின் அழைப்பில் ஜெனிவா போய் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களோ, எவரின் சொல் கேட்டு இந்த நாட்டு எம்பிக்களை சந்திக்கிறீர்களோ, யாரை கூட்டி கொண்டு போய் பாராளுமன்றில் கூட்டம் போடுகிறீர்களோ - அவர்களை ஒருங்கிணைத்து - இதை கேட்க முடியாதா?

புலம்பெயர் தமிழரது கட்டமைப்புகள் பெரும்பாலும் ஒரு அழுத்தக்குழுக்களாகவே செயற்படுகின்றனவேயன்றி ஒரு அரசியற் செயற்றிட்டத்தோடு நகர்வதாகத்தெரியவில்லை. ஏனென்றால், இங்கிருப்போரிடமும் ஒற்றைச் சொற்கொட்டுமடடுமே உள்ளது. இவர்கள் ஒரு அணியாகி மும்முனைச் செயற் தளத்தை உருவாக்கவில்லை. அதாவது 1. புலம்பெயர் நாடுகளுடனான தொடர்பாடல் 2.தாயக அரசியல் தலைமைகளுடனான தொடர்பாடல். 3. சிங்கள முற்போக்குச் சக்திகளுடனான  தொடர்பாடல். இதில் இவர்கள் கஜன் அணியோடு கலந்துரையாடல்களை மேற்கொள்வதாக அறியமுடியகிறது. ஆனால் அது மட்டும் போதுமானதாக இல்லை என்பதே எனது பார்வை. அதேவேளை புலம்பெயர் அரசியற்சக்திகளும் பல்வேறு குழுக்களாக  நிற்கின்றமையும் ஒரு பலவீனமேயாகும். தன்னலம் கருதாத உயரீகத்தின் பயனை மக்களுக்கு அர்பணிப்பதற்குப் பதிலாகத் தன்முனைப்புச் சார்ந்து நிற்கின்ற கோலத்தையல்லவா வரைகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்+
20 minutes ago, goshan_che said:

சரிதான் ஏற்கிறேன் - ஆனால் நாம் “எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, ஒண்ணாய் இருந்து புதிய தேசத்தை கட்டி எழுப்புவோம்” என்பதாகத்தான் இந்த இளைஞர்களும் சிந்திக்கிறார்கள்.

எனது அனுபவத்தில் இனவாதம் இல்லாத சிங்களவர் கூட எப்போதும் எமது பிரச்சனையை அதிகார பரவலாக்கம், அபிவிருத்தி, போன்றுதான் சிந்திப்பார்கள்.

நாம் வேண்டி நிற்பது ஸ்கொட்லாந்து, கியூபெக் போல ஒரு சுயநிர்ணய தேசத்தை ஆனால் அது கிடைக்காது. சரி பரவாயில்லை - நாம் இருக்கும் நிலையில் அதை எதிர்பார்ப்பதே முட்டாள்தனம் என நானே பல தடவை எழுதியுள்ளேன்.

ஆனால் குறைந்த பட்சம்.

1. வட-கிழக்கினை இணைத்தல். மாகாண அரசை (சபையை அல்ல) உருவாக்கல்.

2. காணி அதிகாரத்தை எம்மிடம் முற்றாக தரல்.

3. பொலீஸ் அதிகாரத்தை தரல்:

இவை பற்றியாவது இந்த அறகளைகாரார் பேசியுள்ளார்களா?

நாம் அவர்கள் விரும்பியபடி, கோட்டா எங்களை அழித்தார் என அவர்களிடம் எடுத்து சொன்னால் - இப்போ ஓம் என்று கேட்பார்கள். ஓம் உங்களை அடித்த போது நாம் சும்மா இருந்தது தவறு என்றும் சொல்வார்கள். ஆனால் அதே இடத்தில் ரணவிரு கமவும் வைப்பார்கள். இன்றைக்கும் ராஜித (அதிகம் இனவாதி அல்ல) வுக்கு விழும் அடி, பொன்சேக்காவுக்கு விழாது.

இப்போ ராஜபக்சேக்கள் அவர்களுக்கும் வில்லன் ஆகி விட்டதால் நாம் சொல்வதை கேட்கிறார்கள்.

இதுவே நாம் காணி, பொலீஸ் அதிகாரம் என கதைக்க வெளிக்கிட்டால் - அறகளை, ரகளை ஆகிவிடும்.

1948 இல் இருந்து நாம் எடுத்து சொல்லாமல் விட்டதால் அவர்களுக்கு விளங்கவில்லை என்பது ஒட்டு மொத்த சிங்கள இனமும் செவிடர் என்பதை போல இருக்கிறது.

நடக்கும் அத்தனை அநியாயங்களை கண் முன்னே கண்டும், கண்ணை மூடி கொண்டிருந்தவர்கள்.

அவர்கள் கேட்க விரும்புவதை மட்டுமே இப்போதும் நாம் சொல்ல அனுமதிக்க படுகிறோம். நாம் சொல்ல விரும்புவதை அல்ல.

என்றைக்கு நாம் சொல்ல விரும்புவதை சொல்ல வெளிகிடுகிறோமோ அன்றே சொல்பவர் பயங்கரவாதியாகி போவார்.

முடிந்தால் - அவர்களிடம் எடுத்து சொல்லி, மாளிகைகளை உடைத்தது போல் சிறைகளை உடைத்து அரசியல் கைதிகளை விடுவிக்க சொல்லி ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள் அப்போ நான் சொல்வது புரியும்.

இலங்கை மகாசபை - சிங்கள மகாசபை, தமிழர் மகாசபை என பிரிந்த காலத்தில் இருந்து இந்த “எடுத்து சொல்லும்” படலமும் நடக்கிறது. 

#இலவு காத்த கிளி

ஐயனே, நான் இனவாதம் அற்ற சிங்களத்தைச் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எமது விடுதலைக்கு ஆதரவான, எமது போராட்டத்திற்கு மென்னாதரவு தரக்கூடியவர்கள் (இயக்கத்தின்ட சிங்கள அமைப்புகளில் வேலை செய்தோர் போன்றோர் - மாதிரியான ஆக்கள்), எமக்கு சிங்களவர் இழைத்தது இனப்படுகொலையே - அதற்கான நீதி தமிழர்களுக்கு கிடைத்தாக வேண்டும் என்று கூறுவோர் போன்ற அந்த ஐதான ஓரிரண்டு பேரையே நான் குறிப்பிடுகிறேன்.

அவங்களை வைத்து மற்றவங்களுக்குள்ள குழப்பத்தை உண்டுபண்ணலாம்/மடைமாற்ற முயற்சிக்கலாம் - எமக்கு சிங்களவர் செய்வது போன்று. மற்றும்படி இவர்களை வைத்து சிறையிலை இருக்கும் அண்ணக்கள, அக்கக்களை விடுவிப்பது என்பது மலையை பிளப்பதற்குச் சமன். 

நான் முதல் மறுமொழியிலையே தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டேன், சிங்களவனை நம்பக்கூடாது என்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

நன்றி நன்னி. நானும் அவர்கள் மத்தியில் பரப்புரை செய்யவேண்டும் என நினைப்பவந்தான், எழுதியும் உள்ளேன். ஆனால் வடமாகாண சபையை இவர்கள் நடத்திய விதம், எப்போதும் ஒரு  மனமாற்றம் சாத்தியமில்லை என்பதை எனக்கு காட்டி நின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நீர்வேலியான் said:
11 hours ago, குமாரசாமி said:

இந்த போரட்டங்கள் இந்த எதிர்கால திட்டவரைபுகளுக்கெல்லாம் யார் பின்னணியில் இருக்கின்றார்கள்? இந்த போராட்டங்களை  பின்னணியில் நின்று நடாத்துவது யார்?

எனக்கும் புரியவில்லை, இதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்,

நானும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்+
18 minutes ago, goshan_che said:

நன்றி நன்னி. நானும் அவர்கள் மத்தியில் பரப்புரை செய்யவேண்டும் என நினைப்பவந்தான், எழுதியும் உள்ளேன். ஆனால் வடமாகாண சபையை இவர்கள் நடத்திய விதம், எப்போதும் ஒரு  மனமாற்றம் சாத்தியமில்லை என்பதை எனக்கு காட்டி நின்றது.

வடமாகாண சபபைக்கு இழைத்தோர் இனவாதிகள். கல்லில் நாருரிச்சாலும் இந்த இனவாத பூதங்களிடம் ஏலாது. 

மனமாற்றம் என்பது இனவாதிகளிடம் & இனவாதமற்றோரிடம் (நீங்கள் சொன்னது போன்று இவங்கள் பிரிக்க விடமாட்டாங்கள். அப்படியொரு நிலைவந்தால் இவங்களும் உருக்கொள்ளுவாங்கள்.) சாத்தியமில்லை - பெரும்பான்மையானோர்(90%); ஆனால் எமக்கு (விடுதலை/ சுயநிர்ணயம் வழங்கப்படவேண்டும், இனப்படுகொலையென்போர்) மென்னாதரவு வழங்கக்கூடியவர்களிடம் எதிர்பார்க்கலாம் என்பதை நான் மீண்டும் கூறுகிறேன். 

இப்போது போராடுபவர்கள் சோறு கிடைத்தால் முருங்கை மரம் ஏறிவிடுவர். இங்கே உவ்வளவு போராட்டம் நடைபெறும்போதே எமது தாய்நாட்டின் இதயபூமியான மணலாற்றில் விகாரை கட்டுவதை தடுக்காமால் வேடிக்கை பார்க்கும் இந்தக் கூட்டம் சோறுபோடவல்ல மற்றொரு பேயை அரியணை ஏற்றவே போராடுகிறது. ஆகவே இந்தப் போராட்டம் எமக்கு எந்தவொரு நன்மையையும் வழங்கப்போவதில்லை. 

நீங்கள் எதிர்காலத்தில் நடக்கப்போகும் பிற பேரழிவுகளின் வீரியத்தைத் தடுக்க இவங்களோடு ஏதேனும் கதைக்கலாம் என்கிறீர்கள். ஆனால் அதுவோ உள்ளூரில் திரைமறைவில் வெறும் வாய்மொழியால் நடக்கப்போவது (வெளியாலை நடந்தாலும் ஒன்டும் வெட்டி விழுத்த மாட்டாங்கள்.) அதை சிங்களவன் கிழித்தெறியமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, தமிழ் சிறி said:

கோத்தாகோகம போராட்டக்கார அமைப்பாளர்கள் கூட…
சென்ற மாதம்…யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வந்து…
தமிழருடனான நல்லெண்ண சமிக்ஜையை… வெளிப் படுத்தியவர்கள்.
ஆகவே… எமது இளையவர்களும், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது
நல்லது என நினைக்கின்றேன்.

அது போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்டவும் எல்லாருமாகச் (தமிழ், சிங்களம்) சேர்ந்து "அபிவிருத்தி" என்ப்படுவதை முன்னெடுக்கவே. எமது இனச் சிக்கல்களுக்கு தீர்வு காண அல்ல. சோறில்லை, வந்தாங்கள்; சோறு இருந்திருந்தால் வந்திருப்பாங்களோ? பெரிய இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை!

போராட்ட காலத்திலைதான் மணலாற்றில் புத்த விகாரைக் கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டது. என்ன செஞ்சவங்கள் ? ஒன்டுமில்லை. எதிர்காலத்திலையும் அதேதான். எதுவும் மாறாது.

//தப்பித் தவறிக் கூட…. தற்போது இருக்கும், எந்த அரசியல் வாதிகளையும் இனி நம்ப வேண்டாம்.
அவர்கள் இனி… ஒட்டு மொத்தமாக நிரந்தர ஓய்வு எடுக்கட்டும்.
புதிய, இளைய தலை முறை அரசியல் வாதிகளை… இனம் கண்டு களமிறக்கப் பட வேண்டும்.//

ஓம்... நான் இதை ஆமோதிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

நீங்கள் எதிர்காலத்தில் நடக்கப்போகும் பிற பேரழிவுகளின் வீரியத்தைத் தடுக்க இவங்களோடு ஏதேனும் கதைக்கலாம் என்கிறீர்கள். ஆனால் அதுவோ உள்ளூரில் திரைமறைவில் வெறும் வாய்மொழியால் நடக்கப்போவது (வெளியாலை நடந்தாலும் ஒன்டும் வெட்டி விழுத்த மாட்டாங்கள்.) அதை சிங்களவன் கிழித்தெறியமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

இல்லை ஒரு போதும் இவங்களோடு நாம் நேரடியாக ஒரு ஒப்பந்தம் போட்டும் பயனில்லை. வெளி சக்கிகள், அவை எவ்வளவு சுயநலமாக இருந்தாலும், மத்தியஸ்தம் கட்டாயம் வேண்டும்.

அப்போதும் குர்தீக்களுக்கு நடந்தது போல் கைவிடப்படலாம்.

அதையும் வெட்டி ஆடத்தான் வேண்டும். ஆனால் இவனோடு நேரில் டீல் போட போவதை விட அது எவ்வளவோ பரவாயில்லை.

நாம் ஒருக்காலும் சண்டைகாரன் காலில் விழ முடியாது. ஏனென்றால் நம் சண்டைகாரன் நோக்கமே எம்மை தடமின்றி அழிப்பது. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

சரிதான் ஏற்கிறேன் - ஆனால் நாம் “எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, ஒண்ணாய் இருந்து புதிய தேசத்தை கட்டி எழுப்புவோம்” என்பதாகத்தான் இந்த இளைஞர்களும் சிந்திக்கிறார்கள்.

எனது அனுபவத்தில் இனவாதம் இல்லாத சிங்களவர் கூட எப்போதும் எமது பிரச்சனையை அதிகார பரவலாக்கம், அபிவிருத்தி, போன்றுதான் சிந்திப்பார்கள்.

நாம் வேண்டி நிற்பது ஸ்கொட்லாந்து, கியூபெக் போல ஒரு சுயநிர்ணய தேசத்தை ஆனால் அது கிடைக்காது. சரி பரவாயில்லை - நாம் இருக்கும் நிலையில் அதை எதிர்பார்ப்பதே முட்டாள்தனம் என நானே பல தடவை எழுதியுள்ளேன்.

ஆனால் குறைந்த பட்சம்.

1. வட-கிழக்கினை இணைத்தல். மாகாண அரசை (சபையை அல்ல) உருவாக்கல்.

2. காணி அதிகாரத்தை எம்மிடம் முற்றாக தரல்.

3. பொலீஸ் அதிகாரத்தை தரல்:

இவை பற்றியாவது இந்த அறகளைகாரார் பேசியுள்ளார்களா?

நாம் அவர்கள் விரும்பியபடி, கோட்டா எங்களை அழித்தார் என அவர்களிடம் எடுத்து சொன்னால் - இப்போ ஓம் என்று கேட்பார்கள். ஓம் உங்களை அடித்த போது நாம் சும்மா இருந்தது தவறு என்றும் சொல்வார்கள். ஆனால் அதே இடத்தில் ரணவிரு கமவும் வைப்பார்கள். இன்றைக்கும் ராஜித (அதிகம் இனவாதி அல்ல) வுக்கு விழும் அடி, பொன்சேக்காவுக்கு விழாது.

இப்போ ராஜபக்சேக்கள் அவர்களுக்கும் வில்லன் ஆகி விட்டதால் நாம் சொல்வதை கேட்கிறார்கள்.

இதுவே நாம் காணி, பொலீஸ் அதிகாரம் என கதைக்க வெளிக்கிட்டால் - அறகளை, ரகளை ஆகிவிடும்.

1948 இல் இருந்து நாம் எடுத்து சொல்லாமல் விட்டதால் அவர்களுக்கு விளங்கவில்லை என்பது ஒட்டு மொத்த சிங்கள இனமும் செவிபுலனற்றோர் என்பதை போல இருக்கிறது.

நடக்கும் அத்தனை அநியாயங்களை கண் முன்னே கண்டும், கண்ணை மூடி கொண்டிருந்தவர்கள்.

அவர்கள் கேட்க விரும்புவதை மட்டுமே இப்போதும் நாம் சொல்ல அனுமதிக்க படுகிறோம். நாம் சொல்ல விரும்புவதை அல்ல.

என்றைக்கு நாம் சொல்ல விரும்புவதை சொல்ல வெளிகிடுகிறோமோ அன்றே சொல்பவர் பயங்கரவாதியாகி போவார்.

முடிந்தால் - அவர்களிடம் எடுத்து சொல்லி, மாளிகைகளை உடைத்தது போல் சிறைகளை உடைத்து அரசியல் கைதிகளை விடுவிக்க சொல்லி ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள் அப்போ நான் சொல்வது புரியும்.

இலங்கை மகாசபை - சிங்கள மகாசபை, தமிழர் மகாசபை என பிரிந்த காலத்தில் இருந்து இந்த “எடுத்து சொல்லும்” படலமும் நடக்கிறது. 

#இலவு காத்த கிளி

முக்கியமான, நிதியினை விட்டுவிட்டீர்கள் கோசான், 1983 முன்னர் இருந்த தமிழர்களது பொருளாதார வளத்தினை எவ்வாறு ஐரோப்பாவில் யூதர் மற்றவர்களை சுரண்டி செல்வந்தர்களானார்கள் என போலியான பரப்புரையின் துணை கொண்டு யூதர்களை அழித்தார்களோ அதே போல் தமிழர்களது பொருளாதார வளத்தினை அடிமட்ட சிங்கள மக்களிடையே தவறான கருத்துகளை பரப்ப உதவியாக இருந்தது ( சில மோசமான தமிழர்கள் அடிமட்ட சிங்கள மக்களை பல வகையில் சுரண்டினார்கள் என்பதும் வருத்தமான உண்மைதான்).

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

உண்மைதான். 

விக்கி திறைசேரியின் பூரண கண்காணிப்பில் “முதலமைச்சர் நிதியம்” அமைக்க அனுமதி கேட்டும் கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2022 at 00:51, satan said:

இனி இனவாதத்தை தூண்டி ஆட்சியை பிடிக்க முடியாது. நாட்டின் முன்னேற்றம் பற்றி பேச வேண்டும். நாமும், தமிழ்த்தேசியம் பேசி ஏமாற்றும் பேர்வழிகள் பற்றி யோசிக்க வேண்டும்.

இனவாதத்தையும் தமிழ்தேசியத்தையும் ஒரே கோட்டில் நிறுத்திப் பார்க்க முடியாது. இரண்டும் பாரிய வேறுபாடுகளைக் கொண்டது. 

இனவாதம் தூண்டி வளர்க்கப்படு்கிறது. அதுவே இன்றுவரை இலங்கையில் ஆட்சி செய்கிறது.

தமிழ்த்தேசியம் தோண்டிப் புதைத்து அழிக்கப்பட்டு வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்+
23 hours ago, goshan_che said:

இல்லை ஒரு போதும் இவங்களோடு நாம் நேரடியாக ஒரு ஒப்பந்தம் போட்டும் பயனில்லை. வெளி சக்கிகள், அவை எவ்வளவு சுயநலமாக இருந்தாலும், மத்தியஸ்தம் கட்டாயம் வேண்டும்.

அப்போதும் குர்தீக்களுக்கு நடந்தது போல் கைவிடப்படலாம்.

அதையும் வெட்டி ஆடத்தான் வேண்டும். ஆனால் இவனோடு நேரில் டீல் போட போவதை விட அது எவ்வளவோ பரவாயில்லை.

நாம் ஒருக்காலும் சண்டைகாரன் காலில் விழ முடியாது. ஏனென்றால் நம் சண்டைகாரன் நோக்கமே எம்மை தடமின்றி அழிப்பது. 

என்னமோ... ஏதாவது நல்லது நடந்தால் மகிழ்ச்சியே.

ஆனால், 2003 இலை அவங்கள் போட்டவங்கள் தானே. இன்டுவரைக்கும் அதையேன் வெளிநாடுகள் - நோர்வே போன்ற இணைத்தலைமை நாடுகள் - ஏற்று செயல்படுத்தேலை?  (எனக்குத் தெரியாது, அதனாலை கேட்கிறன்)

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.